அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரொனா வைரஸ் இறப்புக்கள் மும்மடங்காக அதிகரிக்கும் என புதிய பகுப்பாய்வு முன்கணிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Health Affairs என்ற மருத்துவ இதழில் வெளிவந்த மதிப்பாய்வு செய்யப்பட்ட ஒரு கட்டுரை, கோவிட்-19 காரணமாக அமெரிக்காவில் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக 93,500 இல் இருந்து 350,000 முதல் 1.2 மில்லியன் வரையிலான மட்டத்திற்கு குறைந்தது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று முன்கணிக்கிறது.

Cover Healthcare workers

அமெரிக்காவில் தற்போது அண்ணளவாக 1.6 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர். சர்வதேச அளவில் 4.9 மில்லியன் கோவிட்-19 நோயாளிகள் இருப்பதுடன், 324,000 க்கும் மேற்பட்டவர்கள் அதனால் இறந்துள்ளனர். தற்போது, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பெரு மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகள் கொரொனா வைரஸ் நோய்தொற்றின் புதிய மையப் பகுதிகளாக உருவெடுத்து வருகின்றன.

Washington School of Pharmacy பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், மற்றும் அதன் CHOICE நிறுவனத்தின் Stergachis குடும்ப அறக்கொடை இயக்குநருமான அனிர்பன் பாசு (Anirban Basu) இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இது, நோயறிகுறி கொண்ட நோயாளிகள் குறித்து அமெரிக்க மாகாணங்களில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்புக்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஒரு பரந்த முயற்சியாக உள்ளது. அதாவது, 33 மாநிலங்களைச் சேர்ந்த 116 மாவட்டங்களில் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு 0.6 முதல் 2.1 சதவிகிதம் வரை நோய்தொற்று இறப்பு விகிதம் இருப்பதாக கண்டறிந்தது.

இறப்பு வீதம் 1.3 சதவிகிதமாக மையப்படுத்தப்பட்டது, அதிலும் பருவகால காய்ச்சலால் ஏற்படும் இறப்பை காட்டிலும் 13 மடங்கு இது கூடுதலானது.

“கோவிட்-19 நோய்தொற்று, காய்ச்சலை காட்டிலும் மிகக் கொடியது – நாம் அந்த விவாதத்தை மீண்டும் மேற்கொள்ளலாம்,” என்று ஆய்வு குறித்த செய்தி வெளியீட்டிற்கு பாசு தெரிவித்தார். மேலும் அவர், மதிப்பீடு செய்யப்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கையானது “அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையாக இருப்பதால், தீவிரமான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மட்டுமே இதை குறைக்க முடியும்” என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளில், கொரொனா வைரஸ் நோய்தொற்றுக்கான பாரிய பரிசோதனைகளை மேற்கொள்வது, பரந்தளவில் தொடர்புபட்டவர்களை கண்காணித்தறிவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்துவது மற்றும் கவனிப்பது ஆகியவை அடங்கும். இத்தகைய திட்டங்கள் அமெரிக்காவிலோ அல்லது உலகின் பெரும்பான்மையான நாடுகளிலோ செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாசு குறிப்பிடுவதைப் போல, அவரது தற்போதைய மதிப்பீடுகள் கொரொனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுகின்றன, ஏனென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க மக்கள்தொகையில் வெறும் 20 சதவிகிதத்தினர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று பழமைவாத முறையில் அவர் கணக்கிடுகிறார். அதாவது, சமூக இடைவெளி நடவடிக்கைகள் பராமரிக்கப்பட்டு வருவதால், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஓரளவேனும் நோய் பரவும் வேகம் தற்போது தணிந்து வருவதாக இவரது மதிப்பீடு ஊகிக்கின்றது.

அது போல, அடுத்த ஏழு மாதங்களில், ஒட்டுமொத்த அமெரிக்கர்களில் 60 முதல் 70 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறக்கு அப்பாற்பட்டதாகவும் இது இல்லை. இந்நிலையில், மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் தடுப்பு மையத்தின் (Center for Infectious Disease Research and Prevention) இயக்குநர் மிக்கேல் ஓஸ்டர்ஹோம் (Michael Osterholm) உட்பட, பல தொற்றுநோயியல் நிபுணர்களால் கணிக்கப்பட்ட மிக மோசமானதொரு சூழ்நிலையாக இது உள்ளது. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் 1.2 மில்லியன் முதல் 4.8 மில்லியன் வரை கோவிட்-19 நோய் பாதிப்பினால் மக்கள் இறப்பார்கள்.

