முன்னோக்கு

அமெரிக்க தேர்தல் முடிவுகளின் தாமதத்திற்குப் பின்னால்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2020 தேர்தல் முடிவுகளையும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் வெற்றியையும் அறிவிப்பதில் தொடர்ந்து தாமதப்படுத்துவதற்கு அங்கே எந்த சட்டப்பூர்வ காரணமும் இல்லை.

மக்கள் வாக்குகளில் பைடென் நான்கு மில்லியனுக்கும் அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ளார், அவர் தேர்வுக் குழுவில் பெரிய வித்தியாசத்தில் ஜெயிக்கும் பாதையில் உள்ளார். பென்சில்வேனியாவில், பைடென் தற்போது 28,000 க்கு அதிகமான வாக்குகள் முன்னிலையில் உள்ளளார், ஜனநாயகக் கட்சி பலம் வாய்ந்த அம்மாநில பகுதிகளில் இன்னும் நிறைய தபால் வாக்குகள் எண்ணப்படும் போது அவரின் முன்னிலை சீராக அதிகரித்து வருகிறது. அம்மாநில வெற்றி மட்டுமே போதும் அவருக்கு தேர்வுக் குழுவில் அவசியமான வாக்குகளை வழங்கிவிடும்.

ஆனால் எந்த பிரதான வலையமைப்புகளும் பைடென் வெற்றியை அறிவிக்கவில்லை. “எண்ணிக்கையே விசயத்தைத் தெளிவாக எடுத்துரைக்கிறது,” என்று நேற்றிரவு ஓர் உரையில் கூறிய போதினும், வெற்றி அறிவிக்கவில்லை, ஆனால் ட்ரம்ப் தெளிவாக தோல்வி அடைந்துள்ள போதினும், அவ்வாறு அறிவித்துள்ளார்.

Democratic presidential candidate former Joe Biden speaks November 5, 2020, in Wilmington, Delaware with Kamala Harris [Credit: AP Photo/Carolyn Kaster]

பென்சில்வேனியா மற்றும் பைடெனின் தேர்வைக் குறித்து Vox பிரசுரம் கணக்கிட்டுள்ளதுடன், அதன் விளக்கம் தெளிவான காரணங்களை விளக்குகிறது, இது ஏனைய எல்லா வலையமைப்புகளிலும் கிடைக்கிறது. Vox இன் தேர்தல்-கணக்கீட்டு துணை நிறுவனம் Decision Desk இன் தலைவர் Drew McCoy வெள்ளிக்கிழமை காலை விளக்கமளித்தார்: “பிலடெல்பியாவில் இருந்து வாக்கு எண்ணிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதால், எங்கள் கணக்கைப் பொறுத்த வரையில், இனம் என்பது முடிந்துவிட்டது,” என்றார். “அம்மாநிலம் எங்கிலும் மற்றும் பிலடெல்பியாவிலும் மீதி வாக்குகள் எண்ணப்படுகின்றன என்பதால், பைடெனின் முன்னிலை தொடர்ந்து அதிகரிக்கும் என்பது முற்றிலும் வெளிப்படையாக உள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். இறுதி வாக்கும் எண்ணப்படும் போது, பைடென் "அனேகமாக 2 சதவீதத்தில்" அம்மாநிலத்தில் ஜெயிக்கலாம், இது மறுஎண்ணிக்கை தேவைப்படும் மட்டங்களுக்கும் மேலதிகமாக இருக்கும் என்று McCoy தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாவது ஒரு கணக்கிட்ட அரசியல் முடிவாகும், இது அதிதீவிர வலதுக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கும். அமெரிக்காவில் முன்பில்லாத அரசியல் நெருக்கடியை எவ்வாறு தீர்ப்பது என்பதன் மீதும், குடியரசுக் கட்சியினர் இராணுவத்தினர் மீது பலமாக பிடியை வைத்திருக்கும் நிலையில் எதிர்கால பைடென் நிர்வாகத்தைச் சமாளிப்பதன் மீதும் திரைக்குப் பின்னால் தற்போது ஆழ்ந்த விவாதங்கள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே ட்ரம்ப் பதவியில் இருப்பதற்கு அவரின் சொந்த சூழ்ச்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார். வாக்குகள் எப்படி திரும்பினாலும் அவர் தேர்தலை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று வெள்ளிக்கிழமை அவர் தமது பிரச்சாரக் குழுவினருக்குத் தெரிவித்தார். அவர் ஜனாதிபதியாக இருக்கிறாரோ இல்லையோ ஒரு பாசிசவாத இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்கும் ஒரு "முதுகில் குத்தும்" கட்டுக்கதைகளை உருவாக்குவதே அவர் நோக்கமாக உள்ளது.

