ஜேர்மன் அரசாங்கத்தின் ஊக்க நிதி தொகுப்பு: வாகன உற்பத்தியாளர்களுக்கு 50 பில்லியன் யூரோ, குழந்தை பராமரிப்புக்கு 1 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரண்டு நாள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஜேர்மனியின் பெரும் கூட்டணி அரசாங்கத்தின் கட்சிகள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்காக 130 பில்லியன் யூரோ மதிப்பிலான ஊக்க நிதி தொகுப்பு வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

இது, கொரொனா வைரஸ் பிணையெடுப்பு திட்டம் உட்பட, ஏற்கனவே உள்ள பிற திட்டங்களின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது, இதற்கு மார்ச் மாதம் ஒப்புதலளிக்கப்பட்டது என்பதுடன், தற்போது 1.2 ட்ரில்லியன் யூரோவிற்கு நெருக்கமான தொகுப்புத் தொகையாக இது உள்ளது, மேலும் ஐரோப்பிய மத்திய வங்கியின் பத்திர கொள்முதல் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் 1 ட்ரில்லியன் யூரோவை கடந்து நிற்கும், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் 750 பில்லியன் யூரோ பிணையெடுப்பு நடவடிக்கைகளில் சில ஜேர்மனிக்கு நிதி வழங்கும்.

இந்த அனைத்து திட்டங்களின் முக்கிய பயனாளிகளாக பெரு வணிகங்களும் மற்றும் பங்குச் சந்தைகளும் உள்ளன. கொரோனா வைரஸின் காரணமாக மார்ச் மாதம் நிகழ்ந்த இதன் வீழ்ச்சிக்குப் பின்னர், ஜேர்மனியின் DAX பங்குச் சந்தை பாரிய இலாபங்களை ஈட்டியது என்பதுடன், நெருக்கடிக்கு முன்னர் அது எட்டியிருந்த வரலாற்று உச்சத்தை தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, DAX இல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்குதாரர்களின் செல்வம், இரண்டரை மாதங்களில் மொத்தமாக 360 பில்லியன் யூரோ அளவிற்கு, அதாவது ஊக்க நிதி தொகுப்பைப் போல அநேகமாக மும்முடங்காக உயர்ந்துள்ளது.

புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஓலாஃப் ஸ்கால்ஸ் (Michael Kappeler/DPA via AP, Pool)

“தற்போதைய பங்குச் சந்தை ஏற்றம் பங்குகளை வாங்குவதற்கான சிறந்த பங்குச் சந்தை ஏற்றமாகும்”, என்று நிதி நாளிதழான Handelsblatt இன் தலைமை ஆசிரியரான Gabor Steingard தனது காலைநேர சுருக்க வலையொலிப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், “வாஷிங்டன், இலண்டன், பேர்லின் மற்றும் பாரிஸில் உள்ள கருவூலங்கள் பெரிதும் திறந்துள்ளன, மற்றும் நிதி மையங்களில் ஷாம்பெயின் தெறிக்கிறது… கொரொனா வைரஸ் நோய்தொற்று ஒரு திணிப்பை குறிக்கவில்லை, மாறாக பணத்தை உட்செலுத்துகிறது என்பதை உலகம் முழுவதிலுமுள்ள நிதிச் சந்தைகள் நீண்டகாலமாக புரிந்து வைத்துள்ளன. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் முதலீட்டாளர்களே மாபெரும் இலாபமீட்டுபவர்களாக இருக்கின்றனர்” என்றும் தெரிவித்தார்.

இந்த மதிப்பீட்டை மாற்றும் வகையில் சமீபத்திய ஊக்க நிதி தொகுப்பு எதையும் செய்யவில்லை.

பெரும் கூட்டணி, குறிப்பாக சமூக ஜனநாயகவாதிகள், சமூக நலனுக்கான மிகப்பெரிய நடவடிக்கையாக இதை விற்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர். அமெரிக்காவிலும் மற்றும் பிற நாடுகளிலும் வளர்ந்து வரும் முக்கிய வர்க்கப் போராட்டங்களை எதிர்கொள்ளும் நிலையில், சமூக சமரசத்திற்கான கட்சிகளாக தம்மை சித்தரிப்பதில் அவை கவனம் செலுத்துகின்றன. இந்த விடயத்தில், அவர்கள் பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவைப் பெற்று வருகின்றனர். எடுத்துக்காட்டாக, இந்த நிதி தொகுப்பு “சமூக ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்களை” பலப்படுத்துகிறது என்று Suddeutsche Zeitung நாளிதழ் கூறியது.

