பாதுகாப்பும் நான்காம் அகிலமும்

சில்வியா அகலோஃபும் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையும்

பகுதி-3

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது மூன்றாவது பகுதி. தமிழில் முதல் பகுதி பிப்ரவரி 17 அன்று பிரசுரமானது, இரண்டாம் பகுதி மார்ச் 7 அன்று பிரசுரமானது.

1940ஆகஸ்டு 20அன்று, மெக்சிகோ நகரின் கோயோகான் புறநகர்ப் பகுதியில், ஸ்ராலினிச முகவரான ரமோன் மெர்காடரால் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார். அந்த மகத்தான புரட்சியாளரை மெர்காடர் அணுக முடிந்ததை சாத்தியமாக்கியது சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் (SWP) ஒரு உறுப்பினரான சில்வியா அகலோஃப் உடன் அவருக்கிருந்த உறவு. படுகொலைக்குப் பிந்தைய காலத்தின் போது, அகலோஃப் தன்னை மெர்காடரின் வஞ்சகத்தில் ஏமாந்த ஒரு அப்பாவியாக காட்டிக் கொண்டார், அதனை SWP ஒருபோதும் சவால் செய்யவில்லை.

இந்த கட்டுரை தொடரானது அகலோஃபின் பாத்திரம் குறித்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முதல் முறைப்படியான விசாரணையை உள்ளடக்கியிருப்பதோடு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணை பணியையும் தொடர்கிறது. இது நான்கு பகுதிகளாக வெளியிடப்படும்.

ஜூன் 13-30, 1940: GPU உடன் சந்திப்புகளுக்காக நியூயோர்க்கில் ஜாக்சன்-மோர்னார்ட்

ஜாக்சன்-மோர்னார்ட் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு உதவிசெய்த பின்னர், அகலோஃப் அவருடன் புரூக்ளின் ஹோட்டலில் தங்கினார். அங்குதான் ஜாக்சன் ஒருவேளை அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் குற்றம் நடந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் வேறு எங்காவது இருந்ததாக காட்ட பயன்படுத்த வேண்டிய சான்றுகளை கட்டமைப்பதில் GPU நடவடிக்கையாளர்கள் உதவினர்.

அகலோஃபும் ஜாக்சன் மோர்னார்ட்டும் Hotel Pierrepont இல் ஜூன் 14 முதல் ஜூன் 30 வரை ஒன்றாக தங்கியிருந்தனர். லியோனிட் ஐட்டிங்கோனும் (Leonid Eitingon) நியூ யோர்க் பயணித்தார். நியூ யோர்க்கில் இருந்த சமயத்தில் ஜாக்சன்–மோர்னார்ட் அவரது தாயார் கரிடாட் டெல் ரியோ (Caridad del Rio) உடனும் GPU இன் கேய்க் ஓவாகிமியான் (Gaik Ovakimian) உடனும் சந்தித்து வந்தார். [94] அதைத் தவிர, சமீபத்தில் மெக்சிகன் துறைமுக நகரான வேரா குரூஸ் (Vera Cruz) இலிருந்து வந்து சேர்ந்திருந்த ரோஸ்மெர்ஸ் (Rosmers) தம்பதிகளுடனும் அகலோஃபும் ஜாக்சன்–மோர்னார்ட்டும் சந்தித்தனர்.

லூரி எழுதினார்:

ஜூன் 14 அன்று, பிராங்க் ஜாக்சனும் (ரமோன் மெர்காடர்) அவரது மனைவியும் (சில்வியா அகலோஃப்) புரூக்ளினில் உள்ள Hotel Pierrepont இல் “F. ஜாக்சன் மற்றும் அவரது மனைவி”யாக தங்களை பதிவு செய்திருந்தனர். வாரத்துக்கு பதினைந்து டாலர்கள் என்ற வாடகையில் அறை எண் 737 இல் தங்கிய அவர்கள் 30 ஆம் தேதி வரை அங்கே தங்கியிருந்தனர். அந்த சமயத்தில் சில நாட்கள் விஜயமாக நியூ யோர்க் வந்திருந்த ரோஸ்மெர்ஸ் உடன் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் பெற்றனர்.” [95]

55 Pierrepont St., Brooklyn (formerly the Pierrepont Hotel) [Photo: Google Maps/WSWS]

POUM இன் முன்னாள் தலைவர் ஜூலியன் கோர்கின் எழுதிய மெக்சிகோவில் ஒரு கொலை (Murder in Mexico) இன் ஒரு அத்தியாயத்தில், ஜாக்சன்-மோர்னார்ட் அவரது கைதுக்குப் பின்னர் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைத்திருந்த “ஒப்புதல் வாக்குமூல” கடிதத்தில் கூறியிருந்தவாறாக, படுகொலையாளியின் சான்றுகளை உருவாக்குவது தான் நியூயோர்க் பயணத்தின் மைய நோக்கமாக இருந்தது என அவர் விளக்கினார்.

இந்த கடிதத்தில், ட்ரொட்ஸ்கியைக் கொல்வதற்கு ஜாக்சன்-மோர்னார்ட்க்கு என்ன நோக்கமிருந்தது என்பதை GPU வகுத்து வைத்திருந்தது. அதாவது அவர், தனது மனைவி சில்வியாவை விட்டுவிட்டு ஷாங்காய்க்கு அவர் செல்ல வேண்டும், அங்கே அவர் தலைமையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஒரு குழு சோவியத் ஒன்றியத்திற்குள் நுழைந்து, சோவியத் தொழிற்துறைக்கு அழிவை ஏற்படுத்தி முன்னணி அரசாங்க அதிகாரிகளைக் கொல்ல வேண்டும் என்று ட்ரொட்ஸ்கி உத்தரவிட்டதை அடுத்து அவர் ட்ரொட்ஸ்கியுடன் மிகவும் கோபமுற்றிருந்த ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியாக இருந்தார். கைது செய்யப்பட்டதன் பின்னர், ஜாக்சன்–மோர்னார்ட் கடிதத்தில் இருந்ததை சரியாக ஒப்புவித்து சொல்லமுடியவில்லை என்பதோடு மெக்சிகோ நகரிலுள்ள Chapultepec காட்டுப்பகுதியில் அவர் இந்த கடிதத்தை எழுதியதாக புரிந்துகொள்ளமுடியா விதத்தில் கூறியது மிகவும் சந்தேகத்தை உண்டாக்கியதை போலிஸ் புலன்விசாரணை அதிகாரி சான்சேஸ் சலஸார் கண்டுபிடித்தார். [96]

எங்கே எவ்வாறு அது உருவாக்கப்பட்டது என்பது உள்ளிட இந்த “ஒப்புதல் வாக்குமூல” கடிதம் GPUக்கு என்ன முக்கியத்துவம் கொண்டிருந்தது என்பதை கோர்கின் பின்வருமாறு விளக்கினார்:

ஆம், இந்த மனித ரோபோவைச் சுற்றிய அத்தனையும் பொய்களாகவும் ஏமாற்றுகளாகவும் இருக்கின்றன. எல்லாவற்றினும் மேல், அவரிடம் கிடைத்த கடிதம். அது நியூயோர்க்கில் எழுதப்பட்டிருந்தது, ஆய்வு செய்யப்பட்டிருந்தது, விவாதிக்கப்பட்டிருந்தது மற்றும் மறுபடி எழுதப்பட்டிருந்தது என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இருக்கவில்லை. இந்த உண்மையை மறைப்பதற்காக, படுகொலையாளி ஒரு அருமையான தட்டச்சு சாதனத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. கடைசி நிமிடத்தில் பென்சிலால் எழுதப்பட்டிருந்த கையெழுத்து மற்றும் தேதியும் தனது வாக்குமூலத்தில் கடிதத்தின் உள்ளடக்கத்தை அவரால் சரியாக நினைவுகூர முடியவில்லை என்ற உண்மையும் இதனை நிரூபிக்கின்றன. நியூ யோர்க்கில் இருந்த GPU முகவர்கள் இந்தக் கடிதத்தை, ஏதோ இது ரஷ்யாவின் வருங்காலமே நம்பியிருந்த உயர்ந்த கொள்கை குறித்த ஒரு ஆவணத்தைப் போலவும், கம்யூனிச அகிலத்தின் அத்தனை தத்துவங்களையும் விடவும் மிகவும் கவனமாக தயாரிக்க வேண்டிய ஒரு ஆவணம் போலவும் கருதி மிகக் கவனமாக உருவாக்கியிருந்தனர். தலைவர்களுக்கு, எல்லோருக்கும் மேல், பிரதான தலைவருக்கு திருப்தியளிக்க வேண்டும் என்ற ஒரேயொரு முக்கிய எண்ணம் மட்டும் தான் அதனை தயாரித்த அத்தனை பேரின் சிந்தனையிலும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

அதனை நன்கு ஒளித்து, வெடிக்கத் தயாராயிருந்த ஒரு வெடிகுண்டைப் போல ஜாக்சன் – மோர்னார்ட் தன்னுடன் வைத்திருந்தார் என்ற அதேநேரத்தில் அதன் ஒரு நகல் மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்டிருந்திருக்கும் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. இயல்பாகவே, தூதரகப் பரிமாற்ற வழியாகத்தான். GPU இன் வழக்கத்திற்கிணங்க, இந்த கடிதமானது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் நோக்கம் கொண்டிருந்தது: ஒருபுறம், ட்ரொட்ஸ்கியை ரஷ்ய மக்களுக்கு ஜென்ம எதிரியாகவும் ஸ்ராலினது படுகொலைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பவராகவும் காட்டுவது, மறுபுறம் தார்மீகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ட்ரொட்ஸ்கிசத்தை அழிப்பது. அது ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஒரு தலைவரற்ற நிலையில் விடப்படும். அதன் உறுப்பினர்களில் ஒருவர் “ஏமாற்றமடைந்து” அவரை கொன்று விட்டிருந்தார். GPUவின் கிட்டத்தட்ட அத்தனை காரியங்களிலுமே இதே வஞ்சகத்தை இதே துரோகத்தைக் காணலாம்: அதற்கு கொன்றால் மட்டும் போதுமானதாய் இருப்பதில்லை; பலியானவரை மரியாதை இழக்கச் செய்ய வேண்டும் பழியைத் தூக்கி வேறொருவர் மீது போடவேண்டும். இந்த மாக்கியவல்லியனிச சூழ்ச்சிவேலையின் அதே அடையாளத்தைக் கொண்டுதான், GPU அதன் தடயச்சுவட்டையும், அதன் சொந்த குறிப்பான முத்திரையைக் காட்டுகிறது. இந்தக் கடிதம் ஒரு பிரம்மாண்டமான முட்டாள்தனமாக இருக்கிறது: முதலில் அது எழுத்து வடிவாக்கப்பட்டிருந்தது என்ற எளிய உண்மையைக் கொண்டு, இரண்டாவதாய், அதனினும் அதிகமாய் அதன் உள்ளடக்கத்தைக் கொண்டு, இது படுகொலையாளியின் சட்டைப்பையில் GPUவின் முகவரி குறிப்பை (visiting card) வைத்துவிட்டுப் போனதைப் போல் இருந்தது. [97]

இந்த பொய்யான புனைவைக் கட்டமைக்க வேண்டியிருந்ததன் முக்கியத்துவம் தான் ஜாக்சன்–மோர்னார்டின் நியூ யோர்க் விஜயம் ஏன் இரண்டு முழு வாரங்கள் நீடிக்க வேண்டியிருந்தது என்பதை விளக்குவதாய் உள்ளது. இந்த பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தை விவாதிக்க, எழுத மற்றும் மறுபடியும் எழுத அதீத இரகசியம் தேவைப்பட்டது என்பது தெளிவு. இந்த அதிமுக்கிய காலகட்டத்தின் போது, ஜாக்சன்-மோர்னார்ட் அகலோஃப் உடன் Hotel Pierrepont இல் அறை எண் 737 இல் தங்கியிருந்தார்.

இந்தப் படுகொலை எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது குறித்து ஜாக்சன்-மோர்னார்ட் அவராக எதனையும் வெளிப்படுத்தி விடுவதில் இருந்து தடுப்பது என்ற இன்னொரு நோக்கத்திற்கும் இந்தக் கடிதம் சேவை செய்தது என்பதை கோர்க்கின் விளக்கினார்:

அவரும் [ஜாக்சன்-மோர்னார்ட்] பின்னர் கொல்லப்பட்டு விடுவார் என்ற நம்பிக்கையில் தான் அந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை. அதன் முகவரும் கொல்லப்பட்டு விடுவார், இது அவரின் “மரண வாக்குமூலமாகவும்” இருக்கும் இவ்வாறாக ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பதைக் குறித்து GPU தனக்குத் தானே முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டது. ட்ரொட்ஸ்கி, மரணக்காயம் பட்டிருந்த நிலையிலும், தன்னைக் கொல்ல வந்தவரைக் கொல்வதில் இருந்து தனது செயலாளர்களை தடுத்து விட்டிருந்தார் என்ற உண்மையானது, ட்ரொட்ஸ்கியின் தரப்பில் உச்சமட்ட புத்திசாலித்தனமான செயலாக இருந்தது, அவரது அரசியல் பகுத்தறிவுத் திறனை தனது இறுதித் தருணம் வரையில் அவர் தக்கவைத்திருந்தார். இதன்மூலம், அத்தனை பொய்களும், அத்தனை துரோகங்களும், அல்லது அவற்றில் கிட்டத்தட்ட அனைத்தும் திரையகற்றிப் பார்க்கப்பட முடிந்திருந்தது. [98]

1940 ஜூன் 30: ஜாக்சன்-மோர்னார்ட் மெக்சிகோ திரும்ப அகலோஃப் உதவுகிறார்

நியூயோர்க்கில் அகலோஃபும் ஜாக்சன்-மோர்னார்ட்ம் தங்கியிருந்ததன் பின்னர், ஜாக்சன்-மோர்னார்ட் இரகசியமாக மெக்சிகோவுக்கு மீண்டும் திரும்புவதற்கு GPU ஏற்பாடு செய்தது. அகலோஃப் உடனிருந்த வேளையில் அவர்களின் ஹோட்டல் அறையில் இருந்தபடி, ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸை தொலைபேசியில் அழைத்து தனது மெக்சிகோ திரும்பும் பயணத்துக்கு ஜாக்சன்-மோர்னார்ட் ஏற்பாடு செய்தார். [99]

பணம் அவருக்கு ஒரு தடையாக இருக்கவில்லை என்றபோதும், அவர் ஒரே விமானத்தில் மெக்சிகோ செல்லவில்லை. மாறாக நியூ ஆர்லியன்ஸுக்கும் அங்கிருந்து சான் அண்டோனியோவுக்கும் பயணச்சீட்டை எடுத்தார். சான் அண்டோனியாவில் இருந்து லாரடோவில் இருக்கும் அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்குச் சென்று, அங்கிருந்து கால்நடையாக கடந்து செல்லவிருந்தார். [100] எல்லையில் மெக்சிகோவின் பக்கம் சென்றுவிட்ட பின்னர், அங்கிருந்து இரயில் பிடித்து மெக்சிகோ பயணிக்கவிருந்தார்.

