சிங்கப்பூரில் குடியேறிய தொழிலாளர்களிடையே பாரிய COVID-19 தொற்றுதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் திங்களன்று மட்டும் மதியம் 1,426 புதிய COVID-19 நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்தது. அவர்களில் 95% ஆனோர் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானமற்ற குடியிருப்புகளில் சிக்கியுள்ள தற்காலிக தொழிலாளர்களாவர்.

முன்னாள் பிரிட்டிஷ் காலனியான நகர-நாடானது, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்ப வாரங்களில் கோவிட்-19 தொற்றுதலை முதல் பாதிக்கப்பட்ட நபரிடம் கண்டுபிடிப்பது மற்றும் நாட்டு மக்களிடையே தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவது போன்ற அதன் கடுமையான நடவடிக்கைகளுக்காக பாராட்டப்பட்டது. நிதிய மையத்தின் மின்னும் வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் பகட்டாரவாரமான உல்லாச விடுதிகளின் பின்னால் மறைக்கப்பட்ட நகர-அரசின் ஒரு வித்தியாசமான கதை இப்போது வெளிவருகின்றது.

சிங்கப்பூரில் உள்ள தங்குமிடம் (புகைப்படம்: WSWS)

சிங்கப்பூரின் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்களில் 323,000 தொழிலாளர்கள் இந்த வானளாவிய கட்டிடங்கள், சாங்கி விமான நிலையம், சுரங்கப்பாதைகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் வீடுகளான HDB குடியிருப்புகளை கட்டியுள்ளனர். அவர்கள் "வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்குமிடங்களில்" தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு 8, 12, 18 அல்லது 25 தொழிலாளர்கள் வரை கூட தட்டுபடுக்கைகளுடன் ஒரு அறையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த முகாம்களில் மிகப் பெரிய இடங்களில், நகர மையத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள Sungei Tengah லாட்ஜ் இல் சுமார் 25,000 தொழிலாளர்கள் இவ்வாறாக பல கட்டிட தொகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Punggol மாவட்டத்தில் உள்ள S11 தங்குமிடம், வேலியடைக்கப்பட்ட பகுதியில் 13,000 தொழிலாளர்கள் வரை உள்ளது. இந்த முகாமில், சனிக்கிழமை நிலவரப்படி 1,123 நோயாளிகள் ஏற்கனவே COVID-19 க்கு பரிசோதனை செய்யப்பட்டிதருந்தனர்.

தொழிலாளர் அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த “நோக்கத்திற்காக கட்டப்பட்ட தங்குமிடங்கள்” (PBD) தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இந்த தங்குமிடங்களின் குழுவில் 43 வளாகங்கள் உள்ளன. அந்த ஒரு வளாகத்திற்கு 3,000 முதல் 25,000 தொழிலாளர்கள் வரை தங்கக்கூடியவை. இந்த குழுக்களில் இருபத்தி இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், மேலும் 13 பேர் கடந்த வார இறுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன் அர்த்தம் தொழிலாளர்கள் தங்கள் குடியிருப்புத் தொகுதியை விட்டு வெளியேற முடியாது. எந்தவொரு மீறலுக்கும் 10,000 சிங்கப்பூர் டாலர்கள் (சுமார் 7,000 அமெரிக்க டாலர்) அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தொழிலாளர்கள் தங்கள் சமூக ஊடக மேடைகளில் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் 15 ஆம்புலன்ஸ்கள் தொகுதிக்குள் செல்வதைக் காணும்போது அவர்கள் உணரும் அச்சத்தைப் பற்றியும், மேலும் கடுமையான அறிகுறிகளுடன் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதையும் பற்றி தொழிலாளர்கள் எழுதுகிறார்கள். கூடுதலாக, அவர்களுக்கு இடையே தொடர்பு இல்லாதது உள்ளது. “நீங்கள் நாள் முழுவதும் இணையத்தில் வீடியோக்களைப் பார்க்க முடியாது,” என்று ஒருவர் எழுதுகின்றார்.

மொத்தமாக சுமார் 200,000 தொழிலாளர்கள் PBDகளில் வாழ்கின்றனர். மேலும் 95,000 பேர் “தங்குமிடங்ளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில்” உள்ளனர். தொழிலாளர் அமைச்சின் பதிவின் கீழ் ஒவ்வொன்றிலும் 50 முதல் 500 தொழிலாளர்களை தங்க வைக்க முடியும்.மேலும் 28,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் (“On-Site Housing”) நேரடியாக கொள்கலன்களில் வாழ்கின்றனர். இதில் தலா 40 தொழிலாளர்கள் வரை தங்க வைக்கப்படுகின்றனர். இந்த தங்குமிடங்கள் எப்போதாவது மட்டுமே பரிசோதிக்கப்படும்.

இந்த நிலைமைகள் வெப்பமண்டல காலநிலையில் உள்ள ஒரு நாட்டில் நிலவுகின்றன. அங்கு சராசரி வெப்பநிலை 28 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை (82° முதல் 90° F வரை) மாறுபடும் மற்றும் குளிர்சாதன வசதிகளில்லாத கட்டிடங்களில் ஈரப்பதம் 80 சதவிகிதமாக இருக்கும்.

