அமெரிக்க விமானத்தாங்கி போர்க் கப்பல் தென் சீனக் கடலுக்குள் நுழைகையில், பைடென் நிர்வாகம் தைவான் குறித்து சீனாவை எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதிதாக அதிகாரத்திற்கு வந்த பைடென் நிர்வாகம், சீனா தொடர்பான அதனுடைய நிலைப்பாடு ட்ரம்ப் நிர்வாகத்தைப் போலவே மூர்க்கத்தனமாக இருக்கும் என்பதை விரைவாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பொருளாதார செல்வாக்கெல்லையில், கருவூல செயலாளருக்கான பைடெனின் பரிந்துரையாளரான ஜெனட் யெலன், அவருடைய பதவி உறுதிப்படுத்தும் நிகழ்வில், பெய்ஜிங்கை "எங்களுடைய மிகவும் மூலோபாய போட்டியாளர்" என்று முத்திரை குத்தினார். ட்ரம்பை எதிரொலிக்கும் அந்த அம்மையார், அறிவுசார் சொத்துக்கள் திருட்டு மற்றும் கட்டாய தொழில்நுட்ப இடமாற்றங்கள் உட்பட அதனுடைய "தவறான, நியாயமற்ற மற்றும் சட்டவிரோத நடைமுறைகளை" கண்டித்தார், மேலும் "இந்த நடைமுறைகளை நிவர்த்தி செய்ய முழுமையான வியூகக் கருவிகளையும் பயன்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்று அறிவித்தார்.

2018 ஆம் ஆண்டில், தென் சீனக் கடலில், அமெரிக்க கடற்படை கப்பலான யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகனின் கப்பல் தளத்தில் ஒரு அதி நவீன F/A-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானம் காணப்படுகிறது. (AP Photo/Kin Cheung)

ட்ரம்ப் நிர்வாகத்தின் எதிர்த்து மோதுவதற்கான இராணுவ நடவடிக்கைகளையும் வெள்ளை மாளிகை தொடர்கிறது, விமானத் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் அதனுடைய தாக்குதல் குழுவானது சனிக்கிழமையன்று தென் சீனக் கடலுக்குள் நுழைந்தன. தாக்குதல் குழுவில் ஒரு வழிகாட்டும்-ஏவுகணை கப்பலான யுஎஸ்எஸ் பங்கர் ஹில் மற்றும் இரண்டு ஆர்லீ பர்க்-தரவகை வழிகாட்டும்-ஏவுகணை அழிப்பு கப்பல்களான யுஎஸ்எஸ் ரஸ்ஸல் மற்றும் யுஎஸ்எஸ் ஜோன் ஃபின் ஆகியவை உள்ளடங்கியிருந்தன.

அமெரிக்க இராணுவம் இந்த நடவடிக்கையை "வழக்கமானது" என்று விவரித்தாலும், தென் சீனக் கடலில் சீன ஆக்கிரமிப்புத் தீவுகளை சுற்றி 12 கடல் மைல் எல்லைக்குள் "கடற்பயண நடவடிக்கைகளின் சுதந்திரம்" (FONOPs- freedom of navigation operations) பயிற்சி உட்பட, ஒபாமா மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் இத்தகைய பயிற்சிகளின் அடுக்குநிகழ்வு அதிகரித்து வருவது மட்டுமே "வழக்கமான" அம்சமாகும். ஒபாமா நிர்வாகத்தின் இறுதி ஆண்டுகளில் FONOP பயிற்சிகள் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று ஆக இருந்து ட்ரம்பின் கீழ் 10 ஆக அதிகரித்துள்ளது.

தாக்குதல் குழு தளபதி ரியர் அட்மிரல் டக் வெரிசிமோ அறிவித்தார்: “வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வது, கடல்களின் சுதந்திரத்தை மேம்படுத்துதல் மற்றும் நேசநாடுகளுக்கும் கூட்டாளிகளுக்கும் உறுதியளிப்பது மீண்டும் தென் சீனக் கடலில் இருப்பது மிகவும் நல்லது.” இந்தத் தடைவை ஒரு போர்க் கப்பல் சீனாவால் உரிமை கோரப்பட்ட பிராந்திய கடலுக்குள் நுழைகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சீன நிலப்பகுதிக்கு நெருக்கமாக ஒரு அமெரிக்க விமானத்தாங்கி தாக்குதல் குழு செல்லுவதும் மற்றும் ஹைனன் தீவிலுள்ள முக்கிய கடற்படை தளங்கள் இருப்பதும் ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது.

யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் தாக்குதல் குழு தென் சீனக் கடலில் நுழைந்தபோது, தைவான் அறிவித்த தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் (ADIZ- air defence identification zone) மூலம் சீன இராணுவம் தனது விமானங்களை பறக்கவிட்டதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை விமர்சித்தது. சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்க செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், "தைவான் உட்பட அதன் அண்டை நாடுகளையும் அச்சுறுத்துவதற்கு சீனா மேற்கொண்ட முயற்சிகள்" குறித்து "கவலை" தெரிவித்ததோடு, "தைவானிற்கான நமது அர்ப்பணிப்பு பாறை-திடமானது" என்றும் எச்சரித்தார். பல நாடுகள் ADIZ களை நிறுவியிருந்தாலும், அவை பிராந்திய வான் பகுதிகளின் ஒரு பகுதியாக இல்லை, சர்வதேச சட்டத்தில் எந்த நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை மற்றும் நாடுகளுக்கு இடையேயுள்ள மறைமுக ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்ளன. உண்மையில், 2013ல் சீனா கிழக்கு சீனக் கடலில் தனது சொந்த ADIZ ஐ அறிவித்தபோது, அமெரிக்கா அந்த மண்டலத்தை அங்கீகரிக்காது என்று அறிவித்ததுடன், எந்த அடையாளங்களும் இல்லாமல் வேண்டுமென்றே அந்தப் பகுதியில் போர் விமானங்களை பறக்கவிட்டது.

சீனாவானது தாய்வானை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கூறி, அதை ஒரு "விட்டோடி மாகாணம்" என்று கருதுகிறது. அது தாய்வானின் ADIZ ஐ புறக்கணித்து விட்டு அங்கு இராணுவ விமானங்களை தொடர்ந்து பறக்கச் செய்து வருகிறது. சனிக்கிழமை நடவடிக்கையின் ஒரே குறிப்பிடத்தக்க வேறுபட்ட அம்சமாக இருப்பது நான்கு போர் விமானங்கள், எட்டு குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் உட்பட பல மாதங்களுக்கு மிகப்பெரியதாக இது இருந்தது. தைவானின் இராணுவம் வானொலி எச்சரிக்கைகளை அனுப்பியது, பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை உஷார்நிலையில் வைத்தது மற்றும் சீன விமானங்களை கண்காணிக்க ரோந்து விமானங்களை அனுப்பியது.

அமெரிக்க மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ள சமீபத்திய அமெரிக்க கண்டனமானது பைடன் நிர்வாகம், தைவானுடனான ட்ரம்பின் நெருக்கமான ஆதரவையும், தொடர்புகளையும் தொடரும் என்பதை நிரூபிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 1979ல் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட போது, அமெரிக்கா தைவானை ஆயுதபாணியாக்கவும், அந்தத் தீவை பலவந்தமாகக் கைப்பற்றுவதையும் எதிர்த்தது. ஆனால் அதே நேரத்தில் வாஷிங்டன் "ஒரே சீனக் கொள்கையை" மறைமுகமாக ஏற்றுக் கொண்டது; தாய்வான் உட்பட அனைத்து சீனாவின் சட்டபூர்வமான ஆட்சியாளராக பெய்ஜிங்கை அங்கீகரித்தது.

ஆரம்பத்தில் இருந்தே, ட்ரம்ப் "ஒரே சீனா கொள்கையை" பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கியதோடு, தைவானுடனான குறுகிய மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொடர்புகளை மூன்று தசாப்தங்களாக ஸ்தாபிக்கப்பட்ட இராஜதந்திர நெறிமுறைகளை அதிகரித்தளவில் புறக்கணித்தார். ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுதி வாரத்தில், அதன் வெளிவிவகார செயலர் மைக் பொம்பியோ அமெரிக்க மற்றும் தைவானிய அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான சந்திப்புகள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் அகற்றி, ஒரு சீற்றமான சீன விடையிறுப்பைத் தூண்டினார்.

புதிய நிர்வாகமும் இதையே செய்ய விரும்புகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியில், வாஷிங்டனுக்கான தைவானின் நடைமுறையிலுள்ள தூதர் பி-கிம் ஹ்சியாவோ கடந்த வாரம் பைடெனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் முடிவடைந்த பின்னர் தைவானிய பிரதிநிதி ஒருவர் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது இதுவே முதல் தடைவையாகும்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல்களுக்கான மிக ஆபத்தான வெடிப்புப் புள்ளியாக தைவான் உள்ளது. புரட்சிகர இயக்கத்தினால் பெய்ஜிங்கில் 1949ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் இருந்து தீவிற்கு தப்பி ஓடிய கோமின்டாங் (KMT) படைகளைப் பாதுகாக்க அமெரிக்க கடற்படை தலையிட்டது. பல தசாப்தங்களாக, சீனாவின் அனைத்து நாடுகடந்து வாழ்ந்தவர்களின் சட்டபூர்வமான அரசாங்கம் என்ற கட்டுக்கதையை தொடர்ந்து பேணிவந்ததுடன் அமெரிக்கா தைவானில் கொடூரமான KMT சர்வாதிகாரத்திற்கு முட்டுக் கொடுத்தது.

