இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு தொடர்ந்து துருப்புக்கள், ஆயுதங்களை விரைந்து அனுப்புகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து தங்கள் பொதுவான எல்லைப் பகுதிக்கு துருப்புக்களையும் ஆயுதங்களையும் விரைந்து அனுப்புகின்றன, ஜூன் 15 திங்கள் இரவு ஒரு இரத்தக்களரி மோதலில் டஜன் கணக்கான இந்திய இராணுவம் மற்றும் சீன மக்கள் விடுதலை இராணுவ (PLA) சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.

பூகோள புவிசார் அரசியல் தாக்கங்கள் நிறைந்த ஒரு வளர்ச்சியில், வாஷிங்டன் மிகவும் பகிரங்கமாக இந்த சர்ச்சையில் தலையிட்டு, சீனா "ஆக்கிரமிப்பு" செய்வதாக குற்றஞ்சாட்டி, அதை அமெரிக்கா தூண்டிவிட்ட தென் சீனக் கடல் மோதலுடன் இணைத்துள்ளது.

கோப்பன்ஹேகன் ஜனநாயக உச்சிமாநாடு என்று அழைக்கப்படும் ஒரு இணையவழி உரையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ சீனாவை ஒரு "நேர்மையற்ற நாடு" என்று கண்டித்தார். "PLA" உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடனான எல்லைப் பதட்டங்களை அதிகரித்துள்ளது. இது தென் சீனக் கடலை இராணுவமயமாக்குகிறது மற்றும் சட்டவிரோதமாக அங்கு அதிகமான நிலப்பரப்பைக் கோருகிறது, முக்கிய கடல் பாதைகளை அச்சுறுத்துகிறது.”

45 ஆண்டுகளில் அவர்களின் முதல் ஆபத்தான எல்லை மோதலுக்கு பின்னர் ஆறு நாட்களில், புது தில்லி மற்றும் பெய்ஜிங் ஆகிய இரண்டும் தற்போதைய சர்ச்சையின் அமைதியான தீர்வுக்கு தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் மீண்டும் அளித்துள்ளன, அது உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LAC) உள்ள வழிகளில் கண்ணும் கண்ணும் நேருக்கு நேர் பார்க்கும் - பதட்டமான நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை கொண்டிருக்கிறது. நிலுவையிலுள்ள அவர்கள் போட்டியாக உரிமைகோரும் பிராந்தியத்திற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்வரை பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம், வரையறுக்கப்படாத LAC உண்மையான இந்தியா-சீனா எல்லையாக செயல்படும் என்று கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், புது தில்லி மற்றும் பெய்ஜிங்கின் அமைதியான நோக்கங்கள் குறித்த உறுதி மொழிகள், இரத்தக்களரியான எல்லை மோதலுக்கு மற்றவர் தான் பொறுப்பு என்று ஒருவருக்கு எதிராக மற்றவர் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதுடன் பிணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொருவரும் தங்கள் அணு ஆயுதம் கொண்ட அண்டை மற்றும் போட்டியாளரை தங்கள் "இறையாண்மையை" மற்றும் "பிராந்திய ஒருமைப்பாட்டை" பாதுகாப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

கடைசி புள்ளியை அடிக்கோடிட்டு காட்டுவதாக இரண்டு அரசாங்களும் மற்றும் அவற்றின் இராணுவங்களும் தாம் எதிர்கால மோதல்களுக்கும், ஒரு முழு அளவிலான போருக்கும் முழு முயற்சியுடன் தயார் செய்து வருவதாக எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைத் தலைவர்கள் ஆகியோரின் சந்திப்பைத் தொடர்ந்து, சீன “வலியத் தாக்குதலுக்கு” பதிலளிப்பதற்கு LAC நெடுகிலும் உள்ள தளபதிகள் “சுதந்திரமாக செயல்பட” அனுமதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள், வெளிப்படுத்தியுள்ளன.

"நிலைமையை மதிப்பிட்டு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு படைகளுக்கு நேரடியான உரிமை வழங்கப்பட்டுள்ளது. “விரிவாக்கத்தை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அது மறுபுறம் நடந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விளைவுக்கான தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டன.” என்று ஒரு “பாதுகாப்பு ஆதாரம்” கூறியதாக Hindu செய்தி வெளியிட்டது.

நேற்றைய சந்திப்புக்கு முன்பே, இந்தியா தனது ஈடுபாட்டுக்கான விதிகளை மாற்றம் செய்வதாக தெரியப்படுத்தியது, அதாவது எல்லை மோதல் ஏற்பட்டால் தங்கள் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்ற சீனாவுடனான பல தசாப்த கால ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக அறிவித்தது. சில செய்தி அறிக்கைகள், கடந்த திங்கட்கிழமை இரவு ஆறு மணி நேர மோதலை - கற்கள், கத்திகள், இரும்புக் கம்பிகள் மற்றும் முட்கம்பிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட “மத்திய காலத்திற்குரிய போர்” என்று விவரித்தது.

