பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி ஜோசப் ஸ்கலிஸ் ஆற்றிய விரிவுரையின் திருத்தப்பட்ட எழுத்துப்படி

முதலில் துன்பம், இரண்டாவது கேலிக்கூத்து: மார்கோஸ், துதர்தே மற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஆகஸ்ட் 26 அன்று, பேராசிரியர் ஜோசப் ஸ்கலிஸ், சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (சி.சி.பி.) மற்றும் அதன் அரசியல் வழியைப் பின்பற்றும் பல்வேறு அமைப்புகளும்2016 இல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ துதர்தேவுக்கு வழங்கிஆதரவைப் பற்றி ஒரு விரிவுரையை ஆற்றினார். ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ்,, இராணுவ சர்வாதிகாரத்தை தினிப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது, 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும்,பி... மற்றும் ஒரு போட்டி கட்சியான பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிபினாஸ் (பி.கே.பி.) ஆகியவை மேற்கொண்ட நடவடிக்கைகளுடனான வரலாற்று சமாந்தரங்களை வெளிக்கொணர்வதன் மூலம், கட்சியின் இந்தக் கொள்கையின் வரலாற்று மற்றும் அரசியல் தோற்றத்தை ஸ்காலிஸ் ஆய்வு செய்தார்.

பெர்க்லியில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகளில் பேராசிரியரான ஜோசப் ஸ்கலிஸ், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வாளர் ஆவார். அவர், பிலிப்பைன்ஸின் நவீன புரட்சிகர இயக்கங்கள்,பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் மாற்றங்களால் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப்பட்டன மற்றும் எவ்வாறு வடிவமைக்கப்பட்டன என்விடயத்தில் குவிமையப்படுத்தி,வரலாற்றை ஆராய்வதில் அவர் நிபுணத்துவம் பெற்றவர். அவரது முனைவர் பட்டத்துக்கானஆய்வுக் கட்டுரை, புரட்சிகர தலைமைத்துவ நெருக்கடி: இராணுவச் சட்டம் மற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள், 1957-1974, என்பாதகும். அது இரண்டு ஸ்டாலினிசக் கட்சிகளானபி.கே.பி. மற்றும் சி.பி.பி.இடையேயான அரசியல் போட்டி மற்றும் 1972 இல் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் இராணுவச் சட்டத்தை திணிப்பதில் அவர்களின்வகிபாகம்பற்றிஆராய்ந்தது.

சி.பி.பி. மீதான விமர்சனங்களையிட்டு கூர்மையாக விழிப்படைந்த அதன் ஸ்தாபகர் ஜோஸ் மரியா சீசன், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், பேராசிரியர் ஸ்கலிஸை, சி...வுக்காக சம்பளத்துக்கு உளவுபார்க்கும் முகவர் என்று கண்டித்தார். ஸ்டாலினிச சி.பி.பி. செய்த காட்டிக்கொடுப்புகள் பற்றிய வரலாற்று பதிவை ஸ்தாபிப்பதன் மூலம், முனைவர் ஸ்கலிஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சேவையைச் செய்துள்ளார்.

பேராசிரியர் ஸ்கலிஸுக்கு ஆதரவாகவும் சீசன் மற்றும் சி.பி.பி.இன் அவதூறுகளை எதிர்த்தும் அறிக்கைகளை அனுப்புமாறு, WSWS அதன் வாசகர்களிடம் கேட்டுக்கொள்கின்றது.

விரிவுரையின் திருத்தப்பட்ட எழுத்துப்படி கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. காணொளியை இங்கே காணலாம். விளக்கப்படங்களையும் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

இந்த முதுகலை விரிவுரைத் தொடரை நடத்துவதற்காகவும் எங்கள் புலமையை மேம்படுத்துவதற்காகவும் வசதியளித்தமைக்காக நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு (என்.டி.யு.) நன்றி கூற விரும்புகிறேன். என்.டி.யு.வின் கல்வியற்குழுவும் பணியாளர்களும், எனக்கும் இங்கு எனது வேலைகளுக்கும் மிகுந்த ஆதரவளித்துள்ளனர்.

நான் கடந்த பத்து ஆண்டுகளாக பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றிய ஆய்வாளராக இருந்தேன். எனது கற்கைகளின் போது, எனது ஆய்வானது குறிப்பிடத்தக்க வளமான மற்றும் ஒப்பீட்டளவில் பயன்படுத்தப்படாத முதன்மை ஆதாரங்களின் தொகுப்பை கொண்டு, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அதன் கவனத்தை கூர்மைப்படுத்தியது. இந்த திட்டத்தை நான் முதன்முதலில் ஆரம்பித்தபோது, எனக்கு முன் இருந்த பல ஆய்வாளர்களைப் போலவே, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.பி.) ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை ஒரு வரலாற்றை எழுதுவேன் என்றும், எனது படைப்புகள் பெரும்பாலும் நேர்காணல் தொகுப்புகளை அடித்தளமாகக் கொண்டிருக்கும் என்றும் நினைத்தேன். இந்த செயல்பாட்டில், முந்தைய கற்கையாளர்கள் ஏற்கனவே பயணித்த பாதையையிலேயே நானும் பயணிப்பதாக உணர்ந்தேன். எவ்வாறாயினும், சமகாலத்தில் எழுதப்பட்ட பதிவுகளில் நான் தோண்டியபோது, எனது படைப்பின் மையப்புள்ளி எதுவாக இருக்கவேண்டும் என்பதை நான் கண்டுகொண்டேன். அது பல பரிமாணங்களைக் கொண்ட, முன்னர் அறியப்படாத அறிவு எல்லைகளைத் திறந்துவிட்டது.

ஜோசப் ஸ்கிலிஸின் விரிவுரை

இந்த செயல்பாட்டில், சி.பி.பி. ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து என்னால் தொடங்க முடியாது, மாறாக அதற்கும் முந்தைய காலத்துக்கு சென்று, அது ஏன் பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிபினாசில்(பி.கே.பி.) இருந்து பிரிந்தது என்ற விடயங்களையும், பிளவுக்கு முன்னர் அதன் ஆரம்பகால உறுப்பினர்கள் ஆற்றிய வகிபாகத்தையும் விரிவாக ஆராய வேண்டும் என புரிந்துகொண்டேன். அதே சமயம், எனது எழுத்தை தற்காலம் வரை தொடர்வது சாத்தியமாகது என்பதையும் நான் உணர்ந்தேன். ஆராய்வதற்கு மிக அதிகமான பரப்பு இருந்தது. அந்தவகையில், முடிவில் எனது ஆய்வு, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வாறு உருவாகின, ஒருவருக்கொருவர் மிகவிரோதமாக இருப்பவர் யார், 1972 இல் இராணுவச் சட்டத்தை திணிப்பதில் இருதரப்பினதும் வகிபாகம் என்ன ஆகியவை பற்றியதாக இருந்தது.

எழுதப்பட்டிருந்த பதிவுகள் பல்வேறுவிதமானவை: அவை துண்டுப்பிரசுரங்கள், விளம்பர பிரசுரங்கள், கையேடுகள், விஞ்ஞாபனங்கள் மற்றும் செய்திமடல்கள் ஆகும். இவற்றில் பல தேசிய ஜனநாயக இயக்கம் என்று அழைக்கப்படும் பரந்த சூழலில் பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்பட்ட அற்ப ஆயுள்கொண்ட தனி ஏட்டுப் பிரசுரங்கள் ஆகும். பல்வேறு ஆவணக் காப்பகங்களிலிருந்து கிட்டத்தட்ட 10,000 பக்கங்களை டிஜிட்டல் மயமாக்கினேன், ஒவ்வொரு ஆவணமும் எந்த நாளில் எழுதப்பட்டது என்பதை கொண்டு மறுகட்டமைக்க முயற்சித்தேன், பின்னர் அதை ஒரு பரந்த விவரணத்துக்குள் இருத்த முயன்றேன். அந்த விவரணம் சமகால செய்தித்தாள் பதிவைப் படித்து அந்த அடிப்படையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டதாகும். ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் எட்டு வெவ்வேறு தினசரி பத்திரிகைகளையும் அதே போல் ஒவ்வொரு வார இதழ்களையும் படித்தேன். இதனால்தான் எனது ஆய்வை முடிக்க இவ்வளவு காலம் ஆனது.

இன்று நான் முன்வைக்கும் தலைப்பின் மீது இவ்வளவு ஆர்வம் இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்: முதலில் துன்பம், இரண்டாவது கேலிக்கூத்து:மார்கோஸ், துதர்தேமற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள். எவ்வாறாயினும், கடந்த வாரத்தில் வெடித்த ஒரு சர்ச்சையிலிருந்து உருவாகிய விடயம் இந்த விரிவுரையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் அங்கமாக இருக்கின்றது. அதாவது பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் ஜோமா சீசன் என அழைக்கப்படும் ஜோஸ் மரியா சீசன், சமூக ஊடகங்களில் என்னை நேரடியாக தாக்கத் தொடங்கினார்.

ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 25 வரையிலான வாரத்தில், கோமாளி மூக்கு மற்றும் கோமாளி முடி, ஒரு “ஐ லவ் ட்ரொட்ஸ்கி” பொத்தான் மற்றும் வரலாற்றை சிதைக்கும் ஒரு புத்தகத்துடன், அவர் என்னைப் பற்றிய விகாரமான படங்களை வெளியிட்டார். நான் "ஒரு வெறிநோய் பீடித்த கம்யூனிச-விரோத மற்றும் ஒரு ட்ரொட்ஸ்கிஸ கல்விமானாக காட்டிக் கொள்ளும், உளவியல் யுத்தம் செய்யும் ஒரு சி.ஐ.ஏ. முகவர்" என்றும் அவர் எழுதினார். இது அவதூறானது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் ஒரு "உளவியல் போர் செய்யும் சி.ஐ..ஏ. முகவர்" என்று கூற எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை.

"ஜோசப் ஸ்கலிஸ் போன்ற வெளிநாட்டில் உள்ள மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தற்போதைய கொடூர துரோகத்தனமான, இனப்படுகொலை செய்கின்ற, கொள்ளையடிக்கின்ற மற்றும் மோசடிமிக்க துதர்தே ஆட்சி அதிகாரத்துக்கு வந்தமைக்கு ஜனநாயக சக்திகளையும், அதே போல் புரட்சிகர சக்திகளையும் குற்றம் சாட்டுவதற்கான பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்," என்றும் கூட அவர் அறிவித்துள்ளார்.

சி.பி.பி. என்னைத் தாக்குவதற்காக, 1969 முதல் இருந்து வருகின்ற அதன் முதன்மை வெளியீடான அங் பயன் பத்திரிகையின் ஒரு விசேட வெளியீட்டை அர்ப்பணித்தது. ஒரு நீண்ட நேர்காணலில், அதே ஆதாரமற்ற அவதூறுகளை மீண்டும் கூறிய சீசன், என்னை "சி.ஐ.ஏ. இடம் ஊதியம் பெறும் முகவர்" என்று குறிப்பிட்டார்.

ஜோசப் ஸ்கலிஸைத் தாக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அங் பயன் சிறப்பு இதழ் [Photo: Ang Bayan]

“ஸ்கலிஸின் கடுமையான கம்யூனிச-விரோத மற்றும் ஸ்டாலினிச-விரோத எழுத்துக்களை பற்றி நான் சில காலமாகவே விழிப்பாக இருந்திருக்கின்றேன். நான் அவரை புறக்கணித்துவிட்டேன், ஏனென்றால் அவர் ஏற்கனவே ட்ரொட்ஸ்கிஸ்டாகவும், பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் எனது எழுத்துக்களில் கவனம் செலுத்துவதற்கும், என்னைத் தாக்குவதற்கும் தவறாக சித்தரிப்பதற்கும் சி.ஐ.ஏ.வின் ஊதியம் பெறும் முகவராக தொழில் செய்கின்றார் என்பது அம்பலமாகிவிட்டது, என்று அமெரிக்க தோழர்களும் நண்பர்களும் என்னிடம் கூறியுள்ளனர்” என அவர் அறிவித்தார்.

அவர் தொடர்ந்தார் -நிச்சயமாக அவை அனைத்தையும் இங்கு எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை- ஆனால் நான் இன்னும் ஒரு மேற்கோளை குறிப்பிடுகிறேன். "ஸ்கலிஸ் ஒரு பொய்யரும் திருத்த முடியாத ஒரு ஏகாதிபத்திய சார்பு மற்றும் பிற்போக்கு கம்யூனிச-விரோத முகவர் ஆவார். உண்மையில், அவர் துதர்தே கொலைக் குழுக்களின் நலனுக்காக தகவல் கொடுப்பவர் ஆவார்.”

சீசன் எனக்கு எதிரான எந்தவொரு மோசமான குற்றச்சாட்டையும் நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. எனது ஆய்வுக் கட்டுரைகளில் அவதானம் செலுத்த அவர் எந்த தீவிர முயற்சியும் எடுக்கவில்லை. அவதூறான வாதங்களில் ஒரு தொகை சொற்களால் என்னை முத்திரை குத்துவதன் மூலம், அவர் எனது வேலையை தடுக்க முடியும் என்று நம்புகிறார் என்பது வெளிப்படையானது.

இப்போது, ஆங் பயனின் விசேட இதழின் பக்கங்களில் அவரது அடாவடித்தனம் ஒரு உண்மையான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கட்சி அதன் அரசியல் எதிரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் நீண்டகாலமாக தொடர்புடையது, மற்றும் ஒரு ஸ்டாலினிஸ்ட்டின் வாயில் "ட்ரொட்ஸ்கிஸ்ட்" என்ற பெயர் உச்சரிக்கப்படுவது, உயிர் அச்சுறுத்தலானதாகும். இந்த விஷயத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் உலகெங்கிலும் வரலாற்றின் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது.

எவ்வாறாயினும், என்னை சீசனால் அச்சுறுத்த முடியாது, அல்லது அவருடைய இழிவான அரசியல் மட்டத்தில் அவருடன் வாதிடுவதற்கு நான் தூண்டப்பட மாட்டேன். எனது வரலாற்று விரிவுரையுடன் முன்னேற நான் உத்தேசித்துள்ளேன்.

அவரது தாக்குதலின் மத்தியில், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடமிருந்து எனக்கு மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. அவர்கள் எனக்கு ஆதரவாக பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். என்னை பாதுகாக்க வந்தவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக சோசலிச வலைத்தளம் கல்வியாளர்களின் சுதந்திரம், வரலாற்று உண்மை மற்றும் எனது முனைவர் கற்கையையும் பாதுகாப்பதற்காக ஒரு அறிக்கையை வெளியிட்டது, இந்த பாதுகாப்பிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இந்த சர்ச்சை வெடிப்பதற்கு முன்னர், பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வழியைப் பின்பற்றும் பரந்த அளவிலான அமைப்புகள் அடங்கிய, தேசிய ஜனநாயக இயக்கத்துடன் தொடர்புடைய பல செயற்பாட்டாளர்கள் துதர்தே நிர்வாகத்தின் வன்முறைகளால் இலக்குக்கு வைக்கப்பட்டதற்கு பிரதிபலிக்கும் வகையில், ஒரு பகிரங்க அறிக்கையை நான் எழுதினேன். பல வாரங்களாக, தேசிய ஜனநாயக இயக்கத்தின் குறைந்தது இரண்டு முன்னணி நபர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 14 அன்று நான் வெளியிட்ட அறிக்கையைப் படிக்க விரும்புகிறேன்.

"எனது ஆய்வுகளைப் பற்றி தெரிந்தவர்கள், எனது வரலாற்றுப் பணிகள் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மற்றும் அதன் அரசியல் பாதையுடன் இணைந்த பல்வேறு அமைப்புகளதும் வகிபாகத்தை கடுமையாக விமர்சிக்கின்றன என்பதையும் அறிவார்கள்.

"இந்த விஷயத்தில் நான் வெளிப்படையாக தெளிவாக இருக்க விரும்புகிறேன்: நான் கட்சியையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் அவர்களுக்கு எதிராக அரசும் துணை ராணுவப் படைகளும் மற்றும் உளவுக் குழுக்களும் நடத்தும் தாக்குதல்களிலிருந்து எந்த சிக்கலும் இன்றி பாதுகாக்கிறேன்.

"ரன்டல் எச்சானிஸ் கொலை செய்யப்பட்டமை, பிலிப்பைன்ஸின் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலாக இருந்ததோடு அது பொலிஸ்-அரச ஆட்சியை நோக்கிய ஒரு முன்நகர்வாகும்.

"சர்வாதிகார ஆபத்துக்கு எதிரான பாதுகாப்புக்கு, அதன் சொந்த சுயாதீன நலன்களுக்காக, தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட வேண்டியது அவசியமாகும்.

"சி.பி.பி. மற்றும் அதனுடன் இணைந்த குழுக்கள் மீதான எனது எதிர்ப்பு, அடிப்படையில் அவை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை தொடர்ந்தும் எதிர்ப்பதுடன் ஆளும் உயரடுக்கின் ஏதாவதொரு பகுதியினருடனும் கூட்டணியை உருவாக்கிக்கொள்வதற்காக தொழலாளர்களின் நலன்களை எப்போதும் கீழ்ப்படுத்த முயன்று வருவதற்கு எதிரானதாகும். ஸ்ராலினிச வேலைத்திட்டமான இந்த முன்னோக்கே, கட்சியின் தலைமை துதர்தேவை தழுவுவதற்கு வழிவகுத்தது, அவர் அதிகாரத்திற்கு வர உதவியது மற்றும் சர்வாதிகார ஆபத்தை மூடி மறைத்தது.

"கட்சியின் தலைமை மற்றும் அதன் அரசியல் வேலைத்திட்டத்தின் மீதான எனது எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கானதாகும். கட்சியை நான் எதிர்க்கும் அதே அடிப்படை காரணத்திற்காக -தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்புக்காக- கட்சியுடன் தொடர்புடையவர்களை அரசினதும் அதன் துணை ராணுவ படைகளதும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதாக நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன்.”

பல நல்ல கல்வியாளர்களும் பரந்தளவு பொதுமக்களும் இதற்கு மிகவும் அன்புடன் பிரதிபலித்துள்ள போதிலும், இப்போது சீசனோ அல்லது சி.பி.பி. உடன் தொடர்புடைய வேறு எவரும் இந்த அறிவிப்பை ஒப்புக் கொள்ளவில்லை. நான் கொலைக் குழுக்களுக்கு தகவல் கொடுப்பவன் என்று சீசன் கூறுகிறார்.

துதர்தேவின் கொலைக் குழுக்கள் உண்மையில் மிகவும் அச்சுறுத்தலானவை என்பதில் சந்தேகமில்லை. துதர்தே பதவியேற்ற பின்னரே போதைப்பொருள் மீதான போர் தேசிய அளவில் தொடங்கியது.

கொலைப் படைகளால் அழிக்கப்பட்டவர்கள் மிகுந்த ஏழைகள் ஆவர். அவர்கள் சேரிப்புறங்களைச் சேர்ந்தவர்களும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களும் ஃபிஷ்பால் எனப்படும் உருண்டை விற்பனையாளர்களும் குற்றம் ஒன்றிற்காக குற்றம்சுமத்தப்படாத அற்ப குற்றவாளிகளும் ஆவர். ஒவ்வொரு இரவும் அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பிடி ஆணையின்றி பொலிசாரால் படுகொலைகள் நடத்தப்படுவதோடு, மேலும், துணை ராணுவ குழுக்கள் மற்றும் உளவுக் குழுக்களும் கூட படுகொலைகளை செய்கின்றன.

