சோசலிச சமத்துவக் கட்சியின் பாதுகாப்பு பிரச்சாரத்தில் இணைந்துகொள்ளுங்கள், இந்த இணையவழி மனுவில் கையெழுத்திடுங்கள்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)
8 August 2020

சோசலிச சமத்துவக் கட்சியின் பாதுகாப்பு பிரச்சாரத்தில் இணைந்துகொள்ளுங்கள், இந்த இணையவழி மனுவில் கையெழுத்திடுங்கள்

பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்காகப் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) மூன்று முன்னணி உறுப்பினர்களை, ஜூன் மாத பிற்பகுதியில், இராணுவ புலனாய்வு அதிகாரிகள், சட்டவிரோதமாக விசாரித்ததற்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்துள்ள பாதுகாப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திறந்துவிடப்பட்டுள்ள இந்த இணையவழி மனுவில் கையெழுத்திடுமாறும் அதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் நாங்கள் எமது வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல், இந்த இராணுவத் தலையீட்டிற்கு எதிரான கண்டன அறிக்கைகளை தொடர்ந்து சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பி வைக்குமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம்.