ஸ்பெயினின் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் இரகசியமாக COVID-19 தடுப்பூசிகளை ஏகபோகமாக்கிக் கொண்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பெயினிலுள்ள ஜெனரல்கள், அரச குடும்பத்தினர்கள் மற்றும் அமைச்சர்கள் இரகசியமாக COVID-19 வைரஸிக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர், தடுப்பூசி காத்திருப்பு பட்டியலைத் தவிர்த்து, தடுப்பூசிகள் திடீரெனவும், விவரிக்கமுடியாமல் முன்வரிசை செவிலியர்களுக்கு தீர்ந்துபோய்விட்டன. மிக மோசமாக பாதிக்கப்படக்கூடிய வயதானவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய இந்த தடுப்பூசிகளின் திருட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையின் அடிப்படையிலான குற்றவியல் வர்க்க அவமதிப்பை அம்பலப்படுத்துகிறது.

ஸ்பெயினின் ஆளும் வர்க்கத்திலுள்ள பில்லியனர் ஒட்டுண்ணிகள், தீவிர வலதுசாரி தளபதிகள் மற்றும் முடிவில்லா ஊழல் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தொற்று மற்றும் இறப்புக்கு ஆபத்தான முறையில் அனுப்புகிறார்கள், வேலை மற்றும் பள்ளிக்குச் செல்லும் இரயில்களிலும் டிராம்களிலும் நிரம்பி நெருசலாக கூட்டமாக செல்கிறார்கள். உயிர்களின் பெரும் செலவில் பெருநிறுவன இலாபங்களை வங்கிகளுக்கு தொடர்ந்து இறைப்பதற்காக மருத்துவ ரீதியாக தேவையான பொதுமுடக்க உத்தரவுகளை செயற்படுத்த அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் தியாகம் செய்யும் வாழ்க்கை அவர்களுடையது அல்ல. "தியாகம்" மற்றும் "பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம்" குறித்து தொழிலாளர்களுக்கு சொற்பொழிவு செய்யும் போது, அவர்கள் தங்களைப் பாதுகாப்பாற்றுவதற்காக சுயநலமாக தடுப்பூசிகளை திருடிவிட்டனர்.

2017 ஆண்டில் பாதுகாப்பு பணியாளர்களின் ஸ்பெயினின் தலைமை அதிகாரி மைக்கல் ஏஞ்சல் வில்லரோயா இன் புகைப்படம் (Wikimedia Commons)

நேற்று பாதுகாப்பு மந்திரி மார்கரிட்டா ரோபிள்ஸ் (ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சி, PSOE) அவர் தடுப்பூசி காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஏன் பல உயர் இராணுவ அதிகாரிகள் தவிர்க்கப்பட்டது என்று ஸ்பெயினின் ஊழியர் தலைமை அதிகாரியான ஜெனரல் மைக்கல் ஏஞ்சல் வில்லரோயாவிடம் கேட்க வேண்டும் என்று உறுதிமொழி கொடுக்க நிர்பந்திக்கப்பட்டார். எல் கான்பிடென்சியல் (El Confidencial) என்ற இராணுவ வட்டாரங்களில் விரிவான ஆதாரங்களைக் கொண்ட ஒரு செய்தித் தளமானது ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராகோ மற்றும் லெப்டினென்ட் ஜெனரல் பெர்னாண்டோ கார்சியா கொன்ஸாலேஸ்-வலேரியோ உள்ளிட்ட மற்றய உயர் அதிகாரிகள் ஆகியோருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக உறுதி செய்தது.

வெளிநாடுகளில் ஏகாதிபத்திய இராணுவ தலையீடுகளில் பங்கு பெறும் படையினர்களுக்கும் ஸ்பெயின் தடுப்பூசிகளை போட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் அதன் சொந்த தடுப்பூசி அட்டவணையை கொண்டுள்ளது, இது பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. சோமாலியாவிற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள தனது போர்க் கப்பல்களில் கிட்டத்தட்ட 1,000 சிப்பாய்கள் அங்கு போதுமான அளவுகளைக் கொண்டுள்ளனர். லெபனான், ஈராக் அல்லது லத்வியாவிற்கு இன்னும் ஆயிரக்கணக்கானவர்களை அனுப்புவதற்கு தயாரிப்பு செய்து வருகின்றனர். தற்போதைக்கு தடுப்பூசிகள் ஒரு புதிய, 5 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான குளிர்சாதன பெட்டிகளில் மாட்ரிட்டிலுள்ள Colmenar Viejo இராணுவத் தளத்தில் சேமிக்கப்படும்.

