"அமெரிக்கா திரும்பி வருகிறது" என்று பைடென் பிரகடனம் செய்யும் அதேவேளை, ஏகாதிபத்திய மோதல்கள் மூனிச் மாநாட்டில் மேலாதிக்கம் செலுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வெள்ளியன்று வருடாந்திர மூனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு அவரது நீண்ட-எதிர்பார்க்கப்பட்ட "அமெரிக்கா திரும்பி வருகிறது" உரையை வழங்குவதற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு நேரடி வீடியோ ஒளிபரப்பை பயன்படுத்தினார், ரஷ்யா மற்றும் சீனா இரு நாடுகளுடனும் "பெரும் சக்தி" மோதலில் அமெரிக்க உலகளாவிய தலைமையை உறுதிப்படுத்த "ஜனநாயகம்" என்ற தவறான பதாகையை அவர் அசைத்துக்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி ஜோ பைடென் வாஷிங்டனில், வெள்ளி, பிப்ரவரி. 19, 2021, வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஒரு இணையவழி நிகழ்வில் பங்கேற்கிறார். (AP Photo/Patrick Semansky)

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் இன்னமும் கட்டுப்பாடற்ற கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்துவது தேவைப்படுகின்ற நிலையில், வீடியோ அரங்கில் பேசிய பைடென் அவரது சக இணையவழியில் பங்காளர்களான ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோரிடமிருந்து ஒரு ஆரவாரமற்ற வரவேற்பை பெற்றார். இருவருமே ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் சுயாதீனமான நலன்களை வலியுறுத்தினார்கள்.

இணையவழி நேரடி ஒளிபரப்பு அரங்கிற்கு வழங்கப்பட்ட தலைப்பாக "பொறுமையின்மைக்கு அப்பால்" என்று இருந்தது. இந்த அரங்கிற்கு முன்னதாக எழுதப்பட்ட ஒரு அபிப்பிராயக் கருத்துக் கட்டுரையில், அமெரிக்காவிற்கான முன்னாள் ஜேர்மன் தூதர் மற்றும் மூனிச் பாதுகாப்பு மாநாட்டின் தலைவர் வொல்ப்காங் இஷிங்கர், ஐரோப்பாவை "ஒரு ‘நெருப்பு வளையத்தால்’ சூழப்பட்ட அதாவது இது கிழக்கில், உக்ரேனிய மற்றும் காக்கேசிய பிராந்தியத்தில், மற்றும் தெற்கு, கிழக்கு மத்தியதரைக்கடல் சுற்றிய பகுதியில் மற்றும் நமது ஆபிரிக்க அண்டைய பகுதியுடன் சேர்த்து இரத்தக்களரி மோதல்கள்” என்று விவரித்தார்.

அவர் தொடர்ந்து கூறினார்: "பெரும் வல்லரசுகளுக்கு இடையான போட்டி மீண்டும் வந்துள்ளது. ஆட்சி அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு மற்றும் அதன் நிறுவன கட்டமைப்பு ஆகியவை பலவீனமடைந்துள்ளன. நாம் காலநிலை மாற்றம் மற்றும் ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் மனித உரிமைகள் மீது முடக்கும் விளைவுகளை ஒரு உலகளாவிய பெருந்தொற்றால் பாரிய தாக்கத்தை எதிர்கொண்டிருக்கிறோம்."

பைடெனின் கருத்துக்கள் தெளிவாக்கியது போல், "அமெரிக்கா திரும்பி வருகிறது"- ஒரு சொற்றொடர் அவரது 20 நிமிட உரையில் மூன்று முறை அவர் அதை மீண்டும் கூறினார்- ஒரு அச்சுறுத்தலை விட ஒரு வாக்குறுதி குறைவாக இருந்தது. டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பின்தொடர்ந்ததை விட இன்னும் கூடுதலான ஆக்கிரோஷமான மற்றும் இராணுவவாத கொள்கை அதன் பின்னால் உள்ளது. அவருடைய உரை, ஐரோப்பிய சக்திகள் வாஷிங்டனின் போர் வண்டியுடன் நிபந்தனையில்லாமல் தங்களைக் கட்டிவிட வேண்டும் என்ற மெல்லிய மாறுவேடமான கோரிக்கையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

"ஜனநாயகம்" மற்றும் "தன்முனைப்பாட்சிக்கு" இடையிலான பூகோளப் போராட்டம் என்று கூறப்படுவதன் மூலம் உலகம் ஒரு "நிலைமாற்றப் புள்ளியை" எதிர்கொள்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனவரி 6 அன்று அமெரிக்க நாடாளுமன்றம் மீதான பாசிச ஆட்சி கவிழ்ப்பு முயற்சி பற்றி பைடென் ஒரு சுருக்கமான, நழுவிச் செல்லும் குறிப்பைக் குறிப்பிட்டார், அதில் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மட்டும் இல்லாமல், அமெரிக்க அரசியலமைப்பு ஒழுங்கையும் தூக்கி எறியவும், தன்னை ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரியாக நிறுவவும் முயன்றார்.

ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் ஒன்றுபடுத்தும் பசைதான் "பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகள்" என்று பிரகடனம் செய்த பைடென், "இந்த தொலைநோக்குப் பார்வையில் நம்மில் எவரும் முழுமையாக வெற்றி பெறவில்லை" என்பதை ஒப்புக்கொண்டார். அவர் தொடர்ந்தார்: "நாங்கள் தொடர்ந்து அதை நோக்கி வேலை செய்கிறோம். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட பல இடங்களில், ஜனநாயக முன்னேற்றம் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது."

ஜனவரி 6 நிகழ்வுகள் வாஷிங்டனை ஜனநாயகம் பற்றி யாருக்கும் விரிவுரையாற்றுவதற்கு எந்த நிலையிலும் இல்லை என்று விட்டுவிட்டு, மேற்கத்தைய உலகின் "பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகளுக்கு" ஒரு இருத்தலியல் சவாலாக சித்தரித்துக் காட்டிய சீனா மற்றும் ரஷ்யா இரு நாடுகளும் அவற்றின் அரசாங்கங்களும் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதியை தடுக்கவில்லை.

மேற்கில் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கான பழி முற்றிலும் ரஷ்ய தலையீடுதான் என்று பைடென் கூறினார். அமெரிக்காவும் ஐரோப்பாவும் தீவிர-வலது மற்றும் பாசிச இயக்கங்களின் எழுச்சியைக் கண்டநிலையில், அதேபோல் எதேச்சதிகார மற்றும் பொலிஸ் அரச நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது, முன்னோடியில்லாத சமூக சமத்துவமின்மையின் மட்டங்களுக்கு மத்தியில் மற்றும் COVID-19 பெருந்தொற்று நோய்க்கு விடையிறுக்கும் வகையில் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகளின் படுகொலைகளை சுமத்தியதால்தான் இது ஏற்பட்டது.

"கிரெம்ளின் நமது ஜனநாயகங்களை தாக்கி, நமது ஆட்சி முறையை கீழறுக்க முயற்சிக்கும் ஊழலுக்கு ஆயுதமளிக்கிறது," என்று பைடென் கூறினார், மேலும் " ஐரோப்பிய திட்டத்தையும் நமது நேட்டோ கூட்டணியையும் பலவீனப்படுத்த புட்டின் முயல்கிறார். அவர் அட்லாண்டிக் கடந்த ஒற்றுமையையும் நமது உறுதிப்பாட்டையும் கீழறுக்க விரும்புகிறார்."

ரஷ்யா "அட்லாண்டிக் கடந்த ஐக்கியத்தை" குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வாஷிங்டனின் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்த்திட்டம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, இது பால்டிக் கடலின் கீழ் ரஷ்ய எரிவாயுவை நேரடியாக ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு குழாய் மூலம் கொண்டு செல்லும்.

மூனிச் அரங்கிற்கு முன்னதாக, அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் அந்தோனி பிளிங்கன், வாஷிங்டன் குழாய்த்திட்டம் நிறைவடைவதை நிறுத்த உறுதிபூண்டுள்ளது என்று அறிவித்தார், "ஐரோப்பா முழுவதும் அரசியல் அழுத்தத்தை செலுத்துவதற்கு புட்டின் ஆட்சி ரஷ்யாவின் எரிசக்தி வளங்களை மேலும் ஆயுதமயமாக்குவதற்கு" உதவும் என்று கூறினார். பைடென் நிர்வாகம் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளைத் தயாரித்து வருகிறது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிடரி பெஸ்கோவ் வாஷிங்டனின் அச்சுறுத்தல்களுக்கு குறிப்பாக விடையிறுத்தார், "நம்முடைய அமெரிக்க பங்காளிகள் நோர்ட் ஸ்ட்ரீம் 2 இல் குறைந்த ஆர்வம் மற்றும் டெக்சாஸின் வெப்பம் மற்றும் எரிசக்தி அளிப்பில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்."

