அமெரிக்க மரண எண்ணிக்கை 200,000 ஐ எட்டுகையில், ட்ரம்ப் சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கத்திற்கு அழைப்பு விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்கிழமை, அமெரிக்கா கோவிட்-19 தொற்றுநோயின் 200,000 உயிரிழப்புகளின் வரம்பை எட்டிய அந்நாளில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த வைரஸ் கட்டுப்பாடின்றி பரவுவதை அனுமதிக்கும் வகையில், "சமூக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான" அமெரிக்க அரசாங்கத்தின் நடைமுறையில் உள்ள கொள்கையைப் பகிரங்கமாக பாதுகாத்தார்.

“சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கம்" என்பதற்கு பதிலாக "சமூக மனோபாவம்" என்ற வார்த்தையைப் பிரதியீடு செய்து வெளிப்படையாக தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்னதாக, ட்ரம்ப் டவுன் ஹால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், “உங்களுக்கு சமூக நேயெதிர்ப்பு சக்தி உருவாக்கப்படும்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “சமூக மனோபாவம் போலவே. அது இருக்கப் போகிறது—அது சமூகளவில் அபிவிருத்தி செய்யப்படும், இது நடக்கவிருக்கிறது,” என்றார். இதன் விளைவாக இந்த தொற்றுநோய் "காணாமல்" போய்விடும் என்றவர் தெரிவித்தார்.

“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையைப் பகிரங்கமாக பாதுகாப்பதில், ட்ரம்ப் மறைத்து வைத்திருந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்திவிட்டார். உண்மையில் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கமானது இந்த வைரஸைக் குறைத்துக்காட்டுவது, பரிசோதனைகள் குறைப்பு, சாத்தியமானளவுக்கு விரைவாக தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்தல் ஆகிய அவரின் முயற்சிகளுக்கு அடியில், இந்த தொற்றுநோய்க்கு அவர் அரசாங்க விடையிறுப்பில் பிரதான கோட்பாடாக இருந்துள்ளது.

கோவிட்-19 க்கு விடையிறுக்கும் ஒரு மூலோபாயமாக, சமூக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் என்ன வாதிடுகிறார்கள் என்றால், போதுமானளவுக்கு இந்த தொற்று ஏற்பட்டதும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நோய் பரவுல் தானாகவே குறைந்து விடும் என்ற வாதத்தின் அடிப்படையில், மக்களிடையே இந்நோய் சுதந்திரமாக பரவ அனுமதிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கின்றனர்.

ட்ரம்ப் சமீபத்தில் கோவிட்-19 ஆலோசகராக நியமித்த டாக்டர். ஸ்காட் அட்லஸ், “ஆபத்துக்கு உள்ளாகாதவர்களுக்கு இந்த நோய்தொற்று ஏற்படுவது பிரச்சினையில்லை. உண்மையில், அது நல்லதும் கூட,” என்று அறிவித்து, ஜூலையில் இந்த அணுகுமுறைக்காக தான் வாதிட்டார்.

இந்த மூலோபாயத்தின் போலி விஞ்ஞான துணைக்கருத்துக்களுக்கு மத்தியில், இதன் அர்த்தம் மில்லியன் கணக்கான உயிர்களை விலை கொடுக்கக்கூடிய ஒரு விதமான மக்கள் திட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை, முக்கியமாக வயதானவர்கள் மற்றும் நோயாளிகளை, இறக்க அனுமதிப்பதிற்குக் குறைவானதில்லை.

