கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து எவ்வாறு ஜேர்மன் தலைமை நிர்வாக அதிகாரிகள் இலாபமடைகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முக்கிய ஜேர்மன் நிறுவனங்களின் நிர்வாகிகள் கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து மில்லியன் கணக்கான பணத்தை குவித்து வருகின்றனர். இது ஏப்ரல் 15 ஆம் திகதி Süddeutsche Zeitung பத்திரிகையின் பொருளாதாரப் பிரிவில் உள்ள ஒரு கட்டுரையிலிருந்து வெளிப்படுகிறது.

செய்தித்தாள் அறிக்கை ஒரு நிறுவனத்தில் அதன் சொந்த மேலாளர்களால் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது பற்றிய இயக்குனரின் பரிவர்த்தனைகள் என்று அழைக்கப்படும் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய வர்த்தகங்கள் பங்கு வாங்குதல்களுக்கு சமமானவை அல்ல. அதாவது நிறுவனமே தனது பங்குகளை வாங்குதலை போன்றதல்ல. நிறுவனமே தனது பங்குகளை வாங்குதலில், நிர்வாக உறுப்பினர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்தால் பயனடைவார்கள். திரும்ப வாங்குதல் மொத்த பங்குகளின் எண்ணிக்கையை குறைப்பதால் மீதமுள்ள பங்குகளின் மதிப்பை அதிகரிக்கிறது.

இயக்குநரின் பரிவர்த்தனைகள் ஒரு வகையான உள் வர்த்தகமாக தடைசெய்யப்பட வேண்டும். ஏனெனில் உயர்மட்ட மேலாளர்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியுடன் தொடர்புடைய தகவல்களைத் தொடர்ந்து அறிந்துகொண்டிருக்கிறார்கள், மேலும் அவர்களின் முடிவுகள் நிறுவனத்தின் பங்கு மதிப்பை நேரடியாக பாதிக்கின்றன. ஆயினும்கூட, அத்தகைய வர்த்தகம் அனுமதிக்கப்படுகிறது. மேலாளர்கள் சில விதிகளைப் பின்பற்றி பரிவர்த்தனைகளை பற்றி அறிவிக்கவேண்டும்.

கொரோனா வைரஸ் நெருக்கடியின் காரணமாக பங்கு விலைகள் சரிந்த பின்னர், ஜேர்மனியின் முன்னணி நிறுவனங்களின் பல நிர்வாகிகள் பங்குச் சுட்டெண்களில் (Dax, M-Dax and S-Dax) தங்கள் சொந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கியதாக Süddeutsche Zeitung கட்டுரை தெரிவிக்கிறது. கட்டுரையில் Carsten Spohr (தலைமை நிர்வாக அதிகாரி Lufthansa), Stephan Sturm (Fresenius), Martin Brudermüller மற்றும் Saori Dubourg (BASF), Rudolf Staudigl (Wacker Chemie) மற்றும் கிட்டத்தட்ட முழு Lanxess குழுவும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் பங்குகளை வாங்கியபோது, முக்கிய ஜேர்மனிய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க மத்திய அரசு 600 பில்லியன் யூரோ தொகுப்பைத் திட்டமிட்டுள்ளதாகவும், அவற்றின் பங்கு விலைகள் விரைவில் மீண்டும் உயரும் என்றும் தலைமை நிர்வாகிகள் ஊகித்திருந்தனர் அல்லது அறிந்திருந்தனர். அந்த நேரத்தில் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தன.

இந்த தகவல்கள் வேலை செய்தது. மார்ச் 18 அன்று டாக்ஸ் 8,500 புள்ளிகளுக்குக் கீழே சரிந்த பின்னர், அது செங்குத்தாக உயர்ந்து தற்போது 10,000 புள்ளிகளுக்கு மேல் உறுதியடைந்தது. ஏப்ரல் 14 அன்று, இது 10,700 புள்ளிகளைக் கூட எட்டிய, நான்கு வாரங்களுக்குள் 25 சதவீதம் அதிகரித்தது. இதன் பொருள் அதே நேரத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் குறுகிய கால வேலை கொடுப்பனவுகளாக 60 சதவிகித சம்பளத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகையிலும், மேலும் அவர்களின் வேலைகளை தக்கவைத்துக்கொள்ள பயப்படுகையில் முன்னணி நிர்வாகிகள் ஒரு வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.

2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியின் போது மேலாளர்கள் இதே மூலோபாயத்தைப் பயன்படுத்தினர். Frankfurt School of Finance & Management இல் இவ்விடயத்தை பற்றி பல வருடங்களுக்கு கல்விகற்றிருந்த தற்போதைய நிதியமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸை மேற்கோள் காட்டி Süddeutsche Zeitung இதுபற்றி அறிவித்தது.