போதைப் பொருட்களுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக காவல்துறையினரால் கொல்லப்பட்டவர்களின் மிக சமீபத்திய உத்தியோகபூர்வ அரசாங்க எண்ணிக்கை 6,000 என்பதை நான் கண்டேன். எவ்வாறாயினும், காவல்துறையினரால் கொல்லப்படுவதை விட, துணை இராணுவ அமைப்புகள் மற்றும் உளவுக் குழுக்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதை பத்திரிகைகளில் வெளிவரும் வழக்கமான கணக்குகளிலிருந்து நாம் அறிவோம். எண்ணிக்கைகளை தற்போது துல்லியமாக மதிப்பிடுவது மிகவும் கடினம். பிலிப்பைன்ஸ் காவல்துறையின் உத்தியோகபூர்வ தரவுகளைப் பயன்படுத்துவதன் மூலமும் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை மதிப்பிட முடியும். அந்த எண்ணிக்கையை, துணை இராணுவக் கொலைக் குழுக்களால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காவல்துறையினரால் கொல்லப்பட்டவர்களுக்கும் இடையில் தற்போது நாம் அறிந்த விகிதத்துடன் ஒப்பிடுவதன் மூலம் மதிப்பீடு செய்ய முடியும். அத்தகைய கணக்கீட்டில் 30,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதே நமது கவனமான மதிப்பீடாக இருக்கும்.

போதைப்பொருட்களுக்கு எதிரான போரின் பெயரில் ஏழைகளுக்கு எதிரான ஒரு "இனப்படுகொலை" என இதை முத்திரையிட முடியும் என்று நான் நம்புகிறேன். போதைப்பொருட்களுக்கு எதிரான துதர்தேவின் யுத்தம் பிலிப்பைன்ஸ் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது என நீங்கள் சர்வதேச அளவில் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. எதிர்கால வரலாற்றாசிரியர்களும் சமூகவியலாளர்களும் இந்த சம்பவங்களைப் பற்றி இன்னும் ஆழமாக ஆராயும்போது, அவர்கள் மிகவும் சிக்கலான கதையை காண்பார்கள் என்று நான் நினைக்கிறேன். போதைப்பொருள் மீதான போருக்கு 80 சதவிகித ஆதரவு இருப்பதைக் கண்டறிந்த அதே ஆய்வுகள், மிகவும் அரிதாக மேற்கோள் காட்டப்பட்ட மற்றொரு புள்ளிவிபரத்தைத் தருகின்றன: 10 பேரில் 8 பேர் போதைக்கு எதிரான போரில் கொல்லப்படுவார்கள் என்று அஞ்சுகிறார்கள்.

இப்போது உங்களிடம் கருத்து கேட்கப்பட்டு, உங்கள் உயிருக்கு பயப்படுகிறீர்கள் என்று ஒப்புக்கொண்டால், அதே சமயம் போதைப்பொருட்களுக்கு எதிரான போரை நீங்கள் எதிர்ப்பதாக கூறுவீர்களா? அப்படி கூறுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? போதைப்பொருட்களுக்கு எதிரான போருக்கு எதிராக எந்தவொரு பகிரங்க அறிக்கையையும் வெளியிடுவது மரண தண்டனையாக கருதப்படலாம் என்று நான் நினைக்கிறேன். போதைப்பொருட்களுக்கு எதிரான போர் மிகவும் பிரபலமானது என்று நான் நம்பவில்லை.

சீசன் என் மீது நடத்திய பகிரங்க தாக்குதல்களில் அடங்கிய கூற்றுகளில், சி.பி.பி. துதர்தே ஆட்சியை ஆதரித்தது என நான் கூறியது “ஒரு வெளிப்படையான பொய்” என்கிறார். "இரண்டு போரிடும் கட்சிகளுக்கு இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளை துதர்தேவுக்கான ஆதரவாகவும், மக்களைக் காட்டிக் கொடுப்பதாகவும் ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டால் மட்டுமே விளக்க முடியும்," என சீசன் எழுதினார். தெளிவாக சொல்வதெனில், என்னுடைய வாதம் அது அல்ல. நான் சமாதான பேச்சுவார்த்தைகளைத் தாக்கவில்லை, அல்லது கட்சி துதர்தேவை இந்த வழியிலேயே ஆதரித்தது என்று கூறவில்லை. அவர்களின் ஆதரவு அதை விட மிகவும் வெளிப்படையானது மற்றும் அதைவிட ஆழமானது என நான் நிரூபிப்பேன்.

சீசனின் அறிக்கையில் இந்த வாக்கியத்தை நான் தனிமைப்படுத்தி காட்ட விரும்புகிறேன்: "இரண்டு ஆண்டுகளாக ஏழை மக்களை சட்டத்துக்குப் புறம்பாக கொலைசெய்வதில் சி.பி.பி. துதர்தே ஆட்சியை ஆதரித்தது என்பது ஒரு வெளிப்படையான பொய்." வரலாற்று ஆதாரங்களை நான் மறுபரிசீலனை செய்யும்போது இந்த வாக்கியத்தை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்த உரையில் நான் செய்ய விரும்பியது என்னவென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு முந்தைய காலத்துடன் உள்ள, படிப்பினையளிக்கும் வரலாற்று சமாந்தரங்களில் குவிமையப்படுத்துவதாகும். அதாவது 1969 முதல் 1972 வரையிலான காலம் மற்றும் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் அதிகாரத்திற்கு வந்த காலத்துடன் ஒப்பிடுவதாகும். சி.பி.பி. துதர்தே ஆட்சியை ஆதரித்தது என்பது பொய், என்று சீசன் வெளிப்படையாகக் கூறியுள்ளதால், சமகால சம்பவங்களை விரிவாக மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

துதர்தே பதவியேற்றபோது தேசிய ஜனநாயக இயக்கமும் சி.பி.பி.யும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தன என்பதில் எனது பார்வையாளர்களில் பலருக்கு சந்தேகம் இருக்காது. இந்த உற்சாகமான ஆதரவை இப்போது தொடர்ந்து மறுக்கின்றனர். ஒருபோதும் அப்படி நடக்கவில்லை என்று எங்களுக்கு கூறுகின்றனர். மறுநாள் எனது பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் ஒரு கருத்தை குறிப்பிட்டார். குறிப்பாக அது துல்லியமானதாக நான் கண்டேன். "நாங்கள் உளவியல் ரீதியில் குழப்பிவிடப்பட்டுள்ளதாக உணர்கிறோம்," என அவர் கூறியிருந்தார். இந்த பண்புமயப்படுத்தலில் சில உண்மை இருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஆதாரங்களைப் பற்றிய எனது மீளாய்வைத் தொடங்குவதற்கு முன், நான் இன்னும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்: கட்சியில் உறுப்பினராக உள்ளவர் யார் அல்லது இல்லாதவர் யார் என்பது எனக்குத் தெரியாது, குறிப்பாக நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இது நான் அக்கறை காட்டும் தகவல் அல்ல. அப்படி இருந்தாலும், நான் அதை வெளிப்படுத்தப் போவதில்லை. கட்சியின் பிரபல முகங்களுக்கு அப்பால், அது எனக்கு தேவையான விடயம் அல்ல.

எவ்வாறாயினும், பிலிப்பைன்ஸில் ஒரு பரந்த வெகுஜன இயக்கம் உள்ளது. அது பல குழுக்களுக்குள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவை பொதுவான அரசியல் முன்னோக்கையும் நோக்குநிலையையும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த அமைப்புகள் கம்யூனிஸ்ட் கட்சியால் ரகசியமாக கட்டுப்படுத்தப்படுகின்றன என்று நான் குற்றம் சாட்டவில்லை. நான் அவர்களுக்கு சிவப்பு-குறியிடவில்லை. மாறாக, அவர்கள் கட்சியுடன் ஒரு பொதுவான அரசியல் பாதையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று நான் கூறுகிறேன். அந்த அரசியல் பாதையின் தன்மையை நான் கணிசமான விபரங்களுடன் ஆராய்வேன். ஆனால், இறுதி ஆய்வில், அந்த பாதை தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பகுதியைக் கண்டுபிடித்து அதனுடன் நட்பு கொள்வதற்கான தேடலைக் கொண்டதாக இருக்கும்.

தேசிய ஜனநாயக இயக்கம் தான் சி.பி.பி.யுடன் பகிர்ந்து கொள்கின்ற இந்த நோக்குநிலையை எப்போதுமே கொண்டிருந்தது மட்டுமன்றி, எப்படியாவது அது எப்போதுமே கட்சியால் முற்போக்கானவர்கள் என அடையாளம் காணப்பட்ட அதே சக்திகளுடன் கூட்டணி வைத்துக்கொள்கிறது.

ரொட்ரிகோ துதர்தே யார்? துதர்தே 1960களில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவில் உறுப்பினராக இருந்தார். அவர், 1980 களில், தேசிய ஜனநாயக இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த பயனின் (BAYAN) முன்னணி உறுப்பினராக இருந்தார். ஜோமா சீசன், அவரே இதைக் கூறி இருந்ததால் இது எங்களுக்குத் தெரியும். தெற்கு நகரமான டாவோவில் துதர்தே அதிகாரத்திற்கு உயர்ந்தார். அங்கு அவர் குறிப்பாக ஒரு மோசமான அரசியல் நபராக முக்கியத்துவம் பெற்றார்: கொலைக் குழுக்களின் தலைவர் ஆனார். அவரது நற்பெயரின் விளைவாக, அப்போதைய ஜனாதிபதி குளோரியா மாகபகல் அரோயோ அவரை தனது குற்ற-எதிர்ப்பு ஆணையத்திற்குள் கொண்டுவந்தார். 2002 இல் நடந்த குற்ற-எதிர்ப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய துதர்தே, "குற்றவாளிகளுக்கு கூட்டாக மரணதண்டனை நிறைவேற்றுவதே கடத்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும்," என அறிவித்தார்.

2016 இல் ஆம் ஆண்டில் துதர்தேவை ஒரு பாசிச நபராக மாற்றியமைப்பதில் மாயைகள் எதுவும் இருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக விரும்பி, நான் தேர்ந்தெடுத்த துதர்தேவின் ஒரு சில அறிக்கைகளை வேறுபடுத்தி காட்ட விரும்புகிறேன். அவரது தட பதிவு ஏற்கனவே தெட்டத் தெளிவாக இருந்தது.

துதர்தேவின் கீழ் டாவோவில் இருந்த கொலைக் குழுக்களை பற்றி விசாரித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், "சட்ட அதிகாரமற்ற உளவுக் குழுக்களின் கொலைகளில் சம்பந்தப்பட்ட எவரும் அவரது முகத்தை மறைக்கவில்லை" என்று அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த செயல்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி இருந்திருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும். துதர்தேவின் மேயர் ஆட்சியின் கீழான ஒரு தசாப்த காலப்பகுதியில், நூற்றுக்கணக்கான சடலங்கள் கடுமையான ஆதாரங்களை அளித்தன.

தேசிய ஜனநாயக இயக்கத்தின் பிரதிபலிப்பு அதை எதிர்ப்பதாக இருக்கவில்லை. தேசிய ஜனநாயக இயக்கத்தின் ஒரு பகுதியான கேப்ரியெலா உடன் சேர்ந்து, காங்கிரஸின் பெண் உறுப்பினரான லஸ் இலகன், மணிலா டைம்ஸில் 2009 இல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், துதர்தேவின் மேயர் வகிபாகத்தை இவ்வாறு மதிப்பிட்டார்: “மேயர் எங்கள் ஆதரவுக்கு தகுதியானவர். நாங்கள் அனுபவிக்கும் ஒழுங்கை பராமரிக்க மேயர் என்ன செய்திருக்கிறார் என்பதை பற்றி நகரத்திற்கு வெளியே உள்ளவர்கள் பாராட்ட முடியாது. துதர்தேவின் தலைமைத்துவ முத்திரை எங்களை பாதுகாப்பாக தீங்கின்றி வைத்திருக்கிறது.”

இந்த அறிக்கையில் கொஞ்சம் உண்மை உள்ளது. மேயராக துதர்தேவின் ஆட்சியின் போது, தேசிய ஜனநாயக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட அதிகாரமற்ற உளவுப் படைகளால் கொல்லப்படவில்லை. அவர்கள் செயற்பாட்டாளர்களாக இருக்கவில்லை. உண்மையில், சி.பி.பி. மற்றும் புதிய பிரலிபைன் இராணுவத்தின் (NPA) உறுப்பினர்கள் கூட குறிவைக்கப்படவில்லை. இப்போது அவருடைய ஜனாதிபதி அதிகாரத்தின் கீழ் கொல்லப்படும் அதே ஏழைகளே இலக்கு வைக்கப்பட்டனர்.

பிடாவோ மற்றும் துதர்தேவை கொண்டாடும் சி.பி.பி. சுவர் ஓவியம்

2015க்கு வேகமாக நகர்வோம். துதர்தே இப்போது தேசிய அரங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் பிலிப்பைன்ஸில் "ஜனாதிபதி ஆகக்கூடிய" ஒருவராக குறிக்கப்படக்கூடியவராக ஆக்கப்பட்டார். 2015 ஜனவரியில், துதர்தே அவருக்காக சி.பி.பி.-என்.பி.ஏ. ஏற்றிவைத்த சுத்தியில் மற்றும் அரிவாள் கொடிக்கு முன்னால், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், காங்கிரஸை ஒழிப்பேன், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அரசாங்க சொத்துக்களை தனியார்மயமாக்குவேன் மற்றும் சி.பி.பி. உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவேன், என்று அறிவித்தார். ஜோமா சீசன் புதிதாக தனியார்மயமாக்கப்பட்ட சமூக நல பணியகத்தின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று அவர் உறுதியளித்தார். இதற்கு முகநூலில் பிரதிபலித்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் சீசன், "மேயர் துதர்தே ஜனாதிபதியாக வேண்டும்," என அறிவித்தார்.

சி.பி.பி.துதர்தேவை ஆதரித்தது முற்றிலும் பொய் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மே 25, 2015: ஒரு வானொலி நேர்காணலின் போது, 1990களின் பிற்பகுதியில் இந்த நகரத்தில் கொலைப் படைகளால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காட்டிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையை துதர்தே எதிர்கொண்டார். அவர் கொலைப் படைகளின் தலைவர் என்று பெருமையுடன் உறுதிபடுத்தியதன் மூலம் பதிலளித்தார். பின்னர் அவர் ஒரு பிரபலம் பெற்ற கருத்தை வெளியிட்டார்: “நான் ஜனாதிபதியானால் அந்த எண்ணிக்கை 100,000 ஆகிவிடும். நான் சடலங்களை மணிலா விரிகுடாவின் மீன்களுக்கு உணவாக கொடுப்பேன்.”

இது வெகுஜன படுகொலைகளை ஏற்றுக்கொள்ளல், மூர்க்கத்தனமான அரசியல் அறிவிப்பு மற்றும் வெளிப்படையான எச்சரிக்கை என இதை விளக்கியிருக்க வேண்டிய பத்திரிகைகள் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், துதர்தே நகைச்சுவையாக பேசுவதாக கூறி பிரபலித்தனர் என்பதை கூறிவைக்க வேண்டும். இந்த விரிவுரையில் நான் முன்னர் முன்மொழிந்த 30,000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற மதிப்பீடு துல்லியமானதாக எங்கும் இருந்தால், துதர்தே தனது வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிக்கிறார்.

லியான்சியோ பிடாவோ எழுச்சி கூட்டத்தில் உரையாற்றும் துதர்தே

2015 ஜூலையில், சி.பி.பி.யின் ஆயுதப் பிரிவான நியூ பீப்பிள்ஸ் ஆர்மி (என்.பி.ஏ.) தலைவர்களில் ஒருவரான, கா பராகோ என அழைக்கப்படும் லியோன்சியோ பிடாவோ என்ற மனிதருக்காக ஒரு எழுச்சி மேடை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த எழுச்சி டாவோவில் அரங்கேறியது. நிகழ்வை இரகசியமாக வைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இருக்கவில்லை. இந்த "புரட்சிகர தலைவரை" கௌரவிப்பதற்காக சி.பி.பி. ஏராளமான கூட்டத்தை சேர்த்தது. மேடையில் “ஐக்கிய முன்னணி நீடூழி வாழ்க! பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!” என்ற கட்சியின் பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. மேடையின் நடுவில் சுத்தியல் மற்றும் அரிவாள் மற்றும் துப்பாக்கியினதும் படங்கள் இருந்தன. அவர்கள் சர்வதேச கீதத்தைப் பாடினார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பின்னர் கட்சி, ரொட்ரிகோ துதர்தேவை அதனது சிறப்பு விருந்தினர் பேச்சாளராக முன்வைத்தது. 100,000 பேரைக் கொல்வதை மேற்பார்வையிடுவேன் என்று ஒரு மாதத்திற்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்த கொலைப் படைகளின் தலைவர், கம்யூனிஸ்ட் கட்சியால் அதன் தலைவர்களில் ஒருவரை கௌரவிப்பதற்காக மேடையில் ஏற்றப்பட்டார்.

நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: சி.பி.பி.துதர்தேவை ஆதரித்தது என்பது ஒரு வெளிப்படையான பொய்.

கட்சி ஆயுதப் போராட்டத்தை ஊக்குவிக்கும் மற்றும் பிடாவோவை நினைவுகூரும் வகையில் டாவோவில் சித்திரங்களை அமைத்தது. பிடாவோவின் முகத்துடன் அருகருகே அவர்கள் ரொட்ரிகோ துதர்தேவின் படத்தை வைத்தார்கள்.

2016 தேர்தல் வந்தபோது, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பதற்கான உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்துகொண்டிருந்த போது, தனது வழக்கமான நிலையற்ற பாணியில், துதர்தே வழமைக்கு மாறான ஒன்றைச் செய்தார். அவர் பின்வாங்கி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்தார். மிகவும் முக்கியமில்லாத மனிதரான மார்ட்டின் டினோ, துதர்தே கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஒரு ஜனாதிபதி வேட்பாளரைத் தேடிய தேசிய ஜனநாயக இயக்கம், 2013 இல் செனட்டுக்கு அது தேர்ந்தெடுத்த கிரேஸ் போ உடன் இணைந்தது. மக்கபயன் கூட்டணியின் செனட்டர் பதிவிக்கான வேட்பாளர் நேரி கோல்மனரேஸ் அவருக்கு பதிலாக போட்டியிட்டார்.

பின்னர் ஒரு வியத்தகு துண்டுப் பிரசுரத்துடன், துதர்தே தான் மீண்டும் போட்டியிட முடிவு செய்ததாக அறிவித்தார். டினோ பதவி விலகினார், துதர்தே ஜனாதிபதிக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். இது தேசிய ஜனநாயக இயக்கம் போவுடன் ஏற்கனவே செய்துகொண்ட உத்தியோகபூர்வ உறவுகளுக்கு சவாலாக அமைந்தது. ஏனெனில். அவளுடன் அவளுக்காக பிரச்சாரம் செய்ய அவர்கள் கடமைப்பட்டிருந்தனர்.

