முன்னோக்கு

"மந்திர மருந்தாக" ரெம்டிசிவிர்: விஞ்ஞானத்திற்கு எதிராக வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தேசிய சுகாதார அமைப்பின் புதிதாக வெளியிடப்பட்ட ஆரம்ப முடிவுகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துப்படி, ரெம்டிசிவிர் மருந்து (remdesivir) இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் குணப்படுத்துவதை நோக்கிய "மிகப்பெரும் முன்னேற்ற படிக்கல்" என்பதாக சித்தரிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் "தெளிவாக நம்பிக்கை" (MSNBC) அளிக்கும் விதத்தில் "[ஒரு] கொரோனா வைரஸ் மருந்து குறித்த நற்செய்தி" (CNN) என்பதாக பிரதான ஊடகங்களால் மூச்சுப்பிடிக்க பிரகடனப்படுத்தப்படுகின்றன. பரிசோதனையிலிருந்து கிடைத்த "நேர்மறையான விபரங்களுக்கு" (New York Times) இணங்க, “கொரோனா வைரஸிலிருந்து குணப்படும் காலம் வேகமாகி" (Fox) உள்ளதாக மேலும் செய்திகள் உள்ளன.

வழமையான நிலைமைகளில், ஒரு புதிய மற்றும் சிக்கலான வைரஸ் நிகழ்வுக்கு பயனுள்ள பதிலைக் கண்டுபிடிப்பதற்கான தொடர்ச்சியான மற்றும் நீடித்த முயற்சியின் ஒரு பகுதியாக தேசிய சுகாதார நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஆராய்ச்சியாளர்களால் ஆர்வத்துடன் குறிப்பிடப்படும்.

ஆனால் இந்த "பரபரப்பு செய்தி" மீது ஊடகங்களின் முகஸ்துதியானது, இந்த வைரஸ் "கட்டுப்பாட்டில்" உள்ளது என்றும் இந்த நெருக்கடி ஏறக்குறைய முழுமையாக முடிந்துவிட்டது என்பதாகவும் ஓர் உணர்வை உருவாக்கவும் மற்றும் வேலைக்குத் திரும்ப செய்யும் பிரச்சாரத்தை நியாயப்படுத்தவும், அதிகரித்தளவில் வெறித்தனமான ஒரு முயற்சிக்கு இடையே செய்யப்படுகிறது.

A nurse prepares a shot at the Salvation Army in Atlanta. (AP Photo/David Goldman)

நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சி கோவிட்-19 க்கு ஒரு நடைமுறை தீர்வுக்கான முயற்சிகளுக்கு ஒரு முக்கிய பங்களிப்பாக நிரூபணமாகும் என்று நம்பப்பட வேண்டும். ஆனால் ரெம்டிசிவிர் குறித்து கூறப்படும் வாதங்களும் அதை முன்னிறுத்துவதன் நோக்கமும் பெரிதும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய ஆணையத்தின் இயக்குனர் ஆண்டனி ஃபாஸி விஞ்ஞானப் பரிசீலனைகள் மற்றும் பொது சுகாதாரத்திற்கான அவசியங்களை விட அரசியல் அழுத்தத்தால் தீர்மானிக்கப்பட்ட அறிக்கைகளை வெளியிடுகிறார் என்ற உணர்வைத் தான் ஒருவர் அதிகமாக பெறுகிறார்.

என்ன தெரிய வந்திருக்கிறதோ அது அளவை விட மிகவும் குறைவானதே. NIH பத்திரிகை செய்தியின்படி, placebo சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் குணமாகும் 15 நாட்களுடன் ஒப்பிடுகையில், ரெம்டிசிவிர் மருந்து செலுத்தப்பட்ட நோயாளிகளும் மற்றும் கோவிட்-19 ஆல் அதிக சுவாசப் பிரச்சினை கொண்டவர்களும் குணமாவதற்கு சராசரியாக 11 நாட்கள் ஆகின்றன, இது 31 சதவீத அதிகரிப்பாகும். அந்த மருந்து எடுத்தவர்களின் இறப்பு விகிதம் 11.6 சதவீதத்தில் இருந்து 8.0 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் அந்த அறிக்கை அறிவுறுத்துகிறது, இருப்பினும் அந்த முடிவுகள் புள்ளிவிபரங்களின்படி போதுமானளவுக்கு இல்லை என்று ஃபாஸி குறிப்பிட்டார்.