தொழிலாளர்களின் ஆரோக்கியத்தில் எந்த அக்கறையும் இல்லாத தனியார் நிறுவனங்களால் தங்குமிடங்கள் நிர்வாகிக்கப்படுகின்றன. இத்தகைய வாழ்க்கை நிலைமைகளின் கீழ் வைரஸ் விரைவாக பரவுவது முன்கூட்டியே கணிக்கக்கூடியதும் மற்றும் தவிர்க்க முடியாததும் என்றாலும், அரசாங்கம் கூட இந்த தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டவில்லை.

தொற்றுநோய் பரவுவதால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட பின்னர், தொழிலாளர்கள் நெரிசலான தங்குமிடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். ஏனெனில் சிங்கப்பூரின் குப்பை சேகரிப்பு சேவை உட்பட அவசர வேலைக்குத் தேவையானவர்கள் மட்டுமே வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இப்போது தனித்தனியாக குடியிருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் நாளாந்த புதிய Covid-19 தொற்றுக்கள்


மார்ச் 28 அன்று பங்களாதேஷைச் சேர்ந்த 48 வயதான கட்டுமானத் தொழிலாளி ஒருவர் கோவிட் -19 தொற்றுதலுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, தற்காலிக தொழிலாளர்களிடையே தொற்றுதல்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. திங்களன்று, Johns Hopkins பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட 8,014 பேரை பதிவு செய்தது. இதுவரை ஒரு சிறுபான்மையினர் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ள நிலைமையில் இப்போது தினசரி பதிவுசெய்யப்பட்ட புதிய தொற்றுநோய்களில் 90 சதவிகிதமாக தற்காலிக தொழிலாளர்கள் உள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் மருத்துவமனைகள் அறிவித்த நோய்த்தொற்று புள்ளிவிவரங்கள் பாரியளவில் அதிகரித்தபோது, இந்த தங்குமிடங்களில் தொற்று பரவுவது குறித்து சுகாதார அமைச்சகம் முதலில் அறிந்திருந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை ஆரோக்கியமானவர்களிடமிருந்து பிரிக்க வேண்டும் என்றும், நோயுற்றவர்களில் சிலரை இராணுவ முகாம்களுக்கு அல்லது வெற்று உடற்பயிற்சி கூடங்கள் அல்லது கப்பல்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் அரசாங்கம் இப்போது உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அநேகமாக சிறிய விளைவையே கொண்டிருக்கும், ஏனெனில் நெருங்கிய இடங்களில் வாழும் தொழிலாளர்கள் மத்தியில் மேலும் தொற்று பரவியுள்ளது.

நியூசிலாந்து பேராசிரியர் மோகன் துத்தா, சிங்கப்பூரில் 45 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் அவர் நடத்திய நேர்காணல்களை பற்றி Guardian செய்தி நிறுவனத்திடம் கூறினார்: "இந்த நேர்காணலில் பங்கேற்பாளர்கள், திங்கள் வரை கூட சவர்க்காரம் மற்றும் தேவையான துப்புரவு செய்யும் பொருட்கள் கிடைக்கவில்லை." என்று என்னிடம் கூறினார்கள். தங்குமிடங்களில் உள்ள வாழ்க்கை நிலைமைகள் காரணமாக நோயின்வெடிப்பு தவிர்க்க முடியாதது என்று பலர் அஞ்சினர் என்று அவர் கூறினார். 100 தொழிலாளர்களுக்கு ஐந்து கழிப்பறைகள் மற்றும் குளிப்பறைகள் மட்டுமே இருப்பதால் பெரும்பாலும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது என தொழிலாளர்கள் அவரிடம் கூறியிருந்தனர். இந்த நெருக்கடியின் பின்னர் வழங்கப்படும் உணவும் ஊட்டச்சத்து குறைந்தாகவே உள்ளதாக அவர்கள் புகார் கூறினர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்களின் நிபுணர் பேராசிரியர் Dale Fisher Guardian இடம் தற்காலிக தொழிலாளர்களின் தங்குமிடங்களில் ஆயிரக்கணக்கான புதிய நோய்த்தொற்றுகளை எதிர்பார்க்கப்பட வேண்டும் என்று கூறினார். தொழிலாளர்கள் “30 முதல் 40 வயதுடையவர்களாக இருப்பதால் இது நல்லது. ஆனால் இந்த பெரிய எண்ணிக்கையானவர்களை நீங்கள் கையாளும் போது நீங்கள் 30 முதல் 40 வயதுடையவர்களிலும் கூடிய எண்ணிக்கையிலான நோயுற்றவர்களைப் காணப்போகிறீர்கள்”, இத்தகைய தடைபட்ட தங்குமிடங்களில் ஆபத்து முற்றிலும் வேறுபட்டது. இதற்கான தயாரிப்பையோ மற்றும் இதற்கான எதிர்ப்பையோ அங்கு காணவில்லை” என்று அவர் கூறினார்.