3,500 கிலோ மீட்டர் (2,175 மைல்) LAC நெடுகிலும் அணிவகுத்துள்ள 300,000 துருப்புக்களை "மிக உயர்ந்த உஷார் நிலையில்" நிறுத்தியுள்ளது. இது குறைந்த மக்கள் தொகை கொண்ட, காலியான இமயமலை நிலப்பரப்புக்கு குறுக்காக செல்கிறது. இது போர் விமானங்கள், போயிங் சிஎச்-47 சினூக் ஹெவி லிப்ட் ஹெலிகாப்டர்கள் மற்றும் புதிதாக வாங்கிய, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏஎச்-64 இ அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை அதன் வடக்கு எல்லைக்கு அருகே தளங்களை முன்னோக்கி நகர்த்தியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் கடற்படை எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்திய இராணுவம் எந்த அளவிற்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி, இரண்டாவது அரசாங்க ஆதாரம் இந்து பத்ததிரிகைக்கு இவ்வாறு கூறியது; “நாங்கள் ஏற்கனவே மலாக்கா (நீரிணை) அருகே இருக்கிறோம், நாங்கள் அமெரிக்காவுடனும் தேவைப்பட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) கடற்படைகளுடனும் செயல்பட முடியும்.”
மேலும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அவசரமாக வாங்குவதற்கு இந்திய இராணுவத்தின் மூன்று கிளைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இந்தியாவை போருக்குத் தயார்படுத்துவதற்கான இந்த உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுடன் சேர்ந்து சீன “ஆக்கிரமிப்பு” மற்றும் “துரோகம்” போன்ற கண்டனங்கள் வேகமான நீரோட்டமாக அரசியல் தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் ஊடகங்களிடம் இருந்து வந்துள்ளன. இந்திய பத்திரிகைகள் முழுமையாக போர் கூச்சல்களுடன் நிரம்பியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை முன்னாள் இந்திய இராணுவ அதிகாரிகளிடம் இருந்து வந்துள்ளன. ஒரு சீன-இந்தியப் போரில், பாகிஸ்தானை சீனா தன்பக்கம் இழுக்கக்கூடிய சாத்தியத்தைப் பற்றி குறிப்பிட்டு முன்னாள் இந்திய இராணுவத் தலைவர் வி.பி. மாலிக் இவ்வாறு கூறினார்; "நாங்கள் இரண்டு முனைகளிலும் எளிதில் போரை நடத்த முடியும்" மேலும் "நாங்கள் அதிகம் கவலைப்படக்கூடாது, எங்கள் படைகளுக்கு திறன் உள்ளது." என்றார்.

எல்லை நெருக்கடிக்கு அதன் இராணுவ பதில் குறித்து பெய்ஜிங் அதிக எச்சரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் அது எல்லைக்கு அருகே தனது இராணுவ திறன்களை பலப்படுத்துகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடம் கொடுக்கவில்லை.

சனிக்கிழமை தனது இந்திய தூதரகம் மூலமாக வெளியிட்ட அறிக்கையில் சீனா இவ்வாறு பிரகடனம் செய்தது; "இந்திய இராணுவத்தின் சாகச செயல்கள் எல்லைப் பகுதிகளின் ஸ்திரத்தன்மையை கடுமையாக பலவீனப்படுத்தி உள்ளன, சீனப் பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன, இரு நாடுகளுக்கிடையில் எல்லை பிரச்சினை குறித்து எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மீறியுள்ளன. எல்லைப் பிரச்சினை மற்றும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளை மீறியுள்ளது”.

அதேசமயம் அதன் கவனம் சீனாவிற்கு எதிரான சமீபத்திய ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டல்களின் தாக்குதலாக இருந்தது, அரசாங்கத்துடன் இணைந்த, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் பத்திரிகை இந்தியாவுக்கு எதிரான தொடர்ச்சியான போர்க்குணமிக்க, தேசியவாத சலசலப்புகளையும் வெளியிட்டுள்ளது, அது சீனாவின் மிகப் பெரிய பொருளாதாரம் மற்றும் இராணுவ வலிமையை வெளிச்சம் போட்டு காட்டியது.

"சீனாவிற்கும் இந்தியாவின் வலிமைக்கும் இடையிலான இடைவெளி தெளிவாக உள்ளது" என்று கடந்த திங்கட்கிழமை மோதல் குறித்து குளோபல் டைம்ஸ் வெளியிட்ட பல தலையங்கங்களில் முதலாவது இவ்வாறு அறிவித்தது. “சீனா மோதல்களை உருவாக்கவில்லை மற்றும் உருவாக்க மாட்டாது, ஆனால் அது எந்த மோதல்களுக்கும் அஞ்சாது. … நாங்கள் யாருக்கும் எங்கள் அடித்தளத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.”

மோதல் எவ்வளவு சிக்கலானது என்பதை மேலும் சுட்டிக்காட்டுவதாக குளோபல் டைம்ஸ், இந்தியாவில் ஆற்றலுடன் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு ஆலோசனை கூறியது, அதாவது தங்கள் முதலீடு மற்றும் உற்பத்தித் திட்டங்களை "நிறுத்தி வைக்க வேண்டும்" என்பது மட்டுமல்லாமல், "தங்கள் முதலீடுகளை பல்வகைப்படுத்துவது மற்றும் மாற்று சந்தைகள் தேடுவது குறித்தும் சிந்திக்க தொடங்க வேண்டும்.” என்று கூறியது.