இந்த கொடூரமான காட்சி ஏற்கனவே அங்கு நிகழ்ந்துவிட்டது. வணிக மற்றும் தொழில் நடவடிக்கைகளை மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ள அலபாமா, ஆர்கன்சாஸ், மைனே, மின்னசோட்டா, வடக்கு கரோலினா மற்றும் வடக்கு டகோட்டா உள்ளிட்ட பல மாநிலங்கள், கடந்த இரண்டு வாரங்களில் இருந்ததைக் காட்டிலும் கூடுதலாக 25 சதவிகிதம் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை ஏற்கனவே கண்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் டெக்சாஸ், கட்டுப்பாடுகளை திரும்பப் பெற ஆரம்பித்ததிலிருந்து, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அங்கு 55 சதவிகித அதிகரிப்பை எதிர்கொண்டது.

புதிய தரவு கிடைப்பது ஏற்கனவே மிகவும் கடினமாக உள்ள நிலையில், அவை கிடைத்தால் தனது மாதிரி புதுப்பிக்கப்படும் என்று பாசு தெளிவுபடுத்துகிறார். ஃபுளோரிடாவின் கோவிட்-19 தரவுத் தளத்தின் (dashboard) மேலாளர் ரெபெக்கா ஜோன்ஸ் பணிநீக்கம் செய்யப்பட்டதாக Florida Today செய்தி ஊடகத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. தரவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து, தரவுத் தளம் பலமுறை செயலிழந்தது என்பதுடன், விளக்கம் தெரிவிக்கப்படாமல் தளத்திலிருந்து தரவுகள் அகற்றப்பட்டன.

மாநில சுகாதாரத் துறையால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்த பொது அறிவிப்பில், “இப்போது அவர்கள் எந்தத் தரவை கட்டுப்படுத்துகிறார்கள்” என்பது உட்பட, தரவின் மீது அவருக்கு இனிமேல் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்று தெரிவித்தார். தரவுத் தளத்தை தான் மட்டுமே பராமரித்து வந்தது தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார், இது கணினி வேலை செய்யாதது தொடர்பான அறிக்கைகளை பற்றி விளக்குவது போன்று உள்ளது.

மத்திய ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் அதன் LabX இயக்குநருமான பென் சாயர் (Ben Sawyer), “முழுத் தரவையும் அணுகக்கூடிய அரசாங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிரமாக தணிக்கை செய்யப்படுவது குறித்து கவலை ஏற்பட்டுள்ளது,” என்று எச்சரிக்கும் விதமாக பதிலிறுத்தார். அவரது சக ஊழியரான ஜெனிஃபர் லார்சன் (Jennifer Larson), இதே பாணியில் கருத்து தெரிவிக்கையில், “வேறு எந்த இயற்கை பேரழிவு தொடர்புபட்ட தரவு குறித்தும் இந்த வெளிப்படைத்தன்மை இல்லாததை நாங்கள் ஏற்க மாட்டோம், எனவே இதை ஏற்க ஏன் நாங்கள் தயாராக இருக்கிறோம்?” என்று கேட்கிறார்.

இரண்டு பேராசிரியர்களும், அவர்களது தரவு “தற்காலிகமானது” என்பதுடன் அதற்காக முடிந்தவரை முன்னதாகவே மே 2021 வரை அவர்கள் காத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதான அவர்களால் முன்னர் அணுகப்பட்ட தரவு மீதான அணுகுதலை திரும்பப் பெறுவதற்கு ஃபுளோரிடா சுகாதாரத் துறையை அவர்கள் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், ஃபுளோரிடா ஆளுநர் ரோன் டிசாண்டிஸின் (Ron DeSantis) அலுவலகம் விடுத்த அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது, “ஃபுளோரிடா கோவிட்-19 தரவுத் தளம் ஃபுளோரிடா சுகாதாரத் துறையில் நோய் கட்டுப்பாடு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பிரிவில் (Division of Disease Control and Health Protection) உள்ள புவியியல் தகவல் அமைப்பு (Geographic Information System-GIS) என்ற குழுவால் உருவாக்கப்பட்டது. ரெபேக்கா ஜோன்ஸ் இனிமேல் இதில் ஈடுபடமாட்டார் என்றாலும், பொதுவில் அணுகக்கூடிய துல்லியமான மற்றும் முக்கியமான தகவல்களை வழங்கும் தரவுத் தளத்தை GIS குழு தொடர்ந்து நிர்வகித்தும் புதுப்பித்தும் வருகின்றது” என்று கூறுகிறது.