இதுவொரு படுமோசமான பொய். முந்தைய பிணையெடுப்புக்களைப் போலவே, சமீபத்திய நிதி தொகுப்பு, குடும்பங்களுக்கென ஒருசில சாதாரண பங்கீடுகளை மட்டும் வழங்குவதான பின்னணிக்குள் மூடிமறைத்து, பணக்காரர்களுக்கே பணத்தை பொழிவிக்கிறது. கூடுதலாக, 2008-2009 நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, சிக்கன நடவடிக்கைகள் ஊடாக எதிர்வரும் காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் பெரும் தொகைகளுக்கான சுமை ஏற்றப்படும் என்பது ஏற்கனவே தெளிவாகிவுள்ளது. அதிகபட்ச இலாபம் ஈட்டுபவர்கள் மற்றும் பணக்காரர்களுக்கான வரியை அதிகரிப்பதன் மூலமாக திட்டத்திற்கான நிதியைத் திரட்ட பரிசீலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, ஊக்கமளிப்பு திட்டம் பெரும்பான்மையினருக்கான இழப்பில் பெரும் செல்வந்தர்களை வளப்படுத்துவதன் மூலமாக சமூக சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கும். மேலும் இந்த நிலைமைகளின் கீழ், Lufthansa, ZF போன்ற பெரிய நிறுவனங்களும் மற்றும் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் ஏற்கனவே பெருமளவில் வேலை வெட்டுக்களுக்கான திட்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளன. அதனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவிய வேலையின்மை புள்ளிவிபரங்கள் ஏற்கனவே கணிசமாக உயர்ந்துள்ளன. இந்நிலையில், 7 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தற்போது குறுகிய கால வேலையில் உள்ளனர் என்பதுடன், வேலையை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர். மேலும் கூடுதலாக, அனைத்து அடைப்புக்களுக்கான கட்டுப்பாடுகளையும் நீக்கும் பொறுப்பற்ற கொள்கையின் விளைவாக நோய்தொற்று பரவுதல் உலகளவில் இரண்டாவது முறையாக பெரும் வெடிப்பை காண்பதற்கான அச்சுறுத்தல் உள்ளது.

இந்த நிதி தொகுப்பின் சமூக சமநிலை வகிக்கும் தன்மை, விற்பனை வரியை ஐந்து மாதங்களுக்கு 19 இல் இருந்து 16 சதவிகிதமாகக் குறைத்ததன் மூலமாக, அல்லது 20 பில்லியன் யூரோ செலவிற்கான விற்பனை வரியை 7 இல் இருந்து 5 சதவிகிதமாக குறைத்ததன் மூலமாக நிரூபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. “தங்களது நிகர ஊதியத்தில் பெரும்பகுதியை நுகர்வு பொருட்களை வாங்குவதற்கு மட்டும் செலவிடுபவர்களான குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்டவர்கள், குறிப்பாக விற்பனை வரி வெட்டுக்களிலிருந்து மட்டும் இலாபம் ஈட்டுகின்றனர்,” என்று வலதுசாரி நாளிதழான FAZ குறிப்பிட்டது.

என்றாலும், உணவு போன்ற அடிப்படை நுகர்வு பொருட்களின் விலை, வரி குறைப்பின் காரணமாக தற்போது வீழ்ச்சியடையும் என்பதை காட்டிலும் தொற்றுநோய் காலத்தின் போது மிகப்பெரிய விலை அதிகரிப்பு விளிம்பை எட்டியுள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கிடையில் காய்கறி விலை 26.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல பழம், பால் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளன.

இந்த நிலைமைகளின் கீழ், விற்பனை வரி குறைப்பு என்பது முதன்மையாக பெரு வணிகங்களுக்கும் மற்றும் வர்த்தகர்களுக்கும் பயனளிக்கும். கீலை தளமாகக் கொண்ட உலக பொருளாதார நிறுவனத்தின் (Global Economic Institute) தலைவரான, Gabriel Felbemayr, “இந்த குறுகிய காலத்திற்கென வணிகங்கள் தமது விலைகளை குறைக்குமா அல்லது தமக்குத் தாமே வரி குறைப்புக்களை வெறுமனே அவர்களுடன் எடுத்துக் கொள்ளுமா என்பது பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை” என்று Handlesblatt நாளிதழுக்கு தெரிவித்தார். சக்திவாய்ந்த சந்தை நிலையை கொண்டிருக்கும் நிறுவனங்கள் தங்களது விலைகளை குறைக்காமல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க முடியும்.