"சீனாவுடன் ஒரு நீண்ட கால மூலோபாய போட்டிக்கு ஒன்றாகத் தயாரிப்பு" செய்வதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஐரோப்பா தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பைடென் மேலும் கோருகிறார். "சர்வதேச பொருளாதார அமைப்புமுறையின் அடித்தளத்தை கீழறுத்து, சீன அரசாங்கத்தின் பொருளாதார துஷ்பிரயோகங்கள் மற்றும் பலவந்தங்களுக்கு எதிராக" நேட்டோ சக்திகள் கூட்டாக முன்தள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

பைடெனின் கீழ், அமெரிக்கா சீனாவுக்கு எதிரான அதன் இராணுவ அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தி வருகிறது. சமீபத்திய வாரங்களில், அது தென் சீனக் கடலில் இரண்டு விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுக்களை நிறுத்தி, தைவான் ஜலசந்தி மற்றும் சீன கட்டுப்பாட்டிலுள்ள பாரசெல் தீவுகளுக்கு அருகில் ஆத்திரமூட்டும் "கடற்பயண சுதந்திர" பயிற்சிகளுக்கு போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் முதலாவது வர்த்தகப் பங்காளியான நிலையில், அமெரிக்காவை சீனா திரும்பவும் முன்னிடத்தில் நிறுத்தியுள்ளது, மற்றும் கடந்த ஆண்டு இறுதியில், ஐரோப்பிய ஒன்றியமும் பெய்ஜிங்கும் வாஷிங்டனின் கடுமையான ஆட்சேபனைகள் தொடர்பாக ஒரு பெரிய முதலீட்டு உடன்படிக்கையை செய்து முடித்துள்ளன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் "அமெரிக்கா முதலில்" கொள்கை மற்றும் நேட்டோவை நோக்கிய ட்ரம்பின் முரட்டுத்தனமான பரிமாற்ற அணுகுமுறை பற்றிய ஒரு தெளிவான குறிப்பு ஒன்றில், பைடென் கூறினார், "கடந்த சில ஆண்டுகளாக நமது அட்லாண்டிக் கடந்த உறவு முறை பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் பரிசோதனை செய்து விட்டது என்பதை நான் அறிவேன்," என்று மேலும் சேர்த்துக் கொண்டார், "நம்பகமான தலைமை என்ற நிலையை மீண்டும் பெறுவதற்கு வாஷிங்டன் உறுதியாக உள்ளது."

எவ்வாறெனினும், வாஷிங்டனின் நேட்டோ "பங்காளிகளின்" விடையிறுப்பு, ட்ரம்ப்பின் காரணத்தை விட அட்லாண்டிக் கடந்த கூட்டணியில் ஆழமான பிளவுகளின் ஒரு அறிகுறியாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் ட்ரம்பின் கீழ் இருந்ததைவிட பைடனின் கீழ் வாஷிங்டன் தன்னை அடிபணியச் செய்வதற்கு எந்த விதமான கவலையையும் கொண்டிருக்கவில்லை.

ஜேர்மனியின் சான்சலர் மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் இருவரும் "பன்முகச்சார்பியலிற்கு" தங்கள் ஆதரவை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டனர், இதன் மூலம் அவர்கள் மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கிற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு நிபந்தனையற்ற கூட்டுக்கு தங்கள் எதிர்ப்பை தெளிவாக அர்த்தப்படுத்துகின்றனர்.

ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஆபிரிக்காவில் அதன் பங்கு உட்பட ஜேர்மன் இராணுவத்தின் வெளிநாட்டு தலையீடுகளின் வளர்ந்து வரும் நோக்கத்தை மேற்கோள் காட்டி மேர்க்கெல் எடுத்துரைத்தார்.

ஒரு சுதந்திரமான ஐரோப்பிய பாதுகாப்புக் கொள்கையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், ஆபிரிக்கா மற்றும் சிரியா உட்பட ஐரோப்பாவின் "அண்டை பகுதியில்" அபிவிருத்திகள் "எங்களுக்கு மிகவும் முக்கியமானவை" என்று அறிவித்தார். ஜேர்மனியின் "ஆபிரிக்காவுடனான உறவு" என்பது பெரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் மேலும் கூறினார்.