அடிக்கடி மேலதிக வேலைநேரத்துடன் கூடிய கடினமான கட்டுமானப் பணிகள் மற்றும் புகைபிடித்தல் காரணமாக நுரையீரலில் கடும் சிரமம் ஏற்படுவதால் தொற்றுநோய்க்கான அபாயமும் அதிகரிக்கும். Fisher மேலும் கூறியதாவது: “நாங்கள் அதை தங்குமிடங்களிலேயே நிறுத்தாவிட்டால், மருத்துவமனைகள் நிரம்பிவிடும்.” என்றார்.

சிங்கப்பூரில் உள்ள Straits Times பத்திரிகையிடம் அவர் பாதிக்கப்பட்ட தற்காலிக தொழிலாளர்களில் 5 முதல் 10 சதவிகிதம் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறார். 2 சதவிகிதம் வரை மோசமான நிலைமையிலான நோய் எதிர்பார்க்கப்படுகின்றன. சிங்கப்பூரில் ஒப்பந்த தொழிலாளர்களிடையே இறப்புகளின் எண்ணிக்கை பொதுவாக குறிப்பிட்ட காலத்தின் பின்னரே வெளியிடப்படும்.

இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள சேரிப் பகுதிகளைப் பற்றி அவர் மேலும் குறிப்பிட்டார். மற்ற இடங்களுக்கான செய்தி, “உங்களிடம் கூட்டம் அதிகமாக இருந்தால் அது மிகவும் பாதிக்கப்படக்கூடியது. … இந்தியாவின் அடைப்பட்டுள்ள நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் கூறும்போது, இதை செய்வதைத் தவிர வேறு எதையும் நான் நினைக்க முடியாது. இது உங்களுக்கு கிடைத்த ஒரே பாதுகாப்பு போன்றது” என்றார்.

ஒருபுறம் மருத்துவமனை படுக்கைகளின் மட்டுப்படுத்தப்பட்ட அளவு மற்றும் மறுபுறம் தொற்றுக்குட்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை வெடிப்பது ஒரு பெரிய பிரச்சினையை முன்வைக்கையில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் Hsu Liyang நோயாளிகளைத் பரிசோதிப்பதன் மூலம் இதை தீர்க்குமாறு பரிந்துரைக்கிறார்: “கோவிட் -19 பரிசோதிக்கப்பட்டு, கடுமையான மருத்துவமனையில் கண்காணிப்பு காலத்தை எதிர்கொள்வதை விட, சிக்கல்களுக்கு குறைந்த ஆபத்து உள்ளவர்கள் உடனடியாக சமூக தனிமைப்படுத்தும் வசதிகளுக்கு அனுப்பப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

பூகோளமயமாக்கல் மற்றும் சீனா பொருளாதாரத்தை திறந்ததுடன், சிங்கப்பூர் 1980 களில் இருந்து வேகமாக வளர்ந்து வருகிறது, அதனுடன் நூற்றுக்கணக்கான தற்காலிக தொழிலாளர்களை கட்டுமானத் தொழிலில் குறைந்த ஊதியத்தில் பயன்படுத்தப்படுகின்றனர். 800 முதல் 1,300 சிங்கப்பூர் டாலர்கள் (560- 900அமெரிக்க டாலர்) வரை ஊதியம் அளிப்பதாக உறுதியளித்து, தொழிலாளர் முகவர்கள் பணி அனுமதிகளுக்கான முறைகளை ஏற்பாடு செய்கின்றன. ஆனால் ஊதியத்தின் பெரும்பகுதி பின்னர் “முகவர் கட்டணம்,” தங்குமிடம் மற்றும் உணவுக்காக கழிக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் ஒரு சிறிய தொகையை மட்டுமே தமது நாட்டிலுள்ள குடும்பத்தினருக்கு அனுப்பமுடியும்.

சிங்கப்பூரில் சர்வாதிகார ஆட்சி, சிறந்த வேலை அல்லது வாழ்க்கை நிலைமைகளுக்காக போராடும் தொழிலாளர்களின் எந்தவொரு இயக்கத்தையும் அடக்குகிறது. எதிர்ப்பவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுகிறார்கள், சில சந்தர்ப்பங்களில், அவர்கள் கடின உழைப்பில் சேமித்த அனைத்தையும் அபராதம் மூலம் இழக்கிறார்கள். சிங்கப்பூர் தொழிலாளர்கள் பலர் தங்கள் வெளிநாட்டு சகாக்களுக்கான நிதி திரட்டும் பிரச்சாரங்களில் பங்கேற்கும்போது, வைரஸ் பரவுவதற்கு எதிரான போராட்டத்தில் தங்குமிடங்களின் கட்டுப்பாடு இப்போது இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது. பிரிகேடியர் ஜெனரல் Seet Uei Lim இன் கீழ் இது 750 பேரைக்கொண்ட "பணிக்குழு" இனால் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நெருக்கடியின் போது, ஏனைய எந்த நாட்டினது முதலாளித்துவத்தைப் போலவே, மிகவும் புகழப்படும் சிங்கப்பூரின் "தங்கத் தரம்" உண்மையில் என்னவென்றால்: ஒரு மூர்க்கத்தனமான வர்க்க சமுதாயமாகும்.

Loading