கொரொனா வைரஸ் நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்கென நிர்ணயிக்கப்பட்ட மிகச்சிறிய தொகைகளான இவை உதவி என்பதை காட்டிலும் மிகவும் அவமானகரமானது.

18 வயதிற்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் 300 யூரோ குழந்தை நல நிதியில் ஒரு பங்கு அதிகரிப்பை பெற்றோர்கள் பெறுவர். இதற்கான மொத்த செலவு தோராயமாக 4.3 பில்லியன் யூரோவாகும். பல பெற்றோர்கள் பல வாரங்களாக தமது வருமானத்தில் பெரும்பகுதியை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அல்லது பள்ளிகளும் மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டிருந்த நேரத்தில் குழந்தை பராமரிப்புக்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தனர் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால் இது மிகவும் அபத்தமான குறைந்த தொகையாகும்.

மேலும், பாழடைந்த நிலையிலுள்ள மழலையர் பள்ளிகளை புதுப்பிக்கவும், சுகாதார வழிகாட்டுதல்களை மேம்படுத்தவும் தேசியளவில் மற்றொரு 1 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு கிடைப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. இது Lufthansa நிறுவனத்தை மீட்டெடுக்க அவர்கள் ஏற்பாடு செய்த தொகையில் ஒன்பதில் ஒரு பங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Paritatische Wholfahrtsverband நலன்புரி அமைப்பின் தலைவரான Ulrich Schneider கருத்து தெரிவித்தது போல, ஒட்டுமொத்த நிதி தொகுப்பும், குழந்தைகள் இல்லாத ஏழை மக்களுக்கென ஒரு சதவிகித நிதி ஒதுக்கீட்டைக் கூட கொண்டிருக்கவில்லை. நிதி தொகுப்பு தொடர்பான உரையில் “பராமரிப்பு” என்ற சொல்லை எந்த இடத்திலும் காண முடியவில்லை. எவ்வாறாயினும், கொரொனா வைரஸ் நெருக்கடி, தவிர்க்கக்கூடிய ஏராளமான இறப்புக்களுக்கு வழிவகுத்ததான வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் நிலவும் கொடூரமான நிலைமைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

தங்களது வரவு செலவுத் திட்டங்களில் மத்திய அரசாங்கம் விதித்த முறையான வெட்டுக்களைக் கண்ட நகராட்சிகள், வெறும் 6 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீட்டை மட்டுமே பெறும். குறிப்பாக வணிக வரி வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சி, சமூகநலச் செலவினங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் கலாச்சார நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்களில் காணப்பட்ட பெரும் வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக அவை குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்ற உண்மை ஒருபுறம் உள்ளது. இதனால் நகராட்சிகளுக்கு வரவேண்டிய நிலுவையிலுள்ள கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக, சமூக நலன்களைக் கொண்டு மக்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கான செலவுகளில் ஒரு பகுதியை மத்திய அரசு செலுத்தும்.

130 பில்லியன் யூரோ ஊக்க நிதி தொகுப்பின் பெரும்பகுதி பெரும் வணிகங்களின் கருவூலங்களுக்குள் நேரடியாக பாயும். புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கான கூடுதல் கட்டணத்தை குறைக்க 11 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தனியார் வீடுகளின் மின்சார கட்டணத்தில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், முக்கிய பயனாளிகளாக பெரும் தொழில்துறை நுகர்வோர்கள் இருப்பார்கள்.

தொகுக்கப்பட்ட நிதியளிப்பில் 25 பில்லியன் யூரோக்கள், வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியை குறிப்பாக மூடிமறைக்க சிரமப்படும் துறைகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு என வழங்கப்படும். வரிச்சுமை தணிப்புக்கு கூடுதலாக இந்த திட்டத்தில், உணவுவிடுதிகள் மற்றும் உணவகங்கள், மதுபான அருந்தகங்கள் மற்றும் கிளப்புகள், போக்குவரத்து முகமைகள் ஆகியவற்றிற்கு 150,000 யூரோ வரையறைக்குள்ளான வணிகம் நடத்துவதற்கான செலவினங்களில் தள்ளுபடிகளை வழங்குவதற்கான திட்டமும் அடங்கும். கலாச்சார நிறுவனங்கள் மீதான கொரொனா வைரஸ் நெருக்கடியின் காரணமான சுமையை குறைப்பதற்கென 1 பில்லியன் யூரோ நிதியை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மொத்த வருமானத்தில் 40 சதவிகிதத்தில் சமூக காப்பீட்டு பங்களிப்புகளை ஈடுசெய்வதற்கான 5.3 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீட்டையும் இந்த நிதி தொகுப்பு உள்ளடக்கியது. இதில் பாதியளவு தொகை நேரடியாக முதலாளிகளின் பைகளில் பாயும்.

