SARS-CoV-2 தொற்று நோயைத் தொடர்ந்து கவாசாகி போன்ற நோய் சிறு குழந்தைகளையும் இளம் வயதினரையும் பாதிக்கின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 ஆல் தீவிரமாக பாதிக்கப்பட்ட குழந்தை நோயாளிகளில் ஒரு சிறிய அதிகரிப்பு இருப்பதாக ஏப்ரல் 27 இல் பிரிட்டன் ஒரு மருத்துவ எச்சரிக்கையை வெளியிட்டது. நச்சு தடிமன் நோய் அறிகுறி (toxic shock syndrome) மற்றும் கவசாக்கி நோய்க்கு ஒத்த அம்சங்கள் கொண்ட உடலின் பல மண்டலங்களைப் பாதிக்கும் ஒருவகை அழற்சி நோயால் (inflammatory disease) அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரு வாரத்திற்குப் பின்னர் மே 4 இல் நியூ யோர்க் நகரமும் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டது, 2 இல் இருந்து 15 வயதிற்குட்பட்ட 15 குழந்தை நோயாளிகள் அந்நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அது அறிவித்தது. இந்த நோய் அறிகுறிக்கு "குழந்தைகளின் பல உள்மண்டலங்களைப் பாதிக்கும் அழற்சி நோய் அறிகுறி" (Pediatric Multi-system Inflammatory Syndrome) என்று இப்போது பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகளின் முன்வரலாறை மீளாய்வு செய்து விவாதிக்க போஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர மருத்துவக் கவனிப்புப் பிரிவு தலைவர் ஜெஃப்ரீ பர்ன்ஸ் (MD, MPH) Zoom செயலி வழியாக ஒரு சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைத்து ஒன்று கூட்டினார். சிகிச்சை நிபுணர்களுக்கு சிறந்த நடைமுறை வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்தவர்களும் எதிர்கால பணிகளுக்கான ஆராய்ச்சி விடயங்களை வரையறுத்தவர்களுமான குழந்தைகளுக்கான தீவிர நோய் நிபுணர்கள், இதயநோய் மருத்துவர்கள், வாதநோய் நிபுணர்கள், தொற்றுநோய் மற்றும் கவசாக்கி நோய் சிறப்பு வல்லுனர்களும் அதில் கலந்து கொண்டவர்களில் உள்ளடங்கி இருந்தனர். அந்த நோய் அறிகுறிகள் குழந்தைகளின் மரபணு பாதிப்பிற்குள்ளான குழந்தைகளில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்று அவர்களால் முடிந்த வரையில் ஊகித்தனர்.

Kawasaki Disease

அந்த குழந்தை நோயாளிகள் அனைவரும் தற்காலிகமாக கோவிட்-19 நோய்தொற்றுடன் சம்பந்தப்பட்டிருந்தனர், அவர்களுக்கு உடலின் ஓர் உறுப்பையோ அல்லது பல உறுப்புகளையோ செயலிழக்கச் செய்த தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தது. அந்த நோயைக் காட்டும் அறிகுறிகளுக்கு நான்கில் இருந்து ஆறு வாரங்களுக்கு முன்னரே, அந்நேரத்தில் நாசிதுவாரங்களில் எடுக்கப்படும் சளியிலிருந்து நோயைக் கண்டறிய முடியாது என்ற நிலையில் இருந்த போதே, வைரஸ் தொற்று ஏற்பட்ட அந்த நோயாளிகளிடையே வேறு தனித்துவமான சில அறிகுறிகள் இருந்தன. உண்மையில் இந்த தொற்றுநோய் முதலில் மார்ச் மாத இரண்டாம் அரை பகுதியில் தான் அமெரிக்காவைப் பீடித்தது என்ற நிலையில், இப்போது வெளிப்பட்டு வரும் இந்த நோயாளிகள் கோவிட்-19 பாதித்த குழந்தைகளிடையே படிப்படியாக அதிகரிக்கும் அந்த அபாயகரமான பாதிப்பின் தொடக்கமாக இருக்கின்றனவா என்று பார்க்கவேண்டும்.

