2020 ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து மூன்று மில்லியனுக்கும் மேலான தனிப்பட்ட வாசகர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை அணுகியுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2020 ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து சர்வதேச ரீதியாகவும் அமெரிக்காவிலும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது.

ஜனவரி 1 மற்றும் ஏப்ரல் 26 தேதிகளுக்கு இடையில், உலக சோசலிச வலைத் தளம் 3.2 மில்லியன் தனிப்பட்ட பார்வையாளர்களால் அணுகப்பட்டுள்ளது. WSWS தளம் பார்வையிடப்பட்டதன் மொத்த எண்ணிக்கை 5.6 மில்லியனாக உள்ளது. மேலும், WSWS வாசகர்களால் பார்க்கப்பட்ட மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 8.7 மில்லியன் ஆகும்.

மார்ச் மாதத்தில் மட்டும், 1.6 மில்லியன் தனிப்பட்ட பார்வையாளர்களால் WSWS அணுகப்பட்டுள்ளது. WSWS வாசகர்களின் மொத்த பார்வையிடல்கள் 2.1 மில்லியனை எட்டியது. மேலும், வாசகர்களால் பார்க்கப்பட்ட மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 3.1 மில்லியன் ஆகும்.

இந்த புள்ளிவிபரங்கள், உலக சோசலிச வலைத் தளத்தின் நிலையான உட்பகுப்பாய்வு முறையை அடிப்படையாகக் கொண்டவை, இது தானியங்கி தேடல்களை தவிர்த்து, தனிநபர்கள் மேற்கொண்ட வருகைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

Monthly page views to the WSWS since January 2019

WSWS வாசிக்கப்படுவதன் மிக முக்கியமான அம்சமாக அதன் சர்வதேச நோக்கம் உள்ளது. உலக சோசலிச வலைத் தளம் 15 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டு வருவதுடன், டசின் கணக்கான நாடுகளில் கணிசமான வகையில் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

ஜனவரி 1 மற்றும் ஏப்ரல் 26 தேதிகளுக்கு இடையில், இங்கிலாந்தின் 545,869 வாசகர்கள், பிரான்ஸின் 221,717 வாசகர்கள், பிரேசிலின் 51,411 வாசகர்கள், துருக்கியின் 29,189 வாசகர்கள் மற்றும் இந்தியாவின் 73,911 வாசகர்கள் WSWS ஐ பார்வையிட்டுள்ளனர். அதே காலகட்டத்தில், WSWS அடிக்கடி அணுகப்பட்ட 20 நாடுகளில் மொத்த அணுகுதல்களின் எண்ணிக்கை பின்வருமாறு உள்ளது:

Visits by country this year

ஜனவரியில், அமெரிக்க வாசகர்களின் மொத்த அணுகுதல்களின் எண்ணிக்கை 514,277 ஆகும். அதிலும், மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்காவைச் சேர்ந்த வாசகர்களின் அணுகுதல்களின் எண்ணிக்கை 853,469 ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியில், மாதாந்திரமாக ஜனவரியில் 117,465 வாசகர்களும், மார்ச் மாதத்தில் 369,855 வாசகர்களும் WSWS ஐ அணுகியுள்ளனர்.

வாசகர்களின் எண்ணிக்கை, மொத்த அணுகல்கள் மற்றும் அணுகப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்துள்ளது தொழிலாள வர்க்க அரசியல் தீவிரமயப்படுவதையே பிரதிபலிக்கிறது.

கூகுள், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளமான ரெட்டிட் (Reddit) போன்ற சமூக ஊடகங்கள் WSWS ஐ அணுகுவதை தணிக்கை செய்யவும், அணுகுவதை தடுக்கவும் எடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளை எதிர்கொள்ளும் நிலையிலும், இதன் வாசகர்களின் எண்ணிக்கை இந்தளவிற்கு அதிகரித்துள்ளமை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

“சோசலிசம்,” “மார்க்சிசம்,” மற்றும் “ட்ரொட்ஸ்கிசம்” போன்ற வார்த்தைகளை இணையத்தில் தேடுகையில் அதன் பிரதிபலிப்பாக கூகுள் WSWS ஐ தணிக்கை செய்தமை குறிப்பாக கடுமையானது என்பதுடன் மிகவும் வெளிப்படையானது. கூகுள் இதுபோன்ற தேடல்களை பொதுவாக, WSWS இன் வாசகர்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த வாசகர்களையே கொண்டுள்ள சோசலிசத்திற்கு விரோதமான அல்லது போலி-இடதின் வலைத் தளங்களுக்கு திருப்பிவிடுகின்றன.

