இங்கிலாந்து: கோவிட்-19 செல்வந்தர்களின் இறப்பு விகிதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக தொழிலாள வர்க்கத்தை கொல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் (Office of National Statistics - ONS) தரவுகளைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை, “இந்த வைரஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆகிய இருவரையும் பாதித்திருக்கலாம் என்பது எவரும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவர்களாக இல்லை என்பதையே நிரூபிக்கிறது. ஆனாலும் உள் நகரங்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள சமூகங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம் என்று ONS ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது” என்று மே மாத ஆரம்பித்தில் அது குறிப்பிட்டது.

இங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பகுதிகளின் கொரோனா வைரஸ் நோய்தொற்றின் காரணமான இறப்பு விகிதம் குறைந்தளவு பின்தங்கிய நிலையிலுள்ள பகுதிகளை காட்டிலும் தொடர்ந்து இரண்டு மடங்கிற்கு கூடுதலாக உள்ளது என்று சமீபத்திய ONS தரவு காட்டுகிறது.

“உள்ளூரில் நிகழும் கோவிட்-19 இறப்புக்களும் மற்றும் சமூக பொருளாதார இழப்பும்: 2020 ஆம் ஆண்டில் மார்ச் 1 மற்றும் மே 31 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த இறப்புக்கள்,” என்ற இதன் அறிக்கை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொழிலாள வர்க்க பிராந்தியங்களில் நிகழும் இறப்புக்கள் பணக்கார பகுதியின் இறப்புக்களைப் போல இரு மடங்கு அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது.

2020 ஆம் ஆண்டில் மார்ச் 1 மற்றும் மே 31 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கொரோனா வைரஸ் காரணமாக நிகழ்ந்த இறப்புக்கள் 46,687 என்று ONS தெரிவிப்பதானது, இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒட்டுமொத்த இறப்புக்களில் கால் பகுதியைக் குறிக்கிறது. ஒட்டுமொத்த மதிப்பீட்டின் படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 100,000 இறப்புக்களில் கோவிட்-19 இலான இறப்புக்கள் 81.2 சதவிகிதமாக இருந்தது.

கணக்கெடுக்கப்பட்ட காலகட்டத்தில், குறைந்த பினதங்கிய நிலையிலுள்ள பகுதிகளில் (Decile 10) கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 58.8 சதவிகிதமாக இருந்தது. அதேவேளை, மிகவும் பினதங்கிய நிலையிலுள்ள பகுதிகளில் (Decile 1) கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 128.3 சதவிகிதமாக இருந்தது. இது குறைந்த பினதங்கிய நிலையிலுள்ள பகுதிகளை காட்டிலும் 118 சதவிகிதம் கூடுதலானது.

நாட்டின் குறைந்தளவு பின்தங்கிய நிலையிலுள்ள பகுதிகளில், அனைத்து இறப்புக்கள் தொடர்பாக வயதுவாரியாக நிர்ணயிக்கப்பட்ட இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 242.6 சதவிகிதமாக உள்ளது. மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பகுதிகளில், அனைத்து இறப்புக்கள் தொடர்பாக வயதுவாரியாக நிர்ணயிக்கப்பட்ட இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 466.2 சதவிகிதமாக உள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்த பின்தங்கிய நிலையிலுள்ள பகுதிகளை காட்டிலும் 92.2 சதவிகிதம் இது கூடுதலானது.

ONS ஆல் பயன்படுத்தப்பட்ட பல்வேறு இழப்புக்களின் குறியீடு (Index of Multiple Deprivation) என்பது, வருமானம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, குற்றம், வாழ்க்கைச் சூழல், மற்றும் குறிப்பிட்ட பகுதிக்குள் வீட்டுவசதியை கிடைப்பது போன்ற காரணிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட இழப்பின் ஒட்டுமொத்த அளவீடாகும். “மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பகுதிகளில் பொதுவான இறப்பு விகிதங்கள் வழமையாக அதிகமாக இருக்கும், என்றாலும் இதுவரை கோவிட்-19 அவற்றை இன்னும் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது,” என்று ONS இன் சுகாதார பகுப்பாய்வின் தலைவரான Nick Stripe கூறினார்.

