பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் அடிபணியா பிரான்ஸ் கட்சியும் மக்ரோன் அரசாங்கத்தின் அதிவலது "பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மக்ரோன் அரசாங்கத்தின் "குடியரசுக் கொள்கைகளுக்கு மதிப்பை வலுப்படுத்துவதற்கான சட்டவரைவு" பெப்ருவரி 1 முதல் தேசிய சட்டமன்றத்தின் முன் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடுகின்ற சாக்குப்போக்குகளின் கீழ், அமைப்பு மற்றும் மத சுதந்திரங்களின் சுதந்திரத்தை இச்சட்டம் கடுமையாக கட்டுப்படுத்துகிறது. சட்டம் பற்றிய விவாதம் பெருகிய முறையில் பாசிசச் சூழலில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமைகளின் கீழ், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி ஆகியவை மக்ரோனின் அதிவலது சட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளன.

பெப்ருவரி 4 வியாழனன்று, "பிரிவினைவாதத்தில்" குற்றத்தை உருவாக்குதல் என்ற மசோதாவின் 4வது பிரிவின் மீது சட்டமன்றம் வாக்களித்தது. ஒரு பொதுச் சேவையை நிர்வகிக்கும் விதிகளை "முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விலக்கு" பெறுவதை நோக்கமாகக் கொண்ட அச்சுறுத்தல்கள், வன்முறை அல்லது "மிரட்டல்" ஆகியவற்றின் பயன்பாட்டை சட்டப் பிரிவு குற்றமாக்குகிறது. தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனையும், 75,000 யூரோ அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த வரையறை, அரச மற்றும் போலீஸ் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும்.

French President Emmanuel Macron (Image Credit: AP Photo/Francois Mori)

அக்டோபர் 16-ம் திகதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சாமுவேல் பட்டி பயங்கரவாதியின் கொலைக்குப் பின்னர் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. தனது வகுப்பில் முகம்மதுவின் கேலிச் சித்திரத்தை பட்டி காட்டினார். புதிய சட்டத்திலுள்ள குற்றம் மிகவும் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது, புதிய சட்டத்தில், பள்ளி நேரத்தில் பன்றி இறைச்சி சாப்பிடக்கூடாது என வலியுறுத்தும் மாணவர்களுக்கு கூட இந்த சட்டம் பொருந்தும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தால் முஸ்லீம்-விரோத சூழ்நிலைக்கு தீவிரப்படுத்த வழிவகுக்கிறது. மதச்சார்பின்மைக் கொள்கையின் மீது இது ஒரு ஆழமான தாக்குதலாகும்.

4வது பிரிவிற்கு எதிராக ஒரு வாக்கு கூட இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. PCF இன் பாராளுமன்றக் குழு இந்த சட்டப் பிரிவிற்கு வாக்களித்தது, LFI இன் பாராளுமன்ற குழு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கட்சிகள் இந்த பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில் இருந்து மக்ரோன் அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அதிகரித்தளவில் பாசிசவாத சட்டமியற்றும் செயற்திட்டத்தில் உடந்தையாக உள்ளன.

ஜனவரி 5 திகதியன்று, பொது அமைப்புக்கள் தொடர்பான 1901 சட்டத்தில் "குடியரசு உறுதிப்பாடு ஒப்பந்தத்தை" உருவாக்கும் சட்டப் பிரிவு 6 மீது சட்டமன்றம் வாக்களித்தது. இது மக்ரோனின் மசோதாவின் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். குடியுரிமைக்கு பொறுப்பான மக்ரோனின் அமைச்சர் பிரதிநிதியான மார்லீன் சியாப்பாவின் இந்த "குடியரசின் எதிரிகளுக்கு ஒரு யூரோ கூட பொதுப் பணம் கொடுக்கக்கூடாது" என்பதை இந்த ஒப்பந்தம் உத்தரவாதம் செய்யும் எனவே, மானியங்களானது பிரெஞ்சு பணம், பயங்கரவாதத்தை வளர்க்கும் தளமான அமைப்புகளுக்கு நிதியளிக்க கூடாது" என்று விசித்திரமான வார்த்தைகளைக் கூறினார்.

இந்த அறிக்கைகள் எந்த உறுதியான உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அமைப்புக்கள் ஏற்கனவே பிரெஞ்சு சட்டத்தை மதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த சட்டத்தின் இந்த பிரிவின் நோக்கம், அமைப்புக்களுக்கு மானியங்களை செலுத்துவதற்கு பெரும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது, அமைப்பின் நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத அளவுகோல்களை சேர்ப்பதாகும்.

