முன்னோக்கு

அனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடு! தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடு கொடு!

மொழிபெயர்ப்பின்மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

அமெரிக்காவில் COVID-19 வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டை இழந்து வருகிறது.

பொது சுகாதார நிபுணர்களின் மிக மோசமான தொற்றுக்கான எச்சரிக்கைகள் உண்மையாகியுள்ளன. 250,000 மக்கள் இப்போது இறந்துவிட்டனர். கடந்த ஒரு மாதத்தில், தினசரி புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அக்டோபர் 13 ஆம் திகதின்று, அமெரிக்காவில் 51,000 புதிய தொற்றுக்கள் இருந்தன. வெள்ளிக்கிழமையன்று, 182,000 புதிய தொற்றுக்கள் ஏற்பட்டன, இது முன்னைய நாள் 162,000 ஆக இருந்தன.

நாட்டின் உற்பத்தியின் இதயப் பகுதியில், நோய்களின் மையமாக மாறியுள்ள தொழிற்சாலைகளில் இருப்பிடமாகி, நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கிறது. மிச்சிகனில், கடந்த மாதத்தில் தினசரி புதிய தொற்றுக்களின் எண்ணிக்கையாக ஐந்து மடங்காக அதிகரித்துள்ளன.

2020 நவம்பர் 11 அன்று நியூ யோர்க்கின் புரூக்ளின் பெருநகரத்தில் ஒரு COVID-19 வைரஸ் நடமாடும் பரிசோதனைத் தளத்தில் ஒரு சோதனை கூடாரத்தை மருத்துவப் பணியாளர்கள் இயக்குகின்றனர் [Credit: AP Photo/John Minchillo]

நாடு முழுவதும், மருத்துவமனைகள் நிரம்பிக்கொண்டிருக்கின்றன, நகரங்கள் உடல்களை சேமிக்க குளிரூட்டப்பட்ட லாரிகளை கொண்டு வருகின்றன. இல்லினோய் மாநில மருத்துவமனையின் அளவு பற்றாக்குறையாகப் போவதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாக உள்ளது என்று கூறுகிறது.

தற்போதைய விகிதத்தில், அடுத்த மாதத்திற்குள் நாடு தழுவிய மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இருக்கும். மருத்துவ வசதி கிடைப்பது உயிர்வாழும் விகிதங்களை நிர்ணயிப்பதாகும், மேலும் இந்த சூழ்நிலை ஒரு பாரிய மற்றும் முன்னோடியில்லாத அளவில் மரணத்துடன் சேர்ந்து வரும். சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் படி, மார்ச் மாதத்திற்குள் இறப்புகளின் எண்ணிக்கையானது 439,000 ஐ எட்டக்கூடும்.

இந்த பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக, உலகின் முன்னணி பொது சுகாதார வல்லுநர்கள் தொற்றுநோய் பரவுவதை நிறுத்த அவசர பொது முடக்கத்தைக் கோரியுள்ளனர்.

இழந்த ஊதியங்களுக்கு முழு இழப்பீடுகள் வழங்குவதுடன், நாடு முழுவதும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துமாறு புதன்கிழமையன்று, டாக்டர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம் அழைப்பு விடுத்தார். "அனைத்து ஊதியங்களையும் ஈடுசெய்வதற்கு, தனிப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு, சிறு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், நடுத்தர அளவிலான நிறுவனங்கள் அல்லது நகரம், மாநில, மாவட்ட அரசாங்கங்களுக்கு இழப்பீடுகள் வழங்க நாங்கள் இப்போது ஒரு தொகுப்புக்கு பணம் கொடுக்க முடியும்," என்று அவர் கூறினார். "நாங்கள் அவ்வாறு செய்தால், நாங்கள் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை பொது முடக்கத்தைச் செய்யலாம்."

பதவிக்கு வரும் பைடென் நிர்வாகத்தின் COVID-19 வைரஸ் பணிப் படைக் குழுவில் ஆஸ்டர்ஹோம் இருப்பதால், அவரது கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக விளம்பரப்படுத்தல்கள் உடனடியாக கைவிடப்பட்டன, வோல் ஸ்ட்ரீட்டிலுள்ள அச்சங்களுக்கு மத்தியில், அவரது கருத்துக்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் ஒரு பகுதியாக பொது முடக்கத்திற்கான ஆதரவை அடையாளம் காட்டுகின்றன.

பைடென் பிரச்சாரத்தில் பதிலளிப்பு திட்டவட்டமாக இருந்தது. பைடென் பிரச்சாரத்தின் COVID-19 வைரஸ் பணிப் படைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் விவேக் மூர்த்தி, “‘நாடு முழுவதையும் மூடுங்கள்’” என்று கூறும் ஒரு நிலையில் நாங்கள் இல்லை” என்று பதிலளித்தார்.

