மோடி “சமூக நோய் எதிர்ப்பு சக்தியை” ஊக்குவிக்கிறார், முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களில் “பெரிய முன்னேற்றம்” என சூளுரைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ வர்க்க யுத்தத் தாக்குதலை வியக்கத்தக்க வகையில் உக்கிரப்படுத்துகிறது.

கோவிட்-19 எதிர்ப்பு என்ற பெயரில் முன் தயாரிப்பின்றி அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்திற்கு பின்னர் பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிப்பதன் பெயரில், பாஜக அரசாங்கம், தொற்றுநோய் மூர்க்கத்தனமாக சீற்றம் கண்டு வரும் நிலையில் வேலைக்கு திரும்புவதைக் கட்டாயமாக்க முயன்றுகொண்டிருக்கிறது.

கடந்த புதன்கிழமையன்று நாட்டுக்கு ஆற்றிய அவரது உரையில், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் கோடிட்டு காட்டப்படும் என்று கருதப்பட்ட நிலையில் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” என்ற ஒரு தாக்கமுள்ள கொள்கையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்படி கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்கு எந்த ஒருங்கிணைந்த முயற்சியையும் அதிகாரிகள் தவிர்க்கிறார்கள். அதற்கு பதிலாக மிகவும் பரவக்கூடிய மற்றும் எண்ணற்ற உயிர்களை கொல்லக்கூடிய கொடிய வைரஸ் தாண்டவமாட அனுமதிக்கப்படுகிறது, அதிக எண்ணிக்கையில் தொற்றுக்களை ஏற்படுத்தி அது தானாகவே அழிந்து போகும் என்று விடப்பட்டுள்ளது.

“கோவிட்-19, ஒரு மிக நீண்ட காலத்திற்கு நமது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கப்போகிறது. ஆனால் நமது வாழ்வு கோவிட்-19 ஐ சுற்றியே இருக்க நாம் அனுமதிக்க முடியாது” என்று மோடி கூறியுள்ளார். அதன் பின்னர் “நான்காவது நிலை” பொதுமுடக்கம் இன்றுமுதல் அமுல்படுத்தப்படுகிறது என்றும், அது முதல் மூன்று நிலைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாக “ஒரு புது வடிவம் மற்றும் புது விதிகளை” கொண்டதாக இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

வெறும் நான்கு மணிநேரங்களுக்கும் குறைவான முன்னறிவிப்புடன் மார்ச் 25 அன்று தொடங்கப்பட்ட இந்தியாவின் பொதுமுடக்கம் 21 நாட்களுக்குப் பின்னர் முடிவடைவதாக இருந்தது. ஆனால் தற்போது அது எட்டாவது வாரம் முடியும் தறுவாயில் இருக்கிறது.

அதன் விளைவு பேரழிவுகரமானதாக இருந்தது, ஏனெனில் பொதுமுடக்கத்தினால் எந்தவித வருமானத்தையும் இழந்த, நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு பேச்சளவிலான அடையாள ரீதியான ஆதரவைத் தவிர வேறு எதையும் வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது.

அதே வேளையில், கோவிட்-19 பரவலைத் தடுப்பதில் பொதுமுடக்கம் தோல்வி அடைந்தது, ஏனெனில் பெருமளவிலான பரிசோதனைகள், தொடர்புள்ள நபர்களின் தடயங்களை அறிதல், மேலும் நாட்டின் பாழடைந்த நிலையிலுள்ள சுகாதார அமைப்பை உடனடியாக பலப்படுத்தல் மற்றும் அதை விரிவுபடுத்தல் ஆகியவற்றுக்கு இந்தியாவின் வளங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது.

புதன்கிழமை உரையில், பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான அவருடைய அரசாங்கத்தின் பிரச்சாரத்தை நியாயப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் பட்டு வரும் துன்பங்கள் குறித்து பேசினார். உண்மையில் மோடி பெருவணிகங்கள் கொடுக்கும் ஊக்கத்தில் செயற்படுகிறார். அவர்கள், இந்தியாவின் தொழிலாளர்களையும் மற்றும் உழைக்கும் மக்களையும் மலிவுக்கூலிச் சுரண்டல் மூலம் மீண்டும் இலாபங்களை பிழிந்தெடுப்பதற்கான ஆற்றொணா நிலையில் உள்ளனர்.

“சமூக நோய் எதிர்ப்பு சக்தி” (“Herd immunity”) என்பதன் மூலம் இந்தியாவின் வணிக நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் இலாபங்களை குவிப்பதற்காக தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உயிர்கள் பலியிடப்பட இருக்கின்றன ஆளும் உயரடுக்கின் அழுத்ததில் மோடி மற்றும் அவருடைய இந்து மேலாதிக்கவாத பாஜக ஆகியவை நடத்திவரும் வரலாற்று பரிமாணங்களைக் கொண்ட ஒரு வர்க்க போர் தாக்குதலின் மிக உயர்ந்தபட்டசமாக இருக்கிறது.