“கோவிட்-19 தொற்றுநோயின் போது குழந்தைகளின் மீது அதீத அழற்சி அதிர்வு (Hyperinflammatory shock)" என்று தலைப்பிட்டு The Lancet இல் வெளியான அறிக்கையே ஏப்ரல் 27 எச்சரிக்கைக்கு அடித்தளமாக இருந்தது, அது அழற்சி அதிர்வு நோய் அறிகுறிகள் மற்றும் கவாசாகி போன்ற நோய் அறிகுறிகளுடன் வந்த எட்டு குழந்தைகளின் ஒரு குழுவின் மீது அந்த அறிக்கை ஒருங்குவிந்திருந்தது. அந்த எல்லா குழந்தைகளுமே PCR பரிசோதனை மற்றும் சுவாசக் குழாய்வழி பரிசோதனையில் (bronchoscope lavage) தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டனர், இந்த முறை பரிசோதனையில் சுவாசக் குழாய் வழியாக பெறப்பட்ட சளியில் SARS-COV-2 பரிசோதிக்கப்படும். அந்த குழந்தைகளுக்கு எந்தவிதமான வைரஸ் தொற்றும் இல்லை என்பதும் பரிசோதனையில் வெளியானது. இதய நுண்ணொலி மதிப்பீட்டு பரிசோதனையானது (Cardiac ultrasound evaluation) இதய இரத்த நாளங்களில் அசாதாரணமான கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டு ஒரு வாரத்தில் ஒரு குழுந்தைக்கு இரத்தநாளத்தில் கட்டிகள் வளரத் தொடங்கியது.

இவெலினா இலண்டன் குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் நல தீவிர சிகிச்சைப் பிரிவு இதேபோன்ற மருத்துவத் தன்மைகளுடன் 20 குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி அவர்களின் அறிக்கையை அந்த நிபுணர்கள் நிறைவு செய்திருந்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு கவாசாகி நோய் என்றழைக்கப்படும் அரிய அசாதாரண அழற்சி நிலைமையில் தென்படும் சில அல்லது எல்லா அறிகுறிகளும் இருந்தன. இந்த கவாசாகி நோய் என்பது 1960 களில் உடலில் ஆங்காங்கே அரிப்பு அறிகுறிகள் தென்படுவதை விளங்கப்படுத்திய மருத்துவரின் பெயரில் பெயரிடப்பட்டதாகும். இவற்றில் காய்ச்சல், தோலில் தடிப்புகள், கண் பொங்குதல், கைகள் சிவத்தல், மற்றும் சிவந்த வெடித்த உதடுகள் ஆகியவை உள்ளடங்கி இருக்கும். சில நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஏறிய இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு செல்லும் இதய தமனிகள், நாளங்களில் கட்டிகள் அல்லது வீக்கம் ஏற்பட செய்யும். கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்த பருவ வயதினரின் உள்உறுப்புகளைச் சேதப்படுத்தும் சைக்டோக்லைன் ஸ்டோர்ம் (cytokine storms) எனப்படும் ஒரு கலத்தில் இருந்து இன்னொரு கலத்தை தாக்கும் நோயைப் போலவே, இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதீதளவில் உடல் உள்ளுறுப்பு மண்டல எதிர்ப்புசக்தி பிரதிபலிப்பு இருந்துள்ளதாக ஆய்வு கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இரத்தக் கட்டிகளை உருவாக்கும் போக்கான இரத்த உறைவுகளும் கூடுதல் கண்டுபிடிப்புகளில் உள்ளடங்கும். இதயம் பலவீனமாக செயல்படும். நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, கடுமையான அடிவயிற்று வலி உண்டாகும், சிலருக்கு சிறுநீரக கோளாறும் உண்டாகும். ஆனால் ஆரம்ப சுவாசப் பிரச்சினை அறிகுறிகள் பிரதான அறிகுறிகளின் அம்சமாக எப்போதும் இருப்பதில்லை.

போஸ்டனின் குழந்தைகள் மருத்துவமனை மே 8 இல் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, “இதுவரையில் கிழக்கு கடற்கரை நகரங்களிலும், மத்தியமேற்கு மற்றும் தெற்கில் சில பகுதிகளுமே அமெரிக்க நோயாளிகளின் பிரதான பகுதிகளாக உள்ளன. இந்த குறிப்பில், மேற்கு கடற்கரை, அல்லது ஜப்பானிலும் கொரியாவிலும் ஒரு மேற்குறிப்பு காணப்படுகிறது, இங்கே SARS-COV-2 இன் ஒரு வித்தியாசமான அறிகுறி மேலோங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.”

இந்த சமீபத்திய செய்திகள் பிரிட்டன் மற்றும் நியூ யோர்க் மருத்துவமனைகளின் வெளிப்படும் வரையில், குழந்தைகளின் பெரும்பாலாக குறைந்த நோய்தொற்று பாதிப்புடன் இந்த தொற்றுநோயால் தீங்கின்றி இருந்ததாக பெரும்பாலான சிகிச்சை மைய நிபுணர்களும் மருத்துவத்துறை அதிகாரிகளும் குறிப்பிட்டிருந்தனர். பல பிற்போக்குத்தனமான அரசியல் பண்டிதர்கள் ஆரவாரமாக இந்த குறிப்புகளை மேற்கோளிட்டுக் காட்டி, பள்ளிகளைத் திறப்பதற்கும் மற்றும் கட்டுப்பாடுகளையும் வேலைக்குத் திரும்புவதற்கான கொள்கைகளையும் வயது அடிப்படையில் நீக்குவதற்கான வழிமுறைகளாக எடுத்துக்காட்டியிருந்தனர்.

