வெள்ளை மாளிகையில் ரஸ்புட்டின்

27 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து, உலகம் தினசரி வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்குப் பழக்கமாகிவிட்டது. அதில் டொனால்ட் ட்ரம்ப் தனது தள்ளாடும் அறியாமையை வெளிப்படுத்தி, புலம்பல்களை ஊக்குவிக்கிறார். ஏனெனில் மருத்துவ வல்லுநர்கள் விரைவாக வேலைக்கு திரும்புவதற்கான அவரது முட்டாள்த்தனமான மற்றும் விஞ்ஞானத்திற்கு முரணான நியாயப்படுத்தல்களுக்கு எதிராக உள்ளனர்.

ஆனால் இந்த தினசரி காட்சிகள் கூட வியாழக்கிழமை ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு பார்வையாளர்களை தயாரிப்பு செய்ய முடியாதிருந்தது. அதில் ஜனாதிபதி கிருமிநாசினியை ஊசி மூலம் ஏற்றிக்கொள்ளவும், அதீத ஊதா கதிர் ஒளியை தங்கள் உடலில் செலுத்தவும் அமெரிக்கர்களை வலியுறுத்தியபோது அவை ஜனாதிபதியின் ஆலோசனையை துரதிர்ஷ்டவசமாக கேட்போரை கொல்லும் நடவடிக்கைகளாக இருந்தன.

President Donald Trump addressing Thursday’s press conference [Source: YouTube]

"ஒரு நிமிடத்தில், ஒரு நிமிடத்தில் அதைத் தடுக்கும் கிருமிநாசினியை நான் காண்கிறேன்" என்று ட்ரம்ப் கூறினார். "உள்ளே ஊசி போடுவதன் மூலமோ அல்லது கிட்டத்தட்ட சுத்தம் செய்வதன் மூலமோ நாம் அப்படி ஏதாவது செய்ய முடியுமா? ஏனென்றால் அது நுரையீரலுக்குள் வருவதை நீங்கள் காண்கிறீர்கள், மேலும் இது நுரையீரலில் மிகப்பெரிய பாதிப்பை செய்கிறது, எனவே அவ்வாறான முறையை சோதித்து பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார்.

ட்ரம்ப் தொடர்ந்தார்: “ஆகவே, உடலை ஒரு அதீத ஊதா அல்லது மிகவும் சக்திவாய்ந்த ஒளிக்கதிராக இருந்தாலும், அதை நாம் மிகப் பெரிய அளவில் செலுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பரிசோதனையின் காரணமாக இது மீளாய்வு செய்யப்படவில்லை என்று நீங்கள் கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். பின்னர் நீங்கள் உடலுக்குள் ஒளியை செலுத்துவீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை நீங்கள் தோல் வழியாகவோ அல்லது வேறு வழியிலோ செய்ய முடியும், மேலும் நீங்கள் அதைச் சோதிக்கப் போகிறீர்கள் என்று கூறுவீர்கள் என்று நினைக்கிறேன்”.

இந்த அறிக்கைகள் திகைத்துப்போன மருத்துவ நிபுணர்களின் கண்டனங்களைத் தூண்டின. லைசோல் கிருமிநாசினியை (Lysol disinfectant - தரைகளை தொற்றுநீக்க பயன்னபடுத்தப்படும் தொற்றுநீக்கி) தயாரிப்பவர் ஒரு அறிக்கையை வெளியிடுவதன் மூலம் ஜனாதிபதியை பகிரங்கமாக கண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, "எந்தவொரு சூழ்நிலையிலும் எங்கள் கிருமிநாசினி பொருட்கள் மனித உடலினுள் செலுத்தப்படக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும்" என அதில் குறிப்பட்டது.

சமீபத்திய வாரங்களில், ட்ரம்ப் தனது “நல்ல” உள்ளுணர்வு ஏப்ரல் மாதத்தில் தொற்றுநோய் முடிந்துவிடும் என்றும், அது காய்ச்சலை விட மோசமானது அல்ல என்றும், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகரித்த இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்த போதிலும். ஜனாதிபதியின் பரிந்துரையிலிருந்து இலாபம் ஈட்டக்கூடிய ஒரு நண்பரால் தயாரிக்கப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் (hydroxychloroquine) என்ற மருந்தாக இருக்கலாம் என்றும் கூறினார். இதனால் வைரஸ் குணமடையக்கூடும் என்றும் கூறினார்.