அவருடைய மே 12 உரையில், மோடி அவருடைய அரசாங்கத்திற்கான பிரதான முன்னுரிமையாக நிலம் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் குறிப்பிடப்படும்படியான சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் முதலீட்டாளர் சார்பான ஒரு “மிகப்பெரும் பாய்ச்சல்” என உறுதியளித்தார். பெரும் தொழிற்துறை நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்குதல் மற்றும் தொழில்நிறுவனங்களை இழுத்து மூடுவதை இலகுவாக்குதல் மற்றும் இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களை மாற்றுதல் மேலும் வணிக திட்டங்களுக்காக பெரும் நிலப்பகுதிகளைச் சேர்த்தெடுப்பதற்கு உள்ள தடைகளை அரசாங்கம் நீக்குதல் வேண்டும் என்று இந்தியா மற்றும் வெளிநாட்டு மூலதனம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

மோடியின் உரைக்கு முன்பே, மோடி நிர்வாகத்தின் வலியுறுத்தலில் செயல்படுகின்ற பல்வேறு பாஜக மாநில அரசாங்கங்கள் எண்ணற்ற தொழிலாளர் சட்டங்களை “இடைநீக்கம்” செய்வதாக அறிவித்திருக்கின்றன. சில மாநிலங்கள் கூடுதல் நேரத்திற்கான கூலி வழங்காமலும் மற்றும் தொழிலாளர் விரோத அட்டூழியங்கள் உட்பட 72 மணிநேர வார வேலைநாட்களுக்கு பச்சைவிளக்கு காட்டுகின்றன.

புதன்கிழமை தொடங்கி நேற்று முடிவடைந்த ஒரு தொடர்ச்சியான பத்திரிகையாளர் சந்திப்புகளில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசாங்கத்தின் பொருளாதார “மீட்புத் திட்டம்” பற்றி கூடுதலான தகவல்களை வழங்கினார்.

அரசாங்க சொத்துக்கள் தீ போல் விற்பனைக்கு வரவிருப்பது குறித்து சீத்தாராமன் அறிவித்துள்ளார். இனிமேல் பொருளாதாரத்தின் எந்த துறைகளிலும் தனியார் துறை தடை செய்யப்படாது என்றும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது பொதுத்துறை சேவைகள் பொருளாதாரத்தின் ”மூலோபாயத்” துறைகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதலின் எழுச்சி உட்பட, பூகோள தொற்றுநோயால் தூண்டப்பட்டிருக்கும் முதலாளித்துவ நெருக்கடிகள் முடுக்கப்பட்டு வருவதற்கு பதிலாக அவரும் மற்ற பாஜக அரசாங்க அதிகாரிகளும் இதையும் கூட தெளிவாக்கினர், அதாவது. சீனாவுக்கு எதிரான இராணுவ மூலோபாய கூட்டணியை இந்தியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஆழமாக்குவதற்கு எண்ணுகிறது. அமெரிக்க நிறுவனங்களை கவர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படும் புதுடெல்லி, சீனாவைவிட்டு வெளியேறி இந்தியாவிற்கு இடம்பெயர்வதற்கு வாஷிங்டன் அழுத்தம் கொடுப்பது மற்றும் அமெரிக்க ஆயுத தயாரிப்பாளர்களுக்கு ஒரு உற்பத்தி தளமாக இந்தியாவை மேலும் கவர்ச்சிகரமானதாக்குவதும் இதில் அடங்கியிருக்கின்றன.

பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு சமமாக 20 ட்ரில்லியன் ரூபாய்களை (266 அமெரிக்க டாலர்கள்) அவருடைய அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக கடந்த செவ்வாயன்று மோடி பெரும் ஆரவாரத்துடன் அறிவித்தார்.

இதில் பெரும்பகுதி நம்பவைக்கும் நோக்கம்கொண்டதாக முந்தைய அரசாங்க அறிவிப்புகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டதை உள்ளடக்கிய நிதியாக இருக்கிறது. நிதி சந்தைகளுக்கு முட்டுக்கொடுப்பதற்கும் மற்றும் இந்தியாவின் செல்வந்தர்களையும் மற்றும் பெரும் பணக்காரர்களையும் பிணையெடுக்க அவசரகால உதவி என்ற வடிவத்தில் வங்கிகளுக்கும் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கும் நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பெருந் தொகை வழங்கப்பட்டிருப்பதும் இதில் அடங்கியிருக்கிறது.

நிர்மலா சீதாராமன் வணிகங்களின் வெவ்வேறு பிரிவுகளை பலப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார். ஆனால் வெகுஜனங்களுக்கான சமூக நலத்திட்டங்களுக்கு சிறிய தொகைகள் மட்டுமே இருக்கின்றது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் ஒரு புதிய செயல்திட்டத்தின் விடயத்தைப் போன்று பெரும்பாலான புதிய உதவிகள் தனியார் துறை கூட்டாண்மையுடன் கடன் மற்றும் திட்டங்கள் வடிவில் மட்டுமே இருக்கின்றன.