இந்தியாவும் சீனாவும் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும் சந்தைகள், வளங்கள் மற்றும் மூலோபாய நன்மைக்காக போட்டியிடுகின்றன. ஆனால் அவர்களின் மூலோபாய போட்டி மிகவும் வெடிக்கும் தன்மையுடையதாகி விட்டது என்றால் அதற்கு காரணம் கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலுடன் அது இன்னும் ஆழமாக பின்னிப்பிணைந்ததனால் தான். ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரின் அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்கள், ஒரே மாதிரியாக, இந்தியாவை சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக கட்டியெழுப்ப முயன்றன; மண்டியிடும் இந்திய முதலாளித்துவம் “மூலோபாய உதவிகளுக்கு” பிரதி உபகாரமாக சீன எதிர்ப்பு தாக்குதலில் வாஷிங்டனுக்கு உதவுவதற்கும் தூண்டுவதற்கும் எப்போதும் தயாராக உள்ளது.

இந்தியாவின் ஆளும் உயரடுக்கின் சக்திவாய்ந்த பிரிவுகள் "மூலோபாய சுயாட்சி" என்ற எந்தவொரு பாசாங்கையும் கைவிட்டு, வாஷிங்டனின் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து அமெரிக்கத் தலைமையிலான சீன எதிர்ப்பு கூட்டணியில் முறையாக சேருமாறு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அவர்கள் இப்போது மக்கள் எதிர்ப்பை சமாளிக்க, எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னால் இந்தியாவை பிணைப்பதற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை சமாளிக்க எல்லை நெருக்கடியை பயன்படுத்த முயல்கின்றனர்,

கடந்த வாரம் முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் எழுதினார்: "இது ஒரு முக்கிய மூலோபாய பங்காளியாக அமெரிக்காவுடன் தனது நலன்களை மிகவும் வலுவாகவும், சந்தேகத்திற்கு இடமின்றி ஒருங்கிணைக்கவும் மற்றும், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ASEAN உடன் உறவுகளை ஏற்படுத்த அதிகமான சக்தியை செலவிடவும் இந்தியாவுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும்.”

இந்தியாவின் தீவிர வலதுசாரி நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம் பெரும் சமூக பதட்டங்களை வெளிப்புறமாக திசைதிருப்பவும், போர்க்குணமிக்க தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதற்குமான ஒரு வழிமுறையாகக் எல்லை நெருக்கடியை கருதுகிறது, இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ”புத்துயிரளிக்க" அதன் பிற்போக்குத்தனமான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கிறது.

இந்த திட்டத்தின் முக்கிய கூறுகள் என்னவென்றால், முதலீட்டாளர்களுக்கு ஆதரவான "சீர்திருத்தங்களில்" ஒரு “மொத்தமான பாய்ச்சல்” (“quantum jump”) என்று மோடி அழைத்தவை தான். மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ் அமெரிக்க நிறுவனங்களை கவர்ந்திழுக்கவும், சீனாவிலிருந்து விலகி இந்தியாவை அவற்றின் மாற்று உற்பத்தி – சங்கிலி மையமாக மாற்றிக்கொள்ளவும் ஆகும்.

உலகெங்கிலும் உள்ளதைப் போல, COVID-19 தொற்றுநோய் ஆளும் உயரடுக்கின் திறமையற்ற தன்மையையும் குற்றவியல் அலட்சியத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. பாஜக அரசாங்கத்தின் மோசமான 10 வார முடக்கத்தின் விளைவாக பல்லாயிரக்கணக்கான வறிய தொழிலாளர்கள் வேலை மற்றும் அனைத்து வருமானங்களையும் இழந்தனர், அதே நேரத்தில் வைரஸ் பரவுவதை நிறுத்தத் தவறிவிட்டனர். உண்மையில், இந்த மாதம், இந்தியா தனது பொருளாதாரத்தை "மீண்டும்" திறக்கும்போது, COVID-19 பாதிப்புக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 235,000 க்கும் மேலாக 425,000 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்புகள் இரண்டரை மடங்கு அதிகரித்து 13,700 ஆக உள்ளது.

சீனாவுடனான அதன் பிற்போக்கு எல்லை மோதலைத் தொடர்வதிலும், போர் நெருக்கடியை வர்க்கப் போரின் கருவியாகப் பயன்படுத்துவதிலும், பாஜக அரசாங்கம் எதிர்க்கட்சிகள் என்று அழைக்கப்படுபவர்களின் கோழைத்தனம் மற்றும் உடந்தையான செயல்பாட்டை நம்பலாம். வெள்ளிக்கிழமை, மோடி ஒரு அனைத்து கட்சித் தலைவர்களின் மாநாட்டைக் கூட்டினார், அங்கு காங்கிரஸ் கட்சி மற்றும் இரண்டு ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சீனாவுடனான மோதலில் மோடி அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை உறுதியளித்தன.

Loading