பகுதியளவிலான பூட்டுதல் கொள்கைகள் இருந்தபோதிலும் பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வசந்த காலத்தின் பின்னர், ஐரோப்பிய நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் மீண்டும் இலாபங்களை குவிக்கத் தொடங்குவதற்காக, பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற தொழிற்துறைகளை திறந்த நிலையில், மக்ரோன் நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்ட தாமதமான மற்றும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைளை தளர்த்திய நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பிரான்சில் கட்டுப்பாட்டுக்கு வெளியே தொடர்ந்து பரவி வருகிறது.

திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குனர் Jérôme Salomon "உச்சம்" "எங்களுக்கு முன்னால்" இருப்பதாகவும், "இரண்டாவது அலை தொடர்கிறது" என்றும் எச்சரித்தார். முந்தைய 24 மணி நேரத்தில் மேலும் 551 இறப்புகளை அவர் அறிவித்தார், மொத்தம் 40,987 ஆக இருந்தது. அவசர சிகிச்சை படுக்கைகளில் இப்போது 4,539 பேர் உள்ளனர், இது ஒரு வாரத்திற்கு முன்பு 3,730 ஆக இருந்தது. அவசர சிகிச்சை படுக்கைகளின் மொத்த திறன் தேசிய அளவில் 7,500 காரணமாக, பிற முக்கியமான சத்திரசிகிச்சைகள் இரத்து செய்யப்படுகின்றன அல்லது முடிவில்லாத நீண்டகாலத்திற்கு தாமதமாகின்றன.

மேலும் 38,619 புதிய தொற்றுக்கள் திங்களன்று பதிவு செய்யப்பட்டன, வார இறுதியில் குறைந்த சோதனை காரணமாக புள்ளிவிவரங்கள் தரவுகள் எப்போதும் செயற்கையாக அடக்கப்படுகின்றன. சனிக்கிழமையன்று, முந்தைய நாட்களிலிருந்து கணக்கிடப்படாத தொற்றுக்கள் குவிக்கப்பட்டதால், கிட்டத்தட்ட 90,000 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 60,000 தொற்றுக்களின் புதிய தினசரி அளவை குறித்தது, இது தனிநபர்கள் அளவில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 300,000 தினசரி தொற்றுகளுக்கு சமமாக இருக்கும். பிரான்சில் ஏழு நாள் தொற்றுக்களின் சராசரி இப்போது கிட்டத்தட்ட 42,000 ஆகும். மருத்துவமனையில் கடந்த ஏழு நாட்களில் சராசரி இறப்பு விகிதம் 364 ஆகும்.

அக்டோபர் 22, 2020 வியாழக்கிழமை, கிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கின் நோவெல் சிவில் மருத்துவமனையில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை மருத்துவத் தொழிலாளர்கள் காப்பாற்ற முனைகிறார்கள். (AP Photo/Jean-Francois Badias)

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், பல்வேறு நாடுகளில் மாறுபட்ட விகிதங்களில், தொற்றுநோயின் மிகத் தெளிவான மறுஎழுச்சி ஏற்பட்டது.

இரண்டாவது அலையின் ஆரம்ப தெளிவான அறிகுறிகளை ஸ்பெயின் காட்டியது, ஆனால் உள்ளூர் பிராந்தியங்கள் கோரிய பூட்டுதல் நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய அரசு இன்னும் மறுக்கிறது. ஜேர்மனியில், இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஏப்ரலுக்கு முந்தைய உச்சநிலையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெல்ஜியம் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடாக உள்ளது, அதன் மருத்துவமனை அமைப்பு சரிவின் விளிம்பில் உள்ளது. இத்தாலி பிராந்திய ஊரடங்கு உத்தரவு மற்றும் பகுதி பூட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில், மிகக் குறைவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன, பல கன்டோன்கள் அவற்றின் அவசர சிகிச்சை படுக்கைகளின் அதிகபட்ச திறனை அடைகின்றன.

இங்கிலாந்தில், பொறிஸ் ஜோன்சன் இந்த குளிர்காலத்தில் இறப்புகள் "முதல் அலைகளை விட இரண்டு மடங்கு அதிகமாகவோ அல்லது அதிலும் கூடுதலாகவோ இருக்கலாம்" என்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்புக்கொண்டார்.

ஒவ்வொரு முறையும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள், உடல்நலப் பாதிப்பை குறைக்க செய்யாமல், பொருளாதார நடவடிக்கைகளில் அவற்றின் தாக்கத்தைக் குறைக்கும் நிலைப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்டன. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் பள்ளி மற்றும் பல்கலைக்கழக முறை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆற்றல்மிக்க நடவடிக்கைகள் இல்லாத நிலையில், அவை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் விரைவாக பயனுள்ளதாக இருந்திருக்கும். பிரெஞ்சு அரசாங்கம் தொற்றுநோய் கட்டுப்பாட்டை விட்டு வெளியேற வேண்டுமென நனவாக முடிவெடுத்தது.

Pasteur நிறுவனம் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பூட்டுதல் திட்டங்களின் அடிப்படையில் காட்சிகளை உருவாக்கியுள்ளது. Le Monde இன் கூற்றுப்படி, விஞ்ஞானிகள் வைரஸின் இனப்பெருக்கம் விகிதம் (R0 மதிப்பு) 0.9 ஆக குறையும் -முதல் கட்டுப்பாட்டின் போது 0.7 க்கு எதிராக- ஆனால் அவர்கள் ஒரு "அவநம்பிக்கையான சூழ்நிலையை" கருதுகின்றனர், அங்கு 1.2 விகித தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்.