நிதியப் பெரும் பிரிவுகளுக்கு உண்மையில் கறுப்புச் சந்தை அல்லது பிற வழிவகைகள் மூலமாக தடுப்பூசிகளுக்கு இரகசியமான அணுகலைப் பெற்றுள்ளனர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஸ்பெயினின் மன்னர் ஆறாம் பிலிப்பின் மைத்துனர் இனாகி உர்டன்கரின் (Iñaki Urdangarin) நிகழ்விலும் இது காணப்பட்டது. அவர் இப்பொழுது ஒரு மோசடி மற்றும் இழிவிற்குரிய நிதி ஊழலில் பங்கு பெற்றதற்காக ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்கிறார்.

அங்கவீனமுற்றவர்களுக்கான ஒரு மையத்தில் தன்னார்வலராக வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்வதால் உர்டங்கரிற்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கியவுடன் மூன்று வாரங்களுக்கு முன்பு தான் அவர் இந்த வேலையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நாளில், அவர் மூன்றாம் நிலை சிறை ஒழுங்கின்படி, சிறை அமைப்பு முறைக்குள் நாள் விடுப்பு அனுமதிக்கு கீழான பிரிவில் உள்ளார். அவரது மைத்துனரும், ஆயுதப்படைகளின் தளபதியுமான ஆறாம் பிலிப் மன்னருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்ற பிரச்சினையை இது எழுப்புகிறது.

ஸ்பெயின் முழுவதும் உயர் அதிகாரிகள் இந்த தடுப்பூசியை முறைகேடாக பெற்றனர். முர்சியாவில், மிக அதிக நிகழ்வு வீதங்களைக் கொண்ட பிராந்தியங்களில் ஒன்றான, 100,000 பேருக்கு 1,189 தொற்றுக்கள் — 450 மூத்த அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், பிராந்தியத்தின் சுகாதார அமைச்சரகத்தில் வேலை செய்யும் மூத்த அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் COVID-19 தடுப்பூசியை பெற்றனர். இது 72 மணி நேரம் நடந்தது மற்றும் முழு இரகசியமாக செய்யப்பட்டது. இவர்கள் முன்னணி சுகாதார ஊழியர்கள் அல்ல. அதே நேரத்தில், பிராந்திய சுகாதார அமைச்சகம் 90 வயதிற்கு மேற்பட்ட 9,300 முதியோருக்கு தடுப்பூசி போட மறுத்துவிட்டது, அவர்கள் ஒரு முன்னுரிமை என்று கருதப்படவில்லை.

முர்சியாவின் சுகாதார மந்திரி மானுவல் வில்லேக்ஸ், அவரது மனைவியுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டார், இரண்டு நாட்களுக்கு இராஜிநாமா செய்ய மறுத்துவிட்டார். அதிகரித்து வரும் அழுத்தத்தின் கீழ் மட்டுமே அவர் கைவிட்டுச் சென்றார் — பிராந்திய பிரதம மந்திரி பெர்னான்டோ லோபஸ் மிராஸ் முன் அல்ல, அவரை "முன்மாதிரி" என்றும் அவரது செயல்திறன் "குறைகூறமுடியாது" என்றும் பாதுகாத்தார்.

ஸ்பெயினின் ஆபிரிக்கப் பகுதி நகரான சியுட்டா மற்றும் வாலென்சியா மற்றும் அலிகண்ட் பிராந்தியங்களில் அரசு அதிகாரிகளின் ஒழுங்குமுறையற்ற தடுப்பூசி போடுதல்கள் நடந்தன. அலிகான்டே மாகாணத்தில், லா நுசியா இன் மேயரும், ஒரு உள்ளூர் கவுன்சிலரும் தடுப்பூசியைப் பெற்றனர். மேயர் இழிந்த முறையில் அவர் ஒரு மருத்துவ பட்டம் பெற்றுள்ளார் என்று வாதிட்டார்.

அதே நேரத்தில், ஸ்பெயினில் COVID-19 தடுப்பூசிகளின் உத்தியோகபூர்வ பங்குகளில் விவரிக்கப்படாத பற்றாக்குறை திடீரென தோன்றுகிறது. சுகாதார ஊழியர்களுக்கான டோஸ்கள் இல்லாது போனது குறிப்பாக குற்றமாகும், இதில் 50,000 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர், இதுவரை 63 பேர் இறந்துள்ளனர்.