வரவிருக்கும் நிர்வாகத்திற்குள்ளேயே கண்டனங்களை எதிர்கொண்டு, ஓஸ்டர்ஹோம் தானே தனக்கு மட்டுமே பேசுவதாக தெளிவுபடுத்தினார்: “யாரும் அதை ஆதரிக்கப் போவதில்லை. இது நிர்வாகத்தால் ஆதரிக்கப்படப் போவதில்லை. இது காங்கிரசில் ஆதரிக்கப்படப் போவதில்லை” என்றார்.

பைடென் பிரச்சாரமான நாடு தழுவிய பொது முடக்கத்தை நிராகரித்தமையானது பங்குச் சந்தைகளில் ஒரு ஏற்றத்தை எரியூட்ட உதவியது, இறப்புகள் மற்றும் தொற்றுக்களின் எழுச்சிக்கு மத்தியில், அனைத்து காலச் சாதனையாக 200 புள்ளிகளுக்குள் வந்ததோடு டோவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரி 400 புள்ளிகள் வரை உயர்ந்து பங்குச் சந்தை நிறைவுற்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்தவரை, அவர் ஜனாதிபதியாக இருக்கும்போது எந்தவிதமான பொது முடக்கங்களும் இருக்காது என்று தெளிவுபடுத்தினார். "நான் ஒரு பொது முடக்கத்திற்குச் செல்லமாட்டேன்" என்று ட்ரம்ப் வெள்ளிக்கிழமையன்று கூறினார். "இந்த நிர்வாகம் எந்த சூழ்நிலையிலும் ஒரு பொது முடக்கத்திற்கு செல்லாது. இந்த குணமடைவு என்பது பிரச்சினையை விட மோசமாக இருக்க முடியாது” என்றார்.

ஆஸ்டெர்ஹோமின் கோரிக்கை தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் அனைத்து புகழ்பெற்ற மற்றும் சுயாதீன விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கிறது. ஆனால் அவரது கருத்துக்கள் அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் உலகளாவிய கண்டனத்துடன் வரவேற்கப்பட்டுள்ளன.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு தலையங்கத்தில், "நல்ல மருத்துவரின் வீட்டு வைத்தியம்" என்று அதைக் கண்டித்தது. அது அறிவித்தது, “பொது முடக்கங்கள் வைரஸை ஒழிக்காது. பொது முடக்கங்கள் முடியும் வரை அவைகள் பரவுவதை தாமதப்படுத்துகின்றன.”

எப்படியான இழிந்த பொய்யர்கள்! சில நாட்களுக்கு முன்பு "2021 நடுப்பகுதியில் தொற்றுநோய் வெளியேற்றத்திற்கு ‘கோவிட் தடுப்பூசிப் படை’ வழிவகுக்கும்" என்று புகழ்ந்தவர்கள் இவர்கள்தான். இந்த போலிப் பண்டிதர்கள் ஒரே நேரத்தில் தொற்றுநோய் இன்னும் சில மாதங்களுக்குள் முடிந்துவிடும் என்றும் இதற்கிடையில் உயிர்களைக் காப்பாற்ற எதுவும் செய்ய முடியாது என்றும் அறிவிக்கின்றனர்.

பள்ளிகள் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று கோரி நியூயோர்க் டைம்ஸ் ஒரு ஆவேச பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. புதன்கிழமையன்று இது "நியூ யோர்க்கில் பள்ளிகளைத் திறந்து வைத்திருங்கள்" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. பள்ளிகள் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நியாயப்படுத்த, டைம்ஸ் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டது, "ஆரம்ப பள்ளிகள் மட்டுப்படுத்தப்பட்ட திடீர் வெடிப்புகளை மட்டுமே கண்டுள்ளன என்பதை உலகெங்கிலும் இருந்து ஆராய்ச்சி காட்டுகிறது."

உண்மையில், COVID-19 வைரஸை தடையின்றி பரப்ப அனுமதிக்க முன்னணியாக ஆதரித்து வாதாடுவதாக டைம்ஸ் இருந்து வருகிறது. மார்ச் மாதத்தில், டைம்ஸ் இன் கட்டுரையாளரான தோமஸ் ஃப்ரீட்மன், முன்கூட்டியே மீண்டும் திறக்கும் வணிகங்களை நியாயப்படுத்த, “நோயைக் குணப்படுத்துவது நோயை விட மோசமாக இருக்க முடியாது” என்ற சொற்றொடரை உருவாக்கினார். வெள்ளிக்கிழமையன்று மேலும் பொது முடக்கங்கள் இருக்காது என்று ட்ரம்ப் அறிவிக்க இதே சொற்றொடர் பயன்பட்டிருந்தது.