ட்ரம்ப் இந்த கொள்கையைத் தான் முன்னெடுத்துள்ளார், மேலும் பாப் வுட்வார்ட் வெளியிட்ட நாடாக்களில் வெளிப்படுத்தப்பட்டதைப் போல, அவர் அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்டியதுடன் திட்டமிட்டு மக்களுக்கு பொய்யுரைத்தார். ஆனால் இது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் இரண்டு கட்சியினராலும் ஆதரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதயிறுதியில், சுவீடன் அரசாங்கம் பின்பற்றி வரும் சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கும் கொள்கையைப் பாராட்டி இருந்த நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் ஃபிரெட்மன், இந்த வைரஸ் பரவலைத் தடுக்க சமூக அடைப்புகள் செய்வதை விமர்சித்திருந்ததுடன், “குணப்படுத்துதல் இந்த நோயை விட மோசமானதாக ஆகிவிடக்கூடாது,” என்று அறிவித்தார். அவர் கட்டுரையைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம், “அற்புதமான முன்மாதிரி" என்று குறிப்பிட்டு சுவீடனைப் புகழ்ந்தது.

உத்தியோகபூர்வமாக உலகின் ஒவ்வொரு அரசாங்கமும் அது சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை ஏற்று வருகிறது என்பதை மறுக்கின்றன. வெள்ளை மாளிகை செயலர் Kayleigh McEnany புதன்கிழமை கூறுகையில், “சமூக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது இங்கே வெள்ளை மாளிகையில் ஒருபோதும் ஒரு மூலோபாயமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை,” என்றார். ஸ்காட் அட்லஸ் "சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கத்தை ஒருபோதும் ஒரு மூலோபாயமாக முன்மொழியவில்லை, அல்லது ஜனாதிபதியும் அவ்வாறு கூறியதில்லை,” என்று அப்பெண்மணி தெரிவித்தார். இவை பொய்களாகும்.

இதுபோன்ற மறுத்தளிப்புகள், சுவீடன் மற்றும் பிரிட்டன் உள்ளடங்கலாக இந்த கொள்கைக்கு வக்காலத்து வாங்கும் எல்லா முன்னணி அரசாங்கங்களாலும் வெளியிடப்படுகின்றன.

பிரிட்டனில் ஜோன்சன் அரசாங்கத்திற்கான தலைமை விஞ்ஞான ஆலோசகர் சர் பாட்ரிக் வாலன்ஸ் மார்ச் மாதம் ஊடகங்களுக்குக் கூறுகையில், “ஒவ்வொருவருக்கும் அது ஏற்படாமல் தடுப்பது சாத்தியமில்லை, அது விரும்பத்தக்கதும் இல்லை ஏனென்றால் மக்களிடையே சற்று எதிர்ப்புசக்தி தேவைப்படுகிறது,” என்றார். அதன் பின்னர், அந்த அரசாங்கம், படுமோசமாக பொய் கூறி, “சமூக நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது ஒருபோதும் எங்களின் கொள்கையாகவோ அல்லது இலக்காகவோ இருக்கவில்லை,” என்று அறிவித்தது.

ஏனைய ஐரோப்பிய நாடுகள் பள்ளிகளை மூடியிருந்த அதேவேளையில் அதன் பள்ளிகளை திறந்துவிட்ட சுவீடனும் இதேபோல அது சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கும் கொள்கையைப் பின்தொடர்வதை மறுத்துள்ளது. ஆனால் கடந்த மாதம், தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் அந்நாட்டின் பள்ளிகளைத் திறப்பது துல்லியமாக ஏனென்றால் அது வைரஸ் பரவலை இன்னும் பரவலாக்க இட்டுச் செல்லும் என்று வக்காலத்து வாங்கியதைக் கசியவிடப்பட்ட மின்னஞ்சல்கள் எடுத்துக்காட்டின.

“சமூக நோயெதிர்ப்புச் சக்தி இன்னும் வேகமாக போய் சேர்வதற்காக பள்ளிகளைத் திறப்பது ஒரு முக்கிய குறிப்பாக உள்ளது,” என்று மார்ச் 14 இல் டெக்னெல் அவரின் பின்லாந்து சமதரப்பினருக்கு இரகசியமாக எழுதினார்.