மக்ரோன் இன்னும் அப்பட்டமாகத்தான் இருந்தார். அவர் ஜனநாயகத்திற்கான தனது சொந்த வெறுப்பை வெளிப்படுத்துவதன் மூலம் தொடங்கினார், மிக முக்கியமான விஷயம் "இணையவழி வெறுப்பை" அடக்க இணையத் தளங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் "பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்பதாகும்" என்று இழிந்த முறையில் கூறினார். இஸ்லாமிய "தீவிரவாதத்தை" எதிர்த்து போராடுவதன் பெயரில் ஜனநாயக உரிமைகளை வெறுமைப்படுத்துகின்ற ஒரு "பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்தை அவரது அரசாங்கம் பின்பற்றுகிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி ஒரு "புதிய பாதுகாப்பு கட்டமைப்பு" மற்றும் "ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை" தேவை என்பதை வலியுறுத்தினார். அவர் மீண்டும் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான "மூலோபாய சுயாட்சியை" ஆதரித்தார், அதேவேளையில் சீனாவுடனான அதன் பெருகிய மோதலுடன் அமெரிக்கா ஒரு "பசிபிக் சக்தியாக" மாற அதிக ஆர்வம் காட்டுகிறது என்று பரிந்துரைத்தார்.

மேர்க்கெலை போலவே, மக்ரோன் ஐரோப்பா "நமது அண்டை நாடுகளோடு" சமாளிக்க வேண்டும் என்றும் அதன் "நிகழ்ச்சி நிரல்" "முன்னுரிமைகளின் மட்டத்தின்" அடிப்படையில் அமெரிக்காவைப் போலவே ஒன்றல்ல என்றும் வலியுறுத்தினார். இது "2013 இல் சிரியாவில் நாம் அனுபவித்த ஒன்று" என்று அவர் குறிப்பிட்டார், அப்போது ஒபாமா நிர்வாகம் மேற்கத்திய ஆதரவு பெற்ற "கிளர்ச்சியாளர்களால்" அரங்கேற்றப்பட்ட ஒரு நச்சு வாயுத் தாக்குதலின் சாக்குப்போக்கின் அடிப்படையில் பாரிசின் ஆதரவுடன் ஒரு ஆட்சி-மாற்றத் தலையீட்டிலிருந்து பின்வாங்கிவிட்டது.

மூன்று நாடுகளின் தலைவர்கள் பிரசன்னமானது, கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் மக்களைக் கொன்ற COVID-19 பெருந்தொற்று நோய்க்கான சர்வதேச விடையிறுப்பை மையமாகக் கொண்ட 7 குழுவின் ஒரு நேரடி இணையவழி கூட்டத்தில் வந்திருக்கிறது. பெரும் சக்திகளின் தலைவர்கள், இந்த வைரசுக்கு எதிராக போராடுவதிலும், மிகவும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் சமத்துவம் பற்றி வாய்திறந்து பேசியபோது, அவர்களில் எவரும் அவர்களுக்கு எத்தனை அளவுகள் கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்று சொல்லவில்லை.

மூனிச் அரங்கில் மக்ரோன் ஆபிரிக்காவில் சுகாதாரப் பராமரிப்பு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் போதுமான அளவு டோசுகளை அனுப்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், ஏனெனில் குறைந்த விலையில் ரஷ்ய மற்றும் சீன தடுப்பூசிகளால் கண்டத்தில் பெருகிய முறையில் அவர்களின் பங்கு உண்டாக்கப்படுகின்றன.

ட்ரம்ப் பின்தொடர்ந்த கொள்கைகளில் இருந்து ஒரு தீவிர விலகல் என்று பெருநிறுவன ஊடகங்களால் காட்டப்பட்டுள்ள சர்வதேச அரசியலில் பைடெனின் முதல் முயற்சி, வாஷிங்டனும் அதன் பெயரளவிலான ஐரோப்பிய கூட்டாளிகளும் வெடிப்புகளை பிளவுபடுத்துவது முன்னெப்போதையும் விட பரந்தவை என்பதைத்தான் நிரூபணம் செய்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் பூகோளப் பொருளாதார மேலாதிக்கத்தை செலுத்திவந்த போதும் உருவாக்கப்பட்ட ஒரு நேட்டோ கூட்டணியின் கட்டமைப்பிற்குள் அவை கட்டுப்படுத்தப்பட முடியாது.

உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கமானது "பெரும் சக்தி மோதலுக்கான" தயாரிப்புகளையும், உலகை மறுகாலனியாதிக்கப்படுத்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் ஒரு புதிய மோதலுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையில் உள்ளது, இது மனிதகுலத்தை ஒரு புதிய உலகப் போர் மற்றும் அணுஆயுத அழிவிற்குள் தள்ள அச்சுறுத்துகிறது. பைடென், மேர்க்கெல் மற்றும் மக்ரோன் இடையிலான கிட்டத்தட்ட விவாதம் உலக மக்கள் எதிர்கொண்டுள்ள மகத்தான ஆபத்துக்கள் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய வெகுஜனப் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவசரத்தையும் வெளிப்படுத்துகிறது.

Loading