இந்தியா 1 மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை நெருங்கிய போதிலும் மோடி அரசாங்கம் தொடர்ந்து சமூக பரவலை மறுத்து வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோய்த்தொற்றுகளின் கொடிய மைல்கல்லை இந்தியா நெருங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாரதீய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கமும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன என்று தொடர்ந்து பெருமை பேசுகின்றன. இந்த அரசாங்கத்தின் பிரச்சாரத்தின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்று, சுகாதார அமைச்சகம் மற்றும் இந்தியாவின் உயர்மட்ட தொற்றுநோயியல் நிறுவனம் ஆகியவற்றின் தொடர்ச்சியான அறிவிப்புகள் தான் அதாவது உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஆபத்தான வைரஸின் குறிப்பிடத்தக்க சமூக பரவுதல் எதுவும் கிடையாது.

அரசாங்க அதிகாரிகள் அதை ஒப்புக்கொள்ள விரும்புகிறார்களோ இல்லையோ, உண்மை என்னவென்றால், கொரோனா வைரஸ் இந்தியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது, மேலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அதிகரிப்பு நாட்டின் பாழடைந்து போன சுகாதார அமைப்பினால் கையாள முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

ஜூலை 11, 2020 சனிக்கிழமையன்று, இந்தியாவின் மும்பையில் உள்ள தியோனார் சேரியில் COVID-19 அறிகுறிகளுக்காக, சுகாதாரத் தொழிலாளர்கள் குடியிருப்பாளர்களை கணக்கிடுகின்றனர். (AP Photo/Rajanish Kakade)

COVID-19 நோய்த் தொற்றுகளை பொறுத்தவரை, இந்தியா இப்போது உலகின் மூன்றாவது மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக இருக்கிறது.

வியாழக்கிழமை நிலவரப்படி, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, COVID-19 தொற்றுகள் 968,876 ஐ எட்டியுள்ளன. முந்தைய 24 மணி நேரத்தில், 32,695 புதிய நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன, இது இன்றுவரை மிகப்பெரிய ஒற்றை நாள் ஏற்றம் ஆகும். இதற்கிடையில் இறப்பு எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 606 பேர் உயிரிழந்தனர். ஜூலை 10 முதல் புதிய நோய்த்தொற்றுகள் ஒரு நாளைக்கு 25,000 க்கு மேல் உள்ளன, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளில் ஒரு புதிய சாதனையை உருவாக்குகின்றன.

100,000, COVID-19 தொற்றுகளை எட்ட இந்தியாவுக்கு 109 நாட்கள் பிடித்திருந்தாலும், அடுத்த 57 நாட்களில் மொத்த நோய்த்தொற்றுகள் ஒன்பது மடங்கு அதிகரித்தன, ஏனெனில் அரசாங்கம் ஊரடங்கு நடவடிக்கைகளை அகற்றுவது உச்சத்திற்கு சென்றது. கடந்த நான்கு நாட்களில் மொத்தம் 800,000 தொற்றுகள் 900,000 ஐ எட்டின.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி குறைவாக உள்ளது. ஆனால் சாதாரண காலங்களில் கூட இறப்பு புள்ளிவிவரங்களை குறைவாகப் பதிவு செய்வதில் இந்திய அதிகாரிகள் கெட்ட பெயர் பெற்றவர்கள். உண்மையான இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டாலும் கூட, ஜூலை 11 முதல் ஒவ்வொரு நாளும் இந்தியா 500 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே தங்கள் உயிர்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து எந்த அக்கறையும் ஒரு அரசாங்க ஆலோசகரும் காட்டாத நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைப் போலவே, மோடியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொற்றுநோய்கள் குறித்த தனது அரசாங்கத்தின் செயல்திறனைப் பற்றி கசப்பான பொய்களைக் கூறுகிறார், இந்தியாவின் பிரதம மந்திரி ஆளும் உயரடுக்கின் குற்றவியல் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கையின் முதன்மை செய்தித் தொடர்பாளராக மாறியுள்ளார், இது 2 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அப்பட்டமாக ஒரு அரசாங்க ஆலோசகர் மதிப்பிட்டுள்ளார். மனித வாழ்வின் மீது பெருநிறுவன இலாபத்திற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தக் கொள்கையின் கொடூரமான அழிவை மறைக்க, மோடியும் அவரது அமைச்சர்களும் அப்பட்டமான பொய்களை நாட வேண்டும். இந்தியாவில் எந்தவொரு சமூக பரவலும் நடைபெறவில்லை என்ற கூற்று இவற்றில் முக்கியமானது.

