முன்னோக்கு

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தொற்றுநோய் உலகளாவிய மக்களிடையே தொடர்ந்து பரவி வருகின்ற நிலையில், ஜூலை மாதம் இந்நோயினால் இதுவரையில் இல்லாத மிக அதிகபட்ச உயிரிழப்புகளின் மாதமாக இருந்தது.

கடந்த மாதத்திற்கு முந்தைய மாதம் பாதிக்கப்பட்ட 4.4 மில்லியன் மக்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் இந்நோயால் ஏழு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதத்திற்கு முந்தைய மாதத்தின் 139,000 உயிரிழப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், கடந்த மாதம் 165,000 பேர் உயிரிழந்தனர். மொத்தத்தில், உலகெங்கிலும் 18.4 மில்லியன் பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது, இன்றைக்குள் உயிரிழப்பு எண்ணிக்கை 700,000 ஐ விஞ்சிவிடும்.

இந்திய மருத்துவக்குழு தன்னார்வலர்கள், இந்தியாவின் புது டெல்லி அரசு மருத்துவமனையில், வெள்ளிக்கிழமை ஜூலை 31, 2020 இல் இந்திய-இஸ்ரேலிய கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை முகாமின் பாகமாக பஞ்சில் பரிசோதனை மாதிரிகளை எடுக்கின்றனர். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ மணீஸ் சுவரூப்)

மிக தீவிர சமூக சமத்துவமின்மையுடன் மிகப்பெரும் முதலாளித்துவ செல்வந்த நாடாகவும், மனித உயிர்களை மிகவும் மலிவாகவும் கொண்ட நாடாகவும் உள்ள அமெரிக்கா தான் இந்த உலகளாவிய பேரழிவின் மையமாக திகழ்கிறது.

அமெரிக்காவில், அங்கே ஜூலையில் இரண்டு மில்லியன் புதிய நோயாளிகள் இருந்தனர், இது ஜூன் மாத 800,000 ஐ விட அதிகமாகும், மற்றொரு மாதாந்தர அதிகபட்ச உயிரிழப்பாக 27,500 பேர் உயிரிழந்திருந்தனர். இதே வேகத்தில் இந்நோய் தொடர்ந்து கொண்டிருந்தால், அமெரிக்காவில் ஓராண்டில் 330,000 பேர் உயிரிழந்திருப்பார்கள்.

வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். Deborah Birx ஞாயிற்றுக்கிழமை CNN இன் "மாநில கூட்டாட்சி மற்ற உரை" நிகழ்ச்சியில் கூறுகையில், “இன்று நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து வேறுபட்டதாகும். அது அசாதாரணமான விதத்தில் பரவி வருகிறது,” என்று எச்சரித்தார். பின்னர் அப்பெண்மணி தொடர்ந்து கூறுகையில், இந்த தொற்றுநோய் "கிராமப்புறம் மற்றும் நகர்புறம்" இரண்டு பகுதிகளிலுமே பலமாக வேரோடியுள்ளது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இந்த பேரழிவு, நோய் பரவி கொண்டிருக்கும் வேலையிடங்களுக்குக் காலத்திற்கு முந்தியே தொழிலாளர்களைப் பலவந்தமாக திரும்ப அனுப்புவதற்கான வெள்ளை மாளிகை முனைவின் பாகமாக இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் அது கைவிட்டதன் அனுமானிக்கத்தக்க விளைவாக உள்ளது. ஏப்ரலில், அந்நாடெங்கிலுமான மாநிலங்கள் ஆலைகளை மீண்டும் திறந்த போது, அந்நாடு அதற்கு சற்று முன்னர் தான் ஒரு மில்லியன் உறுதி செய்யப்பட்ட கொரொனா வைரஸ் நோயாளிகளை எட்டியிருந்ததுடன், இந்நாடு மட்டுமே 58,000 அறியப்பட்ட உயிரிழப்புகளை நெருங்கிக் கொண்டிருந்தது.

ஏழு வாரங்களுக்கு முன்னர், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவிக்கையில், “கொரொனா வைரஸ் நோய்தொற்றுக்களின் இரண்டாம் அலை மீதான எச்சரிக்கை மணிகள்" “மிகைப்படுத்தப்படுகின்றன,” என்றார். “மிகப்பெரும் முன்னேற்றம்" செய்யப்பட்டு வருவதாகவும், அதுவே "கொண்டாட்டங்களுக்கு ஒரு காரணம்" என்றும் அவர் வாதிட்டார். அந்த தருணத்தில் நிர்வாகத்தின் "வெற்றி" 2.2 மில்லியன் கோவிட்-19 நோயாளிகளையும், 121,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி இருந்தது.

