ஐரோப்பா 750,000 COVID-19 இறப்புகளைக் கடந்து செல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 க்கு 750,000 இறப்புக்களுடன் கொடூரமான நிலையை ஐரோப்பா புதன்கிழமையன்று கடந்து சென்றது.

நேற்று 5,091 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், Worldometer உலக அளவீடு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ரஷ்யா மற்றும் உக்ரேன் உள்ளிட்ட கண்டத்தின் இறப்பு எண்ணிக்கை 751,432 ஐ எட்டியுள்ளது. கண்டத்தில் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட ஒரு சீன சுற்றுலாப் பயணி இறந்து ஒரு வருடத்திற்கு பின்னர் இந்த சோகமான எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. அவர் பிப்ரவரி 15 அன்று ஒரு பிரெஞ்சு மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் ராயல் பாப்வொர்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா வைரஸ் கொண்ட ஒரு நோயாளியை மருத்துவ ஊழியர்கள் கவனித்துக்கொள்ளுகிறார்கள், மே 5, 2020 [Credit: Neil Hall Pool via AP]

ஒவ்வொரு கண்டத்திலும் தினமும் ஆயிரக்கணக்கான இறப்புகள் பதிவாகின்றன, உலகளாவிய இறப்புகள் புதன்கிழமை மாலை 2,362,515 ஐ எட்டியுள்ளன.

Nature பத்திரிகையின் அதிகப்படியான இறப்புகள் பற்றிய ஆய்வின்படி, அரசாங்கங்களால் அளவிடப்பட்ட COVID-19 இறப்புகள் உண்மையான எண்ணிக்கையை விட 20 சதவீதம் குறைவாக உள்ளன, அதாவது ஐரோப்பா உண்மையில் ஒரு மில்லியன் இறப்புகளுக்கு நெருக்கமாக உள்ளது.

கடந்த ஆண்டில் 31 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுகள் ஐரோப்பாவின் மக்களை நாசப்படுத்தியது. இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களில் 370,000 க்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன, இவற்றில் பல அசல் திரிபு வகைகளாக இருந்தன.

முதலாளித்துவ வர்க்கம் சமூகத்துடன் போரில் ஈடுபட்டுள்ளது. கடந்த வாரம், மதிப்புமிக்க பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழ், உலக அரசாங்கங்கள் மீது சமூகக் கொலைகளை நடத்தியதாக குற்றம் சாட்டியது.

ஐரோப்பாவிலும் உலகெங்கிலும், போர்க் காலத்திற்கு வெளியே, மரணங்களின் அளவு முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு உள்ளது. முதலாம் உலகப் போரில் ஒரு நாளைக்கு சராசரியாக 6,060 பேர் இறந்தார்கள். பெருந்தொற்று நோய் தொடங்கிய ஒரு வருடத்திற்குப் பின்னர், COVID-19 செவ்வாய்கிழமையிலிருந்து உலகளவில் 13,000 பேர் தினசரி இறக்கின்றனர். 48 மணி நேரத்தில், செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை, ஐரோப்பாவில் 10,300 பேர் இறந்துள்ளனர்.

முதலாம் உலகப் போரின்போது ஐரோப்பாவில் சொம் (Somme) மற்றும் வேர்டோன் (Verdun) சமர்கள் வரலாற்றில் மிக பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தன. பல மாதங்களாக இயந்திரத் துப்பாக்கிகளாலும் செல் குண்டுகளாலும் படையினர்கள் துடைத்தழிக்கப்பட்டு, 600,000 பேர் கொல்லப்பட்டனர். இன்று இன்னும் கூடுதலான உயிர்கள் கண்டம் முழுவதும் ஒரு கொடிய வைரசத்திற்கு பலியாகிவிட்டனர், பெருந்தொற்று நோய் குமுறி வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில், தொழிலாளர்கள் இன்னும் பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கும் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்தக் கொள்கையானது அரசாங்கங்களின் அரசியல் கட்சிகள் எதுவாக இருந்தாலும் அவைகளால் மேற்பார்வையிடப்படுகிறது. தன்னலக்குழுக்கள் மற்றும் பெருநிறுவனங்களால் கட்டளையிடப்பட்ட சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையில் அனைவருக்கும் ஒரே நிகழ்ச்சி நிரல்தான் உள்ளது. மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் குறித்து அனைவரும் அலட்சியமாக இருக்கிறார்கள், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் இந்த பாதிப்புகளுக்காகும்.

"சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையானது, தீவிரமான கட்டுப்பாடுகள் இல்லாமல் வைரஸ் மக்களை தாக்கியழிக்க விடப்பட்டமையானது, ஒரு மரணக் கொள்கை என்று சரியாகக் கூறப்பட வேண்டும். பெருந்தொற்று நோயின் ஆரம்பத்தில், பிரிட்டன் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் முன்னாள் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ், "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையானது பொருளாதாரத்தைப் பாதுகாக்கிறது, மற்றும் இதன் அர்த்தம் என்னவென்றால் சில ஓய்வூதியதாரர்கள் இறந்துவிடுவது, மிக மோசம்" என்று இது மிகவும் கொடூரமாக சுருக்கமாகக் கூறப்பட்டது.

இந்த பெருந்தொற்று நோய் பிரிட்டனில் 120,000 உயிர்களைக் பறித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த திரிபு வகை வைரஸ் இன்னும் கொடிய மற்றும் தொற்றுநோய்களாக மாறியுள்ள நிலைமைகளின் கீழ், மக்களில் ஒரு பகுதி மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், ஆளும் உயரடுக்கு, குறைந்தளவு பொதுமுடக்கங்கள் கூட விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

போர்த்துக்கல்லில் இந்த பயங்கரமான விளைவுகளை மிகவும் தெளிவாகக் காணலாம், இது பல கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர், சமீபத்தில் உலகின் மிக மோசமான இறப்பு விகிதத்தை சந்தித்தது, ஏனெனில் மிகவும் தொற்றக்கூடிய பிரிட்டிஷ் வகையானது மக்கள் தொகை முழுவதும் வேகமாக பரவியது.

· பிரிட்டனில், "கடைசி பொதுமுடக்கம்" என்று கூறப்படக் கூடியதை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு "திட்டம்" பிப்ரவரி 22 தொடங்குகிறது, ஏற்கனவே ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி அரசாங்கம் ஏற்கனவே அந்த திகதியில் இருந்து பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளது.

· பிரான்சில் பள்ளிகள் அதன் பகுதியான பொதுமுடக்கங்களின் கீழ் திறந்தே உள்ளன. கடந்த வாரம் பிரெஞ்சு பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு ஓரளவுக்கு மீண்டும் திறக்கத் தொடங்கின. சமீபத்திய தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்ட ஒரு கருத்துரையில் கூறினார், “இந்த விஞ்ஞானிகளால் நான் சோர்வாக இருக்கிறேன், அவர்கள் திரிபுகள் குறித்த எனது கேள்விகளுக்கு ஒரு புதிய பொதுமுடக்கம்… மட்டுமே என பதிலளிக்கின்றனர்: நாங்கள் ஒரு புதிய பொதுமுடக்கத்தை தவிர்ப்பதற்கு எல்லாவற்றையும் செய்ய வேண்டும்”.

· ஜேர்மனியின் பொதுமுடக்கம் பிப்ரவரி 14 அன்று மீளாய்வுக்கு வரவிருக்கிறது. செவ்வாயன்று ஜேர்மன் முதலாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரெய்னர் டுல்கர் என்பவர் Redaktionsnetzwerk Deutschland செய்தி நிலையத்திடம் கூறினார், "முதலாளிகளின் பார்வையில், ஒரு பரந்த பெரும்பான்மை ஆதரவு கொண்ட தெளிவான மற்றும் ஆட்சி அடிப்படையிலான தொடக்க நிலையை இறுதியாக அடையாளம் காணாமலே, கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தொடர்வது என்பது புரிந்து கொள்ள முடியாததாக இருக்கும்."

புதனன்று ஆளும் வர்க்கத்தின் செய்தியானது பிரிட்டனின் டோரி-சார்பு டெய்லி டெலிகிராப் இல் ஒலிக்கப்பட்டது. செய்தித்தாளின் உதவி ஆசிரியர் பிலிப் ஜோன்ஸ்டன் ஒரு தலையங்க கட்டுரையில் அறிவித்தார், "இப்போது நமது ஒரே யதார்த்தமான மூலோபாயம் காய்ச்சல் போல வைரசுக்கும் சிகிச்சையளிப்பது தான் என்பதில் அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும்”.