இந்த அறிக்கைகள் ட்ரம்பின் சொந்த அதிர்ச்சியூட்டும் பின்தங்கிய தன்மையையும் மனித உயிர்கள் மீதான கடுமையான அலட்சியத்தையும் வெளிப்படுத்துகின்றன என்பதை சுட்டிக்காட்ட போதுமானது.

ஆனால் இங்கு விளக்கப்பட வேண்டியது என்னவென்றால்: வெள்ளை மாளிகையை ஆட்சிசெலுத்த இந்த கொடூரமான சமூகவிரோத பிரதிநிதியால் எவ்வாறு முடிந்தது, மற்றும் அமெரிக்க அரசியல் அமைப்பின் தற்போதைய நிலை குறித்து அவரது மோசமான ஜனாதிபதி பதவி எதனை வெளிப்படுத்துகிறது?

வரலாற்றில் பெரும்பாலும் அவதானிக்கப்பட்ட, அழிந்துகொண்டு செல்லும் ஒரு அரசியல் அமைப்பின் ஒரு சிறப்பியல்பு என்னவெனில், குறிப்பாக ஆட்சியாளரின் முக்கிய ஆலோசகராக இழிவான மற்றும் மோசமான ஆளுமையை அடிக்கடி அரசின் ஒரு உயர் பதவிக்கு உயர்த்துவதாகும். இத்தகைய நபர்கள் பெரும்பாலும் மக்கள் சீற்றத்தின் மையமாக மாறுகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டில் இத்தகைய ஆளுமையின் மிக மோசமான எடுத்துக்காட்டுகளில், ரஷ்ய ஜார் நிக்கோலஸ் II மற்றும் பேரரசி அலெக்ஸாண்ட்ரா மீது பெரும் செல்வாக்கை செலுத்திய "பைத்தியகார துறவி" கிரிகோரி ரஸ்புட்டின் ஆவார். ஒரு குதிரைத் திருடனும் மற்றும் கற்பழிப்பாளரான ரஸ்புட்டின் அரச தம்பதியினரின் நம்பகமான மற்றும் இன்றியமையாத ஆலோசகரானார். தனது அச்சுறுத்தும் பார்வையின் ஊடாக அவர்களது இரத்த உறைவு குறைபாடுள்ள மகனை மத மந்திரங்கள ஆவிகளுடன் ஒருங்கிணைத்தல் மூலம் குணப்படுத்த முடியும் என்ற கூற்றின் அடிப்படையில் ஜார் மற்றும் அரசியினது நம்பிக்கைக்கு உரியவனார். அவர்கள் ஊழல் நிறைந்த மற்றும் அற்பமான "நண்பரை" கலந்தாலோசிக்காமல் பெரிய முடிவுகளை எடுப்பதில்லை.

ரஸ்புட்டினின் செல்வாக்கு அரசினை பேரழிவிற்கு இட்டுச் செல்கிறது என்ற அச்சத்தில், அதிருப்தி அடைந்த பிரபுக்களின் ஒரு குழு 1916 டிசம்பரில் “நண்பரின்” கொடூரமான படுகொலையை நடத்தியது. அவர்களின் நடவடிக்கை இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தொடங்கிய புரட்சியைத் தடுக்க முடியாது தோல்வியடைந்தது.

ஒரு அரசாங்க ஊழல் மற்றும் வீழ்ச்சியைக் குறிக்கும் ஒரு சொல்லாக "ரஸ்புட்டினிசம்" என்பது அரசியலின் சொற்களஞ்சியத்தில் நுழைந்தது. இது ரஷ்ய புரட்சியின் வரலாற்றில், லியோன் ட்ரொட்ஸ்கி, இந்த வினோதமான அத்தியாயத்தை, நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ரஷ்ய எதேச்சதிகாரத்தின் இறுதி ஆண்டுகளில், "நாட்டை மூழ்கடித்த ஒரு அருவருப்பான கனவின் வடிவத்தை பெற்றது" என்று நினைவு கூர்ந்தார்.

