மொரோக்கோ அரசாங்கம், பொலிசார் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், மொரோக்கோ கலகப் பொலிசரும் சாதாரண உடையணிந்த பொலிஸாரும் தலைநகர் ரபாத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அமைதியான முறையில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக வன்முறைத் தாக்குதலைத் தொடுத்தனர்.

2016 ல் இருந்து பத்தாயிரக்கணக்கானவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை ஆசிரியர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த ஒப்பந்தங்களின்படி, கல்வியாளர்கள் குறைந்த ஓய்வூதியங்களைக் கொண்டுள்ளனர், குறைந்த பணிப் பாதுகாப்பு மற்றும் நாடு முழுவதிலுமுள்ள மற்றய பகுதிகளிலுள்ள பள்ளிகளில் பதவிகளை பெற முடியாது. 2016 க்கு முன்னர், தேசிய கல்வி அமைச்சின் கீழ் கல்வியாளர்கள் அரசாங்க ஊழியர்களாக அமர்த்தப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் நோக்கம் மொரோக்கோவில் பொதுக் கல்வி முறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதைத்தான் என்று ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம் மொரோக்கோ ரபாத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்

செவ்வாயன்றும் புதனன்றும் ஆயிரக்கணக்கான கல்வியாளர்கள் தலைநகரில் ஒரு எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றக் கட்டிடத்திற்கும் கல்வி அமைச்சரகத்திற்கும் வெளியே அமைதியான முறையில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தி, இந்த ஆர்ப்பாட்டங்கள் பொது சுகாதாரத்திற்கு ஒரு ஆபத்து என்று அரசாங்கம் கூறி, கூட்டத்தை வன்முறையாக கலைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோக்கள், தொழிலாளர்கள் கூட்டத்திற்கு எதிராக கலகப் பிரிவுப் போலீசார் தாக்குதலில் ஈடுபடுவதைக் காட்டியது. மற்றய வீடியோக்களிலும், சாதாரண உடை அணிந்த போலீசார் ஆசிரியர்களை உதைத்துத் தாக்குவதும், தாக்குதல் நடத்துவதையும் காணலாம்.

மொரோக்கோ போலீஸ் ஒரு ஆசிரியரைத் தாக்குகிறது

ஆசிரியர்கள் தெருக்களில் இரத்தம் தோய்ந்து தாக்கப்பட்ட #protect_teachers_in_morcco ஹேஷ்டேக்கின் கீழ் சமூக ஊடகங்களில் படங்கள் பகிரப்பட்டன. ஆசிரியர்கள் விடுதிகளுக்கு திரும்பியதை தொடர்ந்து பொலிசார் அவர்களை கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, ஆசிரியர்கள் விடுதி அறைகளை முன்பதிவு செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளதாக கல்வித் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவுதல் பற்றிய கவலைகள் காரணமாக இந்த எதிர்ப்புக்கு எதிராக இருப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், 2018 முதல் தொடர்ந்து தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இதேபோன்ற எதிர்ப்புக்களை வன்முறையான முறையில் ஒடுக்கியுள்ளது.

மொராக்கோவில் ஒரு ஆசிரியர், இந்த கட்டுரைக்காக ஒரு நிருபரை சந்தித்து, நாட்டிலுள்ள கல்வியாளர்களுக்கான நிலைமைகளை விவரித்தார்.

ஆசிரியர்கள் "ஒப்பந்த ஆசிரியர்கள்" என்பவர்கள் அரசு ஆசிரியர்கள் செய்யும் அதே பணியை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். "இந்த ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 102,000 ஐ எட்டியுள்ளது என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். ... ஒப்பந்த ஆசிரியர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. உண்மையில் வேறு வழியில்லை. ... பல ஆசிரியர்கள் [விதிமுறைகளை] படிக்க போதுமான நேரம் கூட கொடுக்கப்படாமல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, இரண்டு தேர்வுகள் மட்டுமே எங்களுக்கு இருந்தன: ஒப்பந்தங்கள் அல்லது வேலைவாய்ப்பின்மை.