தேசிய ஜனநாயக இயக்கத்தின் ஆதரவாளர்கள் மிண்டானாவோவில் துதர்தேவுக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்

இருப்பினும், மிண்டானாவோவிலும் தெற்கு பிலிப்பைன்ஸ் முழுவதிலும், அனக்பயன், அனக்பாவிஸ், மற்றும் அவர்களுடன் இணைந்த அமைப்புகளும் போவிற்கு பிரச்சாரம் செய்யவில்லை. அவர்கள் துதர்தேவுக்கு பிரச்சாரம் செய்தனர். பிராந்தியமெங்கும் பிரச்சார வண்டிகள் அனக்பாவிஸ், நேரி கோல்மனரேஸ் மற்றும் ரொட்ரிகோ துதர்தே ஆகியோருக்கான சுவரொட்டிகளைக் ஒட்டிக்கொண்டிருந்தன.

டாவோவிலிருந்து வந்த தேசிய ஜனநாயக இயக்கத்துடன், குறிப்பாக அனக்பாவிசின் பிரதிநிதி ஆயிக் கசிலாவோ உடன் தொடர்புடைய நபர்கள் இதற்கு மையமாக இருந்தனர். அவரது சொந்த பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட அவரது படங்கள், துதர்தேவின் வர்த்தக முத்திரையான கைமுஷ்டியை காதருகே வைத்து மரியாதை செய்யும் படங்களைப் பயன்படுத்தி அனக்பாவிஸ் பிராந்தியமெங்கும் பிரச்சாரம் செய்வதைக் காட்டுகிறது.

மிண்டானாவோ, காசிலாவ் மற்றும் பயன் முனாவின் கார்லோஸ் ஸரத்தே ஆகிய தேசிய ஜனநாயக இயக்கத்தின் வேட்பாளர்கள், மே மாதத்தில், “தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரொட்ரிகோ துதர்தேவுக்கு முழு ஆதரவு” என்ற ஒரு பொது அறிவிப்பில் கையெழுத்திட்டனர்.

மணிலாவில் உள்ள பயன் முனாவின் சில பிரதிநிதிகள், போவுக்கு பிரச்சாரம் செய்த பின்னர், துதர்தேவை ஆதரிக்க தேசிய ஜனநாயக இயக்கம் செயற்பட்ட வேகத்தை கண்டு பின்வாங்கினர். மே மாதம் சீசன் அவர்களை முகநூலில் விமர்சித்தார். அவர் எழுதியதாவது: “நீங்கள் முதலாளிகளை மட்டும் தாக்க வேண்டாம்… நாம் கொம்பிரதோர்களுடன் பேசுவதோடு நடவடிக்கைகளையும் எடுப்பது போல், நாம் தேசியவாத முதலாளிகளுடன் பேச முடியும்… எங்கள் தேனிலவு இப்போதுதான் தொடங்குகிறது. நாங்கள் அவருடன் பேசுகிறோம். அவர் எங்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளார்.”

சீசன் ஜூன் 10, 2016 அன்று, ஒரு பரந்த அளவிலான அமைப்புகளிலிருந்து கூடியிருந்த இளைஞர் தலைவர்களுக்கு உரை நிகழ்த்தினார். "டாவோ நகர மேயராக இருந்தபோது, துதர்தே பொது வாழ்க்கையில் பெண்களின் பங்கை அங்கீகரித்து பாராட்டியுள்ளார், தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வசதிகளை உருவாக்கியுள்ளார், மேலும் பெண்கள் மீதான வன்முறையை அவர் வெறுப்பதை நிரூபித்துள்ளார்," என சீசன் கூறினார். இது ஒரு அதிர்ச்சியூட்டும் பொய் ஆகும்.

கற்பழிப்பு "நகைச்சுவைகளை" செய்வதில் துதர்தே பேர்போனவர்; அவரை வந்து சந்தித்துப் போகும் பாலியல் பலாத்காரம் செய்த ஆண்களுடன் அவர் கிண்டல் செய்வார். தன்னை முதலில் பலாத்காரம் செய்ய அனுமதிக்கவில்லை என்ற வகையில், அவர் குறைகூறுவார். அவர் தனது பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது பெண் நிருபர்களை பார்த்து அசிங்கமாக விசிலடிப்பார். சி.பி.பி. இறுதியாக துதர்தே உடன் முறித்துக்கொண்ட போது ஒரு உரை நிகத்திய அவர், சி.பி.பி. பெண் உறுப்பினர்களை மர்ம உறுப்பில் சுட்டுக் கொல்லுமாறு இராணுவத்துக்கு அழைப்புவிடுத்தார்.

இவர் "பெண்களுக்கு எதிரான வன்முறையை தான் வெறுப்பதை நிரூபித்த" ஒரு மனிதன் அல்ல.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும்போது சீசனுக்கு அதிக நம்பகத்தன்மை இல்லை என்று நான் கூறுவேன். திருமணத்திற்கு முந்தைய உடலுறவில் ஈடுபட்டிருந்தால் பெண் காரியாளர்களை ஒழுக்கப்படுத்துவதில் பல தசாப்தங்களாக கட்சி ஒரு கொள்கையை பராமரித்தது. கத்தோலிக்க திருச்சபையில் உள்ள தங்கள் கூட்டாளிகளில் சிலர் அந்நியப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, கட்சியின் தலைமைத்துவம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு அங்கமே இது. கட்சிக்குள் அரசியல் தலைமையிலிருந்து பெண்கள் விலக்கப்படுவது வழக்கமாகும்.

ஜூன் 10 அன்று சீசன் தனது இளைஞர் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார்:

"கட்சிக்கும் துதர்தே நிர்வாகத்திற்கும் இடையில் ஒரு வகையான கூட்டணி அரசாங்கத்தை காணக்கூடியதாக உள்ளது. இது மற்ற தேசப்பற்று மற்றும் முற்போக்கான சக்திகளுக்கு மத்தியில், கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பை உள்ளடக்கியதாகும். இது தேசிய ஐக்கியம், அமைதி மற்றும் மேம்பாட்டு அரசாங்கமாகும். … எனவே மக்களின் யுத்தம் இன்றி தேசிய ஜனநாயக புரட்சியை பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. …”

இப்போது அவர் இந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை. மாறாக துதர்தே உடன் ஒரு கூட்டணி அரசாங்கம் உருவாகினால், புதிய மக்கள் இராணுவத்திற்கு என்ன நடக்கும் என்று அவர் முன்மொழிந்தார்.

"புரட்சிகர ஆயுதப் பிரிவுகள், சமாதானம் மற்றும் அபிவிருத்தி நிலைமைகளின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்துறைகளின் காவலர்களாக மாறலாம். ஆயுதப்படைகளை ஒருங்கிணைப்பதை அனுமதிக்க முடியும்.”

ஒரு சிறந்த உலகத்திற்காக தாம் போராடுவதாக நம்பி ஆயுதங்களை ஏந்திய புதிய மக்கள் இராணுவத்தின் ஏராளமான காரியாளர்கள், இளைஞர்கள் ஆவர். இந்த இளைஞர்கள், நாட்டில் நிலவும் அசாதாரண வறுமைக்கு வேறு தீர்வு கிடையாது என்று நம்பிக்கொண்டுள்ளனர். அவர்களில் பலர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

அணிகளில் சேர்ந்துள்ள இலட்சியவாத மற்றும் சுய தியாக இளைஞர்கள் உட்பட, கட்சியின் ஆயுதப் பிரிவு, தொழில்துறையில் பாதுகாப்புக் காவலர்களாக மாற்றப்படும் என்று சீசன் அறிவித்தார். சோசலிசத்தின் கீழ் அன்றி, தேசிய ஜனநாயகத்தின் கீழேயே இந்த மாற்றத்தை சீசன் முன்மொழிகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவை தனியார் முதலாளித்துவ நிறுவனங்கள் ஆகும். இங்குதான் என்.பி.ஏ. உறுப்பினர்கள் பாதுகாப்பு காவலர்களாக ஆக்கப்பட உள்ளனர். பல தசாப்தங்களாக கட்சியின் காரியாளர்களை அடக்குதல், கொடூரமான சித்திரவதை மற்றும் படுகொலைகளுக்கும் பொறுப்பான ஒரு சக்தியாக இருக்கின்ற பிலிப்பைன்ஸின் ஆயுதப்படைகளுடன் என்.பி.ஏ. காரியாளர்களை ஒருங்கிணைக்க முடியும் என்று அவர் மேலும் வாதிட்டார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துதர்தே நிர்வாகத்தின் கீழ் அவரது ஜனாதிபதி பதவியின் தன்மை தெளிவாகத் தெரிவதற்கு வெகுகாலம் எடுக்கவில்லை. ஜூன் 12 அன்று ஏஜன்சி பிரான்ஸ் பிரஸ் எழுதியவாறு, “பிலிப்பைன்ஸ் தலைநகர் முழுவதும் இரவுநேர திடீர் தேடுதல்களில் அழுகிற குழந்தைகள், தள்ளாடும் குடிகாரர்கள் மற்றும் சட்டையில்லாத மனிதர்களை ஆயுதமேந்திய காவல்துறையினர் தடுத்து வைக்கின்றனர். இது உள்வரும் ஜனாதிபதி ரொட்ரிகோ துதர்தேவின் கீழ் ஒரு சர்வாதிகார வாழ்க்கையின் அனுபவத்தை வழங்குகிறது. தெருவில், இரவு நேரத்தில் தனியாக அகப்படும் பிள்ளைகளின் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.” புதிய நிர்வாகத்தின் முதல் வாரத்திற்குள் சடலங்களின் கணக்கெடுப்பு திகைப்பூட்டியது. பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள் இரத்தக் கறைபடிந்த சுலோக அட்டைகளுடன் தெருக்களில் பரவிக் கிடந்தன. படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் பிலிப்பைன்ஸ் பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் தோன்றின.

தேசிய ஜனநாயக இயக்கம் துதர்தேவை வெறுமனே ஆதரிக்கவில்லை. போதைப்பொருள் மீதான போருக்கு அவர்கள் ஒப்புதல் அளித்தனர். அனக்பயனின் பொதுச் செயலாளர் ஐன்ஸ்டீன் ரெசிடெஸ் ஜூன் 26 அன்று எழுதியதாவது: "ஆபத்தான போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கு எதிரான துதர்தேவின் போர், ஏழைகளுக்கு ஒரு வரம் என்று நாங்கள் நம்புகிறோம்."

பயனின் பொதுச்செயலாளர் ரெனேட் ரெய்ஸ், ஜூலை 4 அன்று எழுதியதாவது: "தெளிவாகக் கூறுவதெனில், அவர் ஒரு பங்காளி." துதர்தே உடன் பேயனுக்கு "வேறுபாடுகள்" இருப்பதாக அவர் ஒப்புக் கொண்டாலும், "கடந்த மாதத்தில் ஜனாதிபதி கூறிய உடன்பட முடியாத எதையாவது உடனடியாக எதிர்க்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும் கூட்டணியை பலவீனப்படுத்தியிருக்கும்" என்று அவர் வாதிட்டார். "நாங்கள் அவருக்கு, ஒரு வாய்ப்பையாவது கொடுக்க வேண்டும்." அவர் தனது வாசகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதுதான் தேசிய ஜனநாயக இயக்கத்தின் கவலை. துதர்தே பாசிச வெகுஜன கொலை பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் பொதுமக்களை எச்சரித்தால், அது ஜனாதிபதியுடனான அவர்களின் கூட்டணியை பலவீனப்படுத்தும்.

துதர்தேவின் பதவியேற்புக்கு பயன் ஒரு அறிக்கையை தயாரித்தார்: “மக்களின் நூறு நாள் நிகழ்ச்சி நிரல்” பற்றிய பேசி அது, “பிலிப்பைன்ஸ் மக்கள் துதர்தேவின் தேசியவாத மற்றும் மக்கள் சார்பு கொள்கை அறிவிப்புகளால் மகிழ்ச்சியடைகிறார்கள்” என்று அறிவித்தது.

சீசன் மற்றும் தேசிய ஜனநாயக முன்னணிக்கான சமாதான பேச்சுவார்த்தையாளர்கள் துதர்தேவின் கைமுஷ்டி நீட்டும் முத்திரையை காண்பிக்கின்றனர்

துதர்தேவின் பதவியேற்பு உரையின் பின்னர், அவர்கள் மலாக்காசாங் ஜனாதிபதி மாளிகையில் வரவேற்கப்பட்டனர். அங்கு அவர்கள் அந்த அறிக்கையை அவருக்கு வழங்கியதோடு ஜனாதிபதியுடன் சேர்ந்து கைமுஷ்டி உயர்த்தும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.

சீசன் தனது அறிக்கைகளை "ஜனாதிபதி துதர்தே நீடூழி வாழ்க!" என்று முடிக்கத் தொடங்கினார்.

மீண்டும் நினைவுகூறிக்கொள்ளுங்கள்: சி.பி.பி.துதர்தேவைஆதரித்தது என்பது ஒரு வெளிப்படையான பொய்.

துதர்தே அரியாசன உரையை வழங்கினார். அது பொருத்தமில்லாத, துரதிர்ஷ்டவசமாக இப்போது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒரு வகையான இழிவான உரையாகும். அவரது உரையின் ஒரு பகுதி நேரடியாக இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் பேசியது. "என் நாட்டை அழிக்கும் இந்த முட்டாள்களை நான் படுகொலை செய்ய வேண்டும்," என்று அவர் அறிவித்தார். "நீங்கள் [குற்றவாளிகளை] பார்த்தால், அவர்களை சுட்டுக் கொல்லுங்கள், அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தாலும் சுட்டுத்தள்ளுங்கள், வெள்ளைக்கொடி போருக்கு மட்டுமே குற்றவாளிகளுக்கு அல்ல, என்று நான் இராணுவத்திடம் சொன்னேன். அவர்களைச் சுடுங்கள், அவர்களுக்கு இரக்கம் காட்டாதீர்கள்.” துதர்தேவின் அரியாசன உரை, “புதிய காற்றை சுவாசிப்பதாகும்” என்று அனக்பயன் அறிவித்தார்.

ஜூன் 26, 2016 அன்று, பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை வெளியீடான ஆங் பயன் "போதை மருந்து விநியோகிப்பவர்களை ஒழிப்பதற்கும் தண்டிப்பதற்கும் துதர்தே எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக ஆதரிப்பார்கள்," என்று எழுதியது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 7 அன்று, "பரவலான போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக புரட்சிகர சக்திகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற துதர்தேவின் அழைப்பை சி.பி.பி. வரவேற்கிறது," என்று ஆங் பயன் அறிவித்தது. லூயிஸ் ஜலந்தோனி, ஆகஸ்ட் மாதம், "புரட்சிகர இயக்கத்திற்கும் துதர்தேவுக்கும் இடையிலான உறவு மிகச் சிறப்பானது," என்று ஆங் பயனில் அறிவித்தார்.

“பிலிப்பைன்ஸ் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்,” பயன், 100 நாள் மக்கள் நிகழ்ச்சி நிரல், 29 ஜூன் 2016

ஜூலை 1 அன்று துதர்தே பிலிப்பைன்ஸின் ஆயுதப்படைகளுக்கு ஒரு உரை நிகழ்த்தினார், அதில் அவர் சி.பி.பி. இன் புதிய மக்கள் இராணுவத்திற்கு அழைப்பு விடுத்தார். "உங்கள் கங்காரு நீதிமன்றங்களைப் பயன்படுத்தி எங்கள் போதைப்பொருள் விநியோகத்தர்களை கொல்லுங்கள். எங்கள் பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்துங்கள்," என அவர் அழைப்பு விடுத்தார். அடுத்த நாள் "போதைப்பொருள் எதிர்ப்புக்கு ஒத்துழைப்புக்கான ஜனாதிபதி துதர்தேவின் அழைப்புக்கு பதில்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையுடன் சி.பி.பி. பிரதிபலித்தது. "பரவலான போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக புரட்சிகர சக்திகளுடன் ஒத்துழைக்க ஜனாதிபதி துதர்தே விடுத்துள்ள அழைப்பை கட்சி வரவேற்கிறது," என அது பிரகடனம் செய்தது. "சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான ஜனாதிபதி துதர்தேவின் கண்டனத்தை கட்சியும் பகிர்ந்து கொள்கிவதாக" சி.சி.பி. அறிவித்தது.

இப்போது ஒரு மாதம் கடந்துள்ளதோடு சடலங்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கானதாக இருந்தது. கைது செய்யப்படுவதை எதிர்க்கும் எவரையும் பொலிசார் சுட்டுக் கொன்றனர். இதை ஜனாதிபதி வெளிப்படையாக அனுமதித்திருந்தார். சி.பி.பி.யும் அதைப் பின்பற்றியது. "கைது செய்யப்படுவதை ஆயுத வன்முறையுடன் எதிர்க்கும் எவருடனும் போரிட என்.பி.ஏ. தயாராக உள்ளது," என அதன் அறிக்கை தொடர்ந்தது.

சீசன் அடுத்த நாள் சி.என்.என். செய்திச் சேவையில் பேட்டி காணப்பட்டதோடு, அவர் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது கட்சி வன்முறையுடன் பாயம் என சர்வதேச பார்வையாளர்களுக்கு அறிவித்தார். என்.பி.ஏ. இன் நீதிமன்றங்களில் சந்தேக நபர்களுக்கு எவ்வாறு உரிய சட்டநடைமுறைகள் வழங்கப்படும் என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், "புரட்சிகர நீதி" நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், "மக்கள் வழக்குரைஞர்" சாட்சி விசாரணை வடிவத்தில் முதன்மை ஆதாரங்களை முன்வைப்பார், என்று கூறினார்.

“புரட்சிகர நீதி” மற்றும் “மக்கள் நீதிமன்றங்கள்” சம்பந்தமாக கட்சிக்கு நீண்ட மற்றும் இரத்தக்களரி வரலாறு உள்ளது. 1980களில், கட்சி தனது சொந்த அணிகளை குறிவைத்து தொடர்ச்சியான உள் சுத்திகரிப்புகளைத் தொடங்கியது. ஆழ்ந்து ஊடுருவியுள்ள இராணுவ முகவர்களை வேட்டையாடுவதாக அவர்கள் கூறிக்கொண்டனர். சித்திரவதைகளின் கீழ் எடுக்கப்பட்ட "சாட்சி ஆதாரங்களின்" அடிப்படையில், சி.பி.பி. தனது சொந்த காரியாளர்களில் கிட்டத்தட்ட 1,000 பேரைக் கொன்றது.

சீசனின் கூற்றை மீண்டும் நினைவு கூருங்கள்: "சி.பி.பி. துதர்தே ஆட்சியை ஆதரித்தது என்பது ஒரு வெளிப்படையான பொய்." உண்மையில், ஒரு வெளிப்படையான பொய் என்ன என்பது இப்போது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்று நம்புகிறேன். சி.பி.பி.துதர்தேவை ஆதரிக்கவில்லை என்பது வெளிப்படையான பொய்.

"ஒற்றுமை" என்ற தலைப்பின் கீழ் சீசன் மற்றும் துதர்தேவை காட்டும் சித்திரம். சீசன் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பகிர்ந்துள்ளார்.

