சீனா: ஆப்பிள்தொழிற்சாலையில் வேலைகள்குறித்து தொழிலாளர்கள்போராட்டம்; இலங்கைஆடை தயாரிப்பு தொழிலாளர்கள்ஆண்டுக்கான போனஸ் குறைப்புக்குஎதிராக வேலைநிறுத்தப் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டம்: ஆசியா

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனா: ஷாங்காயில் மின்னணுத் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 19 அன்று ஷாங்காயிலுள்ள ஆப்பிள் இன் தாய்வான் – முதலிட்ட பெகாட்ரான் ஆலையில் ஆயிரக்கணக்கான தற்காலிகத் தொழிலாளர்கள் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெறொரு ஆலைக்கு பணிமாற்றம் செய்ததை எதிர்த்து ஆலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் ஆலையின் நுழைவு வாயிலை தடுத்திருந்ததால் மோதல்கள் வெடித்தன.

ஜியாங்சு மாகாணத்தின் குன்ஷன் இல் இருக்கும் மற்றொரு ஆலைக்கு அதன் ஷாங்காய் ஆலையிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிமாற்றுவதற்கான பெகாட்ரானின் நடவடிக்கைக்குப் பின்னர் போராட்டம் வெடித்துள்ளது. பணிஇடமாற்றத்திற்கு தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் பணிக்கு நியமனம் செய்யும் முகவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் வழமையாக பகிரப்படும் பரிந்துரையாளர்களின் தரகுக் கட்டணத்திற்கான அவர்களுடைய பங்குக்கான தகுதியை இழக்க நேரிடும் என்றும் தொழிலாளர்களுக்கு கூறப்பட்டது.

தற்காலிக தொழிலாளர்களின் ஒட்டுமொத்த ஊதியத் தொகுப்பின் ஒரு கணிசமான பகுதியை இந்த கட்டணம் கொண்டிருக்கிறது. இத்தகைய கொடுப்பனவுகளில் ஒரு தொழிலாளி 11,000 யுவானை (1,700 அமெரிக்க டாலர்) பெகாட்ரானில் 55 நாட்கள் வேலைக்குப் பிறகுதான் சேர்க்க முடியும்.

அதிக எண்ணிக்கையில் கோபமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்ட நிர்வாகம் பணி இடமாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அவர்களுக்கு ஏற்கனவேயிருந்த சம்பளம் மற்றும் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும் என்று இடமாற்ற தொகுப்பை உறுதிப்படுத்தும் வகையில் திருத்தப்படும் என்று கூறியிருக்கிறது.

கம்போடிய ஆடைத் தொழிலாளர்கள் மூடப்பட்ட ஆலையை முற்றுகையிட்டு வழங்கப்படாத ஊதியத்தை கோருகிறார்கள்

தெற்கு கம்போடியாவின் தலைநகரான புனோம் பென் இலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் மூடப்பட்டிருக்கும் ஆலையின் ஒரு அரை டசின் கணக்கான முன்னால் தொழிலாளர்களின் குழு ஆலையை முற்றுகையிட்டதுடன் தையல் எந்திரங்களைத் தடுத்து பாதுகாத்து நின்றனர். அதன் முதலாளிகள் நிலுவை ஊதியங்கள் மற்றும் போனஸ்களை வழங்காமல் மார்ச்சில் ஆலையை மூடிவிட்டார்கள்.

ஆலை மூடப்பட்ட பின்னர் அவர்களுடைய குடும்பத்திற்கு உணவளிக்க அவர்கள் கடன்கள் வாங்கியிருப்பதால் அந்த தொழிலாளர்கள் பெரும் கடனாளிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆலை முதலாளிகளால் எந்திரங்களை எடுப்பதற்கு அனுப்பப்பட்ட ஆட்களுடன் அவர்கள் மோதலில் ஈடுப்பட்டார்கள். இதன்மூலம் அவர்கள் தங்களுடைய நிலுவை ஊதியத்தை பெற்று வென்றுவிடலாம் என்று நினைத்தார்கள்.

“அந்த எந்திரங்கள் என்னுடைய பணம்; அவைகள் என் வாழ்க்கை” என்று வன்னா என்ற தொழிலாளர் கூறினார். முதலாளிகள் ஆலையை மூடியதுவரையில் ஊதியம் மற்றும் போனஸாக சுமார் 2,000 அமெரிக்க டாலர்களை பெறும்வரை அவைகளை பணயமாக வைத்திருக்கப்போவதாக சபதம் செய்தார்.