35 பில்லியன் ரூபாய்களை ($463 மில்லியன் அமெரிக்க டாலர்) அல்லது ஒரு தொழிலாளிக்கு 5 டாலர்களுக்கு சமமாக, அடுத்த இரண்டு மாதங்களுக்கு உணவு பொருட்கள் உதவியாக அவர்களுக்கு வழங்குவதற்காக செலவிடப்படும் என்று பொதுமுடக்கத்தின் காரணமாக வேலைகளை இழந்திருக்கும் 90 மில்லியன் தினக்கூலித் தொழிலாளர்களுக்கான பாஜக அரசாங்கத்தின் தலைப்பு செய்தி அறிவிப்பாக இருந்தது. அவர்களில் ஒரு பெரும் பகுதியினர் அரசாங்கத்தின் எந்த உதவியையும் பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இதை வறுமைக்கான ரேஷன்கள் என்று சிறப்பாக வரையறுக்க முடியும்

தினக்கூலி வேலைசெய்பவர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படாமல் இருப்பது அடிக்கோடிட்டுகாட்டுவது என்னவெனில் தொழிலாளர்களை பசியுடன் இருக்கச் செய்து தொற்றுநோய் பரவுகின்ற நிலையில் வேலைக்கு திரும்பும்படி கட்டாயப்படுத்த வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட ஒரு கொள்கையை மோடி அரசாங்கம் கொண்டிருக்கிறது. மற்றும் இந்த நிலைமைகளின் கீழ் முதலீட்டுக்கு தடைகளாக இருக்கும் தொழிலாளர் சட்டங்களை நீக்குவதற்கான தேவை குறித்து இந்தியாவின் முதலாளிகளுக்கு ஆளூம் பாஜக கூறியிருக்கிறது. இந்த முதலாளிகள்தான் அரசாங்கத்தின் உடந்தையுடன் நாட்டின் தளர்வான தொழிலாளர் விதிமுறைகளை ஏற்கனவே முறைப்படி மீறுவதில் இழிபுகழ் பெற்றவர்கள்.

இதற்கிடையில், இந்தியாவில் புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்றுவரை ஒரே நாளில் 4,957 ஆக மிகப்பெரிய உச்சமாக இருந்தது என்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள். கடந்த வாரத்தின்போது, உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 பாதிப்புகள் மே 10 அன்று 62,939 பாதிப்புகளிலிருந்து நேற்றுவரை (17-மே-2020) 90,927 பேராக அச்சப்படத்தக்கவகையில் அதிகரித்துள்ளது. அதே காலப்பகுதியில், கோவிட்-19 க்கு மேலும் கூடுதலாக 736 பேர் இறந்துள்ளதுடன் அதிகாரபூர்வ இறப்புகளின் எண்ணிக்கை 2,872 க்கு வந்துள்ளது.

இத்தகைய எண்ணிக்கைகள் எச்சரிக்கை செய்வனவாக உள்ளது, அதேவேளை தொற்றுநோய் பரவல் பல மடங்குகளாக இருப்பதை அவை சந்தேகத்திற்கிடமின்றி குறைத்து மதிப்பிடுகின்றன ஏனெனில் இந்தியா முறைப்படி வெகுஜன பரிசோதணைகளை ஒழுங்குபடுத்தத் தவறிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை, இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு தனி மனித பரிசோதணை 1.48 வீதத்தில் இருந்தது. இது ஒரு பெருமளவிலான கோவிட்-19 பரவலுடன் இருக்கும் உலகின் மற்ற நாடுகளைவிட குறைவானதாகும். இது மோசமான பற்றாக்குறையான அமெரிக்க பரிசோதணை வீதத்தை விட இருபது குறைவானதாகும்.

மக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் அலட்சியப்போக்கை முன்மாதிரியாக காட்டுவதாக, இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் “சமூக பரவல்” இருப்பதற்கான எந்த சான்றுகளும் இல்லை என்று அப்பட்டமாக வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் ஏழு வாரங்களுக்கு முன்னரே வெளிநாட்டுப் பயணிகள் உள்ளே நுழைவதை இந்தியா முறையாக தடுத்துவிட்டது, இந்தக் கூற்று அதன் தோற்றத்திலேயே முட்டாள்தனமாக இருக்கிறது.

மும்பாய் மற்றும் டெல்லி ஆகிய இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய நகரத்தில் பலதரப்பட்டமக்கள் குவிந்திருக்கும் சேரிகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தும்வகையில் தொற்றியிருக்கிறது. வறுமை மற்றும் சுத்தமான தண்ணீருக்கு வழியில்லாமலும், போதுமான இடவசதியற்ற பகுதியில் வாழும் குடியிருப்புகள் காரணமாக அங்கே குறிப்பாக மக்கள் பாதிக்கப்பட கூடியவர்களாக இருக்கிறார்கள்.

Loading