ஹூண்டாய் எஃகு தொழிலாளர்கள் தென்கொரியாவில் வேலைநிறுத்தப் போராட்டம்; தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென் கொரியா: ஹூண்டாய் எஃகு ஆலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் கோரி வேலைநிறுத்தப் போராட்டம்

ஊதிய பேச்சுவார்த்தைகள் 15 சுற்றுக்கள் நடந்த பிறகும், புதன்கிழமையன்று ஊதிய உயர்வு மற்றும் போனஸ்களுக்காக தென் கொரியாவின் ஐந்து ஹூண்டாய் எஃகு ஆலைகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிற்சங்கப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வேலைநிறுத்தத்தில் சேராத சியோலுக்கு தெற்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாங்ஜினில் மூன்று ஊதுலைகளை (blast furnaces) இயக்கும் 2,000 அத்தியாவசிய தொழிலாளர்கள் தவிர, 6,400 தொழிற்சங்க உறுப்பினர்கள் வரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

ஒரு நபருக்கு மாதம் வழங்கும் அடிப்படை சம்பளத்தில் ஒரு 120,000 வொன் (தென்கொரிய நாணயம்) (109 அமெரிக்க டாலர்) அதிகப்படுத்தவேண்டும் என்றும், ஒரு போனஸாக மூன்று மாதத்தின் ஊதியத்தையும் மற்றும் சிறப்பு கொடுப்பனவாக ஒரு 5 மில்லியன் வொன்னும் வேண்டுமென்று தொழிற்சங்கம் கோரியுள்ளது. அடிப்படை சம்பளத்தில் எதுவும் இன்றி முடக்குவதுடன், ஒரு மாத ஊதியமாக போனஸுக்கான தொகையாகவும் மற்றும் சிறப்பு கொடுப்பனவாக 1 மில்லியன் வொன் ஆகியற்றைத்தான் ஆலையின் நிர்வாகம் கொடுக்கப்போவதாக முன்மொழிந்திருக்கிறது.

இந்தியா: மகாராஷ்டிராவில் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் பணிநீக்கங்களுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டம்

ஜனவரி 12 அன்று மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பிராந்தியத்தின் ஏஜி என்வைரோ குப்பை அள்ளும் தொழிலாளர்கள் நீண்டநாள் நிறைவேற்றப்படாமலிருக்கும் பல்வேறு கோரிக்கைளுக்காக விதான் பவன் சதுக்கத்தில் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியிருப்பதுடன் மேலும் உள்ளிருப்புப் போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். எந்தவித அறிவுப்புமில்லாமல் 140 சக பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கிய பிறகு இந்த வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்துள்ளது. பிவிஜி குப்பை அள்ளும் நிறுவனத்தின் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கவும், மாநில அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதியம் வழங்கவும், வருங்கால வைப்புநிதி, தொழிலாளர் அரசு காப்பீடு, விடுமுறை மற்றும் சட்டத்தால் தேவைப்படும் பிற நிலைமைகள் போன்றவற்றை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினார்கள்.

ஐந்து மண்டலங்களில் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிப்பது பாதிக்கப்பட்டிருந்தது, நாக்பூர் ஜில்லா என்எம்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு திரும்ப திரும்ப கேட்டாலும் தொழிலாளர் ஆணையர் தவறியுள்ளார் என்று சங்கத்தின் செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்.

பஞ்சாப் கல்வித் தொழிலாளர்கள் பின்தங்கிய பகுதிகளுக்கு பணிமாற்றம் செய்வதை எதிர்க்கிறார்கள்

பஞ்சாப் மாநில கல்வித் துறை சர்வ ஷிக்ஸ் அபியான் (அனைத்து இயக்கத்திற்கும் கல்வி) யில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பின்தங்கிய பகுதிகளுக்கு பணியாளர்களை இடமாற்றுவதை எதிர்த்து ஜனவரி 10 அன்று பாட்டியாலாவில் முதலமைச்சரின் வீட்டுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தங்களுடைய குழந்தைகளையும் சேர்த்து அணிதிரட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் வீடுகளிலிருந்து 250 இலிருந்து 300 கிலோ மீட்டர் வரை செய்யும் இந்து பணியிட மாற்றங்கள் மாநில அரசாங்கத்தின் விகிதாச்சார கொள்கைகளின் (rationalisation policy) ஒரு பகுதியாகும். நிரந்தர பதவிகள் வழங்கப்படாத நிலைமைகளில் 10 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஜனவரி 1 அன்று நிரந்தர வேலைகள் கேட்டு பதிந்தாவில் நிதி அமைச்சரின் அலுவலகத்திற்கு வெளியே பஞ்சாப் SSA திட்டத்தின்கீழ் ஈடுபட்டுள்ள கல்வி கற்பிக்காத தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். மாநில அரசாங்கத்தால் 2018 இல் 8,886 SSA ஆசிரியர்கள் வேலையில் நிரந்தரப்படுத்தப்பட்டார்கள் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

இந்த திட்டத்தில் கல்வி கற்பிக்காத தொழிலாளர்கள் ஆயிரம் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள் இருந்தபோதிலும், வேலை பெறுவதற்கான தகுதியில் எழுத்து பரிட்சை முடித்திருந்தாலும் அவர்களுக்கு நிரந்தர வேலைகள் கொடுக்கப்படவில்லை.

மதுரையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜனவரி 9 அன்று மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தின் கல்வித்துறை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2019 இல் JACTO-GEO ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட 17B (ஒழுங்கு) உத்தரவுகளை அரசாங்கம் திரும்பப்பெறவேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

ஓய்வூதியங்கள் மற்றும் சம்பளங்கள் குறித்து அது அளித்த முந்தைய வாக்குறுதிகளை வழங்கவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான தகுதியை 7.5 இலிருந்து 10 சதவீத ஒதுக்கீடாக உயர்த்தவேண்டும் என்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு தனியாக ஒரு 5 சதவீத ஒதுக்கீட்டை உருவாக்கவேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனவரி 2019 இல் JACTO-GEO (ஆசிரியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை கவுன்சில் - அரசு ஊழியர் அமைப்புகள்) உறுப்பினர்கள் மூன்று நாட்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து பள்ளிகளையும் மூடினார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்றும் ஓய்வூதிய வழங்கல் மேலும் வெளிப்படைத் தன்மையாக இருக்கவேண்டும் மற்றும் 7வது ஊதியக் குழுவின் அதிகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணத்தை வழங்கவேண்டும் என்பது உட்பட ஒன்பது கோரிக்கைகளை பிற அரசு ஊழியர்களின் ஆதரவுடன் ஆசிரியர்கள் வைத்தனர்.

புதுச்சேரி மின்சார பகிர்மான ஊழியர்கள் தனியார்மயமாக்கலை எதிர்த்து இரண்டாவது தடவையாக வேலைநிறுத்தப் போராட்டம்

செவ்வாய்க் கிழமையன்று புதுச்சேரி மின்சார வாரிய தொழிலாளர்கள் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதுடன் மேலும் அந்த யூனியன் பிரதேசத்தின் மின் துறையை தனியார்மயாக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையைக் எதிர்த்து அத்துறையின் தலைமை அலுவலகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொண்டனர். இந்த வாரியத்தில் சுமார் 3,000 தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். பொறியாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தது.

அவர்களுடைய கோரிக்கைளுக்காக கலந்துரையாடுவதற்கு இந்தியாவின் மின்துறை அமைச்சருடன் ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து தருவதாக முதலமைச்சர் ஒரு வாய்வழி உத்தரவாதத்தை அவர்களுக்கு வழங்கியிருப்பதாகக் கூறி தொழிற்சங்கங்கள் டிசம்பரில் நடந்த நீண்ட ஒரு வார கால தனியார்மயமாக்கலுக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தை முடித்துக்கொண்டன. ஐந்து மின்நிலையங்களின் பராமரிப்பை இரண்டு வருடங்களுக்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முழுவதுமாக தனியார்மயமாக்குவதற்கான முதல் நிலையாக இது இருக்கும் என்று தொழிலாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

ரயில்வே, மின்சாரம், எரிபொருள், நிதி மற்றும் பிற பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் திட்டத்தினை எதிர்த்து இரண்டு தேசிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் உட்பட பல மாதங்களாக இந்தியா முழுவதும் பொதுத் துறை தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றார்கள்.

தமிழ்நாடு அரசாங்க ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர வேலை கோருகிறார்கள்

ஜனவரி 12 அன்று ஈரோட்டில் ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர வேலைகள் மற்றும் ஒரு நேர அளவிலான அடிப்படை ஊதியம் ஆகியவற்றை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

நவம்பர் 23 அன்று 3,000க்கும் அதிகமான அரசாங்க ஒப்பந்த செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நிரந்தர வேலைகள், ஊதிய உயர்வு மற்றும் அதிக வேலை போன்ற கோரிக்கைகளுடன் சென்னையிலுள்ள மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவைகள் இயக்குனகரத்தின் அலுவலகத்தில் கூடியிருந்தனர். ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையங்கள் உட்பட பல அரசு மருத்துவமனைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

2012 இல் 7,000 ரூபாய் (96.6 அமெரிக்க டாலர்) மாத ஊதியத்திற்கு 11,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை தமிழ்நாடு அரசாங்கம் பணியமர்த்தியுள்ளது..