கம்போடியாவின் 7 பில்லியன் டாலர் ஆடைத் தொழில் பிரிவு, நாட்டிலேயே மிகப்பெருமளவில் 800,000 தொழிலாளர்களுக்கு வேலை வழங்குகிறது, அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் – இதற்கு இந்த ஆண்டு இரட்டிப்பு அடி கிடைத்தது- கொரோனா வைரஸ் நோய் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட சட்டவிரோத முடக்கத்தை ஏற்படுத்தும் தடைக் கட்டணங்கள் மூலமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: பஞ்சாப் காவல்துறை வேலையற்ற ஆசிரியர்களை மோசமாக தாக்கியது

டிசம்பர் 19 அன்று வேலையற்ற ஆசிரியர்கள் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில் இருக்கும் முதலமைச்சர் வீட்டை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் லத்தியால் தாக்கியதில் பலர் காயமுற்றுள்ளனர். மூன்று வருடங்களுக்கு மேலாக இருக்கும் அவர்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று முதலமைச்சர் வீட்டுக்கருகில் ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

தொடக்கநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் வேலையற்ற ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளுக்கான இளநிலை கல்வி நுழைவை ரத்துசெய்யவும் மற்றும் 10,000 புதிய பணியிடங்களுக்கான விளம்பரத்தத்தை உடனடியாக வெளியிடவும் கோரினார்கள். பாலர் பள்ளி பாடத்திட்ட ஆசிரிய பயிற்சிக்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி ஒரு டிப்ளோமா வகையான பாடத்திட்டமாகும் மேலும் அது ஆசிரியர்களுக்கு தேவையான தகுதிகளை வழங்குகிறது.

தமிழ்நாடு கோவிட்-19 வீட்டுக்குவீடு சென்று பரிசோதணை செய்பவர்கள் ஊதியத்தை கோருகிறார்கள்

டிசம்பர் 18 அன்று மதுரை நகராட்சியால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வீடு வீடாக சென்று பரிசோதணை மேற்கொண்ட முன்னால் பணியாளர்கள் மதுரை நகர சுகாதார அலுவலகத்திற்கு வெளியே அவர்களுடைய ஊதியத்தைக் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

யூன் மாதம் ஒப்பந்த அடிப்படையில் பல ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர் ஆனால் செப்டம்பர் 23 அன்று எந்தவித முன்னறிவிப்புமின்றி வேலையிலிருந்து நிற்குமாறு கூறப்பட்டனர் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். கடந்த இரண்டு மாதங்களுக்கான ஊதியத் தீர்வுகளை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

புதுச்சேரி பொது போக்குவரத்து தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலை எதிர்த்து போராட்டம்

டிசம்பர் 21 அன்று புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக (புசாபோக) சுமார் 200 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்,அவர்கள் நிரந்தர வேலை வேண்டும் என்றும் தனியாருக்கு பல சாலை மார்க்கத்தை விற்பதற்கான முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று கோரி புசாபோக பணிமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர். வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது நகரத்துக்குள் இயங்கும் சேவையும் நிறுத்தப்பட்டது.

தமிழ்நாடு மின்சார பகிர்மான தொழிலாளர்கள் தனியார்மயாக்கலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலை எதிர்த்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மாநில அரசாங்கம் ஐந்து மின்சார நிலையங்களை பராமரிப்புக்காக இரண்டு வருடங்களுக்கு தனியாரிடம் விடுவதற்கு திட்டமிட்டிருக்கிறது. முழுவதும் தனியார் மயமாக்குவதற்கான முதல் நிலை இது என்று தொழிலாளர்கள் அச்சப்படுவதுடன் மேலும் அந்த முடிவை அரசாங்கம் திரும்பப் பெறவேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளார்கள்.

அரசாங்கம், முகவர்கள் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினர். வாரியத்திற்கு தேவையான 1,42,000 இடத்தில் அங்கே 82,000 ஊழியர்களுக்கும் குறைவாகத்தான் உள்ளனர், இது அவர்களுடைய பணிச்சுமையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

இலங்கை ஆடை தயாரிப்பு தொழிலாளர்கள் வருட முடிவு போனஸ் கோரிவேலைநிறுத்தப் போராட்டம்

டிசம்பர் 16 இலிருந்து வடக்கு கொழும்பு, கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக மண்டலத்தில் (KFTZ) இருக்கும் பிரிட்டிஷ்க்கு சொந்தமான நெக்ஸ்ட் ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் வருட முடிவுக்கான முழு போனஸை வழங்கவேண்டும் என்று கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த ஆண்டு இலாப இழப்பு காரணமாக போனஸ் குறைக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்ததை அடுத்து சுமார் 2,000 பேர் பணியாற்றும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். அக்டோபரில் 11 தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதணையில் கோவிட்-19 இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் இந்த ஆலை சில நாட்கள் மட்டும் மூடப்பட்டிருந்தது.