இந்த ஆதரவும், ஆதரவைத் விலக்கிக்கொள்வதும், ஆதரவை நியாயப்படுத்தவும் பின்னர் அதை மூடிமறைக்கவும் பொய்களைப் பயன்படுத்துவதும், கட்சியின் வரலாற்று நடத்தையின் ஒரு தீர்க்கமான அங்கத்தை உருவாக்கும் ஒரு மாதிரியை உள்ளடக்கியதாகும். இது நான் தெளிவாக ஸ்தாபிக்க விரும்பும் ஒரு புள்ளி ஆகும். கட்சியின் முழு வரலாறும் அதன் தலைமையால் பொய்மைப்படுத்தப்படுகிறது. இந்த உரையில் இருந்து நீங்கள் ஒரு விஷயத்தை மட்டுமே கிரகித்துக் கொண்டால் கூட, அது வரலாற்று சத்தியத்திற்கான ஒரு தீவிரமான வேண்டுகோளாக இருக்க வேண்டும்.

கட்சியும் தேசிய ஜனநாயக அமைப்புகளும் துதர்தேவை எவ்வாறு ஆதரிக்கின்றன என்பதற்கான இன்னுமொரு எடுத்துக்காட்டை நான் காட்ட விரும்புகிறேன். இது எனக்கு குறிப்பாக எரிச்சலூட்டும் ஒன்று.

இராணுவச் சட்டத்திற்கு சற்று முந்தைய நாட்களில், கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவாக இருந்த கபடாங் மக்கபயன் (கே.எம்.) என்ற பெயரிலான தேசியவாத இளைஞர்கள் அமைப்பு தேசிய ஜனநாயக இயக்கம் மற்றும் சி.பி.பி. ஆகியவை, ரொட்ரிகோ துதர்தேவுக்கு அவரது தேசியவாதத்தை கௌரவித்து “கவாட் சுப்ரீமோ விருதை” வழங்கின.

கபடாங் மக்கபயனின் மிக உயர்ந்த விருதான கவாட் சுப்ரிமோ விருது, இரண்டு நபர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதது –அவர்கள் ரொட்ரிகோ துதர்தே மற்றும் ஜோஸ் மரியா சீசன். கபடாங் மக்கபயனில் சேர்ந்த இளைஞர்கள் பல வழிகளிலம் ஒரு முழு தலைமுறையின் சிறந்த தட்டினராக இருந்தனர். அவர்கள் சுய தியாகம் செய்தவர்கள், அவர்கள் இடைவிடாமல் உழைத்தனர். மார்கோஸின் சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்த காலகட்டத்தின் வரலாற்றில் நான் பணியாற்றியபோது, இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்பையும் அவர்களின் அக்கறையும் பற்றிய ஆழமான அபிமானத்தை கொண்டிருந்தேன். அதே நேரத்தில், இந்த அர்ப்பணிப்புடன் அவர்களின் தலைமைத்துவத்தின் செயற்பாடுகளையிட்டு நான் ஆழ்ந்த எதிர்ப்பை வளர்த்துக் கொண்டேன்.

ரொட்ரிகோ துதர்தேவுக்கு கவாட் சூப்பரிமோவை வழங்குவது ஒரு இறுதியான காட்டிக்கொடுப்பாக எனக்குத் தோன்றுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியவர்களின் தியாகங்களும், அவர்களின் துன்பங்கள் அனைத்தும், ஒரு அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு ஒரு பாசிச குண்டரின் மார்பில் பொருத்துவதற்கான போலியான பகட்டான கௌரவ முத்திரையாக மாற்றப்பட்டது.

நான் வரலாற்றின் விஷயங்களுக்கு திரும்ப விரும்புகிறேன். கபடாங் மக்கபயன் என்றால் என்ன? துதர்தே உடன் கட்சியின் கூட்டணியின் வரலாற்று வேர்கள் யாவை? நிகழ்காலத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு உதவக்கூடிய போதனை நிறைந்த சமாந்தரங்களாக இவை உள்ளனவா?

எனது கணிப்பு ஜோமா சீசனிடமிருந்தே தொடங்குகிறது. நாம் அக்கறைகாட்டும் நிகழ்வுகள் ஒரு தனிநபரிடமிருந்து தொடங்குவதில்லை, அத்துடன் சம்பந்தப்பட்ட வரலாறு சீசனுக்கு நீண்ட காலத்திற்கு முன்னர் இருந்தே தோன்றுகிறது. எமது கதையின் வேர்கள் முந்தைய ஸ்டாலினிச கட்சியான பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிபினாஸ் (பி.கே.பி.) ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து தொடங்குகின்றன. ஸ்டாலினி என நான் அர்த்தப்படுத்துவது என்ன என்பதை ஒரு கணத்தில் துல்லியமாக விளக்குவேன். 1930களில் ஸ்தாபிக்கப்பட்ட பி.கே.பி. ஒரு பெரிய விவசாயப் பிரிவை உருவாக்கியது. அது ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் பின்னர் புதிதாக சுதந்திரம் பெற்ற அரசுக்கு எதிராகவும் போராடிய, ஹுக் கிளர்ச்சி என்று அழைக்கப்பட்ட ஒரு விவசாயக் கிளர்ச்சிக்கு தலைமை வகித்து, பெரும்பாலும் 1950களில் தலைமறைவாகியது. இந்த வரலாற்றை என்னால் இங்கு விவரிக்க முடியாது.

சி.பி.பி. ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்த பி.கே.பி.யின் பிளவின் வரலாறு குறித்து நான் இன்று எனது விரிவுரையில் கவனம் குவிக்க விரும்புவதோடு, இரு கட்சிகளும் இராணுவச் சட்டத்தை சுமத்த எப்படி உதவின என்பதை பற்றியும் வாதிடுவேன். 1950களில் பி.கே.பி. அதன் செயலற்ற நிலையில் இருந்தான மறுபிறப்பில், பிளவில், ஒரு புதிய கட்சியை ஸ்தாபித்ததில், ஜோஸ் மரியா சீசனை விட எந்தவொரு தனிமனிதனும் முக்கிய பங்கு வகிக்கவில்லை.

சீசனின் பின்னணி குறிப்பாக போதனை தருவது. அவர் நாட்டின் பணக்கார குடும்பங்களில் ஒன்றிலிருந்து வந்தவர். அவரது பாட்டனார் டொன் லியாண்ட்ரோ செரானோ, 19ம் நூற்றாண்டின் கடைசி காலாண்டில் வடக்கு லூசனில் உள்ள மிகப்பெரிய தோட்டத்தை கட்டுப்படுத்தினார். சீசன் கூட, தனது பாட்டனார் அவரது சொந்த ஊரில் 80 சதவிகிதத்தையும் மற்ற நான்கு நகராட்சிகளின் பெரிய பகுதிகளையும் தன்னகத்தே வைத்திருந்தார் என்று விவரித்தார். தோட்டத்தில் வந்த இலாபத்துடன் அவர் “மாகாணத்தின் மிகப்பெரிய மாளிகையை கட்டினார். அது நூற்றுக்கணக்கானோர் அமரக்கூடிய ஒரு சாப்பாட்டு மண்டபம், ஒரு தேவாலயம் மற்றும் நான்கு மாடி களஞ்சியசாலைகளைக்கும் மேலாக, 25 அறைகளுடன், மொத்தம் 5,000 சதுர மீட்டர் பரப்பளவில், மாகாணத்திலேயே மிகப் பெரியதாக இருந்தது.” அவருடனான நேர்காணல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட சீசனின் சொந்த நினைவுக் குறிப்புகளிலிருந்து இந்த விபரங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜோமா சீசனின் தாத்தா, டொன் கோர்கோனியோ சீசன், டொன் லியாண்ட்ரோவின் மகள்களில் ஒருவரை மணந்தார். அவர், ஸ்பெயினின் காலனித்துவ ஆட்சியின் கீழ், கபுகவோவின் கடைசி கோபர்னடோர்சிலோ (காலனித்துவஆட்சியின்ஆளுனர்) ஆவார். அவர் குறுகிய காலமே இருந்த பிலிப்பைன்ஸ் குடியரசின் காலத்தில், நகரத்தின் நகராட்சித் தலைவரானதுடன், அமெரிக்கர்களின் கீழ் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டு, கபுகவோவின் மேயர் ஆனார்.

1921 வாக்கில், சீசன் குடும்ப தோட்டமானது குத்தகை விவசாயிகள் படை பணியாற்றிய பரந்த புகையிலை இருப்புக்களை உள்ளடக்கியது. சீசனின் குடும்பம் விவசாய வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு நிலப்பிரபுத்துவ சொத்துடமையை கொண்டிருந்ததுடன், பரந்தளவு காணிகளையும் இணைத்துக்கொண்டிருந்ததோடு அந்த நிலங்கள் குடும்பத்துக்குள்ளேயான திருமணங்கள் ஊடாக பகிரப்பட்டிருந்தன. அவர் குடும்ப தொடர்புகளின் பரந்த உறவின் மையத்தில் இருந்தார். அவரது மாமாக்களில் இருவர் காங்கிரஸ் உறுப்பினர்கள். அவர்களில் ஒருவர் நியூவா செகோவியாவின் பேராயர், மற்றும் அவரது பெரிய மாமா ஆளுநராக இருந்தார். அவரது மற்ற மாமாக்களில் ஒருவர் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார், மற்றொரு மாமா தேர்தல் ஆணையத்தின் (COMELEC) தலைவராக இருந்தார். ஞாயிற்றுக்கிழமை தேவாலய பூஜையில் முன் வரிசை அவரது குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. காணி வாடகை கொடுக்கவும் தானிய விதைகளை கேட்டும், வீட்டைச் சுற்றி நின்று கெஞ்சுவதற்காகவும் விசேட சலுகைகளை எதிர்பார்த்து வேண்டுகோள் விடுத்தும், விவசாய கூலிகள் ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்தனர். இவை அனைத்தும் சீசனின் உளவியலை வடிவமைத்தவை.

அவரது தாயார், 1970இல் கிரஃபிக் வீக்லிபத்திரிகைக்கு அளித்த ஒரு சாதாரண நேர்காணலில், செங் என்று அழைக்கப்படும் அவரது மகன், “என் மற்ற பிள்ளைகளை விட, வேலைக்காரிகளுக்கு தொடர்ந்து கட்டளையிடுவார். பணிப்பெண்கள் அவருக்காக இடைவிடாது காத்திருக்க வேண்டியிருந்தது. அவர் ஒருபோதும் தன் வேலைகளை தானே செய்துகொள்ளமாட்டார். குளியலறையில் கூட அவர் தனது துண்டை, துணிகளை ஒப்படைக்குமாறு வேலை ஆட்களை அழைப்பார்.”

எவ்வாறாயினும், இந்த சலுகை உலகம் மறைந்து கொண்டிருந்தது. டொன் லியாண்ட்ரோவின் தோட்டம் அரிசி, புகையிலை, அவுரி செடி மற்றும் கருங்கற்றாளை ஆகிய பயிர்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த பொருட்கள் 20 ஆம் நூற்றாண்டில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. சர்க்கரை மகத்தான உலகளாவிய முக்கியத்துவம் கொண்ட ஒரு பண்டமாக ஆகியிருந்த அதே வேளை, அவுரியின் இடத்தை செயற்கை சாயம் மற்றும் செயற்கை நார்பொருள்கள் பிடித்துக்கொண்டன. அரிசி உற்பத்தியின் மையம் பெரும்பாலும் நியூவா எசிஜா மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. புகையிலை குடும்ப இருப்புக்களில் ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், அதனால் அவர்களின் முந்தைய செல்வத்தைத் தக்கவைக்க முடியவில்லை.

குடும்ப உடைமைகளை உயர்த்திப் பார்ப்பதற்கு, சீசனின் தந்தை சலுஸ்டியானோ, 1949இல் தனது மாமா விசென்டே மல்லாரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் அரசாங்கத்திற்கு "ஒரு ரகசிய முகவராக" ஆக விரும்புவதாக உள்துறை செயலாளரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த கடிதம் ஹவாய் பல்கலைக்கழகத்தில் சீசனின் சகோதரர் ரமோன் சீசனின் தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளது. அவர் எழுதியிருந்ததாவது:

"மத்திய லூசோன் மற்றும் பிலிப்பைன்ஸின் பிற பகுதிகளில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு எதிரான தற்போதைய பிரச்சாரத்தை முன்னெடுக்க, செயலாளர் சோடெரோ பலுயுட் உள்துறை திணைக்களத்திற்கான இரகசிய முகவர்களை நியமிக்கின்றார் என்று நம்பகமான ஆதாரங்களில் இருந்து நான் அறிந்தேன்." இது ஹுக் கிளர்ச்சியைக் குறிப்பதாகும். சீசனின் தந்தை ஹுக் கிளர்ச்சியை அடக்குவதற்கு ஒரு ரகசிய முகவராக மாறுவதன் மூலமே குடும்ப உடைமைகளை தக்கவைக்க விரும்பினார்.

குடும்பத்தின் நிதி வழிமுறை வீழ்ச்சியடைவதானது சீசனின் செல்வாக்கு ஓரளவு குறுகிவிட்டது என்பதாகும். அவர் இன்னும் சலுகை பெற்ற குழந்தையாக இருந்தார், ஆனால் அவரும் அவரது உடன்பிறப்புகளும் நிலப்பிரபுத்துவ வாழ்வை குறைத்து நகர்ப்புற இருப்புக்கு மாறத் தீர்மானித்தனர். அவர்கள், ஒரு வார்த்தையில் சொல்வதெனில், குட்டி முதலாளித்துவவாதிகள்.

சீசனின் உடன்பிறப்புகள் ஒரு மருத்துவர், பல் மருத்துவர் மற்றும் மார்கோஸ் நிர்வாகத்தில் ஒரு தொழில்நுட்ப வல்லுநராக ஆயினர், மேலும் சீசன் "ஒரு வழக்கறிஞராகி, ஹார்வர்டுக்குச் சென்று ஒரு அரசியல் தலைவராவதற்கு" விரும்பினார். அவர் தனது இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி கல்வியை அவரது மாமா விசென்ட் சின்கோ பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். USAID உடைய முன்னோடியான சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஐசிஏ) மூலம் சின்கோ தனது மருமகனுக்கு நிதி பெற்றார்.

கிளாரோ எம். ரெக்டோ

அவரது பட்டதாரி வாழ்க்கையின் போது தான் சீசன் ஒரு அரசியல் முன்னோக்கை உருவாக்கத் தொடங்கினார். இது எல்லாவற்றிற்கும் மேலாக கிளாரோ எம். ரெக்டோவின் கருத்துக்களால் வடிவமைக்கப்பட்டது.

ரெக்டோ 1950 களின் பிற்பகுதியிலும் 1960 களின் முற்பகுதியிலும் ஒரு முழு சமூக அடுக்கின் கருத்துக்களை வடிவமைத்து "தேசியவாத முதலாளித்துவத்திற்கு" அழைப்பு விடுத்தார். உலகெங்கிலும் முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளின் பொருளாதாரங்களைப் போலவே, பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தையும் எதிர்கொள்ளும் ஒரு அடிப்படை பிரச்சினையை ஆராய்ந்தார். பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் சர்வதேச நிதி மூலதனத்தால் ஆதிக்கம் செலுத்தியது, எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க வணிக நலன்கள் ஆதிக்கம் செலுத்தின. அது அவர்களின் நலன்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது. ரெக்டோ, புத்திசாலித்தனமாக பேசுவதை விட, பிலிப்பைன்ஸ் முதலாளிகளின் நலன்களை ஒட்டுப்போட்டு இணைத்தார்.

ரெக்டோ கேவைட் பெப்ரவரி 24, 1957 அன்று ஜெய்சீஸுக்கு ஆற்றிய உரை பிரதானமானதாகும். அவர் "வெளிநாட்டு முதலாளிகள் நாட்டை தொழில்துறைமயமாக்குவதை தடுக்க வேண்டும், அதே சமயம், பிலிப்பைன்ஸ் முதலாளிகள் நாட்டை தொழில்துறைமயமாக்க வேண்டும்; பிலிப்பைன்ஸ் மூலதனமே நமது இயற்கை வளங்களை சுரண்ட வேண்டும்; வெளிநாட்டு முதலாளித்துவம் அல்ல, பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தை வளர்த்து பலப்படுத்த வேண்டும்; தேசிய வருமானத்தை அதிகரிக்க வேண்டும், ஆனால் பெருமளவில் பிலிப்பைன்ஸ் அல்லாதவர்கள் இதில் நலன் பெறுவதற்கு அனுமதிக்க கூடாது,” என்று அழைப்பு விடுத்தார்.

பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தின் வளர்ச்சியே ரெக்டோவின் அடிப்படை அக்கறையாக இருந்தது. இந்த வழிகளில் கார்சியா நிர்வாகத்தினால், பிலிப்பைன்ஸே முதலாவது என்ற கொள்கையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வாஷிங்டன் அதன் முன்னாள் காலனியான பிலிப்பைன்ஸின் சட்டங்களில், அமெரிக்க மூலதனத்திற்கான சலுகைகள் சட்டப்பூர்வமாக பொறிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பிலிப்பைன்ஸே முதல் என்ற கொள்கையின் இலக்கு, மிகப்பெருமளவில் சீன வணிக சமூகமாக இருந்தது. அவர்கள் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செயெயப்பட்டன.

இறுதியாக, பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் ரெக்டோ முகம் கொடுக்க முயன்ற எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. ரெக்டோவின் முன்னோக்குக்கு ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், ரெக்டோவின் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமாயினு அதற்குப் பின்னால் ஒரு வெகுஜன இயக்கத்தின் ஆதரவு தேவை என்பதை உணரத் தொடங்கினர். இது முதலாளிகளின் வேலைத்திட்டமாக இருப்பது போதுமானது அல்ல, அது மக்கள் தொகையின் பரந்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாக மாற வேண்டியிருந்தது.

1965 ஆம் ஆண்டில், கபாடாங் மக்காபயன் (கே.எம்) நிறுவப்பட்ட குறுகிய காலத்திற்கு பின்னர் மற்றும் பெர்டினாண்ட் மார்கோஸை ஆதரிக்குமாறு சீசன் கே.எம்-க்கு அறிவுறுத்துவதற்கு சற்று முன்னதாக, சிசன் அமெரிக்க தூதரகத்தின் முன் ஒரு உரையை நிகழ்த்தினார். மணிலா புல்லட்டின் படி, “நாங்கள் பிலிப்பைன்ஸ் முதலாளிகளின் பக்கம் இருக்கின்றோம்,” என அவர் அங்கே பார்வையாளர்களிடம் கூறியுள்ளார். இதுவே அவரது அடிப்படை முன்னோக்கு.

1966 இல், “அரசியல் செயற்பாட்டாளராக தேசியவாதி” என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு உரையில், இந்த முன்னோக்கை அவர் மிகத் தெளிவாக விவரித்தார். பிலிப்பைன்ஸ் சமூகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று அவர் பார்வையாளர்களிடம் கூறினார்.