புள்ளிவிபரங்களின்படி முடிவுகள் முக்கியமானவை என்றாலும் கூட, அந்த மருந்து தீவிர நோயாளிகளின் பெரும் பெரும்பான்மையினரின் உயிர்களைக் காப்பாற்றாது என்பதே அர்த்தமாக உள்ளது.

ரெம்டிசிவிர் மீதான ஏனைய பரிசோதனைகள் குறித்து அங்கே எந்த தீவிரமான விவாதமும் இல்லை, அவற்றில் எதுவுமே தற்போதைய ஆய்வில் முன்வைக்கப்படும் வெற்றிக்கு நெருக்கமாக கூட வரவில்லை. புதன்கிழமை Lancet இல் சீனாவின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் பிரசுரிக்கப்பட்டன, அதே நாளில் தான் NIH பரிசோதனை முடிவுகளும் வெளியிடப்பட்டன. Lancet ஆய்வு, நோயாளிகள் குணமாகும் காலத்தில் புள்ளிவிபரங்களின்படி கணிசமான குறைவைக் காணவில்லை. உண்மையில் placebo ஐ விட ரெம்டிசிவிர் சிகிச்சையில் அதிக நோயாளிகள் உயிரிழந்தனர்.

இத்தகைய உண்மைகளைப் புறக்கணித்து ஃபாஸி அறிவிக்கையில், “குணமாகும் காலத்தைக் குறைப்பதில் ரெம்டிசிவிர் சிகிச்சை தெளிவான குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதைத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. … [இந்த கொரோனா வைரஸ்] நோயைக் குணப்படுத்தும் தகைமையை நாம் இப்போது பெற்றுள்ளோம் என்ற உண்மைக்கு அது கதவு திறந்து விட்டிருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்,” என்றார்.

இந்த அறிவிப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிரப்படுத்தப்பட்டு வரும் வேலைக்கு மீண்டும் திரும்புவதற்கான முனைவுக்கு இடையே வந்தது, அந்த முனைவில் வைரஸ் "பரவுவதைக் குறைப்பதற்கான" மட்டுப்படுத்தப்பட்ட முறைமைகளைக் கூட கைவிடும். மிகப்பெரும் தொழில்நிறுவனங்களின் டஜன் கணக்கான செயலதிகாரிகளின் "அமெரிக்காவை மீண்டும் திறந்துவிடுவதற்கான திட்டம்" அண்மித்து நாட்டின் பாதி பகுதிகளிலும் மற்றும் அனைத்து பிரதான தொழில்துறைகள் எங்கிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில், அதை மேற்கொண்டு விவாதிப்பதற்காக ஜனாதிபதி நேற்று அவர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உரையாற்றினார்.

ஐயத்திற்கிடமின்றி இந்த பிரச்சாரத்தில் ரெம்டிசிவிர் மருந்து பெரும் பங்கு வகிக்கும். தொழிலாளர்களை மீண்டும் அலுவலகங்களுக்கும் ஆலைகளுக்கும் பலவந்தமாக அனுப்புவதற்கான முயற்சிகளில், பிரதான வங்கிகளும் பெருநிறுவனங்களும் ஏற்கனவே மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை இல்லையென்றாலும் பத்தாயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கையை இந்த தொற்றுநோய் ஆபத்திற்கு உள்ளாக்கும் அவர்களின் விருப்பத்தைச் சமிக்ஞை செய்துள்ளனர்.

வேலைக்குத் திரும்புவதின் பாதிப்பை ரெம்டிசிவிர் மருந்து வெகு சிறிதளவே குறைக்கும் என்ற உண்மை குறிப்பிடப்படுவதே இல்லை. சான்றாக, அமெரிக்காவில் தொழிலாளர்கள் அலுவலகங்களுக்கும் ஆலைகளுக்கும் பலவந்தமாக திரும்ப அனுப்பப்பட்டால் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை பத்து மடங்கால் அதிகரித்தால், ரெம்டிசிவிர் மருந்து ஒரு சிறிய பகுதியை மட்டுமே தொற்று ஏற்படாமலும் அல்லது முதலிடத்தில் மரணமடையாமலும் காப்பாற்றும் என்று NIH தரவு குறிப்பிடுகிறது.

