யுத்த பதட்டங்கள் தொடரும் போது இந்தியாவும் சீனாவும் கத்தி விளிம்பில் உள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கரடுமுரடான இமயமலை நிலப்பரப்பில் இந்திய மற்றும் சீனத் துருப்புக்கள் நடத்திய இரத்தக்களரிப் போரில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னர், புது தில்லி மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து தீவிரமாகவே உள்ளன.

1962 இல் ஒரு வரம்புக்குட்பட்ட ஒரு மாத கால யுத்தத்தை நடத்தியதிலிருந்து அவர்கள் எதிர் கொண்டுள்ள மிகக் கடுமையான எல்லை நெருக்கடி தீவிரமடையாமல் தடுக்க விரும்புவதாக இரண்டு அரசாங்கங்களும் மற்றும் அவற்றின் இராணுவங்களும் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

இருப்பினும், திங்கள்கிழமை இரவு மோதல் தூண்டப்பட்டதற்கு ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டினர். இதில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் "உலகின் கூரைக்கு" அருகில் ஒருவருக்கொருவர் கற்கள், கத்திகள் மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கியதாக தெரிந்தது, மற்றும் தளர்ந்து கலைந்து செல்ல வேண்டும் ஒருவருக்கு ஒருவர் வலியுறுத்துகின்றனர், அதாவது பல இடங்களில் குவிந்த படைகளை “தங்கள் பக்கத்து” உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்.ஐ.சி) பின்இழுத்துச் செல்ல வேண்டும், - வரையறுக்கப்படாத அந்த தற்காலிக எல்லைக் கோட்டை புது தில்லி மற்றும் பெய்ஜிங் அவர்களின் போட்டி பிராந்திய உரிமைகோரல்களுக்கு இறுதி தீர்வு காணப்படும் வரை ஏற்றுக் கொண்டனர்.

தங்களது எதிரெதிரான கோரிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லைப் பகுதிகளுக்கு கூடுதல் இராணுவத்தினரையும் போர் தளவாடங்களையும் குவிக்கின்றன. சீனாவுடனான 3,500 கிலோமீட்டர் (2,175 மைல்) எல்லையில் ரோந்து பணியில் அங்கு அனுப்பப்பட்ட அனைத்து இராணுவ மற்றும் விமானப்படை பிரிவுகளையும் ஈடுபடுத்தி இந்தியா சீனாவுடனான எல்லையை "உச்ச உஷார்" நிலையில் வைத்துள்ளது.

செய்தி அறிக்கையின்படி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் கலந்தாலோசித்ததை தொடர்ந்து, இந்திய இராணுவத்தின் உயர் கட்டளை அதன் எல்லைப் படைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தது. அதன் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நிலப்பகுதிக்குள் சீனாவின் ‘ஊடுருவல்களை" ஆக்ரோஷத்துடன் விரட்டியடிக்க வேண்டும், ”(சீன) மக்கள் விடுதலை இராணுவத்திற்கான (PLA) உள்ளே நடை மேற்கொள்ளும் நாட்கள் முடிந்துவிட்டன" என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு தெரிவித்தன. "எங்கள் படைகள் பின்வாங்க மாட்டார்கள். எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் இருக்காது. "பி.எல்.ஏ, ஆதாரங்கள் தொடர்ந்தன, "நிலப்பரப்பைக் கைப்பற்ற எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் “இழப்புகளைத் தாங்க வேண்டி" கட்டாயப்படுத்தப்படும்.

தங்கள் எல்லைப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று பெய்ஜிங்குடனான பல தசாப்த கால ஒப்பந்தத்தை நிராகரிப்பதை புது தில்லி பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அனைத்து தகவல்களின்படி திங்களன்று நடந்த ஆறு மணி நேர மோதலின்போது இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை மீறவில்லை, இதில் 20 இந்தியர்களும் கணக்கெடுக்கப்படாத சீன படையினரும் கொல்லப்பட்டனர்.

புது தில்லிக்கு ஒரு தெளிவான செய்தியாக PLA இன் திபெத் இராணுவக் கட்டளை செவ்வாயன்று அறிவித்தது, அதாவது இந்தியாவுடனான எல்லைக்கு அருகே தொடர்ச்சியான போர் பயிற்சிகளை நடத்தியதாக அறிவித்தது. PLA செய்தி வெளியீட்டை மேற்கோள் காட்டி, திபெத்திய பீடபூமியில் “சமீபத்தில் நேரடி-பயிற்சிகள் நடந்தன” என்று chinanews.com தெரிவித்துள்ளது, மேலும் “நீண்ட தூர பீரங்கி அமைப்புகள், தரையில் இருந்து வான் ஏவுகணை அமைப்புகள், சிறப்பு செயல்பாட்டு சக்திகள் உள்ளிட்ட பல வகையான போர் சக்திகளைக் கொண்டுள்ளது. இராணுவ விமானப் படைகள், மின்னணு எதிர் படைகள் மற்றும் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவில் பொறியியல் மற்றும் இரசாயன எதிர்ப்பு போர் படைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன”.

நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி வியாழக்கிழமை, "மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள்", இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையில் "மேலும் சண்டை மூள்வதற்கான வாய்ப்புகள்" “மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளன, குறிப்பாக பல முறை வன்முறை வெடித்த தொலைதூரத்திலுள்ள ஒரு முன்னிலை பகுதியில் ஆயிரக்கணக்கான எதிர்க்கும் துருப்புக்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்படியாக நிற்கின்றனர்.”

நேற்று மாலை, Hindu, கூற்றுப்படி, திங்களன்று மோதல் நடந்த இடமான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன இராணுவத் தளபதிகளுக்கு இடையிலான சந்திப்பில் முந்தைய நாள் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் படி, சீனா ஒரு லெப்டினன்ட் கேர்ணல் மற்றும் மூன்று மேஜர்கள் உட்பட 10 இந்திய இராணுவ வீரர்களை திருப்பி அனுப்பியது. அவர்கள் இரத்தக்களரி மோதலின் போது பிடிக்கப்பட்டவர்கள்.

புதன்கிழமை சோதனை தொலைபேசி பரிமாற்றம் செய்த இந்தியாவின் மற்றும் சீனாவின் வெளியுறவு மந்திரிகள், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சருடன் முன்னர் திட்டமிடப்பட்ட முத்தரப்பு சந்திப்பு ஜூன் 23 அன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று நேற்று அறிவித்தது.

தணிந்து கலைந்து போவதற்கான விருப்பம் குறித்த முற்படிவ தன்மை கொண்ட கருத்துக்களுக்கு அப்பால், வாஷிங்டன் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சண்டை வெடித்தது குறித்து கவனத்தை கவர்கின்ற மவுனத்துடன் இருந்து வருகிறது. எவ்வாறாயினும், கல்வான் பள்ளத்தாக்கில் திங்களன்று மோதலுக்கு முந்தைய வாரங்களில், வாஷிங்டன் எல்லைப் பிரச்சினையில் தலையிட்டது, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் தலைமையிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் ஆக்கிரமிப்புக்காக சீனாவை பகிரங்கமாகக் கண்டித்தனர்.

சீன – இந்திய எல்லை தகராறுகள் பல பத்தாண்டுகள் பழையதுமாக மற்றும் பதட்டங்கள் மெழுகு போல் கரைந்து போயிருந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமின்றி தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீங்கு விளைவிக்கும் மற்றும் சீனாவுக்கு எதிரான விரைவாக அதிகரித்து வரும் இராணுவ-மூலோபாய தாக்குதலுடன் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஒருங்கிணைப்பு உள்ளது. முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்திய-அமெரிக்காவின் “பூகோள மூலோபாய கூட்டாண்மை” யை கட்டியெழுப்பும் மோடியின் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) ஆட்சி இந்தியாவை எப்போதும் விரிவடையும் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்புற இராணுவ-மூலோபாய உறவுகளின் வலையில் இந்தியாவை மூழ்கடித்துள்ளது. அந்த உறவுகள் அமெரிக்கா மற்றும் அதன் முதன்மை ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடன் ஆகும்.

மேலும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில், தொற்றுநோயால் தூண்டப்பட்ட பூகோள பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ளதற்கு பதிலளிக்கும் விதமாக, மோடி அரசாங்கமும் இந்திய முதலாளித்துவமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தங்கள் சீன எதிர்ப்பு கூட்டணியை விரிவுபடுத்த உத்தேசித்துள்ளன. கடந்த மாதம், சீனாவுடனான எல்லை நெருக்கடி உருவாகி வரும் நிலையில், வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ், அமெரிக்க நிறுவனங்களை ஊக்குவிப்பற்காக ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதே தனது அரசாங்கத்தின் பொருளாதார “மறுமலர்ச்சி திட்டத்தில்” ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்று மோடி அறிவித்தார். சீனாவிலிருந்து இந்தியாவை அவர்களின் மாற்று உற்பத்தி சங்கிலி மையமாக மாற்றவும். பாதுகாப்பு உற்பத்தியில் அந்நிய முதலீட்டிற்கான அனைத்து வரம்புகளையும் இரத்து செய்வதாகவும் அவர் அறிவித்தார், அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களை இந்தியாவை மலிவான தொழிலாளர் தளமாக பயன்படுத்த ஈர்க்கும் நோக்கத்துடன் அது செய்யப்பட்டது.