இன்று, பெருந்திரளான மக்களுக்குத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் அவலமும் நாடெங்கிலுமான உயிரிழப்புகளும் இந்நிர்வாகத்தினது விடையிறுப்புக்கு நிஜமான "சாட்சியமாக" உள்ளன. அமெரிக்காவில் 4.8 மில்லியன் நோயாளிகளுக்கும் அதிகமானவர்கள் உள்ளனர், இது ஜூன் மத்தியில் இருந்ததை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். கூடுதலாக 38,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், இது தேசியளவில் உயிரிழப்பு எண்ணிக்கையை 159,000 க்குச் சற்று குறைவாக கொண்டு வந்துள்ளது.

இதேபோல இலத்தீன் அமெரிக்காவிலும் நிலைமை பயங்கரமாக உள்ளது, அங்கே ஐந்து மில்லியன் நோயாளிகள் பதிவாகி இருப்பதுடன், 203,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பாசிசவாத ஜயர் போல்சொனாரோ தலைமையிலான பிரேசிலின் நிலைமையும் மிகவும் அபாயகரமாக உள்ளது, அவர் மீண்டும் மீண்டும் அந்த தொற்றுநோயை ஒரு "சிறிய வகை சளிக்காய்ச்சல்" என்று உதறித் தள்ளியிருப்பதுடன், அவரின் உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கைகளைச் செயலூக்கத்துடன் புறக்கணித்து, பிரேசிலின் வெடிப்பின் போக்கில் இரண்டு அதிகாரிகளை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். அந்நாடு இதுவரையில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 நோயாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது, இந்த வாரத்தில் ஏதேனுமொரு நாளில் அது உயிரிழப்புகளின் 100,000 வரம்பைக் கடந்து செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Andrés Manuel López Obrador தலைமையிலான மெக்சிகோவில், 439,000 நோயாளிகளும் 47,000 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டில் நோய்தொற்றின் பரவல் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் இரண்டிலேயுமே பரந்தளவில் குறைமதிப்பீடு செய்யப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

இதேபோல இந்தியாவிலும் இத்தொற்றுநோய் கட்டுப்பாடின்றி வடிவெடுத்துள்ளது. அங்கே ஒவ்வொரு நாளும் 50,000 க்கு அதிகமான புதிய நோயாளிகளுடன் 1.8 மில்லியன் அறியப்பட்ட நோயாளிகள் உள்ளனர். அண்மித்து 39,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை 10 இல் இந்தியாவின் மொத்த கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 794,000 ஆக இருந்த நிலையில், அதிலிருந்து தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை வரையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளை எட்டுவதற்கு அங்கே வெறும் 25 நாட்களே ஆகியிருந்தன. அந்நாட்டின் மொத்த நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானவர்கள் கடந்த நான்கு வாரங்களில் உருவாகி உள்ளனர் என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த நோய் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் குறைந்தளவுக்கு ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நாடுகள் மூன்றும் மார்ச் ஏப்ரலில் கொரொனா வைரஸ் ஐரோப்பாவில் முதன்முதலில் மேலெழுந்த போது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன, அவற்றின் வெடிப்புகளைக் குறைக்க அவை அமெரிக்காவை விட சிறப்பாக செயல்பட்டிருந்தன. ஆனால் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான அவற்றின் அரசாங்கங்களது முயற்சிகளின் விளைவாக, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜேர்மனி இப்போது சராசரியாக நாளொன்றுக்கு 600 க்கும் அதிகமான புதிய நோயாளிகளையும், பிரான்ஸ் 1,000 க்கும் அதிகமான நோயாளிகளையும் மற்றும் ஸ்பெயின் 2,000 க்கும் அதிகமான நோயாளிகளையும் காண்கின்றன.

உலகெங்கிலும், இந்நோய் வேலைவாய்ப்பின்மை, வறுமை, வீடற்றநிலைமை மற்றும் பட்டினியை எரியூட்டி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை தகவல்படி, இந்த தொற்றுநோயுடன் பிணைந்த பட்டினி ஒவ்வொரு மாதமும் 10,000 குழந்தைகளின் உயிரிழப்புக்கு இட்டுச் செல்கிறது.

ஏப்ரல் மாதம் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையில், எந்தவொரு நாடும் நம்பத்தகுந்த வகையில் "எல்லா நோயாளிகளையும் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதித்து, சிகிச்சை அளித்து, ஒவ்வொரு நோயாளின் தடத்தைப் பின்தொடர" முடியாவிட்டால், காலத்திற்கு முந்தியே அது பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கு எதிராக பலமாக எச்சரித்தது. அதே காலகட்டத்தின் போது, மூத்த அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் டாக்டர். ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கையில் வணிக நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளைக் கைவிடுவது "தேவையற்ற அவலங்கள் மற்றும் உயிரிழப்புகளை" உண்டாக்கும் என்றார்.