கடுமையாக தாக்கப்பட்ட பருவ வயதடைந்த நோயாளிகளை விட கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட குழந்தை நோயாளிகள் குறைவு என்று அறிவுறுத்திய சீனாவிலிருந்து வந்த மட்டுப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டு ஏப்ரல் 2 இல் CDC மருத்துவமனை முடிவுகளைப் பிரசுரித்தது. மொத்த கோவிட்-19 நோயாளிகளில் 18 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் சுமார் 1.7 சதவீதமே என்று குறிப்பிட்டு, அமெரிக்கா ஆய்வகத்தில் உறுதிசெய்யப்பட்ட 149,760 நோயாளிகளின் புள்ளிவிபரங்களையும் அந்த அமைப்பு மேற்கோளிட்டது. 93 சதவீத பருவ வயதடைந்த நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் குழந்தை நோயாளிகளிடையே, 73 சதவீதத்தினருக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பு குறைவு அறிகுறிகள் இருந்தன. மருத்துவமனைகளில் குழந்தைகள் அனுமதிக்கப்படும் விகிதம் 5.7 இல் இருந்து 20 சதவீதமாக இருந்தது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 0.6 இல் இருந்து 2.0 சதவீதத்தினரும் இதில் உள்ளடங்குவர். ஒப்பிட்டு பார்க்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பருவ வயதடைந்தவர்களில் 10 இல் இருந்து 33 சதவீதத்தினர் 18-64 வயதுடையவர்களாவர், இதில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 1.4 இல் இருந்து 4.5 சதவீதத்தினரும் உள்ளடங்குவர்.

நியூ யோர்க் மருத்துவக் கல்வி பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கான தொற்றுநோய் துறை இயக்குனர் டாக்டர் ஆதம் ராட்னர் நியூ யோர்க் டைம்ஸிற்குக் கூறுகையில், “குழந்தைகளுக்கு கோவிட்-19 ஏற்படாது அல்லது நிஜத்தில் மிகக்குறைந்தளவிலேயே அந்நோய் ஏற்படும் என்ற கருத்து அதீத குறைமதிப்பிற்குட்படுத்துதாகும். குழந்தைகளிடையே காய்ச்சல் நோயாளிகள் குறைந்தளவே கண்டறியப்பட்டுள்ளனர் என்பது உண்மையே மற்றும் நோயாளியின் உயிரிழப்பு விகிதம் பருவ வயதடைந்த, அதுவும் குறிப்பாக வயதானவர்களை விட, குழந்தைகளிடையே உயிரிழப்பு விகிதம் பெரிதும் குறைவாக உள்ளது என்றாலும் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட சில குழந்தைகளும் உள்ளனர்,” சிலர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டனர்.

Science சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கவனத்திற்குரிய அறிக்கையில், குழந்தைகளுக்கு குறைந்த நோய்தொற்று விகிதங்கள் இருக்கலாம் என்றாலும், பருவ வயதடைந்தவர்களின் தொடர்புகளை விட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமாக அவர்கள் தொடர்பு ஏற்படுத்துகிறார்கள், இதனால் வித்தியாசம் ஒன்றுமில்லை என்று அந்த ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். 3,712 கோவிட்-19 நோயாளிகளைக் கொண்டு, அந்த வைரஸ் பரவுவதற்கும் வயதிற்கும் இடையிலான தொடர்பைப் பகுத்தாராந்து வெளியான மற்றொரு ஜேர்மன் ஆய்வு, குழந்தைகள் உட்பட எந்தவொரு வயது வகைப்பாடுகளுக்கு இடையிலும் எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமும் காணவில்லை என்று கண்டறிந்தது. நோய்தொற்று ஏற்பட்ட பருவ வயதடைந்தவர்களிடம் இருந்து குழந்தைகள் மீது ஏற்பட்ட வைரஸ் தொற்று எந்தவிதத்திலும் வித்தியாசப்படவில்லை என்று அவர்கள் முடிவு செய்தனர். சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் மருத்துவ அவதானிப்புக்கள் அவர்களது அனுமானங்களுக்கும் கருத்துகளுக்கும் எதிராக செல்கின்றன என்பதால் இதனை தீவிரமாக கவனத்திற்கெடுக்கவேண்டும் என்பதையே அந்த கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.