இந்த நோய்தொற்று, ஏற்கனவே அதிகரித்து வரும் சமூக பொருளாதார மற்றும் நகர்புற ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகளை மேலும் மோசமாக்கி வருகிறது. நோய்தொற்றினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்க பிராந்தியங்கள் உள் நகரங்களுக்குள் அமைந்துள்ளன. இந்த பிராந்தியங்கள், பல தசாப்தகால புறக்கணிப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகள், பொது சேவைகள் மற்றும் பொது வீட்டுவசதிகளில் காணப்பட்ட முடிவில்லாத வெட்டுக்கள், முக்கியமாக தொழிற்கட்சி நடத்தும் உள்ளூராட்சி மன்றங்களால் நிர்வகிக்கப்பட்டது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 இறப்புக்களுக்கும் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்கள்தொகை அடர்த்திக்கும் ஒரு தெளிவான தொடர்பு உள்ளது. மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் (West Midlands) போன்ற “நகர்ப்புற முக்கிய நகரங்கள்” என்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதான மிகவும் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் 100,000 பேருக்கு 124 சதவிகித கோவிட்-19 இறப்புக்களை எதிர்கொண்டன. அதேவேளை, பிரஸ்டன் (Preston) மற்றும் பிரைட்டன் (Brighton) போன்ற சிறிய “நகர்ப்புற நகரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள்” 100,000 பேருக்கு 74 சதவிகித கோவிட்-19 இறப்புக்களை எதிர்கொண்டன.

இந்த விகிதம் கிராமப்புறங்களைப் பொறுத்தவரை 100,000 பேருக்கு 48 சதவிகிதமாகவும், மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் 23 சதவிகிதமாகவும் சுருங்குகிறது. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகளவிலான மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பதால், வைரஸ் நோய்தொற்றின் தாக்கம் சமூக பொருளாதார மற்றும் நகர்ப்புற இழப்பின் பன்முகத் தன்மையை அதிகப்படுத்துகிறது.

இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் (NHS) தேசிய மருத்துவ இயக்குனர், “மிகவும் கீழ்நிலையிலுள்ள பகுதிகளில் பெரும்பாலும்” காணக்கூடிய நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் நுரையீரல் நோய் போன்ற பல காரணிகள் கோவிட்-19 நோய்தொற்றுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றார். இது தொடர்பாக, பேராசிரியர் Stephen Powis, “சுகாதார ஏற்றத்தாழ்வுகளில் உள்ள இடைவெளியை நாம் குறைப்பது முற்றிலும் முக்கியமானது” என்று கருத்து தெரிவித்தார்.

ONS பகுப்பாய்வு, தொழிலாள வர்க்க பிராந்தியங்களில், குறிப்பாக ஏழ்மையான பகுதிகளில் உள்ள இறப்பு எண்ணிக்கையின் விகிதாசார தாக்கத்தை வெளிப்படுத்தி காட்டுகின்றது. உயர் மட்டங்களில் சமூக பொருளாதார இழப்பைக் கொண்டுள்ள உள்-நகர இலண்டன் பெருநகரங்கள் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 ஆல் ஏற்பட்ட இறப்புக்களின் மிக மோசமான சுமையை தலைநகரம் எதிர்கொண்டது, அதாவது இங்கு மார்ச் மாத ஆரம்பத்தில் இருந்து 10 இறப்புக்களில் 4 க்கு மேற்பட்ட இறப்புக்கள் கடுமையான மற்றும் கொடிய வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக, இங்கிலாந்தின் தென்மேற்கில் குறைந்த நகர்மயமான மற்றும் செல்வச் செழிப்புள்ள ஆனால் சராசரியாக பழமையான பகுதியில், 10 இறப்புக்களில் வெறும் 1 என்ற அளவிற்கு கொரோனா வைரஸ் இறப்பு இருந்தது.