ஜாக்சன்-மோர்னார்ட் சான் அண்டோனியோ சென்று சேர்ந்தபின், அங்கிருந்து அகலோஃபை அழைத்து அவர் மெக்சிகோ நுழையவிருக்கும் தகவலைத் தெரிவித்தார். [101] நியூ யோர்க்கில் இருந்து கிளம்பி “1940 ஜூன் 30 அன்று ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் வழியாக டெக்சாஸின் லாரெடோவிற்கு அவர் சென்றார். லாரெடோவில், சர்வதேசப் பாலத்தை கால்நடையாகக் கடந்து சென்றதாகவும் மெக்சிகோ நகருக்கு பயணிக்க மெக்சிகோ தேசிய இரயில்வே இரயிலில் சென்றதாகவும் அவர் தெரிவிக்கிறார்” என்பதை FBI ஆவணங்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. [102]

1940 செப்டம்பர் 4 அன்று ஜே.எட்கர் ஹூவருக்கு அனுப்பப்பட்ட அறிக்கை [Photo: FBI]

இன்னொரு தனியான FBI அறிக்கை குறிப்பிட்டது:

லாரெடோவில் சர்வதேசப் பாலத்தைக் கால்நடையாகக் கடந்து சென்று, ஆரம்பத்தில் வாங்கியிருந்த சுற்றுலாப் பயணிக்கான அட்டையைப் பயன்படுத்தி [மெக்சிகோவுக்குள் முதன்முதலாக அவர் நுழைந்தபோது அவர் பெற்றிருந்த சுற்றுலாப்பயணிக்கான அட்டை] மெக்சிகோ நகருக்கு இரயிலில் பயணித்ததன் மூலமாக அவர் மீண்டும் நுழைந்ததைக் குறித்த எந்த பதிவும் இல்லாமலேயே அவரால் மெக்சிகோ நகருக்குத் திரும்ப முடிந்திருந்தது, ஏனென்றால் இரயில் காவலர்கள் சுற்றுலா பயணிகளுக்கான அட்டையைக் காண்பிக்கிற சுற்றுலாப் பயணிகள் குறித்து பதிவு செய்வதில்லை. [103]

இந்த சிக்கலான திட்டம் அவரை மெக்சிகோவிற்குள்ளாக சுவடில்லாமலும் சுங்கச் சோதனை இல்லாமலும் நுழைவதற்கு வழிவகை செய்திருந்தது. ஆகவே, படுகொலை நடைபெறும்போது அவர் மெக்சிகோவில் இருந்ததற்கான உத்தியோகபூர்வமான குடியேற்ற பதிவு ஏதும் அங்கே இருக்காது.

1940 ஜூலை: ஜாக்சன்-மோர்னார்ட் அதிகமான சந்தேகமளிப்பு நடத்தையை வெளிக்காட்டுகிறார்

வொல்கோகோனோவ் கூறுவதன் படி, ஜாக்சன்-மோர்னார்ட்க்கு கொடுக்கப்பட்ட புதிய வேலை சம்பந்தப்பட்டவை “ரமோனின் முதுகுத்தண்டை பயத்தில் சிலிர்க்கச் செய்தன”, “ஜூன் மாதத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு மனச்சோர்வுக்கு” அவர் ஆளானார். [104] நியூ யோர்க் சென்று வந்ததற்குப் பின்னர், ஜாக்சன்-மோர்னார்ட், தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையானது தான், தனது தாயார் காரிதாத் டெல் ரியோ மற்றும் ஐட்டிங்கோன் உள்ளிட சம்பந்தப்பட்ட அனைவருக்குமே வாழ்வா சாவா பிரச்சிரனையாக ஆகியிருந்தது என்பதை உணர்ந்து கொண்டார். வோல்கோகோனோவ் எழுதினார்:

மே மாதத்தில் ஒரு கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது, ஆனால் ஏதோவொரு அதிசயம் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியின் தலைவரைக் காப்பாற்றியிருந்தது. இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நிகழ அங்கே அனுமதிக்கப்படாது என ஐட்டிங்கோன் அறிந்திருந்தார். மெக்சிகன் வில்லாவிற்குள் தனக்கு அரணமைத்துக் கொண்டு வாழ்ந்துவந்த மனிதரின் உயிர் மட்டுமல்ல, ஐடிங்கோனின் உயிரும் அவரது குடும்பத்தாரின் உயிரும் கூட பணயத்தில் இருந்தது. ட்ரொட்ஸ்கியின் வீட்டிற்குள் தனது நபரை ஊடுருவச் செய்வதற்கான வழியை அவர் கண்டறிந்தாக வேண்டியிருந்தது... [105]

ஜாக்சன்-மோர்னார்டின் புதிய வேலையானது அவரை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியிருந்தது என்பதை மெக்சிகோவின் தேசிய பொது ஆவணக் காப்பகத்தில் இப்போது கிடைக்கத்தக்கதாய் இருக்கின்ற ஆவணங்கள் தெளிவாக்குகின்றன.

ஜாக்சன்-மோர்னார்ட் மெக்சிகோ நகருக்குள் எந்த தேதியில் நுழைந்தார் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. தலைநகரில் அவரது புதிய ஹோட்டல் அறையில் ஜூலை 5 வரை அவர் வரவில்லை. புய்க்வென்டோஸ் (Puigventós) எழுதினார், “ஜாக் பின்னர் தெரிவித்ததன் படி, அவர், Puebla அருகில் ஒரு நகரத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு ஓய்வெடுக்க தங்கியிருந்தார்.” [106]

புய்க்வென்டோஸ் விளக்கினார்:

மெக்சிகோ நகர போலிசாருக்குக் கிடைத்த தகவல்களின் படி, மெக்சிகோ திரும்பிய பின்னர் ரமோன் மெர்காடர் அவர் முன்பு சில்வியாவுடன் தங்கியிருந்த ஹாம்பேர்க் ஹோட்டலிலோ, அல்லது ஐட்டிங்கோன் மற்றும் தனது தாயுடன் அவர் முன்பு பலமுறை சந்தித்து வந்திருந்த ஷெர்லி கோர்ட்ஸ் குடியிருப்புகளிலோ தங்கவில்லை. அவர் தனது உடைமைகளை முதன்முதலில் விட்டுசென்ற மரியா கிறிஸ்டினா என்ற மற்றொரு ஹோட்டலில் தங்கினார், ஜூலை 5 முதல் 14, 16, 18 மற்றும் 9 [ஆகஸ்டு] வரையில் அவர் அங்கு தான் தங்கியிருந்தார். [107]

மெக்சிகோ போலிசால் நடத்தப்பட்ட படுகொலைக்குப் பிந்தைய புலன்விசாரணை ஜாக்சன்-மோர்னார்ட் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டார் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. ஜூலை 15 மற்றும் 17 இரவுகளில் அவர் தனது ஹோட்டல் அறைக்கு வரவில்லை, ஜாக்சன்-மோர்னார்ட் வெளியில் யாரிடமும் பேச மாட்டார் என்று மரியா கிறிஸ்டினா ஹோட்டல் சிப்பந்திகள் விளக்கினர். போலிஸ் அறிக்கை ஒன்று தெரிவித்தது, “எந்த கடிதங்களையோ, தொலைபேசி அழைப்புகளையோ, அல்லது சந்திப்புகளையோ ஏற்க மாட்டார். பகலில் தூங்குவதையும் இரவில் வெளியில் செல்வதையும் வழக்கமாய் கொண்டிருந்தார். அன்றாடம் காலை 4 முதல் 5 மணி வரையில்தான் அறைக்குத் திரும்புவார். [108]

ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்டு ஆரம்பத்தின் போதான ஜாக்சன்-மோர்னார்டின் நடவடிக்கைகள் குறித்து அகலோஃப் கவலையடைந்திருந்தார் என்பதை அச்சமயத்திலான அவரின் கடிதங்கள் காட்டுகின்றன. GPUவினால் அவர்களின் முகவர் குறித்த அல்லது அவர் தன்னுடன் வைத்திருந்த ஒப்புதல் வாக்குமூலம் குறித்த ஒரு திருப்திகரமான விபரத்தை பெற முடியவில்லை. புய்க்வென்டோஸ் எழுதினார், “[நியூ யோர்க்கை விட்டு கிளம்பிய பின்னர்] அடுத்த மூன்று வாரங்களில், அவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காததையிட்டு சில்வியா கவலையடைந்தார்.” [109]

1940 ஜூலை-ஆகஸ்டு ஆரம்பம் வரை: ட்ரொட்ஸ்கி இல்ல வளாகத்தில் சந்தேகங்கள் எழுகின்றன

நியூ யோர்க்கில் இருந்து திரும்பிய பின்னர் ஜாக்சன்–மோர்னார்டின் விசித்திரமான நடவடிக்கைகள் ட்ரொட்ஸ்கியின் இல்லத்தில் இருந்தவர்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியது. அவரது புதிய வேலை குறித்து டொச்சர் (Deutscher) எழுதினார்:

கெடுத்தேதி நெருங்க நெருங்க இந்த பெரும் பாசாங்குகாரான் (இவர் சிறையில் இருந்த இருபதாண்டு காலத்தின் போது இவரது உண்மையான அடையாளத்தையும் தொடர்புகளையும் கண்டறிவதற்கு புலன்விசாரணையாளர்கள், நீதிபதிகள், மருத்துவர்கள், மற்றும் உளவியல்நிபுணர்கள் செய்த எந்த முயற்சியும் முழுப்பலனளிக்கவில்லை) கூட பதட்டம்கொள்ளத் தொடங்கினார். நியூ யோர்க்கில் இருந்து திரும்பும்போது –அங்குதான் அவருக்கு அவரது வேலை தொடர்பாக இறுதியான விவரிப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்- மந்தமான மனோநிலையுடன் தான் அவர் இருந்தார். பொதுவாக சுறுசுறுப்பாகவும் குதூகலமாகவும் காணப்படுகின்ற அவர், பதட்டமாகவும் சோர்வானவராகவும் ஆகியிருந்தார்; அவரது முகநிறம் பச்சை மற்றும் வெளிர்த்துவிட்டிருந்தது; அவரது முகத்தில் தசை சுருக்கங்கள் விழுந்திருந்தன; கைகள் நடுங்கின. அவர் தனது நாட்களின் பெரும்பகுதியை படுக்கையில், அமைதியாக, யாரிடமும் பேசாமல் கழித்தார், சில்வியாவுடன் பேச மறுத்தார். பின் காரணமில்லாமல் அவர் சிரிப்பதும் பிதற்றுவதும் ட்ரொட்ஸ்கியின் செயலாளர்களை திகைக்கச் செய்தது.