இந்த தணிக்கை ஒருபுறம் இருந்தாலும், WSWS வாசகர்கள் எண்ணிக்கையில் நிகழ்ந்து வரும் அதிகரிப்பு, உலக சோசலிச வலைத் தளத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட புரட்சிகர சோசலிச இயக்கத்திற்கும் (நான்காம் அகிலத்தின் ட்ரொட்ஸ்கிச அனைத்துலகக் குழுவின் அரசியல் அங்கம்) மற்றும் முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க இடது-தாராளவாத அரசியல் போக்குகளுக்கும் இடையிலான அரசியல் சக்திகளின் உறவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.

வலை போக்குவரத்து தரவரிசை சேவை அமைப்பான அலெக்சா (Alexa) அனைத்து வலைத் தளங்களின் உலகளவிலான மற்றும் தேசியளவிலான நிலைத்தன்மையை தரப்படுத்துகிறது.

Global Alexa traffic rankings on April 25 (a lower number means a higher ranking)

ஏப்ரல் 25 அன்று அலெக்சா பதிவு செய்ததன் படி, உலக சோசலிச வலைத் தளத்தின் உலகளாவிய தரவரிசை 14,948 ஆகும். அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் இணைந்த முக்கிய அரசியல் அங்கமாக உள்ள Jacobin பத்திரிகையின் (jacobinmag.com) உலகளாவிய தரவரிசை 24,287 ஆகும், அதாவது, WSWS க்கு 9,000 இடங்கள் பின்தங்கியுள்ளது. அமெரிக்காவிலுள்ள வாசகர்களை மட்டும் கணக்கிட்டால், WSWS இன் தரவரிசை 4,490 ஆகும். அதேவேளை, Jacobin இதழின் அமெரிக்க தரவரிசை 6,943 ஆக உள்ள நிலையில், WSWS க்கு ஏறத்தாழ 2,500 இடங்கள் இது பின்தங்கியுள்ளது.

நியூ யோர்க் டைம்ஸ் செய்தியிதழும் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த பிற செய்தி நிறுவனங்களும் Jacobin பத்திரிகையை அடிக்கடி ஊக்கப்படுத்தி வந்தாலும் தரவரிசையில் அதனை காட்டிலும் WSWS முந்திச் செல்கிறது. 1619 திட்டத்தைச் சுற்றியுள்ள சமீபத்திய சர்ச்சை பற்றிய அறிக்கைகளைத் தவிர, உலக சோசலிச வலைத் தளத்தின் இருப்பு முதலாளித்துவ ஊடகங்களால் அரிதாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

WSWS இன் வாசகர்களின் எண்ணிக்கை, நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்திற்கு அது அளித்த பதிலிறுப்பு உட்பட, அதன் அன்றாட அரசியல் பகுப்பாய்வு முதல் கலைகள் தொடர்பான அதன் முழு அறிக்கையிடல் மற்றும் வரலாற்று விவாதங்கள் வரை அதன் பங்களிப்பு பரந்த தலைப்புக்களில் வளர்ந்து வருகிறது.

வர்க்க போராட்டம் மற்றும் சமூக நிலைமைகள் தொடர்புபட்ட அதன் கட்டுரைகள் தொடர்ந்து பிரபலமானவையாக உள்ளன, இதுபோன்ற கட்டுரைகள் பெரும்பாலும் ஆயிரக்கணக்கான, ஏன் இலட்சக்கணக்கான வாசகர்களை கூட கவர்ந்திழுக்கின்றன. உலக சோசலிச வலைத் தள பார்வையிடல்கள் எண்ணிக்கை முக்கியமாக அதிகரித்ததற்கான காரணம், தொழிலாள வர்க்க வாசகர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை தமது கைபேசிகளைப் பயன்படுத்தி அணுகுவதாகும்.