உயர்ந்தளவில் கோவிட்-19 வயதுவாரியாக நிர்ணயிக்கப்பட்ட இறப்பு விகிதங்களைக் கொண்ட 10 உள்ளூர் நகரப் பகுதிகளில் ஒன்பது இலண்டனில் முக்கியமாக தொழிலாள வர்க்க பகுதிகளுக்குள் காணப்பட வேண்டும். 100,000 பேருக்கு 210.9 சதவிகித இறப்பு விகிதத்துடன், உயர்ந்த ஒட்டுமொத்த வயதுவாரியாக நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தை பிரெண்ட் (Brent) கொண்டிருந்தது, அதைத் தொடர்ந்து நியூஹாம் (Newham) 196.8 சதவிகித இறப்பு விகிதத்தையும் மற்றும் ஹாக்னீ (Hackney) 182.9 சதவிகித இறப்பு விகிதத்தையும் கொண்டிருந்தன.

முதல் 10 இடங்களில் இலண்டனுக்கு வெளியே உள்ள ஒரே உள்ளூர் நகரமாக மிடில்ஸ்பரோ (Middlesbrough) மட்டும் உள்ளது. கோவிட்-19 நோய்தொற்றால் மோசமான பாதிப்புக்குள்ளான முதல் 20 பகுதிகளில் சால்ஃபோர்ட் (Salford) நகரமும் மற்றும் ஹெர்ட்ஸ்மியர் (Hertsmere) மாவட்டமும் இருந்தன.

ONS இன் இறப்பு பகுப்பாய்வின் தலைவரான Sarah Coul கார்டியன் பத்திரிகையில், “மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாட்டிலேயே இலண்டன் சற்று அதிகமாக கோவிட்-19 இறப்பு விகிதங்களை கொண்டிருந்தாலும், பெரும்பாலான பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தற்போது குறைந்த இறப்பு விகிதங்களையே எதிர்கொள்கிறது. மே மாதத்தில் அதிக வயது வேறுபாடற்ற கோவிட்-19 இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்த வடகிழக்கு பகுதி, இலண்டனை காட்டிலும் இரு மடங்கு இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தது. ஒட்டுமொத்தமாகவும் மற்றும் கடந்த மூன்று மாதங்களிலும் தென்மேற்கு பிராந்தியத்தில் குறைந்தளவு இறப்பு விகிதமே தொடர்ந்து நிலவுகிறது” என்று தெரிவித்தார்.

“இதற்கிடையில்” Coul, “மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் குறைந்த பின்தங்கிய நிலையிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் இரு மடங்கு அதிகமான கோவிட்-19 இறப்பு விகிதத்தை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். பொதுவான இறப்பு விகிதங்கள் பொதுவாக மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பகுதிகளில் அதிகமாக இருக்கும், என்றாலும் கோவிட்-19 இந்த விளைவை மேலும் அதிகரிப்பதாகத் தெரிகிறது,” என்று ONS இன் சுகாதார பகுப்பாய்வின் தலைவரான Nick Stripe வழங்கிய கருத்தை ஆதரிக்கும் விதமாக விளக்கினார்.

அதிக எண்ணிக்கையிலான இறப்புக்களை கொண்ட பகுதியாக, ஷெபீல்ட் (Sheffield) நகரத்தில் உள்ள க்ராப்ட்ரீ (Crabtree) மற்றும் ஃபிர் வேல் (Fir Vale) ஆகியவற்றின் உள் நகர பிராந்தியம் இருந்தது. ONS இன் சமீபத்திய தரவுகளின் படி, இந்த மாவட்டத்தில் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் மொத்தம் 66 பேர் கோவிட்-19 நோய்தொற்றால் இறந்தனர். மருத்துவமனைகள், பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தின் பிற பகுதிகளில் நிகழ்ந்த இறப்புக்கள் உட்பட, இரண்டாவது மிக அதிக இறப்புக்கள் நிகழ்ந்த இடமாக இலண்டனின் ப்ரெண்ட் நகரில் உள்ள Church End பகுதி இருந்தது.

க்ராப்ட்ரீ மற்றும் ஃபிர் வேல் ஆகிய பகுதிகள் அடுத்த மிக அதிக இறப்பு விகிதத்தை கொண்ட பகுதியை காட்டிலும் கிட்டத்தட்ட இரு மடங்கு கூடுதலான இறப்புக்களால் பாதிக்கப்பட்டன.