சீன-இந்திய எல்லையில் நிகழ்வுகள் கட்டுப்பாட்டை மீறி, உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளுக்கும் போட்டி அணுசக்தி சக்திகளுக்கும் இடையில் போருக்கான வாய்ப்பை உயர்த்தியுள்ளது குறித்து வாஷிங்டன் சற்று அதிர்ச்சியடைந்தது. அத்தகைய யுத்தம், எல்லைப் பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட –அதை உறுதியிட்டுச் சொல்ல முடியாது- உலக புவிசார் அரசியல் மீது ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் வாஷிங்டன் மவுனமாக இருப்பதன் மூலம், குறைந்தபட்சம் இப்போதைக்கு, அது நன்மையை அறுவடை செய்யலாம் என்று கணக்கிடுகிறது.
“மூலோபாய சுயாட்சி” என்ற எந்தவொரு பாசாங்கையும் கைவிட்டு, சீன எதிர்ப்பு பாதுகாப்பு குழுவில் வாஷிங்டனுடன் முறையாக இணையுமாறு புதுடெல்லிக்கு இந்தியாவின் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளும், கார்ப்பரேட் உயரடுக்கினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த சக்திகள் இப்போது இந்திய-சீனா எல்லை மோதலைப் பயன்படுத்தி, பரவலான மக்கள் எதிர்ப்பை -எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்துக்குள், அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவை பயன்படுத்துவதற்கு எதிரான– எதிர்ப்பை கடக்க முயல்கின்றன.

"அமெரிக்காவுடனான அதன் பங்காளித்துவத்தை இரட்டிப்பாக்க வேண்டும்" என்றும், நாற்தரப்பை (இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்ட அமெரிக்கத் தலைமையிலான பாதுகாப்பு உரையாடல்) "இன்னும் நிரந்தர ஏற்பாடாகவும், சீன சக்தியை கட்டுப்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு கிளப்பின் ஒரு பகுதியாகவும் இருக்க வேண்டும்" என்று Hindustan Times புதன்கிழமை வலியுறுத்தியது.

"சீனாவின் ஆக்கிரமிப்புகளுக்கு அதன் சொந்த குறுக்கு - எல்லைக்கோடு சூழ்ச்சிகளால் பதிலளிப்பதன் மூலம்" பொருளாதார ரீதியாக, இராஜதந்திர ரீதியாக மற்றும் இராணுவ ரீதியாக சீனாவுக்கு எதிராக இந்தியா திருப்பி அடிக்க பின்வாங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஒரு நாள் கழித்து, Times of India நேற்று இவ்வாறு அறிவித்தது, "இந்தியா உறுதியாக (அமெரிக்க) முகாமில் இணைந்தால், அது பெய்ஜிங்கிற்குத் தான் இழப்பு புது தில்லிக்கு அல்ல.” பாஜக அரசாங்கம் ஏற்கனவே சீனாவுக்கு எதிரான பொருளாதார பழிவாங்கும் பட்டியலை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், அது ஒரு போர் வெறி மனநிலையைத் தூண்ட முயல்கிறது, அதன் இந்து வலது கூட்டாளிகள் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது உட்பட சீன-எதிர்ப்பு எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்கிறது.

பாஜக அரசாங்கம் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் திறமையின்மை, அலட்சியம் மற்றும் வர்க்கப் பேராசை காரணமாக, நாடு இரட்டை சமூக பேரழிவை எதிர்கொள்கிறது: காட்டுத்தீ போல் வளர்ந்து வரும் ஒரு கோவிட்-19 தொற்றுநோய், மற்றும் 100 மில்லியனுக்கும் அதிகமான வேலையற்றோரின் சமூகப் பதட்டங்கள். இவற்றை வெளிப்புறமாக திசைதிருப்பவும், எதிர்வினைகளை ஊக்குவிக்கவும், தொழிலாள வர்க்கத்தை குழப்பவும் பிளவுபடுத்தவும், பேரினவாதத்தைத் தூண்டுவதற்கு மோடி தீவிரமாக முயல்கிறார். காங்கிரஸ் கட்சியும் பிற எதிர்க்கட்சிகள் என்று கருதப்படுபவைகளும் இதற்கு முற்றிலும் உடந்தையாக உள்ளன. யுத்த நெருக்கடிக்கு காங்கிரஸ் சீனாவை கடுமையாக கண்டித்தது மற்றும் பாஜக அரசாங்கம் இந்தியாவை "பாதுகாக்க" தவறிவிட்டது மற்றும் "நிராயுதபாணியான" துருப்புக்களை PLA. ஆல் கொல்ல அனுமதித்தது என்ற குற்றச்சாட்டுகளுடன் பதிலளித்துள்ளது. இதற்கிடையில், அவர்களின் நெருங்கிய கூட்டாளிகளான இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை மோடியும் அவரது பாஜகவும் கூட்டிய இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் இந்திய அரசுடன் நிற்பதை நிரூபிக்கும்.

Loading