இரண்டு மாத கால விவசாயிகளின் கிளர்ச்சிக்கு எதிராக பரந்தளவிலான அடக்குமுறையை மோடி தொடங்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அரச மிரட்டல் மற்றும் வன்முறை மூலம் விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டத்தை அடக்க நீண்டகாலமாக தயாரிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வேளாண் வணிகச் சார்பு சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் வெடித்த கலவரத்தில் “வன்முறை” மற்றும் “அராஜகம்” ஆகியவற்றை இந்தியாவின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கம் பற்றிப்பிடித்துள்ளது.

2020டிசம்பர், 12 அன்று இந்தியாவில், கொல்கத்தாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு மத பிரதிநிதிகள் பேரணி நடத்துகின்றனர் (AP Photo/Bikas Das)

இந்த பிரச்சார நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை அடியாளாக இருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வின் அதிகாரத்தின்கீழ் இருக்கும் டெல்லி காவல்துறையினராலும் மற்றும் அருகிலிருக்கும் பாஜக ஆளும் உத்திரப்பிரதேச (உபி) மாநில அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. ஒரு இந்து மதகுருவும், தீவிர இந்து மேலாதிக்கவாதியும் மற்றும் அரசியல் ரவுடியுமான யோகி ஆதித்யநாத் தலைமையில் உபி இல் இது நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் அங்கே நடக்கும் அனைத்து விவசாயிகள் தர்ணாக்களையும் (அமர்ந்து போராடும் போராட்டங்களை) வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டுவர மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதற்கு முன்பே, புதன்கிழமை இரவு, டெல்லி-சஹரன்பூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பதுத் இல், டிசம்பர் 19 நாளிலிருந்து தங்கியிருந்த ஒரு விவசாயிகள் குழுவொன்று தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்களை காவல்துறையினர் மிக கொடூரமாகத் தாக்கியுள்ளதுடன் மேலும் அவர்கள் பராமரித்த வந்த முகாமையும் அழித்துள்ளனர்.

வியாழக்கிழமை அன்று காசிபூரில் உள்ள டெல்லி-உபி எல்லையில் மிகப் பெரியளவிலான போராட்டக் களத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றுவதற்கு காவல்துறை முயற்சியினை மேற்கொண்டது. பாதுகாப்பு படைகளின் ஒரு மிகப்பெரியளவிலான அணிதிரட்டலுடனும் மற்றும் நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கும் குற்றவியல் சட்ட பிரிவு 144ன் கீழ் ஒரு உத்தரவுடனும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை அவர்களுடைய களத்திலிருந்து வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். விவசாயிகளுக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகங்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது இதன் விளைவாக ஒரு பதட்டமான நிலை ஏற்பட்டது.

மிருகத்தனத்திற்கு பெயர்பெற்ற இந்திய பாதுகாப்பு படையினர் மேலதிக வலுவான நிலைகளை உருவாக்குவதற்கும் மற்றும் மிகவும் முக்கியமாக ஒரு முழுமையான தாக்குதலை நடத்துவதற்கு மோடி அரசாங்கத்திடமிருந்து ஒரு நேரடி உத்தரவுக்காகவும் காத்திருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய நடவடிக்கை வெடிக்கும் திறன்கொண்ட அரசியல் விளைவுகளுடன் ஒரு இரத்தக் களரி மோதலுக்கு வழிவகுப்பதாக இருக்கும்.

ஊடக அறிக்கைகளின்படி, பாஜக அரசாங்கத்தின் வெளியேற்ற உத்தரவை மீறும்படி பாரத் கிசான் (இந்திய விவசாயிகள்) யூனியன் தலைவர் ராகேஷ் டிக்காயித் விடுத்த சவால் வைரலாகி பரவி அதற்கு பதிலளிக்கும் விதமாக விவசாயிகள் நேற்று காசிபூர் முகாமில் அணிதிரண்டனர். “எங்களுக்கு எதிராக ஒரு சதி நடக்கிறது. காவல்துறையினர் எங்களை நோக்கி துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டாலும் கூட நான் சரணடையப் போவதில்லை” என்று டிக்காயித் பிரகடனம் செய்தார்.