“ஒரு மிகப்பெரும் பனிப்பாளத்தை பனிவெட்டும் சிறுகோடரி கொண்டு ஒரே அடியில் பிளக்க முடிகிற அளவுக்கு” கொக்கிபோட்டு மலையேறும் திறனும் உடல் வலிமையும் தனக்கு இருந்ததாக அவர் பெருமையடித்து வந்திருந்தார். ஒரு சாப்பாட்டு வேளையின் போது ஒரு கோழியை அசாதாரண இலாவகத்துடன் கீறிப் பிளக்கும் தனது “அறுவைத் திறனை” அவர் எடுத்துக்காட்டியிருந்தார். (பலமாதங்களுக்குப் பின்னர் இந்த “செயல் விளக்கத்தை” கண்முன்னால் கண்டவர்கள் அவர் கிளமெண்டை நன்கு தெரியும் என்று கூறியிருந்தார் என்று நினைவுகூர்ந்தனர். கிளமெண்டின் உடல் இத்தகைய “அறுவைத் திறன்” கொண்டு சிதைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. [110]

1940 ஜூலையில் எந்தத் தேதிகள் மற்றும் சூழ்நிலைகளில் ஜாக்சன்-மோர்னார்ட் ட்ரொட்ஸ்கியின் செயலர்களை சந்தித்தார் என்பது தெரியவில்லை. இந்த வேண்டுமென்றே எரிச்சலூட்டுகின்ற நடத்தையையும் தவிர, நியூ யோர்க் பயணத்திற்கு முன்பாக அவர் ஏன் அங்கு நிறுத்தியிருந்த காரை எடுக்க வரவில்லை என்பதுவும் ட்ரொட்ஸ்கியின் வளாகத்தில் இருந்த காவலர்களுக்குப் புரியவில்லை. புய்க்வென்டோஸ் எழுதினார்:

Avenida Viena இல்லத்தில் உள்ளவர்களும் விரைவாக [அவரது விநோதமான நடத்தையை] கண்டுகொண்டனர். முதலில் அவர் ரொம்ப நாட்களாய் காணாது போனதைக் குறித்து அவர்கள் தங்களுக்குள் கேள்வியெழுப்பிக் கொண்டனர். மெக்சிகோவுக்குத் திரும்பிய பின்னரும் கூட அவர்களிடம் விட்டுச் சென்ற காரை திரும்பி வாங்கிக் கொள்வதற்கு அவர் தாமதம் செய்தார் என்பதையே ஒவ்வொரு விடயமும் சுட்டிக்காட்டியது. அவர் உண்மையாக உடல்நலமின்றி இருந்தாரா? அவருடைய நரம்புகள் அவரை பதட்டத்திற்குள்ளாக்கி இருந்ததா? ஒரு தாக்குதலுக்கான தயாரிப்புகளை அவர் தொடங்கியிருந்தாரா? [111]

அதன்பின் புய்க்வென்டோஸ் போலிசுக்கு நத்தாலியா செடோவா அளித்த ஒரு விபர அறிக்கையை மேற்கோள் காட்டினார்:

எனினும், தோராயமாக ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர் திரும்பினார். மெலிந்து போய் தெரிந்தவர், நோய்வாய்ப்பட்டிருந்தவர் போல் இருந்தார். ஏன் இத்தனை நாட்கள் என்று நாங்கள் அவரிடம் கேட்டபோது, முதலில் கூறிய பயணத்தில் இருந்து திரும்பியிருந்தாலும் நாட்டிற்குள்ளாக சில பயணங்கள் செய்ய வேண்டியிருந்ததாக அவர் கூறினார். கல்லீரல் நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சேர்த்துக் கொண்டார். கொஞ்சநேரம் தான் இருந்தார், காரை எடுத்துக் கொண்டு அவர் கிளம்பிவிட்டார். [112]

ஜாக்சன்-மோர்னார்டின் நம்பகத்தன்மை குறித்து GPU சந்தேகம் கொள்ளத் தொடங்கியது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இருக்கின்றன. அவர் மெக்சிகோ திரும்பி ஒரு மாதத்திற்கும் மேலாக ஆகி விட்டிருந்தது, ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவேற்றுவதற்கான எந்த செயலிலும் ஜாக்சன்-மோர்னார்ட் இறங்கவில்லை. ட்ரொட்ஸ்கி இன்னும் உயிருடன் தான் இருந்தார், தன் மீது மே 24 அன்று தொடுக்கப்பட்ட கொலைமுயற்சியில் GPU இன் பாத்திரத்தை அம்பலப்படுத்துவதில் மும்முரமாக வேலைசெய்து கொண்டிருந்தார். மாஸ்கோ பொறுமையிழந்திருந்தது.

ஆகஸ்டு 7 அல்லது 8 அன்று, ஜாக்சன் மோர்னார்ட்க்கு ஆங்கிலத்தில் ஒரு தந்தி வந்திருந்தது, அது ஐட்டிங்கோனிடம் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்பது புய்க்வென்டோஸ் இன் கணிப்பு.

GPU இன் எந்தவொரு முகவரும் பெறவிரும்பாத வகையானதொரு செய்தியை அந்த தந்தி கொண்டிருந்தது: உடனே நியூ யோர்க்குக்கு மீண்டும் வரவும் என்று அது தெரிவித்தது. [113]

ஆகஸ்டு 8-9, 1940: அகலோஃப் மீண்டும் மெக்சிகோ நகருக்கு விமானத்தில் பயணிக்கிறார்.

இந்த தந்திக்கு ஜாக்சன்-மோர்னார்ட் பதிலளித்தாரா என்ன பதிலளித்தார் என்பது தெரியவில்லை, ஆனால் அகலோஃப் உடனடியாக மெக்சிகோ நகருக்குப் பறந்தார். புய்க்வென்டோஸ் எழுதினார்: “மெக்சிகோ நகருக்கு வந்து தன்னை சந்திக்குமாறும் தன்னை பார்த்துக் கொள்ளுமாறும் அவர் [ஜாக்சன்-மோர்னார்ட்] சில்வியாவிடம் கேட்டிருக்கலாம்.” [114]

அகலோஃப் திடுதிப்பென்று மெக்சிகோ நகருக்குப் பறந்தமையானது அந்தப் பயணத்தின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது. 1940 இல், நியூ யோர்க்கில் இருந்து மெக்சிகோ நகருக்கு செல்லும் விமான சேவை மிகவும் பெரும்விலையாக இருந்ததோடு 16 மணி நேர பயணமும் உடையதாகும். ஆனால் பெருமந்தநிலை-சகாப்த பொது ஊழியரின் சம்பளத்திற்கு அந்த செலவு பொருந்தக் கடினமானது என்றபோதும், மெக்சிகோ நகருக்கு முடிந்த அளவு வேகமாக சென்றுசேருவதில் அகலோஃப் எந்த செலவையும் பொருட்படுத்தவில்லை. வேலைவார இறுதிக்காகக் கூட காத்திராமல், வேலையில் இருந்து விடுப்பு பெற்று வியாழக்கிழமை அன்றே அவர் கிளம்பி விட்டிருந்தார். இந்த சமயத்தில், அவர் தனது வேலையில் ஏற்கனவே மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்து விட்டிருந்தார்.

அவர் பின்னாளில் கூறிக்கொண்டதைப் போல, இத்தனை பெரும் செலவு செய்து மெக்சிகோ நகருக்கு அவசர அவசரமாக அவர் திரும்ப வேண்டியதானது, வயிற்று வலி அல்லது தரையிலிருந்து உயர மட்ட வாழ்விடங்களில் இருப்பதால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது வந்த ஆணுக்கு ஆறுதல் அளிப்பதற்காக மட்டுமே என்பதை நம்புவது சாத்தியம் இல்லாததாகும்.

1940 பிப்ரவரியில் தான் –அகலோஃப் பயணத்திற்கு ஆறு மாதங்கள் முன்பாக- இரண்டு நகரங்களுக்கும் இடையில் ஓரளவுக்கு வேகமாகச் செல்லக் கூடிய விமானவழித் தடம் உருவாக்கப்பட்டிருந்தது. பிப்ரவரியில் ஈஸ்டர்ன் மற்றும் பான் அமெரிக்கன் ஆகிய இரண்டு மிகப்பெரும் விமான நிறுவனங்கள் ஒரு கூட்டுமுயற்சியில் இரண்டு நகரங்களுக்கும் இடையில் இரவுப்பயண விமானசேவையை தொடக்கின. 1940 இல், அமெரிக்காவிற்குள்ளாக உள்நாட்டு விமானங்களில் போய்த்திரும்புவதற்கான செலவு இன்றைய மதிப்பில் சுமார் 4,500 டாலர்கள் செலவுபிடிக்கக் கூடியதாக இருந்தது. [115] ஒரு புதிய தடத்திலான சர்வதேசப் பயணமென்பது அதனினும் அதிக செலவாக இருந்திருக்க வேண்டும்.

அகலோஃப் பயணம் செய்த “மெக்சிகன் ஃபிளையர்” என்று அழைக்கப்பட்ட அந்த புதிய சேவையானது தேசியளவின் கவனம் ஈர்த்த மிகப்பெரும் வரவேற்புடன் தொடங்கப்பட்டது. [116] வாஷிங்டன் ஈவினிங் ஸ்டார் பத்திரிகை 1940 பிப்ரவரி 26 அன்று செய்தி வெளியிட்டிருந்தது: “வாஷிங்டனில் இருந்து டெக்சாஸின் பிரவுன்ஸ்வில் வழியாக மெக்சிகோ நகருக்கு போகின்ற இரவு விமான சேவையின் துவக்கவிழா நிகழ்ச்சிகள் புதனன்று மாலை 9 மணிக்கு வாஷிங்டன் விமான நிலையத்தில் நடைபெற இருக்கின்றன. தூதரக மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” [117] அமெரிக்காவிற்கான மெக்சிகோ தூதரும் இதில் பங்கேற்றார், அவரின் மகள் “முதல் விமானத்திற்கு பெயர் சூட்டினார்”.

1940 ”மெக்சிகோ ஃபிளையரின்” கால அட்டவணை [Photo: Timetableimages.com]

அகலோஃப் ஈஸ்டர்ன்–பான் அமெரிக்காவின் “மெக்சிகன் ஃபிளையர்” சேவை வழியாக பயணம் செய்ததை FBI ஆவணங்கள் ஸ்தாபிக்கின்றன. வாஷிங்டன் டி.சி., அட்லாண்டா, நியூ ஆர்லியன்ஸ், ஹூஸ்டன், கார்பஸ் கிறிஸ்டி மற்றும் டெக்சாஸின் பிரவுன்ஸ்வில் ஆகிய நிறுத்தங்களில் நிற்கும் ஈஸ்டர்ன் விமான நிறுவன விமானத்தின் டிசி-3 விமானத்தில் ஏறி ஆகஸ்டு 8 மாலை 7:15க்கு நியூயோர்க் நகரில் இருந்து அவர் கிளம்பினார். அடுத்தநாள் காலை 8.10 மணிக்கு பிரவுன்ஸ்வில் வந்துசேர்ந்த பின் அங்கிருந்து 9.10 மணிக்கு கிளம்பி மெக்சிகோவின் டாம்பிகோ நகரில் நின்றுகிளம்பி மதியம் 12.35 மணிக்கு மெக்சிகோ நகர் வந்தடைகிற பான் அமெரிக்க விமானம் ஒன்றின் மூலமாக மெக்சிகோ நகர் வந்தார். [118] அகலோஃப் பயணித்த விமானத்தில் மெக்சிகோ நகருக்கு பயணித்த பயணிகள் பட்டியலில் 10 பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர் என்பது, இந்த புதிய இரவுநேர வழித்தடத்தின் பிரத்தியேக தன்மையைச் சுட்டிக்காட்டுவதாய் இருக்கிறது. [119]

அகலோஃப் “தனிப்பட்ட” பயணம் என்று அவர் கூறிக்கொண்ட பயணத்துடன் ஒப்பிடுகையில், ட்ரொட்ஸ்கியை அரசியல் காரணங்களுக்காக சந்திக்க மினியாபோலிஸ் அல்லது நியூயோர்க்கில் இருந்து மெக்சிகோ நகருக்கு SWP தலைவர்கள் பயணித்த தூரத்தைப் பார்த்தால் 2,000 மைல்களுக்கும் அதிகமாய் இருக்கும். 1941 மினியாபோலிஸ் தேசத்துரோக வழக்குவிசாரணையில் SWP தலைமை தொடர்பான விசாரணையின் போது, அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள், ஒரு பயணத்தின் போது SWP பிரதிநிதிகளின் பழைய Pontiac வாகனம் பழுதாகி நின்றுபோய், SWP தலைவர்கள் நடுவழியில் தவிக்க நேரிட்டது என்பதைக் காட்டுகின்ற டெக்சாஸ் கார் பழுதுபார்ப்பு கடை ஒன்றில் இருந்தான சாட்சியத்தை எடுத்துவைத்தனர். [120]

அகலோஃப் மெக்சிகோ வரத் திட்டமிடுகிறார் என்பது தெரிந்த சிறிது காலத்திலேயே, ட்ரொட்ஸ்கியின் வளாகத்திற்குத் திரும்பி வந்த ஜாக்சன்-மோர்னார்ட் சில்வியா திரும்பி வருவதாகவும் ட்ரொட்ஸ்கி குடும்பத்தாரை காண விரும்புவதாகவும் செடோவாவிடம் தெரிவித்தார். ட்ரொட்ஸ்கி தம்பதி அவர்களுடன் சந்திக்க ஒரு காலஒதுக்கீட்டைப் பெறுவதற்கும் அவர் முயற்சித்தார். படுகொலைக்குப் பிந்தைய ஒரு போலிஸ் நேர்காணலில் செடோவா பின்வருமாறு விளக்கினார்:

[அவர் கார் எடுத்துச் சென்றதற்கு] இரண்டு நாட்களின் பின்னர் அவர் திரும்பி வந்தார், சில்வியாவிற்கு விடுமுறைநாட்களெனவும் அவற்றை நல்ல காலநிலை கொண்ட மெக்சிகோவில் அனுபவிப்பதற்காக அவர் விமானத்தில் வருவதாகவும் எங்களிடம் தெரிவித்தார். அன்று அவர் இனிப்புகளின் ஒரு அழகிய பெட்டியும் கொண்டுவந்தார், சில்வியா அவற்றை அனுப்பியதாகவும் முன்பு வந்தபோது தான் அவற்றைக் கொடுக்க மறந்து விட்டதாகவும் கூறினார். எனது கணவருக்கு ஹிட்லரும் ஸ்ராலினும் என்ற ஒரு புத்தகத்தை அவர் கொண்டுவந்தார், அதை எழுதியவர் பெயர் எனக்கு இப்போது நினைவில்லை. சில்வியா அடுத்தநாள் வந்து சேரவிருப்பதாகக் கூறிய அவர் சனிக்கிழமையன்று அவர் இங்கு வரலாமா என்றும் கேட்டார். அந்த நாளில் சாத்தியமில்லை, திங்கள் அல்லது செவ்வாய்கிழமை சந்திக்கலாம் என்று நாங்கள் சொன்னோம். [121]

