சீன-விரோத ஆத்திரமூட்டல் அதிகரிப்புக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பொம்பியோ இலங்கைக்கு வருகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை வெளியுற அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயநாத் கொலம்பகே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கான தனது திட்டமிடப்பட்ட பயணத்தின் போது இலங்கைக்கும் வருகை தருவார் என அறிவித்திருந்தார்.

பொம்பியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பரும் -தமது இந்திய சமதரப்பினருடன் உயர் மட்ட ஆலோசனை நடத்துவதற்கு- வெளிநாட்டு கொள்கை, பாதுகாப்பு மற்றும் மூலோபாயப் பிரச்சினை குறித்து கலந்துறையாடும் 2+2 கூட்டத்தில் பங்கேற்க வருகை தருகின்றனர்.

பொம்பியோ, இதற்கு முன்னர், ஜூன் மாதத்தில் இலங்கைக்கான ஒரு உத்தியோக புர்வ விஜயத்திற்கு திட்டமிட்டிருந்ததார். ஆனால், ஜப்பானில் நடைபெற்ற ஜீ20 உச்சிமாநாடு காரணமாக அந்த சுற்றுபயணம் இரத்துச் செய்யப்பட்டது. அமெரிக்க உயரதிகாரி ஒருவரின் இலங்கைக்கான மிக சமீபத்திய வருகை, 2015 அகஸ்டில் அப்போதய வெளியுறவு செயலாளர் ஜோன் கெர்ரியின் விஜயம் ஆகும்.

கெர்ரி, 2015 ஜனவரியில், ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றிய வாஷிங்டன்-திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்குப் பின்னர் இலங்கைக்கு வருகைதந்தார். அமெரிக்கா, இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சி மற்றும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் கொடூரமான இனவாத யுத்தத்திற்கும் ஆதரவளித்த அதே வேளை, பொருளாதார உதவி மற்றும் இராணுவ தளபாடங்களுக்காக பெய்ஜிங்குடன் அவர் உறவுகளை வளர்த்துக்கொண்டதற்கு விரேதாமாகவே இருந்தது.

பொம்பியோ மற்றும் எஸ்பரின் இந்திய துணைக் கண்டத்திற்கான வருகையானது சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் நடிவடிக்கை ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் புகோள பதட்டங்களைப் புதிய மட்டத்திற்கு உயரத்தியுள்ள நிலைமையிலயே நடக்கின்றது.

கடந்த வராம் அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் -ஒரு சீன-விரோத குழு- ஆகிய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் நாற்கூட்டு புாதுகாப்பு பேச்சிற்காக டோக்யோவில் சந்தித்தபோது, இந்தியாவுடானான அதன் எல்லையின் வழியே 60,000 துருப்புக்களை நிறுத்தியமைக்காக பொம்பியோ சீனாவை கண்டித்தார்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர், “இந்த மோதலில் அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாகவும் பங்காளராகவும் இருப்பது முற்றிலும் அவசியம்” என அறிவித்தார். அனைத்து நாற்கூட்டு நாடுகளும் சீன கம்யுனிச கட்சி சுமத்துவதற்கு முயற்சிக்கும் அச்சுறுத்தல்களுடன் தொடர்புடைய உண்மையான அபாயங்களை எதிர்கொள்கின்றன” என அவர் கூறினார். பிராந்தியத்தில் நேரடியான அமெரிக்க இராணுவத் தலையீடானது “நாங்கள் அவர்களை எதிர்கொண்டு அவர்கள் மீது சுமைகளைச் திணிக்கப் போகிறோம்” என சீனாவிற்கு ஒரு சமிக்ஞை அனுப்பும், என்று ஆத்திரமூட்டும் வகையில் அவர் அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுடன் பேணி வந்த ஒரு தசாப்த்தகால நெருக்கமான உறவுகளின் பின்னர், இப்போது இந்தியா, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ, அரசியல் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளில் ஒரு முன்நிலை நாடாக இருக்கிறது.

புது டெல்லியானது அமெரிக்காவின் உதவியுடன், சீனாவுடனான நீண்டகால எல்லை மோதல்களில் தனது நிலையினை பலப்படுத்தியுள்ளது. அணுவாயுதம் வைத்துள்ள இந்தியாவுக்கும் சினாவுக்கும் இடையிலான போரின் எந்தவொரு வெடிப்பும், பேரழிவுகரமான விளைவுகளுடன் ஒரு உலகலாவிய மோதலுக்கு வழிவகுக்கும்.