செவ்வாய்க்கிழமையன்று டிராக்டர் ஊர்வலம் மற்றும் பேரணி நடந்த சமயத்தில் வெடித்த வன்முறையில் தொடர்புபட்டிருப்பதாக விவசாய போராட்டத்தில் ஈடுபட்ட 37 தலைவர்களை அடையாளம் கண்டு டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கைகளை (First Information Reports -FIR) (இதன்மூலம் குற்றவியல் விசாரணைகள் நடக்கவிருக்கின்றன) வழங்கியிருக்கின்றன. அதில் டிக்காயித், அரசியல் விஞ்ஞானி மற்றும் முன்னால் ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி ஆர்வலர் மேதா பட்கர், பாரத் கிஷான் சங்கத்தின் எட்டு தலைவர்கள் மற்றும் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்புக் குழுவான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா வின் பிரதிநிதிகள் மற்றும் பிற கிஷான் சபைகள் (விவசாய சங்கங்கள்) போன்றவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

நகரின் மையப்பகுதியிலிருந்து தொலைவில் காவல்துறை குறிப்பிட்ட பாதைகளை அவர்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்பது உட்பட குடியரசு தின ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை விதித்திருந்த எண்ணற்ற விதிமுறைகளை மீறுவதற்கு “கலகக்காரர்கள் / கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களுடைய தலைவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்கள்” என்று முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டிருக்கிறது. கலவரம், குற்றவியல் சதி மற்றும் கொலை முயற்சி உட்பட எண்ணற்ற குற்றங்களுக்கு வழிவகுத்துள்ளனர் என்று அந்த முதல் தகவல் அறிக்கைகளில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த கலவரத்தில் கலந்துகொண்டவர்களை கண்டுபிடிப்பதற்கு முக அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் மற்றும் சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகள் போன்றவற்றை தன்னுடைய படையினர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா கூறியிருக்கிறார். “வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாரையும் விடமுடியாது மேலும் விவசாயத் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் ஷா வின் கட்டுப்பாட்டின் கீழ், டெல்லி காவல்துறையினர் மட்டுமல்ல, அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் அதன் இந்து வலது கூட்டாளிகள் ஆகியோர் அதன் அணிகளில் மிகுதியாக இருக்கின்றனர். கடந்த குளிர்காலத்தின்போது அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பெருந்திரளான போராட்டங்களில் டெல்லி காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள் மேலும் 2020 பிப்ரவரியின் பிற்பகுதியில் வடகிழக்கு டெல்லியைத் தூண்டிய மூன்று நாட்கள் முஸ்லிம் விரோத வன்முறையின் போது ஓரமாக நின்றனர் மற்றும் சில இடங்களில் அவர்கள் தாக்குதலில் பங்கெடுத்தனர்.

நேற்றைய வன்முறைக்கு டெல்லி காவல்துறை வசதிகளை செய்துகொடுத்துள்ளனர், ஹரியானா மற்றும் டெல்லி தேசிய தலைகர் பிராந்தியத்திற்கும் இடையில் உள்ள சிங்குவில் விவசாயிகளின் போராட்ட முகாமில் பாஜக திடீர் தாக்குதலை நடத்த தூண்டிவிட்டுள்ளது.

சிங்கு பகுதிக்கு தண்ணீர் லாரிகளும் மற்றும் பத்திரிகையாளர்களும் செல்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், பாஜக ஆதரவு குண்டர்கள் வந்தபோது கதையாக வேறாக இருந்தது. அவர்கள் கற்களையும் தடிகளையும் வைத்திருந்தார்கள், காவல்துறைக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள் மேலும் தேசிய கொடியை “அவமதித்த” விவசாயிகளை வெளியேறுமாறு கோரினார்கள். காவல்துறையினர் அவர்கள் உள்ளே வருவதற்கும் மேலும் விவசாயிகள் மீது தாக்குதல் தொடுக்கவும் அனுமதித்தனர் பின்னர் அந்த குண்டர்களை பாதுகாக்க லத்தியால் அடித்தும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தலையிட்டார்கள்.

