மிருகத்தனமான பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததை அடுத்து விஸ்கான்சின் ஆளுநர் கெனோஷாவில் தேசிய பாதுகாப்பு படையை நிலைநிறுத்துகின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விஸ்கான்சினின் கெனோஷாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு அடையாளம் தெரியாத கெனோஷா காவல்துறை அதிகாரி நிராயுதபாணியான மூன்று குழந்தைகளின் ஆபிரிக்க-அமெரிக்க தந்தையான 29 வயதான ஜாக்கோப் பிளேக்கை அருகில் வைத்து ஏழு முறை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. மூன்று, ஐந்து மற்றும் எட்டு வயதுடைய அவரது குழந்தைகள் பின்புறத்தில் அமர்ந்திருந்த தனது வாகனத்திற்குள் பிளேக் நுழைய முயன்றார்.

பல சமூக ஊடக தளங்களில் 24 மணி நேரத்திற்குள் மில்லியன் கணக்கான மக்கள் வீடியோவைப் பார்த்துள்ளனர். முடிவில்லாத பொலிஸ் மிருகத்தனத்தை எதிர்த்து எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கியதால், கெனோஷாவிலும் மற்றும் நாடு முழுவதிலும் சமூக கோபத்தின் ஒரு பெருவெடிப்பை கட்டவிழ்த்துவிட்டது.

மில்வாக்கியில் உள்ள Froedtert மருத்துவமனையில் அவரது மகன் உடல்நிலை மோசமாக இருப்பதை பிளேக்கின் தந்தை திங்களன்று உறுதிப்படுத்தினார்.

ஆகஸ்ட் 23, 2020 அன்று விஸ்கான்சினின் கெனோஷாவில் ஜாக்கோப் பிளேக்கை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோவின் பதிவு

மினியாபோலிஸ் பொலிஸால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இது பரந்துபட்ட பல்லின மற்றும் பலகலாச்சார எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்டது. முதலாளித்துவ அரசியல்வாதிகளால் "கறுப்பின மக்கள் கவனிக்கப்படுவர்" என்று அறிவிக்கப்பட்ட போதிலும், சீர்திருத்த வாக்குறுதிகள் மற்றும் முழந்தாளிட்ட பொலிஸ் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் ஒற்றுமைக்காக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தபோதிலும், வர்க்க ஆட்சியின் ஒரு கருவியான காவல்துறையின் கொலைகள் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக 1,000 இனை தாண்டியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் இந்த ஆண்டு இதுவரை 651 அபாயகரமான துப்பாக்கிச் சூடுகளை பதிவு செய்துள்ளது.

பிளேக்கின் துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களிலேயே விஸ்கான்சின் நீதித்துறை திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, இந்த சம்பவம் குறித்த அறிக்கையை 30 நாட்களுக்குள் அரசவழக்குத்தொடுனருக்கு வழங்குவதற்கான நோக்கத்துடன் அவ்வமைப்பு துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை வழிநடத்தும் என்று அறிவித்தது. "எது பற்றி குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகள் பொருத்தமானவை என்றால்" வழக்குத்தொடுனர் ஒரு தீர்மானத்தை எடுப்பார் என்றது.

அடையாளம் தெரியாத இரண்டு கெனோஷா பொலிஸ் அதிகாரிகள் நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணையின் முடிவுகள் நிலுவையில் உள்ளன, இது சாட்சி அறிக்கைகளிலும் சமூக ஊடக ஒளிப்பதிவு காட்சிகளிலும் தங்கியிருக்கின்றது.

கெனோஷா செய்தி யின் படி, உடல் கேமராக்களைப் பயன்படுத்தாத 440 சட்ட அமுலாக்க நிறுவனங்களில் நகரத்தின் காவல் துறையும் ஒன்றாகும். 2022 ஆம் ஆண்டு வரை உடல்கேமராக்களைப் பெறுவதற்கு இத்திணைக்களம் திட்டமிடப்படவில்லை, மேலும் திணைக்களம் அவற்றை முறையாகப் பயன்படுத்தும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜனநாயகக் கட்சி ஆளுநர் டோனி எவர்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது திங்களன்று செய்தியாளர் சந்திப்பின் போது லெப்டினன்ட் கவர்னர் மண்டேலா பார்ன்ஸ் இனால் எதிரொலிக்கப்பட்டது. அது பொலிஸ் வன்முறையின் வர்க்கத் தன்மையை மூடிமறைக்கவும், துப்பாக்கிச் சூட்டை இனரீதியாகவும் முன்வைக்க முயன்றது, “இனவெறி எங்கள் மாநிலத்திலும் எங்கள் நாட்டிலும் உள்ளது" என்று குற்றம்சாட்டியது.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் நவீன அமெரிக்க குற்றவியல் நீதி அமைப்பின் முன்னணி காரணகர்த்தாவுமான ஜோ பைடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவில்லாத பொலிஸ் கொலைக்கு ஒரு தீர்வாக "இதயத்திற்கு பதிலாக காலில் சுட்டுங்கள்” என்று பரிந்துரைத்தார். அதேபோல் "முழு மற்றும் வெளிப்படையான விசாரணை” மற்றும் “முறையான இனவெறியை அகற்றுவதற்கான” முயற்சிகளுக்கும் அழைப்புவிட்டார்.

