புனிதப்படுத்தல் ஒரு வரலாற்றுக் குற்றம்:

அயோத்தியில் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இடத்தில் இந்திய பிரதமர் மோடி இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தேசிய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்திலுள்ள அயோத்தியில் முன்னர் பாபர் மஸ்ஜித் (மசூதி) இருந்த இடத்தில் புராண இந்து கடவுளான இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலுக்கு இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி 475 வருட கால பாப்ரி மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கியது ஒரு வரலாற்றுக் குற்றமாகும், இது மோடியின் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி), விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் அதனுடன் இணைந்த இந்து மேலாதிக்க குழுக்களால் தூண்டப்பட்டு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இந்து வெறியர்களால் நடத்தப்பட்டது. இது வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பெரும்பகுதிகளில் பல வாரங்களாக வகுப்புவாத வன்முறையைத் தூண்டியது, இதன் விளைவாக 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் ஏழை முஸ்லிம்களாவர்.

இன்றைய விழா மற்றொரு கொடூரமான அரசியல் குற்றத்தின் முதல் ஆண்டுவிழாவுடன் ஒரே சமயத்தில் நடக்கும்படியாக நேரம் குறிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இன்றைய நாளில் மோடியும் அவரது பிரதான கையாளான உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இராணுவ-பாதுகாப்பு எந்திரத்தின் உயர் தலைமையின் நெருக்கமான ஒத்துழைப்புடன், ஒரு அரசியலமைப்பு சதித்திட்டத்தை மேற்கொண்டனர். இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் அரை தன்னாட்சி நிலையை இரத்து செய்ய, நிறைவேற்று ஆணையின் மூலம் இந்தியாவின் அரசியலமைப்பை சட்டவிரோதமாக மீண்டும் எழுதினர். பின்னர் அவர்கள் ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, இப்பகுதியை நிரந்தர மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்தனர்.

இந்த சர்வாதிகார நடவடிக்கைகள் குறித்த பரந்தளவிலான மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது மோடி அரசாங்கம் ஒரு மாத கால முற்றுகையை திணித்தது, அதனை பரவலான ஊரடங்குகள், குற்றச்சாட்டு இன்றி பெருமளவில் மக்களை தடுப்புக்காவலில் வைத்தல், மேலும் செல்போன் மற்றும் இணைய சேவையை நிறுத்தி வைத்தல் மூலமாக திணித்தது. மக்கள் கோபத்தின் வெடிப்புக்கு அஞ்சி, இந்த நடவடிக்கைகளில் பல இன்றைய ஆண்டுவிழாவிற்கு முன்னதாக மீண்டும் திணிக்கப்பட்டுள்ளன.

பாபர் மஜீத் இருந்த இடத்தில் ஒரு ராம் கோயில் கட்டுவதும், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தின் மீது தடையற்ற இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதும் பாஜக மற்றும் அதன் கருத்தியல் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். இன் பல பத்தாண்டு கால வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் மையமாக இருந்து வந்துள்ளது. ராம் கோயில் கட்டுமானத்தின் உத்தியோகபூர்வ தொடக்கவிழாவும் ஜம்மு-காஷ்மீர் இந்திய யூனியனுடன் "முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டதன்" ஓராண்டு விழாவையும் ஒரே சமயத்தில் நிகழ்த்தி அதனை இந்தியாவின் "வலிமையை நிலைநாட்டல்" என்ற ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி இருப்பதாக எக்காள முழக்கம் போட பயன்படுத்த எண்ணியுள்ளது. இல்லையெனில் இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்றுவதற்கான பாஜக-ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க மோடி விரும்புகிறார், அங்கே முஸ்லிம்களும் பிற சிறுபான்மையினரும் துன்பத்தில் வாழ்வார்கள்.

COVID-19 தொற்றுநோய்க்கு அதன் அழிவுகரமான பதில் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளிடையே பாரிய கோபத்தையும் எதிர்ப்பையும் தூண்டுகிறது. அரசாங்கம் அவசரமாக மோசமான முறையில் திணித்த பத்து வார கால COVID-19 ஊரடங்கு மற்றும் அதற்கு அடுத்ததாக பணிக்கு திரும்பும்படி முன்னெடுத்த பிரச்சாரம் ஆகியவை சுகாதார மற்றும் சமூக-பொருளாதார பேரழிவை உருவாக்கியுள்ளன. கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்துவிட்டனர் மற்றும் பல நூறு மில்லியன் மக்கள் தங்கள் அற்ப வருமானங்களும் குறைக்கப்பட்டதை காண்கின்றனர்.