அகலோஃப் வந்த பின்னர், ஜாக்சன்-மோர்னார்ட் மரியா கிறிஸ்டினா ஹோட்டலை விட்டு மாறிவிட்டார். தம்பதியினர் Hotel Montejo என்ற ஒரு புதிய ஹோட்டலில் மதியம் சுமார் 1.30 மணியளவில் சென்றனர். [122] 1940 ஆகஸ்டின் பின்பகுதியில் இருந்தான போலிஸ் ஆவணங்களின்படி, “அவர்கள் தங்கியிருந்த காலத்தில் ஜாக்சன் எந்த பார்வையாளர்களையோ அல்லது பார்வை அட்டைகளையோ பெறவில்லை.“ [123]

மெக்சிகோ நகரிலுள்ள Hotel Montejo [பட ஆதாரம்: டேவிட் நோர்த்) [Photo by David North]

ஆகஸ்டு 10, அதாவது மெக்சிகோ நகருக்கு அவர் வந்துசேர்ந்த அன்று, அகலோஃப் ட்ரொட்ஸ்கியின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் நோக்கம் குறித்து பின்னாளில் மெக்சிகன் போலிஸ் அவரிடம் கேட்டபோது, அவர் தெரிவித்தார்: “சும்மா சுகம் விசாரிப்பதற்காகவும், தான் நகரில்தான் இருப்பதை தெரியப்படுத்துவதற்காகவும்”. [124] மெக்சிகோ நகருக்கு அகலோஃப் வந்துசேர்ந்த பின்னர், ஜாக்சன்-மோர்னார்ட் “எங்களை இன்னும் அடிக்கடி வந்து பார்க்க ஆரம்பித்தார்” என்று செடோவா பின்னர் விளக்கினார். [125]

1940 ஆகஸ்டு ஆரம்பம் முதல் மத்தி வரை: தனக்கும் ஜாக்சன்-மோர்னார்ட்க்கும் இடையில் திருமணமாகி விட்டதாக அல்லது நிச்சயமாகி விட்டதாக அகலோஃப் பொய்யாக செடோவாவிடம் சொல்கிறார்

இந்த ஆரம்பகட்ட விஜயங்களின் போது, அகலோஃப் செடோவாவிடம் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள நிச்சயமாகி விட்டிருப்பதாகத் தெரிவித்தார். லூரி எழுதுகிறார், மெக்சிகோ நகருக்கு அகலோஃப் வந்த சமயத்தில்:

ரமோனின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை சில்வியா கண்டார். தனது சகோதரி ஹில்டாவுக்கு அவர் எழுதினார்: “ஜாக்குக்கு வயிற்றுப்போக்கு அல்லது அதனினும் மோசமான ஏதோ பாதிப்பு”. அவர் களைத்துப் போய் தெரிந்தார், எடை குறைந்திருந்தார், மிகவும் எரிச்சலூட்டக் கூடியவராய் தென்பட்டார். என்றாலும், அவர்களது காதல் வாழ்க்கை நன்றாகப் போவதாகவே தெரிந்தது. ஜாக் தன்னை திருமணம் செய்துகொள்ளக் கேட்டதாக, நத்தாலியா செடோவாவிடம் அகலோஃப் தெரிவித்திருந்தார். அச்சமயத்தில் திருமண வாழ்க்கை குறித்த அறிவுரைகளை நத்தாலியா அவருக்கு வழங்கினார். [126]

செடோவாவின் பின்னாள் கூற்றுக்களின் அடிப்படையில் பார்த்தால், அகலோஃப் செடோவாவிடம், தனக்கும் ஜாக்சன்-மோர்னார்ட்க்கும் திருமணநிச்சயம் அல்ல, மாறாக ஏற்கனவே திருமணமே ஆகிவிட்டிருந்ததாகத் தான் கூறியிருந்தார் என்பதாகவே தெரிகிறது. ஜாக்சன் மோர்னார்ட் “எல்லாவற்றுக்கும் மேல் சில்வியா அகலோஃபின் கணவராக, எங்களது பார்வையில் முழுக்க நம்பத்தகுந்தவராக (அழுத்தம் மூலத்தில் இருந்தவாறாக) அவரை நாங்கள் வரவேற்றோம்” என்று செடோவா எழுதினார். [127]

ஆகஸ்டில் ஜாக்சன்-மோர்னார்ட்டுடன் சந்திக்க ஒப்புக்கொள்வதில் செடோவாவுக்கு அகலோஃப் திருமணம் செய்து கொண்டு விட்டிருந்தார் என்ற காரணம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆனால் அகலோஃப் பொய் சொல்லியிருந்தார். படுகொலைக்குப் பின்னர் போலிசுக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், தனக்கும் ஜாக்சன்-மோர்னார்ட்க்கும் திருமணமாகவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். அந்த நேர்காணல் வாக்குமூலத்தின் எழுத்துவடிவம் அவரை “திருமணமாகாதவர்” என்றே குறிப்பிடுகிறது. மரி கிரேய்ப்போ (Marie Craipeau) கூறுகையில் 1939 பிப்ரவரியில் பாரிஸில் இருந்து நியூ யோர்க் திரும்பும் சமயத்தில் அகலோஃப் தனக்கு நிச்சயமாகி விட்டதாகவே தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். [128] இது அவர் செடோவாவிடம் இந்த “புதிய” விடயத்தைத் தெரிவிப்பதற்கு ஒரு வருடத்திற்கும் முந்திய நிகழ்ந்ததாகும்.

ஆகஸ்டில் செடோவாவிடம் இந்த பொய்யான வசனத்தைக் கூறி, ஜாக்சன்-மோர்னார்ட் அதிகமாக சந்தேகத்திற்குள்ளாக ஆரம்பத்த அந்த சரியான தருணத்தில் அவர் மீதான நல்லெண்ணத்திற்கு அகலோஃப் வலுக்கூட்டியிருந்தார்.

அகலோஃப் தனது ”கணவரை” வளாகத்திற்குள் அழைத்துவருகிறார்

ஆகஸ்டு 20 தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்பாக, ட்ரொட்ஸ்கிக்கும் கொலையாளிக்கும் இடையில் நடைபெற்ற ஒரேயொரு அரசியல் விவாதமாக ஆகவிருந்த ஒன்றுக்காக ஜாக்சன்-மோர்னார்டை அகலோஃப் ட்ரொட்ஸ்கி இருந்த இல்ல வளாகத்திற்குள்ளாக அழைத்து வந்தார். ட்ரொட்ஸ்கியின் மரணத்திற்கு உடனடியாக முன்வந்த காலத்தில் சில்வியாவும் அவரது “கணவரும்” அடிக்கடி விஜயம் செய்து கொண்டிருந்தது தனக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் கவலை உண்டாக்கியதாக செடோவா எழுதினார்:

தனது ஓய்வு நேரத்தை “ஜாக்சனுக்காக” தியாகம் செய்வதில் LD (லேவ் டேவிடோவிச் – ட்ரொட்ஸ்கி)க்கு கொஞ்சமும் நாட்டமில்லை. ஒரு தீவிரமிக்க விவாதத்திற்கு நாள் மற்றும் நேரத்தை LDயிடம் முன்கூட்டியே பேசி ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்பது நன்கறிந்த ஒன்றாக இருந்தது. “ஜாக்சன்” இந்த ஏற்பாட்டுக்கு ஒருபோதும் கேட்கவில்லை. எப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் வருவார், அதே நேரத்தில் வருவார். அவருடன் நடைபெற்ற ஒரேயொரு அரசியல் விவாதமென்றால் –தகவலுக்காக- அது குற்றம் நடைபெற்றதற்கு ஒரு வாரம் முன்பாக நடந்தது. அவர் தனது மனைவி சில்வியா அகலோஃப் விஜயம் செய்யவிருப்பதை என்னிடம் கூறியிருந்தார். நானும் மிக வசதியான நேரம் என்று அதே நேரத்தை, அதாவது மாலை ஐந்து மணி என்ற நேரத்தை, ஒதுக்கியிருந்தேன். ஆனால் சில்வியா தனியாக வரவில்லை, மாறாக அவரது கணவருடன் வந்தார், நாங்கள் அவர்களைத் தாழ்வாரத்தில் சந்தித்தோம், நான் அவர்களைத் தேநீர் அருந்துவதற்காக உணவருந்தும் அறைக்கு அழைத்தேன்.

இதுதான் அரசியல் பேச்சு இடம்பெற்ற ஒரே மற்றும் கடைசி சந்தர்ப்பமாக இருந்தது. சில்வியா அகலோஃப் சிறுபான்மையின் நிலைப்பாட்டை ஆவேசமாகவும் ஆர்வமாகவும் பாதுகாத்திருந்தார். LD அவருக்கு அமைதியாகவும் நட்புடனும் பதிலளித்தார். அவருடைய கணவர் இடையில் பொருத்தமற்ற மற்றும் நகைச்சுவையான கருத்துக்களை உதிர்த்தார். இது எல்லாமே 15 நிமிடங்களைத் தாண்டவில்லை. LD தனக்கு வேலையிருப்பதைக் கூறி கிளம்பினார், அவர் தனது வழக்கமான வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது, செல்லப்பிராணிகளுக்கு உணவுகொடுக்க வேண்டியிருந்தது. எல்லாரும் எழுந்தோம். “ஜாக்சன்” தம்பதி போய் வருகிறோம் என்று சொல்லி விட்டு, வழக்கம்போல், தங்களுக்கு ஏதோ அவசரமான வேலை இருப்பதாகக் கூறி, அவசர அவசரமாக கிளம்பிச் சென்றுவிட்டனர். நாங்கள் அவர்களை மரியாதையின் பொருட்டும் கூட தடுக்கவில்லை. ”ஜாக்சன்” மெக்சிகோவை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தார் என்பதால் இந்த “விஜயங்கள்” விரைவில் முடிவுக்கு வரவிருந்தன என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது.... இன்றில்லா விட்டால் நாளை, மனதளவில் எங்களுக்கு நாங்களே சொல்லிக் கொண்டோம், “அவர் போகட்டும், எத்தனை சீக்கிரம் போகிறாரோ, அத்தனை நல்லது. (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது).” [129]

சாக்ட்மன் வாதிகளின் (Shachtmanite) சிறுபான்மையின் நிலைப்பாட்டிற்காக அகலோஃப் “ஆவேசமாகவும் ஆர்வமாகவும்” வாதிட்ட இந்த விவாதம் ஜாக்சன்-மோர்னார்ட் தன்னை ஒரு “மரபுவழி” மார்க்சிஸ்டாக முன்நிறுத்திக் கொள்ள இயலுகின்ற திறனை அவருக்கு வழங்கியது.

1940 ஆகஸ்டு 17: ஜாக்சன் மோர்னார்டின் “ஒத்திகை”யா அல்லது தோல்வியடைந்த முயற்சியா?

ஒரு சில நாட்கள் கழித்து, ஆகஸ்டு 17 அன்று, ஜாக்சன்-மோர்னார்ட் மறுபடியும் ட்ரொட்ஸ்கியின் இல்லத்திற்கு சொல்லாமல் கொள்ளாமல் வருகைதந்தார்; SWP க்குள்ளாக குட்டி-முதலாளித்துவ சாக்ட்மன்வாத சிறுபான்மையுடனான கன்னை மோதல் தொடர்பாக தான் வரைவு செய்திருந்த ஒரு கட்டுரையை ட்ரொட்ஸ்கி திறனாய்வு செய்ய வேண்டும் என்று தான் விரும்புவதாக அவர் வலியுறுத்தினார். இந்த கட்டுரை அகலோஃப், செடோவா மற்றும் ட்ரொட்ஸ்கி உடனான சமீபத்திய விவாதத்தில் இருந்து விளைந்திருந்தது என்பதாக ஜாக்சன்-மோர்னார்ட் விளக்கினார். 17 ஆம் தேதி நடந்த அந்த கொஞ்சநேர சந்திப்பு தான் ஜாக்சன்-மோர்னார்ட் ட்ரொட்ஸ்கியை தனியாக சந்தித்த முதலாவதாய் இருந்தது.

வரவிருந்த தாக்குதலுக்கான ஒரு “ஒத்திகை”யாக ஆகஸ்டு 17 இருந்ததாகவே எப்போதும் அனுமானிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அந்த சந்திப்பின் போதே தாக்குவதற்கான நோக்கமும் அங்கே இருந்திருந்ததா? ஜாக்சன்-மோர்னார்ட் ஆகஸ்டு 17 அன்று முன்அறிவிப்பின்றி, சில்வியா இல்லாமல் வந்திருந்ததால் பதட்டமடைந்திருந்தது சாத்தியமா ? இந்த வெயில்மிகுந்த நாளில், ஜாக்சன்-மோர்னார்ட் மூன்று நாட்களுக்குப் பின்னர் அவர் தனது பிஸ்டலையும் கத்தியையும் தாக்குதல் நடத்த அவர் பயன்படுத்திய பனிக்கோடரியையும் எந்த மழைக்கு அணியும் மேலங்கிக்குள் மறைத்துக் கொண்டு வந்திருந்திருந்தாரோ அந்த மழைக்கு அணியும் அங்கியை கொண்டுவந்திருந்தார். ஒரு ஒத்திகைக்காக ஏன் மழைக்கு அணியும் அங்கியை கொண்டுவந்து கண்டுபிடிக்கப்படும் ஆபத்தை அவர் எதிர்கொள்ள வேண்டும்?

