“தீவிரமயமாதலை குறைக்கும்” முயற்சிகள் தடுமாறும் நிலையில் இந்தியா மற்றும் சீனா இராணுவங்கள் எல்லையில் நீட்டித்த விட்டுக்கொடுக்காத நிலைக்காக குழி தோண்டுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐந்து மாதத்திற்கு மேலாக நீடிக்கும் இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்சனையை தணிப்பதற்கும் மேலும் போட்டிபோடும் அணு ஆயுத சக்திகளுக்கிடையில் ஒரு பேரழிவுகரமான இராணுவ மோதலைத் தவிர்ப்பதற்கும் எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சிகள் தடுமாறுவதாக தோன்றுகிறது.

செப்டம்பர் 10 இல் ஷாங்காய் கார்ப்பரேசன் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின் பக்கவாட்டில் இரண்டு நாடுகளின் அமைச்சர்கள் சந்திப்புகளைத் தொடர்ந்து, 3,470 கிலோ மீட்டர் நீண்ட இமயமலையின் எல்லையில் அவர்களுடைய சர்ச்சைக்குரிய பகுதிகளில் அல்லது இருநாடுகளாலும் “முன்னோக்கி” நிறுத்தப்பட்டிருக்கும் நூறாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை பின்நோக்கி நகர்த்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஒரு முக்கியமான கூட்டத்தை இந்தியா மற்றும் சீனா நாடுகளின் அதிகாரிகள் நடத்தியிருக்கின்றனர். செப்டம்பர் 21 இல் அடுத்த கூட்டத்திற்கான தேதிகளை தீர்மானிக்கமுடியாமல் இரண்டு தரப்பும் மீண்டும் சந்திப்பதான ஒரே ஒரு உடன்படிக்கையுடன் 10 மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த கூட்டம் முடிவுக்கு வந்தது.

வரையறுக்கப்படாத எல்லைகளைக் கொண்ட நாடுகள், அவர்களது நடைமுறையிலுள்ள கட்டுப்பாட்டு கோட்டினை (Line of Actual Control – LAC) தாண்டியிருப்பதாகவும் இராணுவங்களை மீண்டும் திரும்பப் பெறுவதன் மூலம் “தீவிரமயமாதலை குறைக்க” முன் முயற்சி எடுக்க வேண்டும் என்று ஒருவர் மீது மற்றொருவர் அடமாக அதற்கான பொறுப்பை சுமத்துகின்றனர்.

வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்ட இந்தியா பெருகிய முறையில் போர்வெறி மற்றும் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

ஆகஸ்டு பிற்பகுதியில் இந்தியா பான்கோங் ஏரிக்கு அருகில் ஒரு தொடர்ச்சியான மூலோபாய உயரங்களை தனது படைகள் கைப்பற்றியதை சீனாவின் உடனடி “ஆக்கிரமிப்பைத்” தடுக்க எடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இந்தியா பகிரங்கமாக சித்தரிக்கிறது. இது சீனா கட்டுப்பாட்டிலிருக்கும் அக்சாய் சின் மற்றும் இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் லடாக்குக்கும் இடையேயான இணைக்கும் பகுதியைக் கடந்து செல்கிறது.

எவ்வாறாயினும், ஒரு அரை டசின் “தந்திரோபாய முக்கியத்துவம்” வாய்ந்த கைலாஷ் மலைத்தொடர் உச்சிகளை கைப்பற்றுவது உண்மையில் பல வாரங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது மற்றும் அதற்காக பல்லாயிரக்கணக்கான துருப்புகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பதை இந்தியாவின் அதி வலது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கமும் மற்றும் இராணுவமும் திட்டமிடப்பட்ட ஊடக கசிவுகளினூடாக, இதை வெளிப்படுத்துவதற்கு அனுமதித்திருக்கிறது.