நான்கு வர்க்கங்களின் கூட்டு (சி.பி.பி., வரைந்தது: துலோங் சா பாக்துரோ)

”வர்க்கப் போக்குகள், சட நலன்கள் மற்றும் சித்தாந்தத்தைப் பொறுத்தவரை, இடதுசாரி பிரிவானது தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளால் நிரப்பப்படும். மத்திய பிரிவானது நடுத்தர வர்க்கம் என்று அழைக்கப்படுபவர்களின் மூன்று அடுக்குகளைத் தழுவிக்கொள்வதுடன் இந்த மூன்று அடுக்குகளும் தங்களை இடது, நடுத்தர மற்றும் மத்தியதர பிரிவில் வலது என விவரிக்கப்பட முடியும். இடது நடுத்தர பிரிவானது புத்திஜீவிகள், மற்றும் நாம் குட்டி முதலாளித்துவம் என அழைக்கக் கூடிய சுய சார்புடைய சிறு சொத்து உடமையாளர்கள்; மத்திய நடுத்தர பிரிவானது நாங்கள் தேசிய அல்லது நடுத்தர முதலாளித்துவம் என்று அழைக்க கூடிய தேசியவாத தொழில்முனைவோர் ஆவர்; மற்றும் வலது நடுத்தர பிரிவினர், உள்ளூர் தொழில்துறையில் பகுதியளவு முதலீட்டாளர்களாகவும், பகுதியளவு தரகர்களாகவும் இருக்கும் வணிகர்களாவர். வலதுசாரி பிரிவானது தரகர்கள், நில உடமையாளர்கள் மற்றும் அவர்களின் வெறித்தனமான அறிவுசார் மற்றும் அரசியல் முகவர்கள் போன்ற தேசியவாத-விரோத சக்திகளை உள்ளடக்கியதாகும்.”

வெகுஜன இயக்கத்தின் அரசியல் பணி என்ன? சீசன் தொடர்ந்தார்:

"தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதான மற்றும் பிரமாண்ட சக்திகள், முன்னேற்றம் மற்றும் ஜனநாயகத்தின் எதிரிகளால் ஆன வலதுசாரிகளை தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக சமநிலையை சாய்ப்பதன் பேரில், புத்திஜீவிகள், சிறு சொத்து உரிமையாளர்கள் மற்றும் சுயாதீன கைவினைக் கலைஞர்களுடன் ஒன்றிணைவதும், தேசியவாத தொழில்முனைவோரை வென்று, குறைந்தபட்சம், சரியான மத்தியதர சக்திகளை நடுநிலையாக்குவது அவசியம். இதன் விளைவாக வரும் ஐக்கியத்தையே நாம் தேசியவாத அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஐக்கியம் என்று அழைக்கிறோம்.”

மக்களில் பெரும்பான்மையினராக இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அடிப்படையான கடமை, தங்கள் சொந்த சுயாதீன நலன்களுக்காக போராடுவது அல்ல, மாறாக ”நடுத்தர மத்தியதர -தேசியவாத முதலாளித்துவத்தை வென்றெடுப்பதாகும்.

இது விற்பதற்கு கடினமான விஷயம். சீசன் திறம்பட ஊக்குவிப்பது அனைத்து பிரிவினருக்கும் பயன் தரும் பொருளாதாரம் ஆகும். இது இன்னும் அந்த பெயரைப் பெறவில்லை, ஏனென்றால் இது இன்னமும் ரீகனின் சகாப்தம் அல்ல. எவ்வாறாயினும், ரெக்டோவின் கூற்று மற்றும் சீசனின் ஆரம்பகால வெளிப்பாடுகளில் இது ஒரே வடிவத்தை எடுத்தது. நீங்கள் பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தை மேம்படுத்தினால், தொழிலாள வர்க்கம் உட்பட அனைவருக்கும் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் கிடைக்கும். நேர்மையாக பேசுவதாயின் “உங்கள் முதலாளிக்கு ஆதரவு கொடுங்கள், அது உங்களுக்கு நல்லதாக இருக்கும்” என்று ஒரு தொழிலாளியிடம் கூறுவதானது ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்குவதற்கான பயனுள்ள சுலோகம் அல்ல.

சீசனின் பட்டதாரி வாழ்க்கை முடிந்து, அவர் இந்தோனேசியா சென்றார். அதற்கான வசதியை இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பக்ரி இலியாஸ் செய்துகொடுத்தார். இந்தோனேசியாவில், சீசன், பார்த்தாய் கொமுனிஸ் இந்தோனேசியா (பி.கே.ஐ.) என்ற பெரிய கட்சியுடன் நெருக்கமாக பணியாற்றியதுடன் அவர் நாட்டில் அரை ஆண்டு காலம் தங்கியிருந்த காலத்தில், நான் குறிப்பிடுகின்ற ஸ்டாலினிசம் என்ற வேலைத்திட்டத்தை அவர் கற்றுக்கொண்டார். இதன் மூலம் என்ன சொல்கிறேன் என்பதை துல்லியமாக விளக்க என்னை அனுமதிக்கவும்.

ஸ்டாலினிசம் என்பது வெறுமனே போலி விசாரணைகள், களையெடுப்புகள், வழிபாட்டுக்குரிய பெரும் தலைவர், போன்ற பெயர்களுடன் பிரபலமாக தொடர்புடைய ஒரு இயக்கமுறை, என்று நான் கருதவில்லை. இப்படியான விஷயங்கள் ஸ்டாலினிசத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் அவை அதன் இன்றியமையாத வெளிப்பாடுகளே அன்றி, அந்த விடயத்தின் சாராம்சம் அல்ல. ஸ்ராலினிசம் என்பது முதலும் முக்கியமுமான ஒரு அரசியல் வேலைத்திட்டம் ஆகும். வரலாற்றுப் பதிவு இதன் பாரதூரமான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.

ஸ்டாலினிசம் என்பது ஆளும் அதிகாரத்துவங்களின் நலன்களை முதலில் மொஸ்கோவிலும் பின்னர் பெய்ஜிங்கிலும் வெளிப்படுத்திய ஒரு அரசியல் வேலைத்திட்டமாகும். ஸ்டாலினை மிகமுதன்மையான பிரதிநிதியாக கொண்ட இப்படியான சமூக அடுக்குகள், உலக சோசலிச புரட்சியை ஊக்குவிப்பதன் மூலமாக அன்றி, சோவியத் ஒன்றியத்தின் தேசிய பொருளாதார வளர்ச்சியில் தான் தங்களின் நலன்கள் சிறந்த முறையில் பேணப்படும் என்று உணரத் தொடங்கின. இந்த தேசிய பொருளாதாரம் தான் அவர்களின் சலுகைகளுக்கு நிதியளித்து ஸ்திரப்படுத்தியது. இந்த நோக்கத்துக்கு சேவை செய்யும் வகையில், இதற்கு முன்பிருந்த அனைத்து மார்க்சிசத்திற்கும் முரணான, லெனின் கனவு கூட கண்டிராத, ஒரு அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்தனர் –அது தனிநாட்டில் சோசலிசம் என்பதாகும். தனியொரு நாட்டில் எல்லைகளுக்குள் சோசலிசத்தைக் கட்டியெழுப்ப முடியும் என அவர்கள் வாதிட்டனர்.

சோசலிசம் என்பது முதலாளித்துவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு படியாக இருக்க வேண்டும் என்பது மார்க்சிசத்தின் கருத்தாக இருந்தது, இதனால் முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த சாதனைகளின் மேல் அது கட்டியெழுப்பப்பட வேண்டும். இப்படியான சாதனைகளின் மத்தியில் உலக சந்தையின் உருவாக்கமும் அடங்கும். இவ்வாறாக சோசலிசத்தை பூகோள அளவில் மட்டுமே அடைய முடியும். ஸ்டாலினின் கீழ் சோவியத் ஒன்றியத்தின் தலைமையால் முன்வைக்கப்படும் முன்னோக்கு இது அல்ல. இதுவே ஸ்டாலினிச வேலைத்திட்டத்தின் மையமாக இருந்தது: தனி ஒரு நாட்டில் சோசலிசம்.

இந்த முன்னோக்கை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் ஸ்டாலினை லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இடது எதிர்ப்பியக்கம் என்று அறியப்பட்டது கடுமையாக எதிர்த்தது. ஸ்டாலினுக்கு எதிராக, ட்ரொட்ஸ்கி நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தை முன்வைத்தார். அது உலகெங்கிலும் சோசலிச புரட்சிகளை முன்னெடுத்து செல்லும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே சோசலிசத்தை அடைய முடியும்; அதை தனி ஒரு நாட்டிற்குள் கட்டியெழுப்ப முடியாது, என்று அது வாதிட்டது. எனவே, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒழுங்கமைப்பதே அரசியல் கடமையாகும்.

தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற வேலைத்திட்டத்திற்கான சேவையில், ஸ்டாலினிசத்தின் சர்வதேச நலன்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவ சக்திகளுடன் வர்த்தக உறவுகளையும் இராஜதந்திர உறவுகளையும் தக்கவைத்துக்கொள்வதாக இருந்தன. அதற்கு பொருட்களுக்கான சந்தைகள், கனரக தொழில்துறையை உருவாக்குவதற்கான விநியோக மூலாதாரம், மற்றும் அதன் எல்லைகளில் ஸ்திரத்தன்மையும் அதற்கு தேவைப்பட்டது. அத்தகைய விஷயங்களை அவர்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும், பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் என்ன எடையைக் கொண்டு வர முடியும்?

ரஷ்ய புரட்சியின் வெற்றி மற்றும் மார்க்சிசத்தின் பாரம்பரியமும் தனக்கு சொந்தமானது என்று கட்சி கூறிக்கொள்வதானது, ஸ்டாலினுக்கும் அதிகாரத்துவத்திற்கும் ஒரு பிரமாண்டமான அரசியல் மூலதனத்தை அளித்தது: அதுதான் பூகோளம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் காரியாளர்கள்.

அவர்கள் இத்தகைய காரியாளரை முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவினருடன் கூட்டு சேருமாறு அறிவுறுத்தினர். இந்த வழியில் அவர்கள் ஒரு வெகுஜன இயக்கத்தின் ஆதரவைப் பயன்படுத்திக்கொண்டு, பூகோள ரீதியாக உள்ள ஆளும் வர்க்கத்துடன் பேச்சுவார்த்தையை நடத்த முடியும். முதலில் போல்ஷிவிக்குகளின் எதிராளியான மென்ஷெவிக்குகளினால் முன்வைக்கப்பட்ட இரண்டு கட்ட புரட்சி என்ற ஒரு பழைய கோட்பாட்டை புனருத்தாரணம் செய்வதன் மூலம், ஸ்டாலினிஸ்டுகள், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதிக்கு வழங்கும் ஆதரவுக்கு கோட்பாட்டு நியாயத்தை உருவாக்கினர்.

பிலிப்பைன்ஸ் போன்ற முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில், சோசலிசத்துக்காகப் புரட்சிகரப் பணிகளை செய்வதற்கு இன்னும் காலம் வரவில்லை என்று இரண்டு கட்ட கோட்பாடு வாதிட்டது. அதாவது, தேசிய மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளை முன்னெடுப்பது முதலில் அவசியமாக இருப்பதுடன், இவற்றில் நில சீர்திருத்தமும் அடங்கும். இவை மிக முக்கியமான பணிகளாக இருந்தன. இந்த தேசிய ஜனநாயக பணிகள் பூர்த்தி செய்யப்படும் வரை சோசலிச நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சி செய்வது சாத்தியமற்றது, என்று இரண்டு கட்ட கோட்பாடு வாதிட்டது.

இதனால் பணிகள் இன்னமும் சோசலிசத்துக்கானவையாக இருக்கவில்லை, மாறாக குணாம்சத்தில் முதலாளித்துவமாக இருந்தன, மற்றும் இதன் விளைவாக, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி அவசியமாக ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்கும், என்று ஸ்டாலினிஸ்டுகள் வாதிட்டனர் -இந்த அடுக்குகளை அவர்கள் ”தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவு” என்று குறிப்பிடுகின்றனர்.

இதுவே ஸ்டாலினிசத்தின் அடிப்படை வேலைத்திட்டமாகும்: அதாவது, தனி ஒரு நாட்டில் சோசலிசம், இரண்டு கட்ட புரட்சி மற்றும் முதலாளித்துவ வர்க்கத்துடனும் கூட்டணியை கோருகின்ற, நான்கு வர்க்கங்களின் கூட்டு.

பின்னர் நான்காம் அகிலத்திற்குள் தங்களை ஒழுங்கமைத்துக்கொண்ட ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பு அணியும், இந்த வேலைத்திட்டத்தை எதிர்த்து, முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம், தேசிய மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொள்ள அடிப்படையில் இலாயக்கற்றவை என்று வாதிட்டனர்.

உதாரணமாக, பிலிப்பைன்ஸில் உள்ள முதலாளிகள், நில சீர்திருத்தத்தை மேற்கொள்ள மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் நில உடமையாளர்களில் இருந்து வேறுபட்ட ஒரு வர்க்கம் அல்ல. பெரிய முதலாளிகள் அனைவரும் உண்மையில் மேல் தட்டு நில உடமையாளர்கள்தான். கடந்த 50 ஆண்டுகளில் சி.பி.பி. இன் கூட்டணிகளின் வரலாற்றை நீங்கள் ஆராய்ந்தால், அவர்களது கூட்டாளிகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கரும்புத் தோட்ட நிலப்பிரபுக்களின் பிரதிநிதிகளாக இருந்தனர். இவர்கள், நில சீர்திருத்தத்தை மேற்கொள்வதில் எந்தவொரு அக்கறையும் கொண்ட சக்திகள் அல்ல. தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, அவர்களது சொந்த நலன்களுக்காக, விவசாயிகளுக்கும் தலைமை வகித்துக்கொண்டு, தேசிய ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்ற முடிவதுடன், இதற்கு அவர்கள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும், என்று ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.

ஸ்ராலினிசத்தின் வேலைத்திட்டம் குறித்து நான் அர்த்தப்படுத்துவது என்னவென்று நிலைநாட்டிய பிறகு, 1960கள் மற்றும் 1970களின் முற்பகுதியில், அதன் அரசியல் வெளிப்பாடு என்ன என்பதை நான் ஆராய விரும்புகிறேன்.

சீசன் 1967 இன் ஆரம்பத்தில் இளைஞர் அவையினர் மத்தியில் உரையாற்றும் போது, மாவோவை கணிசமாக மேற்கோள் காட்டினார். மாவோ கூறியதாவது:

”கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவத்தை பார்த்து பயப்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட நிலைமைகளில் அதன் வளர்ச்சிக்கு ஆதரவாக வாதிட வேண்டும் என்பதை, சிலர் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர். எங்கள் பதில் எளிதானது. வெளிநாட்டு ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தின் அடக்குமுறைக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் முதலாளித்துவ வளர்ச்சியை பிரதியீடு செய்வது ஒரு முன்னேற்றம் மட்டுமல்ல, அது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வுப் போக்காகும். அது பாட்டாளி வர்க்கத்திற்கும் அதே போல் முதலாளித்துவத்திற்கும் பயனளிக்கிறது, மேலும் முந்தையதற்கு இன்னும் அதிகமாக பயனளிக்கலாம்.”

இங்கு, முதலாளித்துவம் உண்மையில் முதலாளித்துவத்தை விட பாட்டாளி வர்க்கத்திற்கு தான் சிறந்தது என்று மாவோ கூறுவதை கவனியுங்கள். ஸ்டாலினிசமானது மார்க்சியத்தின் போர்வையில் அனைவருக்கும் பயனிளிக்கும் ஒரு வாதத்தை ரெக்டோவிற்கு வழங்கியுள்ளது. சீசன், மாவோவிடம் இருந்து மேற்கோள் காட்டுவதை தொடர்ந்தார்:

”இன்று சீனாவில் மிதமிஞ்சி இருப்பது உள்நாட்டு முதலாளித்துவம் அல்ல, மாறாக வெளிநாட்டு ஏகாதிபத்தியமும் உள்நாட்டு நிலப்பிரபுத்துவமே ஆகும், உண்மையில், நாம் முதலாளித்துவத்தை மிகக் குறைவாகவே கொண்டுள்ளோம்.”

இந்த முன்னோக்கை சீசன் விவரித்தார்: “ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னதாக, முதலில் முதலாளித்துவ-ஜனநாயக நிலைமைகள் இருக்க வேண்டும் என்பது மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இன்று நமக்கு பிலிப்பைன்ஸில் தேவைப்படுவது, சோசலிசம் என்ற கேள்வி குறித்து நாம் பிளவுபடுவதற்கு முன்னதாக, நமது சொந்த இறையாண்மையை உறுதிப்படுத்தவும், பிலிப்பைன்ஸ் ஜனநாயகத்தை அடையவும் போதுமானளவு வலிமையான ஒரு நனவான தேசிய ஐக்கியமாகும்.”

இது தான் விஷயத்தின் சாராமாக இருந்தது. சீசனின் படி, பிலிப்பைன்ஸிற்கான சோசலிச முன்னோக்கு எதுவெனில், அங்கு சோசலிசத்திற்கு இன்னும் நேரம் வரவில்லை என்பதுதான். முற்போக்கான முதலாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுடன் நட்பு கொள்வது அவசியம்.

சீசனின் காலத்தில் பி.கே.பி. இன் தலைமைத்துவத்தின் கீழ் கட்சி ஒப்புதல் அளித்த தேசிய முதலாளித்துவத்தின் முதல் முற்போக்கான பிரதிநிதி ஜனாதிபதி டியோஸ்டாடோ மகபகல் ஆவார்.

1962 இல், இந்தோனேசியாவிலிருந்து திரும்பியபோது, சீசன் புதிதாக அமைக்கப்பட்ட, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பி.கே.பி. செயற் குழுவினுள் கொண்டு வரப்பட்டார். குழுவிலுள்ள மற்ற உறுப்பினர்களில் மத்தியில் தொழிற்சங்கத் தலைவர் இக்னாசியோ லசினாவும் இருந்தார். அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணங்களை நான் புரட்டிப் பார்த்த போது, லக்சினா கட்சியின் செயற்குழுவில் உறுப்பினராக மட்டுமல்லாமல், அமெரிக்க தூதரகத்தில் வசித்து வந்த ஒரு சி.ஐ.ஏ. பிரதிநிதிக்கு தவறாமல் தகவல் அளிப்பவராகவும் இருந்ததைக் கண்டுபிடித்தேன். லட்சினா தன்னுடன் தொடர்புடையவரை தவறாமல் சந்தித்து கட்சிக்குள் நடக்கும் முன்னேற்றங்கள் குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தார்.

1960 களில் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் ஒன்று, லாப்பியாங் மங்ககாவா (எல்.எம்) என்று அழைக்கப்படும் ஒரு தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டதாகும். இது அனைத்து பிரதான தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து, 1963 ஜனவரியில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக உருவான தொழிலாளர்களின் சுயாதீனமான உறுப்பு ஆகும். இதுபோன்ற ஒன்று இதற்கு முன்பு இருந்ததில்லை. எல்.எம். இல் செயலாளர் நாயகம் என்ற மிக சக்திவாய்ந்த பதவி லக்ஸினாவுக்கு வழங்கப்பட்டஅதே சமயம், சீசன் பிரச்சார துணைத் தலைவராக பணியாற்றினார். இந்த பதவி, கட்சியின் அனைத்து பொது அறிக்கைகளுக்கும் அவரை பொறுப்பாளி ஆக்கியது.

