முன்னோக்கு

ஆகஸ்டின் இலாபங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 தொற்றுநோயால் கடந்த மாதம் அமெரிக்காவில் 30,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதே நேரத்தில் நிறுவனங்கள் வேலையின்மை, பசி மற்றும் வறுமை ஆகியவற்றின் மத்தியில் பாரிய பணிநீக்கங்களை மேற்கொண்டன.

அதே நேரத்தில், அமெரிக்க பங்குச் சந்தை 1986 ஆம் ஆண்டிலிருந்து அதன் மிகப் பெரிய மாதாந்த அதிகரிப்பைப் பதிவுசெய்தது. மூன்று பெரிய அமெரிக்க பங்குச் சுட்டெண்களும் மார்ச் நடுப்பகுதியில் சரிந்ததில் இருந்து தொடர்ந்து ஐந்து மாதங்களுக்கு உயர்ந்துள்ளன. S&P 500 index இன் அடையாள குறியீடு 65 விகிதத்தால் அதிகரித்து 1938 க்கு பின்னர் தொடர்ச்சியாக 5 மாத அதிகரிப்பை கண்டது.

கடந்த மாதம் அமசன் தலைவர் ஜெஃப் பெசோஸின் செல்வம் 200 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. டெஸ்லா பங்கு மதிப்பால் உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமாகி, அதன் சந்தை மூலதனம் 465 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதன் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க்கின் தனிப்பட்ட செல்வம் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமானது. ஆப்பிள் 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மூலதனத்துடன் உலகின் முதல் நிறுவனமாக ஆனது.

மார்ச் மாதத்தில் பெடரல் ரிசர்வ் முக்கிய நிறுவனங்களுக்கு பிணை எடுப்பதில் இருந்து, ஆப்பிளின் பங்கு இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் டெஸ்லாவின் பங்கு ஆறு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் வோல் ஸ்ட்ரீட் மேலதிக கொடுப்பனவுகளின் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது "K-வடிவ மீட்பு" என்று அழைக்கப்படும் வடிவத்தை எடுத்துக்கொள்கிறது. இதில் மிகப்பெரிய பெருநிறுவன குழு ஒன்று பாரிய இலாபங்களை அனுபவிக்கிறது. இது பங்கு விலைகளில் அதிகரிப்பின் மூலம் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் பெரும்பாலான பொருளாதாரம் தேக்கமடைகிறது.

1914 ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போர் வெடித்தபோது ஆகஸ்ட் மாதம் துப்பாக்கிகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது ஒரு நிகழ்ச்சிப்போக்கின் தொடக்கத்தை குறித்தது. இது ஆயுத உற்பத்தியாளர்கள் இறப்பு மற்றும் அழிவுக்கு மத்தியில் மில்லியன் கணக்கான இலாபங்களை ஈட்டியதைக் கண்டது. இது போன்ற ஒன்று முன்னர் ஒருபோதும் அவர்கள் காணததாகும்.

அதேபோல், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய COVID-19 தொற்றுநோய், சமூகத்தின் உயர்மட்டத்திற்கு முன்னொருபோதுமில்லாத செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்காக முதலாளித்துவ அரசு அனைத்து தனது கருவிகளும் அணிதிரட்டப்படுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

ஆகஸ்டில் பாரிய பங்கு விலை அதிகரிப்பிற்கு இரண்டு உடனடி காரணங்கள் உள்ளன. முதலாவதாக, பெடரல் ரிசர்வ் பணவீக்க அபாயத்தை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதில் ஒரு நீண்டகால மாற்றத்தை மேற்கொண்டது. இது மிகக் குறைந்த வட்டி விகிதங்களை நிரந்தரமாக உறுதி செய்யும் செய்யும் நோக்கத்தை கொண்டது.

"சராசரி" பணவீக்க விகிதத்தை இரண்டு சதவிகிதமாக நோக்கமாகக் கொண்ட அதன் அடிப்படை நாணயக் கொள்கை கட்டமைப்பை மாற்றுவதாக கடந்த வாரம் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு, பணவீக்கம் தாக்கி இது இரண்டு சதவிகிதத்தை தாண்டினாலும் வட்டி விகிதங்களை உயர்த்துவதைத் தவிர்க்கக்கூடும் என்பதாகும். இது சொத்து வாங்குதல்கள் மூலம் நிதிச் சந்தைகளில் தொடர்ந்து பணம் செலுத்த அனுமதிக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், Wall Street Journal கூறியது போல், “எப்போதும் குறைந்த வட்டிவிகிதங்கள்.” என்பதாகும்.

ஆனால் அதைவிட முக்கியமானது மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட CARES சட்டத்தின் கீழ், வேலையற்ற அமெரிக்க தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாராந்திர 600 டாலர்களை, நீடிக்கப்பட்ட வேலையின்மை நலனைக் குறைத்தாகும். இச் சட்டத்தை ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் தாரளமாக காலாவதியாக போக அனுமதித்தது. வரி மற்றும் செலவு செய்வதற்கான காங்கிரஸின் பிரத்தியேக அரசியலமைப்பு அதிகாரத்தை தவிர்த்து, ட்ரம்ப் கடந்த மாதம் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, வாராந்திர வேலையற்றோருக்கான உதவித்தொகையை வழங்க அனுமதித்தது; ஆனால் இந்த நடவடிக்கை பெரும்பாலும் ஒரு அடையாள நடவடிக்கையாகவே இருந்தது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை.

ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவுடன் ட்ரம்ப் நிர்வாகம், நிறுவனங்களுக்கு பிணை வழங்குவதற்காக சுமார் 2 ட்ரில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட உதவிகளைத் துண்டித்துவிட்டது. அதே நேரத்தில், மத்திய வங்கி 4 ட்ரில்லியன் டாலர்களை நிதி அமைப்பினுள் உட்செலுத்தி, ஒவ்வொரு நிதி சந்தையிலும் ஒரு முதுகெலும்பாக செயல்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு கொலைகார தாக்குதலுடன் சேர்ந்து வருகின்றன. ட்ரம்ப் நிர்வாகத்தின் தலைமையில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் கொள்கை, இலாபக் குவிப்பு தொடர முடியும் என்பதற்காக தொழிலாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கைக்கு என்ன ஆபத்துகள் இருந்தாலும் மீண்டும் பணிக்குத் தள்ளப்படுவது என்பதாக உள்ளது.

எதிர்வரவிருக்கும் வாரங்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு உட்பட வறுமையை எதிர்கொள்ளும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் தலைவிதி புறக்கணிக்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடென் இந்த வாரம் அவர் ஆற்றிய ஒரு முக்கிய உரையில் அவசரகால வேலையின்மை நன்மைகளை குறைப்பதைக் குறிப்பிடக்கூட கவலைப்படவில்லை.

ஏனென்றால், மத்திய ஆட்சி உதவியைக் குறைப்பது ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் சேவை செய்யும் பெருநிறுவனங்களின் மற்றும் நிதிப் பிரபுத்துவத்தின் நலன்களுக்கு நேரடியாக உதவுகிறது.

தொற்றுநோய்க்கு வழிவகுத்த காலகட்டத்தில், தொழிலாளர் சந்தை "நெருக்கமாக" மாறி வருவதாக கவலைகள் பெருகின. அந்த சிக்கலை தீர்க்க COVID-19 வெடிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தற்காலிக பணிநீக்கங்கள் என அறிவிக்கப்பட்டதை நிரந்தரமாக்குவது, அத்துடன் பதவியில் இருப்பவர்களுக்கு ஊதியங்களைக் குறைத்தல் மற்றும் அவர்களின் சுரண்டலை தீவிரப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வழிகளை இது திறந்துள்ளது.

வோல் ஸ்ட்ரீட்டில் ஊக களியாட்டம் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆற்றலையும் வலிமையையும் குறிக்கிறது என்று ட்ரம்ப் பாராட்டினாலும், சந்தைகளின் எழுச்சி அதன் வலிமையைக் குறிக்கவில்லை, ஆனால் பலவீனத்தையே காட்டுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவம் அமெரிக்க டாலரின் வலிமையை நம்பியிருந்தது. ஆனால் மத்திய வங்கி முடிவில்லாமல் மலிவான பணத்தை வழங்குவதன் மூலம் அமெரிக்க டாலர் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில், உலக இருப்பு நாணயமாக அமெரிக்க டாலரின் நீண்ட ஆயுளைப் பற்றியும், முழு சர்வதேச நாணய அமைப்பின் ஸ்திரத்தன்மை குறித்தும் “உண்மையான கவலைகள்” இருப்பதாக கோல்ட்மேன் சாச்ஸ் எச்சரித்தது. ஏனெனில் அரசாங்கங்கள் தங்கள் வெற்று காகித நாணயங்களுக்கு fiat currencies மாறிவிட்டன. இந்த எச்சரிக்கைகள் மாதத்தில் இருந்து அதிகரித்துள்ளன.

பெருகிவரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் ஒன்றிணைப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தை மையமாகக் கொண்ட சமூக எதிர்ப்பின் வளர்ச்சியை அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொள்கின்றது. ஒரு ஒட்டுண்ணி தன்னலக்குழுவின் வர்க்க நலன்களை அடிப்படையாகக் கொண்ட நெருக்கடிக்கு பதிலளிக்க ஆளும் வர்க்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நெருக்கடியை அதிகரிப்பதன் விளைவை மட்டுமே கொண்டுள்ளது.

இதுவரை, தொற்றுநோய்க்கான பதில் ஆளும் வர்க்கத்தின் சமூக தனிச்சிறப்புகளால் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் மற்றொரு சமூக சக்தி காட்சியில் நுழைகிறது. அதுதான் ஆளும் உயரடுக்கின் வேலைக்கு திரும்பும் பிரச்சாரத்திற்கு எதிராக பெருகிய முறையில் போராட்டத்திற்கு வரும் தொழிலாள வர்க்கமாகும்.

COVID-19 தொற்றுநோய்க்கு முதலாளித்துவத்தின் படுகொலையான பதில், இந்த திவாலான சமூக ஒழுங்கை முழு உலகின் கண்களுக்கு முன்பாக அம்பலப்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் போராட்டத்திற்குள் நுழைகையில், முதலாளித்துவ வர்க்கத்தை கையகப்படுத்துவதற்கும் சமூகத்தை சோசலிச அடித்தளத்தில் மறுசீரமைப்பதற்குமான கோரிக்கையை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

Loading