இலங்கை: எபோட்சிலி தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் பத்து தொழிலாளர் குடும்பங்கள் அழிவடைந்துள்ளன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மே 2 அன்று ஹட்டனில் உள்ள எபோட்சலி தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் லயன் அறைகள் அழிவடைந்துள்ளதால் 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் 14 லயன் அறைகள் எரிந்து போனதுடன் அவர்களின் ஆடைகள், சமயலறை மற்றும் வீட்டுத் தளபாடங்கள், அடையாள அட்டைகள், பிள்ளைகளின் பாடசாலைப் புத்தகங்கள் போன்றவையும் எரிந்துபோய்விட்டன.

எரிந்து போன கூரை

இந்த சம்பவம் இரவு 7.15 மணிக்கு இடம்பெற்றதுடன் அப்போதிருந்தே பிள்ளைகளுடன் 38 பேரும் தோட்டத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் அகதிகளாக தங்கியுள்ளனர்.

ஹட்டன் தோட்டக் கம்பனிக்கு சொந்தமான எபோட்சிலி தோட்டம், ஹட்டன் நகரத்திலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளதுடன், அங்கு 700 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியாத போதும், இத்தகைய சம்பவங்கள் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புகளில் அடிக்கடி நடப்பதற்கு காரணம், மின்சார இணைப்புகள் பொருத்தமற்ற முறையில் செய்யப்படுவதேயாகும். மின்சார இணைப்புகள் உள்வீட்டு தரத்திற்கு ஏற்ப செய்யப்படுவதில்லை. இதனாலாயே தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புக்களில் இத்தகைய சம்பவங்கள் வழமையாக நடக்கின்றன.

எபோட்சிலி தோட்டத்திலும் ஏனைய தோட்டங்களிலும் தொழிலாள குடும்பங்கள் வசிக்கும் லயன் வீடகுள், 12 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட அறைகளையே கொண்டுள்ளன. சமயல் அறையும் வரவேற்பு அரையும் இதை விட சிறியதாகும். இவை 100 வருடத்திற்கு முன்பு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் கட்டப்பட்டவை ஆகும். தோட்ட நிர்வாகம் சிறிய திருத்த வேலையை செய்து மரணப் பொறியாக இருக்கின்ற இந்த பழமைவாய்ந்த லயன் அறைகளிலே மீண்டும் அந்த தொழிலாளர்களை குடியமர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது. தொழிலாளர்கள் மீதான சுரண்டலை உக்கிரமாக்குவதற்கு உகந்ததாகவே தோட்டத்திற்குள் தொழிலாளர்கள் வசிப்பதற்கு இந்த லயன் அறைகள் கட்டப்பட்டன.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 29, பொகவந்தலாவையில் உள்ள ரொப்ஹில் தோட்டத்தில் 12 வீடுகள் தீயினால் அழிந்தன. 2018 டிசம்பரில், டிக்கோயாவில் போடைஸ் தோட்டத்தில் 20 வீடுகளும், அதே ஆண்டில் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் பல வீடுகளும் தீக்கிரையாகின. ரொப்ஹில் தொழிலார்கள் கலாச்சார மண்டபத்திலும் மற்றும் பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் சிறுவர் பாடசாலையிலும் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி இன்னமும் அகதிகாளாக இருக்கின்றார்கள்.

எரிந்து போன லயன் குடியிருப்பின் சமயலரை பகுதி

எபோட்சிலி தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 39 வயது பெருமாள் கமலசாமி, உலகசோசலிசவலைத்தளத்திற்கு கூறியதாவது: “தேசிய அடையாள அட்டைகள், பிறப்பு சான்றிதல்கள் உட்பட அநேகமான பொருட்களை நாம் இழந்துவிட்டோம். தளபாடங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் பெறுமதி மூன்று லட்சமாகும். எமது சம்பளம் எங்களுடைய சாப்பாட்டுக்கே போதாத நிலமையில் இந்தப் பொருட்களை மீண்டும் எவ்வாறு வாங்க முடியும்? எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் பயிற்சி புத்தகங்கள் தீயில் எரிந்துபோனதாக் அவர்களின் கல்வி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.”

“தோட்ட நிர்வாகம் வீடுகளுக்கு புதிய கூரை அமைத்து திருத்த வேலைகள் செய்து தருவதாக உறுதியளித்துள்ளது. ஆனால் இந்த வீடுகள் 100 வருடங்களுக்கு மேல் பழமையானவை, அதனால் ஆபத்து தொடரும். எங்களுக்கு இத்தகைய தீ விபத்திலிருந்து பாதுகாக்கவும், சுகாதார நிலமைகளைப் பேணவும் பொருத்தமான தனி வீடு அவசியம். இந்த நாட்களில் கொரோனா வைரஸ் பரவுகின்றது. சுகாதாரமற்ற லயன் அறைகளில் தொழிலாளர்கள் வாழ்வது பாதுகாப்பற்றது.”

எரிந்து போன வீடுகளின் சிறிய படுக்கையறை

தீயினால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஒரு தொழிலாளி, நாட்டில் கொரோனா வைரஸ் பரவுகின்ற நிலைமையில் நாம் பல கஸ்டங்களை அணுபவித்து வருகின்றொம், என்றார். “நாம் இப்பொழுது வீடுகளையும் இழந்துள்ளோம். இந்த லயன் முறையினால் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக தீயினால் பாதிக்கப்படுகின்றார்கள். அரசாங்கம் வேறு சில தோட்டங்களில் சிறு தொகை வீடுகளை கட்டியது. ஆனால் எங்களுடைய தோட்டத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இந்த லயன்களிலே வாழ்கின்றார்கள். தொழிற்சங்கங்கள் இதற்காக போராடுவது இல்லை. கடந்த வருடம் எமது 1,000 ரூபாய் சம்பளக் கோரிக்கையும் இந்த தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது,” என அவர் மேலும் கூறினார்.