சீனாவின் பொருளாதார உயிர்நாடியாக பயன்படும் இந்து சமுத்திரம் முழுவதிலுமான பிரதான கடல் வர்த்தக பாதைகளின் வடக்கில் அமைந்துள்ள இலங்கையை, அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் தனது போர் திட்டங்களுக்கு முக்கியாமானது என கருதுகின்றது.

கொழும்பைத் தளமாகக் கொண்ட சண்டேரைம்ஸ, பொம்பியோ தனது பயணத்தின் போது வாஷிங்டனின் 480 மில்லியன் டொலர் மிலேனியம் செலன்ஜ் கோபரேஷன் (எம்.சி.சி.) மானியம் குறித்து ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த இராஜபக்ஷவுடன் கலந்துறையாடுவார் என செய்தி வெளியிட்டது.

இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, தன்னை அமெரிக்க எதிரியாக காட்டிக்கொள்வதன் பேரில், ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் பிரச்சாரங்களின் போது, வாஷிங்டனை விமர்சித்ததினால், எம்.சி.சி. ஒப்பந்தத்தை பூர்த்தி செய்வது இடை நிறுத்தப்பட்து. தேர்தல்களுக்குப் பின்னர், சில “மாற்றங்களுடன்” ஒப்பந்த்தில் கெயெழுத்திடுவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியது.

தீவு முழுவதும் அமெரிக்க இராணுவ சிப்பாய்களின் சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதிக்கும் படை நிலை உடன்படிக்கையை (SOFA) புதுப்பிப்பதற்கு வாஷிங்டன் 2019 ஜூலையில் இருந்து கொழும்பை நெருக்கி வருகின்றது.

2011 இல் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரான, இப்போதைய ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ, அமெரிக்காவுடன் கையகப்படுத்தல் மற்றும் இடைப் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் காலமானது ஜனாதிபதி சிறிசேனவின் கடைசி ஆட்சியின் போது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது. பொம்பியோவின் பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படுமா என்பது தெளிவில்லை என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பானது சிறிசேனவின் ஐந்தாண்டுகளின் போது அதிவேகமாக வளர்ந்தது. கடந்த நவம்பரில் ஜனாதிபதி இராஜபக்ஷ தேர்வானதன் பின்னர், பொம்பியோ, சிறிசேனவின் கீழ் அபிவிருத்தியடைந்த உறவுகளைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற ஒரு வாழ்த்துச் செய்தியை நேரடியாக அனுப்பினார். வாஷிங்டன், இலங்கை இராணுவத்துடனான அதன் நெருக்கமான உறவுகள் மற்றும் குறிப்பாக அமெரிக்க இந்து-பசிபிக் கட்டளை உடனான கடற்படையின் ஈடுபாடு போன்றவற்றை முக்கியமானதாக கருதுகின்றது.

இராஜபக்ஷ, தனது அரசாங்கமானது இந்த நாட்டில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் நலன்களை சவால் செய்யாது என அவற்றுக்கு சமிக்ஞை செய்துள்ளதோடு, பாதுகாப்பு என்ற விடயத்தில் “முதலில் இந்தியா” கொள்கையை பின்பற்றுவாரென அவர் அறிவித்தார். இராஜபக்ஷ ஆட்சியின் முதல் ஆண்டில், INPACOM ஆனது இலங்கையுடன் கூட்டு இராணுவ பயிற்சியை நடத்தியதோடு கிழக்கு இலங்கையில் திருகோணமலையை ஒரு பிரதான மூலோபாய கடற்படை மையமாக பயன்படுத்துவதற்கான ஒரு சாத்தியமான பயிற்சியையும் மேற்கொண்டது.

செப்டம்பரில், எஸ்பர் இராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாதுகாப்பு தொடர்பான விடயங்களைக் கலந்துறையாடினார். அமெரிக்க பாதுபாப்பு திணைக்களமானது நாடுமுழுவதிலும் அமெரிக்க கடற்படையின் தடையற்ற நகர்வுக்கும், மற்றும் தனது சீன-விரோத ஆத்திரமூட்டல்கள் போன்றவற்றின் குறியீட்டு சொற்றொடர்களான “ஒரு சுதந்திர மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக்குக்கான” அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை இரு நாடுகளும் கலந்துறையாடியதாக தகவலளித்தது.