“இராணுவ உயரதிகாரிகள் மற்றும் கள அதிகாரிகள் வரை பலகையுடன் உட்கார்ந்திருந்தனர்” என்று தகவல் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒரு ஆதாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கூறியது. ”கடைசி விபரம் வரை ஒவ்வொரு நகர்வும் வரைபடமாக்கப்பட்டிருந்தது. மேலும், நடவடிக்கைகளுக்கு சற்று முன்னர் வரை, வேவுபார்க்கும் பணி நடத்தப்பட்டிருந்தது.இதையெல்லாம் முழு இரகசியமாக அனைத்தையும் முடிப்பதற்கு ஒரு மாதம் நெருங்கிவிட்டது. எங்களுடைய பக்கம் சில அதிஷ்டங்கள் இருந்ததால், அதிக சிக்கல்கள் இல்லாமல் அந்த இலக்கை அடைய முடிந்துவிட்டது.”

எங்களுடைய திட்டத்தில் மூன்று படைகள் இருந்தன. சிறப்பு முண்ணனிப் படை (SFF), இந்தோ திபெத்திய எல்லைப் பொலிஸ் (ITBP) மற்றும் நிச்சயமாக இந்திய இராணுவம். பல இடங்களில் SFF கமாண்டோக்களுடன் குறிப்பிட்ட உயரங்களை அடைவதற்கு சிறந்தமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைகள் இருந்தன. ... சீன இராணுவத்தினர் கறுப்பு சட்டையுடனும், கறுப்பு ஹெல்மெட் போட்டுக்கொண்டு முன்னேறின, ஆனாலும் அந்த சுற்றியுள்ள உச்சியில் அவர்களை நாம் சுற்றி வளைத்துவிட்டோம். என்று ஒரு இந்திய உளவுத் துறை அதிகாரி விவரித்துள்ளார்.

சீன மக்கள் விடுதலை இராணுவத்துடன் (PLA) ஒரு பெரியளவிலான ஆயுத மோதலைத் தூண்டுவதற்கான ஆபத்துக்கு அதன் தயார் நிலையை உறுதிப்படுத்தியிருக்கிற நிலையில் பாஜக அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைக்கான உத்தரவை, இந்திய ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபனம் சர்வவியாபகமாக கொண்டாடின. இத்தகைய மோதல், சீன-இந்திய உறவுகளின் ஆபத்துகள் நிறைந்த தன்மை மற்றும் உலகளவில் புவிசார் அரசியல்பதட்டங்களின் அதிகரிப்பு, அனைத்திற்கும் மேலாக வாஷிங்கடன் பெய்ஜிங்குக்கு எதிராக அனைத்து தரப்பு இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாய தாக்குதல் எல்லாம் எளிதாக ஒரு முழுமையான போருக்குள் கொண்டுசெல்லும்., அது தவிர்க்கமுடியாதபடி மற்றைய பெரும் சக்திகளையும் உள்ளிழுக்க முடியும்.

இந்தியா ஆகஸ்ட் 20-30 க்கு முன்னர் அது கொண்டிருந்த நிலைகளைவிட்டு பின்வாங்கவேண்டும் என்று பெய்ஜிங் வலியுறுத்திகொண்டிருக்கிறது மேலும் பல்வேறு எல்லை முக்கிய பகுதிகளிலிருந்து சீனா கீழே இறங்கவில்லை என்றால் புது டெல்லி அதன் தந்திரோபாய நலனிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என பிடிவாதமாக மறுக்கிறது. இரு புறமும் நீண்ட, விட்டுக்கொடுக்காத நிலைப்பாட்டிற்காக வெளிப்படையாகவே குழிதோண்டிக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் பத்திரிகை செய்திகளின்படி, மலைப்பகுதியில் வாழமுடியாத அளவுக்கு வரும் குளிர்கால மாதங்களில் அதன் துருப்புகள் தாங்கிக்கொள்வதற்கு அனுமதிக்கும் நிலையில் இந்திய இராணுவம் விரைவாக முகாம்கள் மற்றும் பிற கட்டுமானங்களையும் அமைத்துவருகிறது. இவற்றில் கடல் மட்டத்திற்கு மேல் கிட்டத்தட்ட 15,000 அடி (4,570 மீட்டர்கள்) உயரத்தில் உள்ள நிலைகள் உள்ளடங்கியிருக்கின்றன.

அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இந்திய இராணுவம் தற்போதைய கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதிகளில் (LAC) அவர்களுடைய துருப்புகள் நேரடியாக சுடுவதை தடுப்பதற்கான 1996 இன் சீன-இந்திய ஒப்பந்தத்தினை திறம்பட நிராகரித்திருக்கிறது. சீனத் துருப்புகள் “மேம்பட்ட ஆயுதங்களைக்” கொண்டு அவர்களை வெளியேற்றுவதற்கு முயற்சித்தால் “சுடுவதற்கு” இந்திய இராணுவ சிப்பாய்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக முகமூடி அணிந்த இந்திய இராணுவ அதிகாரிகள், 2020 ஜூன் 18, வியாழக்கிழமை, இந்தியாவின் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 140 கிலோமீட்டர் (87.5 மைல்) தொலைவில் உள்ள சூர்யாபேட்டையில் தங்கள் சகாவான கர்னல் பி. சந்தோஷ் பாபுவின் இறுதி சடங்கைக் கடந்து நடந்து செல்கின்றனர். (AP புகைப்படம் / மகேஷ்குமார் ஏ.)

கல்வான் பள்ளத்தாக்கில் யூன் 15 இரவு, மலைமுகட்டில் கத்திகளுடன் ஒரு மோசமாக நடந்த சண்டையில் ஒரு கர்ணல் உட்பட 20 இந்திய படையினரும் மற்றும் எண்ணிக்கை குறிப்பிடப்படாத சீன மக்கள் இராணுவ படையினரும் கொல்லப்பட்டனர். ஆனால் இரண்டு தரப்பினரும் நேரடியாக சுடக்கூடாது என்ற ஒப்பந்தத்தை மீறவில்லை.

செப்டம்பர் 10 இன்று பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்ட 36வது ஐந்தாவது தலைமுறையை சேர்ந்த முதல் ஐந்து ரஃபேல் போர் விமானங்கள உத்தியோகபூர்வமாக சேர்த்துக்கொண்ட நிகழ்வை பெய்ஜிங்குக்கு தகவல் அனுப்பும்விதமாக இந்தியா பயன்படுத்திக்கொண்டது.

”நிலவும் பாதுகாப்பு நிலைமைகளின் வெளிச்சத்தில் ரஃபேலை உள்சேர்க்கும் நிகழ்ச்சி ஒரு மிக முக்கிய அடியெடுத்து வைப்பாக இருக்கிறது அல்லது அது இந்தியாவின் எல்லைகளில் படைக்கப்பட்டிருக்கிறது என்று நான் சொல்வேன்” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவின் விமானப்படையின் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ். பாடோரியா நேற்று பத்திரிகையாளர்களுடன் பேசும்போது ரஃபேல் போர் விமானங்களின் பங்குபற்றி பெருமையுடன் பேசினார் மேலும் சமீபத்தில் வாங்கிய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள் மற்றும் குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானங்கள் எல்லாம் எல்லை மோதலில் விளையாடுகின்றன என்றார்.

“போர் இல்லை அமைதி நிலை இல்லை எனும் ஒரு சங்கடமான நிலையில் எங்கள் வடக்கு எல்லைகளின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை இருக்கிறது. எந்தவொரு இறுதி நிலைக்கும் தயாரான நிலையில் எங்களுடைய பாதுகாப்பு படைகள் வைக்கப்பட்டிருக்கிறது.” என்று இந்திய இராணுவம் போர் தயாரிப்பில் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கிறது என்று வலியுறுத்தி விமானப்படை தலைவர் அறிவித்துள்ளார்.

இந்தியாவைப் போன்று, பெய்ஜிங் சில 50,000 துருப்புகள் மற்றும் மேம்பட்ட ஆயுதங்களுடன் தற்போதைய கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் நிறுத்திவைத்திருக்கிறது மேலும் இந்தியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையாக அதன் ஆத்திரமூட்டும் அச்சுறுத்தலை, குறிப்பாக அதன் அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் பத்திரிகையினூடாக வெளியிட்டிருக்கிறது.

ஆனால் இந்தியா-சீனா எல்லைத் பிரச்சனை அவரவர் நாடுகளின் அந்தந்த ஊடகங்களால் வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கும், அவர்களின் உள்நாட்டு அரசியலில் அது வகிக்கும் பங்கிற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க இருவகை வேறுபாடு உள்ளது.

