முன்னோக்கு

அமெரிக்க இறப்புக்கள் 40,000 இனை கடக்கையில் பொறுப்பற்ற முறையில் ட்ரம்ப் தனது வேலைக்கு திரும்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை, COVID-19 தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 40,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்த தொற்றுநோய் அமெரிக்க சமூகத்தின் முழுமையான செயலற்ற தன்மையையும், மிக அடிப்படையான தேவைகளான மருத்துவ பராமரிப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உணவை கூட அதன் குடிமக்களுக்கு வழங்குவதற்கான இயலாமையையும் அம்பலப்படுத்தியுள்ளது.

தொற்றுநோய்க்கு தயாராவதற்கு அரசாங்கம் எதுவுமே செய்யாதததோடு, ட்ரம்ப் இந்த நோயை ஒரு "ஏமாற்று" என்று குறைத்து மதிப்பிட்டார். ஊடகங்களும் அதை பல மாதங்களாக புறக்கணித்தன. பாதுகாப்பற்ற நிலையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான துணிச்சல்மிக்க சுகாதார ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில், வங்கிகளும் நிறுவனங்களும் மனித வரலாற்றில் மிகப்பெரிய பிணை எடுப்புக்களைப் பெற்றன.

நியூ யோர்க் நகரத்தில் உள்ள பாரிய புதைகுழிகள் மற்றும் உடல்கள் குளிரூட்டப்பட்ட பாரவூர்திகளில் குவிந்துமையும் மற்றும் டெட்ராய்டில் உள்ள சினாய் கிரேஸ் மருத்துவமனையில் உதிரி அறைகளில் அடைத்து வைக்கப்படும் காட்சிகளை கண்ட சுகாதாரப் பணியாளர்களினதும் அல்லது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினதும் நனவை விட்டு அவை ஒருபோதும் அகலாது.

மார்ச் 31, 2020 செவ்வாய் அன்று ஒரு தொழிலாளி முகக்கவசங்களின்றி காத்திருக்கும் வாடிக்கையாளருக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் இலுள்ள 365 Whole Foods Market இல் வண்டில்களை துப்பரவு செய்கின்றார் (AP Photo/Damian Dovarganes)

நாடு முழுவதும், நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் இழப்பை நினைத்து வருத்தப்படுகிறார்கள். மில்லியன் கணக்கானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், எண்ணற்ற குடும்பங்கள் மொத்த பட்டினிக்கு முகம்கொடுக்க சில நாட்களே உள்ள நிலையில் நிரம்பிப்போயுள்ள உணவுப் பொருட்கள் விநியோக நிலையங்களை நாடுகின்றனர்.

தொற்றுநோய் அடங்கியுள்ளதாக ட்ரம்ப்பின் கட்டுக்கதைக் இருந்தபோதிலும், இந்த நோய் நாட்டின் புதிய பகுதிகளுக்கு பரவி வருகிறது. நோயானது பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சிறைச்சாலைகள் வழியாக பரவுகையில் ஒவ்வொரு மாநிலமும் குறைந்தது ஒரு மரணத்தையாவது அறிவிக்கின்றது.

இந்த பேரழிவின் மத்தியில், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் இல்லாத போதிலும், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க வணிகங்களை மீண்டும் திறப்பதில் ஒருமனத்துடன் கவனம் செலுத்துகிறது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் முக்கிய நிறுவனங்களின் செல்வப்பெருக்கத்தில் தொற்றுநோய் தலையிடாது என்பதை உறுதி செய்வதே ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அக்கறையாக உள்ளது.

சந்தேகத்திற்கிடமான அனைத்து தொற்றுக்களையும் பரிசோதிக்கவும், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், அவர்களின் தொடர்புகளைக் கண்டறியவும் உள்கட்டமைப்பு இல்லாத நிலைமைகளின் கீழ் வணிகங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலைமைகளின் கீழ் வணிகங்களை மீண்டும் திறப்பது தொற்றுநோயின் மீள் எழுச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும் எனவும் முற்றிலும் பொறுப்பற்றதும் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரித்த போதிலும் இது நிகழ்கின்றது.

பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கையை ஊடகங்களின் கணிசமான பிரிவினர் ஆதரித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, NBC யின் மாலை செய்தி பாரிய இறப்பு எண்ணிக்கையுடன் அல்ல, மாறாக தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்களுடன், வெறும் டஜன் கணக்கான பங்கேற்பாளர்களுடன், வணிகங்களை மீண்டும் திறக்கக் கோரினர் என்பதுடன் ஆரம்பித்தது. தாக்குதல் துப்பாக்கிகளைத் தாங்கிய அரச தலைநகரங்களை ஆக்கிரமித்து, கூட்டமைப்புக் கொடிகள் மற்றும் ஸ்வஸ்திகா கொடிகளை பறக்கவிட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுவதில் தீவிர வலதுசாரி குழுக்களின் பங்கை ஊடகங்கள் புறக்கணித்தன.

பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் பணிக்குத் திரும்புவதற்கு எதிராக நாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் நடைபெற்று வரும் தொழிலாளர்கள் நடத்திய ஏராளமான வேலைநிறுத்தங்கள், நோய் விடுமுறைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒளிபரப்பு செய்திகள் குறைத்து மதிப்பிட்டுகையில், அவர்கள் சிறிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களை மக்களின் நியாயமான விருப்பின் வெளிப்பாடாக காட்டிக்கொள்கின்றனர்.

ஆரம்பத்தில் ஒரு அபத்தமான முட்டாள் கனவாக முன்வைக்கப்பட்ட, அமெரிக்காவின் கணிசமான பகுதிகளில் உள்ள வணிகங்கள் மே 1 க்குள் மீண்டும் திறக்கப்படும் என்ற ட்ரம்ப்பின் திட்டம் இப்போது அடிப்படை கொள்கையாகிவிட்டது. மிச்சிகன் ஆளுநர் Gretchen Whitmer கூட, நாட்டில் மிக கூடிய COVID-19 இறப்பு விகிதத்தை எதிர்கொள்ளும் தனது மாநிலம், அடுத்த மாத தொடக்கத்தில் வணிகங்களை மீண்டும் திறக்கும் என்று அறிவித்தார்.

"பூட்டுதல் மூடுதல்" என்பது ABC நியூஸின் ஞாயிறு உரையாடல் நிகழ்ச்சியின் கருப்பொருளாக இருந்தது. இது ட்ரம்ப்பைப் போலவே ஒரு "பெருவெடிப்பை" ஆதரிப்பவர்களுக்கும், இச்செயல்முறையை "ஒரு தேர்வு போன்றது" என்று கூறும் Utah ஆளுனர் Gary Herbert, போன்றவர்களுக்கும் இடையிலான மோதலாக வணிகங்களை மீண்டும் திறக்கும் நிகழ்வை முன்வைத்தது.

ட்ரம்பும் ஊடகங்களின் மேலாதிக்கப் பிரிவினரும், உயிர்களை இழப்பதற்கும் வெகுஜன வறுமைக்கும் இடையிலான ஒரு தேர்வாக நாட்டை மீண்டும் திறக்கும் கேள்வியை முன்வைக்கின்றனர். ஆனால் இந்த இருவகையுமே தவறானது. இது முதலாளித்துவ அமைப்பு முறையின் தனிச்சிறப்பான வடிவமான, நிதி மற்றும் தொழிற்துறை உயரடுக்கிற்கு அரசு வரம்பற்ற வளங்களை விரிவுபடுத்துகையில், ஒரு தொற்றுநோய்களின் போது தொழிலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியாது உள்ளதையே காட்டுகின்றது.

தொற்றுநோய்க்கு சீனாவை பலிகொடுக்கும் அமெரிக்க முயற்சிகள் பாரியளவில் தீவிரமடைவது, வேலைக்கு முன்கூட்டியே திரும்புவதற்கான கோரிக்கையுடன் இணைந்து வருகின்றது. வணிகங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் போலவே, ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியினருக்கும் ஊடகங்களுக்கும் தொனியை அமைத்துக்கொடுத்துள்ளார். செவ்வாயன்று, தொற்றுநோய்க்கு தவறான முறையில் சீனாவை குற்றம்சாட்டிய ஒரு அறிக்கையில் உலக சுகாதார அமைப்புக்கான அமெரிக்க நிதியுதவியை வெள்ளை மாளிகை முடிவுக்கு கொண்டுவருவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

அடுத்த நாள் அசோசியேட்டட் பிரஸ், “சீனா 6 முக்கிய நாட்களுக்கு தொற்றுநோயைப் பற்றி பொதுமக்களை எச்சரிக்கவில்லை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது தொற்றுநோய்க்கு சீனாதான் காரணம் என்ற ட்ரம்ப்பின் தவறான கூற்றுக்களை வலுப்படுத்தியது. ஜனவரி 14 முதல் ஜனவரி 20 வரையிலான வாரத்தைக் குறிக்கும் இந்த விவரிப்பு, அந்த நேரத்தில் அமெரிக்க ஊடக அறிக்கைகளின் மிகக் கூடுதலான மேலெழுந்தவாரியான ஆய்வுடன் கூட முரண்பட்டது. இது ஜனவரியின் முதல் வாரத்தில் நோயின் அதிகரிப்பு பற்றி சர்வதேச பத்திரிகைகளில் பரவலாகவும் துல்லியமாகவும் தெரிவிக்கப்படுவதை தெளிவுபடுத்துகிறது.