வாஷிங்டன், தீவின் அரசியல் அபிவிருத்திகளை எவ்வளவு நெருக்கமாக பின்பற்றுகின்றது என்பதை குறிக்கும் வகையில், அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் கடந்த மாதம் காங்கிரசுக்கு வழங்கிய அதன் வருடாந்த அறிக்கையில், சீனா அதன் கடல், வான் மற்றும் தரைப் படைகளுக்கு உதவுவதற்கான மேலதிக வெளிநாட்டு இராணுவ தளபாட வசதிகளில் ஒன்றாக இலங்கையை ஏற்கனவே கருதிவந்துள்ளதோடு திட்டமிடுகின்றது,” என சுட்டிக்காட்டியுள்ளது.

வாஷங்டன், சீனாவுக்கு எதிரான தனது மூலோபாய திட்டங்களின் வழியில் இலங்கையை வைத்திருப்பதில் உறுதியாக உள்ளது. இது கடந்த வாரம், கொழும்பிற்கான அமெரிக்க துாதர் அலைனா பி. டெப்லிஸ், டெயிலிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு நீண்ட நேர்காணலில் தெளிவுபடுத்தப்படிருந்தது.

“இலங்கையானது அதன் உறவுகளால் பாதிக்கப்படக் கூடாது மற்றும் இந்த நாடு நிலையான, சுற்றுச்சூழலில் நுண்ணுணர்வான, மற்றும் செலவிடக்கூடிய முடிவுகளுக்கு ஆதரவான சிறந்த கொடுக்கல் வாங்கல்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் இயலுமை கொண்டதாக உள்ளது, என்பதே எமது அக்கறையாகும்… அமெரிக்காவானது இலங்கை மற்றும் ஏனைய நாடுகளின் இறைமையை உறுதிப்படுத்துவதற்கு அவற்றுடன் நிற்கும்,” என டெப்லிஸ் அறிவித்தார்.

“இறைமையை” பாதுகாப்பது பற்றிய டெப்லிஸின் பாசாங்குத் தோரணையானது “பெய்ஜிங்க இந்தப் பிராந்தியத்தில் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும் தென்சீனக் கடலில் அதன் நடவடிக்கைகள் பிராந்திய நாடுகளின் இறைமையை கீழறுக்கின்றன என்ற கூற்றுக்களுடன் இணைந்தவை ஆகும்.

உண்மையில், தென்சீனக் கடலில் உண்மையான ஆதிதிரமூட்டல்காரன் அமெரிக்க ஏகாதிபத்தியமே ஆகும். அது, அதன் சொந்த மூலோபாய நலன்கனை அபிவிருத்தி செய்வதன் பேரில், தனது நேச நாடுகள் என்ன செய்ய வேண்டுமென கட்டளையிடுவதோடு மற்றும் சீனாவிற்கு எதிராக அவற்றை நகர்த்துகிறது.

செப்டம்பரில், “தற்காப்பு மற்றும் பாதுகாப்பு உறவுக்கான செயற்திட்டம்” என்ற தலைப்பில் மாலைதீவுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையில் வாஷிங்டன் கையெழுத்திட்டது. அதில் அது, “இந்து சமுத்திரத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பைப் போணுவதற்கான ஆதரவில் ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும்” கோரியது.

இருப்பினும், 2018 இல் வாஷிங்டன், புது டெல்லியின் ஆதரவுடன், மாலைதீவின் சீன- சார்பு ஜனாதிபதியான அப்துல்லா யமீனை நீக்கி, அமெரிக்க கோரிக்கைகளுக்கு மிகவும் சாதகமான ஒரு ஆட்சியை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டது

நாட்டில் வளர்ந்து வரும் அமெரிக்க பாதுகாப்பு உறவுகள் பற்றிய கவலையில், சீன ஸ்டாலினிச ஆட்சியானது இந்திய துணைக் கண்டத்தில் தனது அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளினை பலப்படுத்த முயற்சிக்கிறது.

கடந்த வாரம், பெய்ஜிங், கம்யுனிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான யங் ஜிச்சி தலைமையில், கொழும்பிற்கு ஒரு உயர்மட்ட குழுவை அனுப்பியது. ஜனாதிபதி இராஜபக்ஷ, “சீனாவினால் நிதியழிக்கப்பட்ட பாரிய திட்டங்கள் ‘கடன் பொறிகள்’ என்ற கருத்தை மறுப்பற்கு தனக்கு உதவுமாறு” சீனாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கெழும்பில் நடந்த கலந்துரையாடலின் போது, சீனா சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்காக 90 மில்லியன் டொலர் உதவித் தொகையையும் வீதிப் போக்குவரத்து அபிவிருத்திக்காக 898 மில்லியன் டொலர் கடன் தொகையையும் வழங்கியது. டிசம்பரில் இராஜபக்ஷ சீனா செல்ல திட்டமிட்டுள்ளார்.

Loading