அவர் மேலும் கூறுகையில், “யதார்த்தங்கள் குறித்து அரசாங்கம் மக்களுடன் முன்னணியில் இருக்க வேண்டும். நாங்கள் கோவிட்டுடன் பல தசாப்தங்களாக வாழ்வோம், மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதனால் பீடிக்கப்படுவார்கள், ஆயிரக்கணக்கானோர் இறப்பார்கள். கடந்தகால தொற்றுநோய்களிலும் இதுதான் நடந்துள்ளது, இப்போது நாம் தணிக்கவும், சிகிச்சையளிக்கவும், தடுப்பூசி போடவும் ஒரு சிறந்த நிலையில் இருக்கும்போது, இதுதான் நடக்கும்.”

இலாபங்கள்தான் ஆளும் வர்க்கத்திற்கு முக்கியம் என்று உலகளாவிய வலியுறுத்தலின் ஒரு சுருக்கத்தில், ஜோன்ஸ்டன் வைரஸ் பற்றி எழுதினார், "அதை நாம் அகற்ற முடியாது. சரி, நம்மால் முடியும், ஆனால் செலவு பிரம்மாண்டமானதாக இருக்கும்."

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சோசலிச வேலைத்திட்டத்துடன் சுயாதீனமாக தலையிடுவதன் மூலம் மட்டும்தான் பாரிய படுகொலைகளை எதிர்க்க முடியும்.

ஒவ்வொரு பணியிடத்திலும் சாமானியக் குழுக்கள் நிறுவப்பட வேண்டும், மேலும் வேலைக்குத் திரும்புவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும் வரை அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்தியும் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வைரஸ் பரவலின் காவிகளாக விளங்கும் பள்ளிகள் மற்றும் பிற கல்வி அமைப்புகள் மூடப்பட வேண்டும், தொலைதூரக் கல்விக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.

பெருந்தொற்று நோயால் இலாப சம்பாதித்தவர்களின் சொத்துக்களையும் செல்வத்தையும் —முக்கியமாக நாடுகடந்த பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய செல்வந்த தட்டுக்களிடமிருந்து கைப்பற்றுவதன் மூலம் ஊதியங்களும் வேலைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

சர்வதேச அளவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் பாதுகாப்பற்ற நிலைமைகளில் பணிபுரிவதை எதிர்க்கின்றனர். மாணவர்களின் வேலைநிறுத்தங்கள் ஜேர்மனியில் வெடித்துள்ளதோடு ஆசிரியர்கள் மற்றும் ஏனைய கல்வி ஊழியர்களின் ஆதரவையும் வென்றுள்ளன. ஆனால் அமெரிக்காவில் சிகாகோவில் ஆசிரியர்கள் சமீபத்தில் நடத்திய போராட்டம் உட்பட ஒவ்வொரு அனுபவமும் காட்டுவது போல், தொழிலாள வர்க்கம் அதன் தலைவிதியை அழுகிய முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்க முடியாது, அவை அனைத்து அரசியல் பிரிவு அரசாங்கங்களுடன் இணைந்து வேலை செய்து உயிர்க் கொலைகளை மீண்டும் வேலை/பள்ளிக் கொள்கைகளுக்கு மீண்டும் கொண்டு செல்லுகிறது.

இந்தப் போராட்டத்திற்கு அரசியல் வேலைத்திட்டமும் தலைமையும் தேவைப்படுகிறது. ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச சமத்துவக் கட்சிகள் இந்த பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ளனர். ஜனவரி 31 அன்று உலக சோசலிச வலைத் தளத்தின் "முதலாளித்துவம் எதிர் சோசலிசம்: பெருந்தொற்று நோயும் உலகளாவிய வர்க்கப் போராட்டமும்" என்ற முன்னோக்கில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது தொழிலாள வர்க்கம் இன்னும் பெருந்திரளான மக்கள் இறப்பைத் தடுக்கக்கூடியதும் தலையிடக்கூடியதுமான ஒரு வேலைத்திட்டத்தை கோடிட்டுக்காட்டியது.

"பெருந்தொற்று நோய்க்கான விடையிறுப்பு உயிர்களைக் காப்பாற்றுவதை விட நிதிச் சந்தைகளை பாதுகாப்பதை முன்னுரிமைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தும் முதலாளித்துவ வேலைத்திட்டத்தை எதிர்ப்பதற்கு, "பெருந்தொற்று நோய்க்கான விடையிறுப்பு நிதியச் சந்தைகளைப் பாதுகாப்பதை விட உயிர்களைக் காப்பாற்றுவதை முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக தொழிலாளர்கள் போராட வேண்டும்" என்று WSWS முன்னோக்கு வலியுறுத்தியது.

Loading