COVID-19 உடன் போராடும் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை நிறுத்துவதாக மாட்ரிட்டின் பிராந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. மாட்ரிட் சுகாதார ஊழியர்கள் கடந்த வாரங்களில் பல நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக elDiario.es இணையவழி பத்திரிகையிடம் தெரிவித்தனர். சோனியா தினசரி ஒரு செவிலியராக பணிபுரியும் சுகாதார மையத்தில் ஒரு சந்திப்பு இருப்பதாக கூறினார்; எவ்வாறாயினும், "இன்று ஒருங்கிணைப்பாளர் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினார், இது ஒரு பற்றாக்குறை காரணமாக இரத்து செய்யப்படுவதாக எங்களுக்குத் தெரிவித்தார்."

மெதுவான பிராந்தியங்களில் ஒன்றாக தடுப்பூசி வெளியீட்டு தொடக்கங்களிலிருந்து 14,000 டோஸ்கள் அல்லது ஜனவரி 9 ஆம் திகதிக்குள் பெறப்பட்டவற்றில் 14 சதவிகிதத்தை நிர்வகிப்பதற்கு அது எவ்வாறு சென்றது என்பதை மாட்ரிட் பிராந்தியம் இன்னும் சொல்லவில்லை - இப்போது அதன் தடுப்பூசிகளில் 73 சதவீதத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த பிராந்தியத்தில் ஏற்பட்ட ஒரு பனிபுயலால் அந்த ஸ்தம்பித்த நிலையில் நிறுத்தப்பட்டது. செல்வந்தர்கள், நன்கு சக்திவாய்ந்த தொடர்புடைய நபர்களுக்கு சட்டவிரோதமாக வழங்குவதற்காக இந்த தடுப்பூசிகள் திருடப்பட்டதா என்பது வெளிப்படையான கேள்வியாக இருக்கிறது.

ஸ்பெயினின் ஆளும் உயரடுக்கின் தடுப்பூசி திருட்டானது ஐரோப்பா முழுவதும், குளிர் காலநிலை மற்றும் கொரோனா வைரஸின் புதிய, ஆபத்தான திரிபு வகைகளின் தோற்றத்தால், பெரும் உயிர் இழப்புக்கு வழிவகுக்கிறது. ஐரோப்பாவில் ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் சுமார் 100,000 மக்கள் COVID-19 ஆல் இறக்கின்றனர். ஸ்பெயினில் தற்போது 27,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொற்றுக்கள் உள்ளன, இதில் 3,734 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர், இந்த நிபந்தனைகளின் கீழ், வேலைக்குச் செல்வது மற்றும் பள்ளிக்குச் செல்லும் கொள்கைகளை அமல்படுத்துவது இன்னும் அதிகமான எண்ணிக்கையிலான உயிர் பறிப்புகளைக் கோருகிறது.

COVID-19 வைரஸிக்கு உத்தியோகபூர்வ ஐரோப்பிய ஒன்றியத்தின் விடையிறுப்பானது முற்றிலும் ஊழல் நிறைந்த, பண வெறி கொண்ட ஆளும் வர்க்கத்தால் நம்பமுடியாத முறையில் அழுகிய சதைக்கு ஒப்பாக இருக்கிறது. அவர்கள் ஒரு “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை அமல்படுத்தியபோது, அத்தியாவசியமற்ற தொழிற்துறையை நிறுத்தக் கோரி தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக அதிகாரிகள் படைகள் மூலம் பாசிச மனநிலைகள் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு சதித் திட்டங்களும் எழுந்தன. இப்போது கசியவிடப்பட்ட வாட்ஸ்அப் அரட்டைகளில், மூத்த அதிகாரிகள் தாங்கள் “நல்ல பாசிஸ்டுகள்” என்று கூறி, மேலும் இடதுசாரி உணர்வின் “புற்றுநோயை அழிக்க” “ வேசிகளின் (b*tches) 26 மில்லியன் மகன்களை சுட ஆரம்பிக்க” வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

வில்லாரோயா இந்த அரட்டைகளை குறைத்து மதிப்பிட்டார், இராணுவம் "அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள பணியை மிகச்சிறப்பாக நிறைவேற்றுகிறது" என்று வலியுறுத்தியதுடன், இராணுவப் பணியாட்கள் செய்த "பல தியாகங்களையும்" பாராட்டினார்.