ஏழு மாதங்களுக்குள் சீசனும் லக்சினாவும், சுயாதீன தொழிலாளர் கட்சியை, ஜனாதிபதி மகபகலின் ஆளும் லிபரல் கட்சியுடன் (எல்.பி.) இணைத்தனர். மகபகல், இந்தோனேசியாவில் சுகர்னோவுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டிருந்ததுடன், பி.கே.ஐ., பி.கே.பி. இரண்டும் இதை புவிஅரசியல் அணிசேரா கூட்டணியை நோக்கிய ஒரு அடியெடுப்பாக பார்த்தன. இதுதான் தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரதிநிதியாக அவரை அவர்கள் பிரகடனம் செய்வதன் நோக்கமாக இருந்தது.

1963 துறைமுக வேலைநிறுத்தம்

நாட்டின் வரலாற்றில் மிகக் கடுமையான தொழிலாளர் கிளர்ச்சியை அரசாங்கம் குரூரமாக ஒடுக்கிய நிலைமையின் மத்தியில், எல்.பி. உடன் எல்.எம். ஐ ஒன்றிணைக்க சீசனும் லக்சினாவும் ஏற்பாடு செய்தனர். 1963 இல், மனிலா துறைமுகத்தில் 3,000 சரக்கு ஏற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். நாட்டின் பிரதான துறைமுகத்தை மூடிய இந்த வேலைநிறுத்தம் 169 நாட்கள் நீடித்தது. வர்த்தக மையத்தை நிறுத்தியது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அரசாங்க துருப்புக்கள் மற்றும் கருங்காலிகளினால் கொலை செய்யப்பட்டனர். யாருக்கும் வேலைநிறுத்த கால ஊதியம் வழங்கப்படாத காரணத்தால் சில தொழிலாளர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தனர். ஆகஸ்ட் நடுப்பகுதியில் வெளியான உத்தியோகபூர்வ மதிப்பீடுகள், துறைமுக வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட வணிக இழப்புகளை ஒரு பில்லியனுக்கும் அதிகமான பெசோக்கள் என்றும், மேலும் ஒரு மாதம் இழப்பு தொடரும் என்றும் குறிப்பிட்டன.

துறைமுகம் நேரடியாக அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. தொழிலாளர்கள் மறியல் மற்றும் வேலைநிறுத்தங்களை செய்தது மக்கபகல் ஆட்சிக்கு எதிராகவே அன்றி ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக அல்ல. மக்கபகல், 1963 ஆகஸ்ட் 6 அன்று, சுகர்னோவுடன் மனிலா மாநாட்டை முடித்துக்கொண்ட நிலையில், ஜொமா சீசனும் இக்னஸியோ லக்ஸினாவும், லபியங் மங்ககாவாவை தொழிலாளர் கட்சியுடன் இணைப்பதை மேற்பார்வை செய்தனர்.

எல்.எம். மற்றும் எல்.பி. இரண்டும் கையெழுத்திட்ட ஒரு ஆவணம் அறிவித்ததாவது,

“ஜனாதிபதி டியோஸ்டாடோ மகபகலின் தலைமையில் இப்போது உத்வேகத்துடன் மேற்கொள்ளப்படும் சகாப்தம் படைக்கும் சமூக மற்றும் தேசிய சீர்திருத்தங்கள் பற்றி அறிந்துள்ளோம்;

”ஜனநாயக மாற்றத்திற்கான அனைத்து சக்திகளின் ஒற்றுமைக்கு குறைவானது எதுவும் இந்த சீர்திருத்தங்களின் வெற்றியை உறுதிப்படுத்த முடியாது என்று நம்புகிறோம்...

“சீர்திருத்த வேலைத்திட்டங்களை எதிர்க்கும் சக்திகள், நெஷனலிஸ்டா கட்சியின் பதாகையின் கீழ் ஒன்றிணைந்துள்ளன என்பதை உணர்ந்து; ... ”உடனடியாக திறம்பட கட்சிகளை ஒன்றிணைக்க உடன்படுகிறோம்...”

தொழிலாள வர்க்கத்திற்கு அவர்கள் முன்வைத்த தர்க்கம் இதுதான்: மக்கபகல் சீர்திருத்தங்களைச் செய்து கொண்டிருந்ததோடு, சீர்திருத்தத்தை எதிர்க்கும் சக்திகள் எல்.பி. இன் அரசியல் போட்டியாளரான நெஷனலிஸ்டா கட்சியில் ஒன்றிணைந்தன. இந்த அடிப்படையில் சீசனும் லக்ஸினாவும் சுயாதீன தொழிலாளர் கட்சியை மக்கபகலின் எல்.பி. உடன் இணைத்தனர்.

கப்பலில் இருந்த தொழிலாளர்கள் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் இருந்தனர், மேலும் இணைப்பு ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டபோது வேலை நிறுத்தத்துக்கு இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. துறைமுகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எல்.எம். இன் பொது வேலைநிறுத்தத்தை அழைக்க விரும்புவதாக லக்ஸினா பகிரங்கமாக அறிவித்திருந்தார். மகபகலுடனான பேச்சுவார்த்தை உறவுகளை நடத்த இந்த அச்சுறுத்தலைப் பயன்படுத்திய அவர், பின்னர் பொது வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அதை நிறுத்திவிட்டு, துறைமுக தொழிலாளர்களை கைவிட்டார்.

செப்டம்பர் தொடக்கத்தில், துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்னும் நடந்து கொண்டிருக்கையில், பிலிப்பைன்ஸ் விமானத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து உள்நாட்டு பயணங்களையும் நிறுத்தினர். மகபகல் பிலிப்பைன்ஸ் பொலிஸ் படையை அனுப்பியதுடன், அவர்கள் செப்டம்பர் 8 அன்று மறியல் போராட்டம் செய்த தொழிலாளர்களை துப்பாக்கிகத்தி முனையில் குத்தினர். இப்படி ஒரு சம்பவம் நடந்தது பற்றி இந்த கூட்டத்தில் இருப்பவர்கள் யாருக்காவது தெரியுமா என நான் சந்தேகிக்கின்றேன். தொழிலாளர் அமைப்புகளின் தலைமைக்கு பொறுப்பானவர்கள் அவர்களைக் காட்டிக் கொடுத்ததால் அவை வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் சீசன் எதில் மும்முரமாக இருந்தார்? அவர் மகபகலின் நில சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கையேட்டை எழுதிக் கொண்டிருந்தார். மகபகல் நிர்வாகத்தின் நில சீர்திருத்தம், ஃபோர்டு அறக்கட்டளையின் வுல்ஃப் லடெஜின்ஸ்கி என்ற பெயர் கொண்ட ஒருவரால் எழுதப்பட்டது. அதன் செயல்பாடு பங்குதாரர்களை ரொக்க வாடகை செலுத்தும் குத்தகைதாரர்களாக மாற்றுவதாகும். 1960 களின் பிற்பகுதியில் நேர்காணல் செய்யப்பட்ட விவசாயிகள் இந்த மாற்றம் தங்கள் வாழ்க்கையை மோசமாக்கியதாக அறிவித்தனர்.

சீசன் இந்த கையேட்டை எல்.எம். இற்காக எழுதினார் என்பது எங்களுக்குத் தெரியும், ஏனென்றால் அவர் தனது தனிப்பட்ட இணையதளத்தில் தனது எழுத்துக்களின் நூலியல் குறித்த தனது வெளியீடுகளில் ஒன்றாக அதை பட்டியலிட்டுள்ளார். சீசனின் புத்தகத்தின் முன்பக்கம் மகபகலின் புன்னகைக்கும் ஒரு படத்தை கொண்டிருந்ததுடன் அதில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு வசனம் “ஜனாதிபதி மகபகலுக்கு. பிலிப்பைன்ஸ் விவசாயியை முன்னேற்றுவதற்கு அவர் நடத்தும் அயராத போராட்டத்திற்காக,” என்று கூறுகின்றது. சீசன் தனது வாசகர்களிடம் இதை கூறினார்.

”ஜனாதிபதி டியோஸ்டாடோ மகபகல், நிலப் பிரச்சினையை வெறுமனே பங்குக் குத்தகையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மற்றும் / அல்லது ஊர் காவலர் படை மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மூலமாக கிளர்ச்சி செய்யும் விவசாயிகளை நசுக்குவதனால் தீர்க்க முடியாது என்று நம்புகிறார்.

“விவசாய நில சீர்திருத்த சட்டத்தொகுப்பேட்டில், அடிப்படை பிரச்சினைக்கு அடிப்படை தீர்வு வழங்கப்பட்டுள்ளது: பங்கு-குத்தகை என்பது முற்றிலும் அகற்றப்படுவதுடன், அதன் இடத்தில் உடமையாளர்-சாகுபடி செய்யப்பட வேண்டும். இந்த முதன்மை நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சட்டத்தொகுப்பேடானது நில சீர்திருத்த முகமைகள் இவற்றை செயல்படுத்துவதற்கான முழுமையான தகவலை வழங்குகிறது. இந்த முகமைகளின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் இந்த அறிமுகத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.”

பிலிப்பைன்ஸ் சமூகம் மற்றும் புரட்சி

1963 இல் ஜோமா சீசன் எழுதியது இதுதான். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பிலிப்பைன்ஸ் சமூகம் மற்றும் புரட்சி பற்றி எழுதினார், அது பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான படைப்பாக மாறியது. 1963 இல் அவர் முன்னணி ஊக்குவிப்பாளராக பணியாற்றிய நில சீர்திருத்த தொகுப்பேடு பற்றி அவர் சொல்ல வேண்டி இருந்தது இதுதான்:

"தன்னை மேலும் முற்போக்கானதாகக் காட்டவும், விவசாயிகளை மோசடி செய்யவும், மகபகல் கைப்பாவை ஆட்சி விவசாய நில சீர்திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியது. முந்தைய அனைத்து நில சீர்திருத்தச் சட்டங்களையும் போலவே, இந்த சட்டக் கோவையும் அதன் பளபளப்பான பொதுவான தன்மைகளைக் காட்டும்போதும் மற்றும் நில உரிமையாளர்களுக்கு சாதகமான விதிகளை கொடுத்திருப்பது அம்பலப்படுத்தப்படும் போதும், அதில் ஒன்றும் இல்லை என்பதை காட்டுகின்றது. ஒரு சில நில சீர்திருத்த திட்டங்களுக்குப் பின்னர், சட்டக்கோவையின் திவால்நிலை வெளிப்படையானது....”

மகபகலின் நில சீர்திருத்தம் ”நில உடமையாளர் வர்க்கத்தின் தொடர்ச்சியான பொய்களை மறைப்பதற்கான ஆர்ப்பாட்டமான வார்த்தை திரட்டுகளே.”

1970 இல் இருந்தது இதுவே. மாதிரியை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: கட்சி துதர்தேவை ஆதரிக்கிறது; துதர்தேவை கட்சி ஆதரித்ததாக கூறுவது ஒரு “அப்பட்டமான பொய்” என்று அவர்கள் அறிவிக்கின்றனர். மகபகலின் நில சீர்திருத்தத்தின் கையேட்டை சீசன் எழுதினார்; மக்கபகலின் நிலச் சீர்திருத்தங்கள் நில உடமையாளர்களின் நலன்களை ஊக்குவிப்பதாகவும் விவசாயிகளை மோசடி செய்ததாகவும் சீசன் அறிவித்தார். பொய்களுக்கு மேல் பொய்கள்.

மகபகலின் பயன் ஒரு வரம்புக்குட்பட்டதாக நிரூபிக்கப்பட்டதுடன் அவர் 1964 இல் சுகர்னோவுக்கு எதிராக திரும்பினார். மகபகலை ஆதரிப்பதை விட்டு மார்கோஸுக்கு ஆதரவாக கட்சியின் முன்னணி அமைப்புகளுக்குள் மாற்றம் கொண்டு வருவதை ஜோமா சீசன் மேற்பார்வையிட்டார். வியட்நாமில் அமெரிக்கா நடத்தும் போரிலிருந்து பிலிப்பைன்ஸை மார்கோஸ் விலக்கி வைப்பார் என்று கூறி மார்கோஸை ஆதரிக்குமாறு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு கட்சி அறிவுறுத்தியது.

ஃபெர்டினாண்ட் மார்கோஸ்

1964 இல் லின்டன் ஜோன்சன் மகபகலை அணுகி, வியட்நாமில் அதிகமான அமெரிக்க துருப்புகளை குவிக்கம் நோக்கில், அந்த நாட்டுக்கு பிலிப்பைன்ஸ் துருப்புக்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். இந்த வேண்டுகோள் டோன்கின் வளைகுடா சம்பவத்திற்கு முன்னர் விடுக்கப்பட்டது என்பது வரலாற்று ரீதியாக குறிப்பிடத்தக்கது. மகபகல் துருப்புக்களை அனுப்புவதாக உறுதியளித்து சட்டமன்றத்திற்கு ஒரு மசோதாவை அனுப்பினார். பின்னர் செனட் தலைவர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ், மகபகலைத் தாக்கி, ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

மார்கோஸ் துருப்புக்களை வியட்நாமில் இருந்து விலக்கி வைப்பார் என்ற கூற்றின் அடிப்படையில், சீசன் நெஷனலிஸ்டா கட்சிக்கு ஆதரவாக தொடர்ச்சியான உரைகளை நிகழ்த்தியதுடன், 1965 நவம்பரில், அவர் விவசாய அமைப்பான MASAKA, தொழிலாளர் அமைப்பான லிபியங் மங்கக்வா மற்றும் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இளைஞர் அமைப்பான கபடாங் மகபயன் ஆகியவற்றுக்கு ஃபெர்டினாண்ட் மார்கோஸுக்கு ஆதரவளிக்கும்படி அறிவுறுத்தினார்.

மார்கோஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரத்தின் பின்னர், வாஷிங்டன் போஸ்டின் ஸ்டான்லி கர்னோவுக்கு அவர் அளித்த பேட்டியில், பிலிப்பைன்ஸ் துருப்புக்களை வியட்நாமிற்கு அனுப்பப்போவதாக அறிவித்தார்.

கபடாங் மகபயன் மார்கோஸை ஆதரிக்க அறிவுறுத்தப்படுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னதாகவே அது ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்தாபக மாநாட்டுக்கு அவர் ஆற்றிய உரையில், ஜோமா சீசன், இப்போது பழக்கப்பட்டதாக இருக்கும் அதே வாச்சவடாலில் தனது அவையினருக்கு கூறியதாவது:

“ஏகாதிபத்தியத்தின் ஒரு பக்கத்தில் தரகர்களும் பெரிய நில உடமையாளர்களும் உள்ளனர். தேசிய ஜனநாயகத்தின் பக்கத்தில் பிலிப்பைன்ஸ் தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகர்களால் ஆன தேசிய முதலாளித்துவம்; சிறிய-சொத்து உரிமையாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுநர்களை கொண்ட குட்டி முதலாளித்துவம்; மற்றும், தொழிலாள வர்க்கம் மற்றும் இன்றைய பெரும்பான்மையான பிலிப்பைன்ஸ் இளைஞர்களை கொண்ட விவசாயிகளையும் உள்ளடக்கிய நமது மக்களின் பரந்த பிரிவினரை கொண்டது.”

பி.கே.பி. இன் போர்க்குணமிக்க இளைஞர் பிரிவு, நான்கு வர்க்கங்களின் கூட்டு மற்றும் முதலாளித்துவ வர்க்கத்துடனான ஒரு கூட்டணி என்ற முன்னோக்கில் ஸ்தாபிக்கப்பட்டது.

1965 முற்பகுதியில் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் பதவியேற்றதுடன் தேசிய வளர்ச்சிகளினால் அன்றி, பூகோள ரீதியான சூழ்நிலைகளின் விளைவாக, ஒரு பிரமாண்டமான சமூக நெருக்கடி வளர்ச்சி கண்டது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மார்ஷல் ரைட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வால்டர் ரோஸ்டோவுக்கு ஒரு ரகசிய குறிப்பை அனுப்பினார், அதில் அவர் கூறியதாவது:

”மணிலாவிற்கான எங்கள் அடுத்த தூதர் சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளின் ஆழத்தை மிகைமதிப்பிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கும். பிலிப்பைன்ஸில் அறிவார்ந்த மக்கள் சமீபத்திய எதிர்காலத்தில் ஒரு பரந்த சமூக எழுச்சி வரவிருக்கிறது என்று கணிப்பது பொதுவான விஷயமாக உள்ளது. தற்போதைய ஜனாதிபதி தான் கடைசியாக மக்கள் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தலைமை நிர்வாகியாக இருப்பார் என்று பரவலான பேச்சு உள்ளது. பல உயர் மட்ட அமெரிக்க அதிகாரிகள் பிலிப்பைன்ஸை ஆசியாவில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான மற்றும் மிகவும் இருண்ட அச்சுறுத்தலாக கருதுகின்றனர்.”

சுஹர்தோ, மார்கோஸ் மற்றும் பினோசே

ஒரு சமூக வெடிப்பு தவிர்க்கமுடியாதது. பூகோளமெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களின் பதிலுறுப்பு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாகவே இருந்தது. தற்போதைய நிலைமையின் நிழல்களை விட அதிகமானவை இங்கே உள்ளடங்கி உள்ளன. சமூக நெருக்கடியையும் பூகோளரீதியான சர்வாதிகார போக்கின் எழுச்சி அலையையும் நாம் எதிர்கொள்கிறோம்: சுகார்தோ, மார்கோஸ், பினோசே. பூகோள முழுவதும் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தைப் போலவே, பிலிப்பைன்ஸில் ஆளும் மேல்தட்டும் அதன் வர்க்க நிலைப்பாடு ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தது. வெறுமனே மார்கோஸ் மட்டுமன்றி, ஆளும் மேல் தட்டு முழுதும், சர்வாதிகார ஆட்சி வடிவங்களில் தான் இந்த ஆபத்துக்கான தீர்வை நாடின. ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியாக இருந்த ஒரு நபர் கூட அவர்களிடையே இல்லை.

பிலிப்பைன்ஸில் பொலிஸ்-அரசு ஆட்சிக்கான கட்டமைப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் எழுதப்பட்டது. அது அதன் முன்னாள் காலனியின் அரசியலமைப்பில் இராணுவச் சட்டத்தை எழுதி, வழக்குகள் ஜூரிகள் மன்றால் விசாரிக்கப்பட முடியாது என்றும் எழுதியது. மக்கபகல், கார்சியா மற்றும் குய்ரினோ உட்பட பல முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் இந்த உட்பிரிவுகளைப் பயன்படுத்துவதாகவும் இராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்வதாகவும் சுட்டிக் காட்டியிருந்தனர்.

அவர்கள் தோல்வியடைந்த இடத்தில் மார்கோஸ் ஏன் வெற்றி பெற்றார்? உலகளாவிய சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கு வழிவகுத்த சமூக நெருக்கடியின் பின்னணியிலும், சர்வ வியாபகமாக மேல் தட்டினர் மத்தியில் உருவாகியுள்ள, இனிமேலும் ஜனநாயக மூடுதிரைகளை பயன்படுத்த முடியாது என்ற உணர்விலும் அவரது வெற்றி தங்கியிருந்தது. நான் ஒரு ஒப்புமைகளைப் பயன்படுத்த முடிந்தால்: ஃபெர்டினாண்ட் மார்கோஸால் சர்வாதிகாரம் நடைமுறைப்படுத்துவது, இசை நாற்காலிகள் போன்ற ஒரு விளையாட்டு, அல்லது பிலிப்பைன்ஸில் நாங்கள் அழைப்பது போன்று, ஜெருசலேமுக்கான பயணம் ஆகும். ஆளும் உயரடுக்கு அனைத்தும், இராணுவச் சட்டம் விதிக்கப்படும் போது இசை நிறுத்தப்படும் என்பதை நன்கு அறிந்தவாறு, மலாக்காசங்கை சுற்றி வரும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகையில் அமர்பவர் யாராக இருந்தாலும், அவர் சர்வாதிகாரியாக இருப்பார்.