உலக சோசலிச வலைத் தளம் என்பது உலகில் மிகவும் பரவலாக பின்பற்றப்படும் இணைய அடிப்படையிலான சோசலிச வெளியீடாகும். பப்லோவாத மற்றும் போலி-இடது தொடர்பான மற்றும் சந்தர்ப்பவாத அமைப்புகளின் வெளியீடுகள் ஈர்க்கும் வாசகர்களின் எண்ணிக்கை WSWS ஐ காட்டிலும் மிகவும் அற்பமானதே.

Socialistalternativ.org என்ற இணைய வெளியீட்டின் உலகளாவிய தரவரிசை 549,977 ஆகும். அமெரிக்காவிற்குள் அதன் தரவரிசை 197,920 ஆக உள்ளது. Solidarity-us.org மூலமாக இணையதளத்தில் பதிவிடப்பட்ட Against the Current என்ற வலைத் தள பத்திரிகையின் உலகளாவிய தரவரிசை 658,222 மற்றும் அமெரிக்க தரவரிசை 196,278 ஆகும்.

உலக சோசலிச வலைத் தளம் பெப்ரவரி 1998 இல் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (International Committee of Fourth International-ICFI) மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச திட்ட அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் உலக புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கான ஒரு சமரசமற்ற போராட்டத்தை இது தொடர்ந்து நடத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிச கொள்கைகளுக்கான இந்த போராட்டம், நடுத்தர வர்க்க போலி இடது பிரதிநிதிகளால் “குறுங்குழுவாதம்” என்று கண்டிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டது, இது, அனைத்து அரசியல் கட்சிகள், மற்றும் ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் அமைப்புக்களின் போக்குகள் ஆகியவற்றில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டுவதற்கான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தை இழிவுபடுத்த அவர்கள் பயன்படுத்தும் சுட்டுப்பெயராகும்.

ஆனால், “குறுங்குழுவாதம்” என்று போலி-இடது கண்டனம் செய்வது என்னவென்றால் தொழிலாள வர்க்கம் மற்றும் மாணவர் இளைஞர்களின் வளர்ந்து வரும் அரசியல் தீவிரமயமாதலை ஊடறுப்பதாகும்.

இந்த செயல்முறை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ICFI ஆகியவற்றின் வளர்ந்து வரும் உறுப்பினர் எண்ணிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது, இது உலக நிகழ்வுகள் பற்றி WSWS முழுமையாக அறிக்கை செய்வதை விரிவாக்குவதையும் மற்றும் இணைய தளத்தில் பதிவிடும் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் சாத்தியமாக்கியுள்ளது.

கடந்த 22 ஆண்டுகளில் WSWS கண்டுள்ள வளர்ச்சி என்பது வரலாற்று சாதனையாகும். ஆனால், உலக சோசலிச வலைத் தளத்திற்கான சர்வதேச வாசகர்களின் விரைவான அதிகரிப்பு என்பது, புதிய நிறுவனங்கள் தோன்றுதல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, அத்துடன் அரசியல் சம்பந்தமான சவால்களை எதிர்கொள்வதுடன் இணைந்தே தொடர்கிறது. இந்நிலையில், WSWS இன் தினசரி வெளியீடு அதன் வாசகர்களின் ஆதரவையே நம்பியுள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில், உலக சோசலிச வலைத் தளம், தொழிலாள வர்க்கத்தை பாதுகாப்பதிலும் மற்றும் சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்திலும் இன்றியமையாத ஆயுதமாக உள்ளது. ஆகவே, உலக சோசலிச வலைத் தளத்தை ஆதரிக்க, முடிந்தவரை பெரியளவில் நன்கொடை வழங்க முன்வர எங்களது வாசகர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Loading