ஜாக்சன்-மோர்னார்ட் ட்ரொட்ஸ்கியை தனியாகச் சந்திக்க முடிந்திருந்தது. இது மாதிரியான சந்தர்ப்பம் திரும்பவும் வாய்க்கும் என்று சொல்ல முடியாது, அதிலும் குறிப்பாக அவரது உண்மையான பாத்திரம் குறித்து ஏற்கனவே சந்தேகம் நிலவி வந்திருந்தது என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால். ஆகஸ்டு 17 சந்திப்புக்கு முன்பாகவே கூட, ட்ரொட்ஸ்கிக்கு இந்த மனிதரின் நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே சந்தேகங்கள் வளர்ந்திருந்தன என்பதை டொச்சர் (Deutscher) விளக்கினார்:

அவர் [ஜாக்சன்-மோர்னார்ட்] தனது வணிக எஜமானரின் “நிதித்துறை மேதமை” குறித்து பேசியதோடு நான்காம் அகிலத்திற்கு உதவ பங்குச் சந்தையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் தயாராயிருப்பதாகக் கூறினார். ஒருநாள், Avenida Viena [ட்ரொட்ஸ்கியின் இல்லத்தில்] இல் ”கோட்டைச்சுவர் உயர்த்தும் வேலைகளை” ட்ரொட்ஸ்கி மற்றும் ஹான்சன் உடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர், இவற்றால் எந்த பயனுமில்லை என்றும், ஏனென்றால் “அடுத்த தாக்குதலில் GPU முற்றிலும் ஒரு புதிய முறையைத் தான் பயன்படுத்தும்” என்றும் கூறினார்; அது என்ன மாதிரி வழிமுறையாக இருக்கலாம் என்றபோது, அவர் ஒரு தோள்குலுக்கலின் மூலமாகப் பதிலளித்தார்.

வீட்டில் இருந்தவர்கள் மூன்று நான்கு மாதங்களுக்குப் பின்னர் இவற்றை நினைவுகூர்ந்தபோது தான் இந்த செயல்கள் எத்தனை முன்னறிகுறியை கொண்டிருந்திருக்கின்றன என்பதை உணர்ந்திருந்தனர். அச்சமயத்தில் அவர்கள் “ஜாக்சனின்” நிலைதப்பிய மனோபாவத்தின் அறிகுறிகளுக்கு மோசமான எதையும் காணவில்லை. அவரை மிகக் கொஞ்சமாக தெரிந்த நிலையிலும், ட்ரொட்ஸ்கிதான், கவலை கொண்டவராய் ஆனார்... “ஜாக்சனின்” ”நிதியயியல் மேதை”யான எஜமானர் குறித்த பேச்சு, “இயக்கத்திற்காக” பங்குச் சந்தை ஊகவணிகங்களில் ஈடுபடலாம் என்பதாக அவர் கூறிய ஆலோசனை ஆகியவை ட்ரொட்ஸ்கியை கோபமூட்டியிருந்தன. [130]

நத்தாலியா செடோவாவின் லியோன் ட்ரொட்ஸ்கின் வாழ்வும் மரணமும் நூலை டொச்சர் (Deutscher) மேற்கோளிட்டுக் கூறுகிறார்:

”இந்த சிறு உரையாடல்கள்” நத்தாலியா சொல்கிறார், “எனக்கு அதிருப்தியை உண்டாக்கின; லியோன் டேவிடோவிட்ச்சும் அவற்றால் கோபமடைந்திருந்தார். ‘யார் இந்த [மெர்காடரின்] பணக்கார எஜமானர்?’ என்று அவர் என்னிடம் கூறினார். ‘அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அது, அநேகமாக, பாசிச வகையான ஏதோ இலாபம் குவிப்பாளராக இருக்கலாம் — இனி சில்வியாவின் கணவரை நாம் சந்திக்காமல் இருப்பதே நல்லது.” [131]

ஆகஸ்டு 17 சந்திப்பு ட்ரொட்ஸ்கியின் சந்தேகங்களை ஆழப்படுத்தியதோடு “சில்வியாவின் கணவரை” இனி ஒருபோதும் மறுபடியும் சந்திக்க தான் விரும்பவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறுவதற்கும் இட்டுச் சென்றது. டொச்சர் எழுதினார்:

தயக்கத்துடன் என்றாலும் கடமை தப்பாதவராக, ட்ரொட்ஸ்கி ”ஜாக்சனை” தன்னுடன் வாசிப்பறைக்கு வருமாறு அழைத்தார். அங்கே அவர்கள் மட்டுமே தனியாக இருந்தனர், அந்தக் கட்டுரையை விவாதித்தனர். பத்தே நிமிடங்களில் ட்ரொட்ஸ்கி மன உளைச்சலுடனும் கவலையுடனும் வெளியில் வந்தார். அவரது சந்தேகம் திடீரென்று அதிகரித்திருந்தது; இனி அவர் “ஜாக்சனை” பார்க்க விரும்பவில்லை என்று நத்தாலியாவிடம் கூறினார். அந்த மனிதர் எழுதியிருந்ததைக் கொண்டு –ஏதோ சில கிறுக்கலான குழப்பமான தேய்ந்தவசனங்கள்- அவர் கவலை கொள்ளவில்லை, மாறாக அவர் நடத்தையைக் கொண்டு கவலையடைந்திருந்தார். அவர்கள் எழுதும் மேஜையில் அமர்ந்திருந்த நேரத்தில் ட்ரொட்ஸ்கி அந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்த வேளையில், “ஜாக்சன்” மேசையின் மேல் அமர்ந்து கொண்டு, அவருக்கு உபசரித்துக் கொண்டிருந்தவரின் தலைக்கு உயரே இருந்த நிலையில் தான், நேர்காணல் முடியும் வரையிலுமே அவர் இருந்தார்! அந்த முழுநேரமும் அவர் தொப்பியை எடுக்காமலேயே இருந்ததுடன் தனது கோட்டையும் கையில் பிடித்தபடியே தான் இருந்தார்! ட்ரொட்ஸ்கி வந்தவரின் அநாகரிகமான நடத்தையால் எரிச்சலுற்றது மட்டுமல்ல; ஒரு மோசடித்தனத்தை மறுபடியும் அவரால் உணர முடிந்தது.

அந்த மனிதர் ஒரு மோசடியாளராக இருக்க வேண்டும் என்ற உணர்வு அவருக்குத் தோன்றியிருந்தது. அவர் நத்தாலியாவிடம் கூறுகையில், “ஜாக்சனின்” நடத்தை “ஒரு பிரெஞ்சுக்காரரைப் போன்றதாகவே இல்லை”, ஆனால் அவர் தன்னை பிரான்சில் வளர்க்கப்பட்ட பெல்ஜியக்காரராகவே காட்டிக்கொள்கிறார். அவர் உண்மையில் யார்? அதைக் கண்டுபிடிக்க வேண்டும். நத்தாலியாவுக்கு திகைப்பு உண்டானது; “ஜாக்சன்” குறித்து ட்ரொட்ஸ்கி ஏதோ புதிதாக உணர்ந்திருக்கிறார், ஆயினும் எந்த முடிவுகளையும் எட்டவில்லை, அல்லது எட்டுவதற்கு அவசரப்படவில்லை என்பதாக அவருக்குத் தோன்றியது. ஆனாலும் அவர் கூறிய விடயத்தின் ஆழம் அவரை உஷார்படுத்துவதாக இருந்தது: “ஜாக்சன்” அவர்களை தனது சொந்தநாட்டைக் குறித்து ஏமாற்றி வந்தார் என்றால், அவர் ஏன் அவ்வாறு செய்கிறார்? அதைப்போல மற்ற விடயங்களிலும் ஏமாற்றிக் கொண்டிருந்தாரா? எந்த விடயங்களில்? [132]

”ட்ரொட்ஸ்கியின் இறுதி ஆண்டு” குறித்த கட்டுரையில், டேவிட் நோர்த், 1977 இல் அவர் மெக்சிகோவின் பிரபலமான Excelsior பத்திரிகையாளர் எட்வர்டோ டெலஸ் வார்காஸ் உடன் நடத்தியிருந்த ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட நேர்காணலை மேற்கோளிட்டிருந்தார். அந்த பத்திரிகையாளர், 1940 ஆகஸ்டு 17 அன்று, அதாவது படுகொலைக்கு வெறும் மூன்று நாட்கள் முன்பாக, ட்ரொட்ஸ்கியுடனான அவரது கடைசி சந்திப்பைக் குறித்து நினைவுகூர்ந்திருந்தார்.

எட்வர்டோ டெலஸ் வார்காஸ், டிசம்பர் 1976 (புகைப்பட ஆதாரம் டேவிட் நோர்த்) [Photo by David North]

அந்த மாபெரும் புரட்சியாளருக்கு சிரத்தையான மரியாதையை வெளிப்படுத்தியிருந்த டெலஸ் வார்காஸ், ட்ரொட்ஸ்கி அவரிடம் கூறிய விடயத்தைக் கொண்டு ஆழமான மனஉளைச்சல் கொண்டிருந்தார். டெலெஸ் வார்காஸ் நோர்த்திடம் கூறினார்: “ட்ரொட்ஸ்கி கிட்டத்தட்ட யாரையுமே நம்பவில்லை என்கிறபடியான ஒரு தருணம் அங்கே வந்தது. எவர் மீதும் அவருக்கு முழு நம்பிக்கையில்லை. அவர் இன்னார் இன்னார் என்று பெயர் கூறவில்லை என்றபோதும் அவர் சொன்னார்: ‘இங்கே இருக்கிற ஒருவராலோ அல்லது வெளியிலிருக்கிற எனது நண்பர்களில் ஒருவரின் மூலமோ, இந்த வீட்டிற்கு அணுகல் கொண்டிருக்கின்ற ஒருவரால் நான் கொல்லப்படுவேன். ஏனென்றால் ஸ்ராலினால் என்னை உயிருடன் விட முடியாது.”

இந்த சந்திப்பும் ஆகஸ்டு 17 அன்று தான் நடைபெற்றது என்ற உண்மையைக் கொண்டு பார்த்தால், ட்ரொட்ஸ்கியின் சந்தேகத்திற்கு இலக்கானவர்களில் ஜாக்சன்-மோர்னார்ட்டும் ஒருவராய் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. [133]

ஜாக்சன்-மோர்னார்ட் ட்ரொட்ஸ்கியை ஆகஸ்டு 17 அன்று கொல்லவில்லை. மாறாக, அவர் மீதான ட்ரொட்ஸ்கியின் சந்தேகங்கள் அதிகரித்து ”இனி ‘ஜாக்சனை’ காண விரும்பவில்லை” என்று அவர் கூற இட்டுச்செல்லுமளவுக்கான ஒரு விதத்தில் நடந்து கொண்டார். இந்த உணர்வு வந்தபின், GPU சதித்திட்டமானது ஒரு முக்கிய பின்னடைவையே சந்தித்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிடத்தக்கவிதமாய், ஜாக்சன்-மோர்னார்ட்க்கு ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்குக் கிடைத்த கடைசி சந்தர்ப்பமாய் அது ஆகவில்லை.

1940 ஆகஸ்டு 20 காலையும் பிற்பகலும்

ஆகஸ்டு 20 அன்று காலை, ஜாக்சன் மோர்னார்ட் Hotel Montejo இல் இருந்து காலை 9 மணிக்குக் கிளம்பியவர் “மதியவாக்கில் மாறிய மனதுடன் திரும்பிவந்தார்.” [134] அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கான பயணத்தை திட்டமிட்டு அமெரிக்க தூதரகத்திற்கு ஜாக்சன் மோர்னார்ட் சென்றிருந்ததாக அகலோஃப் பின்னாளில் தெரிவித்தார். “ஏன் மிகுந்த தாமதம் என்று சில்வியா அவரைக் கேட்டார்” என்று லூரி எழுதினார். தூதரகத்தில் “நீண்ட வரிசை இருந்ததாக அவர் பதிலளித்தார்.” “அவரை ஓய்வுப்படுத்த சற்று காலாற நடந்து வரலாம் என்று அகலோஃப் ஆலோசனையளித்தார். மதிய உணவுக்குக் காத்திருக்கும் நேரத்தில் சென்று பானம் அருந்தி வரலாம்.” [135]

நகர மையப் பகுதியில் நடந்து கொண்டிருந்த வேளையில், இந்த தம்பதி ஓட்டோ ஷூஸ்லார் (Otto Schüssler) மற்றும் அவரது மனைவியை சந்திக்க நேரிட்டது, அவர்களை இரவு உணவில் சந்திக்க திட்டமிடப்பட்டது. 1939 ஆரம்பத்தில் இருந்து மெக்சிகோவின் ட்ரொட்ஸ்கியின் காவலர்களில் ஒருவராய் இருந்து வந்த ஷூஸ்லார் அந்த வளாகத்தில் இருந்த கிட்டத்தட்ட வேறெவரைக் காட்டிலும் ட்ரொட்ஸ்கியுடன் அதிக நீண்டதொரு வரலாறைக் கொண்டிருந்தார். [136]

1905 இல் ஜேர்மனியில் ஒரு தொழிலாள வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவராக இருந்த ஷூஸ்லார் 1932 இல் துருக்கியத் தீவான பிரிங்கிபோவுக்கு பின்னர் நாடுகடத்தப்பட்ட சமயத்தில் ட்ரொட்ஸ்கியின் செயலாளராக சேவைசெய்தார், அதே ஆண்டின் நவம்பரில் கோபன்கேஹன் பயணத்தில் ட்ரொட்ஸ்கியின் செயலாளராகவும் அவரது பாதுகாப்பு ஏற்பாட்டின் பாகமாகவும் ஷூஸ்லார் உடன் பயணம் செய்தார். ட்ரொட்ஸ்கி பிரான்சின் பார்பிஸோன் (Barbizon) இல் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்த சமயத்தில் 1933 நவம்பருக்கும் 1934 ஏப்ரலுக்கும் இடையிலான காலத்தில் ஷூஸ்லார் மறுபடியும் ட்ரொட்ஸ்கியின் செயலாளராக சேவையாற்றினர் என்பதை பியர் புரூவே (Pierre Broué) குறிப்பிடுகிறார்.