இதற்கிடையில், இந்தியா முழுவதும் தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஜூன் 8 ஆம் தேதி மோடியின் "ஊரடங்கு தளர்த்தல்" உத்தியோகபூர்வமாக தொடங்கியபோது, இந்தியாவில் 250,000 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றுகள் மற்றும் 7,200 இறப்புகள் இருந்தன. இன்று, இரண்டு மாதங்களுக்குள், உத்தியோகபூர்வ தொற்றுகள் கிட்டத்தட்ட நான்கு மடங்காக 1.85 மில்லியனாகவும், இறப்புகள் ஐந்து மடங்கு அதிகரித்து 38,938 ஆகவும் அதிகரித்துள்ளன.

தொற்றுநோய் பரவுவது மற்றும் பொருளாதாரத்தை "தொடங்குவது" குறித்த முயற்சிகள் தொடர்பாக பரந்த மக்கள் எதிர்ப்பை முகம் கொடுத்துள்ள நிலையில் ஒரு புதிய அலை "முதலீட்டாளர் சார்பு" நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலமும், பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்பும் படி தள்ளுவதன் மூலமும் மோடி அரசாங்கம் அதன் இந்து மேலாதிக்க நிகழ்ச்சி நிரல் இரட்டிப்பாகிறது. அதன் குறிக்கோள் தொழிலாள வர்க்கத்தை குழப்பி பிளவுபடுத்துவது மற்றும் அதன் எதிரிகளை அச்சுறுத்துவதற்கும் பயமுறுத்துவதற்கும் அதன் பாசிச தளத்தை அணிதிரட்டுவதுமாகும்.

இன்றைய விழா, கடந்த நவம்பரில் இந்தியாவின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நேரடி விளைவாகும், அது பாபர் மஸ்ஜித்தின் அழிவை செல்லுபடியாக்கியது. நீதிமன்றத்தின் சொந்த வேகமான உத்தரவுகளை மீறி - அதை திட்டமிட்டவர்களுக்கு, சர்ச்சைக்குரிய இடத்தின் முழு சொத்துரிமையையும் வழங்கி வெகுமதி அளித்தது. உண்மையில், நீதிமன்றம், "தேசிய நல்லிணக்கம்" என்று ஒரு நடவடிக்கையை ஆத்திரமூட்டும் வகையில் பிரகடனப்படுத்தும் போது பாபர் மசூதியின் இடிபாடுகளில் ஒரு ராம் கோயில் கட்டுவதை மேற்பார்வையிட பாஜகவுக்கு அதிகாரபூர்வமாக "உத்தரவிட்டது".

இந்த வெட்கக்கேடான தீர்ப்பு, இன்னும் பெயரளவிலான மதசார்பற்ற இந்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் இந்து வகுப்புவாதத்துடன் எந்த அளவிற்கு பிணைந்துள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பாஜகவின் வெளிப்படையான ஸ்தாபக அரசியல் எதிரிகள் என்று கருதப்படுபவர்களின் எதிர்வினை பிற்போக்குத்தன்மையில் எந்த வகையிலும் குறைந்தவை அல்ல என்பது மிகவும் அப்பட்டமாக உள்ளது.

பாஜகவுக்கு ஒரே இந்திய போட்டியாளராக இருக்கும் மற்றும் 2014 ஆம் ஆண்டு வரை இந்திய முதலாளித்துவத்தின் தேசிய அரசாங்கத்திற்கான விருப்பமான கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, கோயில் கட்டுமானத்திற்கென அதிகாரபூர்வமாக பொறுப்பு வழங்கப்பட்ட ராம் மந்திர் அறக்கட்டளையை ஆவேசமாக தாக்கியது. கோயிலின் பூமி பூஜை (தரையை உடைக்கும்) திட்டத்தில் கலந்து கொள்ளும்படி கட்சி தலைமைக்கு அழைப்பு விடவில்லை என்றும் அந்த நிகழ்ச்சியை "பிரத்தியேக பாஜக-ஆர்எஸ்எஸ் விழாவாக" மாற்றுகிறது என்றும் குற்றம் சாட்டியது.