ட்ரம்பின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளை ஒரு பைடென் நிர்வாகம் நிராகரிக்கும் மற்றும் தொற்றுநோயைத் தடுக்க அவசர நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த வாரம் நடந்த தேர்தலில் மில்லியன் கணக்கான மக்கள் ட்ரம்பிற்கு எதிராக வாக்களித்திருந்தாலும், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் எந்தவொரு பிரிவும் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான மிக அடிப்படையான நடவடிக்கைகளை கூட ஆதரிக்கவில்லை.

அதனால்தான் தொழிலாளர்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் வைரஸ் பரவுவதற்கான முக்கிய மைய இடங்களாக மாறி வருகின்றன, நூற்றுக்கணக்கான தொற்றுக்கள் தனிப்பட்ட உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் இடங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய் அதிகரிக்கையில், தொழிற்சாலைகள் மரணப் பொறிகளாக மாறி வருகின்றன.

அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தவும், அத்தியாவசியமான பணி இடங்களில் பாதுகாப்பான பணி நிலைமைகளை நிறுவவும் சாமானிய குழுக்களை தொழிலாளர்கள் ஸ்தாபிக்க வேண்டும்.

ஆனால் தொற்றுநோயை தனிப்பட்ட ஆலைகளின் மட்டத்தில் நிறுத்த முடியாது. சுகாதார பாதுகாப்பு, பரிசோதனை மற்றும் பரவல் தொடர்புத் தடமறிதல் ஆகியவைகளுக்குள் சமூக வளங்களின் பெரும் அளவை வழங்கி, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய வேலை நிறுத்தமானது அவசியமாக இருக்கிறது. இந்த வழியில் மட்டுமே தடுப்பூசிகள் வரும் வரை வைரஸைக் கட்டுப்படுத்த முடியும், மேலும் நூறாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட முடியும்.

தொழிலாளர்களுக்கு முழு ஊதிய இழப்பீடுகள் மற்றும் சிறு வணிகங்களுக்கான வருவாய்க்கு இழப்பீடுகள் வழங்கப்படாவிட்டால், அத்தகைய பொது முடக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாகும். தொற்றுநோயால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் முழுமையான இழப்பீடுகள் இருக்க வேண்டும்.

உயிர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையில் வேறுபாடு காட்டுவோர் அனைவரும் பொய்களைத்தான் விற்பனை செய்கிறார்கள். நிதியத் தன்னலக்குழுவின் செல்வத்தின் புனிதத்தை ஒருவர் முன்பே ஏற்றுக்கொண்டால் இந்த வர்த்தகம் உயிர்வாழுகின்றது. நூற்றாண்டின் மிகப் பெரிய தேசிய அவசரநிலைக்கு மத்தியில், நிதிய உயரடுக்கினரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பரந்த செல்வத்தை பறிமுதல் செய்து சமூகத்தின் சொத்தாக்கப்பட வேண்டும்.

பெருநிறுவன நில உரிமையாளர்களுக்கான அனைத்து வாடகைகளும், முக்கிய வங்கிகளுக்கான கடன்களும், மாணவர் கடன்கள் மற்றும் வங்கி அட்டைக் கடனுக்கான கொடுப்பனவுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வீட்டிலிருந்து கல்வி கற்கும் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கும் பராமரிப்பதற்கும் உதவி செய்ய ஊதியத்தை இழந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

மார்ச் மாதத்தில் அத்தியாவசியமற்ற உற்பத்தியின் கணிசமான பகுதிகள் மூடப்பட்டதால் மருத்துவமனைகள் நிரம்பிவழியாமல் இருப்பதைத் தடுத்ததன் மூலம் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால் ஆளும் வர்க்கம் இந்த நடவடிக்கையை தனது சொந்த விருப்பப்படி எடுக்கவில்லை. மிட்வெஸ்ட் (Midwest) முழுவதிலுமுள்ள முக்கிய உற்பத்தி நிலையங்களில் வெகுஜன வெளிநடப்புகளால் இது அச்சமூட்டபட்டிருந்தது, அங்கு தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்துவதற்கு முன்முயற்சி எடுத்தனர்.

ஆளும் வர்க்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது: அதாவது ஒரு தடுப்பூசி வருவதற்கு முன்பு, வோல் ஸ்ட்ரீட் நலனுக்காக இலட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட வேண்டும். இந்த பாரிய படுகொலையை தொழிலாளர்கள் அனுமதிக்கக்கூடாது! அவர்கள் தங்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரது வாழ்க்கையையும் பாதுகாக்க ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது என்பது முதலாளித்துவ அமைப்புமுறையுடன் பொருந்தாது. ஒரு சமூக ஒழுங்கானது, மனித வாழ்கையை பாதுகாப்பதற்கு போரில் ஈடுபடுகிறதென்றால், மனித வாழ்க்கை அல்ல, இந்த சமூக ஒழுங்குதான் தியாகம் செய்யப்பட வேண்டும்.

Loading