ஆகஸ்டு 20 தாக்குதலுக்குப் பின்னர் ஷூஸ்லார் ஐ போலிசார் விசாரித்தனர். அவர் விளக்கினார்:

20 ஆம் தேதி மதியம் சுமார் 1 மணியளவில் Palace of Bellas Artes அருகில், வாக்குமூலமளித்தவர் [ஷூஸ்லார்] பிராங்க் ஜாக்சனையும் சில்வியா அகலோஃபையும் [137] எதிரில் சந்தித்தார், அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு அவர்களுடன் பேசத் தொடங்கினார். வாக்குமூலமளித்தவரிடம் சில்வியா கூறுகையில், அடுத்த நாள் அவர்கள் அமெரிக்கா திரும்பவிருப்பதாகவும் ஆகவே இன்று மாலையில் திரு.ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது மனைவியிடம் விடைபெற்றுச் செல்ல இருப்பதாகவும் கூறியதுடன், நகரின் உயரமைவுநிலை மற்றும் உணவின் காரணத்தால் ஜாக்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே அவர்கள் இந்தப் பயணம் [அவர்கள் கூறிக்கொண்ட அமெரிக்க பயணம்] மேற்கொள்ளவிருப்பதாகவும் விளக்கமளித்தார். [138]

அன்று இரவு ஷூஸ்லார் ட்ரொட்ஸ்கியின் இல்லத்தில் இருப்பாரா என்பதை அகலோஃப் தெரிந்து கொள்ள விரும்பினார். அவர் அச்சமயத்தில் வளாகத்திற்குள் இருக்க மாட்டார் என்பதாகத் தெரிவித்தார். அகலோஃப் அவரை இரவு உணவுக்கு அழைத்தார். ஷூஸ்லார் அந்த அழைப்பை மறுப்பதற்கு முயற்சித்தார், மறுநாள் அவர் ட்ரொட்ஸ்கியின் வீட்டில் இருக்கும் சமயத்தில் அங்கு வருவதற்கு ஊக்குவித்தார், ஆனால் அகலோஃப் அன்றிரவே இரவு உணவுக்கு வரும்படி வலியுறுத்தினார். அந்த வாக்குமூலம் இவ்வாறு தொடர்ந்தது:

கூறப்படும் மனிதர் [ஷூஸ்லார்] அவர்கள் மறுநாள் வருகையில் பார்க்கலாம் என்று சொன்னபோதும், சில்வியா அதற்கு சாத்தியமில்லை, ஏனென்றால் விமானம் ஏறத் தயாராகும் விதத்தில் அவர்கள் தங்கள் சூட்கேஸ்களை ஒழுங்கு பண்ண வேண்டியிருக்கும் என்று பதிலளித்தார். மாலை விடைபெறும் நேரத்தில் அவர் கோயகோனில் இருப்பாரா என்று சில்வியா வாக்குமூலமளித்தவரிடம் கேட்டபோது, அவர் [ஷூஸ்லார்] அது தனக்கு விடுப்புநாள் என்பதால் தான் நகரில் தான் இருப்பேன் என்று கூற, அப்படியானால் அன்று இரவு உணவு வேளையில் சந்திக்கலாமா என்று அவரிடம் சில்வியா கேட்டார். அழைப்பையொட்டி, ஜாக்சன் இரவு சந்திப்புக்கு தான் உடன்படுவதாகத் தெரிவித்தார். Francisco Madero Ave. மற்றும் San Juan de Letran மூலையில் இரவு 7.30 மணிக்கு சந்திப்பதற்கான அழைப்பை ஏற்றபின்னர், ஜாக்சன் பேசிக் கொண்டிருக்க தனக்கு நேரமில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். [139]

ஷூஸ்லார் தம்பதிகளுடனான உடனான பேச்சின் போது நடந்ததை லூரி விளக்கினார்:

அவர் [ஜாக்சன் மோர்னார்ட்] தொடர்ந்தும் பதட்டமாகவே நடந்து கொண்டார். திடீரென்று தான் ஏதோ முக்கியமானதை மறந்துவிட்டதாகச் சொல்லிவிட்டு, அவர் திரும்பிச் சென்றுவிட்டார். அவர் உடல்நலமில்லாததால் தான் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக சில்வியா நியாயப்படுத்த முயன்றார்: “இந்த ஊரின் உயரம் மற்றும் அவர் சாப்பிடுகிற உணவு இதன் காரணத்தால் தான் அவர் உடம்பு நலிந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆகவே தான் நாங்கள் கிளம்புகிறோம்.” [140]

இந்த ஏற்பாடு நடந்த பின்னர், ஜாக்சன்-மோர்னார்ட்டும் அகலோஃபும் Hotel Montejo க்கு திரும்பினர். அகலோஃபிடம் பின்னர் போலிஸ் நடத்திய விசாரணையின் எழுத்துவடிவம் பின்வருமாறு தெரிவிக்கிறது:

ஜாக்சனை அன்று அவர் கடைசியாக எப்போது பார்த்தார் என்ற கேள்விக்கு, மதியம் சுமார் 2 மணி 10 நிமிடங்கள் இருக்கலாம் என்ற அவர், ஜாக்சன் எழுந்தபோது அவர் இப்போது மழைக்கு அணியும் அங்கியை அணியப் போகிறாரா என்று கேட்க, அதற்கு அவர் தனக்குத் தெரியாது என்று கூறிவிட்டு அல்லது அதற்காக திரும்பி வந்து எடுப்பதோ என யோசிப்பதாக கூறி, இறுதியாக முடிவு செய்து அது இருந்த அலமாரிக்குச் சென்று அதனை எடுத்துக் கொண்டார். [141]

அந்த மழைக்கு அணியும் அங்கிக்குள் குற்றமிழைக்கப் பயன்படுத்தப்பட்ட பனி உடைக்கும் கோடரியும், அத்துடன் ஒரு கத்தியும் மற்றும் பிஸ்டலும் ஒளிக்கப்பட்டிருந்தன.

ட்ரொட்ஸ்கியின் இல்லத்தை தொலைபேசியில் அழைப்பதற்கு ஷூஸ்லார் முயற்சி செய்கிறார்

அன்று மாலை 6:30 மணியளவில், ஷூஸ்லாரும் அவரது மனைவியும் அகலோஃப் மற்றும் ஜாக்சன்-மோர்னார்டை அவர்கள் சந்திப்பதற்கு உடன்பட்டிருந்த ஸ்வஸ்திகா உணவகத்திற்கு வந்துசேர்ந்தனர். ஷூஸ்லார் பின்னர் மெக்சிகன் போலிசிடம் விவரித்தார்:

சுமார் 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் பின்னர் சில்வியா வந்தார். அவரிடம் [ஷூஸ்லார்] ஜாக்சனுக்கு என்னானது என்று தெரியவில்லை, இரண்டு பேரும் சேர்ந்து உணவருந்திய பின்னர் ஜாக்சன் திரு. அல்ஃபிரடோ வினாஸ் உடன் ஏதோ ஒரு அவசரமான வேலை இருப்பதாக கூறிவிட்டுச் சென்றார் என்றும்... தான் திரும்பி வந்த பின்னர் ட்ரொட்ஸ்கியிடம் விடைபெறச் செல்லலாம் அதன்பின் முன்னதாக உடன்பட்டிருந்தவாறாய் இரவு உணவு சந்திப்புக்குச் செல்லலாம் என்று சொல்லிச் சென்றிருந்தார் என்றும் கூறினார். [142]

ஜாக்சன்-மோர்னார்ட் ஏன் இரவு உணவு சந்திப்புக்கு வரவில்லை என்றால் அவர் அச்சமயம் கோயோகானில் இருந்தார். அவர் தானாகவே வளாகத்திற்கு வந்துவிட்டிருந்தார். அகலோஃப் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்றும், அடுத்த நாளில் தம்பதி இருவரும் அமெரிக்கா கிளம்பும் முன்பாக விடைபெற்றுச் செல்வதற்காக வந்ததாகவும் ட்ரொட்ஸ்கியிடமும் காவலர்களிடமும் அவர் தெரிவித்தார். [143] காவலர்கள் அவரை உள்ளே அனுமதித்தனர். சில்வியா அமெரிக்கா கிளம்பும்போது விடைபெற்றுச் செல்வது வழக்கம். அவரது கடந்தகால நடவடிக்கைகளின் அடிப்படையில், ஜாக்சன்-மோர்னார்டின் விஜயம் இயற்கையானதாகவே தெரிந்தது.

இதனிடையே, அகலோஃபுடன் நகரில் இருந்த ஷூஸ்லார், ஜாக்சன்–மோர்னார்ட் இல்லாததில் அதிக சந்தேகம் கொண்டார். அகலோஃபிடம் இருந்து Viñas’ இன் முகவரியை அவர் பெற்றார். இந்த மனிதர் 1329 அல்லது 1331 Paseo de la Reforma இல் வேலைசெய்தார். [144] ட்ரொட்ஸ்கியின் இல்லத்திற்கு தொலைபேசியில் அழைத்து ஜாக்சன்-மோர்னார்ட் அங்கேயிருக்கிறாரா என்று கேட்க வேண்டாம் என்று அகலோஃப் தன்னிடம் வலியுறுத்தியதாக ஷூஸ்லார் போலிசிடம் தெரிவித்தார்:

அகலோஃபிடம் இருந்த பதட்டத்தைக் கண்ட அவர் [ஷூஸ்லார்] ட்ரொட்ஸ்கியின் இல்லத்திற்கு தொலைபேசியில் அழைத்து விடைபெறுவதற்காக ஜாக்சன்-மோர்னார்ட் அங்கே வந்திருக்கிறாரா என்று காணலாம் என்று யோசனை கூறினார். ஆனால் சில்வியா “அவ்வாறு செய்ய வேண்டாம், ஏனென்றால் எனக்கு நிச்சயமாகத் தெரியும் அவர் அங்கே இருக்க மாட்டார், நாங்கள் சேர்ந்து போவதாகவே தீர்மானித்திருக்கிறோம்” என்று கூறிவிட்டார். [145]

திரு. Viña’s இன் அலுவலகம் இருப்பதாக அகலோஃப் கூறிய முகவரிக்கு ஷூஸ்லார் அகலோஃபை அழைத்துச் சென்றார். ஆனால் அப்படியொரு முகவரி அங்கு இல்லை. அகலோஃப் அவர்களை மற்ற முகவரிகளுக்கு அழைத்துச் சென்றார், ஆனால் ஜாக்சன்-மோர்னார்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் ஷூஸ்லார் ட்ரொட்ஸ்கியின் இல்லத்திற்கு தொலைபேசியில் அழைத்தபோது ட்ரொட்ஸ்கி தாக்கப்பட்ட விபரம் அவருக்குத் தெரியவந்தது. அகலோஃபிடம் அவர் அதைப்பற்றி சொன்னதும், “சில்வியா மிகவும் பதட்டமாகி அழத் தொடங்கினார்.” [146] அவர்கள் ஒரு டாக்ஸி பிடித்து கோயோகானில் உள்ள 55 Calle Viena க்கு சென்றனர் என Schüssler விளக்கினார்.

இங்கே ட்ரொட்ஸ்கியின் இல்லத்தில், மெக்சிகன் போலிஸ் வந்துசேர்ந்திருந்தது, ட்ரொட்ஸ்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தார். ட்ரொட்ஸ்கியின் காவலர்களில் ஒருவரான மெக்சிகோவைச் சேர்ந்த மெல்கியாடெஸ் பெனிட்டேஸ் சான்சேஸ் (Melquiades Benitez Sanchez) கூறியதன்படி, ஜோசப் ஹான்சன் “கிரீன் கிராஸுக்கு (Green Cross) அழைக்க முயன்று அது நடக்காமல்” தொலைபேசியை வெகுநேரம் வைத்திருந்ததால் ட்ரொட்ஸ்கியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதில் தாமதம் உண்டானது. [147] கடைசியில் இன்னொரு காவலரான Charles Cornell வேறு ஏதேனும் ஒரு மருத்துவரைக் கண்டு அழைத்துவர அனுப்பப்பட்டு, அவர் 20 நிமிடங்களுக்குப் பின்னர் வந்துசேர்ந்தார். வெகுமுக்கியமான நேரம் இழக்கப்பட்டிருந்தது.

இப்போது வளாகத்தில் இருந்த அகலோஃப் பீதியுடன் காணப்பட்டார். லூரி எழுதினார்:

குழம்பிய மனோநிலையுடன் சில்வியா, அறைகளுக்குள் ஓடினார். ஒரு மாலுமியின் பாணியில் வெள்ளை சட்டையும், பழைய தோலால் ஆன ஒரு பழுப்பு அங்கியும் அணிந்திருந்தார். அவரது தோற்றத்தில் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமற்ற ஒரு சிறுபிள்ளைத்தன தோற்றம் இருந்ததை அவரது உடைகள் காட்டின. தனது சொந்த வாழ்வின் ஒழுங்கின்மையில் தொலைந்துபோன ஒரு குழந்தையாக அவர் இருந்தார். இடையிடையில் “நான் வெறுமனே பயன்படுத்தப்பட்டிருந்திக்கிறேன்!” என்று அலறிக் கொண்டிருந்தார். [148]

அகலோஃப் கைது செய்யப்பட்டு விசாரணையில் வைக்கப்பட்டார்

அகலோஃபின் நாடக நடிப்பை மெக்சிக்கர்கள் ஏற்பதாக இல்லை. ஒரு முன்னணி மெக்சிகன் ட்ரொட்ஸ்கியிஸ்டும் ட்ரொட்ஸ்கியின் நாடுகடந்த வாழ்க்கைக்கான வீட்டின் ஏற்பாட்டாளருமான ஒக்டோவியோ ஃபெர்னாண்டஸ் மெக்சிகோ கல்வியாளரான ஒலிவியா காலிடம் ட்ரொட்ஸ்கியின் இல்ல வளாகத்திற்கு அகலோஃப் வந்தபோது என்ன நடந்தது என்பதை இவ்வாறு விவரித்தார்: “ஆம்புலன்ஸ் ட்ரொட்ஸ்கியை ‘மெக்சிக்கோ’வுக்கு [மருத்துவமனைக்கு] கொண்டு சென்றதன் பின்னர், கமாண்டர் கலிண்டோ சில்வியாவிடம் ‘நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள்’ என்று தெரிவித்தார்.”