"செப்டம்பர் 2008 நடுப்பகுதியில் அமெரிக்க முதலீட்டு வங்கியான Lehman Brothers திவால்நிலைக்கு முன்னர், இயக்குநர்கள் குழுக்கள், மேற்பார்வை வாரியங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நபர்கள் பெரிய அளவில் பங்குகளை விற்றனர்" என்று கட்டுரை கூறுகிறது. "2009 ஆம் ஆண்டில் அவர்கள் குறைந்த விலைக்கே தங்கள் சொந்த நிறுவனங்களில் பங்குகளை வாங்கினர். இரண்டு வாரங்களுக்குள் உள்நபர்களினால் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 200 பங்கு கொள்முதல் அந்த நேரத்தில் மிக உயர்ந்த சாதனையைக் குறிக்கிறது. ”ஜேர்மன் நிறுவனங்களில் மேற்பார்வை வாரியங்களில் பதவியில் அமர்ந்திருக்கும் தொழிலாளர் பிரதிநிதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் எத்தனை பேர் இதில் இலாபமடைந்தனர் என்பதை Süddeutsche Zeitung கட்டுரை வெளிப்படுத்தவில்லை.

2008-2009 நிதி நெருக்கடியின் உச்சத்தில், Dax 3,666 புள்ளிகளின் மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரியில் இது 13,580 புள்ளிகளின் வரலாற்று உச்சத்தை எட்டியது. சரியான நேரத்தில் வாங்குவதும் விற்பதுமாக11 ஆண்டுகளில் தங்கள் சொத்துக்களை கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்த்தக்கூடும்.

2008 நெருக்கடியைத் தொடர்ந்து, வங்கிகளையும் நிறுவனங்களையும் "காப்பாற்ற" ஜேர்மன் அரசாங்கம் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களுடன் தலையிட்டது. அப்போதிருந்து இந்த நிதி வரவு-செலவுத் திட்டத்தில் பூஜ்ஜிய கடனை கொண்டிருத்தல் மற்றும் சமூக செலவினங்களில் பாரிய வெட்டுக்கள் ஆகியவற்றின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. COVID-19 இன் பேரழிவு விளைவுகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும். இது ஜேர்மனிய சுகாதார அமைப்பு முறையை அடிவரை வெட்டுக்குள்ளாக்கியது.

செல்வமயமாக்கலின் இந்த களியாட்டத்தின் பயனாளிகளில் ஒருவர் Fresenius தலைமை நிர்வாக அதிகாரி Sturm என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 16 அன்று, Sturm தனது சொந்த நிறுவனத்தில் 57,000 யூரோ பெறுமதியான பங்குகளை வாங்கினார். Fresenius ஒரு சர்வதேச சுகாதார நிறுவனம் மற்றும் 30 பில்லியன் டாலர் சந்தை மதிப்புக்கொண்ட ஜேர்மனியின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை நடத்துபர்களில் ஒன்றாகும்.

ஸ்பெயினின் அரசாங்கம் நாட்டின் மருத்துவமனைகளை தேசியமயமாக்க முனைந்ததாக அறிவிக்கப்பட்டபோது Sturm பங்குகளை வாங்கினார். இது Fresenius ஐ கடுமையாக பாதித்திருக்கும். இரண்டு நாட்களுக்குப் பின்னர், அத்தகைய தேசியமயமாக்கல் குறித்த ஊகங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் நிறுவனத்தின் பங்கு விலை 14 சதவீதம் உயர்ந்தது என்றும் Fresenius அறிவித்தது.

எவ்வாறாயினும், BASF இன் தலைமை நிர்வாக அதிகாரி Brudermüller உடன் ஒப்பிடும்போது, Sturm ஒரு சிறிய மீன் ஆவார். மார்ச் 9 அன்று, Brudermüller தனது சொந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் யூரோ பங்குகளை வாங்கினார். இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஜேர்மன் பாராளுமன்றம் பெரிய நிறுவனங்களுக்கு 600 பில்லியன் யூரோ நிதியுதவி செலுத்தியது. "Brudermüller அல்லது பிற நிறுவன நிர்வாகிகள் இந்த ஒப்பந்தத்தை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்களா?" என Süddeutsche Zeitung கேட்கின்றது. இதற்கு "BASF இன் பதில் தவிர்க்க முடியாததாக இருந்தது: நிர்வாகம் எப்போதும் பல மட்டத்தில் கூட்டாட்சி மற்றும் மாநில அரசியலுடன் வழக்கமான பரிமாற்றத்தில் உள்ளது. குறிப்பாக நெருக்கடியான காலகட்டத்திலும் கூட”.

இரசாயன நிறுவனமான Lanxess இயக்குநர்கள் குழுவும் சந்தைகளில் பெரிதும் தலையிட்டது. நிறுவனம் ஒரு பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே அதன் உறுப்பினர்கள் மார்ச் 11 அன்று 784,000 யூரோக்கள் மதிப்புள்ள பங்குகளை வாங்கினர்.

Dax முதலாளிகளின் செல்வமயமாக்கல், கொரோனா வைரஸ் நெருக்கடி எவ்வாறு முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்க மோதலை பெருமளவில் தீவிரப்படுத்துகின்றது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மருத்துவமனைகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பட்டினி ஊதியத்திற்கு தங்கள் உயிரைப் பணயம் வைத்து, வேலையை இழக்கிறார்கள், கடனில் மூழ்கிவிடுகிறார்கள், அல்லது COVID-19 ஆல் இறக்கின்றனர். பணக்கார சமூக அடுக்கு இந்த நெருக்கடியை இன்னும் தன்னை செல்வமயமாக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறது.

Loading