முன்னோக்கு

கோவிட்-19 தொற்றுநோயும் அகதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உலகளாவிய பரிதாபகரமான நிலையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தொற்றுநோய் உலகளாவிய மக்களிடையே மிகுந்த வேகத்துடன் பரவிவருவதால், இந்த நோய் உலகம் முழுவதும் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குறிப்பாக பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மனிதகுலத்தின் 1 சதவீதத்திற்கும் அதிகமான சுமார் 79.5 மில்லியன் மக்கள் 2019ல் வலுக்கட்டாயமாக இடம்பெயக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்தனர். இது பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகவும், 2018 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்ததை விட 10 மில்லியனுக்கும் அதிகமாகவும் உள்ளது. இது, கடந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் வருடாந்த உலகளாவிய போக்குகள் என்ற அறிக்கையில் உள்ளது.

உலகின் இடம்பெயர்ந்தவர்கள் ஏதாவது ஒரு நாட்டை தமது தங்களுடைய சொந்த நாடாகக் கருதினால், அது ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனி அல்லது ஈரானுக்கு சமமான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும்.

அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒரு ஹைட்டியரான றோலண்ட் ஜோன், ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் உள்ள டூசைன்ட் லூவர்டூர் விமான நிலையத்திற்கு வந்தபின் டார்மாக்கில் மண்டியிடுகிறார். (AP புகைப்படம் / Dieu Nalio Chery)

அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் ஐந்து நாடுகளிலிருந்து வருகின்றார்கள். இந்நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிக்கும் மற்றும் சூழ்ச்சிகானக நேரடி இலக்குகளாக இருந்தன அல்லது பல தசாப்த கால காலனித்துவ ஆதிக்கம் மற்றும் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ளன. அகதிகளில் மொத்ததில் 68 சதவீதமானோர் ஆப்கானிஸ்தான், மியான்மர், தெற்கு சூடான், சிரியா மற்றும் வெனிசுவேலாவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக அமெரிக்காவால் தூண்டப்பட்ட ஒரு இரத்தக்களரிமிக்க உள்நாட்டுப் போரினால் பேரழிவிற்குள்ளான சிரியா, போருக்கு முந்தைய அதன் 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான 13 மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களைக் கொண்டுள்ளது.

வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள ஏகாதிபத்திய சக்திகள் தங்களது எல்லைகளை அகதிகளுக்கு மூடிவிடுவதால், ஏழ்மையான நாடுகள் நெருக்கடியின் தாக்கத்தை சுமக்கின்றன. அவர்கள் அதிக ஆயுதம் ஏந்தியவர்களின் துப்பாக்கிச் சூட்டினையும், பாசிச எல்லைக் காவலர்களையும் அல்லது கடலில் மூழ்கடிக்கவும் அனுமதிக்கப்படுகின்றர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் அறிக்கை, தனது சொந்த நாட்டிற்கு வெளியே இடம்பெயர்ந்தவர்களில் 73 சதவீதம் பேர் அண்டை நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர் என குறிப்பிடுகிறது, அதாவது, அவர்களின் போரினால் பாதிக்கப்பட்டதைப் போல அவர்களின் உயிர்வாழ்விற்கும் நல்வாழ்விற்கும் உதவ பெரும்பாலும் தயார்நிலையில் இல்லாத நாடுகளில் வாழ்கின்றனர்.

இந்த சூழலில், அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சியின் பயங்கரவாத பயங்கரவாத பிரச்சாரத்தால் மியான்மரில் இருந்து வெளியேற்றப்பட்ட ரோஹிங்கியாக்களின் தலைவிதியை அறிக்கை குறிப்பிட்டது. பல்லாயிரக்கணக்கானோர் பங்களாதேஷில் பரிதாபகரமான, வாழத்தகுதியற்ற முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து, பூட்டுதல் நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் கஷ்டங்கள் மற்றும் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு குறைந்து வருவதால், ரோஹிங்கியாக்கள் மலேசியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி நகரும் எண்ணிக்கையை UNHCRபதிவு செய்துள்ளது.