ஒக்டோவியோ ஃபெர்னாண்டஸ் (பட உபயம் CEIP)

அகலோஃப் GPUவுக்காக வேலைசெய்திருந்தார் என்றே அவர் நம்பியதாக ஃபெர்னாண்டஸ் விளக்கினார். அவர் விளக்கினார்:

அவர்கள் அகலோஃபை ஏற்றிச் சென்ற காரில் நானும் உடன்செல்ல அவரை [கமாண்டர் கலிண்டோ] சம்மதிக்கச் செய்தேன். ஓட்டுநர், சில்வியா, நான் மூவரும் இருக்கிறோம், எங்களுக்குப் பின்னால் கமாண்டர் கலிண்டோவும் இரண்டு முகவர்களும் இருக்கிறார்கள். எனக்கு சில்வியாவை 1934 இல் இருந்து தெரியும். நான் அவரிடம் பேச முயற்சிக்க ஆரம்பித்தேன். அவர் வெறிபிடித்ததைப் போன்று அழுது கொண்டே இருந்தார், “ஜாக்சனை ஏன் உள்ளே விட்டார்கள்?” “ஜாக்சனை ஏன் உள்ளே விட்டார்கள்?” என்றே திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார். ஆக, அவருக்கு ஏதோ புரிந்திருந்தது, ஜாக்சனை வீட்டிற்குள் நாங்கள் விட்டிருக்கக் கூடாது என்பதற்கான குறைந்தபட்சம் ஒரு காரணமேனும் அவருக்குத் தெரிந்திருந்தது என்பதை நான் அறிந்து கொண்டேன். எர்மிடா கட்டிடத்தில் இருந்த பில்ஸோ அல்லது அதுமாதிரி ஏதோவொரு பேரில் இருந்த ஒரு மனிதருடன் ஜாக்சன் ஏதோ “சந்தேகத்திற்குரிய வேலைகளில்” ஈடுபட்டிருந்தார் என்பது தனக்குத் தெரியும் என்ற ஒரே பதிலைத் தவிர என்னுடைய கேள்விகளுக்கு வேறெந்த பதிலையும் அவர் தரவில்லை. “ஆனால் அது உங்களுக்குத் தெரியுமென்றால், விசாரணைக்குப் பின்னர் [மே கொலை முயற்சிக்காக சிக்விராஸிடம் நடத்தப்பட்ட விசாரணை], சிக்விராஸுக்கு எர்மிடா கட்டிடத்தில் ஒரு அலுவலகம் இருந்ததாக அவர்கள் வெளியிட்ட பின்னரும், எங்களை ஏன் எச்சரிக்கவில்லை?” அவர் பதிலளிக்கவில்லை. போலிஸ் அலுவலகத்திற்கு வந்துசேர்ந்திருந்தோம், அவர்கள் அவரை உள்ளே கொண்டுசென்று விட்டார்கள், அவரிடம் அதற்கு மேல் என்னால் பேச முடியாது போனது. [149]

தாக்குதலுக்குப் பின்னர்: அகலோஃப் மனநோய்(hysteria)பாதித்தது போல் பாசாங்கு செய்கிறார்

அகலோஃபையும் ஜாக்சன்-மோர்னார்டையும் கைதுசெய்த பின்னர், மெக்சிகன் போலிசார் இருவரையும் தனித்தனியே அடைத்து வைத்திருந்தனர், இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கமான போலிஸ் உத்தியின் மூலமாக, இரண்டு தரப்பு பதில்களையும் ஒப்பிட்டு அவை ஒன்றோடொன்று பொருந்திப் போகிறதா என்று பார்த்தது, இடையிலுள்ள பொருந்தாத விடயங்களை விசாரணையை முன்னெடுத்துச் செல்வதற்கான குறிப்புகளாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் நம்பினர்.

”நான் உடனடியாக தூதரக அதிகாரியைக் காண விரும்புகிறேன் – சில்வியா அகலோஃப்” ஜூலியன் கோர்க்கின் வெளியிட்ட குறிப்பு [Photo: Note published by Julian Gorkin]

கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது, GPU உடனான எந்த தொடர்பையும் மறுத்ததும், தான் ஒரு அதிருப்தியடைந்த ட்ரொட்ஸ்கிஸ்ட் என்றும் அகலோஃபுடனான தனது திருமணத்திற்கு ட்ரொட்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்ததால் ட்ரொட்ஸ்கியை தாக்கியதாகக் கூறியதும்தான் ஜாக்சன்–மோர்னார்டின் உடனடி பதிலிறுப்பாக இருந்தது. ஆக மறுபடியும், அவரது பொய்யின் மையமாக சில்வியாவின் பெயர் தோன்றியிருந்தது.

சில்வியா அகலோஃபை விசாரணை செய்ய போலிஸ் முயன்றபோது அவர் சரிவர பதிலளிக்க மறுத்தார். லூரி எழுதினார், “சில்வியா தாக்குதலுக்குப் பிந்திய நாட்களை, வெள்ளை மாலுமி மேற்சட்டையை மாற்றாமல், படுக்கையிலேயே கழித்துக் கொண்டிருந்தார். யாரேனும் அறையில் நுழைந்தால், உடனே அலறிக் கொண்டு தனது தோள்களை அவர் திருப்பிக் கொண்டார்.” [150]

FBI யும் மெக்சிகன் போலிசும் அவரை நேர்காணல் செய்ய முயற்சி செய்து, பலன் தரவில்லை. ஆகஸ்டு 22 அன்று, மெக்சிகோவிலுள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஷா “அவருடன் பேச முயற்சி செய்தார், ஆனால் அவர் பதட்டமான நரம்புமண்டல நடுக்கநிலை பிரச்சினைக்குள் வீழ்ந்துவிட்டார்” [151]

அவர் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்ப்பதற்காகவும் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகவும் மனநோய் வந்ததைப் போல நடிக்கிறார் என மெக்சிகன் போலிஸ் நம்பியது. அகலோஃப் கைது செய்யப்பட்டிருந்த சமயத்தில் அவரை சோதிக்க அழைக்கப்பட்ட மருத்துவ அதிகாரியான மருத்துவர் மோய்ஸ்ஸே ஓரோஸ்கோ (Moisés Orozco), ஆகஸ்டு 24 அன்று மெக்சிகன் செய்தித்தாளான Novedades யிடம் கூறுகையில், அகலோஃப் சந்தேகமில்லாமல் “ஒரு மாபெரும் கோமாளி” என்றார். அகலோஃப் மிரட்சியடைந்ததாக காட்டிக்கொண்ட சமயத்தில் அவரது இதயத்துடிப்பு அதிகரிக்கவில்லை என்பது அவர் பொய்சொல்கிறார் என்பதைக் காட்டியது. ஏனென்றால் அதிக மன அழுத்தம், படபடப்பு மற்றும் பீதியின் தாக்குதலுக்கு இலக்காவோர் இதயத்துடிப்பு அதிகரிக்கக் காண்பார்கள் என்று மருத்துவர் ஓரோஸ்கோ விளக்கினார். [152] Novedades செய்தித்தாளிடம் மருத்துவர் ஓரோஸ்கோ பின்வருமாறு விவரித்தார்:

அவர் ஒரு உளவியல் பேராசிரியை. விசாரணையாளர்களை எவ்வாறு தவிர்ப்பது தன்னை ஒரு பாதிக்கப்பட்டவராக எவ்வாறு காட்டிக் கொள்வது என்பதைத் தனது அறிவின் மூலமாக அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். விசாரணையாளர்களுக்கு அவரது உளவியலைப் பற்றித் தெரிந்ததை விட அதிகமாக அவருக்கு விசாரணையாளர்களின் உளவியல் அதிகமாகத் தெரிந்திருக்கிறது, அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த திடீர் உடல்நிலைத் தாக்குதல்கள் வரும்நேரத்தில் அவரது நாடித்துடிப்பு இயல்பாக இருக்கிறது. இது, அவர் ஒரு தந்திரமாக இதனைப் பயன்படுத்துகிறார் என்பதையே காட்டுகிறது. [153]

ஆகஸ்டு 26 அன்று, விளக்குகின்ற இன்னொரு செய்திக் கட்டுரையையும் Novedades வெளியிட்டது. “நாட்கள் செல்லச் செல்ல, அத்துடன் இந்தப் பெண்மணியின் விநோதமான மனோபாவம், அவருக்கு மனநோய் தாக்குவதாகச் சொல்லப்படுவது, மற்றும் சோவியத்துகளின் முன்னாள் செஞ்சேனை ஆணையாளரது படுகொலையாளியின் வாழ்க்கை மற்றும் அற்புதங்களில் ஒன்றுபடுகின்ற சூழ்நிலைகள் இவற்றை எல்லாம் கணக்கிலெடுத்துப் பார்த்தால், அவர் அப்பாவி என்று நம்புவது அதிக கடினமான ஒன்றாக ஆகிறது.” [154]

படுகொலைக்குப் பின்னர் சில்வியா அகலோஃபும் [இடது] மெர்காடரும் [வலது] [Photo: El País]

அகலோஃபின் மலிவான மனநோய் நாடகம் தெளிவாக நடிக்கப்பட்டதாய் இருந்தது. அவர் போலிஸ் விசாரணையை தாமதப்படுத்தினார், விடயங்கள் குறித்த அவரது விவரிப்பைக் கொண்டு ஜாக்சன் மோர்னார்டை விசாரணை செய்வதற்கான அவர்களது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். இது ஜாக்சன்-மோர்னார்ட்க்கு ஆசுவாசப்படுத்தி யோசிப்பதற்கும் நியூ யோர்க் நகரில் இருந்த அவரது GPU நடவடிக்கையாளர்களுடன் சேர்ந்து அவர் உருவாக்கியிருந்த சான்றுகளை ஒன்றுகோர்த்து நினைவுபடுத்திக் கொள்வதற்கும் காலஅவகாசம் வழங்கியது.

அகலோஃப் உடனான மெக்சிகன் போலிசின் ஆரம்பகட்ட நேர்காணல்கள்

அகலோஃப் கடைசியில் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார். இந்த விசாரணை லியாண்ட்ரோ சான்சேஸ் சலசார் (Leandro Sanchez Salazar) இன் மேற்பார்வையில் நடந்தது, அவர் அகலோஃப் உடன் பல நேர்காணல்கள் நடத்தினார், அகலோஃப் நடந்துகொள்ளும் விதத்தை ஆய்வு செய்யவும் அவரளித்த பதில்களை விசாரணையின் ஆரம்ப கட்டங்களில் முன்வைக்கப்பட்ட உண்மைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

ஜாக்சன்–மோர்னார்ட்க்கு உடந்தையாக இருந்த GPUவின் கையாளாக அகலோஃப் இருந்தார் என்று அவர் உறுதியாக நம்பினார். லூரி விளக்கினார்:

விசாரணைக்குப் பொறுப்பாக இருந்த கர்னல் லியாண்ட்ரோ சலசார், சில்வியா அகலோஃபை கொலையாளிக்கு உடந்தையாக இருந்தவராகக் கருதி, அவரை ஒரு காவலர் கண்காணிப்பதற்கு உத்தரவிட்டார். தன்னைச் சுற்றி நடப்பது புரியாமலிருக்கக் கூடிய அளவுக்கு ஒருவர் அத்தனை அப்பாவியாக இருந்திருக்க முடியாது என்று அவர் கருதினார். விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறாத, விளையாட்டுக் குறித்து ஒரு வரியும் கூட எழுதியிராத ரமோன் ஒரு விளையாட்டுச் செய்திகள் அளிக்கும் பத்திரிகையாளர் என்று அவர் எப்படி நம்பினார்? பாரிஸில் ஒரு பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்றிருந்த பின், மெக்சிகோ நிலைமைகளில், ஒரு எந்திரவியல் பொறியாளராக, வைரச்சுரங்கம் குறித்த நிபுணத்துவம் கொண்ட ஒரு சுரங்கப் பொறியாளராக (அவர் நத்தாலியா செடோவாவிடம் கூறியதன்படி) அல்லது ஒரு சர்க்கரை மற்றும் எண்ணெய் வியாபாரியாக (Otto Schüssler இடம் அவர் கூறியதன்படி) தேர்ச்சி காண முயற்சித்த ஒரு மனிதரின் மீது எவ்வாறு அவர் சந்தேகம் கொள்ளாதிருக்க முடிந்தது? அவரின் பல்வேறுபட்ட அடையாளங்கள் மற்றும் புரிந்துகொள்ள முடியாத கதைகளை (ஆர்குஸ் முகமை போன்ற) கொண்டு அவர் ஏன் சந்தேகம் கொள்ளவில்லை? இந்த அத்தனை கேள்விகளுக்கும் சில்வியா முற்றிலும் ஒரு மிரட்சியான தன்மையுடன் பதிலளித்தார். [155]

விசாரணையின் தலைமையில் இருந்த மற்ற போலிஸ் அதிகாரிகளும் இதே முடிவுகளுக்கே வரத் தொடங்கினர். ஆகஸ்டு 26 அன்று, ஆங்கில மொழியில் வெளிவந்த பத்திரிகையான Palm Beach Post, “போலிஸ் தலைவர் ஹோஸே மனுவல் நுனியெஸ் (José Manuel Núñez) கூறுவதன் படி, அவர் [அகலோஃப்] ‘அநேகமாக’ இந்த விடயங்களில் சிக்கியிருந்தார்” என்று தெரிவித்தது. [156] அவரது சிறைவாசம் இன்னும் அதிக காலம் நீடிக்கும் என்பதே அதிக சாத்தியமான நிலையாகத் தென்பட்டது.