உண்மை என்னவென்றால் சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கும் கொள்கை உலகெங்கிலுமான அரசாங்கங்களின் கொள்கையாக உள்ளது. அவை அனைத்தும் அது குறித்து பொய்யுரைக்கின்றன ஏனென்றால் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு நோய்தொற்று ஏற்பட அனுமதிக்கும் அவற்றின் நடவடிக்கைகள், குற்றகரமானதும், மனிதாபிமானமற்றதும் மற்றும் பாதுகாக்க முடியாததும் ஆகும்.

அரசாங்கங்கள் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான அவற்றின் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகையில், அவை இந்த நோயை செயலூக்கத்துடன் எதிர்த்து போராடி வருகின்றன என்று கூறுவதற்கான மிகவும் இற்றுப்போன முயற்சிகளையும் கூட கைவிட்டு வருகின்றன. “மருத்துவ நெருக்கடியைக் கடந்து செல்ல, நாம் இந்த வைரஸூடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்,” என்று கடந்த மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ட்வீட் செய்தார்.

முன்னாள் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அப்போட், அவரின் பங்கிற்கு, "நாம் எந்தளவு உயிரிழப்பு மட்டங்களுடன் வாழ வேண்டியிருக்கும் என்பது மீதான அசௌகரியமான கோள்விகளை முன்நிறுத்த பயிற்றுவிக்கப்பட்ட சுகாதார பொருளாதாரவாதிகளைப் போல சிந்திக்க" போதுமான அரசியல்வாதிகள் இல்லை என்றார். இந்த நோய்க்கான விடையிறுப்பானது "இயற்கை அதன் போக்கை எடுக்கையில் சாத்தியமானளவுக்கு வயதான உறவினர்களை சௌகரியமாக வைத்திருக்கும்" அந்த விதத்தில் இருக்க வேண்டும் என்றார்.

இதேபோல புதன்கிழமை, ஸ்பெயின் மாட்ரிட்டின் பிராந்திய முதல்வர், “அனேகமாக நடைமுறையளவில் எல்லா குழந்தைகளும், ஏதோவொரு விதத்தில், இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படும்,” என்று அறிவித்து, சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கத்தைத் தழுவினார்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தொழிலாள வர்க்கத்தினது அதிகரித்து வரும் ஆயுள்கால குறைவு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சிந்தனைக் குழாம்களால், பல ஆண்டுகளாக, ஒரு "பிரச்சினையாக" கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன் சிந்தனைக் குழாம் மூலோபாயம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) ஆண்டோனி எச். கோர்ட்ஸ்மனின் 2013 ஆய்வறிக்கை சாதாரண அமெரிக்கர்களின் அதிகரித்து வரும் ஆயுள்காலத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு நெருக்கடியாக முன்வைத்தார். “மத்திய அரசின் உரிமை செலவுகளின் அதிகரிப்பின் … மீது பிடியை வைத்திருக்க தவறுவதை விட அமெரிக்கா வேறெந்த வெளிநாட்டு அச்சுறுத்தலையும் முகங்கொடுக்கவில்லை,” என்று எழுதிய கோர்ட்ஸ்மன், கடன் நெருக்கடி "ஏறக்குறைய பிரத்யேகமாக பிரதான மருத்துவக் கவனிப்பு செலவுகள், சமூக பாதுகாப்பு, மற்றும் கடன் மீதான நிகர வட்டி செலவு ஆகியவற்றில் மத்திய அரசு செலவுகள் அதிகரித்து வருவதால்" உந்தப்படுகிறது என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உபரி மதிப்பு மற்றும் இலாபங்களுக்கான ஆதாரங்களாக சேவையாற்ற முடியாதவாறு தொழிலாளர்களுக்கு மிகவும் வயதானதும், அவர்களின் ஓய்வூதியங்களும் மருத்துவக் கவனிப்பு சலுகைகளும் பணத்தை உறிஞ்சி வருகின்றன, அவற்றை பெருநிறுவன கொடுப்பனவுகளுக்குச் செலுத்தவும் மற்றும் இராணுவ நிதிக்குச் செலுத்தவும் சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதே அதன் அர்த்தமாகும்.

ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து, இந்த தொற்றுநோய் மிகவும் நிஜமான நன்மைகளைக் கொண்டுள்ளது. அது பெருநிறுவன இருப்புநிலைக் கணக்கிற்கு 4 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை பிணையெடுப்புகளை வழங்கவும், பங்கு மதிப்புகளை அதிகரிக்கவும் ஒரு சாக்குபோக்கை உருவாக்கி உள்ளது. பாரிய வேலைவாய்ப்பின்மையை உருவாக்கியதன் மூலமாக, அது இறுக்கமான தொழிலாளர் சந்தையை உடைத்து, கூலிகளைக் குறைத்துள்ளது. சராசரி இறப்பு வயது 78 ஆக உள்ள நிலையில், இதன் அர்த்தம், அவர்களில் பெரும்பாலானவர்களின் ஓய்வூதிய நிதி, சமூக பாதுகாப்பு மற்றும் வயதானவர்களுக்கான மருத்துவக் கவனிப்பு ஆகியவற்றிருந்து பெறப்படும் பணத்தை இப்போது நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு கையளிக்க முடியும்.

நாடெங்கிலும் புதிய வெடிப்புகளின் அதிகரிப்பை உருவாக்கும் விதத்தில், அமெரிக்கா இப்போது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு மத்தியில் உள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பது அதிக நோய்தொற்றுக்களை உருவாக்கும் என்று குறிப்பிடும் சுவீடனின் அரசு தொற்றுநோய் நிபுணரின் மின்னஞ்சல்களின் வெளிச்சத்தில், என்ன தெளிவாகிறதென்றால் நோய்தொற்று ஏற்பட்டு அதன் விளைவாக மரணிக்கும் மக்களின் எண்ணிக்கை மீதான மதிப்பீட்டைக் வெள்ளை மாளிகை செயல்பட்டு வருவதுடன், எதையும் பொருட்படுத்தாமல் முன்நகர்ந்து வருகிறது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் குற்றகரமான கொள்கைகளின் காரணமாக இருநூறு ஆயிர மக்கள் இப்போது உயிரிழந்துள்ளனர். தற்போதைய கொள்கைகளே தொடர்ந்து கொண்டிருந்தால், மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் மற்றும் மதிப்பீட்டு பயிலகத்தின் தகவல்படி, அடுத்த மூன்று மாதங்களில் இன்னும் 215,000 பேர் உயிரிழப்பார்கள்.

இந்த பேரழிவைத் தடுக்க வேண்டுமானால், இந்த தொற்றுநோய்க்கான விடையிறுப்பை தற்போதைய பேரிடருக்குக் குற்றகரமாக பொறுப்பானவர்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுத்தாக வேண்டும். அமெரிக்காவிலும் வேறெந்த இடத்திலும், எந்த தேர்தலும் இந்த தொற்றுநோயை நிறுத்தி விடாது. ஜனவரி மற்றும் பெப்ரவரியில் இந்த தொற்றுநோயை மூடிமறைப்பதில் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியும் உடந்தையாய் இருப்பதில் இருந்து தெளிவாவதைப் போல, அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து கன்னைகளும் மனித உயிர்களை விட நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வவளத்திற்கு முன்னுரிமை கொடுக்க ஒன்றுபட்டுள்ளன.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணித்திரட்டுவதே உலகெங்கிலும் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் இல்லாதொழிப்பதற்குமான முன்நிபந்தனையாகும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

தொற்றுநோய் மரண எண்ணிக்கை 200,000 ஐ நெருங்குகையில், அமெரிக்க செல்வந்த தட்டுக்கள் அவர்களின் செல்வவளத்தால் குதூகலமடைகின்றன


[15 September 2020]

The coronavirus conspiracy: What did they know, and when did they know it?
[11 September 2020]

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுநோயின் புதிய கட்டத்தில் நுழைகிறது: ஜனவரிக்குள் 400,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளை அறிக்கை மதிப்பிடுகிறது


[9 September 2020]

Loading