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வசதியான நாடுகளை அடைய விரும்பும் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆளும் உயரடுக்கின் குற்றவியல் கொள்கைகளால் மிருகத்தனமான அடக்குமுறையையும் மரண அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர். அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் பரந்த அளவிலான தடுப்பு முகாம்களை நிறுவியுள்ளது, அங்கு இலத்தீன் அமெரிக்காவில் உள்ள கொடூரமான சமூக நிலைமைகளில் இருந்து தப்பி வரும் வறிய மக்கள், பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட, விலங்குகளை விட மோசமான நிலைமைகளில் நடத்தப்படுகின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் இறக்கும் இடமாக மாறியுள்ள அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இராணுவமயமாக்கப்பட்ட எல்லைக்காவலர்களும் குடிப்படைகளும் ரோந்து செல்கின்றனர்.

"ஐரோப்பிய கோட்டை" இல், ஐரோப்பிய ஒன்றியம் தஞ்சம் கோருவதற்கான உரிமையை ஒழித்து, அகதிகள் மீதான ஜெனீவா மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்புகளை துண்டித்துவிட்டது. இது நாஜி ஆட்சியின் தடையற்ற காட்டுமிராண்டித்தனத்தைத் தொடர்ந்து நிறுவப்பட்ட சர்வதேச சட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏழு தசாப்தங்களுக்குப் பின்னர், ஐரோப்பிய அரசாங்கங்களும், அதில் ஜேர்மனி முன்னணியில் உள்ளது, இதேபோன்ற காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான பாதையில் உள்ளன. பல்லாயிரக்கணக்கான அகதிகள் லிபியா மற்றும் வட ஆபிரிக்காவின் பிற பகுதிகளில் உள்ள நரக வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் சித்திரவதை, கற்பழிப்பு, அடிமைத்தனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெற்ற ஆயுதக்குழுக்களால் மோசமாக நடாத்தப்படுகின்றனர். கிரேக்க தீவுகளில், பல்லாயிரக்கணக்கான மக்கள் எழும் உலக தொற்றுநோயின் மத்தியில் நெரிசலான முகாம்களில் சிக்கித் தவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பாவின் வாசல் படியான மத்தியதரைக் கடலில் மூழ்க விடப்படுகிறார்கள்.

ஐரோப்பிய முதலாளித்துவத்தால் அகதிகள் மீது காட்டப்படும் கொடுமை மற்றும் பழிவாங்கும் தன்மை மிகவும் வெட்கக்கேடானது. ஐ.நா. அதிகாரிகள் கூட அதை விமர்சிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். உலகளாவிய போக்குகள் அறிக்கையின் வெளியீட்டில் பேசிய ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் ஃபிலிப்போ கிராண்டி, ஒரு ஐரோப்பியர் என்றவகையில், ஐரோப்பிய ஒன்றியம் அகதிகள் நெருக்கடியை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து “சங்கடமாகவும் வெட்கமாகவும்” உணர்கிறேன் என்று கூறினார்.

UNHCR அறிக்கையின் புள்ளிவிவரங்கள் போலவே நிலைமையும் கொடூரமானவை, அது 2019 இல் நிலைமை மட்டுமே என்று கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே ஒவ்வொரு கண்டத்திலும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளை வியத்தகு முறையில் மோசமாக்கியுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடியின் பேரழிவு தாக்கத்தை இது கவனத்தில் கொள்ளவில்லை.

புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் பொதுவாக தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாவர். கொரோனா வைரஸ் வெடிப்புகளால் அவர்கள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மோடியின் இந்தியாவில் இருந்து மேர்க்கெலின் ஜேர்மனி மற்றும் ட்ரம்ப்பின் அமெரிக்கா வரை அலட்சியமாக மற்றும் பெரும்பாலும் தீங்கிழைக்கும் விரோதமான அரச அதிகாரிகளின் முன் தங்களைத் தற்காத்துக் கொள்ள விடப்படுகிறார்கள்.