வாக்குகளை முடக்குவதற்காக ட்ரம்ப் பிரச்சாரக் குழு மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியாவில் சட்டவழக்குகள் தாக்கல் செய்துள்ளதுடன், விஸ்கான்சினில் மறுஎண்ணிக்கை கோரி வருகிறது மற்றும் இப்போது ட்ரம்பின் மிகச் சமீபத்திய நியமனமான அமி கொனெ பாரெட்டை உள்ளடக்கி உள்ள உச்ச நீதிமன்றத்திற்கு அதன் வழக்கை எடுத்துச் செல்லவும் திட்டமிட்டு வருகிறது. கிளிண்டன் நிர்வாகத்தின் போது வொயிட்வாட்டர் விவகாரத்தை விசாரணை செய்வதில் பிரதிநிதிகள் சபை குழுவின் தலைமை புலனாய்வாளராக சேவையாற்றிய நீண்டகால அரசியல் சூழ்ச்சியாளர் டேவிட் போஸ்சை தனது சட்ட போராட்டத்திற்குத் தலைமை கொடுக்க ட்ரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.

ட்ரம்பும் அவர் கூட்டாளிகளும் உள்நாட்டு போர் மொழியைப் பேசி வருகின்றனர். வியாழக்கிழமை, ட்ரம்பின் நீண்டகால நெருங்கிய நண்பரான ஸ்டீபன் பானன், "ஓர் எச்சரிக்கை" என்பதாக வெள்ளை மாளிகைக்கு வெளியே கூர்மையான ஆயுதத்தைக் காட்சிப்படுத்துமாறு தேசிய சுகாதாரத்துறையின் தலைவர்கள் இயக்குனர் ஆண்டனி ஃபாஸி மற்றும் FBI இயக்குனர் கிறிஸ்தோபர் இவ்ரே ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.

நிலைமை தலைகீழானால், குடியரசுக் கட்சியினர் ஏற்கனவே வெற்றியை அறிவித்துள்ள நிலையில், சந்தேகத்திற்கிடமின்றி ஜனநாயகக் கட்சியினர் அதற்கு விட்டுக்கொடுக்கலாம். 2000 இல், புளோரிடாவில் புஷ் வெறும் 537 வாக்குகள் முன்னிலையில் இருந்த போது அங்கே மறுஎண்ணிக்கையை நிறுத்தியதன் மூலமாக ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தேர்வாவதை முடிவெடுக்க உச்ச நீதிமன்ற தலையிடுவதற்கு ஜனநாயகக் கட்சியினர் நிபந்தனையின் பேரில் சரணடைந்தனர். கோர் அவரின் விட்டுக்கொடுப்பான உரையில், அரசியல் காட்சியிலிருந்து தலைமறைவாவதற்கு முன்னதாக "நமது அடுத்த ஜனாதிபதிக்குப் பின்னால் ஒன்றிணையுமாறு" எல்லா அமெரிக்கர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

2016 இல் தேர்தல்களில், தேர்தல் தினத்தைத் தொடர்ந்து அதிகாலையில் கிளிண்டன் ட்ரம்புக்கு விட்டுக் கொடுத்தார். அந்த விட்டுக்கொடுப்பு நேரத்தில், பிரதான வலையமைப்புகள் பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய கடுமையான போட்டி நிலவிய முக்கிய மாநிலங்களில் முடிவுகளைக் கூட கோரவில்லை. இந்த மாநிலங்களில் ட்ரம்பின் இறுதி பெரும்பான்மை மிகவும் சிறிய வித்தியாசத்தில் இருந்தது—மிச்சிகனில் 10,000 வாக்குகள், விஸ்கான்சினில் 20,000, பென்சில்வேனியாவில் 40,000 இக்கும் குறைவான வாக்குகளாக இருந்தன.