"நம்பிக்கையான சூழ்நிலை" கூட தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக இல்லை என்பதையும், குளிர்காலம் முழுவதும் அசாதாரணமான உயர் மட்டத்தில் பரவ அனுமதிக்க திட்டமிட்டுள்ளது என்பதையும் காட்டுகிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்பில் ஏற்படும் பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தும்.

தொற்றுநோய் கண்காணிப்பின் ஒழுங்கற்ற தன்மை மற்றும் தொற்றுக்களின் அதிகரிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், பிரெஞ்சு தேசிய சுகாதார அமைப்பு கடந்த இரண்டு வாரங்களாக தொற்றுக்களின் பரிணாமம் குறித்த தினசரி தரவுகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க சிக்கல்களை எதிர்கொண்டது, எனவே இது ஆரம்பத்தில் இருந்தே தொற்றுக்களின் உண்மையான பரிணாமம் குறித்த நிச்சயமற்ற நிலைகளுக்கு வழிவகுத்தது.

ஒவ்வொரு 2 வாரங்களுக்கும் புதிய தொற்றுக்கள் இரட்டிப்பாக்கப்படுவதற்கு சமமானதாக, பூட்டுதல் விதிக்கப்பட்டபோது R0 1.42 என்ற உச்சத்தை எட்டியது என்று கிடைக்கக்கூடிய தகவல்கள் குறிப்பிடுகின்றன. வெள்ளிக்கிழமைக்குள் இது 1.31 ஆக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

முதியோருக்கான பராமரிப்பு இல்லங்களை உள்ளடக்கிய சமூக மற்றும் மருத்துவ சேவைகளில் மாசுபடுத்தப்படும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. அக்டோபர் நடுப்பகுதியில், இதுபோன்ற நிறுவனங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 36 இறப்புகளும், மருத்துவமனைகளில் 27 பேரும் இறந்துள்ளனர்.

அக்டோபர் 21 முதல் 28 வரையிலான வாரத்தில், கிடைக்கக்கூடிய தரவுகளுடன் மிக சமீபத்திய வாரம், நிறுவனங்களில் மருத்துவமனைகளில் சராசரி தினசரி இறப்பு விகிதத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, நிறுவனங்களில் 74 இறப்புகளும் மருத்துவமனைகளில் 36 இறப்புகளும் உள்ளன. முதல் அலையின் போது, வயதானவர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல மறுப்பதற்கான முதல் அறிகுறிகளை இது குறிக்கலாம், இது மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் நிரம்பி வழிகிறது. இந்த போக்கு மேலும் வெளிப்படையாகி, வயதானவர்களிடையே இறப்பு விகிதத்தில் கூர்மையான அதிகரிப்புக்கு பங்களிக்கும்.

பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி முறை மீண்டும் திறக்கப்படுவது செப்டம்பர் முதல் தொற்றுநோய் வெடிப்புக்கு ஒரு முக்கிய வழியில் பங்களித்துள்ளது. வெடிப்பின் தீவிரத்தை மறைக்க, கல்வி அமைச்சகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பகுதிளவிலான பூட்டுதல் அறிவிக்கப்பட்ட பின்னர், பள்ளிகளில் நெரிசலான சூழ்நிலைகள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களின் வேண்டுமென்றே விடப்பட்ட ஆபத்தான நிலைமைகள், உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன, இவற்றில் பள்ளிகள் திறந்திருக்கும் என்ற நிபந்தனையும் அடங்கும். அவை தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே வளர்ந்தன, எதிர்ப்பு தெரிவித்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மீது பொலிஸ் ஒடுக்குமுறையுடன் பதிலளித்தது.

இறுதியாக, பள்ளி அமைப்பிலிருந்து பரவலான சமூக வெடிப்பு பரவக்கூடும் என்ற அச்சத்தில், சுகாதார அமைச்சர் Jean-Michel Blanquer திடீரென உயர்நிலைப் பள்ளிகள் இணையவழி மூலமும் நேரிலும் வகுப்புகளை மாற்ற முடியும் என்று அறிவித்தார், முன்னர் இதுபோன்ற எந்த நடவடிக்கைகளையும் எடுக்க மறுத்துவிட்டார். இதற்கான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை, கல்லூரிகளுக்கு எந்த சாதனங்களும் திட்டமிடப்படவில்லை, எதுவும் தயாரிக்கப்படவில்லை அல்லது சோதிக்கப்படவும் இல்லை.

உயர்நிலைப் பள்ளியைப் போலவே நடுநிலைப் பள்ளிகளிலும் சுகாதாரப் பிரச்சினைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், நடுநிலைப் பள்ளிகள் அல்லது தொடக்கப் பள்ளிகளுக்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை. வேலையில் விடுப்பு மற்றும் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவதற்கான கோரிக்கைகளைத் தடுக்க அரசாங்கம் தெளிவாக உறுதியாக உள்ளது.

பிரான்சிலும் ஐரோப்பாவிலும் எடுக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள், தினசரி நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ் மரணங்கள் இயல்பானவை என்று அரசாங்கங்கள் கருதுவதையே காட்டுகின்றன.

Loading