கடந்த சனிக்கிழமை ஒரு கூட்டத்திற்கு தலைமை வகித்த பின்னர் ’’கொரோனா வைரஸ் கட்டுக்குள் வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் வெற்றிகரமான முன்முயற்சிகளையும் கூட நாங்கள் எடுத்துரைத்தோம்" என்று மோடி அறிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்தன் ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம், வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவலாகி வரும் நிலையில் பொருளாதாரத்தை "மீண்டும் திறப்பதில்" முன்னோக்கி செல்வதே, வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுவதற்குப் பதிலாக, மோடி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார் "பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் மீண்டும் வலியுறுத்த வேண்டும்" என்று அவர் அறிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்கம் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் திறந்துவிடும் அதேவேளை குறைந்த ஊதியம் பெறும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பாதுகாப்பற்ற பணியிடங்களுக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்துகையில், வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொறுப்பு தனிநபர் மீது சுமத்தப்படுகிறது – இந்த நாட்டில் பல நூறு மில்லியன் பேர் சுத்தமான நீர் கிடைக்காமலும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்க முடியாத சேரிகளிலும் வாழ்கின்றனர்.

சில மாநிலங்கள் தொற்றுகளின் எழுச்சி காரணமாக சில வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதிலும், தொழில்துறை பணியிடங்கள் மற்றும் பிற பணியிடங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகின்றன - உண்மையில் அவை ஊக்குவிக்கப்படுகின்றன; அரசாங்கம் உடந்தையாக இருக்கையில் அதிகாரபூர்வமாக உத்தரவிடப்பட்ட அற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை முதலாளிகள், மீறி செயல்படுகின்றனர்.

தொற்றுநோய்க்கு எதிர்ச்செயல் ஆற்றும் வகையில் மோடி அரசாங்கம் எடுத்த முயற்சிகள் எதுவும் "வெற்றிகரமானவை" என்று நிரூபிக்கப்படவில்லை. மார்ச் மாத இறுதியில் ஒரு சில மணிநேர அறிவிப்புடன் மோசமாக தயாரிக்கப்பட்ட அவரது ஊரடங்கு சட்டம் ஒரு பேரழிவாகியது. வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கத் தவறியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே இரவில் வறுமையில் மூழ்கினர். ஊரடங்கு காலம், இந்தியாவின் நாள்பட்ட நிதியாதாரம் அற்ற சுகாதார அமைப்பை வலுப்படுத்தவோ அல்லது தொற்றுநோய்களின் பரவலை தடுக்க பரந்த சோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் முறையை பலப்படுத்தவோ பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, ஊரடங்கு COVID-19 ஐ தொலைதூர பகுதிகளுக்கு பரப்புவதற்கான வழிமுறையாக மாறியது, ஏனெனில் மோடி அரசாங்கம் பல மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பல வாரங்களாக சுகாதாரமற்ற முகாம்களில் அடைத்து வைத்திருந்து, பின்னர் அவர்களை வைரஸுக்கு சோதிக்காமல் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பியது தான்.

ஜூலை 9 ஆம் தேதி வரை, COVID-19 சமூக பரவல் நிலையை இந்தியா அடையவில்லை என்று அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறியது. சமூக பரவல் கட்டத்திற்குள் இந்தியா நுழைந்திருக்கிறதா என்று கேட்ட போது மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு கடமை அதிகாரி ராஜேஷ் பூஷண் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பதில் கூறினார், “இன்றும் கூட, யூனியன் சுகாதார அமைச்சர், இந்தியா இன்னும் சமூக பரவல் நிலையை எட்டவில்லை என்று தெளிவாகக் கூறினார். சில புவியியல் பகுதிகளில், உள்ளூர்மயமாக்கப்பட்ட திடீர்ப்பெருக்கம் ஏற்பட்டுள்ளன. ”

தனது கருத்தை நிரூபிக்க ஒரு தோல்வியுற்ற முயற்சியில் ஈடுபட்ட பூஷண், "49 மாவட்டங்களில் (733 இல்) மட்டும் 80 சதவீத COVID-19 தொற்றுக்கள் உள்ளன" என்று வலியுறுத்தினார். எனவே, "இதுபோன்ற சூழ்நிலையில், செயலில் உள்ள தொற்றுகளின் நெருங்கிய தொடர்புகளை நீங்கள் கண்டறிந்து கண்காணிக்க முடியும், சமூக பரவல் குறித்து பேசுவது நியாயமில்லை." 49 மாவட்டங்கள் பல கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே மற்றும் பெங்களூரு போன்ற நகர்ப்புறங்களை உள்ளடக்கியது என்ற உண்மையை அவரது கூற்று வசதியாக புறக்கணிக்கிறது. இவர்களுக்கிடையில், டெல்லி மற்றும் மும்பையில் மட்டும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

அரசாங்க அதிகாரிகளின் முட்டாள்தனமான மற்றும் அறியாமை கூற்றுக்கள் அவர்களின் தனிப்பட்ட திறமையின்மையின் பிரதிபலிப்பு என்ற எளிதான ஒன்றல்ல, மாறாக, மோடி அரசாங்கமும் அதன் மாநில சகாக்களும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான எந்தவொரு விஞ்ஞான அணுகுமுறையையும் இழிவாக நிராகரித்தனர், எனவே அவர்கள் இந்தியாவின் மில்லியனர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் இலாபங்களையும் செல்வத்தையும் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். பெருவணிகத்திற்கான பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கு அவர்கள் பரந்த சோதனைகளை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கும், தொடர்புகளை கண்டுபிடிப்பதற்கும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றால், அப்படியே இருக்கட்டும்!