பெய்ஜிங் எல்லைப் பிரச்சினையை இரண்டாம் நிலை பிரச்சினையாக சித்தரித்து, தற்போதைய கட்டுப்பாட்டு கோடு (LAC) தொடர்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் தங்கள் இருதரப்பு உறவை வரையறுக்க அனுமதிக்கக் கூடாது என்று பகிரங்கமாக வாதிடுகையில், இந்திய ஆளும் உயரடுக்கு சீன “ஆக்கிரமிப்பு” இருப்புக்கு அச்சுறுத்தலை கொண்டுள்ளது என்று கூறுகிறது.

கோவிட்-19 தொற்றுநோய் மூலம் ஏற்பட்ட சுகாதார மற்றும் சமூக பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கு எல்லைப் பிரச்சனையை பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய பாஜக அரசாங்கமும் பயன்படுத்துகின்றன.

அதன் தவறாக தயாரிக்கப்பட்ட பொதுமுடக்கம் மற்றும் மேலும் அழிவுகரமான செயலான “மீண்டும் திறப்பு” ஆகியவை நாடு முழுவதும் கொந்தளிப்பையும் பெருமளவிலான இழப்புகளை கொண்ட ஒரு தொற்றுநோய் பரவலை ஏற்படுத்தியுள்ளன. நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் முறையே 6 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 பாதிப்புகள் மற்றும் 96,318 இறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன, இது உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதமாக சுருங்கிய நிலையிலிருந்து சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தங்கள் அற்ப வருமானம் குறைந்திருப்பதையும் காணமுடிந்தது.

போர்வெறி கொண்ட தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதன் மூலம், தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கம் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை "தேச விரோதம்" என்று சித்தரிக்க முற்படுகிறது. அப்படி இல்லையென்றால் அப்பட்டமான தேச துரோகம் என்று கூறுகிறது, அதன் மூலமாக அதனை ஒடுக்குவதையும் சட்டபூர்வமாக நியாயப்படுத்துகின்றது.

இந்தியாவின் ஆளும் உயரடுக்கின் ஆதிக்கப் பிரிவுகளின் வலுவான ஆதரவுடன், பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்க மூலோபாய தாக்குதலில் இந்தியாவை இன்னும் முழுமையாக ஒருங்கிணைக்க எல்லைப் பிரச்சனையை பாஜக அரசாங்கமும் பயன்படுத்துகிறது.

சமீபத்திய வாரங்களில் வாஷிங்டன் மற்றும் அதன் மிக முக்கிய ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் காணப்படுகின்றன. சீனாவின் பெல்ட் மற்றும் சாலை போடும் முன்முயற்சியை கூட்டாக எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவையும் ஜப்பானையும் தளமாகக் கொண்ட நிறுவனங்களை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவதற்கும், இந்தியாவை மாற்று தொழிற்சாலையின் உற்பத்தி சங்கிலி மையமாக மாற்றுவதற்குமான படிகளை இந்த நடவடிக்கை உள்ளடக்கியிருக்கிறது.

ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான அமெரிக்கா தலைமையிலான நாற்கர (Quad) "மூலோபாய உரையாடல்" - அதன் வெளியுறவு மந்திரி, எஸ்.ஜெய்சங்கர், அடுத்த வாரம் டோக்கியோவுக்கு செல்லும்போது நடக்கும் என்று நேற்று இந்தியா அறிவித்துள்ளது. அக்., 6 கூட்டம் நான்கு நாடுகளுக்கிடையே மேம்பட்ட உளவுத்துறை பகிர்வை அறிவிக்கும் என்றும், கூட்டு இராணுவப் பயிற்சிகளின் சாத்தியத்தை ஆராயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத், Quad இந்தியப் பெருங்கடலில் "கடற்பயண சுதந்திரத்தை" உறுதி செய்வதற்கான வழிமுறையாக மாறக்கூடும் என்று கூறினார், இந்த அறிக்கை அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளுடன் கூட்டு கடற்படை ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக பரவலாக பார்க்கப்படுகிறது .

