இலங்கை சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக மருத்துவமனைகளில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவோம்!பகிரங்க இணையவழி கூட்டமும் கலந்துரையாடலும்

கொவிட் 19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பேராதனை மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மருத்துவமனை நிர்வாக ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த பிரிவுகளை மூடாமல் நடத்திச் செல்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதன் காரணமாக, நிர்வாக ஊழியர் குழுவினர் கடுமையான சரீர மற்றும் உளவியல் பதட்டங்களுக்கு உள்ளாக்கும் வெறுக்கத்தக்க சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளை பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தாமை மற்றும் தேவையான தரத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு ஆடை (பிபிஇ) தொகுதிகளை சுகாதார ஊழியர்களுக்கு வழங்காமை போன்ற அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற கொள்கையாலேயே இந்த தனிமைப்படுத்தலை செய்ய வேண்டி இருக்கின்றது.

பலபிட்டி மருத்துவமனை சுகாதார ஊழியர்கள் ஜூன் 2020 இல் மறியல் (WSWS media).jpg)

பெருவணிகத்தின் இலாபங்களை இடைவிடாமல் தொடர்ந்து பெருக்குவதற்காக சுதந்திர வர்த்தக வலயங்களிலும் அதற்கு வெளியிலும் உள்ள அத்தியாவசியமற்ற உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களை வேலைக்கு செல்ல நிர்ப்பந்தித்தல், பாடசாலைகளை திறந்துவிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை தொற்றுநோய்க்கு உள்ளாக்குகின்றமை மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் மீது அத்தியாவசிய சேவை உத்தரவுகளை பிறப்பித்து தொற்று நோய் வேகமாக பரவும் நிலையிலும் அவர்களை கட்டாயமாக வேலைக்கு அழைத்தல் போன்றவை மூலம், அரசாங்கம் நோய் சமூகமயப்படுத்தல் சிகிச்சை எனப்படுவதை பின்பற்றுவது மிகவும் வெளிப்படையாகியுள்ளது.

கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவமனை ஊழியர்களின் உண்மையான விவரங்களை அரசாங்கம் ஏனைய தொழிலாளர்களிடமிருந்து கபடத்தனமாக மூடி மறைக்கிறது. அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியம் என்பது நிரூபிக்கப்பட்ட போதும், அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள கைவிடுவது அரசாங்கத்தின் குற்றவியல் பிரதிபலிப்பாகும்.

கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவமனை ஊழியர்களின் உண்மையான விவரங்களை அரசாங்கம் தந்திரமாக மற்ற தொழிலாளர்களிடமிருந்து மூடி மறைக்கிறது. அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியம் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள கைவிடுவது அரசாங்கத்தின் குற்றவியல் பிரதிபலப்பாகும்.

இந்த நிலைமை, கடந்த பல தசாப்தங்களாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சுகாதார சேவைக்கான செலவினங்களை வெட்டிக் குறைப்பதன் மூலம் இலவச சுகாதாரப் சேவைகளை அழித்ததன் விளைவாகும். தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் "புதிய வழமை" கொள்கையின் கொடூரமான தன்மை, ஜனவரி 8 அன்று இரத்தினபுரி வைத்தியசாலையில் நமது சக சுகாதார ஊழியரான சாந்த ஸ்டீபன் கொவிட்-19 தொற்றினால் மரணித்ததன் மூலம் குறிக்கப்பட்டது. தொற்றுநோய்க்கு ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், நோய் அதிகரித்தால் சுகாதார ஊழியர்களான நாமும் சரியான சிகிச்சை இல்லாமல் மரணிக்க நேரிடும் என்பது தெளிவு.

உலகெங்கிலும் வைத்தியர்கள் முதல் கணிஷ்ட ஊழியர்கள் வரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் மரணித்துள்ளதுடன் கிட்டத்தட்ட 300,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரோனா தொற்றுநோய்க்கு முன்நிலையில் நின்றி சிகிச்சையளிக்கும் தொழிலாளர்களான நாம், உலகெங்கிலும் போலவே இலங்கையிலும் முதலாளித்துவ அரசாங்கங்களால் ஆபத்தான சூழ்நிலைக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

சுகாதாரத் தொழிலாளர்களான நாம் இந்த கொடிய நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் போது, தொழிற்சங்கங்கள் எங்களை பாதுகாக்கவில்லை, மாறாக அரசாங்கத்தின் இந்த கொடூரமான கொள்கையையே பாதுகாக்கின்றன. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் எனப்படுவதில் ஈடுபடும் அவர்கள், சுகாதார ஊழியர்களை தவறாக வழிநடத்தி, அவர்களை கோஷ்டிவாதிகள் போல் தராதர ரீதியாகவும் தராதரங்களுக்கு உள்ளேயும் பிளவுகளை ஏற்படுத்தி, தொழிலாளர்களின் போராட்ட பலத்தை மழுங்கடிக்கின்றனர்.

முதலாளித்துவ அரசாங்கத்தின் கொடூரமான வேலைத்திட்டத்திற்கு எதிராக, கருத்துச் சுதந்திரம் மற்றும் தீர்மானங்களை எடுக்கும் ஜனநாயக மரபுகளை அடிப்படையாகக் கொண்ட, படிநிலைகளுக்கு மட்டுப்படுத்தப்படாத, தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை மருத்துவமனைகளில் அமைத்துக்கொண்டு, அவற்றை பரவலாகவும் ஒருங்கிணைவாகவும் ஒழுங்கமைத்துக்கொள்வது இன்று எரியும் தேவை ஆகும். தொற்றுநோயில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு சரியான பாதுகாப்பு உடைகள், போக்குவரத்து மற்றும் சேவை மாற்றங்கள், ஆபத்து மற்றும் தனிமைப்படுத்தல கொடுப்பனவுகள், வேலை வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் வேலை நிரந்தரத்தை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளை வெல்வதற்கான வழி இதுவே ஆகும்.

அதற்காக, பெப்ரவரி 7 அன்று இரவு 9:00 மணிக்கு கீழேயுள்ள இணைப்பு வழியாக எங்கள் நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்துள்ள இணையவழி கூட்டத்திலும் கலந்துரையாடலிலும் இணைந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்.

https://register.gotowebinar.com/register/4438645290934040587

எங்களது பிரச்சாரத்தைப் பற்றிய மேலதிக கலந்துரையாடலுக்கு மின்னஞ்சல் (healthworkers-sl@wsws.org) அல்லது தொலைபேசி (0773562327) வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்.

Loading