அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவின் பாதி மக்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படலாம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கமும் ஊடகங்களும் கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் “கூர்மையான வீழ்ச்சி” இருப்பதாக பெருமை பேசிக்கொண்டிருக்கையில், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு 1.3 பில்லியன் மக்கள்தொகையில் பாதி பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நோய் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தது.

நேற்றைய நிலவரப்படி, இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்புக்குகளின் எண்ணிக்கை 7.94 மில்லியனாக உயர்ந்தது, முந்தைய 24 மணி நேரங்களை விட 36,370 புதிய தொற்றுகள் உள்ளன. மொத்த இறப்பு எண்ணிக்கை 119,502 ஆக உயர்ந்தது, கடந்த 24 மணி நேரத்தில் 488 பேர் இறந்தனர்.

இந்தியாவின் மும்பையில் உள்ள தியோனார் சேரியில் சுகாதார ஊழியர்கள் COVID-19 அறிகுறிகளை கண்டறிய குடியிருப்பாளர்களை திரையிடுகின்றனர். (படத்திற்கு நன்றி: AP புகைப்படம் / ராஜனிஷ் ககாடே)

ஒரு வாரத்திற்கு முன்பு, தினசரி உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 46,790 ஆகவும், அக்டோபர் தொடக்கத்தில், தினசரி தொற்றுநோய்களின் எண்ணிக்கை 86,821 ஆகவும் இருந்தது. இந்த வீழ்ச்சி குறித்து சுகாதார அமைச்சகம் கூறுகையில் இந்தியாவின் ”அதிர்ஷ்டத்தினால் எண்ணிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது" என்றது.

இருப்பினும், இந்தியா தற்போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக உள்ளது. மேலும், உத்தியோகபூர்வ எண்ணிக்கைகள் மிகவும் குறைத்து காட்டப்படுகின்றன.

அக்டோபர் 19 ம் தேதி ராய்ட்டர்ஸுடன் பேசிய இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பேராசிரியர் மனிந்திர அகர்வால் கூறினார்: "எங்கள் கணித மாதிரி, சுமார் 30 சதவிகித மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பிப்ரவரி மாதத்திற்குள் 50 சதவிகிதம் வரை உயரக்கூடும் என்றும் மதிப்பிடுகிறது." அவர் தொற்றுநோய் குறித்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட, 10 பேர் கொண்ட குழுவில் உறுப்பினராக உள்ளார்.

செப்டம்பர் மாத நிலவரப்படி 14 சதவிகித மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காட்டிய அரசாங்கத்தின் செரோலாஜிக்கல் கணக்கெடுப்புகளை விட இந்த மதிப்பீடு மிக அதிகமாக உள்ளது. அரசாங்கத்தின் சிந்தனைக் குழுவான என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், இந்தியாவில் கோவிட் -19 வைரஸின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டார். அதன் கண்டுபிடிப்புகளில், அது இவ்வாறு எச்சரித்தது: "முன்னெச்சரிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால், பண்டிகை காலத்தின் காரணமாக இந்தியா ஒரு மாதத்தில் 260,000 நோய்தொற்றுகளின் அதிவேக அதிகரிப்பைக் காணலாம்."

கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவற்றில் இன்னும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணக்கூடியதை குறிப்பிட்டு,: “கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குளிர்காலத்தில் தோன்றுவதை நிராகரிக்க முடியாது.” என்று அது அது கூறியது.

அதே நேரத்தில், அந்த குழு அறிக்கை பேரழிவு சூழ்நிலைக்கு அரசாங்கம் பொறுப்பாளியாக இருப்பதை குறைத்து மதிப்பிட முயற்சித்தது. செப்டம்பர் மாதத்தில் COVID-19 தொற்றுகள் இந்தியாவில் உச்சத்தை எட்டியது என்றும் இப்போது கீழ்நோக்கிய சரிவில் உள்ளது" என்றும் அறிவித்தது.”

COVID-19 வளைவு "தட்டையாகியுள்ளது" என்றும், "சிறந்த வசதியுள்ள சுகாதாரப் பாதுகாப்பு முறையால் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப முடக்கம் வளைவைத் தட்டையாக்க உதவியது" என்றும் அது கூறியது. உண்மையில், இந்தியாவின் அதிக நிதியுதவியற்ற பொது சுகாதார அமைப்பு, வேகமாக அதிகரித்து வரும் COVID-19 நோய்த்தொற்றுகளால் மூழ்கடிக்கப்பட்டது.

சிறப்பான சித்திரத்தை வரைய முயன்ற மோடி அக்டோபர் 26 அன்று ட்வீட் செய்தார்: “ஒரு நாளைக்கு தொற்றுகளின் எண்ணிக்கையும், தொற்றுகளின் வளர்ச்சி விகிதமும் குறைந்து வருவதை நாங்கள் காண்கிறோம்.” இந்தியா மிக அதிகமான "88 சதவிகித குணமடையும் மீட்பு விகிதங்களில் ஒன்றாகும்" என்று அவர் பெருமையாகக் கூறினார், ஏனெனில் இந்த நாடு "ஒரு நெகிழ்வான முடக்கத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடுகளில் ஒன்றாகும்."

இந்தியாவின் இரண்டு மாதங்கள் நீடித்த முடக்கம் நூறு மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்களுக்கும் வேலை இழந்த ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒரு பேரழிவாக இருந்தது என்பது ஒரு தெளிவான உண்மையாக இருக்கையில் மோடியின் இந்த அறிவிப்பு அபத்தமானது. எந்தவொரு வருமானமும் போதுமான உணவும் இல்லாமல் பல மில்லியன் மக்கள் கடுமையான வறுமைக்குள் தள்ளப்பட்டனர்.