ட்ரொட்ஸ்கி தொடர்ந்தார்: “போக்கிரித்தனம் என்ற வார்த்தை மூலம் சமூகத்தின் அடிப்பகுதியில் உள்ள அந்த சமூக விரோத ஒட்டுண்ணி கூறுகளின் தீவிர வெளிப்பாட்டை நாம் புரிந்துகொள்கிறோம். ரஸ்புடினிசத்தை ஒரு போக்கிரித்தனத்தின் உச்சியில் முடிசூட்டப்பட்ட ஒன்றாக நாங்கள் வரையறுக்கலாம்" என்றார்.

ரஸ்புடினிசத்தின் இந்த மூல வடிவத்தின் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், அமெரிக்காவில் அதுபோன்ற ஒரு வடிவம் உருவாகியுள்ளது. ஆனால் அமெரிக்க ரஸ்புட்டின் ஜனாதிபதியின் ஆலோசகர் அல்ல. அவர் ஜனாதிபதியாக இருக்கிறார். ஒரு கேவலம்கெட்ட மோசடியாளனும் மற்றும் சமூக சீரழிந்தவனும், ஒரு தர்க்கரீதியான வாதத்தை முன்வைப்பது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு ஒத்திசைவான வாக்கியத்தை கூட தொகுத்துக்கூற இலாயக்கற்ற ஒரு நபர் அமெரிக்க அரசின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளார்!

குற்றத்திலிருந்து வேறுபடுத்திப்பார்க்க முடியாத மட்டத்திலான ஒரு ஒட்டுண்ணித்தனத்தை அடிப்படையாகக் செல்வத்தை கொண்ட ஒரு தன்னலக்குழுவினை ட்ரம்ப் பிரிதிபலிக்கின்றார். அவரது குண்டர் குணவியல்பு, கலாச்சார பின்தங்கிய தன்மை மற்றும் பொது மக்கள் மீதான அவமதிப்பு ஆகியவை இரு கட்சிகளையும் மற்றும் அரசின் மூன்று பிரிவுகளையும் கொண்டுநடத்தும் வங்கியாளர்கள், பில்லியனர் முதலீட்டாளர்கள், கழுகு முதலாளிகள், தனியார் நிதி முதலீட்டு மேலாளர்கள், சொத்து பறிப்பவர்கள், ரியல் எஸ்டேட் மோசடி செய்பவர்கள் மற்றும் ஊடக சொந்தக்காரர்களின் மனோபாவங்கள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கியுள்ளது.

முன்னொருபோதுமில்லாத பரிமாணங்களின் நெருக்கடியின் மத்தியில் அமெரிக்கா தற்போது தன்னைக் காண்கிறது. அரசாங்கம் நரம்புகளில் தொற்றுநீக்கிகளை செலுத்துமாறு மக்களிடம் கூறும் ஒரு நபரின் கைகளில் உள்ளது.

அதன் வரலாற்று உயர்வின் காலகட்டத்தில், அமெரிக்க முதலாளித்துவம் அமெரிக்கப் புரட்சியின் ஜனநாயக நெறிமுறைகளை உள்ளடக்கிய ஆபிரகாம் லிங்கனை உருவாக்க முடிந்ததுடன் மற்றும் உள்நாட்டுப் போரின் மூலம் நாட்டை கவனமாக வழிநடத்தியது. அடுத்த பெரும் நெருக்கடியான பெரும் மந்தநிலையின் போது பிராங்ளின் டெலானோ ரூஸ்வெல்ட் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி தீவிரமாகப் பேசும் திறனைக் கொண்டிருந்தார். அவர் தனது “மாலைநேர வானொலி உரைகளில்” செய்ததைப் போலவே பரந்த மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு அழைப்பு விட்டார்.