அதற்கு பதிலாக, வெள்ளை மாளிகையிலிருந்து கீழே இரண்டு கட்சிகளினதும் மாநில ஆளுநர்கள் வரையில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் வணிகங்களை மீண்டும் திறக்க அனுமதித்து, அந்நோய் பரவலுக்கு எரியூட்டி, அத்தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைக் கைவிட்டது. அமெரிக்க நிதியியல் செல்வந்த தட்டு மில்லியன் கணக்கான மரணங்கள் மற்றும் துயரங்கள் மீது முற்றிலும் அலட்சியமாக உள்ளது.

செல்வந்தர்களுக்குக் கையளிக்கப்பட்ட பில்லியன் அல்லது ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களைத் திரும்ப பெறுவதற்காக பெருநிறுவனங்கள் உபரி மதிப்பைத் தொடர்ந்து உறிஞ்சக்கூடிய வகையில், தொழிலாளர்களை ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு மீண்டும் பலவந்தமாக அனுப்பி, அமெரிக்கா “சமூக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்" நடைமுறை கொள்கையை ஏற்றுள்ளது.

குறிப்பாக இந்த கொள்கை அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மோசமான நிலைமையை உருவாக்கி உள்ள நிலையில், இதுவே ஒவ்வொரு நாட்டிலும் செயல்படுத்தப்படுகிறது, அங்கெல்லாம் அரசாங்கங்கள் மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதை அல்ல, மாறாக நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வவளத்தைப் பேணுவதையே பிரதான அக்கறையாக கொண்டுள்ளன.

கோவிட்-19 பேரிழவு என்பது, எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவில், முதலாளித்துவத்தின் அராஜகவாத பகுத்தறிவற்ற தன்மையின் விளைவாகும். பல தசாப்தங்களாக மருத்துவத்துறை உள்கட்டமைப்பின் சீரழிவு என்பது பொருளாதாரத்தை நிதியமயமாக்கல் மற்றும் தொழில்துறை அழிப்புடன் சேர்ந்து, வேலைகள், கூலிகள் மற்றும் ஏனைய சமூக சேவைகளின் அழிப்புடன் கூடிய ஓர் அம்சமாக உள்ளது.

உலகளாவிய ஒத்துழைப்புக்கு பதிலாக, ஒரு தடுப்பூசி உருவாக்குவதற்கான வாய்ப்பை அமெரிக்கா அதன் சொந்த ஆதாயத்திற்காக பயன்படுத்தி வருவதுடன், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்ட "மிகப் பிரமாண்டமாக பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் வழங்கக்கூடிய ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்புக்கான வினியோகங்களைப் பாதுகாக்க, உயர் பங்குகள் கொண்ட புவிசார் அரசியல் போராட்டம் மீதான நாட்டம்" என்பதில் ஈடுபட்டுள்ளது.

பெப்ரவரி 28 இல், இப்போதிருந்து ஐந்துக்கும் அதிகமான மாதங்களுக்கு முன்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு அவசரகால விடையிறுப்பை உலகளவில் ஒருங்கிணைப்பதற்கான ஓர் அழைப்பை வெளியிட்டது. நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 100,000 ஆக மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,000 ஆக இருந்த அந்நேரத்தில், ICFI எச்சரிக்கையில், “இந்த அபாயத்தை மிகைப்படுத்திக் கூற முடியாது" என்று எச்சரித்தது. இந்த தொற்றுநோயை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, ஆளும் வர்க்கம் உயிரிழப்புகள் மற்றும் சமூக சீரழிவிலிருந்து இலாபமீட்டுவதற்காகவும் தன்னை செழிப்பாக்கிக் கொள்வதற்காகவும் இந்த மருத்துவக் கவனிப்பு பேரிடரைப் பயன்படுத்தியுள்ளது.

இப்போது 18 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நோய்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர், 700,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். எழுநூறு ஆயிரம் பேர்! அவர்களின் குடும்பங்கள், நண்பர்கள், சக தொழிலாளர்கள் அனைவரும் இந்த இழப்பால் சின்னாபின்னமாகி உள்ளனர். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இது முடிவடைவதாக எதுவும் தெரியவில்லை.

முதலாளித்துவத்தின் சமூக, அரசியல் மற்றும் தார்மீக திவால்நிலைமை இதைவிட அதிபயங்கரமாக அம்பலமாக முடியாது. என்ன நடந்துள்ளதோ அதை தொழிலாள வர்க்கம் மறந்துவிடாது. முதலாளித்துவ அமைப்புமுறையின் முன்பே நிலவிய நெருக்கடியின் மீது செயல்பட்டு வரும் இந்த தொற்றுநோய், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மிகப் பிரமாண்டமான புரட்சிகர கொந்தளிப்புகளுக்கான நிலைமைகளை உருவாக்கி உள்ளது.

Loading