உண்மை என்னவென்றால், மிகவும் அக்கறையான விஞ்ஞானிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் சமூக பரவலின் ஆபத்தான அளவுகள் பற்றி எச்சரித்து வருகின்றனர். ஒரு முக்கிய வைராலஜிஸ்ட் டாக்டர் ஜேக்கப் ஜான், ஜூன் தொடக்கத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் பரவலான சமூக பரவலை சுட்டிக்காட்டினார். அரசாங்க தரவுகளின்படி, இந்தியா 0.3 சதவிகிதம் அல்லது 0.4 சதவிகித மக்களை மட்டுமே சோதித்துள்ளது என்ற உண்மையை டாக்டர் ஜான் எடுத்துரைத்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தரவைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், 83 மாவட்டங்களில் உள்ள புள்ளிவிவரங்கள் “ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன - 0.73 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளுக்கு கடந்த காலங்களில் வெளிப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டியுள்ளன, அது சமூக பரவல் இல்லையென்றால் வேறு எப்படி அவர்கள் வெளிப்படுத்தப்பட்டார்கள்.

ஜூன் 16 அன்று The Wire க்கு அளித்த பேட்டியில், வாஷிங்டனை தளமாகக் கொண்ட நோய் இயக்கவியல் மையத்தின் இயக்குநரும், பிரின்ஸ்டன் கூட்டாளியுமான பேராசிரியர் ரமணன் லக்ஷ்மிநாராயண், சமூகப் பரவல் இந்தியாவில் “முற்றிலும்” நடக்கிறது என்று கூறினார். அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ பயன்படுத்தப்படும் கணித மாதிரிகளை இந்தியாவுக்குப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியாவில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான தொற்றுகள் இருப்பதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 200 மில்லியனாக உயரக்கூடும் என்றும் லக்ஷ்மிநாராயண் மதிப்பிட்டார்.

COVID-19 ஆல் தூண்டப்பட்ட பிரமாண்டமான மனிதநேய நெருக்கடிக்கு மோடி அரசாங்கம் தான் முக்கிய பொறுப்பாகும் அதேசமயம் பல்வேறு மாநில அரசாங்கங்களை வழிநடத்தும் எதிர்க்கட்சிகளும் குற்றவாளிகள் தான். அவர்கள் பரிதாபகரமான சமூக நிலைமைகளின் மேல் ஆட்சி செய்கின்றனர் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முறைக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும் நிதிகள் கிடைக்காத நிலையில் வைத்துள்ளனர்.

இந்தியாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலம், வியாழக்கிழமை நிலவரப்படி 275,649 தொற்றுக்கள் மற்றும் 10,928 இறப்புகளுடன், மகாராஷ்டிரா ஆகும், அங்கு தீவிர வலதுசாரி சிவசேனா பெயரளவிலான மதசார்பற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஒரு அரசாங்கத்தை வழிநடத்துகிறது. 151,820 தொற்றுக்கள் மற்றும் மொத்தம் 2,167 இறப்புகளுடன் இரண்டாவது மோசமான பாதிப்புக்குள்ளான தென் மாநிலம் வலதுசாரி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) ஆல் நிர்வகிக்கப்படுகிறது, அதே நேரத்தில் டெல்லி, தேசிய தலைநகரம் மற்றும் மூன்றாவது மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலம் (116,993 தொற்றுக்கள் மற்றும் 3,487 இறப்புகள்) ஆம் ஆத்மி கட்சி ஆல் நிர்வகிக்கப்படுகிறது. கார்ப்பரேட் வரிகளைக் குறைப்பதற்கும் பிற "முதலீட்டாளர் சார்பு" கொள்கைகளைப் பின்பற்றுவதற்கும் பல தசாப்தங்களாக, இந்தியாவின் அரசியல் ஸ்தாபனம் வேண்டுமென்றே பொது சுகாதார அமைப்பை அடிமட்டத்திற்கு இறக்கியள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகிதம் அல்லது ஆண்டுதோறும் சுகாதாரப் பாதுகாப்புக்காக செலவழிக்கிறது.

இந்தியாவின் குற்றவியல் ஆளும் உயரடுக்கு தொற்றுநோயால் உருவாகும் உடல்நலம் மற்றும் சமூக பேரழிவைச் சமாளிக்க முற்றிலும் தவறிவிட்டது. கொரோனா வைரஸின் இடைவிடாத பரவலை நிறுத்தி, உழைக்கும் மக்கள் தொற்றுநோய்களின் அழிவுகரமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான ஒரே வழி, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான பதிலை வளர்த்துக் கொள்வதில் தான் உள்ளது. இதனை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தனது ஜூன் 23 அறிக்கையில் விளக்கியது:

தொற்றுநோய்க்கு பதிலளிப்பதற்கான கட்டுப்பாட்டை முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும். தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், இப்போது ஆபத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தொழிலாள வர்க்கத்தின் பரந்த நடவடிக்கை அவசியம். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல, அல்லது முதன்மையாக கூட இல்லை. அது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டம் பற்றிய ஒரு விஷயம் என அறிவுறுத்தியது.

Loading