அவர் குறிப்பிட்டது 2018ம் ஆண்டு இறுதியில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பளமாக 1,000 ரூபாய் (5 டொலர்) கோரி நடாத்திய போராட்டமாகும். அந்தப் போராட்டம் தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது.

கடந்த வருடம் தீயினால் பாதிக்கப்பட்ட பொகவந்தலாவையில் உள்ள ரொப்ஹில் தோட்டத்தை சேர்ந்த பி. பிரபாகரன் கூறியதாவது: “கடந்த வருடம் எங்களுடைய தோட்டத்தில் 16 வீடுகள் தீயினால் எரிந்து போனது. ஆனால் இன்றுவரை நாம் புதிய வீடுகளைப் பெறவில்லை. குழந்தைகளுடன் நாம் 45 பேர் கலாச்சார மண்டபத்தில் அகதிகாளாக வாழ்கின்றோம். எட்டு மாதங்களுக்கு முன்பு, கடந்த அரசாங்க காலத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தை பரதிநிதித்துவ படுத்தும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் 16 வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டிச் சென்றார். ஆனால் வீடுகள் கட்டப்படவில்லை.

“அரசாங்கம், தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் முற்று முழுதாக எங்களை புறக்கணித்துள்ளது. இப்பொழுது வைரைஸ் பரவுகின்றது. 45 பேர் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் ஒரு இடத்தில் வசிக்கின்றோம். அதனால் கொரோனா வைரஸிலிருந்து எங்களுக்கு எதுவித பாதுகாப்பும் இல்லை. ஆனால் எவரும் இதுபற்றி கவனம் எடுப்பதில்லை. இந்தக் காலகட்டத்தில் எனது அம்மா இறந்தார். அவரது உடலை வைத்து மரணச் சடங்கு செய்வதற்கு கடும் சிரமத்தை முகம் கொடுத்தோம்.

“எமக்கு தோட்டத்தில் மூன்று நாள்தான் வேலை கிடைக்கின்றது, எமது வருமானம் சாப்பாட்டுக்கே போதாத நிலமையில் நாம் எவ்வாறு வீடு கட்டுவது? எமக்கு ஒரு நாள் சம்பளம் 700 ரூபாய் மட்டுமே. கடந்த வருடம் எங்களுடைய 1,000 ரூபாய் நாட் சம்பளப் போராட்டம் சகல தொழிற்சங்கங்களாலும் காட்டிக் கொடுக்கப்பட்டது.”

அவர் தொடர்ந்தார்: “தற்போதய அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகம் தொண்டமான், ஏப்பிரல் மாதம் 10ம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் நாட் சம்பளத்தை கண்டிப்பாக பெறுவார்கள் என உறுதியளித்திருந்தார். ஆனால் அதனை நாம் இன்றுவரை பெறவில்லை. நாட்டில் முழுமையாக ஊரடங்கு அமுலில் இருக்கும் போதும் கூட நாம் வேலை செய்கின்றோம். ஆனால் எங்களுக்கு அரசாங்கம் உறுதியளித்த 5,000 ரூபாய் நிவாரண நிதியும் வழங்கப்படவில்லை.

2018 டிசம்பரில், தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது சோசலிச சமத்துவக் கட்சி சக்தி வாய்த முறையில் அதில் தலையிட்டு தொழிற்சங்கங்களின் துரோக நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியது. அந்தப் போராட்டத்தின் மத்தியில் சோசலிச சமத்துவக் கட்சியின் உதவியடன் எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுவொன்றை அமைத்ததோடு, தொழிலாளர்களின் லயன்களின் நிலைமைகள் சம்பந்தமாக உலகசோசலிசவலைத்தளத்தின் ஊடாக அம்பலப்படுத்தியது. இந்த அம்பலப்படுத்தலுக்கு பின்னர் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை குழு அஙகத்தவர்களை பயமுறுத்தியது. மே 2 அன்று ஏற்பட்ட தீ, தொழிலாளர்களின் லயன்களின் சகிக்க முடியாத நிலைமை சம்பந்தமான எமது அம்பலப் படுத்தலை நிரூபித்துள்ளது.

இந்த தீ சம்பவத்திற்கு பின்னர் உலகசோசலிசவலைத்தளநிருபர்கள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் பேசுவதை தடுப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. எமது நிருபர்கள் அகதிகளாக கலாச்சார மண்டபத்தில் நிர்கதியாக்கப்பட்ட தொழிலாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அதனை தடுப்பதற்காக தோட்ட நலன்புரி அதகாரியையும், தோட்ட வைத்தியரையும் நிர்வாகம் அணுப்பியிருந்தது. தோட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி தொழிலாளர்களுடன் பேசமுடியாது என அவர்கள் எமது நிருபர்பளுக்கு கூறினார்கள்.

சகல தொழிற்சங்களும் தோட்ட நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து, தொழிலாளர்களுக்கு எதிராக அவர்கள் முகம் கொடுக்கும் கடுமையான நிலமைகளை மூடிமறைக்கின்றார்கள். இந்த நிலமைகளின் கீழ் தொழிலாளர்களின் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவது சம்பந்தமாகவும் குறிப்பாக உலகசோசலிசவலைத்தளத்தில் வெளிவரும் கட்டுரைகள் சம்பந்தமாகவும் தோட்ட நிர்வாகம் பீதியடைந்துள்ளது. இதுவே உலகசோசலிசவலைத்தளத்தின் நிருபர்கள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் பேசுவதை தடுப்பதற்கான காரணமாகும்.

Loading