இந்த உள்ளடக்கத்தில் தான் சீன-சோவியத் பிளவு பிலிப்பைன்ஸ் முழுவதும் விளையாடியது. சீனாவின் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் மிகப்பரந்த பொருளாதாரங்கள் ஒருபோதும் ஒன்றிணைக்கப்படவில்லை என்பதே ஸ்டாலினிசத்தின் மீதான மிக மோசமான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற திட்டம் எப்போதுமே மார்க்சியத்தை காட்டிக் கொடுத்தது என்று நான் வாதிடுகிறேன், ஆனால் அதற்கு ஒரு நிச்சயமான தர்க்கம் இருப்பதாக நீங்கள் வாதிடலாம்: சோசலிசத்தை கட்டியெழுப்ப ஒரே ஒரு நாடு மட்டுமே அங்கே இருந்தது. ஆனால் 1949 இன் பின்னர், ஒவ்வொன்றும் தங்கள் சொந்த தேசிய நலன்களுடன், "தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை" கட்டியெழுப்ப உறுதி பூண்டிருந்தன பல நாடுகள் இருந்தன. அந்த தேசிய நலன்கள் தவிர்க்க முடியாமல் வேறுபட்டனவாக இருந்ததுடன், அந்த வேறுபாடு ஒரு சகோதர மோதலாக திரும்பியதோடு, அந்த மோதலே ஆயுத மோதலாகவும் மாற்றியதோடு உலகம் முழுவதும் கம்யூனிசத்தை பிளவுபடுத்தியது.

கிழக்கு ஐரோப்பாவின் இடைத்தடை மண்டலத்தின் பின்னால் மற்றும் மிகவும் நிலையான தொழில்துறை தளத்தில், சோவியத் ஒன்றியத்தால் வாஷிங்டனுடன் அமைதியான சகவாழ்வுக்கான ஒரு திட்டத்தை வெளிப்படுத்த முடிந்ததுடன், அதன் இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை உறுதிப்படுத்தும் வழிமுறையாக உலகெங்கிலும் உள்ள சர்வாதிகாரிகளுடன் உறவுகளைப் பின்பற்றியது. சுஹார்தோ மில்லியனுக்கும் அதிகமான இந்தோனேஷிய கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை படுகொலை செய்து பி.கே.ஐ. அமைப்பை நசுக்குவதை மேற்பார்வை செய்து, அதிகாரத்தை கைப்பற்றிய போது, இந்தோனேசிய இராணுவமானது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சோவியத் ஒன்றியத்தால் தங்களுக்கு விற்கப்பட்ட ஆயதங்களுடன் இயங்கியது. படுகொலைகள் நடத்தப்பட்ட தறுவாயில், மாஸ்கோவானது சுஹார்தோவுடன் நட்புறவை ஸ்தாபித்துக்கொண்டது.

பெய்ஜிங் இதற்கிடையில், தாய்வான், ஜப்பான், வியட்நாமில் அமெரிக்கப் போர் மற்றும் நாடகபாணியில் வளர்ச்சி குன்றிய பொருளாதாரத்யும் எதிர்கொண்டது. 1965 இல் அதன் எல்லைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலை தணிப்பதற்கு எடுத்த முயற்சியில், லின் பியாவோ, “நீடித்த மக்கள் போர்” என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார்: அதாவது உலக முழுவதும் கிராமப்புறங்களில் ஆயுதமேந்திய கொரில்லா இயக்கங்கள் போரிடுவது. இது இன்னமும் தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவுக்கு ஆதரவளிக்கும் திட்டத்திற்கு சேவை செய்த போதிலும், அது ஆளும் சர்வாதிகாரிகளுக்கு சேவை செய்வதற்கானதாக இருக்கவில்லை. நான் அவர்களை அழைக்க விரும்புவதைப் போலவே, சர்வாதிகார நாடகத்தில் ஒருவருக்கு பதிலாக மற்றொருவரை மாற்றும் நடவடிக்கை ஆகும்: பிலிப்பைன்ஸில் மார்கோஸை அகற்ற முயன்ற, ஆனால் கடைசியில் ஜனநாயகத்தின் பாதுகாப்புக்காக அதைச் செய்யாத, நினோய் அகுய்னோ போன்ற சக்திகளே அவை. தாங்களே அதிகார நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தனர்.

சி.சி.பி. இன் ஆயுத இயக்கமும், மற்றும் சமூக நெருக்கடி தொடர்பாக அதன் தீவிரவாத வாய்ச்சவடால் மூலம் இணங்கச் செய்துகொள்ளப்பட்ட சக்தியும், தேசிய முதலாளித்துவத்தின் சதிகார தட்டுக்களுக்கு சேவை செய்வதற்காக கொண்டு வரப்பட்டன.

இது எவ்வாறு அரங்கேறியது என்பது தொடர்பாக போதுமானதாக விவரிக்க எனக்கு நேரம் இல்லை, ஆனால் நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

மாஸ்கோவை நோக்கி திசையமைவுகொண்டிருந்த பி.கே.பி., 1966 இல் மார்கோஸ் நிர்வாகத்தில் சம்பளம் பெறும் பதவிகளைப் பெற்றது. மாஸ்கோவுடனான அவரது பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் ரகசியமாக வசதி செய்துகொடுத்திருந்தனர். கம்யூனிஸ்டு நாடுகளுடன் தொடர்பு கொள்வதைத் தடைசெய்கின்ற, பிலிப்பைன்ஸ் சட்டத்தில் சில பிற்போக்கு பிரிவுகளால் அவர் தடுக்கப்பட்ட காரணத்தால், அவரால் அந்த பேச்சுவார்த்தைகளை ஜனநாயக ரீதியாக நடத்த முடியவில்லை.

இன்றைய புரட்சி: ஜனநாயகம்

ஃபெர்டினாண்ட் மார்கோஸின் இராணுவச் சட்டத்தை நியாயப்படுத்தி புத்தகம் எழுதுபவர்களை அப்போது பி.கே.பி. கொண்டிருந்தது. இன்றைய புரட்சி: ஜனநாயகம் என்ற தலைப்பிலான நூல், கம்யூனிஸ்ட் கட்சியின் விளிம்பில் இருந்த அட்ரியன் கிறிஸ்டோபல் என்பவரால் எழுதப்பட்டது. “ஒரு புரட்சிகர கோட்பாடு இல்லாமல் புரட்சி கட்சி இருக்க முடியாது என்ற கூற்றுக்காக லெனினுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். … லெனின் புரட்சியை இரண்டு படிகளாக கருதினார்: முதலாவது முதலாளித்துவம், பின்னர் பாட்டாளி வர்க்கம்,” என்று அது அறிவித்தது.

இரண்டு கட்ட புரட்சி பற்றிய வாதம் ஸ்டாலினுடையது ஆகும், லெனினுடையது அல்ல, ஆனால் இதைவிட கவனத்தை ஈர்க்கும் விஷயம் என்னவென்றால், இது ஃபெர்டிணான்ட் மார்கோஸின் குரலாக இருந்தது. இராணுவ சட்டத்தை நியாயப்படுத்துவதன் பேரில் பி.கே.பி. ஆதரவாளரால் எழுதப்பட்டதில், லெனின், ஸ்டாலினின் முன்னோக்கை முன்வைத்ததாக சித்தரிப்பதோடு, பின்னர் இந்த வரிகளை சர்வாதிகாரியாக வரவிரும்புபவரின் வாய்க்குள் போட்டுள்ளது. என்ன ஒரு அசாதாரண செயல்!

கட்சியின் நீண்டகால தலைவரான ஜீஸஸ் லாவா, மார்கோஸின் புத்தகம் “பிலிப்பைன்ஸ் சமுதாயத்தின் தீமைகள் பற்றிய ஒரு அற்புதமான பகுப்பாய்வு” என்று அறிவித்தார்.

1972 இல் மார்கோஸ் இராணுவச் சட்டத்தை திணித்த போது, பி.கே.பி. இன் ஒரு பகுதியினர் பிரிந்து சென்று, கட்சி ஆட்சிக்கு ஆதரவளிப்பதை ஆயுதப் போராட்டத்தின் மூலம் எதிர்க்க முயன்றனர். இந்த தட்டுகள் கட்சியிலிருந்து விலகுவதற்கு நீண்ட காலம் காத்திருந்தன, இது குறித்து எனது விளக்கவுரையில் மிக விரிவாக விவரிக்கிறேன். ஆயினும், இராணுவச் சட்டத்தை எதிர்க்கும் அணிகளில் ஒரு பிரிவு கட்சிக்குள் இருக்கும் பட்சத்தில், ஃபெர்டினாண்ட் மார்கோஸின் அமைச்சரவையில் பி.கே.பி. நுழைய முடியவில்லை. இதனால், ஸ்டாலினிஸ்டுகள் தங்கள் எதிரிகளை கொலை செய்ய பயன்படுத்துகின்ற மொழியில், தங்கள் எதிராளிகளை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கண்டனம் செய்த அவர்கள், தங்களுக்கு கீழ்ப்படியாத சாமானிய உறுப்பினர்களை படு கொலை செய்தனர் மற்றும் மரண தண்டனை விதித்தனர். அந்த எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம், ஆனால் சுமாராக 60 முதல் 70 பேர் வரையில் பி.கே.பி. காரியாளர்கள் பி.கே.பி. தலைமைத்தாலேயே கொலை செய்யப்பட்டார்கள், அதன் மூலம் அவர்கள் இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஆதரவளிக்க முடிந்தது. எண்ணிக்கைகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், மார்கோஸ் நிர்வாகத்தால் கொல்லப்பட்டதை விட அதிகமான கம்யூனிஸ்டுகள் பி.கே.பி. இனால் கொல்லப்பட்டனர் என்று நம்பகமாக கூறலாம்.

உள்ளூர் முதலாளித்துவம் செயல்படுவதற்கான நிலைமைகளை விரைவாக உருவாக்க அவர் இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார் என்ற அடிப்படையில் சர்வாதிகாரிக்கு தனது ஆதரவை பி.கே.பி. நியாயப்படுத்தியது. 1973 இன் ஆரம்பத்தில் நடைபெற்ற அவர்களின் ஆறாவது கட்சி மாநாட்டில், பி.கே.பி. எழுதியதாவது:

”பிலிப்பைன்ஸ் சக்தி வாய்ந்த முதலாளித்துவ வளர்ச்சியை கொண்ட ஒரு நவீன காலனித்துவ நாடு. அதன் பொருளாதாரம் காலனித்துவ சூறையாடலினால் பிரதானமாக பின்தங்கிய நிலையிலும் சிதைந்த நிலையிலும் உள்ளது. ... அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ், பிலிப்பைன்ஸ் தீவிரமாக நிலப்பிரபுத்துவ நாட்டிலிருந்து நவீன முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றப்பட்டுள்ளது. இன்று அது இராணுவ-சட்ட சர்வாதிகாரம் என்ற கருவி மூலம் முதலாளித்துவ கட்டியெழுப்பலின் பேரச்சம்தரும் துரிதமான முன்னேற்றத்தை அனுபவித்து வருகிறது.”

இப்போது, உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டால், அது கம்யூனிஸ்ட் கட்சியினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒன்றாக காணப்படாது: சர்வதேச நிதி மூலதனம் இராணுவச் சட்ட சர்வாதிகாரத்தின் மூலம் முதலாளித்துவத்தை வளர்க்கிறது. இந்த சூத்திரப்படுத்தல் உண்மையில் பி.கே.பி. இன் வர்க்க நோக்குநிலையை வெளிப்படுத்துவதுடன் அவர்கள் ஆறாவது மாநாட்டில் வெளியிட்ட சர்வாதிகாரத்திற்கான ஒப்புதலுக்கு சேவை செய்தது. மாநாடு நெருங்கிய போது, கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும், உறுப்பினராக தொடர்வதற்கு மீண்டும் பதிவு செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். நீங்கள் பி.கே.பி. உறுப்பினராக இருந்தால், சர்வாதிகாரிக்கு ஒப்புதல் அளிக்கும் இந்த அரசியல் தீர்மானத்தில் கையெழுத்திட கடமைப்பட்டுள்ளீர்கள்.

பி.கே.பி. இன் தலைவர்கள் மிகப்பெரிய அரசியல் குற்றத்தை செய்தனர். அவர்கள் இராணுவச் சட்ட சர்வாதிகாரத்தின் நிர்வாகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் வெளியுறவு, தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இராணுவ உளவுத்துறை ஆகியவற்றில் பதவிகளை ஏற்றுக்கொண்டனர், அங்கு அவர்கள் தங்கள் போட்டியாளர்களான மாவோயிஸ்டுகளை நசுக்க பொறுப்பேற்றனர். அவர்களில் பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் முக்கிய பதவிகளில் உள்ளனர்.

இதற்கிடையில் சி.பி.பி. முதலாளித்துவ எதிர்ப்பின் சதிகார பிரிவினர் பக்கமாக திரும்பியது. அந்தக் காலத்திலிருந்த பரந்த வெகுஜன இயக்கத்தின் மீது கட்சி கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததுடன், கலாச்சாரப் புரட்சி மற்றும் நீடித்த மக்கள் போர் பற்றிய வாய்ச்சவடால்களைப் பயன்படுத்தி, அவர்களுடைய முதலாளித்துவ கூட்டாளிகளுக்கு பின்னால் இந்த கிளர்ச்சியை திருப்பி விட அவர்களால் முடிந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, சி.பி.பி. ஒரு முக்கிய அரசியல் வம்சத்தின் வாரிசான நினோய் அகுய்னோவுடன் கூட்டணி வைத்திருந்தது. அவர் ஒரு பரந்த கரும்பு தோட்ட சர்க்கரை வியாபார நலன்களின் மையத்தில் நின்றார். தளபதி டான்டே என்று அழைக்கப்படும் அகுய்னோவின் கரும்பு தோட்டத்தை தளமாகக் கொண்ட உள்ளூர் ஆயுத இயக்கத்தின் தலைவருக்கும் சீசனுக்கும் இடையில் உறவுகளை நிறுவுவதற்கு அக்வினோ உதவினார். சீசனுக்கும் டான்டேவுக்கும் இடையிலான சந்திப்பு புதிய மக்கள் இராணுவத்தை உருவாக்க தூண்டுதலாக இருந்தது.

எனது விளக்கவுரையில் உள்ள இந்த புள்ளியானது துதர்தேவுக்கு வக்காலத்து வாங்கும் சிலரினால் சூழ்நிலையில் இருந்து அகற்றப்பட்டிருந்தது. அவர்கள் சி.பி.பி. உடனான அகுய்னோவின் உறவுகளை இணைத்து, சர்வாதிகாரத்தை திணிப்பதில் மார்கோஸுக்கு ஏதோ ஒரு நியாயம் இருப்பதாக வாதிடுகின்றனர். அவர்கள், சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்த உதவிய அவரது சொந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முழு ஆதரவும் மார்கோஸுக்கு இருந்தது, என்ற மைய உண்மையை வேண்டுமென்றே விட்டுவிடுகிறார்கள்.

அகுய்னோ இராணுவச் சட்டத்தை எதிர்ப்பவர் அல்ல. செப்டம்பர் 12, 1972 அன்று, அமெரிக்க தூதரகத்தின் ஒரு குறிப்பு, அகுய்னோவிற்கும் தூதரகத்தின் அரசியல் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பை சுருக்கமாகக் கூறுகிறது:

”மார்கோஸ் ஆட்சியில் இருப்பதற்காக அனேகமாக இராணுவச் சட்டத்தை தான் ஒரு வழிமுறையாக பயன்படுத்துவார் என்று அகுய்னோ நம்புகிறார். அவர் பின்பற்றும் பாதை இதுவாக இருந்தால் மார்கோஸை ஆதரிப்பதாக அக்வினோ கூறினார். சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பொருளாதார நிலைமை மிக விரைவாக மோசமடைந்து வருவதால், அகுய்னோவின் பார்வையில், நாட்டின் நன்மைக்கு மத்திய அரசின் தரப்பில் வலுவான நடவடிக்கைகள் தேவை. அதிருப்தியாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல், மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை… ஆகியவற்றை மத்திய அரசாங்கத்தின் வலுவான நடவடிக்கை தேவைப்படுவதற்கான காரணங்களாக அகுய்னோ மேற்கோள் காட்டினார். இத்தகைய நடவடிக்கை அர்த்தப்படுத்துவது இராணுவ சட்டத்தையே. அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தால், அத்தகைய வலுவான நடவடிக்கை எடுக்க அவர் தயங்கமாட்டார் என்றும், உதாரணமாக, செய்யவேண்டிய வேலை என அவர் அர்த்தப்படுத்தியவாறு, ஏனைய அலுவலர்களுக்கு ஒரு பாடமாகும் வகையில், மணிலாவின் லுனெட்டா பூங்காவில் பல ஊழல் அதிகாரிகளுக்கு அவர் மரண தண்டனை கொடுப்பார் என்றும் அகுய்னோ சமிக்ஞை செய்தர்.

அகுய்னோ ஒரு ஜனநாயக பிரமுகராக இருக்கவில்லை. அவர், சி.பி.பி. கூட்டணி வைத்திருந்த சமூக தட்டுக்கள் மற்றும் அவர்கள் ”பாசிசத்தின்” எதிர்ப்பாளர்களாக முன்னிலைப்படுத்தியவர்களையும் முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இறுதியில் யார் வென்றது, மார்கோஸ் மற்றும் பி.கே.பி. அல்லது அகுய்னோ மற்றும் சி.பி.பி.யா வென்றது, என்பது முக்கியமல்ல. யாராக இருந்தாலும் பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கம் சர்வாதிகாரத்தை எதிர்கொண்டது.

இறுதியாக சர்வாதிகாரம் திணிக்கப்பட்டபோது, அது புரட்சிக்கு நல்லது என்று சீசன் பாராட்டினார், ஏனென்றால் ”அடக்குமுறை எதிர்ப்பை வளர்க்கும்” என்று அவர் கூறிக்கொண்டார். இதுதான் எப்போதுமே கட்சியின் நிலைப்பாடாக இருந்துள்ளது: ”பாசிசம்” எந்தளவுக்கு மோசமானதாகிறதோ அந்தளவு நன்றாக எதிர்ப்பு உருவாகும். இது ஒரு அடிப்படையான பொய்மை ஆகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தொழிலாளர்கள் அனைத்தையும் பணயம் வைத்துள்ளனர். அது ஒரு அரசியல் இயக்கத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் சுவாசிக்கும் காற்று ஆகும்.