இறுதி ஆய்வில், இந்த ஊழலானது முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கோரமான சமூக சமத்துவமின்மையில் வேரூன்றியுள்ளது. ஒரு பெரும் செல்வந்த தனிநபர் (ஜாரா (Zara) உரிமையாளர் அர்மன்சியோ ஒர்டேகாவின் நிகர மதிப்பு 57 பில்லியன் யூரோக்கள்) ஒரு சமூகத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் கீழுள்ள 50 சதவிகிதத்தில் உள்ளவர்கள் ஒரு பகுத்தறிவு, விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்பட்ட சுகாதாரக் கொள்கையை நிர்வகிக்க இயலாது. தடுப்பூசிக்கு பெரும் செல்வந்தர்களால் பரவலான ஒழுங்கற்ற அணுகல் வெளிப்பாடுகள் அதிகரித்து வருவதால், ஒர்டேகா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள மற்றய பில்லியனர்களுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்படவில்லை என்று நம்புவது கடினம்.

PSOE உடன் அரசாங்கத்தில் இருக்கும் "இடது ஜனரஞ்சகவாத" பொடேமோஸ் கட்சியானது ஊழலில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று சில பீதியுற்ற அழைப்புக்களை செய்துள்ளது. பொடேமோஸின் துணை செய்தித் தொடர்பாளரும், ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PCE) பொதுச் செயலாளருமான என்ரிக் சன்டியாகோ (Enrique Santiago) ட்டுவிட் செய்தார்: "JEMAD [வில்லரோயா (Villaroya) இன் தலைமை அதிகாரி] தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது உண்மை என்றால், அவர் பிரதம மந்திரியால் இராஜிநாமா செய்ய வேண்டும் அல்லது பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். ... மக்கள் தொகை அல்லது பிற உயர் ஆபத்தான சிப்பாய்கள் முன் அதிகாரிகள் தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்க என்று MinDefence ஒரு நெறிமுறையை வடிவமைத்திருந்தால், ரோபிள்ஸ் விளக்க வேண்டும்."

தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து வேலைக்குத் திரும்பும் கொள்கையை முன்னெடுத்துள்ள போடேமோஸ் தொழிலாளர் மந்திரி யோலண்டா டயஸ், தடுப்பூசி போடப்படுவதற்கான நெறிமுறைகளைத் தவிர்த்த "அனைத்து அரசியல் தலைவர்களும்" "உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.

உண்மையில், போடெமோஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொலைகார “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை நடைமுறைப்படுத்திய கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்னர், போடேமோஸ் சட்டவிரோதமாக உயரடுக்கினர் தடுப்பூசிகளை போட்டுள்ளது பற்றி அறிந்திருந்தது என்பதும், உண்மையில், பிரதம மந்திரி பப்லோ இக்லெசியாஸ் அல்லது பிற போடேமோஸ் அதிகாரிகள் சட்டவிரோதமாக தடுப்பூசி போட்டு இருந்தார்களா என்பதும் எழுப்பப்பட வேண்டிய கேள்வியாக இருக்கிறது.

இந்த ஊழலின் மைய அரசியல் படிப்பினை என்னவென்றால், ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தின் மூலம் பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராட முடியாது. சமத்துவத்துக்காகவும் சோசலிசத்துக்காகவும் போராடும் ஒரு அரசியல் இயக்கத்தில், பணியிடங்கள் மற்றும் பள்ளிகளிலுள்ள தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுதல் இதற்கு தேவைப்படுகிறது. அத்தகைய இயக்கத்திற்கான ஒரே சாத்தியமான முன்னோக்கு நிதியப் பிரபுத்துவத்திலிருந்து தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதாகும்.

நவம்பரில் PSOE-Podemos அரசாங்கம் அதன் Covid-19 தடுப்பூசி மூலோபாயத்தை பெரும் ஆரவாரத்துடன் அறிவித்தது. இந்த திட்டம் 2021ஆம் ஆண்டில் மூன்று கட்டங்களாக தடுப்பூசிகளை வழங்க ஸ்பெயின் மக்களை 15 குழுக்களாகப் பிரித்தது. முதல் கட்டமாக, ஜனவரி முதல் மார்ச் வரை, 2.5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட இருந்தது, இதில் நலப் பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்கள் (nursing care home residents) மற்றும் ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தீவிர குறைபாடுகள் உள்ளவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

Loading