உலகளாவிய கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் 300,000 ஐ கடந்து அதிகரிக்கையில்

காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப செய்வது "முன்னொருபோதும் இல்லாதளவில் நோய் மற்றும் மரணங்களை" ஏற்படுத்துமென அமெரிக்காவின் இரகசிய ஆவண வெளியீட்டாளர் எச்சரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய கொரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை 300,000 ஐ கடந்து அதிகரித்துள்ள அதேவேளையில் நோயாளிகளின் எண்ணிக்கை 4.5 மில்லியனை எட்டியுள்ள நிலையில், நேற்று மற்றொரு கொடூரமான மைல்கல் கடந்து செல்லப்பட்டது. இதுவரையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 1.7 மில்லியன் பேர் மட்டுமே குணமாகி உள்ளனர், அண்மித்து 2.5 மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த உயிராபத்தான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்தொற்று எண்ணிக்கையிலும் (1.4 மில்லியன்), உயிரிழப்புகளிலும் (85,000) உலகில் அமெரிக்கா தான் முன்னிலையில் உள்ளது, அத்துடன் ஒவ்வொரு நாளும் அதிக புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளையும் கொண்டுள்ளது. ஆனால், நோயைக் கட்டுப்படுத்துவதில் முதல் படியாக தனிநபர் வைரஸ் பரிசோதனை எண்ணிக்கையில் அது மூன்று டஜனுக்கும் அதிகமான ஐரோப்பிய, மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் தீவு நாடுகளுக்குப் பின்னால் பின்தங்கி உள்ளது.

கோவிட்-19 ஆல் உயிரிழந்த Munevver Kaya இன் உறவினர்கள், கொரொனா வைரஸில் இருந்து பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிந்து, கோவிட்-19 இல் உயிரிழந்தவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ள இஸ்தான்புல் பாக்லசி கல்லறையின் ஒரு சிறப்பு பகுதியில் இறுதியஞ்சலியின் போது தங்களின் பிரார்த்தனைகளை வெளிப்படுத்தினர். வெறும் விரல் விட்டு எண்ணக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கயா புதைவிடத்தில் கலந்து கொள்ள முடிந்தது. கொரொனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக மருத்துவ முகக்கவசம் அணிந்து அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் விலகி நின்றதுடன், இந்த இறுதியஞ்சலி நிகழ்வில் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. (படம்: AP/Emrah Gurel)

அதேநேரத்தில், பிரேசில், ரஷ்யா, பெரு, இந்தியா மற்றும் பிரிட்டன் உட்பட பல நாடுகள் இந்நோயின் குவிமையங்களாக உருவெடுத்து வருகின்றன. இந்நாடுகளில் தற்போது உலகின் மொத்த நோயாளிகளில் 18 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே உள்ளனர் என்றாலும், அவை உலகின் நாளாந்த புதிய நோயாளிகளில் சுமார் 37 சதவீதத்தினரைக் கொண்டுள்ளன. பிரேசிலும் பிரிட்டனும், முறையே 13,600 மற்றும் 33,600 என ஓரளவுக்கு உலகின் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளன, அதேவேளையில் மேலே குறிப்பிடப்பட்ட ஏனைய நாடுகளில் உயிரிழப்புகள் கூர்மையாக அதிகரிக்க தொடங்கி உள்ளன.

இந்த தொற்றுநோய் பரவி வருவதற்கு மத்தியில், இரகசிய ஆவண வெளியீட்டாளர் டாக்டர் ரிக் பிரெய்ட் (Dr. Rick Bright) பிரதிநிதிகள் சபையின் சுகாதாரத்துறை குழுவின் எரிசக்தி மற்றும் வர்த்தக நலத் துணைக்குழுவின் முன்னால் வியாழக்கிழமை விளக்கமளித்து உறுதிப்படுத்துகையில், “உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பலி கொண்ட 1918 தொற்றுநோயால் ஏற்பட்ட அழிவுகளையே விஞ்சிவிடும் சாத்தியக்கூறு கொண்ட ஒரு மிகப்பெரும் பொதுச்சுகாதார அவசரநிலையை உலகம் எதிர்கொண்டு வருகிறது,” என்றார்.

கடந்த மாதம் அவரின் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பதவியிலிருந்து அவர் திடீரென நீக்கப்பட்ட பின்னர் இரகசிய ஆவணம் வெளியிடுபவரின் ஒரு புகாரைப் பதிவு செய்த பிரெய்ட் மேற்கொண்டு கூறுகையில், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆளும் உயரடுக்கு பின்பற்றி வரும் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான முனைவைச் சுட்டிக்காட்டும் விதத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் இப்போதிருப்பதைப் போலவே தொடர்ந்து கொண்டிருந்தால் அங்கே "முன்னொருபோதும் இல்லாதளவில் நோயும் உயிரிழப்புகளும்" ஏற்படும் என்றார்.