மாநிலத்தில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் இறந்தோர் எண்ணிக்கையின் துல்லியத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுவதென்பது முதல்முறையாக நிகழக்கூடியதல்ல. மே 4 அன்று மாநிலங்கள் வணிகங்களை மீண்டும் திறப்பதற்கு முற்பட்ட வாரங்களில், தொற்றுநோயால் இறந்தவர்களில் குறைந்தது 10 சதவிகிதத்தினர் பற்றி கூட துல்லியமாக கணக்கிடப்படவில்லை என்று ஏராளமான தகவல்கள் வெளிவந்தன. Miami Herald ஊடக கருத்துப்படி, மியாமி-டேட் மற்றும் பாம் பீச் மாவட்டங்களின் சுகாதார அதிகாரிகள், இந்த பகுதிகள் புதிய நோயாளிகள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பைக் கண்டன என்றாலும், கோவிட்-19 இறப்புக்கள் தொடர்பான அறிக்கைகள் மீதான அணுகுதலை கட்டுப்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இது தேசியளவிலான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒட்டுமொத்த இறப்புக்கள் குறித்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கண்காணிப்பு பெப்ரவரி 8 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்திற்குப் பின்னர் தாமதமாகின்றன. இது, பருவகாலத்திற்கேற்ப எதிர்பார்க்கப்படும் இறப்புக்கள் மற்றும் நோய்தொற்றின் விளைவால் நிகழ்ந்த அதிகப்படியான இறப்புக்கள் இரண்டையும் உள்ளடக்கியது. “இறப்பு பதிவுகளில் 60 சதவிகிதம் மட்டுமே இறந்த திகதியில் இருந்து 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது… என்பதுடன் அதன் முழுமைத்தன்மை அதிகார வரம்பிற்கு ஏற்ப மாறுபடுகின்றது” என்று இந்த செய்தி முகமை தெரிவிக்கிறது.

தொற்றுநோய் விளைவிக்கும் இறப்புக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பெரும் அதிகரிப்புடன் சேர்ந்து இந்த சில பின்னடைவுகளும் ஏற்பட்டிருக்கலாம், அதேவேளை அதில் பெரும் பகுதி ட்ரம்ப் நிர்வாகத்தின் தலையீட்டால் ஏற்பட்டது என்பதில் சந்தேகமில்லை. இந்த மாத தொடக்கத்தில், வெள்ளை மாளிகையின் கொரொனா வைரஸ் பணிக்குழுவின் பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளரான டெபோரா பிர்க்ஸ் (Deborah Birx), “CDC ஐ நான் நம்புவதற்கு எதுவுமில்லை,” என்று CDC இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்டிடம் (Robert Redfield) தெரிவித்தார். மேலும், “இறப்புக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம்” என்று தொற்றுநோய்கள் தொடர்பான நாட்டின் உயர்மட்ட நிபுணரான அந்தோனி ஃபௌசி (Anthony Fauci) செனட்டை எச்சரித்தது போலவே, இந்த அமைப்பு அதன் இறப்பு எண்ணிக்கையை 25 சதவிகிதம் வரை உயர்த்தியது” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் நோய்தொற்று எப்போது மக்களைக் கொல்லத் தொடங்கியது என்பது பற்றி CDC உம் கேள்விகளை எழுப்புகின்றது. அமெரிக்காவில் முதல் உத்தியோகபூர்வ இறப்பு பெப்ரவரி 6 அன்று பதிவாகியது, என்றாலும் நாடு முழுவதிலுமுள்ள மருத்துவ பரிசோதகர்கள் இறப்பு சான்றிதழ்களை தாமதமாக சமர்ப்பிப்பதற்கு ஒரு இறப்பு கூட காரணமாகவில்லை. அந்த நேரம் முதலாக, இறப்புக்களை பதிவு செய்வதில் உண்மையான பின்னடைவு இருந்து வந்ததால், நோய்தொற்று பற்றி தற்போது அறியப்பட்டதற்கு முன்பாகவே மிகவும் பரவலாக நோய்தொற்று இருந்திருக்கலாம் என்றே இது அனுமானிக்கிறது.

Loading