இலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க.வுக்கு வாக்களியுங்கள்

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி இரண்டாவது இணையவழி கூட்டத்தை நடத்துகிறது

8 July 2020

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தனது இரண்டாவது இணையவழி தேர்தல் கூட்டத்தை ஜூலை 11 சனிக்கிழமையன்று மாலை 3 மணிக்கு நடத்தவுள்ளது. இந்த கூட்டம். கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆகஸ்ட் 5 நடைபெறவுள்ள பொது தேர்தலில் கொழும்பு, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் சோ.ச.க. வேட்பாளர்கள் 43 பேர் போட்டியிடுகின்றனர்.

எல்லா நாடுகளிலும் அரசாங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கங்கள் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முற்றிலும் மறுத்து வருவதன் விளைவாக, கொவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் இந்த தேர்தல் நடைபெறுகின்றது. இப்போது கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தெற்காசிய பிராந்தியம் முழுவதிலும் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகின்றது

தொற்றுநோய், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளதுடன், உலகளவில் அவர்களது சகாக்களைப் போலவே ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கமும் இலங்கையின் பெருவணிகமும் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்துவதோடு எண்ணிலடங்கா கஷ்டங்களை தொழிலாளர்கள் மீதும் கிராமப்புற ஏழைகள் மீதும் சுமத்தி வருகின்றது.

ராஜபக்ஷ சிங்கள-பௌத்த பேரினவாத குழுக்களின் ஆதரவுடன் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, அரசியலமைப்பை மாற்றுவதற்கும் பிற்போக்கு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதத்திற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற எதிர்பார்க்கிறது. இந்த வேலைத்திட்டத்திற்கும் முந்தைய ஆட்சிகளில் பெரும் வணிக சார்பு நிர்வாகங்களுக்கு முண்டுகொடுத்து மதிப்பிழந்து போன எதிர்க்கட்சிகளின் கொள்கைகளுக்கும் எந்த அடிப்படை வேறுபாடுகளும் கிடையாது. இலங்கையில் உள்ள போலி-இடது குழுக்கள் இந்த முதலாளித்துவ கட்சிகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த அரசியல் கட்சிகளுக்கு எதிராக சோ.ச.க. இந்த தேர்தலில் .போட்டியிடுகிறது. அரசாங்கத்தினதும் முதலாளிகளினதும் தாக்குதலுக்கு எதிராக போராட்டத்துக்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கதுக்கான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தின் அடிப்படையில் ஒரு வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்துவரும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. சோ.ச.க.வின் தேர்தல் தலையீடானது ஏகாதிபத்திய போர் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள எங்கள் சகோதர கட்சிகளால் முன்னெடுக்கப்படும் உலக சோசலிசப் புரட்சிக்கான.போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் மற்றும் எமது வேட்பாளர்களும் இந்த இன்றியமையாத விடயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடுவார்கள். சோ.ச.க. நடத்தும் இந்த இணையவழி கூட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.