நிதி மானியங்களை நிறுத்தி வைக்கும் பொருட்டு, அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் மத மற்றும் அரசியல் கருத்துக்களை நேரடியாக இந்த சட்டம் இலக்காகக் கொள்ளும். "குடியரசு உறுதி" என்பது அரசாங்க ஆணையின்படி அமைக்கப்பட வேண்டும், ஒவ்வொரு புதிய பொலிஸ்-அரசு சட்டங்களின் மூலம் இறுக்கப்படலாம். அரசாங்க மானியங்களைப் பெறும் அமைப்புக்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை பின்பற்றவும் ஒத்துழைக்கவும் நிர்ப்பந்திக்கப்படும்.

இருப்பினும், அமைப்புக்களை நிர்வகிக்கும் சட்ட முன்னேற்பாடுகள் ஏற்கனவே உள்ளன. 1901 ஆம் ஆண்டின் சட்டத்தின் நூற்றாண்டு விழாவில் 2001 ஆம் ஆண்டில் அரசுக்கும் அமைப்புக்களுக்கும் இடையிலான பரஸ்பர கடமைகளின் சாசனம் வரையப்பட்டது, பின்னர் உள்ளூர் அதிகாரங்களைச் சேர்க்க 2014 இல் விரிவாக்கப்பட்டது. மானியங்களைப் பெறுவதற்கு அமைப்புக்களால் மதிக்கப்பட வேண்டிய பொதுவான கட்டமைப்பை இது வரையறுக்கிறது. அப்போதிருந்து, இஸ்லாமிய "பிரிவினைவாதம்" மற்றும் அமைப்புக்களின் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை அதன் அடக்குமுறை சட்டத்தை நியாயப்படுத்த மக்ரோன் அரசாங்கத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

அரச சபைக்கு அனுப்பப்படும் சட்டத்தின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: "அமைப்புக்கள், அவர்கள் அனுபவிக்கும் பரந்த சுதந்திரங்களின் காரணமாக, பிரிவினைவாதத்தை செயற்படுத்துபவர்களால், குறிப்பாக சமூக, கலாச்சார மற்றும் பிறதுறைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் மிகவும் தீவிரமாக பயன்படுத்தப்படுகின்றன." அரசாங்கம் பல அமைப்புக்களுக்கு நிதி உதவி மறுக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், இது முஸ்லீம் "தீவிரவாதம்" என்று கூறப்படுவதை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை; அடக்கு முறைகள் அனைத்து வகையான அமைப்புக்களையும் பாதிக்கும்.

சட்டத்தின் மற்றய முன்னேற்பாடுகள் இன்னும் அதிக தொலைவான தாக்குதல்களைக் கொண்டிருக்கின்றன. சட்டப் பிரிவு 8 ஒரு அமைப்பைக் கலைப்பதற்கு கணிசமான அளவு காரணங்களைக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக, ஒரு அமைப்பு அதன் உறுப்பினர்கள் எந்த நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்க அனுமதிக்கிறது. இந்த பிரிவு விவாதிக்கப்பட்டு பிப்ரவரி 8 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பாசிச ஆட்சிக்குத் தகுதியான நடவடிக்கையாகும். 1901 சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் உட்பட அமைப்புக்கள் பெருமளவில் கலைக்கப்பட அனுமதிக்கும்.

இந்த பெருகிய முறையிலான பாசிசப் பின்னணியில், ஸ்தாபக கட்சிகள் ஒன்றையொன்று விஞ்சுவதற்கு முயல்கின்றன. இந்த சூழ்நிலையானது மரின் லு பென்னின் அதிவலது தேசிய பேரணிக்கு இன்னும் மேலும் தாக்குதல் செய்யும் ஒரு எதிர்-மசோதாவை தாக்கல் செய்ய உதவியது.

குடியரசுக் கட்சியின் (LR) உறுப்பினர்களின் அறிக்கைகள் பெரும்பாலும் லு பென் கட்சியை விட இன்னும் அதிகமாகச் செல்லுகிறது. இந்த மசோதா குறித்து குடியரசுக் கட்சி பேச்சாளர்களில் ஒருவரான எரிக் சியோட்டி, விவாதங்களின் போது, "அவர் [முஸ்லீம்] முக்காடு ஒரு தீங்கற்ற ஆடை அல்ல, அது இஸ்லாமியவாதத்தின் பதாகை மற்றும் அதன் சித்தாந்தத்தின் பதாகையாகும்" என்றார்.

