50 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி லங்கா சம சமாஜக் கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

N. M. Perera

மே 27, 1970 அன்று இலங்கையில் (இப்போது ஸ்ரீலங்கா) நடைபெற்ற தேர்தல்களில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (SLFP) வெற்றி கிடைத்தது. ஒரு தசாப்தத்தில் இரண்டாவது முறையாக லங்கா சம சமாஜ கட்சியின் (LSSP) ஆதரவுடன் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்கா ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை அமைத்தார். பப்லோவாதம் என்று அழைக்கப்படும் திருத்தல்வாத அரசியல் போக்கின் ஒரு பகுதியாக ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக்கொண்ட பெயரளவிலான சோசலிசக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்தது.

இந்தத் தேர்தல் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சிக்கு (UNP) பெரும் தோல்வியாக இருந்தது. சுமார் 38 சதவிகித வாக்குகளை பெற்றபோதிலும், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் தனது 49 இடங்களை இழந்து, வெறும் 17 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டது. ஸ்ரீ.ல.சு.கட்சி 50 இடங்களைப் பெற்று மொத்தமாக 91 நாடாளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தது.

எவ்வாறாயினும்கூட ஸ்ரீ.ல.சு.கட்சி ஏனைய கட்சிகளின் ஆதரவு இல்லாமல் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. தேர்தலுக்கு முன்னதாக, ஸ்ரீ.ல.சு.கட்சிக்கும் லங்கா சம சமாஜக் கட்சிக்கும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகளுக்கும் இடையே ஒரு "ஐக்கிய முன்னணி" கூட்டணி உருவாக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இன்னும் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்த இந்த கட்சிகளின் ஆதரவோடு மட்டுமே பண்டாரநாயக்க பிரதமராக முடிந்தது. இதற்கான வெகுமதியாக, நிதி அமைச்சரான கட்சித் தலைவர் என்.எம். பெரேரா உள்ளிட்ட முக்கியமான அமைச்சரவை பதவிகளுக்கு லங்கா சம சமாஜக் கட்சியின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

1970 தேர்தல் லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு இடையே ஒரு கூட்டணியின் இரண்டாவது முயற்சியாகும். முதன்முதலில் 1964 இல் லங்கா சம சமாஜக் கட்சியானது ஸ்ரீ.ல.சு.கட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை ஏற்க வாக்களித்தது. வரலாற்றில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று அழைக்கும் ஒரு கட்சி ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்.

ஜூலை 1964 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு (ICFI) லங்கா சம சமாஜக் கட்சியின் துரோகத்தின் சர்வதேச முக்கியத்துவத்தை பின்வருமாறு விளக்கியது: “லங்கா சம சமாஜக் கட்சியின் உறுப்பினர்கள் பண்டாரநாயக்கா கூட்டணியில் நுழைவது நான்காம் அகிலத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு முழு சகாப்தமும் முடிவிற்கு வருவதைக் குறிக்கிறது. ஏகாதிபத்தியத்திற்கான நேரடி சேவையில், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தோல்வியைத் தயாரிப்பதில் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் திருத்தல்வாதம் அதன் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது.”

1964 மற்றும் 1970 இரண்டிலும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னேற்றங்களைத் தடுக்கும் முயற்சிகளில் ஸ்ரீ.ல.சு.கட்சி-ல.ச.ச.கட்சி கூட்டணிகள் உருவாக்கப்பட்டன. லங்கா சம சமாஜக் கட்சியின் உடன் கூட்டு சேர்ந்து ஒரு சில சீர்திருத்தங்களை வழங்குவதன் மூலம், ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை அதிகரித்தவில் ஆதரித்த உழைக்கும் மக்களை குழப்பமடையச் செய்து சமாதானப்படுத்த முடியும் என்று இலங்கை ஆளும் வர்க்கம் நம்பியது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு முன்கணித்தபடி, ஸ்ரீ.ல.சு.க. உடனான கூட்டணி ஆட்சியில் இணைந்ததும், ல.ச.ச.கட்சி பண்டாரநாயக்காவின் அடக்குமுறை தொழிலாள வர்க்க எதிர்ப்பு ஒடுக்குமுறை கொள்கைகளுக்கு அரசியல் பொறுப்பை ஏற்றது. 1971 இல் குட்டி முதலாளித்துவ தேசியவாத ஜனதா விமுக்தி பெரமுன ஆயுதமேந்திய கிளர்ச்சியில் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றபோது இது தெளிவாகியது. ஸ்ரீ.ல.சு.கட்சி-ல.ச.ச.கட்சி கூட்டரசாங்கம் கிராமப்புறங்களைச் சேர்ந்த 15,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொன்று எழுச்சியை இரக்கமின்றி அடக்கியது.

சிங்கள, தமிழ் மக்களிடையே இனவாத மோதல்களைத் தூண்டும் நோக்கிலான கொள்கைகளையும் கூட்டணி அரசாங்கம் செயல்படுத்தியது. இந்த நடவடிக்கைகள் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரில் நாட்டை மூழ்கடித்த ஆயுதமேந்திய தமிழ் பிரிவினைவாத அமைப்புகளை உருவாக்க ஊக்கமளித்தது.

மேலதிக வாசிப்புகளுக்கு

இலங்கை: மாபெரும் காட்டிக்கொடுப்பு

G. Healy, 16 April 2012

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்ட 50 வது ஆண்டுநிறைவு
லங்கா சம சமாஜக் கட்சி செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பின் படிப்பினைகள்

Rohantha De Silva and Vilani Peiris, 23 September 2018

1964 ஜூன் 6-7 லங்கா சம சமாஜ கட்சி மாநாட்டிற்கு புரட்சிகர சிறுபான்மையின் தீர்மானம்
லங்கா சம சமாஜக் கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் நெருக்கடியும்

28 September 2018

Loading