"எங்களுக்கு அதே உரிமைகள் இல்லை. ... உதாரணமாக, ஓய்வு என்பது ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகபூர்வ ஆசிரியர்கள் என்ற வகையில் எங்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். ஒப்பந்த ஆசிரியர்கள், நாங்கள் எவ்வளவு நேரம் பணி செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எங்கள் ஓய்வூதியம் குறைவாக இருக்கும், மாதத்திற்கு 350Û யூரோக்களுக்கு மேலே செல்ல முடியாது மற்றும் அதிகாரிகளுக்கு 1200Û யூரோக்கள் வரை இருக்க முடியும்.

"ஒப்பந்த ஆசிரியர்களாக இருக்கும் எங்களுக்கு அந்த வேலைகளுக்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருந்தாலும் கூட பல்கலைக்கழக ஆசிரியர்களாக ஆக உரிமை இல்லை. மாறாக, மற்றய ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க விண்ணப்பிக்க விரும்பினால், எந்த பிரச்சனையும் இருக்காது."

மேலும் ஒப்பந்த ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்ட பகுதியில் தான் பணி செய்யப்பட வைக்கப்படுகின்றனர். "இதன் விளைவாக, திருமணமான தம்பதிகள் நிறைய உள்ளன, இதில் ஜோடிகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சில நேரங்களில் கடினமான சூழ்நிலைகளில் வாழ்கின்றனர்."

"நீண்டகால நோக்கில், மொரோக்கோ அரசாங்கத்தின் இறுதி இலக்கு, ஆசிரியப் பணியில் பொது வேலைவாய்ப்புகளை ஒழித்து" ஒப்பந்த கற்பித்தல் முறையை கொண்டுவர நோக்கம் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

போலீஸ் தாக்குதலில் ஒரு எதிர்ப்பாளர் காயமடைந்துள்ளார்

மொரோக்கோவில் நடைபெற்ற கல்வி வேலைநிறுத்தங்கள், அண்டை நாடான அல்ஜீரியாவில் வெடித்த பெரும் ஹிராக் எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுடன் இணைந்து, அப்தெலாஜிஸ் புட்டெஃபிலிகாவின் (Abdelaziz Bouteflika) ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் தூண்டப்பட்டன. இந்த எதிர்ப்புக்கள், ஆட்சி அதிகாரத்திலுள்ள புட்டெஃபிலிகாவை அகற்றுவதை நிர்பந்தித்தன.

புதிய எதிர்ப்பு அலையானது அப்பிராந்தியம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு பரந்த இயக்கத்தைத் தூண்டக்கூடும் என்பதால் வன்முறையான போலீஸ் ஒடுக்குமுறையானது மொரோக்கோ ஆளும் வர்க்கத்தின் மாபெரும் அச்சங்களை பிரதிபலிக்கிறது. நாட்டில் ஏற்கனவே வெடிப்புத் தன்மை கொண்ட வறுமை நிலைமைகள் மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவை கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்களால் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ வேலையின்மையானது 2019ல் 9.2 சதவீதத்திலிருந்து ஒரு வருட இடைவெளியில் 11.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாய மற்றும் மீன்பிடி தொழில்களில் பெரும் அளவில் பணிநீக்கங்கள் ஏற்பட்டதன் காரணமாக மொத்த வேலையற்றோர் எண்ணிக்கை 29 சதவீதம் மேலும் உயர்ந்து 1.429 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள் தான். இவர்களில் வேலையின்மையானது 6.2 சதவிகிதம் உயர்ந்து 16 முதல் 24 வயது வரை உள்ளவர்களில் 31.2 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது. 2020ல் மொரோக்கோ பொருளாதாரத்தில் 6.3 சதவீதம் சுருக்கம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

Loading