மாநிலங்கள் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னதாக அவற்றை தொடர்ந்து திறந்து விட்டால் "அவசியமற்ற பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள்" குறித்து செவ்வாயன்று எச்சரித்திருந்த டாக்டர் ஆண்டனி ஃபாஸியின் கருத்துக்களையே (Dr. Anthony Fauci) இந்த கருத்துக்களும் எதிரொலிக்கின்றன. இவ்விரு அதிகாரிகளின் கருத்துக்களும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உயிர்களை உத்தரவாதப்படுத்தும் அவசியமான மருத்துவ சாதனங்கள் இல்லாமல் அவர்களை ஆலைகளுக்கும், அலுவலகங்கள் மற்றும் வேலையிடங்களுக்கும் அனுப்புவதற்கான இருகட்சிகளது முயற்சிகளில் கூர்மையாக குறுக்கிடுகின்றன.

நவீன உயிரிமருத்துவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆணையத்தின் முன்னாள் இயக்குனர் ரிச்சார்ட் பிரெய்ட், வியாழக்கிழமை மே 14, 2020 இல், கொரொனா வைரஸ் வெடிப்புக்கு விடையிறுப்பதில் விஞ்ஞான ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது குறித்து விவாதிப்பதற்காக, பிரதிநிதிகள் சபையின் சுகாதாரத்துறைக்கான எரிசக்தி மற்றும் வர்த்தகத் துணைக்குழுவின் விசாரணையில் கலந்து கொள்ள வாஷிங்டனின் கேபிடல் ஹில்லுக்கு வருகிறார். (படம்: Shawn Thew/Pool via AP)

பிரைய்ட், கொரோனா வைரஸ் உட்பட புதிய வைரஸ்களுக்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதை மேற்பார்வையிடும் அரசு முகமையிலிருந்து வெளியேற்றப்பட்ட இயக்குனராவார். 2016 இல் இருந்து நவீன உயிரிமருத்துவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்து ஆணையம் (BARDA) என்ற அமைப்பின் இயக்குனராக சேவையாற்றிய அவர், இந்த தொற்றுநோயைக் குணமாக்கும் மருந்தாக வெள்ளை மாளிகை ஊக்குவித்து வருகின்ற ஹைட்ரோஆக்ஸிகுளோரோகுவின் பரிசோதனைகளுக்கு (hydroxychloroquine trials) எதிர்ப்பு தெரிவித்த அவரின் தகவல்களை கசியவிட்ட பின்னர் ஏப்ரல் 21 அல் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஏறத்தாழ ஜனவரி ஆரம்பத்தில் கொரொனா வைரஸ் அபாயங்களை ட்ரம்ப் நிர்வாகம் எவ்வாறு மூடிமறைத்தது என்பதையும், அதன் பரவலைத் தடுப்பதற்கான எந்தவொரு ஒருங்கிணைந்த முயற்சியையும் அது எவ்வாறு எதிர்த்தது என்பதையும் விவரிக்கும் ஓர் ஆவணமான அவரின் 89 பக்க இரகசிய புகார் ஆவணம் பகிரங்கமாக வெளியானதும் இவ்வாரம் அவர் காங்கிரஸ் சபைக்கு அழைக்கப்பட்டார். ட்ரம்ப் குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ள நிறுவனங்கள் உட்பட பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உள்வர்த்தகம் குறித்தும் மற்றும் ஊழல் குறித்தும் பிரைய்ட் அதில் பட்டியலிட்டிருந்தார்.

பிரைய்டின் சாட்சியளிப்பு இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் விடையிறுப்பு மீது மேற்படி ஒரு குற்றப்பத்திரிகையாகும். அவரின் ஆரம்ப அறிக்கையில் அவர் குறிப்பிட்டதைப் போல, “அமெரிக்க மருத்துவக் கவனிப்பு முறை அதற்குரிய வரம்பிற்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது, நமது பொருளாதாரம் பாரிய வேலைவாய்ப்பின்மைக்கு இட்டுச் செல்லும் விதத்தில் கீழ்நோக்கி சுழன்று வருகிறது, நமது மக்கள் ஓர் ஒருங்கிணைந்த விடையிறுப்பு இல்லாமல் மற்றும் முன்செல்வதற்கான பாதை குறித்து துல்லியமான, தெளிவான தகவல்தொடர்பு இல்லாமல் அச்சத்தால் பீடிக்கப்பட்டு முடமாக்கப்பட்டு வருகிறார்கள்,” என்றார்.