ஜப்பான் பயணத்தின் போது, ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் போம்பியோ மற்றும் ஜப்பானிய மற்றும் ஆஸ்திரேலிய சகாக்களுடன் முறையே மொடேகி தோஷிமிட்சு மற்றும் மரைஸ் பெய்ன் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

கடந்த மே மாதம் தற்போதைய இந்தோ-சீன எல்லை மோதல் வெடித்த சில நாட்களில் வாஷிங்டன் ஆர்ப்பாடத்துடன் ஊடுருவியது. 2017 ஆம் ஆண்டில் டோக்லாம் பீடபூமியில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான 10 வார கால மோதலின் போது பகிரங்கமாக நடுநிலைமை குறித்து பேசிய அந்த நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், வாஷிங்டன் சீனாவை ஆக்கிரமிப்பாளராக முத்திரை குத்தியது.

அடுத்த ஐந்து மாதங்களில், டிரம்ப் நிர்வாகமும் அதன் ஜனநாயக எதிராளிகளும் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் இமயமலை எல்லையில் ஏற்பட்ட பதட்டங்களுக்கும், அமெரிக்கா உருவாக்கிய தென் சீன தகராறுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாக திரும்ப திரும்ப கூறியுள்ளனர்.

சீனாவின் எழுச்சியைத் தடுக்க வெறிகொண்டிருக்கும் வாஷிங்டன் பொறுப்பற்ற முறையில் இந்தியாவைத் தூண்டுகிறது, இரண்டு நாடுகளும் சேர்ந்து பெய்ஜிங்கின் மீது அழுத்தத்தை அதிகரிக்கின்றன அதன் மூலம் இந்திய முதலாளித்துவத்தின் மீதான அதன் பிடியை இறுக்கமாக்கி உலக மேலாதிக்கத்திற்கான அதன் பொறுப்பற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் உந்துதலை அதிகரிக்கிறது, அது இந்த பிராந்திய மற்றும் உலக மக்களுக்கும் கணக்கிட முடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குனர் லிசா கர்டிஸ், செப்டம்பர் 17 வெபினாரில், “இந்திய-பசிபிக் இந்தியா: புது தில்லியின் வாய்ப்பிற்கான திரையரங்கு” என்ற தலைப்பில் பேசுகையில், இந்தியா-சீனா எல்லை பிரச்சனை “அமெரிக்க-இந்தியா மூலோபாய கூட்டின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியுள்ளது மற்றும் சீன ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஒரு அரணாக அந்த உறவை கட்டியெழுப்புவதற்கான அமெரிக்க தீர்மானத்தை அது பலப்படுத்தியுள்ளது.” என்றார்.

அதே வெபினாரிலும் அதே தொனியில் பேசிய முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பணியாற்றிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன் பேசுகையில் இந்தியா அமெரிக்காவுடன் ஒரு சம்பிரதாய உடன்படிக்கையில் இருக்கவில்லை என்றாலும், அது வாஷிங்டனுடன் இணைந்து செயல்படவும், ஒரு ஒப்பந்த நட்பு நாடாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான காரியங்களைச் செய்யவும் பெருகிய முறையில் தயாராக இருக்கிறது” என்றும் கூறினார்.

"அமெரிக்காவுடன் ஒரு கூட்டணி இல்லாமல், உண்மையில் அமெரிக்க நட்பு நாடுகள் செய்வது போன்று நாங்கள் அமெரிக்காவுடன் சேர்ந்தும் மற்றும் அமெரிக்காகவும் வேலைகள் செய்யத் தொடங்குவோம் என்ற கருத்தை மேலும் பலர் ஏற்றுக்கொள்வார்கள்." என்று மேனன் மேலும் கூறினார்.

"நான் நினைக்கிறேன்” என்று அவர் தொடர்ந்தார்."ஒரு பெரிய பொதுவான மூலோபாயத்திற்குள் ஒரு குறிப்பிட்ட பாத்திரங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் அதற்குள் பொருத்திக் கொள்வது என்ற இயங்குதலின் உண்மையான நடைமுறை – என்பது இன்று ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று நான் பார்க்கவில்லை." என்றார்.

Loading