1972ல் ஜனாதிபதி நிக்சன் சீனாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, 1979ல் இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்ட மாற்றம், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு நடைமுறைக் கூட்டால் அமெரிக்க மூலோபாய நலன்களால் இயக்கப்பட்டது. கடந்த தசாப்தத்தில், ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலை" இன் (“pivot to Asia”) கீழும், பின்னர் ட்ரம்பின் கீழும், அமெரிக்க ஏகாதிபத்தியமானது சீனாவை அதன் பிரதான போட்டியாளராகக் கருதுவதற்கு மாறியதுடன், பெய்ஜிங்கானது அமெரிக்க பூகோள மேலாதிக்கத்தை அனைத்து வழிகளிலும் அச்சுறுத்துவதிலிருந்து தடுக்க மற்றொரு மூலோபாய-திருப்பத்தையும் எடுத்துள்ளது.

வெளிவிவகாரச் செயலர் அந்தோனி பிளிங்கனை பைடென் தேர்ந்தெடுத்தது, கடந்த வாரம் அவரது உறுதிப்படுத்தல் நிகழ்வுகளின் போது, சீனாவானது எந்த ஒரு நாட்டினையும் விட மிக முக்கியமான சவாலை அமெரிக்காவிற்கு முன்கொண்டு வந்துள்ளது என்பதில் "எந்த சந்தேகமும்" இல்லை என்று வலியுறுத்தினார். முன்னாள் ஜனாதிபதியின் தந்திரோபாயங்களுடன் ஒருவேளை முரண்பட்டாலும், சீனாவுடன் ட்ரம்ப் "ஒரு கடுமையான அணுகுமுறையை எடுத்துக் கொள்வது சரிதான்" என்று அவர் ஒப்புக்கொண்டார். தைவானுக்கு வாஷிங்டன் ஆயுத விற்பனையைத் தொடரும் என்றும் அவர் அறிவித்தார்.

தைவானுடனான கூடுதலான ஈடுபாட்டை தான் ஆதரிப்பதாகவும், அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கும் பொம்பியோவின் முடிவை தாம் எதிர்க்கவில்லை என்றும் பிளிங்கன் கூறினார். தனது குழு நெறிமுறைகளை மட்டுமே ஆய்வு செய்யும் என்றார். 2019 இல் ஒபாமா நிர்வாகத்தின் துணை செயலாளர் என்ற முறையில், தைவானின் ஜனநாயக முற்போக்கு கட்சியின் (Taiwan’s Democratic Progressive Party) ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சாய் இங்-வென் ஐ பிளிங்கன் சந்தித்தார். சாய் இப்பொழுது தைவானிய ஜனாதிபதியாக இருக்கிறார், மேலும் சீனாவிடமிருந்து தைவானுக்கு அதிக சுதந்திரத்தையும் ஆதரிக்கிறார்.

தன்னுடைய பதவி உறுதிப்படுத்தல் நிகழ்வுகளில், முஸ்லிம் வீகர்ஸ் சிறுபான்மையினத்தை சீனா நடத்திய விதம் குறித்து சீனாவின் "இனப்படுகொலை" என்று பொம்பியோவின் ஆத்திரமூட்டும் பெயர்குறிப்பு அழைப்பை ஒப்புக் கொண்டார். பதவியை விட்டு விலகுவதற்கு முன்னர் அவர் மேற்கொண்ட கடைசி நடவடிக்கைகளில் ஒன்றான பொம்பியோவின் கருத்துக்கள், வேண்டுமென்றே அமெரிக்க-சீன உறவுகளைத் தூண்டிவிடுவதற்காக நோக்கம் கொண்டவைகளாகவும், மேலும் சீனாவிற்கு எதிரான பொருளாதாரப் போர் மற்றும் இராணுவக் கட்டமைப்பிற்கான நியாயப்படுத்தல்களாக "மனித உரிமைகளை" பாசாங்குத்தனமாக சுரண்டிக் கொண்ட அமெரிக்க பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தன.

ஒபாமா நிர்வாகத்தின் சீனாவை இலக்கு வைக்கும் "ஆசியாவை நோக்கிய முன்னிலை" இன் ஒரு பகுதியாக இருந்ததை பைடென், பதவி ஏற்பு விழாவிற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், பெய்ஜிங்குடனான ட்ரம்பின் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான மோதலைத் தொடரவும் தீவிரப்படுத்தவும் இருப்பதாக ஏற்கனவே சுட்டிக்காட்டி வருகிறார்.

Loading