இலங்கை சோ.ச.க. கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான சோசலிச வேலைத்திட்டம் பற்றி இணையவழி கூட்டமொன்றை நடத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் சமூக பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் கடைப்பிடிக்க வேண்டிய வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாட இணையவழி பொதுக் கூட்டமொன்றை நடத்துகின்றன. இந்த கூட்டம் அக்டோபர் 28, புதன்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குவதுடன் கட்சியின் உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

41 மில்லியனுக்கும் அதிகமானவர்களை பாதித்து 1.1 மில்லியனுக்கும் அதிகமானவர்களை காவுகொண்ட இந்த தொற்றுநோய், உலகளவில் வேகமாக பரவி வருகின்றது. இந்த மாதம் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கோவிட்-19 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டமை, தொற்றுநோயை தனது அரசாங்கம் கட்டுப்படுத்திவிட்டதாக கூறிக்கொண்ட இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் பிதற்றல்களை தகர்த்தெரிந்துள்ளது. பரவலின் உண்மையான அளவை அரசாங்கம் மூடிமறைத்திருந்தாலும், உத்தியோகபூர்வ தரவுகளின் படி, கொரோனா வைரஸ் தொற்று 5,811 பேரைப் பாதித்துள்ளதுடன் 2,341 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மார்ச் மாதத்தில் ஒரு சுருக்கமான மற்றும் முழுமையில்லாத ஒரு பொதுமுடக்கத்தின் பின்னர், ஏப்ரல் மாதத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் "வேலைக்குத் திரும்புமாறு" அழைக்கப்பட்டனர். சமீபத்திய நாட்களில், ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனை, வங்கிகள், போக்குவரத்து சேவைகள், துறைமுகம் மற்றும் மின்சார சபை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிசார் மத்தியிலும் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆபத்துக்களைக் குறைத்துக் காட்டுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இது பெருவணிகம் அதன் இலாபம் பெருக்கும் நடவடிக்கையை தொடர அனுமதிப்பதுடன் பெரும்பாலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன கம்பாஹா மாவட்டத்திலும் மற்றும் பல பகுதிகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தையே அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 6.8 சதவிகிதம் சுருங்கும் என்று உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளதுடன் பொருளாதாரம் கடுமையான கடன் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீது சுமத்த அரசாங்கம் முயல்கின்ற அதே நேரம் அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பை நசுக்க, சர்வாதிகார ஆட்சி முறைகளைத் தயாரிக்கிறது.

தொற்றுநோய் மற்றும் அரசாங்கத்தின் பிற்போக்கு ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் ஏற்படும் பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு இன்றியமையாத ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைப் பற்றி சோசலிச சமத்துவக் கட்சியின் இணைவழி கூட்டத்தில் கலந்துரையாடப்படும். இந்த திட்டத்திற்காகப் போராடுவது சோ.ச.க. மட்டுமே. சோ.ச.க.யில் இணையுமாறு இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அக்டோபர் 28 புதன்கிழமை இரவு 7 மணிக்கு எங்கள் இணையவழி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

கூட்ட விபரங்கள்:

திகதி மற்றும் நேரம்: அக்டோபர் 28 புதன்கிழமை, இரவு 7 மணி.

மூலம்: facebook.com/sep.lk

Loading