“அவர்கள் உள்ளூர் வாசிகள் இல்லை” என்று 21 வயது நிரம்பிய விவசாயி ஹர்கிரத் மான் பெனிவால் ட்ரிப்யூன் ஊடகத்திற்கு கூறியுள்ளார். “அவர்கள் கற்களையும், பெற்றோல் குண்டுகளையும் எங்கள் மீது எறிந்தார்கள். எங்களுடைய வண்டிகளையும் எரிப்பதற்கும் அவர்கள் முயற்சித்தார்கள். நாங்கள் இங்கே அவர்களை எதிர்ப்பதற்கு வந்திருக்கிறோம். நாங்கள் போகப் போவதில்லை”

செவ்வாய்க்கிழைமையன்று நடந்ததைப் போன்று, ஹரியானா அரசாங்கம் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் தொலைபேசி, இணையதள மற்றும் குறுஞ்செய்தி சேவைகளையும் துண்டித்தது.

கடந்த செப்டம்பரில் அவசரமாக கொண்டுவந்த மூன்று பெருநிறுவன சார்பு வேளாண் “சீர்திருத்த” சட்டங்களுக்கு அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கும் மற்றும் போராடும் விவசாயிகளை இழிவுபடுத்துவதற்கும் வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இந்தியாவின் பாராளுமன்ற வரவு செலவு பட்டியல் தொடரின் (budget session) கூட்டத்தொடரை பாஜக அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. இது அதன் அடக்குமுறைக்கான செயல் ஆரம்பமாகிவிட்டது என்பதை கோடிட்டுக்காட்டுகிறது.

வேளாண் சட்டங்கள் “புதிய வசதிகளையும் மற்றும் விவசாயிகளுக்கு உரிமைகளையும்” வழங்குகின்றன மேலும் விவசாயிகள் மத்தியில் பரவலான ஆதரவையும் பெற்றுள்ளன என்று இந்திய ஜனாதிபதியும் மற்றும் பாஜக வின் கூட்டாளியுமான ராம் நாத் கோவிந் பாராளுமன்றத்தின் கூட்டத் தொடருக்கு அளித்த உரையில் பெருமைபட பேசியுள்ளார். “கடந்த சில நாட்களாக தேசிய கொடியும் மற்றும் குடியரசு தினம் போன்ற ஒரு புனித நாளும் அவமதிக்கப்பட்டிருந்தன” என்று செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பொய்க் குறிப்பு முள்ளில் தைத்தாக இருந்தது. இது பாசாங்குதனத்துடனும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் குற்றத்தையும் விவசாயிகளுக்கு அறிவுரையாக கூறுவதாக தொடர்ந்திருந்தது. “இந்த அரசியலமைப்பு”, என்று கூறி அதற்குள் நுழைந்த கோவிந் அது “பேச்சு சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றன” “அதே அரசியலமைப்புதான் சட்டங்களையும் விதிகளையும் கடுமையாக பின்பற்றவேண்டும் என்று கற்றுத்தருகிறது” என்று பேசினார்.

உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி உட்பட மற்ற பாஜக தலைவர்களும் இன்னும் அதிகமாக அச்சுறுத்துகின்றனர், விவசாயிகள் “தேசத் துரோகம்” செய்வதாக கண்டனம் செய்கின்றனர்.

ஆரம்பத்திலிருந்தே அதை நசுக்கும் நோக்கத்துடன் பெருமளவிலான கைதுகள், ஹரியான முழுவதிலும் மற்றும் உபி யின் பல பகுதிகளிலும் சட்டம் 144 தடையுத்தரவை பயன்படுத்தியும் மேலும் பரந்தளவில் செல்போன் மற்றும் இணையதள சேவைகளை நிறுத்தியும் ஒரு பெரும் படையுடன் வந்து நவம்பர் 26 விவசாயிகளின் டெல்லி சலோ (டெல்லிக்கு செல்வோம்) கிளர்ச்சியின் தொடக்க நாளன்று அரசாங்கம் பதிலளித்திருந்தது. இதனால் வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் தலைநகருக்குள் வருவதை தடுக்க முடிந்தது. ஆனால் டெல்லியின் எல்லைகளில் அவர்கள் முகாமிட்டும், அரசு பாதுகாப்பு இரும்பு தடுப்பையும் மீறியிருக்கும் பத்தாயிரக்கணக்கான விவசாயிகளுக்காக இந்தியா முழுவதிலும் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களிடமிருந்து ஆதரவு பெருகி வந்தபோது அது அரசியல் நெருக்கடியில் தள்ளப்பட்டிருக்கின்றது.