பங்களாதேஷ் ஆடைதயாரிப்பு தொழிலாளர்கள் நிலுவை ஊதியத்தை கோருகிறார்கள்

செவ்வாய்க்கிழமையன்று தெற்கு மத்திய பங்களாதேஷில் உள்ள பாரிஷல் நகரில் சோனர்கான் ஜவுளி தொழிற்சாலையிலிருந்து சுமார் 700 தொழிலாளர்கள் எட்டு மாதங்களாக வழங்கப்படாமலிருக்கும் ஊதியங்களையும் பிற நிலுவைத் தொகைகளையும் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மேலும் ஊர்வலமாகவும் சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சியில், காவல்துறையினர், மாவட்ட நிர்வாகிகள், ஆலை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டு நடந்த ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஆலையின் முதலாளி ஆலையை மீண்டும் திறப்பதற்கும் நிலுவைத் தொகைகளை ஜனவரி 31 இல் வழங்குவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

கடந்தவருடம் மார்ச் மாதத்திலிருந்து ஆலை மூடப்பட்டிருப்பதாக ஒரு தொழிலாளி ஊடகத்திற்கு கூறியுள்ளார். நவம்பரில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அந்த மாதம் இரண்டு பிரிவுகளை மீண்டும் திறப்பதாகவும் மற்றும் மற்றவை டிசம்பரிலும் மேலும் நிலுவை ஊதியங்களையும் வழங்குவதாக ஆலையின் நிர்வாகம் ஏற்கனவே உறுதியளித்திருந்தது என்று அந்த தொழிலாளி நினைவுபடுத்தி கூறினார்..

காசிப்பூர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் ஆடைத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்

திங்களன்று காசிப்பூரில் உள்ள டோங்கி தொழில்துறை பகுதியில் ஒரு தொழிற்சாலை உற்பத்தி வரிசை தலைமைப்பொறுப்பாளரை பணிநீக்கம் செய்யக் கோரி நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது ராடிசன் ஃபேஷன் இலிருந்து ஆடைதயாரிக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்ட போராட்டத்தில் தாக்குதல் நடத்துவதற்கு காவல்துறையினர் லத்திகளை பயன்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் தாக்குதலில் மூன்று தொழிலாளர்கள் படுகாயமுற்றனர்.

உற்பத்தி வரிசை தலைமைப்பொறுப்பாளர் தொழிலாளர்களை தாக்குவதற்கு குண்டர்களை கூலிக்கு அமர்த்தினர் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர் மேலும் தொழிற்சாலைக்கு வெளியே பல நேரங்களில் பெண் தொழிலாளர்களை துன்புறுத்துகின்றார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர். உற்பத்தி வரிசை தலைமைப் பொறுப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை கூறியதையடுத்து திங்கட் கிழமை போராட்டத்தை தொழிலாளர்கள் முடித்துக்கொண்டனர்.

உற்பத்தி வரிசை தலைமை பொறுப்பாளரைப் பற்றி நிர்வாகத்திடம் பலமுறை புகார்கள் தெரிவித்தபிறகும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் பற்றிக்கொண்டது. ஞாயிற்றுக் கிழமை தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்ததுடன் தொழிற்சாலை வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒரு காலவரையற்ற காலத்திற்கு அவர்களை வெளியே விட்டு பூட்டியதன் மூலம் நிர்வாகம் பதிலளித்துள்ளது.

பாகிஸ்தான்: இஸ்லாமாபாத்தில் அரசு ஊழியர்களின் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் நிறுத்துகின்றன

செவ்வாய்க் கிழமையன்று இஸ்லாமாபாத்தில் பாராளுமன்றத்திற்கு வெளியே ஊதிய உயர்வு மற்றும் மேம்பட்ட நிலைமைகள் ஆகியவற்றைக் கோரி தொழிலாளர்களின் ஒரு வெகுஜன போராட்டத்தை அனைத்து அரசு ஊழியர்களின் கிராண்ட் அலையன்ஸ் (The All Government Employees Grand Alliance) நிறுத்தியுள்ளது. அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு மார்ச் மாதம் கேடு விதிப்பதாகவும் பின்னர் போராட்டத்தை முடித்துக்கொள்வதாகவும் தொழிற்சங்க தலைவர்கள் அறிவித்துள்ளார்கள்

அரசாங்கம் அமுல்படுத்தியிருக்கும் ஊதிய முடக்கத்தை உடனடியாக முடிவுக்கொண்டுவரவேண்டும் என்றும், 100 சதவீத ஊதிய உயர்வு மற்றும் கொடுப்பனவுகளிலும் ஓய்வூதியங்களிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் வேண்டும் என்று அரசாங்க உழியர்கள் நாடுமுழுவதிலிமிருந்து கோரிக்கை வைத்துள்ளார்கள். பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கல்விநிறுவனத்திலிருந்த (Pakistan Institute of Medical Sciences - PIMS) சுகாதாரப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தனியார்மயமாக்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று போராட்டத்திற்கு முன்னர் அரசாங்கம் கூறியதுடன், அது சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த வரவுசெலவு திட்டப் பற்றாக்குறைக்கு இலக்குகளுக்கு எதிராக இருந்தது என்றும் அறிவித்துள்ளது. போராட்டம் நடக்கும் பகுதியில் 3,500 காவல்துறையின் பாதுகாப்பு படையினரை நிறுத்தியிருந்தது.

அனைத்து பாகிஸ்தான் எழுத்தர்கள் சங்கம், அனைத்து பாகிஸ்தான் செயலக ஊழியர் ஒருங்கிணைப்பு கவுன்சில் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் அடங்கிய ஒரு குடையின் கிழ் இயங்கும் அமைப்பாக அரசு ஊழியர்களின் கிராண்ட் அலையன்ஸ் இருக்கிறது.

Loading