Acute coronary syndrome and coronary artery aneurysms

குழந்தை நோயாளிகளிடையே கோவிட்-19 இன் தீவிரமான வெளிபாடுகள் மீதான ஆய்வறிக்கைகள் மிகக்குறைவாக இருக்கின்றன. JAMA Pediatrics இல் மே 11 இல் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வறிக்கையில், அதன் ஆசிரியர்கள் இத்தகைய கண்டுபிடிப்புகளின் பண்புகளை விவரிக்க முயன்றனர். மார்ச் 14 இல் இருந்து ஏப்ரல் 10 வரையிலான காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கான வட அமெரிக்க தீவிர சிகிச்சைப் பிரிவில் கோவிட்-19 தொற்று ஏற்பட்ட நாற்பத்தி எட்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சுமார் ஒரு வாரம் இருந்தனர். நாற்பது நோயாளிகள் (83 சதவீதம்) குறிப்பிடத்தக்களவுக்கு முன்னர் வேறுநோய்களை கொண்டிருந்தனர். பாதி குழந்தைகளுக்கு வாதம், நிரந்தரமாக தொண்டைக் குழாய் அல்லது உணவுப்பாதை குழாய் அடைப்பு, அல்லது நடப்பதில் சிரமம் போன்ற சிக்கலான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

மூன்று கால்வாசி பேருக்கு சுவாச மண்டலத்தில் சிரமங்கள் இருந்தன, அந்த குழந்தைகளில் 18 பேருக்கு (38 சதவீதம்) துளையிட்டு சுவாசிக்க செய்ய வேண்டியிருந்தது. ஒரு கால்வாசி பேருக்கு பல உடல் உள்ளுறுப்புகள் செயலிழந்திருப்பதாக கூறப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் ஆய்வு கால முடிவில், இரண்டு நோயாளிகள் (4 சதவீதம்) உயிரிழந்திருந்தனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு வயது 12 மற்றொன்றுக்கு வயது 17. ஒப்பிட்டு பார்க்கையில், கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பருவ வயதடைந்தவர்களிடையே 50 இல் இருந்து 62 சதவீத அளவுக்கு உயிரிழப்பு விகிதம் உள்ளது. இந்த குழந்தைகளில் பதினைந்து பேர் அந்த ஆய்வு நிறைவு செய்யப்பட்ட பின்னரும் மருத்துவமனையில் இருந்தனர். அவர்களில் மூன்று பேருக்குச் செயற்கை சுவாச உதவி வழங்கப்பட்டு வந்தது.

அக்டோபர் 2018 இல் Frontiers in Pediatrics இல் வெளியிடப்பட்ட தீர்க்கதரிசனமாக பார்க்கப்படும் ஓர் ஆய்வில், வடமேற்கு பல்கலைக்கழகத்தின் டாக்டர். அன்னி ரௌவ்லெ மற்றும் டாக்டர். ஸ்டான்போர்ட் சுல்மனும் குறிப்பிடுகையில், “கவாசாகி நோயின் தொற்றுநோயியல் தன்மைகளும் மருத்துவத் தன்மைகளும் ஒரு தொற்று ஏற்படுத்தும் நோய் காரணியை பலமாக ஆதரிக்கின்றன,” என்றனர். இந்த நோய் ஜப்பான், கொரியா மற்றும் தாய்வானில் மிக அதிகமாக கண்டுணரப்பட்டுள்ள போதினும், ஆசிய மக்களிடையே மரபார்ந்து ஏற்றுக் கொள்ளும் தன்மையைப் பிரதிபலிக்கின்ற நிலையில், இளம் வயதினரிடையே பரவுவதும், முக்கியமாக குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் “நன்கு ஆவணப்படுத்தப்பட்ட விதத்தில் அலை அலையாக பரவும் ஜப்பானிய தொற்றுநோய்கள் ஏற்படுவதும்" கவாசாகி நோய் ஏற்படுவதற்கு இட்டுச் செல்லும் ஒரு தொற்று தூண்டுதலை அறிவுறுத்துகிறது. இந்த தத்துவத்தை இன்னும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, பிரேத பரிசோதனை முடிவுகள் நச்சார்ந்த திசுக்களான T-செல்களின் நெறிமுறைப்பட்ட தன்மையை எடுத்துக்காட்டின. அவர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அந்த நோய்கிருமியில் RNA வைரஸையும் உள்ளடங்கி உள்ளது அதில் கொரோனா வைரஸூம் ஒன்றாகும் என்பதை அவர்கள் முன்னிறுத்திக் காட்டினார்கள்.

குழந்தைகளின் பல்வேறு உடல் உள்ளுறுப்பு மண்டலங்களைத் தாக்கும் நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பரிசோதனை எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க அனேகமாக இப்போது 100 க்கும் அதிகமாக உயரக்கூடும் என்று திங்கட்கிழமை நியூயோர்க் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கே இன்னும் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்ததாக ஆளுநர் Andrew Cuomo தெரிவித்தார். இது உறுதி செய்யப்பட்டால், இந்த அறிகுறிகளினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தம் ஐந்தாக உயரும்.

Loading