ஜேர்மனியில், பாசிசவகைப்பட்ட ஜேர்மனிக்கான மாற்று கட்சி அரசாங்கக் கொள்கையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏராளமான ரூமேனிய, பல்கேரிய மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாழடைந்த கட்டிடங்களில் அடைக்கப்படுகிறார்கள். அவை பெரும்பாலும் மனித வாழ்விடத்திற்கு தகுதியற்றவை மற்றும் உரிமைகள் அல்லது வேலை பாதுகாப்புகள் இல்லாத வறுமை ஊதியங்களைப் பெறுகின்றனர். அவர்கள் இறைச்சி பொதி செய்யும் ஆலைகளிலும் விவசாயத் துறையிலும் அதிக எண்ணிக்கையில் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பலரும் வைரஸ் பரவுவதற்கு மிகவும் சாத்தியமான இடங்களான நெரிசலான கட்டிடத்தொகுதிகள் மற்றும் பயன்படுத்தப்படாத இராணுவ முகாம்களில் பலத்த பொலிஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்க அரசாங்கத்தால் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்டினி கிடக்க விடப்பட்டனர். இது மார்ச் மாதத்தில் நாடு தழுவிய பூட்டுதலை நான்கு மணிநேர அறிவிப்புடன் வெளியிட்டபோது அவர்களுக்கு போதுமான உதவிகளை வழங்கத் தவறியது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் "முறைசாரா துறை" என்று அழைக்கப்படும் நாள் கூலிகளாக இருப்பதால், அவர்கள் உணவு மற்றும் வாழ்க்கைக்கான பிற அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு வருமானம் இல்லாமல் ஒரே இரவில் கைவிடப்பட்டனர். நூறாயிரக்கணக்கானவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு கால்நடையாக செல்லத் தொடங்கினர். பெரும்பாலும் வைரஸை அவர்களுடன் சுமந்துகொண்டு நூற்றுக்கணக்கான மைல்களை கடந்து சென்றனர். மேலும் பலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அமெரிக்காவில், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 25,000 க்கும் மேற்பட்ட இறைச்சி பொதி செய்யும் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். அடைப்பு நடவடிக்கைகளின் போது நூறாயிரக்கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அரசு நிறுவனங்களைத் தொடர்புகொள்வது அவர்கள் தடுத்து வைக்கப்படுவதற்கோ அல்லது நாடுகடத்தப்படுவதற்கோ வழிவகுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக எந்த உதவியும் பெறவில்லை. புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தப்படுவதை மேற்பார்வையிட்ட ஒபாமா ஜனாதிபதியை தொடர்ந்து பாசிச சிந்தனை கொண்ட ட்ரம்ப், குடியேற்றவாசிகளை தடுப்புக்காவலில் வைக்கவும் மற்றும் நாடுகடத்துவதற்காகவும் தன்னிச்சையாக சுற்றி வளைக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான இராணுவ பாணி குடிவரவு சோதனைகளைத் தொடங்கினார். நாடுகடத்தலுக்காக 10 முக்கிய நகரங்களில் 2,000 குடும்பங்களை குறிவைத்து 2019 ஜூலை மாதம் ட்ரம்ப் நாடு தழுவிய தேடுதல் சோதனைகளை மேற்கொண்டார்.

