பிரெஞ்சு அரசாங்கம் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் COVID-19 வைரஸ் கொத்தணிகளை மூடிமறைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரான்சில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. செப்டம்பர் 1ம் திகதி, முதலாவதாக பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் இலையுதிர் காலத்திற்கான அறிவுறுத்தல்களை தொடங்கியபோது, 3,082 உறுதிப்படுத்தப்பட்ட நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இருந்தனர். ஞாயிறன்று 52,013 புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறுகிய இரண்டு மாதங்களில் 1,700 சதவீதம் வானளவு அதிகரிப்பால் பிரதிபலிக்கிறது. சனிக்கிழமையன்று, 298 பேரின் COVID-19 வைரஸ் இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டன, இது மே 14 க்கு பின்னர் மிக அதிக எண்ணிக்கையாகும். பெருகிவரும் இறப்புகளின் எண்ணிக்கையை உண்டாக்குதில் பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன என்பது பெருகிய முறையில் தெளிவாகிறது.

பிரெஞ்சு அரசாங்கத்தால் மேற்பார்வை செய்யப்பட்ட "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" விஞ்ஞானபூர்வமற்ற மற்றும் கொலைகாரக் கொள்கையின் ஒரு மையக் கூறாக, நேரில் சென்று கல்வி கற்க மீண்டும் திறந்தமையானது இருந்து வருகிறது. பெரிய வங்கிகளும் பெருநிறுவனங்களும் தொடர்ந்து தொழிலாள வர்க்கத்திடமிருந்து இலாபங்களை பிழிந்து எடுப்பதற்கு மக்கள் தொகையானது வேலையில் தொடர்ந்து இருக்க அனுமதிக்க, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறப்பது அவசியமென்று காண்கின்றன. மாணவர்கள் மத்தியில் இந்த வைரஸ் பரவுவதை அரசாங்கம் முற்றிலும் மறுத்துள்ளது. இந்தப் பொய்களில் ஒவ்வொன்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு கொடிய குற்றமாகும்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் பிரெஞ்சு சுகாதார மந்திரி ஒலிவியே வெரான், 60 சதவீத கொத்தணிகளானது பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காட்டிய புள்ளிவிபரங்களின் முக்கியத்துவத்தை மறுத்தார்.

எவ்வளவு எண்ணிக்கையில் கொத்தணிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதை திறம்பட ஒப்புக்கொள்ளலாக, "60 சதவிகிதக் கொத்தணிகள் 10 சதவிகித தொற்றுக்களுக்கு மட்டுமே காரணமாகின்றன", என்றும் மேலும் ஒருவர், "கொத்தணிகள் மற்றும் நோயறிதல் பரிசோதனைகளை குழப்பக் கூடாது" என்று அவர் ட்டுவீட் செய்தார். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே ஒன்றுகூடலில் பங்கேற்றவர்களிடையே குறைந்தது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்திற்குரிய COVID-19 வைரஸ் தொற்றுக்களை ஒரு கொத்தணி என வரையறுக்கப்படுகிறது.

அக்டோபர் 11 வரை, பாரிஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட Île-de-France பிராந்தியத்தில் 3.6 சதவீத தொற்றுக்கள் மட்டுமே கொத்தணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ கிட்டத்தட்ட அதிக பயன்படுத்தல், வேலைக்கு முழுமையாக திரும்புதல் மற்றும் பிராந்தியத்தில் நடைமுறையில் ஒரு முழுமையான கல்வியின் மறுதொடக்கம் இருந்தபோதிலும் கூட இது உள்ளது.

நாட்டில் 90 சதவிகிதம் (பாரிஸ் பிராந்தியத்தில் 96 சதவிகிதம்) நோய் தொற்றுப் பரவல்கள் வெறுமனே ஒரு நிகழ்வாகும் என்று வெரானும் பிரெஞ்சு அரசும் மக்கள் தொகையை நம்ப வைப்பதோடு, தொழிலாளர்களும் மற்றும் மாணவர்களும் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் தினசரி அடிப்படையில் நெருக்கமான பகுதிகளுக்கு செல்ல வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரவு 9:00 மணிக்கான ஊரடங்கு உத்தரவு வைரஸுக்கு எதிரான ஒரு சிறந்த நடவடிக்கை என்பதை பொதுமக்களை நம்ப வைக்கும் முயற்சிகளுக்கு இந்தக் கதை முக்கியமானது. உண்மையில், ஊரடங்கு உத்தரவின் ஒரே நோக்கம், அது ஒரு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையைப் பின்பற்றும் போது, வைரஸை எதிர்த்துப் போராடுவதாகக் கூற அரசாங்கத்தை அனுமதிப்பதாகும்.