தொகுப்பின் மிகப்பெரிய பகுதியாக 50 பில்லியன் யூரோ, காலநிலை பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மீதான முதலீடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மிகச்சிறந்த தலைப்பு வாகன தொழிலுக்காக பாய்ச்சப்படும் பணத்தின் வெள்ளத்தை மூடிமறைக்கிறது.

இதுபற்றி தீவிரமாக பரப்புரை மேற்கொள்ளப்பட்டாலும், பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான கொள்முதல் காப்பீட்டை பெறுவதற்கான திட்டத்தை செயல்படுத்துமாறு வாகன உற்பத்தியாளர்களால் அரசாங்கத்தை வற்புறுத்த முடியவில்லை. அதற்கு பதிலாக, மின்சார வாகனங்களுக்கான அதிகபட்ச காப்பீட்டில் இருந்து அவர்கள் இன்னும் பயனடைவார்கள். மின்சார வாகனம் வாங்குவதற்கு எதிர்காலத்தில் தற்போது வழங்கப்படும் 3000 யூரோ மானிய தொகைக்கு பதிலாக 6,000 யூரோ மானியம் வழங்கப்படும்.

கூடுதலாக, வாகன உற்பத்தியாளர்களுக்கான பிற நிதி திட்டங்களில் இவையடங்கும்: மின்சார வாகனங்களுக்கான மின்கலனில் மின்விசை சேர்த்து வைப்பதற்கான வலைப்பின்னலை விரிவாக்கம் செய்ய 2.5 பில்லியன் யூரோ முதலீடு செய்யப்படும் என்பதுடன், மின்கலன் உற்பத்திக்கு என மற்றொரு 2 பில்லியன் யூரோ செலவு செய்யப்படும். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் மீதான விற்பனை வரி குறைப்பின் மூலமாகவும் வாகன உற்பத்தியாளர்கள் இலாபம் அடைவார்கள். அதாவது, 30,000 யூரோ மதிப்பு கொண்ட ஒரு மத்தியதர காருக்கான வரி குறைப்பினால் சேமிப்பு தொகையாக 900 யூரோ கிடைக்கும்.

Deutsche Bahn இரயில்வே நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய மூலதனத்தை 5 பில்லியன் யூரோவாக அதிகரிக்கவும் அரசாங்கம் விரும்புகிறது. மேலும், மற்றொரு 2.5 பில்லியன் யூரோ நிதி பொது போக்குவரத்து பராமரிப்பிற்கு உதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊக்க நிதி தொகுப்பு குறித்து அனைத்து பொருளாதார நிறுவனங்களும் மற்றும் வணிக சங்கங்களும் பாராட்டியுள்ளன. Ifo நிறுவனத்தின் தலைவரான Clemens Fuest, இதை “சீரானது” என்று விவரித்தார். முதலாளிகளின் ஒருங்கிணைப்புடன் கூடிய ஜேர்மன் பொருளாதார நிறுவனத்தின் (German Economic Institute) இயக்குநரான, Michael Huther, இது “வியக்கத்தக்க வகையிலான பெரிய மற்றும் நிதி பொறுப்பு,” என்று பாராட்டினார். மேலும், தொழிற்சங்க ஒருங்கிணைப்புடன் கூடிய பெரும் பொருளாதார மற்றும் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி நிறுவனத்தின் (Institute for Macroeconomic and Growth Research-IMK) விஞ்ஞான இயக்குநரான, Sebastian Dullien, இது “அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட கணிசமான அளவிலானதொரு ஊக்க நிதி தொகுப்பு என்ற வகையில் வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.

தொழிலாள வர்க்கத்தின் மீதான புதிய தாக்குதல்களுக்கு ஒருபுறம், ஐரோப்பிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டியாளர்களுடனான வர்த்தகப் போர்களில் ஜேர்மனியின் பெரும் வணிகத்திற்கான நன்மையை பாதுகாக்க இந்த நிதி தொகுப்பு நோக்கம் கொண்டுள்ளது. இதனால் தான், வணிக சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்பாராத ஆதரவை இது பெறுகிறது.

Loading