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பது என்பது தொழிலாள வர்க்கத்தின் ஒரு கடமையாகும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கான வலதுசாரி கொள்கைகளை நியாயப்படுத்த ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து பிரிவினரும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு பேரினவாதத்தையும் மற்றும் தேசியவாதத்தையும் திட்டமிட்டு ஊக்குவிக்கின்றனர். பல தசாப்தங்களாக காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கை மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களால் உருவாக்கப்பட்ட சமூகப் பிரச்சினைகளுக்காக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை பலிகடாவாக்க அவர்கள் முயல்கின்றனர். இக்கொள்கைகள் உண்மையில் பெரும் செல்வந்தர்களின் செல்வத்தை உயர்த்தவும் ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் போருக்கும் நிதியளிக்கவும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

1940 ஆம் ஆண்டில் நான்காம் அகிலத்தின் அறிக்கையில் லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்: "சீரழிந்து வரும் முதலாளித்துவத்தின் உலகம் மக்களால் நிரம்பிப்போயுள்ளது." நூறு கூடுதல் அகதிகளை அனுமதிப்பது பற்றிய கேள்வி அமெரிக்கா போன்ற ஒரு உலக சக்திக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறும். விமானப் போக்குவரத்து, தந்தி, தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் சகாப்தத்தில், நாட்டிலிருந்து நாட்டிற்கான பயணம் கடவுச்சீட்டுக்கள் மற்றும் குடிவரவு அனுமதிகளால் முடங்கிக் கிடக்கிறது. வெளிநாட்டு வர்த்தகம் சுருக்கமடைவதும், உள்நாட்டு வர்த்தகத்தின் வீழ்ச்சியும் அதே நேரத்தில் பேரினவாதம் மற்றும் குறிப்பாக யூத-விரோதம் கொடூரமாக தீவிரமடைவதுடன் இணைந்துள்ளது… பரந்த நிலத்தின் விரிவாக்கங்களுக்கும் மனிதனால் பூமியையும் வானத்தையும் வெற்றிகொள்ள செய்த தொழில்நுட்பத்தின் அற்புதங்களுக்கும் இடையில், முதலாளித்துவ வர்க்கம் நம் கிரகத்தை ஒரு மோசமான சிறைச்சாலையாக மாற்ற முடிந்ததுள்ளது.”

இந்த வரிகள் எழுதப்பட்ட எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், முதலாளித்துவத்தின் மீதான அவரது கண்டனம் 1940 ல் இருந்ததை விடவும் இன்று மிகவும் வலுவானதாக இருக்கின்றது. ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவமும் தேசியவாதம், இராணுவவாதம் மற்றும் தீவிர வலதுசாரி, பிற்போக்குத்தன அரசியலுக்குத் திரும்பும் அதே வேளையில், உழைக்கும் வர்க்கம் உலக அளவில் முன்பை விட ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. ஜோர்ஜ் ஃபுளோய்டின் மிருகத்தனமான பொலிஸ் கொலையால் தூண்டப்பட்ட டஜன் கணக்கான நாடுகளில் சமீபத்திய வாரங்களில் வெகுஜன பல இன ஆர்ப்பாட்டங்கள் முதலாளித்துவத்தின் கீழ் உலகெங்கிலும் பின்னணியில் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இரக்கமற்ற சுரண்டல் மற்றும் அரசு அடக்குமுறையின் பொதுவான அனுபவங்களுக்கு சாட்சியமளிக்கின்றன.

ஆளும் உயரடுக்கின் தேசியவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான விஷத்தை நிராகரித்து, உழைக்கும் மக்கள் உலக அளவில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்வர வேண்டும். துன்புறுத்தல் அல்லது நாடுகடத்தலுக்கு அஞ்சாமல் அவர்கள் விரும்பும் நாட்டில் வேலை செய்ய, வாழ, மற்றும் சமூக மற்றும் சுகாதார சேவைகளை அணுக அனைத்து தேசிய இனங்களின் தொழிலாளர்களின் உரிமைகளை அவர்கள் பாதுகாக்க வேண்டும்.

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது, சமூக சமத்துவமின்மை, முதலாளித்துவ அரசு அடக்குமுறை, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் பரவலாக அணிதிரட்டுவதன் பாகமாக மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய போராட்டம் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கால் வழிநடத்தப்பட்டு, சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்த ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கு அரசியல் அதிகாரத்தை மாற்றுவதை அதன் இலக்காகக் கொள்ள வேண்டும்.

Loading