நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் காற்றில் பரவுவதற்கான சாத்தியக்கூறு குறித்து உலக சுகாதார அமைப்புக்கு எச்சரிக்கையில்,

உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் ஒரு புதிய பாய்ச்சல் எடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய அடைப்பை தொடர்ந்து தற்காலிகமாக ஒரு மிதமான காலகட்டத்திற்குப் பின்னர், கோவிட்-19 தொற்றுநோய் ஒரு புதிய, பண்புரீதியிலான மாற்றத்துடன் பாய்ச்சல் எடுத்து வருகிறது. ஏப்ரல் மற்றும் மே நெடுகிலும் நாளொன்றுக்கு சுமார் 80,000 புதிய நோயாளிகளுடன், சிலகாலம், அந்த தொற்றுநோய் வேகமெடுக்காமல் ஒரே சீராக இருந்ததாக தெரிந்தது.

மே மாத மத்தியில், முதலாளித்துவ முதலாளிமார்கள் தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி மதிப்பை உறிஞ்சுவதை மீண்டும் தொடங்குவதற்கு அவசரப்பட்ட போது, அவர்கள் தொற்றுநோய் நடைமுறையளவில் முடிந்துவிட்டதாக அறிவித்ததுடன், வேலைக்குத் திரும்புமாறு கோரினர், மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள், பண்டக சாலைகள் மற்றும் வேலையிடங்களை மீண்டும் திறந்துவிட்டனர். இந்த கொள்கையை வேகமாக நடைமுறைப்படுத்தியவுடன், நாளாந்த கோவிட்-19 நோய்தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி, அதற்கடுத்த ஒவ்வொரு வாரமும் வேகமெடுத்து வந்துள்ளது.

நேற்று உலகளவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 12 மில்லியனைக் கடந்தது. முதல் ஒரு மில்லியன் கோவிட்-19 நோயாளிகள் ஏற்படுவதற்கு, ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை, நான்கு மாதங்கள் ஆனது. வெறும் ஐந்து நாட்களில், உலகம் கூடுதலாக ஒரு மில்லியன் நோயாளிகளைச் சேர்த்துக் கொண்டது. உலகளவில் 550,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நாளாந்த மரண விகிதம் சுமார் 5,000 இல் வலம் வருகின்றன, அதுவும் பிராந்திய மாறுபாடுகள், மெக்சிகோ போன்ற சில நாடுகளில், மற்ற நாடுகளை விட படுமோசமாக உள்ளன. கடந்த இரண்டு நாட்களில், உலகெங்கிலுமான புதிய கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 200,000 ஐ கடந்துள்ளது, அமெரிக்கா மட்டுமே புதிய ஒரு நாள் அதிகபட்ச அதிகரிப்பாக 61,848 நோயாளிகளைப் பதிவு செய்துள்ளது, ஒரு நாள் மரண எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் 5,500 க்கு உயர்ந்துள்ளது.

உலகெங்கிலுமான மருத்துவ அமைப்புகளைப் பீதியூட்டி உள்ள மற்றும் பாதித்துள்ள ஒரு பண்புரீதியிலான தெளிவான மாற்றம் உள்ளது. இந்த தொற்றுநோய் தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர்-ஜெனரல் எச்சரித்தார். இந்த தொற்றுநோய் பரவலைத் தடுப்பது சாத்தியம் என்றாலும், இந்த வைரஸைப் பரவலைக் கட்டுப்படுத்தவும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் தேசங்கள் ஒரு விரிவான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். “நாம் இன்னும் இந்த தொற்றுநோயின் உச்சத்தைக் கூட எட்டவில்லை... இந்த வைரஸ் வேகமாகவும் உயிராபத்தாகவும் உள்ளது,” என்றார். எவ்வாறிருப்பினும் அவர் வார்த்தைகளும் நடவடிக்கையும் வழமையானதையும் விட மிகவும் கனமாக இருந்தன.

கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் காற்றில் பரவ முடியும் என்பதை WHO ஒப்புக் கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்து, உலகெங்கிலும் இருந்து 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஒரு கடிதம் அந்த மருத்துவ அமைப்புக்கு அனுப்பப்பட்டது குறித்து இந்த வாரம் உலக சுகாதார அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

நோய்தொற்று ஏற்பட்ட நபர்கள் இருமும் போதும், தும்மும் போதும் அல்லது பேசும் போதும் வெளிப்படும் வைரஸ் துகள்கள் பரவுவதே மற்றவர்கள் நோய்தொற்றுக்கு ஆளாவதற்கான பிரதான இயங்குமுறையாக உள்ளது என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் தான். மேற்பரப்பில் தொற்றை பெறுபவர்கள் அவர்களின் கண்கள், வாய் அல்லது மூக்கைத் தொட்டால், மேற்பரப்பில் இருந்தும் நோய்தொற்று ஏற்படும். மக்கள் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருக்க விடப்பட்ட, காற்றோட்டம் குறைந்த அடைப்பான இடங்களில் இது இன்னும் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. சுவாசப் பாதையில் செல்லும் மிகப் பெரிய நீர் திவலைகள் தான் முக்கியமாக பரவல் ஏற்படுவதற்கான பாதையாக உள்ளன, இத்தகைய நீர்திவலைகளை ஒருவர் உருவாக்கியதுமே அவை வேகமாக பரவிவிடுகின்றன என்ற சேதியை உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக குறிப்பிட்டுள்ளது. இது தான் ஒருவர் ஒரு மீட்டரோ அல்லது மூன்று மீட்டரோ இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டுமென்ற அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு முக்கியமாக உள்ளது (CDC இரண்டு மீட்டர்கள் அல்லது ஆறு அடியைப் பரிந்துரைக்கிறது.)

குவின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Lidia Morawska, மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நலத்துறை பேராசிரியர் Donald K. Milton ஆகியோர் எழுதிய பகிரங்க கடிதத்தில், இது ஒரு விஞ்ஞான சஞ்சிகையில் விரைவில் பிரசுரிக்கப்பட்ட உள்ள நிலையில், கோவிட்-19 காற்றில் பரவும் சாத்தியக்கூறு இருப்பதை அங்கீகரிக்குமாறு மருத்துவ சமூகத்திற்கும், தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ அமைப்புகளுக்கும் கோரிக்கை விடுத்து 239 பேர் கையெழுத்திட்டுள்ளனர். “மூச்சு விடும் போதும், பேசும் போதும், இருமும் போதும் காற்றில் பறக்கக்கூடிய அளவிற்குப் போதுமான சிறிய நுண்மையான நீர்திவலைகளில் இந்த வைரஸ்கள் வெளியிடப்பட்டு, நோய்தொற்று ஏற்ப்பட்டவர்களிடம் இருந்து 1 இல் இருந்து 2 மீட்டர் தொலைவிற்கு செல்லக்கூடிய அபாயமிருப்பதை இதில் கையெழுத்திட்டு இருப்பவர்கள் மற்றும் ஏனைய விஞ்ஞானிகளின் ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன" என்றவர்கள் எழுதினார்கள்.

ஏறக்குறைய ஐந்து மைக்ரோமீட்டர் அளவுக்கு, சிறிய இந்த மிகச் சிறிய வைரஸ் துகள்கள் பத்து மீட்டர்கள் வரையில் பரவும், அதாவது ஒரு சாதாரண அறையின் அளவை விட அதிகமான தூரத்திற்குப் பரவும். இந்த ஆசிரியர்கள், மிக மிக நுண்மையான சுவாச மண்டல சளிக்காய்ச்சலுக்குரிய வைரஸ்களான SARS-CoV-1, SARS-CoV-2 மற்றும் நோயாளிகள் சுவாசத்தை வெளியிடும் போது கண்டறியப்பட்டுள்ள காற்றில் நிலைத்திருக்கக்கூடிய துகள்களான MERS ஆகிய இரண்டினது முந்தைய தரவுகளை அந்த ஆசிரியர்கள் மேற்கோளிடுகிறார்கள்.