12,000 பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு தலைநகரத்தின் தெருக்களை ஆக்கிரமிக்க ஒரு வசதியான சாக்குப்போக்குடனும் இது செயற்படுகிறது.

உண்மையில், பல்கலைக்கழகங்களுக்கான சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ ஆலோசனையானது பல விஞ்ஞானபூர்வமற்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, வைரஸ் தொற்று பரிசோதனை உறுதிப்படுத்தப்பட்டால் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின்படி, 14 நாட்களுக்கு மாறாக ஏழு நாட்களுக்கு மட்டுமே மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மேலும், ஒரு மீட்டர் தூரம் மற்றும் முகக்கவசம் அணிவதற்கு விஞ்ஞானரீதியாக நிறுவப்பட்ட காரணங்கள் போதாமையாக இருந்தபோதிலும், வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முகக்கவசம் இல்லாமல் தொற்று நிகழ்ந்தால் மட்டுமே வைரஸ் தொற்று நிகழ்வுகளாக கருதப்படுகிறார்கள். விதிகள் கடைபிடிக்கப்பட்டபோதும் கூட, கல்விச் சூழல் கொடியதாக இருக்கிறது.

இந்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஞ்ஞானத்தின் முன்னால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. மொன்பெல்லியே பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் இடையேயான ஒரு கூட்டு ஆய்வில், வைரஸானது நோய் அறிகுறியுள்ள தனிநபர்கள் பேசும் போது இரண்டு மீட்டர்களில் இருந்து நோய் பரவமுடியும் என்று எடுத்துக்காட்டியுள்ளது. முகக்கவசங்கள் நன்மை பயப்பதாக இருந்தாலும், அவைகள் நோய் பரவலுக்கு எதிராக எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் இந்த ஆய்வு ஒப்புக்கொள்கிறது. "மிக முக்கியமாக, எங்கள் முடிவுகளானது 2 மீட்டர்கள் அல்லது 6 அடிகள், ஒரு 'சுவரை' பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று விளக்குகின்றன" என்று அது இவ்வாறு ஆய்வை முடிக்கிறது. பல பிரெஞ்சு பல்கலைக்கழகங்களின் மாணவர்களின் சாட்சியங்களின்படி 1 மீட்டர் விதி கூட தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று நிலைமை காட்டுகிறது.

விஞ்ஞானபூர்வமற்ற "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை கண்டனம் செய்யும் வகையில், முன்னணி பிரிட்டிஷ் மருத்துவ இதழான லான்ஸெட்,"இளைய வயதுடைய மக்களிடையே கட்டுப்பாடற்ற பரவுதல் என்பது ஒட்டுமொத்த மக்கள் தொகை முழுவதும் குறிப்பிடத்தக்க நோய் எற்படும் தன்மை மற்றும் இறப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது" என்று எச்சரித்தது.

பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து பரவி வரும் நோய் பரவலின் ஒரு உதாரணமாக, École Nationale Supérieure des Arts Décoratifs என்ற பல்கலைக்கழக மாணவியான லிசா, சமீபத்திய தொற்று நோய்க்கான பரிசோதனைகளில், பள்ளியில் இருந்த மாணவர்களில் இந்த வைரஸ் நோய்க் கிருமி பரிசோதனையில் பாதிப்பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று WSWS இடம் கூறினார்.

நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட தனிநபர்களை மாணவர்கள் அறிந்துகொள்ளுவதை தடுக்க பிரெஞ்சு கல்வி அமைப்புமுறைக்குள் உள்ள முயற்சிகளை WSWS ஆனது ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது. எந்த விலைகொடுத்தாவது வகுப்புகளை இயங்க வைக்க தீர்மானிக்கப்பட்ட பிரெஞ்சு பல்கலைக்கழகங்களானது மாணவர்களுக்கு ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறியும் உரிமையை மிதிக்க தயாராக உள்ளன. எத்தனை மாணவர்கள் அறியாமல் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள், பின்னர் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்பி உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்படுத்தியுள்ளனர் என்ற நிலைமையை ஒருவர் ஊகிக்க முடியும்.Top of Form

இந்த வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகள் கைவிடப்பட்டு, சமூக ஒன்றுகூடல்களில், குறிப்பாக இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புதிய தொற்றுக்களுக்காக இளைஞர்கள் மீது குற்றச்சாட்டை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் பங்கேற்கும் பொறுப்பற்ற முறையில் ஒன்று சேரும் சந்தர்ப்பங்களில், முதன்மை பொறுப்பானது முதலில் அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தின் மீது தான் உள்ளது.