ஜனநாயகக் கட்சியினரும் அவர்களுடன் தொடர்புடைய ஊடகங்களும் ட்ரம்பை தமது சொந்த தேவைகளுக்காக வெல்ல முயல்கின்றன. ஞாயிற்றுக்கிழமை முதல் பக்க கட்டுரையில், நியூ யோர்க் டைம்ஸ் ட்ரம்ப் சீனாவை திருப்திப்படுத்த மிகவும் ஆர்வமாக இருப்பதாக காட்ட முயன்றது. "வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஆர்வமாக, சந்தைகளின் மேலதிக சலசலப்பு கவலையும், உயிர் காக்கும் மருத்துவப் பொருட்களுக்காக அமெரிக்கா சீனாவின் உற்பத்தியாளர்களை நம்பியிருக்கும் தருணத்தில், சீனாவை குற்றம்சாட்டும் குடியரசுக் கட்சியினரின் முயற்சிகளை கீழறத்து ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான தனது உறவைப் பாதுகாக்க ஆர்வத்துடன் உள்ளார்.”

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் இந்த விடயத்தை எடுத்துக்கொண்டார். ட்ரம்ப் ஒரு புதிய பிரச்சார விளம்பரத்தில் "அமெரிக்காவை பாதிக்கக்கூடியவராகவும், இந்த தொற்றுநோய்க்கு உள்ளாக்கவும்" விட்டுவிட்டு "அதற்கு பதிலாக சீனாவின் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.

செவ்வாயன்று, வாஷிங்டன் போஸ்ட் எவ்விதமான சாட்சியங்களும் இல்லாமல் ஒரு வலதுசாரி சதி தத்துவத்தை சட்டபூர்வமாக்கக் கோரி ஒரு கட்டுரையை வெளியிட்டது. இத்தத்துவம் ட்ரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளர் பாசிச ஸ்டீபன் பானன் ஆல் பல மாதங்களுக்கு முன்னர் COVID-19 ஒரு சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று முன்வைக்கப்பட்டது. வாஷிங்டன் போஸ்ட் பானனின் தனிப்பட்ட கழிவு ஊடகம் வழியிலான கருத்துக்களை பிடித்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை உரையாடல் நிகழ்ச்சிகளில் அதனை பயன்படுத்திக்கொண்டது. இது அதில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்தது.

வர்க்கப் போராட்டம் ஒருபோதும் நிற்கப்போவதுமில்லை, ஏகாதிபத்தியம் அதன் கொள்ளையடிக்கும் நோக்கங்களை ஒருபோதும் தளர்த்தப்போவதுமில்லை. இது ஒரு நெருக்கடியில் குறிப்பாக உண்மையானதாகும். தொழிலாளர்கள் இந்த தியாகங்களைச் செய்யும்போது, அமெரிக்க அரசாங்கம் வோல் ஸ்ட்ரீட் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்கு 6 ட்ரில்லியன் டாலர் பிணை எடுப்பை வழங்கியுள்ளது. தொற்றுநோய்க்கு ஒரு தசாப்தத்திற்கும் முன்னரே நடைமுறையிலுள்ள, பணத்தை அச்சிடும் மற்றும் அதி-குறைந்த வட்டி விகிதங்களின் கொள்கை, தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் இப்பொழுது இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆளும் வர்க்கம் அதன் வழியில் சென்றால், நெருக்கடியிலிருந்து வெளிப்படும் சமூகம், தொற்றுநோய்க்கு முன்னர் நிலவிய அதிக சமத்துவமின்மை, அதிக சுரண்டல், அதிக வறுமை மற்றும் அதிக போர் போன்ற அனைத்து போக்குகளினதும் தீவிரப்படுத்தப்பட்ட ஒரு வடிவத்தில் குணாதிசயப்படுத்தப்படும்.

நெருக்கடியின்போது ஆளும் வர்க்கம் தனது நலன்களை மிகவும் உடனடியாகவும் மற்றும் நேரடியாகவும் வலியுறுத்துகையில், தொழிலாள வர்க்கத்தின் சக்தி மிகவும் பலம்மிக்கதாக இருக்கும். இத்தாலி முதல் கலிபோர்னியா வரை, உலகெங்கிலும் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உழைக்க மறுத்து, வேலைக்கு முன்கூட்டியே திரும்புவதை எதிர்க்க போராடுகிறார்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்களின் செலவில் தங்கள் செல்வத்தை விரிவுபடுத்துவதற்கு தன்னலக்குழுக்கள் எடுக்கும் முயற்சிகள் பாரிய சமூக அமைதியின்மையை உருவாக்கும்.

இந்த தொற்றுநோய் முதலாளித்துவ அமைப்பின் திவால்நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் வேலைக்கு திரும்பு பிரச்சாரத்திற்கு எதிரான அவர்களின் போராட்டத்தில், தொழிலாளர்கள் சோசலிச சமுதாய மாற்றத்திற்கான போராட்டத்தை கையில் எடுக்கவேண்டும்.

Loading