அனைத்திற்கும் மேலாக, மிகவும் நேர்மறையான சூழலிலும் கூட, இதில் கோவிட்-19 க்கான மருந்து அல்லது தடுப்பூசி நடைமுறையளவில் நிரூபிக்கப்பட்டாலும் கூட, அது பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடுவதற்கான வாதத்தை வழங்காது. இப்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றால், அது மிக அதிகமான பரிசோதனைகள், தொடர்புகளின் சுவடுகளைப் பின்தொடர்தல் மற்றும் சரீரரீதியில் விலகி இருத்தல் ஆகியவற்றுக்காக வாதிடுகிறது ஏனென்றால் மில்லியன் கணக்கானவர்களைக் கொரோனா வைரஸிற்கு உட்படுத்தினால் அது மிகவும் துயரகரமாக இருக்கும், சாத்தியமானளவுக்கு நோயாளியாக ஆகலாம் அல்லது உயிரிழக்கவும் கூடும். இதற்கிடையே அவர்களின் முதலாளிமார்கள் பொறுமை காத்தால், அவர்கள் பாதிக்கப்பட வேண்டியதே இருக்காது.

வேலைக்குத் திரும்புதல் என்பது தொழிலாளர்களின் முன்னால் சாத்தியமான சிகிச்சையை ஊசலாட விட்டுள்ள போதினும் அமெரிக்க ஆளும் உயரடுக்கு தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப நிர்பந்தித்து வருகிறது என்பது மொத்தத்தில் மிகவும் குற்றகரமாக உள்ளது.

ஃபாஸி மற்றும் அவரின் சக கூட்டாளி Deborah Birx க்கு பரிச்சயமான ஒரு வரலாற்று உவமையைக் கூறுவதானால், 1980களில் AIDS தொற்றுநோயை எதிர்க்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் அபிவிருத்தி, “பாதுகாப்பான உடலுறவை" ஊக்குவித்தல் மற்றும் அந்நோய் பரவுவதைத் தடுப்பதற்கான ஏனைய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் சேர்ந்து வந்தது. தடுப்பூசிகளும் சிகிச்சை முறைகளும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன என்பதால் ஊசிகளைப் பலருக்கும் பயன்படுத்துவதும், ஆணுறைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் உரிய முறையாக இருக்கும் என அங்கே எந்த அறிவுரையும் கூறப்படவில்லை.

இந்த பரிசீலனைகளில் எதுவுமே இந்த அறிவிப்பைக் கொண்டாடுவதில் இருந்து வோல் ஸ்ட்ரீட்டைத் தடுத்துவிடவில்லை. ரெம்டிசிவிர் மருந்தைத் தயாரிக்கும் Gilead Sciences இன் பங்கு விலை, NIH பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டதற்கு இரண்டு நாளில் நான்கு மடங்கு அதிகரித்து, அந்த பரிசோதனை தொடங்கியதில் இருந்து 20 சதவீதத்திற்கும் அதிகமாக எழுச்சியடைந்தது, அதன் பங்குதாரர்களின் பைகளில் 20 பில்லியன் டாலர் நிரம்புமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பத்திரிகை வெளியீடு வந்த அந்நாளில் டோவ் ஜோன்ஸ் ஒட்டுமொத்தமாக 500 புள்ளிகள் அதிகரித்தது.

இது, அமெரிக்க ஆளும் உயரடுக்கின் ரெம்டிசிவிர் மருந்து பரிசோதனையின் விடையிறுப்பின் முக்கிய பகுதியை உருவாக்குகிறது. இந்த தொற்றுநோய் சீற்றம் அதிகரித்து வரும்போது கூட மருந்தில் இருந்தும் மற்றும் அமெரிக்க மக்களை வேலைக்குத் திரும்ப நிர்பந்திப்பதற்காக முதலாளிமார்கள் மற்றும் அரசாங்கத்திற்கான விஞ்ஞானரீதியான மூடிமறைப்பிலிருந்தும் அங்கே பணம் சம்பாதிக்கப்பட உள்ளது.

Loading