அதேநேரத்தில் “சிறந்த விஞ்ஞான மூளைகளின் வழிகாட்டுதல்களை" ஈர்க்கும் வகையில், இந்த வைரஸைப் பரிசோதிக்கவும் மற்றும் எதிர்த்து போராடவும் அங்கே "தேசியளவில் ஒருங்கிணைந்த மூலோபாயம்" எதுவும் இல்லை என்பதை பிரைய்ட் வலியுறுத்தினார். இதுவுமின்றி, பிரைய்ட் தெளிவுபடுத்துகையில், “நமக்கு வாய்ப்புக்கான வழிகள் மூடப்பட்டு வருகின்றன. … இந்த இலையுதிர் காலத்தில் கோவிட்-19 மீண்டும் உருவெடுக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும், பெரிதும் இதில் பருவகால தொற்றுநோய் சவால்களும் சூழ்ந்திருக்கும் என்பதுடன், நமது மருத்துவக் கவனிப்பு முறை மீது முன்னொருபோதும் இல்லாதளவில் அழுத்தத்தை ஏற்படுத்தும். நானும் ஏனைய வல்லுனர்களும் விவரித்துள்ள தெளிவான திட்டமிடல் மற்றும் நடைமுறை வழிகள் இல்லாமல், 2020 நவீன வரலாற்றில் மிகவும் இருண்ட குளிர்காலமாக இருக்கும்,” என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இந்த தொற்றுநோயின் மிகவும் ஆரம்ப கட்டங்களிலேயே கூட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் (personal protective equipment - PPE) வினியோகச் சங்கிலி "வேகமாக குறைந்து வந்தது" என்பது பிரதான பிரச்சினைகளில் ஒன்றாகும் என்பதை பிரைய்ட் சுட்டிக்காட்டினார். ஆனால் இந்த எச்சரிக்கையை அவர் மேலெழுப்ப முயன்றபோது செயலர் அலெக்ஸ் அசார் (Alex Azar) உட்பட சுகாதார மற்றும் மனிதவள சேவைகளுக்கான அதிகாரிகளிடம் இருந்து அவர் "அலட்சியத்தை" சந்தித்தார். இந்த வைரஸிற்கு எதிராக "போதுமான பாதுகாப்பு" வழங்கப்படாத குறிப்பாக மருத்துவக் கவனிப்புத்துறை தொழிலாளர்களின் “உயிர்கள் ஆபத்தில் இருந்தன, உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்ததாக நான் நினைத்தேன்,” என்றார்.

ஒரு தடுப்பூசி கிடைக்குமா எப்போது கிடைக்கும் அதை உற்பத்தி செய்து வினியோகிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி திறன் மீது "குறிப்பிடத்தக்களவில் கவலை" இருப்பதாகவும் அந்த இரகசிய ஆவண வெளியீட்டாளர் துணைக்குழுவிற்கு தெரிவித்தார். “நம் நாட்டிற்கும் அல்லது உலகிற்கும் போதுமானளவுக்கு உற்பத்தி செய்யக்கூடியளவில் ஒரேயொரு நிறுவனம் கூட கிடையாது,” என்று கூறிய அவர், உயிர் காக்கக்கூடிய தடுப்பு மருந்து "நியாயமான மற்றும் சமநிலைப்பட்ட" விதத்தில் வினியோகப்பட வேண்டுமானால் அங்கே "ஒரு மூலோபாயம் மற்றும் திட்டம் இப்போதே நடைமுறையில் இருக்க வேண்டும்,” என்றார்.

பெடரல் அரசாங்கத்திற்கு இத்தகைய பற்றாக்குறைகள் குறித்து தெரிந்திருந்தது என்பதும் அந்த விசாரணையில் மேலெழுந்தது, இதற்காக கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட “கிரிம்சன் தொற்றுநோய்" (Crimson Contagion) என்றறியப்படும் ஒன்றின் தொற்றுநோய் ஒத்திகை சூழ்நிலைக்குத் தான் நன்றி கூற வேண்டும். இந்த ஒத்திகை சீனாவுக்குப் பயணித்து வந்த சுற்றுலாத்துறையினரால் சிகாகோவிற்குள் ஒரு புதிய சளிக்காய்ச்சல் வகைப்பட்ட வைரஸ் வந்தால் என்ன நிகழும் என்பதை ஆய்வு செய்தது. 110 மில்லியன் அமெரிக்கர்களுக்குத் தொற்று ஏற்படும், 7.7 மில்லியன் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள், 586,000 பேர் உயிரிழக்கலாமென அது மதிப்பிட்டது.