அடுத்த இரண்டு மாதங்களில், அவர்களைப் பிரிப்பதற்கும், முடிவற்ற பேச்சுவார்த்தை சுற்றுகள் மூலம் அவர்களை களைப்படைய செய்வதற்காக மூன்று வேளாண் சட்டங்களில் சிற்சில திருத்தங்களை செய்வதாக கூறி பாஜக அரசாங்கம் சூழ்ச்சியினை மேற்கொண்டிருக்கிறது. அதே நேரம், சீனா-பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்றும் சீக்கிய பிரிவினைவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்றும் மேலும் போக்குவரத்துக்குத் தடையாக இருக்கிறது என்றும் போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது என்றும் உச்சநீதிமன்றத்தால் அறிவிக்க கோரி பொதுநல வழக்கு மனுக்களை அளிப்பதன் மூலம் கிளர்ச்சியை நசுக்குதற்கு அரசு வன்முறைக்கான ஒரு அடித்தளத்தை அமைக்க முயன்றுள்ளது.

தற்போது அரசாங்கத்தின் மூன்று வேளாண் வணிகச் சட்டங்களுக்கு எதிரான வெகுஜன போராட்டத்தை வன்முறை மற்றும் சட்டவிரோதமானது என்று சித்தரிப்பதன் மூலம் அரசு அடக்குமுறைக்கான அவர்களுடைய நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவதற்கு மோடியும், அமித் ஷா வும் செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவத்தை பற்றிப் பிடித்துள்ளனர்.

இதில் பெருநிறுவன ஊடகங்கள் முக்கியமான உடந்தையாக இருந்துள்ளன. குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியை வன்முறை மற்றும் அராஜகத்துக்குள் மூழ்கடித்தனர் என்று கொந்தளிக்கின்ற கூற்றுக்களை அவை ஊக்கப்படுத்தின.

செவ்வாய்க்கிழமை என்ன நடந்தது என்பது பற்றி இன்னும் அதிகமாக தெரியவில்லை, ஆனால் என்ன வன்முறை நடந்ததோ அது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் அவர்களுடைய திட்டமிடப்பட்ட விதிமுறைகள்; விவசாயிகள் மீது அவர்கள் நடத்திய வன்முறை; மற்றும் அவர்களின் வெளிப்படையான பாதுகாப்பு குறைபாடுகள் என காவல்துறையினரின் நடவடிக்கைகள் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அதிகாரிகளின் பதட்டத்தை எடுத்துக்காட்டும் ஒரு செயலில், இன்றைய வன்முறை மீது மூத்த ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எட்டு பேருக்கு எதிராக அவர்களுடைய செய்திகளுக்காக முதல் தகவல் அறிக்கைகளை (FIR) உபி மற்றும் மத்திய பிரதேச பாஜக அரசாங்கங்கள் வழங்கியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு விவசாயி தனது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து இறந்துவிட்டார் ஏனேனில் அவர் காவல்துறையினரால் சுடப்பட்டிருந்தார் என்று விவசாயிகள் கூறியதை வெளியிட்டது உட்பட அடங்கியிருக்கிறது.

37 விவசாயத் தலைவர்களுக்கு எதிரான அரசாங்கத்தின்- காவல்துறையின் குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக ஜோடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டன - இது இந்து மேலாதிக்கவாத பாஜக வின் இழிவான ஒரு வகை சட்ட -அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

காவல்துறை மற்றும் அரசாங்கம், விவசாயத் தலைவர்களை வன்முறையுடன் தொடர்புபடுத்துவது யதார்த்தத்தை தலை கீழாக புரட்டிப்போடுவதாகும். செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் குறித்த காவல்துறையின் அனைத்து வேண்டுகோள்களையும் விவசாயத் தலைவர்கள் பணிந்து ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் பரிந்துரைக்கப்பட்ட பேரணி வழிகளில் தடைகள் போடுவது ள் உட்பட எண்ணற்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்தார்கள் என்பதைக் கண்டனர். வன்முறை வெடித்த உடனேயே அவர்கள் அதனை கண்டனம் செய்தனர்.