பொலிஸ் பயங்கரத்தின் தொற்றுநோயைத் தடுக்க எதுவும் செய்யாத ஒன்றான கோடைகாலத்தில் எவர்ஸ் இனால் முன்மொழியப்பட்ட தொடர்ச்சியான மசோதாக்கள் பற்றி முடிவெடுக்க ஆகஸ்ட் 31 அன்று சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டக் கோரி எவர்ஸ் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இந்த நடவடிக்கைகள் "மாநிலம் தழுவிய பலாத்காரத்தை பயன்படுத்துவதற்கான கொள்கை", கழுத்துபிடிகளுக்கு தடை மற்றும் மேலதிக "மோதல் தவிர்ப்பு" பயிற்சிக்கு அழைப்பு விடுக்கின்றன.

அதே நேரத்தில், விஸ்கான்சின் தேசிய காவல்படையிலிருந்து 125 பேரை கெனோஷாவிற்கு "உள்கட்டமைப்பைக் பாதுகாப்பதற்காகவும், எங்கள் தீயணைப்பு வீரர்களும் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக" அனுப்பப்பட்டதாக எவர்ஸ் அறிவித்தார். "மற்றவர்கள்" என்று அவர் காவல்துறையினரைத்தான் குறிப்பிடுகிறார். இன்றிரவு ஊரடங்கு உத்தரவை மீறும் போராட்டக்காரர்களை அடக்குவதற்கும் கைது செய்வதற்கும் இராணுவம் காவல்துறைடன் நெருக்கமாக செயல்படும்.

வேலையின்மை விகிதம் 9.9 சதவிகிதமாகவுள்ள தென்கிழக்கு விஸ்கான்சினில் வறிய நிலையில் உள்ள தொழிற்துறை அழிக்கப்பட்ட நகரத்தில் பதட்டங்கள், திங்களன்று நாள் முழுவதும் கத்தியின் விளிம்பில் இருந்தது. நகரத்தின் பொது பாதுகாப்பு கட்டிடத்தில் மேயர் ஜான் அன்டாராமியனுடன் மதியம் செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், பொலிஸ் மிருகத்தனத்தின் மற்றொரு காட்சியாக அவ்விடம் மாற்றப்பட்டது. செய்தி மாநாடு முடிந்ததாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்டிடத்திற்குள் நுழையக் கோரி வந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தை கலவர போலீஸ் மிளகு கண்ணீர்ப்புகை தெளித்து கலைத்தது.

திங்கள்கிழமை மாலை பின்னர், கலவரக் காவலில் இருந்த போலீசார், இரவு 8 மணிக்குப் பின்னர் நகரின் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகை, இரப்பர் தோட்டாக்கள் மற்றும் மிளகு பந்துகளை வீசினர். ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தது. காவல்துறைக்கு உதவியளிக்க தேசிய காவலர்களின் கவசவாகனங்கள் நிறுத்தப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை சூட்டிற்கு வழிவகுத்த நிகழ்வுகள் இன்னும் மூடிமறைக்கப்பட்டு காணப்படுகின்றன. ஏனெனில் அதிகாரிகள் உத்தியோகபூர்வ நியாயப்படுத்தலை உருவாக்கி பொதுமக்களின் கோபத்தை கலைக்க முற்படுகிறார்கள். இதில் தெரிந்த விஷயம் என்னவென்றால், நகரின் வடக்குப் பகுதியில் 40 வது தெரு மற்றும் 28 வது அவென்யூவின் மூலையில், மாலை 5:11 மணியளவில் சூடு நடந்தது. மாநில காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு "உள்ளூர் சம்பவத்திற்கு" பதிலளிக்கும் வகையில் போலீசார் அனுப்பப்பட்டனர். இருப்பினும், காவல்துறையை அழைத்தவர் யார் என்பது தற்போதும் தெளிவாகத் தெரியவில்லை. காவல்துறையினர் பிளேக்குடன் ஏன் தொடர்பு கொண்டனர் என்பதும் தெரியவில்லை.

சாட்சிகளும் பிளேக்கின் வழக்கறிஞருமான பெஞ்சமின் க்ரம்ப், பாதுகாப்புக் காவலராகப் பணியாற்றும் பிளேக், வயது வந்த இரண்டு பெண்களுக்கு இடையிலான சண்டையை விலக்க முயன்றதாக சாட்சியமளிக்கின்றனர். தனது மகள்களுடன் அருகில் வசிக்கும் ஸ்டெல்லா லண்டன், இந்தச் சம்பவம் ஒரு கீறப்பட்ட கார் தொடர்பாக ஆரம்பித்தது என்றும், காவல்துறையினருக்கு அதை காட்டியதும், பிளேக் தான் பிரச்சினைதான் என்று அவர்கள் கருதினார்கள் என்றும் அவர் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு கூறினார்.