எந்தவொரு எதேச்சாதிகார ஆட்சியையும் போலவே, மக்ரோன் அமைப்புக்களின் நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் உருவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நெருக்கமான பொலிஸ் கட்டுப்பாட்டை ஸ்தாபித்து வருகிறார். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளை ஒழித்தது, 1905-ல் மதச்சார்பின்மை சட்டம் இருந்தது போல, அமைப்புக்களை உருவாக்கி நிர்வகிக்கும் சுதந்திரத்திற்கு ஆதரவாக, ஜனநாயக வெற்றியாக இருந்தது. இந்த முன்னேற்றங்கள் தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் மற்றும் அதன் சோசலிச பிரதிநிதிகளின் நடவடிக்கைகளின் விளைவாகும். அவர்கள் ட்ரேஃபுஸ் (Dreyfus) விவகாரத்தில் யூத-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக போரிட்டனர்.

பாசிசத்தை நோக்கிய பெருகிய திருப்பம், முதலாளித்துவத்தின் ஆழ்ந்த உலக நெருக்கடியிலிருந்து எழுகிறது. ஒரு வெகுஜன அளவில் இறப்பு, கொரோனா வைரஸ் பெருந்தொற்று மற்றும் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் அரசாங்கங்களால் பின்பற்றப்படும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையால் புதிய இயல்பானதாகிவிட்டது. சமூக சமத்துவமின்மையின் மகத்தான மட்டங்கள், உலக நிதிய முறையின் பெருகிய முறையில் ஒட்டுண்ணித் தன்மை, தசாப்தங்களாக நவ-காலனித்துவ போர்களின் முடிவற்ற போராட்டங்கள் மற்றும் "பெரும் சக்திகளின் மோதல்களுக்கான" தயாரிப்புகள் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் இயைந்ததாக இல்லை. உலகெங்கிலும் ஆளும் வர்க்கம் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புகிறது மற்றும் நவ-பாசிச சித்தாந்தங்களை ஊக்குவித்து வருகிறது.

மக்ரோன் நிதி தன்னலக்குழுவை வளப்படுத்துவதற்கான தனது கொள்கையைத் தொடரத் தேவையான பொலிஸ் அரசைக் கட்டமைக்க விரும்புகிறார், இது மக்கள் எதிர்ப்பை நசுக்க வேண்டும். பொலிஸ்-அரச சட்டங்களை குவிப்பது 2022 ஆம் ஆண்டில் அவரது ஐந்தாண்டு காலத்தின் முடிவிற்கு அவரது முன்னுரிமையாகிவிட்டது.

இந்த பின்னணியில், LFI மற்றும் PCF உட்பட பிரதான அரசியல் கட்சிகள், திரைக்குப் பின்னால் மக்ரோன் அரசாங்கத்துடன் ஒரு அரசியல் உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளன. அதி-வலதுகளை பலப்படுத்துவதற்கான வழிமுறையாக, "குடியரசுவாத" பதாகையின் கீழ், அப்பட்டமான நவ-பாசிச சக்திகளுடன் ஒரு முன்னணியை நியாயப்படுத்துவதற்காக இஸ்லாமிய பிரிவினைவாதத்தின் வெருளி மனிதன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய எதிர்ப்பு அறிவுஜீவிகள் வட்டங்களுடன் இணைந்து ஆளும் வர்க்கத்தில் இந்த பிரச்சார நடவடிக்கை மிக கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. குடியரசை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளுவதன் மூலம், ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை சட்டபூர்வமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் ஆளும் உயரடுக்கிற்கு முறையீடுகள் மூலம் முன்னெடுக்கப்பட முடியாது, மாறாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலின் மூலம் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது இஸ்லாமிய "பிரிவினைவாதம்" பற்றி ஆளும் வர்க்கம் மற்றும் செய்தி ஊடகத்தின் வெட்கங்கெட்ட பொய்களுக்கு எதிராக ஒரு இரக்கமற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது மற்றும் 1901 மற்றும் 1905 சட்டங்களில் உள்ளடங்கியுள்ள ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் வரலாற்று மற்றும் சமகால பிரச்சினைகளை நினைவூட்டுகிறது. தொழிலாள வர்க்கம் அதன் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் மற்றும் சமூக போராட்டங்களின் பாகமாக சட்டத்தை முழுமையாகவும் உடனடியாகவும் திரும்பப் பெற வேண்டும் என்று கோருமாறு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.

Loading