அடக்குமுறை, புரட்சி வளர வழிவகுக்கும் என்று சீசன் தனது நிலைப்பாட்டை வெறுமனே இரட்டிப்பாக்கவில்லை. இராணுவ சர்வாதிகாரம் நாட்டின் மீது சுமத்தப்பட்ட இரண்டு வாரங்களின் பின்னர், 1972 அக்டோபர் 1, கட்சி தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவுகளைக் கண்டுபிடித்து கூட்டணி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்:

“புரட்சிகர இயக்கத்திற்கு அரசியல் மற்றும் பொருள் ரீதியான ஆதரவை வழங்க, நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் இருந்து தேசிய முதலாளித்துவ உறுப்பினர்களை கட்சி வென்றெடுக்க வேண்டும். ஏனென்றால் எதிரிக்கு எதிராக அவர்களே ஆயுதங்களை ஏந்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது …”

இந்த முற்போக்கான முதலாளிகள் ஆயுதங்களைத் ஏந்துவார்கள் என்று கட்சி எதிர்பார்க்கவில்லை. அது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் கடமையாக இருந்தது. இவையே உழைப்பதற்கும், கஷ்டப்படுவதற்கும், இறப்பதற்கும் கட்சி எதிர்பார்க்கும் சக்திகளாக இருந்தன.

“... அவர்கள் புரட்சிகர இயக்கத்திற்கான ஆதரவை ரொக்கமாகவோ அல்லது வேறு வகையாகவோ வழங்க முடியும் ...” முதலாளிகள் கட்சிக்கு நிதி சேகரிக்க அதற்குப் பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பதிலாக, “கட்சி அவர்களின் நியாயமான நலன்களைப் பாதுகாக்க வேண்டும் ...” என்று சீசன் தொடர்ந்தார்.

இது தான் இராணுவச் சட்டத்திற்கு சீசனின் பதிலிறுப்பாக இருந்தது: இது புரட்சிக்கு நல்லது; தொழிலாளர்கள் ஆயுதங்களை எடுப்பார்கள்; முதலாளிகள் கட்சிக்கு பணம் கொடுப்பார்கள்; முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்க ஆயுதமேந்தும்படி கட்சி தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தும்.

மாவோ இமெல்டா மார்கோஸின் கையை முத்தமிடுகிறார்

இதற்கிடையில், மாவோ, மிகவும் வித்தியாசமான வழியில் சென்றார். ப்ராக் எழுச்சி நசுக்கப்பட்ட தறுவாயிலும், மற்றும் சோவியத் நலன்களை அச்சுறுத்தும் எந்தவொரு சோசலிச நாட்டின் விவகாரங்களிலும் சோவியத் ஒன்றியம் தலையிடும் என்று பிரெசிநேவ் கொள்கை பிரகடனம் செய்த நிலையிலும், சோவியத் ஆக்கிரமிப்பின் சாத்தியமான அச்சுறுத்தலை எதிர்கொண்ட மாவோ, கலாச்சாரப் புரட்சியை நசுக்கி, லின் பியாவோவை ஒதுக்கிவைத்ததுடன், கிஸ்ஸிங்கர் மற்றும் நிக்சனை அணுகியதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், வாஷிங்டனுடனும் உறவுகளை ஸ்தாபித்தார்.

அதன் பின்னர் மாவோ உலகெங்கிலும் உள்ள நாடுகள் பக்கம் திரும்பியதுடன், சோவியத் ஒன்றித்தைப் போலவே, சர்வாதிகாரிகளுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டார். அவர் மார்கோஸ் மற்றும் பினோசேவை அரவணைத்தார். சால்வடார் அலெண்டே, மாஸ்கோவை நோக்கித் திரும்பியிருந்தத சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்திருந்ததோடு, பினோசே கம்யூனிஸ்ட் கட்சியையும் சிலி தொழிலாள வர்க்கத்தையும் நசுக்கியபோது, சீன கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக பினோசேவை வரவேற்றது.

மார்கோஸ் இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களை ஒரு தொழில்துறை மட்டத்தில் நசுக்கி, அந்தக் கால சமூக கிளர்ச்சியை ஒடுக்கினார். சீன மக்கள் குடியரசுடன் வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த மார்கோஸ் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்தபோது, பிலிப்பைன்ஸின் “உள்நாட்டு விவகாரங்களில்” சி.சி.பி. தலையிடாது என்று மாவோ ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டார்.

மாவோ, மார்கோஸுடன் உறவுகளை தொடங்கி இருப்பது, “மக்கள் சீனக் குடியரசிற்கு இராஜதந்திர வெற்றி மற்றும் பிலிப்பைன்ஸ் புரட்சிகர போராட்டத்திற்கு ஒரு வெற்றி” என்று சீசன் அறிவித்தார். “பொய்கள்” என்ற சொல் இந்த வாதத்தை உள்ளடக்குவதற்கு போதுமானதாக இல்லை.

சாதாரணமாக இந்த அமைப்புகளுக்குள் மட்டுமல்லாமல், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது சாத்தியமற்றது. சி.பி.பி. மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் சக்தியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அதுவே எனது வரலாற்றுச் சுருக்க விளக்கமாகும்.

கட்சி அதன் சொந்த உறுப்பின்களில் 1,000 பேரை கொன்ற தனது சொந்த அணிகளில் நடந்த களையெடுப்புகளுக்கு பொறுப்பாளி ஆகும். நகைச்சுவை தயாரித்தல் மற்றும் தொடக்க பாடப்புத்தகங்களை வாசித்தல் போன்றவை மூலம் அது சிறுவர்களை கூட இராணுவத்தில் சேர்த்தது, அதன் மூலம் 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் புதிய மக்கள் இராணுவத்தில் பத்து மற்றும் பதினொரு வயதுடைய சிறுவர்களை சேர்க்க முடிந்தது.

மனித உரிமைகளைப் பாதுகாக்க ஆர்வமுள்ளவர்கள் வேறு பக்கம் பார்க்க வேண்டும். அதனால் நான் சி.பி.பி. மற்றும் அதன் முன்னணி அமைப்புகளின் மனித உரிமைகளை பாதுகாக்கவில்லை என்பதல்ல. இந்த விரிவுரையின் ஆரம்பத்தில் அரசின் வன்முறைக்கு எதிராக அவர்களை வெளிப்படையாகப் பாதுகாப்பதை நான் படித்தேன். என் கருத்து வேறுபட்டது. ஜனநாயகத்தை பாதுகாப்பதில், சர்வாதிகாரத்தின் எழுச்சியைத் தடுப்பதில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் நீங்கள் ஆர்வம் கொண்டவராக இருந்தால், நீங்கள் நாட வேண்டிய சமூக சக்திகள் இவை அல்ல.

இந்த விரிவுரையைக் கேட்கும் அனைத்து ஆய்வாளர்களுக்கும், பரந்த பொதுமக்களுக்கும் எனது இறுதி வேண்டுகோள் இது. சீசன் மற்றும் சகாக்களின் வாய்ச்சவடால் மற்றும் அவரின் தைரியமான “அப்பட்டமான பொய்கள்”, மற்றும் அவரது வன்முறையான அநாகரீகம் -நான் “எனது சொந்த எச்சிலில் புரள வேண்டும்” என்று அவர் என்னிடம் கூறினார்- மற்றும் திரிபுபடுத்தப்பட்ட படங்களை அவர் விநியோகித்தமை- இவை தீவிர வலதுகளின் தந்திரோபாயங்கள் ஆகும். சி.பி.பி. இன் மொழி, பேஸ்புக்கில் கடும் பிற்போக்காளர்களான துதர்தே ஆதரவாளர்களான டி.டி.எஸ். இலிருந்து பிரித்தறிய முடியாதது. “யார் இதைச் சொன்னார்கள்: ஜோமா சீசனா அல்லது ஒரு டி.டி.எஸ். விஷமியா?” என நீங்கள் ஒரு சிறிய இணையவழி வினாவிடை செய்து பார்க்கலாம். வேறுபாட்டை சொல்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

வரலாற்று உண்மையை பாதுகாப்பதில் சி.பி.பி. இற்கு எந்த அக்கறையும் கிடையாது. இது தொடர்பாக ஸ்டாலினிஸ்டுகள் குறித்து ட்ரொட்ஸ்கி கூறியதை மேற்கோள் காட்டி முடிக்க விரும்புகிறேன். “ஒவ்வொரு கோணல் மாணலான பாதையிலும் அவர்கள் வரலாற்றை மீண்டும் முற்றிலுமாக புதுப்பிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.”

ஸ்டாலினிஸ்டுகள் மக்கபகலுடன் கூட்டணி வைத்த போதிலும், பின்னர் அவர் பிற்போக்காளர் என்று அறிவித்ததுடன், அவர்கள் அவரை எப்போதாவது ஆதரித்ததற்கான ஆதாரங்களையும் புதைத்தனர். அவர்கள் மார்கோஸுடன் கூட்டணி வைத்தனர், ஆனால் பின்னர், அவர் நிச்சயமாக பிற்போக்காளரானார். இந்த முறை மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப வருகிறது. அவர்கள் கோரி அகுய்னோவுடன் கூட்டணி வைத்தனர், ஆனால் பின்னர் அவள் பிற்போக்காளரானாள். அவர்கள் துதர்தேவுடன் கூட்டணி வைத்திருந்தனர், ஆனால் இப்போது அவரை ஒரு பாசிசவாதியாக பிரகடனர் செய்கின்றனர். அவர்களது சொந்த வரலாற்றின் ஆதாரங்களை நான் வெளிக்கொண்டு வந்ததற்காக, என்னை ”ஊதியம் பெறும் சி.ஐ.ஏ. முகவர்” என்று கண்டனம் செய்கின்றனர்.

“அதனால் இந்தப் பொய்கள், அதிகாரத்துவத்தின் அடிப்படை கருத்தியல் பசையாக சேவை செய்கின்றன,” என ட்ரொட்ஸ்கி தொடர்ந்தும் கூறினார். இதுதான் எல்லாவற்றையும் ஒன்றாக பிடித்து வைத்திருக்கிறது.

“அதிகாரத்துவத்திற்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு மேலும் சமரசம் செய்ய முடியாததாக மாறுகிறது, அனைத்து முரட்டுத்தனங்களும் பொய்யாகின்றன [நாங்கள் இப்போது அதை சாட்சியாக பார்க்கிறோம் என்று நினைக்கிறேன்], மிக வெட்கக்கேடான அனைத்தும், குற்றவியல் பொய்மைப்படுத்தல் மற்றும் சட்ட ஜோடிப்புக்குள் மாற்றப்பட்டிருக்கின்றன.”

தற்போது சொல்லப்படுவதை நம்ப வேண்டாம். சமகால எழுதப்பட்ட பதிவை எடுத்துக்கொள்ளுங்கள். அது மட்டும் தான் துல்லியமானது என்று நாம் உறுதியாக இருக்கலாம். அதை நீங்களே சரிபார்க்கவும், ஆதாரங்களை நீங்களே மதிப்பாய்வு செய்யவும். இது எனது சொந்தத் துறைக்கு மட்டுமல்ல, பொதுவான ஆய்வறிக்கைகளுக்கும் பொருந்தும். வரலாற்று உண்மை மற்றும் உண்மை குறித்த அடிப்படையான கருத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மற்றும் அப்பட்டமான பொய்களின் அடிப்படையில் உலகெங்கும் எதேச்சாதிகார நபர்கள் ஆட்சிக்கு வருகின்ற ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

சிவில் உரையாடல்கள், ஜனநாயக மற்றும் பொது கலந்துரையாடல், சரிபார்க்கக்கூடிய சான்றுகள், தர்க்கரீதியான வாதங்கள் மற்றும் ஜனநாயகம் மற்றும் வரலாற்று உண்மையைப் பாதுகாப்பதற்காக நான் பேசுகிறேன்.

உங்களுக்கு நன்றி.

கேள்விகள் மற்றும் பதில்கள்:

கே: இங்கே பிலிப்பைன்ஸில் மட்டுமன்றி, உலகளவில், தற்போது தொடரும் நெருக்கடி மற்றும் இடதுசாரிகளின் சிதைவு துண்டு துண்டாக உடைந்து வரும் வெளிச்சத்தில், தாராளமய அரசின் தற்போதைய வீழ்ச்சி மற்றும் இடது மற்றும் வலதில் இருந்தான தாக்கங்களுடன் ஜனரஞ்சக அலைகளின் எழுச்சி ஆகியவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஒரு சுருக்கத்தை உங்களால் வழங்க முடியுமா?

ப: நான் இதற்கு பதிலளிக்க விரும்புகிறேன். இது ஒரு சிறந்த கேள்வி. இந்த தலைப்பில் ஏராளமானோர் கணிசமான நேரம் பேச முடியும். எனவே நான் உங்களுக்கு முக்கியமான புள்ளிகளை வழங்கப் போகிறேன்.

முதலாவது இது தான்: துதர்தே ஒரு அரசியல் வகை. உலகெங்கிலும் அவரது அரசியல் உடன்பிறப்புகள் உள்ளனர்: டொனால்ட் டிரம்ப், ஜெய்ர் பொல்சனாரோ, ஜெர்மனியில் ஏ.எஃப்.டி போன்ற அரசியல் கட்சிகள், மற்றும் பல உள்ளனர். இங்கே நாங்கள் கையாள்வது பூகோளரீதியான பிரச்சினை. எனவே சர்வாதிகாரத்தின் எழுச்சி குறித்து அக்கறை உள்ளவர்களுக்கான முதல் புள்ளி: இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல என்பதே. நமது தீர்வுகள் தேசிய தீர்வுகளாக இருக்க முடியாது. பூகோளம் முழுவதும் உள்ள மக்கள், தொழிலாளர்கள், அறிஞர்கள் போன்றவர்களிடையே ஆழ்ந்த பரிமாற்றம் மற்றும் உண்மையை பாதுகாக்கவும் எதேச்சாதிகாரம் தலைதூக்குவதற்கு எதிரான ஒரு பூகோளரீதியான அரசியல் முன்னோக்கு அவசியமாகும்.

இரண்டாவதாக, நீங்கள் ”இடதுகள் சிதைந்து போவது” குறுத்து பேசினீர்கள். உங்கள் அக்கறையை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் எனது முக்கிய அக்கறை எதுவெனில், சர்வாதிகாரத்தின் அபாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கக்கூடிய சமூக சக்தியான தொழிலாள வர்க்கம் பிளவுபடுத்தப்படுவதே ஆகும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் பற்றிய ஒரு விடயமாகும். பிலிப்பைன்ஸின் வரலாறு பற்றிய எனது வரலாற்று மதிப்பீடு சரியாக இருந்தால், அது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனம், அதன் சொந்த நலன்கள் பற்றிய பிரச்சினையாகும், முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதாவதொரது கன்னையுடன் கூட்டணி வைக்கும் நலன்கள் பற்றியது அல்ல.

இப்போது, இந்த வரலாற்று பதிவிலிருந்து நான் எடுக்கும் ஒரு தீர்க்கமான அரசியல் முடிவு இது. ஆனால் இறுதியில், இடதுசாரிகள் சிதைவடைவதை பற்றி அன்றி, தொழிலாள வர்க்கம் தேசிய வழிகளில் பிளவுபடுத்தப்படுவதை பற்றியே நாம் அதிக கவலைப்பட வேண்டி இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன்.

கே: [வெளியிட முடியாதது]

ப: இது ஒரு நீண்ட கேள்வி, அதற்கு நான் நியாயமாக இருப்பது சாத்தியமாக இருக்காது. எவ்வாறாயினும், இந்த விஷயத்தை நான் கூறுவேன்: பிலிப்பைன்ஸில் மாற்றீட்டைப் எதிர்பார்ப்பவர்கள் அடியிலிருந்து புதிதாகத் தொடங்கவில்லை. இது மிகவும் முக்கியமான விடயம் என்று நான் நினைக்கிறேன். பிலிப்பைன்ஸ் புரட்சிகர போராட்டத்தின் வளமான, பெருமை வாய்ந்த பாரம்பரியம் கொண்டது, ஸ்பானிய காலனித்துவத்தை தூக்கி வீசுவதற்கான ஒரு புரட்சிகர இயக்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நீடித்த மற்றும் தைரியமான பெரும் தியாகம் நிறைந்த போராட்டத்தையும் கொண்டுள்ளது. மற்றும் ஒரு தொடரான எழுச்சிகள் மற்றும் அமைப்புகள், மற்றும் நான் ஆவணப்படுத்திய துறைமுக வேலைநிறுத்தம் போன்ற தொழிலாளர் போராட்டங்களும் அடங்கும். இவை அனைத்தும் பிலிப்பைன்ஸ் மக்களின், பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வளமான வரலாறு ஆகும். இந்த வரலாற்றிலிருந்து கட்டப்படும் எந்தவொரு புதிய இயக்கமும் இந்த வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்கிறது.

ஆனால், அது வெறுமனே இதைக் கட்டியெழுப்பாது. நீங்கள் தேசிய எல்லைகளுக்குள் தொடங்கவில்லை, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் இயக்கத்திலிருந்து தொடங்குகிறீர்கள். ஒரு புதிய இயக்கத்தை உருவாக்க விரும்பும் பிலிப்பைன்ஸில் உள்ள எவரும் உலகெங்கிலும் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளை அவர்களின் அரசியல் யோசனைகளுக்காக, தங்கள் அமைப்புக்காக அவதானிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதிலிருந்து தான் நீங்கள் கட்டியெழுப்ப வேண்டும்.

கே: மார்க்சியம் மற்றும் லெனினிசத்தின் கொள்கைகளின் அடிப்படையில், ஜோமா சீசன் ஒரு உண்மையான நீல கம்யூனிஸ்டா? ஆம் என்றால், அது எப்படி? இல்லையென்றால், உண்மையில் அவர் ஒரு மாவோயிஸ்டாக இருக்கும்போது அவர்களின் கட்சியை பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி என்று ஏன் அழைக்க வேண்டும்? இது தவறான அர்த்தப்படுத்தல் இல்லையா?

ப: அருமையான கேள்விக்கு நன்றி. ஆம், மற்றும் இல்லை. வரலாற்று ரீதியாக கூறினால் இரண்டுமே தான். ஜோமா சீசன் கம்யூனிஸ்ட் அறிக்கையின் அர்த்தத்தில் அல்லது 1917 அக்டோபரில் ஆட்சியைப் பிடித்த கம்யூனிஸ்ட் கட்சியின் அர்த்தத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டா? இல்லை, அவர் இல்லை. அவருக்கு அந்த மரபு கிடையாது. ஆனால் ஸ்டாலினிசத்தின் காட்டிக்கொடுப்பே இந்த மரபின் போர்வையை போர்த்திக்கொள்ளவும், தன்னை மார்க்சியத்தின் தொடர்ச்சியாக கட்டிக்கொள்ளவும் அனுமதித்தது. இந்த காட்டிக்கொடுப்பே அவரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருக்கவும், மார்க்சியத்தின் தொடர்ச்சியாளாரக இருப்பதாக கூறிக்கொள்ளவும் அனுமதிக்கிறது. இது உண்மையே அவரது மிகப்பெரிய அரசியல் மூலதனமாகும்: அவர் இந்த வரலாற்றை சுட்டிக்காட்டி இது அவருடையது என்று சொல்ல முடியும். அது அப்படி அல்ல. அவரின் வரலாறு என்பது, எனது விரிவுரையில் நான் கோடிட்டுக் காட்டிய வரலாறே. எனவே, அவர் மார்க்சியத்தின் தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆனால், அவர் ஸ்டாலினிசத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்கிறார்.