ஒருவர் பின் ஒருவராக காங்கிரஸ் தலைவர்கள், ராம் கோயிலுக்கான நற்சான்றை பாஐக திருடுவதாக குற்றம் சாட்டினர், அதற்கு பாபர் மஸ்ஜித்தை இடிப்பதற்கு இந்து பேரினவாத இயக்கத்துடன் சேர்ந்து சதி செய்த கட்சியின் கேவலமான பதிவை ஆதாரமாக காட்டினர். மிகவும் மோசமாக, 1992 டிசம்பரில் நரசிம்மராவ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் அரசாங்கம் கூடவே நின்று வரலாற்று அயோத்தி மசூதியை அழிக்க அனுமதித்தது, அதை தரை மட்டமாக்குவதற்கான பாஜக-ஆர்எஸ்எஸ் சதித்திட்டம் குறித்து முன்னறிவிப்பு இருந்த போதிலும் கூட.

காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான சல்மான் குர்ஷித், "அனைத்து அரசியல் பிரிவுகளிலுமிருந்து மக்கள் இராமருக்கு மரியாதை செலுத்துவதற்காக அழைக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று புகார் கூறினார். தனது பங்கிற்கு, காங்கிரஸ் பிரதமர்களான ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தியின் மகள் மற்றும் பேத்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் கொள்ளு பேத்தியுமான காங்கிரஸின் மூத்த தலைவரான பிரியங்கா காந்தி “இராமர் அருளால், இந்த விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார சங்கமத்தை வளர்க்கட்டும்” என்று அறிவித்தார்.

அயோத்தியில் ஒரு ராம் கோயில் கட்டும் பிரச்சாரம் வெகுஜன ஆதரவைப் பெறுகிறது என்ற பாஜக-ஆர்எஸ்எஸ் கூற்றை மத்திய பிரதேசத்தின் முன்னாள் காங்கிரஸ் முதல் அமைச்சர் கமல்நாத் ஊக்கப்படுத்தினார். "நாட்டு மக்கள் நீண்ட காலமாக இதை எதிர்பார்த்தார்கள், விரும்பினர்" என்று கமல் நாத் கூறினார். "கோயிலின் கட்டுமானம் ஒவ்வொரு இந்தியரின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படுகிறது."

ராம் கோயில் இயக்கத்திற்கு ராஜீவ் காந்தியின் ஆதரவை சுட்டிக்காட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் ஆர்வமாக இருந்தார். அவர் ட்வீட் செய்தார்: "எங்கள் நம்பிக்கையின் மையம் இறைவன் ராமர்!". . அதனால்தான் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ஒரு பெரிய கோயில் கட்டப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ராஜீவ் காந்தியும் அதையே விரும்பினார். ”

இந்த வீணான பிற்போக்குத்தனமான தெளிவற்ற நிலையை தொடர்ந்த சிங், உள்துறை அமைச்சர் ஷா சமீபத்தில் COIVID-19 க்கு சாதகமாக சோதனை செய்ததற்கான காரணம், ராம் கோயிலை தொடங்குவதற்கான ”நல்ல நாள்” ஆகஸ்ட் 5 அல்ல என்று ஒரு இந்து அடிப்படைவாத சாமியாரின் எச்சரிக்கையை பாஜக தலைவர்கள் மீறியது தான் என்றார்.

இன்றைய மோசமான இந்து மேலாதிக்க கொண்டாட்டத்திற்கு காங்கிரஸின் எதிர்வினை அது பல தசாப்தங்களாக இந்து வலதுடன் கூட்டாக சதி செய்தது மற்றும் சாதி மற்றும் வகுப்புவாத பிளவுகளை கருவியாக பயன்படுத்தியதில் இருந்தும் எழுகிறது. ஒன்றுபட்ட மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கும் தனது சொந்த ஜனநாயக திட்டத்தை கைவிட்டு, காங்கிரஸ் தலைவர்களான நேரு மற்றும் எம்.கே. காந்தி ஆகியோர் தெற்காசியாவிலிருந்து வெளியேறும் பிரிட்டிஷ் காலனித்துவ பிரபுக்களுடன் இணைந்து 1947 ஆம் ஆண்டு துணைக் கண்டத்தின் வகுப்புவாதப் பிரிவினையை - இந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா மற்றும் ஒரு முஸ்லீம் பாகிஸ்தானாகப் பிரித்து – அமல்படுத்தினர்.