லியாண்ட்ரோ சான்செஸ் சலசார் [Photo: Mexican National Institute of Anthropology and History]

ஆகஸ்டு 30 அன்று, தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்தமைக்காக சில்வியா அகலோஃப் அவரது வேலையில் இருந்து நீக்கப்பட்டார். நியூ யோர்க் சமூக நலத் துறையின் தலைவரான வில்லியம் ஹோட்ஸன், “அகலோஃபின் விடுப்பு ஆறுநாட்களுக்கு முன்பே முடிவடைந்திருந்த நிலையில் வேலைக்குத் திரும்புவதைக் குறித்து அவரிடம் இருந்து எந்த தகவல்தொடர்பும் இல்லாததாலும், மெக்சிகோவில் நடந்தவை தொடர்பாக உண்டான மோசமான விளம்பரத்தாலும் அவரது வேலை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதை உத்தியோகப்பூர்வமாக தெரிவித்தார். சில்வியாவின் தார்மீகஅறம் குறைந்த மலிவான மனோபாவத்திற்கு இவ்வாறு தான் நடக்க முடியும் என்று ஊடகங்களிடம் ஹோட்ஸன் அறிவித்தார்.” [157]

அகலோஃப் மற்றும் மெர்காடரின் நேருக்குநேர் சந்திப்பு

விசாரணையின் பகுதியாக, 20 ஆம் தேதிக்குப் பின்னர் அகலோஃபும் ஜாக்சன் மோர்னார்ட்டும் முதன்முறையாக நேருக்குநேர் சந்திக்கும்போது அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை சோதிக்கும் பொருட்டு, அவர்களை ஒரே அறையில் வைத்து விசாரிப்பதற்காக போலிசார் இருவரையும் ஒரு அறைக்குள் கொண்டுவந்தனர். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டபோது, ஜாக்சன்-மோர்னார்ட் தனது தலையை கைகளால் தாங்கிக் கொண்டு தன்னை அங்கிருந்து கொண்டு சென்று விடுமாறு போலிசிடம் கெஞ்சினார். அகலோஃபுக்கு மறுபடியும் மனநோய் வந்தது, அவர் அவர்களது உறவைக் குறித்து ஜாக்சனிடம் கேள்வியேதும் எழுப்புவதற்கோ அல்லது அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தபோது ஜாக்சன் கூறியிருந்த பொய்கள் குறித்து விளக்குவதற்கோ மறுத்துவிட்டார். தயவுசெய்து தங்களை தனித்தனியே கொண்டுசெல்லுமாறு அவரும் கோரிக்கை வைத்தார்.

ஜாக்சனுக்கு GPU உடன் இருந்த தொடர்புகள் குறித்து அம்பலப்படுத்துவதில் அகலோஃபுக்கு ஆர்வம் இருந்திருந்தால், இப்போது அவரை சந்தேகத்திற்கிடமில்லாமல் GPU முகவர் என்று காட்டியிருக்கத்தக்க பழைய பல சம்பவங்களைக் கொண்டு அவரை எதிர்கொள்வதற்கு அந்த நேருக்குநேர் சந்திப்பை அவர் பயன்படுத்தியிருக்க முடியும். SWP இல் ஜாக்சனைத் தெரிந்த அனைவரிலுமே, அவரது கதைகளில் இருந்த பொருத்தமின்மைகள் குறித்து அவரிடம் கேட்டு நெருக்குதலளிப்பதற்கு அவரை விட சிறந்த நிலை வேறெவருக்கும் இருக்கவில்லை. அவரிடம் எர்மிடா சம்பவம் குறித்து கேட்டிருக்கலாம், அகலோஃபும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்ற 1940 மார்ச் ஸ்ராலினிசப் பேரணி குறித்துக் கேட்டிருக்கலாம், 1938 நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டிற்கு அவர் வந்திருந்ததைக் குறித்துக் கேட்டிருக்கலாம், ஆர்கஸ் அச்சகம் குறித்து கேட்டிருக்கலாம், அல்லது அவரது பெற்றோரைக் குறித்து மற்றும் அவருக்கு பணம் எப்படிக் கிடைத்தது என்பன குறித்துக் கேட்டிருக்கலாம். ஜாக்சனுக்குத் தெரிந்தவர்களில் இதில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய மற்றவர்களைக் குறித்து கேட்டு அவரை எதிர்கொண்டிருக்கலாம். இவையெல்லாம் போலிஸ் விசாரணைக்கு பெரும் உதவி செய்திருக்கும் மெக்சிகன் அதிகாரிகளுக்கு இன்றியமையாத தடயங்களை வழங்கியிருக்கும்.

ஆனால் அதற்குப் பதிலாக அவர் “இந்தக் கொலைகாரனை என் பக்கத்தில் கொண்டுவராதீர்கள்! அவனைக் கொல்லுங்கள்! அவன் ட்ரொட்ஸ்கியைக் கொலைசெய்துவிட்டான்! அவனைக் கொல்லுங்கள்! அவனைக் கொல்லுங்கள்!” என்று அலறினார். [158]

ட்ரொட்ஸ்கியின் காவலர்களுக்கு ஆத்திரமூட்டி அவர்கள் ஜாக்சனைக் கொலை செய்து விட்டால், அவர் பேசுவது தவிர்க்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் அவரின் பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தைத் தயாரித்த ஸ்ராலினிஸ்டுகளின் நோக்கத்திற்கு ஒத்துப்போவதாக இது இருக்கிறது. ட்ரொட்ஸ்கியின் மண்டைக்குள் பனிக்கட்டிவெட்டும் கோடரியை ஆழமாக செருகிய உடனேயே, ஜாக்சன்-மோர்னார்ட் அவரே ட்ரொட்ஸ்கியின் காவலர்களிடம் கூறியது: “கொல்லுங்கள்! என்னை ஒரேயடியாகக் கொன்று விடுங்கள். எனக்கு வாழத் தகுதியில்லை. கொல்லுங்கள். நான் GPU இன் உத்தரவின் பேரில் இதைச் செய்யவில்லை, ஆனாலும் என்னைக் கொன்றுவிடுங்கள்.” [159]

ஜாக்சனை கொன்றுவிடக் கேட்பதன் மூலம், அகலோஃப் விசாரணைக்கு இடைஞ்சல் செய்ததோடு மட்டுமல்ல, அந்த நிலைமைகளில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு உறுப்பினர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதற்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒரு விதத்திலும் அவர் நடந்து கொண்டிருந்தார்.

1940 வரையில், அகலோஃபுக்கு சோசலிச அரசியலில் ஆறு-ஆண்டு கால வரலாறு இருந்தது, அவர் தன்னை ஒரு விசுவாசமான ட்ரொட்ஸ்கிஸ்டாக காட்டி வந்திருந்தார். ஸ்ராலினிச பாரிய பயங்கரத்தின் (Great Terror) சமயத்திலும் அவர் அதில் இயங்கி வந்திருந்தார், அச்சமயத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, அரசியல் எதிரிகளை திட்டமிட்டு அழிக்கும் ஸ்ராலினிச வழிமுறையைக் கண்டனம் செய்ததோடு, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர இயல்பின் ஒரு வெளிப்பாடு என்றும் அதனை குணாம்சப்படுத்தியது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் இந்த வழிமுறைகளை பயங்கரவாதம், வன்முறை மற்றும் சரீரரீதியான பதில்தாக்குதல் ஆகியவற்றைக் கொண்டு எதிர்க்கவில்லை, மாறாக அரசியல் அம்பலப்படுத்தல் மற்றும் கல்வியூட்டல் ஆகிய வழிமுறைகளைக் கொண்டு எதிர்த்து நின்றது. இக்காரணத்தினால் தான், ட்ரொட்ஸ்கியும் கூட தாக்குதலுக்குப் பின்னர் தன்னைத் தாக்கியவனை உயிருடன் விட்டுவைக்கும்படி உத்தரவிட்டார், அப்போது தான் GPU இன் பாத்திரம் அம்பலப்படுத்தப்பட முடியும் என்பதால்: “அவனைக் கொல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள்.... அவன் பேசியாக வேண்டும்.” [160]

அகலோஃபோ, இதற்கு மாறாக, அவர் கொல்லப்பட வேண்டும் என்றும் அவரை பேசவிடக் கூடாது என்றும் கோரினார். இந்த கவனம் ஈர்க்கின்ற நிலைப்பாடானது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு உறுப்பினரைக் காட்டிலும் ஒரு ஸ்ராலினிஸ்ட்டின் பதிலிறுப்புக்கே அதிகம் ஒத்துப்போவதாக இருந்தது. அந்த கொலையாளி உண்மையில் யார், அவர் யாருடன் சேர்ந்து வேலைசெய்து கொண்டிருந்தார் ஆகிய விபரங்களை வெளிக்கொணர்வதில் ஆர்வமுடைய ஒருவரின் பதிலிறுப்பாக அது இருக்கவில்லை.

குறிப்புகள்:

[இதில் இடம்பெறாத மூலங்கள் பகுதி 1 அல்லது பகுதி இரண்டில் இருக்கும்]

[94] FBI report of J. Edgar Hoover dated August 24, 1940.

[95] Luri, p. 245.

[96] Sanchez Salazar, p. 136.

[97]Ibid., pp. 219–20.

[98] Ibid., p. 220.

[99] FBI report of August 23, 1940.

[100] FBI report of September 13, 1940, by Agent N.O. Scott.

[101] Puigventós at location 2,541.

[102] FBI report for B.E. Sackett dated September 4, 1940.

[103] Memorandum from US Consulate General in Mexico City, September 1, 1940.

[104] Volkogonov, p. 459.

[105] Ibid., p. 456.

[106] Puigventós at location 4,503.

[107] Ibid. at location 4,526.

[108] Ibid. at location 4,545. Citing Dirreción General de Investigaciones Políticas y Sociales, Caja 127. Expediente 27, páginas 108–09.

[109] Puigventós at location 4,503.

[110] Deutscher, p. 497.

[111] Puigventós at location 4,527.

[112] Ibid. Referencing Archivo General de la Nación. Tribunal Superior de Justicia del DF Año 1940. Caja 3,265. Folio 602993, página 41.

[113] Ibid. at location 4,546.

[114] Ibid. at location 4,503.

[115] “What flights used to cost in the ‘golden age’ of air travel,” Travel+Leisure, August 13, 2017, available here.

[116] FBI Report of Agent R.N. Hosteny, September 25, 1940.

[117] “Overnight Air Service to Mexico City to Start,” Washington Evening Star, February 26, 1940. Available here.

[118] FBI Report of Agent R.N. Hosteny, September 25, 1940.

[119] Ibid.

[120] “The Smith Act trial and government infiltration of the Trotskyist movement,” Eric London, World Socialist Web Site, December 8, 2016, available here.

[121] Puigventós at location 4,532.

[122] Ibid at location 4,546.

[123] Ibid.

[124] Barrón Cruz, p. 165.

[125] “Natalia Trotsky Answers A Foul Slander,” Socialist Appeal, October 26, 1940.

[126] Luri, p. 245.

[127] “Natalia Trotsky Answers A Foul Slander.”

[128] L. Mercader, G. Sanchez, My Brother Killed Trotsky (Moscow: Kuchkovopole, 2011[Russian edition]), p. 159.

[129] “Natalia Trotsky Answers A Foul Slander.”

[130] Deutscher, p. 497.

[131] Ibid., pp. 497–98.

[132] Ibid., p. 498.

[133] David North, “Trotsky’s Last Year, Part Six,” World Socialist Web Site, September 8, 2020.

[134] Luri, p. 246.

[135] Ibid., pp. 246–47.

[136] See Trotskyana biography of Otto Schüssler, available here.

[137] The Mexican police regularly spell “Jacson” as “Jackson” and “Sylvia” as “Silvia.”

[138] Barrón Cruz, p. 47.

[139] Ibid.

[140] Luri, p. 247.

[141] Barrón Cruz, p. 166.

[142] Ibid., pp. 47–48.

[143] Joseph Hansen, “With Trotsky Until the End,” Fourth International Magazine, October 1940, p. 117.

[144] Barrón Cruz, p. 48.

[145] Ibid.

[146] Ibid.

[147] Ibid., p. 53.

[148] Luri, pp. 250–51.

[149] Gall, pp. 354–55.

[150] Luri, p. 261.

[151] Ibid., p. 262.

[152] For example, the UK’s National Health Service explains, “The physical symptoms of a panic attack are caused by your body going into ‘fight or flight’ mode. As your body tries to take in more oxygen, your breathing quickens. Your body also releases hormones, such as adrenaline, causing your heart to beat faster and your muscles to tense up.” Available here.

[152] உதாரணமாக, UK இன் தேசிய சுகாதார சேவை விளக்குகிறது, “ஒரு பீதி பாதிப்பின் உடல்ரீதியான அறிகுறிகள் உங்களது உடம்பு “போராடு அல்லது தப்பித்துச் செல்” எண்ணத்துக்குள் செல்வதால் உண்டாகின்றன. உங்களது உடம்பு அதிகமான ஆக்ஸிஜனை எடுக்க முயலும்போது, உங்களது சுவாசம் வேகப்படுகிறது. உங்களது உடம்பும் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்களை அதிகம் சுரப்பதால், உங்களது இதயத்துடிப்பு வேகமாகும் உங்கள் தசைகள் இறுக்கப்படும்.” இங்கே காணலாம்.

[153] Luri, p. 262.

[154] Ibid., p. 264.

[155] Ibid., p. 252.

[156] Ibid., pp. 264–65.

[157] Ibid., pp. 267–68.

[158] Sanchez Salazar, p. 149.

[159] Ibid., p. 141.

[160] Hansen, p. 116.

Loading