சமூக பொருளாதாரமும், நகர்ப்புற சமத்துவமின்மைகளும் குறிப்பாக கூர்மையாகவுள்ள ஷெஃபீல்டில், எக்லெசால் (Ecclesall) மற்றும் கிரேஸ்டோன்ஸ் (Greystones) போன்ற அருகாமை பகுதிகளான பணக்கார தென்மேற்கு வெளிப்புற புறநகர்ப் பகுதிகளில் ஒரே நேரத்தில் பதிவான மொத்த கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகும்.

க்ராப்ட்ரீ மற்றும் ஃபிர் வேல் பகுதிகளில் பல பராமரிப்பு இல்லங்கள் அமைந்துள்ளன. அரசாங்கத்தின் குற்றத்தனமான அலட்சியமும் மற்றும் படுகொலைக்கான சமூக நோய் எதிர்ப்பு கொள்கையும், ஜூன் 13 ஆம் திகதி வரை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் பராமரிப்பு இல்லங்களில் 14,022 கோவிட்-19 இறப்புக்கள் பதிவாகும் நிலைக்கு இட்டுச் சென்றது.

ஷெஃபீல்டில் பல தொழிலாளர்கள், சேரிப் பகுதியிலுள்ள மொட்டை மாடி வீட்டுவசதிக்கு அதிக வாடகை வசூலிக்கும் சுறா பாதிப்புக்குள்ளான குளம் போன்ற தனியார் நில உரிமையாளர்களின் பகுதியில் உயிர்வாழ வேண்டும். உள் நகரங்களில் அதிகளவு நெருக்கடி என்பது சர்வ சாதாரணமாக இருந்தது, ஏனென்றால் இத்தகைய நிலைமைகள் ஏழ்மையான மாவட்டங்களில் ஒரே குடியிருப்பில் பல குடும்பங்கள் ஒன்றாக வசிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது. இத்தகைய கூட்ட நெரிசல் காரணமாக நோய்தொற்று பெருகியுள்ளது. பல குடும்பங்களினால் பயன்படுத்தப்படும் வீட்டுவசதி, பொது வீட்டுவசதி மற்றும் மோசமான தரம், தனியார் வாடகைக்கு விடப்படும் மற்றும் சிறிய மாடி வீடுகளுடன் கூடிய மிகவும் நெரிசலான குடியிருப்புக்களை க்ராப்ட்ரீ மற்றும் ஃபிர் வேல் பகுதிகள் கொண்டுள்ளன.

இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் வாழ்நாள் சுகாதாரம் மற்றும் வயோதிபர்களுக்கான MRC பிரிவின் இயக்குநரான பேராசிரியர் நிஷி சதுர்வேதி (Nishi Chaturvedi), கூட்ட நெரிசல், வருமானம், வேலைவாய்ப்பு, இயலாமை மற்றும் சுகாதார நிலை உட்பட பல காரணிகளின் காரணமான இழப்பு கோவிட்-19 இன் தாக்கத்தை அதிகரிக்கிறது என்று கருத்து தெரிவித்தார். முன்னர் காய்ச்சல் நோய்தொற்று வெடிப்புக்கள் நிகழ்ந்த நேரத்தில் இதேபோன்ற ஆபத்து எவ்வாறு காணப்பட்டது என்பதையும், அதேவேளை நாள்பட்ட நோய்களுடன் குறைந்த அளவு ஆபத்தைக் கொண்டிருந்ததையும் சதுர்வேதி சுட்டிக்காட்டினார்.

அவர் கார்டியன் பத்திரிகையில், “மிகப்பெரிய அளவில் வைரஸின் தாக்கம் வெளிப்படுவது மற்றும் மோசமான சுகாதார நிலையின் விளைவாக நோயின் கூடுதலான பாதிப்பினால் ஏற்படும் அதிகரித்தளவிலான தாக்கம் ஆகிய இரண்டுடன் இழப்பு தொடர்புடையது” என்று தெரிவித்தார்.

Loading