இப்போது, ட்ரம்ப் பதவியில் தங்கியிருப்பதற்கான அவரின் சூழ்ச்சியைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், ஜனநாயகக் கட்சியினரோ "பொறுமையாக" குறித்தும், “சூட்டைத் தணித்து வைக்கப்பதற்கான" “உண்மையைப் பேணுவதற்கான" அவசியத்தைக் குறித்தும் மழுங்கடிக்கும் பேச்சுக்களைத் திறமையாக பேசியவாறு மண்டியிட்டு தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை பைடென் அவரின் சுருக்கமான கருத்துக்களில், ட்ரம்ப் அல்லது அவரின் சூழ்ச்சிகளைக் குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை. “நாம் போட்டியாளர்களாக இருக்கலாம், ஆனால் நாம் எதிரிகள் இல்லை,” “ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்வதே" அவர் கடமை என்ற அவர் கருத்தை மீண்டும் உரைத்தார். முதலாளித்துவ அரசியலின் உள்ளடக்கத்திற்குள், குடியரசுக் கட்சியினருடன் நடைமுறையளவில் தேசிய நல்லிணக்க அரசாங்கம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. குடியரசுக் கட்சி செனட் சபை பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கொன்னல் உடன் பைடெனுக்கு நெருக்கமான உறவு உள்ளது, இவருடன் நேற்று மதியம் அவர் விவாதங்கள் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

செனட் சபையின் நீதித்துறை குழு தலைவர் லிண்டெ கிரஹாம் திரைக்குப் பின்னால் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் மற்றொரு பிரமுகராக உள்ளார். பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் நெவாடாவின் வாக்குகளை மாற்றும் சட்ட பிரச்சாரத்திற்கு கிரஹாம் தனிப்பட்டரீதியில் 500,000 டாலர் நன்கொடை வழங்கி, வெள்ளிக்கிழமை காலை, தேர்தலைக் களவாடுவதற்கான ட்ரம்பின் முயற்சிகளுக்குத் அவர் தனது ஆதரவை அறிவித்தார்.

பின்னர் அதே நாளில், சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பைடென் நிர்வாகத்துடன் அவர் செயல்படக்கூடும் என்பதை கிரஹாம் அறிவித்தார். “பொதுவான அரங்கைக் காண்பதென வருகையில், நான் அதை செய்வேன்,” என்று கிரஹாம் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். “ஓர் அமைச்சரவை அமைக்க துணை ஜனாதிபதி தகுதி உடையவரே. வெளியுறவுத்துறை செயலராக, அட்டார்னி ஜெனரலாக நான் யாருக்கு வாக்களிப்பேன் என்பது குறித்து அவருக்கு என் கருத்துக்களை வழங்குவேன்…" என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வரவிருக்கும் பைடென் நிர்வாகத்தின் கலவையில் குடியரசுக் கட்சியினர் வீட்டோ அதிகாரம் கோரி வருகின்றனர்.

தேர்தலுக்குப் பிந்தைய நெருக்கடிக்கு ஜனநாயகக் கட்சியினரின் விடையிறுப்பானது, கடந்த நான்காண்டுகளாக ட்ரம்புக்கான அதன் எதிர்ப்பிலிருந்த ஒட்டுமொத்த கட்டமைப்பின் அதே தொனியில் உள்ளது. தேர்தல் என்பது ஒரே குழுவின் இரண்டு தரப்புகளுக்கு இடையிலான உட்கட்சி பூசல் என்ற ஒபாமா அறிக்கையைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் உள்நாட்டு கொள்கையின் எல்லா இன்றியமையா அம்சங்கள் மீதும் ட்ரம்புடன் செயல்பட்டனர். அவர்கள் ட்ரம்புக்கு எதிரான பாரிய மக்கள் எதிர்ப்பை இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளின் சக்தி வாய்ந்த கன்னைகளின் ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்கு அடிபணிய செய்ய வேலை செய்தனர்.

ஜனநாயகக் கட்சி ஆட்சியிலிருந்த மாநிலங்களைக் கவிழ்க்கவும் மற்றும் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களைப் படுகொலை செய்யவும் முயற்சிகளில் பாசிசவாத வன்முறை சம்பந்தப்பட்டிருந்த போதும் கூட, அதை ட்ரம்ப் தூண்டிவிடுவதையும் அவரின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளையும் மூடிமறைக்க, தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜனநாயகக் கட்சியினர் அவர்களால் ஆன அனைத்தையும் செய்தனர்.

ஜனநாயகக் கட்சியினரின் விடையிறுப்பு அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சி வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியாகும். மக்கள் அமைதியின்மையை ஊக்குவிக்கும் எதையும் செய்வதற்கோ அல்லது கூறுவதற்கோ அவர்கள் மிகப்பெரியளவில் அஞ்சுகின்றனர். ஆளும் வர்க்கத்தினுள் நிலவும் மோதல் சாத்தியமானளவுக்கு மிகவும் வலதுசாரி அடிப்படையில் மூடியக் கதவுகளுக்குப் பின்னால் வேலை செய்யப்படும்.