இந்த பதிவு இருந்தபோதிலும், இரட்டை ஸ்ராலினிச கட்சிகள் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை நீண்ட காலமாக பெருவணிக காங்கிரஸ் கட்சியை பாஜகவுக்கு எதிரான "மதச்சார்பற்ற அரணாக" ஊக்குவித்தன.

இன்றைய தொடக்க விழாவிற்கு பதிலளிக்கும் விதமாக, சிபிஎம் அரசியல் குழு “அயோத்தி சர்ச்சை” என்று அது அழைப்பதற்கு கடந்த நவம்பரில் உச்சநீதிமன்றத்தின் பிற்போக்குத்தனமான தீர்ப்பிற்கு ஆதரவாக ஒரு அறிக்கை விடுத்தது. அயோத்தியில் பூமி பூஜை விழா பாஜகவால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்ற காங்கிரஸின் புகாரை அது எதிரொலிக்கிறது, இதனால் ஒரு ராம் கோயில் கட்டும் வெற்றிகரமான பிரச்சாரத்திற்கு மோடியும் ஷாவும் முழு "பொறுப்பு" எடுக்க முயற்சிக்கவில்லை என்றால், டிசம்பர் 6, 1992 இன் வகுப்புவாத குற்றத்தை புனிதப்படுத்துவதற்கும் முடிப்பதற்கும் ஆட்சேபனைக்குரியது எதுவுமில்லை என்று அர்த்தப்படுத்துகிறது.

பாஜக மற்றும் இந்து வலதுசாரிகளின் எழுச்சிக்கு மத்திய அரசியல் பொறுப்பு ஸ்ராலினிஸ்டுகளை சார்ந்தது. பல தசாப்தங்களாக, அவர்கள் தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு பிற்போக்கு சாதி அடிப்படையிலான பிராந்திய முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் "பாசிச பாஜக வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது" என்ற பெயரில் இந்திய குடியரசின் அழுகிப் போன "ஜனநாயக" அமைப்புகளுக்கு முறையே கீழ்ப்படிய செய்வதை நியாயப்படுத்தினர். 1989 முதல் 2008 வரை, ஸ்ராலினிஸ்டுகள் அடுத்தடுத்து அரசாங்கங்களை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர், அவற்றில் பெரும்பாலானவை காங்கிரஸ் கட்சி தலைமையிலானவை. இது இந்திய ஆளும் உயரடுக்கின் புதிய தாராளமய “சீர்திருத்த” நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியது மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகளைப் பின்பற்றியது. மேலும், அவர்கள் அரசாங்கத்தை உருவாக்கிய அந்த மாநிலங்களில் சிபிஎம் மற்றும் சிபிஐ இதேபோல் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை பின்பற்றி வருகின்றன. பரந்தளவிலான வறுமை குறித்து பெருகிவரும் மக்களின் கோபம், எப்போதும் விரிவடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, தொடரும் ஊழல் ஆகியவற்றை பா.ஜ.க. இழிந்த முறையில் சுரண்டுவதற்கான கதவுகளை திறந்து விட்டன.

மோடி மற்றும் பாஜக அரசாங்கம் மற்றும் இந்திய ஆளும் உயரடுக்கின் வர்க்கப் போர் நிகழ்ச்சி நிரல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தீங்கு விளைவிக்கும் மூலோபாய கூட்டு ஆகியவற்றிற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு உள்ளது. ஆனால் இந்த எதிர்ப்பு ஒரு புதிய அரசியல் பாதையை காண வேண்டும். இதற்கு ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ உள்ளிட்ட முதலாளித்துவ ஸ்தாபகத்தின் அனைத்து கட்சிகளுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதும், கிராமப்புற உழைப்பாளர்களையும் ஒடுக்கப்பட்டவர்களின் அனைத்து பிரிவுகளையும் அதன் பின்னால் அணிதிரட்டுவதற்கான போராட்டமும் இதற்கு தேவைப்படுகிறது. அது ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் மற்றும் சர்வதேச சோசலிசத்திற்காக போராட வேண்டும்.

Loading