நிர்வாகம் டிசம்பர் 18 அன்று காவல்துறையை அழைத்து கலைக்கும்வரை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஆலைக்கு வெளியே தினமும் ஆர்ப்பாட்டம் செய்தனர். சமூக ஊடகங்களில் தங்கள் கவலைகளை வெளிப்படுத்திய தொழிலாளர்களையும் நிர்வாகம் அச்சுறுத்தியுள்ளது.

இந்த ஆலைகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் இருந்த காரணத்தினால் அக்டோபரில் KFTZ க்கு அருகிலிருக்கும் மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இருந்தபோதினும், அனைத்து சுதந்திர வர்த்தக மண்டலத்திற்குள் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ந்து பணிபுரியவேண்டும் மேலும் ஊரடங்கு அனுமதிசீட்டாக அவர்களுடைய பணிபுரியும் அடையாள அட்டைகளை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இலங்கை வளர்ச்சிக்கான அதிகாரிகள் நிரந்தர பதிவிகளை கோருகின்றனர்

செவ்வாய்க்கிழமையன்று கொழும்பு உட்பட 19 மாவட்டங்களில் தீவு முழுவதிலுமிருந்து அரசு திணைக்களக்களங்களுக்கு இணைக்கப்பட்ட வளர்ச்சிக்கான அதிகாரிகள் அவர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அவர்களுடைய கட்டாய ஒரு வருட பயிற்சி காலம் மேலும் நான்கு மாதகாலம் முடிந்தபிறகும் அவர்களுடைய வேலையை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் தவறியதால் இந்த போராட்டம் தூண்டப்பட்டிருக்கிறது.

கூட்டு வளர்ச்சிக்கான அதிகாரிகள் மையம் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகங்களுக்கு முன்னாலும் மற்றும் கொழும்பிலுள்ள பொது நிர்வாக அமைச்சகத்திற்கு முன்னாலும் முழக்கங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பாகிஸ்தான்: நிரந்தரவேலை கோரிய ஆசிரியர்களை பஞ்சாப் காவல்துறையினர் தாக்கினர்

சனிக்கிழமையன்று பஞ்சாப் அரசுப் பள்ளிகளில் 700 மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள் இஸ்லாமாபாத் இல் இருக்கும் பிரதமரின் வசிப்பிடத்தை நோக்கி பேரணியாக சென்றபோது காவல்துறையினரால் கண்ணீர்புகை மற்றும் லத்தியால் தாக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலர் காயமுற்றுள்ளனர் மேலும் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய போராட்ட களத்தை பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு மாற்றுமாறு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் உத்தரவிட்டபோதும் நகரத்தின் நாடியாக இருக்கும் பிரதான சாலையை மறித்து ஆசிரியர்கள் அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் கைது செய்தவர்களை விடுதலை செய்வதாக காவல்துறையினர் ஒப்புக்கொண்ட பிறகு வேறு ஒரு இடத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தை மாற்றிக்கொண்டனர். அடுத்த நாள் ஒரு பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் ஒப்புக்கொண்ட பிறகு நாளின் பிற்பகுதியில் ஆர்ப்பாட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

வேலையை உடனடியாக நிரந்தரமாக்கவேண்டும் என்றும் ஆசிரியர்களை அவர்களின் பல ஆண்டு செய்த சேவையை மீறி தகுதிநீக்கம் செய்யும் புதிய விதிமுறைகளை ரத்துசெய்யவேண்டும் என்று ஆசிரியர்கள் கோருகிறார்கள். அந்த புதிய விதியால் தற்போது சேவையிலிருக்கும் 11,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப்பில் அரசாங்கம் அதன் ஒட்டுமொத்த செலவு குறைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக பள்ளிகளின் நிர்வாகத்தை அரசு சாரா நிறுவனங்களுக்கு ஒப்படைத்தல் உட்பட பொது கல்வி சீர்திருத்தத்திற்கு அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இந்த கொள்கையின் விளைவாக ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது.

Loading