அதிகபட்ச நோய்தன்மை கொண்ட நோயாளிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பில் வந்தாலும் உணவுவிடுதிகளைப் பொறுத்த வரையில் நோயாளிகளை ஆய்வு செய்வதிலிருந்து கிடைக்கும் அனுபவபூர்வ ஆதாரம் பலவீனமாக இருப்பதாக இத்தகைய கவலைகளை அவர்கள் தங்களின் கடிதத்தில் எழுப்புகின்றனர். அந்த ஆசிரியர்கள் எழுதினர், “SARS-CoV-2 இன் செயல்பாடுகள் இதேபோல தான் இருந்தன என்று எதிர்பார்ப்பதற்கு எல்லா காரணங்களும் உள்ளது,” மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்துவதில் "நுண்மையான நீர்திவலைகள் வழியாக பரவியதே முக்கியமான வழியாக உள்ளது" என்று அந்த ஆசிரியர்கள் எழுதுகின்றனர்.

WHO, பிற பொது சுகாதார நிறுவனங்கள் உட்பட, வைரஸ் துகள்களின் ஏரோசோலைசேஷன் ஒரு நோயாளியை வென்டிலேட்டரில் வைப்பது போன்ற நடைமுறைகளின் போது மட்டுமே நிகழ்கிறது என்று அடிக்கடி கூறியுள்ளது.

நோயாளியைச் செயற்கை சுவாசக் கருவியில் வைப்பது போன்ற நடைமுறைகளின் போது மட்டுமே வைரஸ் துகள்களின் பரவல் ஏற்படுகிறது என்பதை ஏனைய பொது சுகாதார அமைப்புகள் உட்பட WHO அடிக்கடி குறிப்பிட்டுள்ளது. கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மீது மட்டுமே வழிகாட்டி நெறிமுறைகள் இப்போது வரையில் ஒருங்குவிந்துள்ளன என்றாலும், குறிப்பாக காற்றோட்ட வசதி இல்லாத மக்கள் நெருக்கம் மிகுந்த சூழல்களில் காற்றின் வழி பரவுவதைத் தடுக்க அதுபோன்ற நடைமுறைகள் போதுமானதில்லை.

“இதுபோன்ற நிலைமைகளில் நடத்தப்பட்ட விசாரணைகளில், வேகமாக பரவிய பல சம்பவங்களில்" காற்றின் வழி பரவுவது "மட்டுமே சரியான விளக்கமாக தெரிகிறது" என்பதை அந்த ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். வூஹானில் கடல் உணவு சந்தை, தென் கொரியாவில் ஒரு தேவாலயம், ஆக்லஹோமா துல்சாவில் ட்ரம்ப் அரசியல் பேரணி போன்ற நிகழ்வுகள் இதில் உள்ளடங்குகின்றன, இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அங்கே கோவிட்-19 தொற்றுநோய்களின் அதிகரிப்பு இருந்தன. துல்சா உள்ளாட்சி, அப்பிராந்தியத்தில் முன்கண்டிராத அளவில் திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்ட 261 புதிய நோயாளிகளையும், செவ்வாய்கிழமை 206 நோயாளிகளையும் பதிவு செய்தது.

இந்த வைரஸ் பரவும் பாதையானது, காற்றின் வழியாகவும் அத்துடன் சேர்ந்து சுவாசத்திலிருந்து வெளிப்படும் நுண்ணிய நீர்திவலைகள் மற்றும் வைரஸ் தாங்கிச்செல்லும் பொருட்கள் மூலமாக பரவுகிறது என்றாலும், தற்போதைக்கு தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் முந்தைய வழிமுறைகள் மீது மட்டுமே ஒருமுகப்பட்டுள்ளது. காற்றில் பரவுவதைத் தடுப்பதற்கான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளைப் பொறுத்த வரையில், அந்த ஆசிரியர்கள் எழுதுகிறார்கள், “போதுமான நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும் (சுத்தமான வெளிப்புற காற்று வழங்கப்பட வேண்டும், காற்றின் மறுசுழற்சியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்) குறிப்பாக பொதுமக்கள் கூடும் கட்டிடங்கள், வேலையிட சூழல்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில். அறைக்குள்ளேயே வழங்கும் சுவாசம், அதிநவீன காற்று சுத்திகரிப்பான், கிருமிகளை அழிக்கும் அல்ட்ராவயலெட் கதிர்கள் போன்ற காற்றில் பரவும் தொற்று நோயை அழிக்கும் முயற்சிகளுடன் சேர்ந்து துணைக்கு பொதுவான காற்றோட்டமும் வழங்கப்பட வேண்டும். கூட்ட நெரிசலை, குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் பொது கட்டிடங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும்.” WHO அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்ட வேலைகளைச் செய்து வருகிறது, புதிய வழிகாட்டி நெறிமுறைகளை ஸ்தாபிக்க தயாரிப்பு செய்து வருகிறது.

தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப செய்ய நிர்பந்திக்கவும், இளைஞர்களை பள்ளிக்குத் திரும்ப செய்ய நிர்பந்திக்கவும், பொதுவாக, மக்களை "வழமையான நடவடிக்கைகளுக்கு" திரும்ப செய்வதைக் கோரவும் எந்த நாடுகளின் அரசாங்கங்கள் பேரார்வத்துடன் இருக்கின்றனவோ அங்கெல்லாம் காற்றில் பரவுவதற்கான சாத்தியக்கூறு என்பது குறிப்பிடத்தக்க பாதிப்புகளைக் கொண்டிருக்கும். காற்றில் பரவுவதைத் தடுப்பதற்கு இன்னும் அதிக தொற்று தடுப்புமுறைகளும், வேலையிடங்கள் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தி வைக்க ஓர் ஒருமித்த முயற்சியும் அவசியமாகின்றன. வாகனத்துறை தொழிலாளர்கள் தற்போது பணிக்குத் திரும்பி உள்ளார்கள், இறைச்சிப் பதப்படுத்தும் தொழிலாளர்களும் விரைவிலேயே ஆசிரியர்களும் மாணவர்களும் அசௌகரியமான மற்றும் நெரிச்சலான வகுப்பறைகளுக்குத் திரும்ப இருக்கிறார்கள் இவர்களின் உடல்நலன் ஆபத்திற்கு உட்படுகிறது, உட்படும். அவர்களின் வீடுகள் மற்றும் குடும்பங்களுக்குள், அதுவும் குறிப்பாக வயதான உறவினர்களிடேயே அவர்கள் வைரஸைப் பரப்புவார்கள் என்பதால் இந்த தொற்றுநோயின் சாத்தியமான புதிய தன்மைகள் வெளிப்படக்கூடும். சந்தேகத்திற்கிடமின்றி இந்த நோயின் அதிகபட்ச சுமையை தொழிலாள வர்க்கமும் வறிய ஏழைகளும் முகங்கொடுக்கிறார்கள், முகங்கொடுப்பார்கள்.

தொழிலாளர்கள் உடனடியாக அத்தியாவசியமல்லாத பணிகளை நிறுத்த வேண்டுமென கோரும் புதிய கண்டுபிடிப்புகள், கட்டுப்பாட்டை இழந்து வரும் ஒரு நிலைமையைக் குறைக்க விரிவான பொது மருத்துவ நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறது. வேலையிடங்களிலும் வீடுகளிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொழிலாளர்கள் கடுமையான காற்றின் வழி பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்க தொழிலாளர்கள் சுதந்திரமான மருத்துவ மையங்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளை அணுக வேண்டும். நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு அவசியமான சேவையாக மருத்துவக் கவனிப்பு பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் வேகமான உயிர்காக்கும் சிகிச்சைகளை உறுதிப்படுத்த கட்டணமின்றி சேவை வழங்குவதை உடனடியாக தொடங்க வேண்டும். இதற்கு, பழமைவாத, தாராளவாத மற்றும் சமூக-ஜனநாயக கட்சிகள் என அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் பெருநிறுவனங்களின் தொங்குதசையாக செயல்படும் தொழிற்சங்கங்கள் உட்பட தற்போதைய தலைமையிலிருந்து சுதந்திரமாக தொழிலாளர்கள் திட்டமிட்டு தலையீடு செய்வது அவசியமாகும்.

Loading