ABC7 உடன் பேசிய லா-ரான் பிராங்க்ளின், "சில பெண்கள் சண்டையிடுவதை" கண்டதாகக் கூறினார். பிராங்க்ளின் பின்னர் “ஒரு மனிதர் சண்டையை விலக்க முயன்றார். அவர் தனது குழந்தைகளை நோக்கி திரும்பியபோது, அதிகாரி இந்த நபரை ஏழு முறை சுட்டார்" என்றார்.

பிளேக்கின் வருங்கால மனைவி Laquisha Booke, பிளேக் நிராயுதபாணியாக இருந்ததாக ABC7 இடம் கூறினார். "ஆயுதம் இல்லாத அது போன்ற ஒருவரை இவ்வாறு நடத்துவதில் அர்த்தமில்லை, பின்னால் உள்ள குழந்தைகள் கத்திக்கொண்டிருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

Jacob Blake (இடது) (நன்றி: The Office of Ben Crump)

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, உள்ளூர் பொலிஸ் நிலையத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும்போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கைது செய்யக் கோரிய, நூற்றுக்கணக்கானவர்களின் முன்னால் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அதிகாரிகளைச் சுற்றி ஒரு கூட்டம் விரைவாக கூடியது.

பொலிஸ் நிலையத்திற்கு வந்ததும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல்லின ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர். பின்னர் இரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளுக்கு முகங்கொடுத்தனர். போராட்டக்காரர்களின் பாதையைத் தடுக்க குப்பை வாகனங்களைப் பயன்படுத்த போலீசார் முயன்றனர். இருப்பினும், இரவானதும் இவ்வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கெனோஷா கவுண்டி பொது பாதுகாப்பு கட்டிடத்திற்கு வெளியே தெருக்களில் தங்கியிருந்தபோது, இரவை "நீதி இல்லை, அமைதி இல்லை" என்ற கூக்குரல்களால் நிரப்பினர்.

அவசரமாக இரவு 10:15 மணி திணிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவை மீறி நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிகளில் தொடர்ந்து இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் முயற்சியில் SWAT குழுக்கள் மற்றும் கலகப் பிரிவு போலீசார் மற்றும் நகர்ப்புற தாக்குதல் வாகனம் ஆகியவை நிறுத்தப்பட்டன. பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் இரப்பர் தோட்டாக்களை இரவு 1மணிக்கு பின்னரும் அணிவகுத்துச் சென்றோர் மீது சுட்டனர்.

கெனோஷாவைத் தவிர, வார இறுதியில் பல அமெரிக்க நகரங்களில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.. இதில் விஸ்கான்சினில் மாடிசன்; கென்டக்கி இல் லூயிஸ்வில்; மிச்சிகனில் டெட்ராய்ட்; ஓரிகான் இல் போர்ட்லாண்ட்; லூசியானாவில் லாவாயட் ஆகியவை அடங்கும். 31 வயதான Trayford Pellerin ஒரு ஷெல் எரிவாயு நிலையத்திற்கு வெளியே லூசியானா மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். Pellerin எரிவாயு நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது பல பொலிஸ் அதிகாரிகள் அவர் மீது 11 தடவைகள் சுட்டதால் அவர் இறந்தார்.

ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி நடந்து வருவதாக தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஒரு கைபேசி ஒளிப்பதிவில், காவல்துறையினர் நடந்தும் வாகனங்களிலும் பின்தொடரும்போது Pellerin எரிவாயு நிலையத்தை நோக்கி நடந்து செல்வதைக் காணலாம். Pellerin கதவை அடையும்போது, பல ஆயுதங்களிலிருந்து குண்டுகள் சுடப்படுகின்றன.

சுட்டதை படம்பிடித்த ரிக்காஷா மொண்ட்கோமெரி, Pellerin சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு ஒரு மின் அதிர்ச்சி கருவியால் பொலிஸ் தாக்கியதை கண்டதாகக் கூறினார். பிளேக் மீதான துப்பாக்கிச் சூட்டைப் போலவே, அதிகாரிகளை எதிர்கொண்ட எவருமே மிகக் குறைந்த உடல் ரீதியான அல்லது வன்முறையை சந்திக்கவில்லை. ஆனாலும் இருவருமே கொலைகார பலத்தை சந்தித்தனர்.

சூட்டைப் பற்றிய செய்தி பரவியதால், லூசியானாவின் நான்காவது பெரிய நகரத்தில் வார இறுதி மற்றும் திங்கள் வரை போராட்டங்கள் நடந்துள்ளன. கலவரக் கவசங்களை தலைமுதல் கால்வரை அணிந்துகொண்டு, அணிவகுப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் புகை குண்டுகளை வீசத் தொடங்கிய பொலிஸாரின் கலைந்துபோகுமாறு கூறிய உத்தரவுகளை மறுத்த மூன்று எதிர்ப்பாளர்கள் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை மாலையில், கிட்டத்தட்ட 200 ஆர்ப்பாட்டக்கார்கள் லாஃபாயெட் நகர மன்றத்தில் இறங்கி, “திரும்பிப்போ, சுட வேண்டாம்!” என்று கோஷமிட்டனர்.

Loading