இன்று, பல தசாப்தங்களாக அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி நாட்டின் ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்பதற்காக ஆளும் வர்க்கத்திற்குள் எந்தவொரு அடித்தளத்தையும் நீக்கியுள்ளது. அமெரிக்க முதலாளித்துவம் அதன் மிகச்சிறந்த வெளிப்பாட்டை ட்ரம்ப் என்ற ஆளுமையில் காண்கிறது. எல்லா அமெரிக்க முதலாளிகளும் அவர்கள் பார்ப்பதை விரும்புகிறார்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் கண்ணாடியில் பார்ப்பது எப்போதும் ஒரு இனிமையான அனுபவம் அல்ல. இறுதி ஆய்வில், ட்ரம்ப் “அவர்களின் மனிதர்”. அவர்கள் அவரை எவ்வாறு இருக்கின்றாரோ அதைப் போலவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

உண்மையைச் சொன்னால், வெள்ளை மாளிகையில் விஞ்ஞானத்தையும் மற்றும் உயர் கலாச்சாரத்தையும் கொண்ட மனிதனால் வோல் ஸ்ட்ரீட் என்ன பயன் உள்ளது? தொற்றுநோய்க்கு விஞ்ஞானரீதியாக தகவலறிந்த அணுகுமுறையால் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் நலன்கள் கிடைக்கப்போவதில்லை. தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்திலிருந்து இலாபம் பிழிந்தெடுக்கப்பட வேண்டும். மாதாந்த அடமான கடன்கள், வாடகைகள் மற்றும் வட்டி செலுத்துதல் ஆகியவை செலுத்தப்பட வேண்டும், அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். டாக்டர் Anthony Fauci மற்றும் அவரது சக தொற்றுநோயியல் நிபுணர்களால் தற்போதைய மற்றும் தொற்றுநோய்களின் இரண்டாவது அலைகளால் ஏற்படும் ஆபத்து குறித்து முடிவில்லாத கருத்துக்கள் மூலம் அமெரிக்க நிறுவனங்களை ஆத்திரமுறச்செய்கின்றார்கள்.

கிருமிநாசினியை ஊசி போடுவது மற்றும் அதீத ஊதா ஒளியை “உடலுக்குள்” செலுத்துவது குறித்து ட்ரம்ப் கூறிய 24 மணி நேரத்திற்குள், ஐம்பதாயிரம் நபர்கள் அமெரிக்காவில் வைரஸால் இறந்துள்ளனர். பல மாநிலங்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப விரைந்தபோது, ஏப்ரல் 23 நாடு முழுவதும் புதிய தொற்றுக்களின் அதிகரிப்பில் சாதனை படைத்துள்ளது. ஆபிரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் உயிரைப் பறிக்க அச்சுறுத்தும் பஞ்சங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராகி வருகிறது.

ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள தனது சகாக்களை விட ட்ரம்ப் அப்பட்டமாகக் கூறினாலும், அமெரிக்க ஜனாதிபதி முழு உலகளாவிய ஆளும் உயரடுக்கின் பார்வையை வெளிப்படுத்துகிறார்.

ஜேர்மனியில், அங்கேலா மேர்க்கெல் தொழிலாள வர்க்கத்தை தங்கள் வேலைகளுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் நாட்டைத் திறக்கிறார். இது ஒரு புதிய அலை மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கான சான்றுகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற இடங்களிலும் இதே நிலைதான். இலத்தீன் அமெரிக்காவில், பிரேசிலின் வலதுசாரி ஜெய்ர் போல்சனாரோ மற்றும் மெக்சிக்கோவின் இடதுசாரி எனக்கூறப்படும் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் ஆகியோரின் பதிலில் ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாடு சுருக்கமாகக் கூறப்படுகிறது. இருவரும் அந்தந்த மக்களை வைரஸிலிருந்து கடவுள் பாதுகாப்பார் என்று கூறியுள்ளனர்.

சமூகம் உலகளவில் திட்டமிடப்பட்ட மற்றும் விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்பட்ட வெகுஜன தலையீட்டினால் சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் பகுத்தறிவும் ஜனநாயக ரீதியாகவும் இயக்கப்பட்டால், தொற்றுநோயை வென்று மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும். தொற்றுநோய் ஒரு உயிரியல் யதார்த்தம். ஆனால் இந்த நிகழ்வுக்கான பதில் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்க நலன்களால் நிர்ணயிக்கப்படுகிறது. தொற்றுநோயினால் ஏற்படும் மரணம் வைரஸின் RNA இனை விட முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னுரிமைகளாலேயே கூடுதலாக தீர்மானிக்கப்படுகிறது.

இறுதி ஆய்வில், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்துடன் தவிர்க்கமுடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது.

Eric London and David North