மேலும், ஆர்ப்பாட்டம் முழுவதிலும், இது “அரசியல் சாராதது” என்று விவரிக்க அவர்கள் கஷ்டப்பட்டு முயற்சித்தார்கள். மேலும் எடுத்துக்காட்டாக, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குறு விவசாயிகளின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் கோரிக்கைகளை எழுப்புவதன் மூலம் அவர்களின் பரந்த ஆதரவை திரட்டுவதற்கான எந்தவொரு அறைகூவலும் விடுக்கவில்லை. அதன் மூலமாக மோடி அரசாங்கத்தின் அதிகாரத்தையும் மற்றும் வேளாண் சட்டங்கள் அதன் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும் அதன் வர்க்க போர் திட்டத்தையும் சவால் செய்வதற்கு அவர்கள் விரும்பவில்லை என்பதை அவர்கள் இவ்வாறு தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் வருடாந்திர சுதந்திரதின உரையாற்றும் டெல்லியின் செங்கோட்டை மாடிகளின் உச்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு சிறு எண்ணிக்கையானவர்கள் மர்மமான முறையில் தோன்றியதும் மற்றும் அவர்களுடைய ஒரு விவசாய சங்க கொடியையும் அதனுடன் ஒரு சீக்கிய மத பதக்கத்தை உயர்த்திப்பிடித்த சம்பவர்களை “தேச-விரோதம்” என்று கூறி ஆர்ப்பாட்டத்தை நசுக்குவதற்கான அரசாங்க பிரச்சாரத்தின் ஒரு மையக் கூறாக இருக்கிறது. செங்கோட்டையில் ஒரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு விபரங்கள் பொதுவாக இருக்கின்றன என்றும் மேலும் திறப்பால் பூட்டப்பட்ட பூட்டால் அதன் கூரைக்கு செல்லும் வழி தடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் எண்ணற்ற பார்வையாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும் விவசாயச் சங்கங்களின் குறிப்பின்படி, கோட்டைக்குள் நுழைந்த குழுவை வழிநடத்தியவர் பஞ்சாப்பை சேர்ந்த நடிகர் தீப் சித்து மிக சமீபத்தில் பாஜக வுடன் ஒன்றாக அடையாளம் காணப்பட்டவர்.

தலைநகரில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதற்கு முன்னர் சீரற்ற காலநிலையில் இரண்டு மாதங்களாக முகாமிட்டுக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட விவசாயிகளின் கோபம் தெளிவாகத் தெரிந்தாலும், அரசு அடக்குமுறைக்காக பொய்க்காரணத்தை வழங்குவதற்கு காவல்துறைக்குள் உள்ள கூறுகள், அரசாங்கத்தின் உத்தரவுகளின் பேரில் செயல்படுவது, “சட்டம் மற்றும் ஒழுங்குமுறை” யின் சீர்குலைவில் உடந்தையாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.

அச்சுறுத்துகின்ற வகையில், சீக்கிய எதிர்ப்பு வகுப்புவாத உணர்வுக்கு எரியூட்டுவதாக விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தை சட்டபூர்வமற்றதாக்குவதற்கு பாஜக வின் பிரச்சாரத்தின் ஒரு வளர்ச்சியடைந்துவரும் முக்கிய கூறாக இருக்கிறது.

விவசாயிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதாக கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சிபிஐ) போன்ற இரண்டு ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகள் உட்பட, சமீப காலம்வரை இந்திய ஆளும் தட்டுகளின் அரசாங்கத்தின் விரும்பப்பட்ட கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பதினாறு எதிர்கட்சிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவு பட்டியல் பாராளுமன்ற கூட்டத் தொடரையும் மற்றும் ஜனாதிபதியின் உரையையும் புறக்கணித்துள்ளன.

மோடிக்கும் மற்றும் பாஜகவுக்கும் எதிராக வளர்ச்சி அடையும் வெகுஜன எதிர்ப்பை சாதகமாக்கி காங்கிரஸ் கட்சிக்கும் மற்றும் பல்வேறு வலதுசாரி பிராந்தியவாத மற்றும் முதலாளித்துவ கட்சிகளுக்கும் பின்னால் முடிச்சுப்போட சிபிஎம் மற்றும் சிபிஐ இரண்டும் செயல்பட்டு வருகின்றன, அதேசமயம் தொழிலாள வர்க்கத்தை ஓரங்கட்டி மோடி அரசாங்கத்தையும் மற்றும் இந்திய மூலதனத்தையும் மொத்தமாக எதிர்ப்பதற்கான போராட்டத்தில் அதன் பின்னால் கிராமப்புற உழைக்கும் மக்களை அணிதிரட்டும், ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக போராட்டங்களில் தலையிடுவதிலிருந்து தடுக்கின்றன.

Loading