வரவிருக்கும் பைடென் நிர்வாகத்தின் கீழ் ஜனநாயகக் கட்சியின் ஒருமுனைப்பு முற்றிலுமாக இடதைத் தாக்குவதாக இருக்கும். தேர்தலுக்குப் பின்னர் வெறும் ஒருசில நாட்களிலேயே ஜனநாயகக் கட்சியினர், ஜனாதிபதி தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் இருப்பதாகவும், அவர்கள் மிகவும் இடதாக பார்க்கப்படுவதால் தான் பிரதிநிதிகள் சபையில் தங்களின் களத்தை இழந்துவிட்டதாகவும் ஏற்கனவே இந்த தொனியை முன்னெடுத்து வருகின்றனர்.

சிஐஏ இல் இருந்து தருவிக்கப்பட்ட முன்னணி ஜனநாயகக் கட்சியினரில் ஒருவரான பிரதிநிதி Abigail Spanberger புதன்கிழமை ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டு தொலைபேசி அழைப்பில் கோபமாக சோசலிசத்தைக் கண்டித்தார். “நாம் சோசலிஸ்ட் அல்லது சோசலிசம் என்ற வார்த்தைகளை ஒருபோதும் மீண்டும் பயன்படுத்த வேண்டியதில்லை… அதில் விசயம் உள்ளது, அதன் காரணமாக நாம் நல்ல உறுப்பினர்களை இழந்துள்ளோம்.” ஜனநாயகக் கட்சியினர் "மீண்டும் அடிப்படைக்குத் திரும்ப" வேண்டும் என்று Spanberger வலியுறுத்தார், இதன் அர்த்தம், இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகள் அக்கறை காட்டும் பிரச்சினைகள் மீது அவர்கள் ஒருமுனைப்பட வேண்டும் என்பதாகும்.

பைடென் நிர்வாகத்தின் கீழ் ஜனநாயகக் கட்சியினர் முன்மொழியும் எந்தவொரு சட்ட மசோதாவும் குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து நிறைவேற்றப்படும். வெள்ளிக்கிழமை Politico குறிப்பிடுகையில், “இன்னமும் நிச்சயமற்ற இந்த தேர்தல் முடிவுகள், அவசியமான குடியரசுக் கட்சியினர் ஆதரவை வெல்வதற்கு என்ன கொள்கைகள் என்பதன் மீதும் எந்த மந்திரிசபை நியமனங்கள் என்பதன் மீதும் அடிமுதல் முடி வரையில் மறுமதிப்பீடு செய்ய நிர்பந்தித்து வருகிறது. பரந்த புலம்பெயர்வு சீர்திருத்தம், வாக்குரிமைகள், மற்றும் காலநிலை மாற்றம் மீதான நடவடிக்கை போன்ற பரந்த இலக்குகளுக்கும்—பல ட்ரில்லியன் டாலர் கொரோனா வைரஸ் நிவாரண பொதியை நிறைவேற்றுவது போன்ற இன்னும் உடனடி இலக்குகளுக்கும் கூட—கட்சியில் பலரும் விரும்புவதை விட நிறையவே சமரசப்பட வேண்டியிருக்கும் என்ற நிலையில், இவற்றை அவர்களால் வழங்க முடியாதென ஜனநாயகக் கட்சியினர் கவலைப்படுகின்றனர்,” என்றது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பைடென் நிர்வாகம் கடுமையான சிக்கன நடவடிக்கையின் ஓர் அரசாங்கமாக இருக்கும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது தான் ஜனநாயகக் கட்சியினரின் நீண்டகால நோக்கமாக இருந்துள்ளது. கொரொனா வைரஸ் தொற்றுநோயால் அல்லது ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளால் தோற்றுவிக்கப்படும் பாரிய சமூக நெருக்கடியையோ சமாளிக்க ஜனநாயகக் கட்சியினர், இந்த பிரச்சாரத்தின் போக்கில், எந்த வேலைத்திட்டமும் வழங்கவில்லை.

சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பைடெனின் வெற்றி நிறைய "இடத்தை" உருவாக்கும் என்று ஜனநாயகக் கட்சியைச் சுற்றியுள்ள போலி-இடது குழுக்களிடம் இருந்து, இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போக்கில், அங்கே நிறைய பேச்சுக்கள் இருந்தன. பைடென் வெற்றியாளரென அறிவிக்கப்படவும் கூட இல்லை, இத்தகைய வாதங்கள் ஏற்கனவே ஓர் அரசியல் மோசடி என்று அம்பலமாக வருகின்றன.

Loading