பல மாதங்களாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக, ஒரு வழக்கமான சமூக வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதன் மூலம் பொருளாதாரத்திற்கு உதவ "தங்களை தகுதியாக்கம் செய்யுங்கள்" என்றும், அவர்களில் குறிப்பாக இளைஞர்கள் வைரஸுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை திறம்பட வழங்குகிறது என்றும் கூறப்பட்டு வந்துள்ளது. வைரஸ் பரவுவதில் இளைஞர்கள் வகித்த பங்கிற்கு கூடுதலாக, 30 வயதிற்கு உட்பட்ட 40 பேர் வைரஸால் இறந்துவிட்டார்கள் என்பதையும், வைரஸின் நீண்டகால பக்க விளைவுகள் இன்னும் தெளிவாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரெஞ்சு அரசாங்கமானது விஞ்ஞானத்தையும் சமூக உரிமைகளையும் பொறுப்பற்று புறக்கணித்ததன் முழு விளைவுகள் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளன. திங்களன்று, விஞ்ஞான சபையின் தலைவரான Jean-Francois Delfraisy என்பவர் RTL வானொலியின் நேயர்களை எச்சரித்தார், அதாவது "இரண்டாவது அலை நிச்சயமாக முதல் அலையை விட வலுவானதாக இருக்கும்," என்றும் அச்சுறுத்தும் வகையில் "நமது சக குடிமக்கள் பலர் இன்னும் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி இன்னும் அறிந்திருக்கவில்லை" என்று எச்சரித்தார். தற்போதைய பரிசோதனை உள்கட்டமைப்பு தொற்றுநோயுடன் வேகத்தைத் தக்கவைக்க முடியாததால், தினசரி தொற்று நோய்களின் உண்மையான எண்ணிக்கை 100,000 க்கு அருகில் நெருக்கமாக இருப்பதாக தான் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

வரவிருக்கும் மாதங்களில் பிரான்சில் பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான இறப்புகளின் உண்மையான ஆபத்து உள்ளது. நிதி பிரபுத்துவத்தின் நலன்களாலும், தொடர்ந்து இலாபத்தை பிழிந்தெடுப்பதற்கான அதன் தேவையினாலும் வழிநடத்தப்பட்ட பிரெஞ்சு அரசாங்கமானது ஒரு நடப்பில் உண்மையான சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை இரக்கமின்றி நடைமுறைபடுத்தியுள்ளது. உண்மையில், ஒவ்வொரு மரணமும் ஒரு சமூகக் கொலையாகும், இது பிரெஞ்சு அரசின் தலைமையில் குற்றவியலான முதலாளித்துவ அரசியல்வாதிகளின் சதிக்கூட்டத்தால் நனவுடன் தயாரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.

இன்னும் எற்படப்போகும் பெரிய உயிர் இழப்புக்களைத் தடுக்க, பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் உடனடியாக இணையவழி கற்றலுக்குத் திரும்ப வேண்டும். இது அனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடுவதோடு சேர்ந்து செய்ய வேண்டும். ஒரு புதுப்பிக்கப்பட்ட முடக்கத்தின் போது அனைவருக்கும் முழு நிதி உதவிகளும் மற்றும் வீட்டுவசதிகளும் வழங்கப்பட வேண்டும். இந்த தேவையான நடவடிக்கைகளை கொண்டுவருவதற்கு எடுக்கும் காலமானது, வைரஸைக் கட்டுப்படுத்த பரிசோதனை மற்றும் வைரஸ் தொற்று பரவல் தடமறிதலின் பரந்த விரிவாக்கத்தை அறிமுகப்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும். தொற்றுநோயின் ஆரம்பத்தில் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களைப் பறிமுதல் செய்வதன் மூலம் இவைகளுக்கு நிதியளிக்கப்பட வேண்டும்.

Loading