"சில முக்கியமான கண்டுபிடிப்புகளில், மேம்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் தகவல்தொடர்பின் அவசியமும், தனிநபர் பாதுகாப்பு சாதனம் மற்றும் நிதி ஒதுக்கீட்டின் தேவையுடன் சேர்ந்து, உள்ளாட்சி அரசாங்கம், மாநில அரசாங்கம் மற்றும் பெடரல் அரசாங்கங்களுக்கு இடையிலான ஓர் ஒத்திசைந்த தன்மையும் தேவைப்பட்டன,” என்பதை பிரைய்ட் தெளிவுபடுத்தினார். ஒத்திகை பார்க்கப்பட்ட அந்த தொற்றுநோயை விட கொரொனா வைரஸ் குறைந்தபட்சம் இரண்டு மடங்கு உயிராபத்தானது என்பதை தற்போதைய தொற்றுநோயின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அனுமானித்தக்கவாறே ட்ரம்ப் நிர்வாகம் பிரைய்டின் விளக்கத்தை உதறித் தள்ளியது, அத்துடன் "அவர் கோரியவை அனைத்தும் செய்யப்பட்டன,” என்று அஜார் வாதிட்டார். பிரைய்ட் "கவனம் செலுத்துவதில்லை" என்று மீண்டும் மீண்டும் வாதிட்ட வெள்ளை மாளிகை பத்திரிகைத்துறை செயலர் Kayleigh McEnany, பெடரல் அரசாங்கம் "90 மில்லியன் N95 சுவாச கவசங்கள் … [ஒரு] பில்லியன் கையுறைகள்" மற்றும் "இன்னும் பல PPE உபகரணங்களையும்" அனுப்பி உள்ளதாக வலியுறுத்தினார். பிரைய்ட் "ஒரு அதிருப்தி அடைந்த பணியாளர், விரும்பப்பட்டவரோ அல்லது மதிக்கப்பட்டவரோ இல்லை,” என்று ட்வீட் செய்து, ஜனாதிபதி ட்ரம்ப் பிரைய்ட்டை ஓரங்கட்ட முயன்றார்.

ட்ரம்புக்குக் குறைவின்றி, அஜாரும் சரி அல்லது McEnany உம் சரி, கொரொனா வைரஸ் நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக இப்போது நோய் கட்டுப்பாடு மையங்களை நிர்பந்திக்க முயன்று வருகிறார்கள் என்ற உண்மையைச் சமாளிக்கும் விதத்தில் கூட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதான அவர்களின் வாதங்களை ஒத்திசைவாக அவர்கள் எடுத்துக்காட்டவில்லை. வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் தலைவர் Deborah Birx கோவிட்-19 ஆல் உயிரிழந்திருக்கக் கூடியவர்களை கணக்கில் காட்டாமல் இருக்குமாறு CDC க்கு விண்ணப்பித்துள்ளார், இது உயிரிழப்புகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையை ஏறத்தாழ 25 சதவீதத்திற்குக் குறைத்துக் காட்டும் என்பது கடந்த வாரம் அம்பலமானது.

ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தை விமர்சித்து வருகின்ற அதேவேளையில், பிரைய்ட்டும் சரி அல்லது ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான இந்த விசாரணையும் சரி, ஜனாதிபதி மற்றும் அவரின் குழாம்களின் உண்மையான விடையிறுப்பின் மீது கேள்வி எழுப்பவில்லை, அவர்கள் மார்ச் மற்றும் ஏப்ரலில் எந்தவித நிபந்தனைகளும் இணைக்காமல் சுமார் 8 ட்ரில்லியன் டாலரை பெருநிறுவனங்களுக்கும், வங்கிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்களுக்கும் வழங்க இருந்தது, இதில் ஒரு கால் பங்கு CARES Act இன் மூடிமறைப்பில் இருந்தது. இவ்வாறு செய்கையில், ஆளும் வர்க்கம் சாதனையளவுக்குப் பங்குச் சந்தையை 35 சதவீத உயர்வுக்குக் கொண்டு சென்றது, அதேவேளையில் அதே நேரத்தில் தொழிலாளர்கள் அவர்களின் உயிர்களையும் அவர்களினது நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் உயிர்களையும் இந்த தொற்றுநோயால் உயிரிழக்கும் அபாயத்திற்கு உட்படுத்துமாறு கோரி வருகிறது.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Trump attacks Dr. Fauci for cautioning against the premature opening of the country
[14 May 2020]

Loading