மேலும், மோடியின் முடக்கம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது, ஏனெனில் அது பரந்தளவிலான சோதனை, தொடர்புத் தடமறிதலை அமுல்படுத்தவில்லை மற்றும் மிக முக்கியமாக, பொது சுகாதார அமைப்புக்கு பிரமாண்டமான நிதி ஊக்கம் வழங்கப்படவில்லை. பெருவணிகத்தின் கோரிக்கைகளுக்கு விடையிறுக்கும் வகையில், ஏப்ரல் மாத இறுதியில் இருந்து அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தியது, இது COVID-19 தொற்றுகள் மற்றும் இறப்புகளின் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ உட்பட உலகெங்கிலும் உள்ள தனது சகாக்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மோடி, அதிகாரப்பூர்வமற்ற முறையில் கொலைகாரத்தனமான “சமூக நோய் எதிர்ப்பு சக்தி கொள்கையை” ஏற்றுக்கொண்டார், இது தொற்றுநோய் நாடு முழுவதும் சுதந்திரமாக பரவ அனுமதிக்கிறது.

அக்டோபர் 20 ம் தேதி ஒரு தொலைக்காட்சி உரையில், அமெரிக்கா மற்றும் பிரேசிலுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் இறப்பு விகிதம் ஒரு மில்லியன் நபர்களுக்கு 83 என்று மோடி தனது கூற்றுக்களை மீண்டும் வலியுறுத்தினார். இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இது COVID-19 காரணமாக ஏற்பட்ட இறப்புகளை மிகப்பெருமளவில் கணக்கெடுக்காததன் விளைவாக தான் இருக்க முடியும்.

சோதனைகளின் எண்ணிக்கையில் குறைவின் காரணமாகவும் கூட COVID-19 தொற்றுகளில் வெளிப்படையான வீழ்ச்சி குறைவானதாக இருக்கலாம். மிகக் குறைந்த அளவிலான சோதனை செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.செப்டம்பர் மாதம் இந்து வெளியிட்ட ஒரு கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “குறைந்தது 10 மாநிலங்களில் கடந்த 10 நாட்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையில் கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்டது. மிக மோசமான பாதிப்புள்ள மகாராஷ்டிரா மாநிலம். டைம்ஸ் ஆப் இந்தியாவின் கூற்றுப்படி, தினசரி சோதனை பரவலாக ஏற்ற இறக்கமாக உள்ளது - இது 1.2 மில்லியனுக்கும் அதிகமானதில் இருந்து 900,000 க்கு கீழ் வந்துள்ளது. Ourworldindata.org, சோதனை விகிதத்தில் பாதிக்கும் மேலான கூர்மையான சரிவைக் காட்டுகிறது October அக்டோபர் 1 ஆம் தேதி 1,000 பேருக்கு 1.08 லிருந்து அக்டோபர் 19 அன்று 1,000 பேருக்கு 0.62 ஆக குறைந்தது.

அரசாங்கம் ஆபத்துக்களை குறைத்து காட்டுகையில், அக்டோபர் 19 அன்று ஒரு பிபிசி கட்டுரை இவ்வாறு எழுதியது: “பெரும்பாலான தொற்றுநோயியல் வல்லுநர்கள் மற்றொரு உச்சம் தவிர்க்க முடியாதது என்றும் நவம்பர் மாதம் தொடங்கும் புகைமூட்டம் நிறைந்த குளிர்காலத்தில் வட இந்தியாவில் தொற்றுகளின் சுமைகள் அதிகரிக்கும் என்றும் நம்புகின்றனர்.”

"தொற்றுநோய் குறைந்து வருகிறது என்று சொல்வது மிகவும் வேகமாக சமீபத்தில் நடப்பதாக இருக்கும்" என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிர் புள்ளிவிவரம் மற்றும் தொற்றுநோயியல் பேராசிரியர் டாக்டர் பிரமார் முகர்ஜி பிபிசியிடம் தெரிவித்தார். "[அங்கு] மாசு காரணமாக குளிர்காலத்தில் இறப்பு அதிகரிக்கும், இது சுவாச நோய்களுக்கு மிகவும் மோசமானது.

"மே மாதத்திலிருந்து தொடங்கும் நோய்த்தொற்றுகளின் அதிவேக வளர்ச்சி, மோடியின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்" என்ற கொள்கையுடன் தொடர்புடையது- அது வைரஸ் பரவலாக இயங்க அனுமதிக்கிறது - இது மக்கள்தொகையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய அடுக்குகளை, குறிப்பாக வயதானவர்களை, கடுமையாக தாக்கும். வணிக உயரடுக்கின் கோரிக்கைகளின் பேரில் செயல்பட்டு, வணிகங்களையும் பிற நிறுவனங்களையும் மோடி மீண்டும் திறப்பதன் மூலம் பல மில்லியன் கணக்கானவர்கள் கொடிய வைரசால் பாதிக்கப்படுவார்கள். உலகெங்கிலும் உள்ள அதன் சகாக்களைப் போலவே, இந்திய ஆளும் உயரடுக்கு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் உடல்நலம் மற்றும் உயிர் வாழ்வுக்கு மேலாக பொருளாதார செயல்பாடு மற்றும் பெருநிறுவன இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

Loading