ரோஸா லக்சம்பர்க்கின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இணையவழி விரிவுரை

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சமூக சமத்துவத்திற்கான இளைஞர் மற்றும் மாணவர் (இலங்கை) அமைப்பு ரோஸா லக்ஸம்பர்க் பிறந்த 150 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இணையவழி விரிவுரை மற்றும் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டுவிழாவைக் குறிக்கும் முகமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் பீட்டர் ஸ்வார்ட்ஸ் உலக சோசலிச வலைத் தளத்தில் எழுதிய முன்னோக்கு கட்டுரையின் அடிப்படையில் இந்த விரிவுரை ஏப்ரல் 9 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இடம்பெறும்.

ரோஸா லக்சம்பர்க்

ரோஸா லக்ஸம்பர்க் போலந்தில் சோசலிச இயக்கத்தின் ஸ்தாபகரும் இரண்டாம் அகிலத்தின் முன்னணி கட்சியான ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) பிரதான தலைவரும் ஆவார். பிந்தைய காலத்தில் இரண்டாம் அகிலம் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்ததால் ஏற்பட்ட சீரழிவை பிரதிநிதித்துவம் செய்த பெர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதத்திற்கும், கவுட்ஸ்கியின் மத்தியவாதத்துக்கும் எதிராக அவர் போராடினார்.

முதலாம் உலகப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, சமூக ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தில் ஜேர்மன் போர் வரவுசெலவுத் திட்டத்துக்கு வாக்களித்தது. இதன் பின்னர் கட்சிக்குள்ளேயே ஏகாதிபத்திய போர் நிலைப்பாட்டை எதிர்த்துப் போராடுவதன் மூலம், தொழிலாள வர்க்க அனைத்துலகவாத புரட்சிகரக் கொள்கைகளை ஸ்தாபிப்பதற்காக ஸ்பார்டகஸ் லீக்கை உருவாக்குவதற்கு அவர் கார்ல் லிப்க்னெக் உடன் தலைமைத்துவம் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, 1918 இல் ஜேர்மன் புரட்சி அபிவிருத்தி அடைந்த போது அதற்கு தலைமைத்துவம் வழங்குவதற்காக மூன்றாம் அகிலத்தின் ஜெர்மன் கிளையாக ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாவதற்கு அவர்கள் தலைமை தாங்கினர். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உருவான இரண்டு வாரங்களுக்குப் பின்னர், 1919 ஜனவரி 15 அன்று, அவரும் லிப்னெக்கும், ப்ரைகோப் துருப்புக்களால் பிடிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

தொழிலாள வர்க்க அனைத்துலகவாத கொள்கைகளில் உறுதியாக வேரூன்றி இருந்த லக்சம்பேர்க்கின் மரபை பொய்மைப்படுத்துவதற்கு எதிரான பாதுகாப்புடன், தொழிலாள வர்க்கத்தின் இன்றைய புரட்சிகர போராட்டத்தை மதிப்பீடு செய்வது ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிரகீத் அரவிந்த வழங்குவார். ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பாளர் கபில பெர்னாண்டோ நிகழ்வுக்கு தலைமை தாங்குவார்.

திகதி: 9 ஏப்ரல் 2021

நேரம்: இரவு 7.00 மணி

பதிவு: https://attendee.gotowebinar.com/register/5585842739545125904

Loading