COVID-19 இறப்புக்கள் அதிகரிக்கையில், பிரெஞ்சு பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க NPA அழைப்புவிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) இன் இளைஞர் பிரிவு, பல்கலைக்கழகங்களை உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும் எனக் கோரி NPA இன் Révolution Permanente வலைத் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. "மாணவர்களின் துயரநிலை, அவசரநிலை: பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நமக்கு நிதி தேவை" என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையுடன் NPA ஒருங்கிணைக்கிறது. அது கூறுகிறது:

"பல மாதங்களுக்கு பல்கலைக்கழகங்கள் மூடப்படுவது முடிவுக்கு வர வேண்டும். மாணவர்களின் நீடித்த தனிமை, Zoom வழி தொடர்பு தவிர சமூக உறவுகள் இல்லாதது நம்மில் பெரும்பாலோரை துன்பத்தில் ஆழ்த்துகிறது. கோவிட் காட்டியிருப்பது என்னவென்றால், பல்கலைக்கழக நிதி பற்றாக்குறை என்பது ஒரு கட்டமைப்பு சிக்கலாகும், இதனால் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு பாரிய பணியாளர்களை பணியமர்த்தல், புதிய உள்கட்டமைப்பு தேவைக்கோரிக்கை, இலவச முககவசங்கள் மற்றும் ஒவ்வொரு நிறுவனத்திலும் பரிசோதனை மையங்களில் தொடங்கி ஒரு ஒத்திசைவான சுகாதார திட்டத்தை நிறுவுதல் இவ்வாறு தொடர்புபட்டதாயிருக்கிறது. பள்ளிகளைத் திறக்க ஜன்னல்களைத் திறப்பது போதுமானது என்று நம்பும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்காக நாங்கள் காத்திருக்கக்கூடாது, பாரிஸ் பிராந்தியத்தில் பல மேல்நிலைப் பள்ளிகள் இலையுதிர்காலத்தில் செய்ததைப் போல, ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஒத்திசைவான சுகாதார நெறிமுறைகளை நாங்கள் கூட்டாக உருவாக்க வேண்டும்.”

NPA இன் பரிந்துரைகளை அமல்படுத்துவது, கோவிட் -19 நோய்த்தொற்றுக்களின் எழுச்சியும் மற்றும் இறப்புக்கள் மாணவர்கள் மற்றும் பரந்த மக்களிடையே அதிகரிப்பதாகத்தான் இருக்கும். பிரான்சில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு பேரழிவாககும் இருந்திருக்கிறது: இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் மக்ரோன் திறந்த நிலையில் வைத்திருந்த பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் மூன்றில் இரண்டு பங்கு கொத்தணிகளாக இருந்தன. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பின்பற்றப்பட்ட இந்த "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையின் விளைவாக, ஒவ்வொரு நாளும் 200,000 ஐரோப்பியர்களுக்கு COVID-19 வைரஸ் தொற்றிக்கொள்ளுகிறது, மேலும் ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் 100,000 பேர்கள் இறக்கின்றனர். பிரான்சில் நேற்று, 22,858 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 513 பேர் இறந்துள்ளனர்.

Students leave their school in Cambo les Bains, southwest France, Thursday November 5, 2020 (AP Photo / Bob Edme)

மிகவும் தொற்றக்கூடிய B.1.1.7 (அல்லது “UK”) வைரஸ் வகையின் விரைவான பரவலால் குறிப்பாக மாணவர்கள் உட்பட ஆபத்து அதிகரிக்கிறது. பிரான்சின் பொது சுகாதார சேவை (Santé Publique France) கூற்றுப்படி, 30 வயதுக்கு உட்பட்ட 47 பேர் கோவிட்-19 காரணமாக இறந்துவிட்டனர், மேலும் அந்த வயது வரம்பில் மேலும் 35 பேர் பிரான்சில் செயற்கை உயிர்வாயு கருவியில் வைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்திலுள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடமிருந்து கிடைத்த சான்றுகள், புதிய வகை முன்னர் ஆதிக்கம் செலுத்திய வைரஸ் மரபுவழி திரிபுகளை விட இளைஞர்களிடையே மிகவும் ஆபத்தானது என்று கூறுகின்றனர்.

பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகளால் பல்கலைக்கழகங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தேவையான வளங்களை இழந்துவிட்டன, ஆனால் அதிகமான பணியாளர்களும் நிதியுதவியும் பல்கலைக்கழகங்களை பாதுகாப்பாக மாற்றாது. விஞ்ஞான ஆய்வுகள் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சமூக இடைவெளி கூட, கல்வி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க பரவலை தவிர்க்க முடியாதது என்பதைக் காட்டுகிறது. பல்கலைக்கழகங்கள் மிகச் சிறந்த “கூடுதல் நடவடிக்கைகளுடன்” மீண்டும் திறக்கப்பட்டாலும் கூட, அவைகள் தொற்றுநோயை கணிசமாக துரிதப்படுத்தும்.

COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவது என்பது, மேலும் சில முகக்கவசங்ளை கிடைக்க செய்ய வேண்டுமென்பதான NPA இன் கூற்று, கல்வி அமைச்சர் ஜோன்-மிஷேல் புளோங்கேரின் பொய்களை எதிரொலிக்கிறது. புளோங்கேர் மீண்டும் மீண்டும் விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளை மறுத்து, பெரும் தொற்று வெடிப்புகளை புறக்கணித்து, பள்ளிகள் பாதுகாப்பானவை என்று பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூறுகிறார். இதன் விளைவாக ஏற்கனவே பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. கடந்த வசந்த காலத்தில், பிரான்சிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் பொதுமுடக்கம் செய்யப்பட்ட பின்னர் பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் மீண்டும் திறக்கப்பட்டது, இது வைரஸின் பரந்த எழுச்சிக்கு வழிவகுத்தது.

மக்ரோன் அரசாங்கத்தின் "மந்தை நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கைக்கு அதன் ஆதரவை நியாயப்படுத்த NPA இன் முயற்சி, மாணவர்களின் மனநல ஆரோக்கியம் குறைந்த தன்மை மற்றும் அவநம்பிக்கையை மேற்கோள்காட்டி ஜனவரி 18 அன்று, “புதிய மாணவர் தற்கொலை” அரசாங்கத்தின் கொள்கை குற்றமானது!” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. முதல் காலாண்டு தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், இரண்டு மாணவிகளின் துன்பகரமான தற்கொலைகளை சுரண்டி, NPA இன் கொலைகார “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை நியாயப்படுத்த இந்த கட்டுரை முயற்சித்தது:

"அவர்கள் இருவரும் மருத்துவம் படித்து வந்தனர், அவர்களின் இறப்புகள் முதல் காலாண்டு பரீட்சைக் காலத்தின் அதே நேரத்தில் வந்தன, இது குறிப்பாக இந்த துறையில் உயரடுக்குக்கு உரியதாக இருக்கிறது. உண்மையில், சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்த தேர்ந்தெடுப்புத்திறன், குறிப்பாக பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய வேலையின்மை ஆகியவற்றின் காரணமாக, மாணவர்களின் மன உளைச்சலை மோசமாக்குகிறது, விடுமுறை முடிந்தபின் ஜனவரி மாதத்தில் தேர்வுகள் காரணமாக மாணவர் துயரத்தின் வெளிப்பாட்டிலிருந்து ஒருவர் பார்க்கலாம்.”

"மாணவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது மிக முக்கியமானது" என்று NPA முடிவு செய்துள்ளது. மக்ரோன் அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியை விதித்துள்ளதால், "அரசாங்கத்தின் கைகளில் இரத்தம் உள்ளது" என்று NPA வலியுறுத்தியது.

அரசாங்கத்தின் கைகளில் இரத்தம் உள்ளது, ஆனால் அது கடைப்பிடித்த சில சமூக இடைவெளி நடவடிக்கைகளால் அல்ல. ஏனென்றால், மக்ரோன் வசந்தகால பொதுமுடக்கத்தை முன்கூட்டியே முடித்து, சரியான தொற்று தடமறிதல் தடத்தைத் தயாரிக்காமல், பின்னர் ஒரு ஐரோப்பிய ஒன்றிய “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையைப் பின்பற்றினார். இது பிரான்சில் 75,000 க்கும், ஐரோப்பாவில் 700,000 க்கும் அதிகமான இறப்புகளுக்கு வழிவகுத்தது. விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் வலுவான சமூக இடைவெளியை ஏற்றுக்கொள்வதன் மூலம் பெருந்தொற்று நோய் பரவலை தடுக்க முயன்றாலும், மக்ரோனின் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையானது NPA இன் ஆதரவை சார்ந்திருக்கக்கூடும் - அது அதனுடைய கைகளில் இரத்தத்தையும் கொண்டிருக்கிறது.

மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் தற்கொலைகளைத் தடுப்பதற்கும் முதன்மையாக பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இது COVID-19 நோயால் தொற்று ஏற்பட்டு இறந்துவிடுவோம் என்ற மாணவர்களின் அச்சத்தை நீக்கும், மேலும் பெருந்தொற்று நோயால் ஏற்படும் தற்போதைய பொருளாதார மந்தநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம், பட்டதாரிகளுக்கு அதிக வேலைகளை உருவாக்க வேண்டும். எவ்வாறாயினும், இதற்கு முதலில் மக்ரோன் மற்றும் NPA இருதரப்பும் பரிந்துரைத்த பெருந்தொற்று நோயை மட்டுமே பரப்பி நீடிக்கிற கொலைகார “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

பெருந்தொற்றுநோயைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்திற்கு பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் அரசியல் அணிதிரட்டல் அவசியப்படுகிறது. பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்கும் விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்படும் பொதுமுடக்க கொள்கைக்காக போராடுவதற்கும் சுயாதீனமான சாமானிய குழுக்கள் அவசியமாகும். எவ்வாறாயினும், அத்தகைய குழுக்கள் திறம்பட செயற்பட, அவை மக்ரோன் போன்ற முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு மட்டுமல்ல, NPA மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போன்ற "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை ஆதரிக்கும் குட்டி முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கும் எதிராக ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு முழு வாழ்க்கைக்கான ஊதியத்தைப் பெறுவதோடு, பொதுமுடக்கத்திற்கு பிந்தைய வைரஸின் மீள்எழுச்சியைத் தடுத்து நிறுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப, பாதுகாப்பான பொதுமுடக்கத்திற்கான நிதியைப் பெறுவதற்கான ஆதாரங்களைப் பெறுவதற்கு நிதியப் பிரபுத்துவத்திடமிருந்து பறிமுதல் செய்வதற்கு ஒரு புரட்சிகர மற்றும் சோசலிச போராட்டம் தேவைப்படுகிறது. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் பிணையெடுப்புக்களால் வழங்கப்பட்ட பொது நிதியில் டிரில்லியன் கணக்கான யூரோக்களை திரட்டிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பா முழுவதும் 700,000 மக்கள் இறந்ததோடு, பல மில்லியன்கணக்கான மக்கள் வறுமையில் விழுந்ததால், ஐரோப்பாவின் பில்லியனர்களின் செல்வம் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.

ஆனால், NPA பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வசதிபடைத்த குட்டி-முதலாளித்துவ அடுக்குகள், உயர்கல்வியாளர்கள் மற்றும் மத்தியதர வர்க்க தொழில் வல்லுனர்கள் இந்த பிணையெடுப்புகளிலிருந்து ஆதாயமடைவதற்கு நின்றுகொண்டனர். மே 2020 இல் மக்ரோனும் ஜேர்மனிய சான்சலர் அங்கேலா மேர்க்கெலும் வடிவமைத்த ஐரோப்பிய ஒன்றிய பிணை எடுப்புக்களை "வெளிப்படையாக வரவேற்க" CGT, CFDT, FO, CFTC மற்றும் UNSA தொழிற்சங்க கூட்டமைப்புகள் ஒரு அறிக்கையை வெளியிட்டன. பெருநிறுவன நிர்வாகம் மற்றும் தொழிலாளர் சபை அலுவலகங்களின் (works council offices) கருவூலங்கள் மூலம் பிணையெடுப்பு நிதியில் பில்லியன் கணக்கான யூரோக்கள் அவர்களுக்குக் கிடைத்தன என்பதில் சந்தேகமில்லை.

இது "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைக்கான NPA இன் ஆதரவு மற்றும் மக்ரோனின் பெருந்தொற்று நோய்க் கொள்கைக்கு எதிரான தொழிலாளர்கள் மீதான அதன் மோசமான அலட்சியம் ஆகிய இரண்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உண்மையில், தொழிற்சங்கங்கள் நவம்பரில் ஆசிரியர்களின் திடீர் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தின, அவைகள் மக்ரோனின் கலகப் பிரிவு போலீசாரால் வன்முறை மூலம் தாக்கப்பட்டன.

இந்த பெருந்தொற்று நோய் போக்கு, சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste-PES) எச்சரிக்கைகளால் உறுதிசெய்யப்பட்ட, விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்படும் பொதுமுடக்கம் மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகளையும் கூடவே NPA இன் குட்டி-முதலாளித்துவ பிற்போக்குதனத்தையும் ஊர்ஜிதப்படுத்தியுதுள்ளது. NPA மற்றும் அதனுடைய "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிராக, பெருந்தொற்று நோயின் கொடுங்கனவை முடிவுக்கு கொண்டுவர போராடுவதற்கு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு PES அழைப்பு விடுக்கிறது.

Loading