தைவான், குறைக்கடத்தி உற்பத்தியும் சீனாவுடனானஅமெரிக்க மோதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த ஒரு மாதத்தில் வாஷிங்டனில் தலையங்க்கட்டுரைகள், அறிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகள் ஒரு குறைந்த எதிர்காலத்தில் தைவானுக்கு எதிராக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு பேரழிவுகரமான யுத்தத்தின் அபாயத்தை எழுப்பியுள்ளன. பெய்ஜிங் தைவானை ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டி அதிகரித்துவரும் போர்க்குணமிக்க சீன எதிர்ப்பு பிரச்சாரங்கள் அனைத்தும் ஆசியாவில் மிகவும் வெடிப்புமிக்கக்கும் புள்ளியை வேண்டுமென்றே தூண்டுவதில் வாஷிங்டனின் வகிக்கும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை புறக்கணிக்கின்றன.

ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவிற்கு முன்னிலை" தொடங்கி, டிரம்பின் கீழ் அனைத்து முனைகளிலும் தீவிரப்படுத்தப்பட்ட சீனாவுடனான மோதலை அமெரிக்கா துரிதப்படுத்துகிறது. சீனாவுக்கு எதிரான ஒபாமாவின் "முன்னிலை" யில் துணைத் தலைவராக அச்செயலில் பங்கு வகித்த பைடென் பதட்டங்களைத் தணிப்பார் என்ற எந்தவொரு கருத்துக்களும் விரைவாக மறைந்துபோகின்றது.

தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென், 2020 மே 20, புதன்கிழமை தைவானின் தைபேயில் தனது பதவியேற்பு விழாவிற்கு செல்கிறார்(Taiwan Presidential Office via AP)

மார்ச் 12 ம் தேதி அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உள்ளடக்கிய முதலாவது ஒரு அரை-இராணுவ கூட்டணியான நான்கு தரப்பினரின் பாதுகாப்பு உரையாடல் அல்லது நாற்கர கூட்டத்தை நடத்துவதன் மூலம் அழைப்புவிட்டுள்ளார். இக்கூட்டத்தை தொடர்ந்து அலாஸ்காவில் அமெரிக்காவிற்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் சீனா மீது குற்றம்சாட்டியதன் மூலம் ஆத்திரமூட்டப்பட்டது.

எவ்வாறாயினும், தைவான் தென் சீனக் கடல் மற்றும் கொரிய தீபகற்பத்தை சுற்றிவளைத்து, போர் பதட்டங்களின் மையமாக வேகமாக வெளிப்பட்டுள்ளது. கடந்தமாதம் அமெரிக்க காங்கிரசுக்கு அளித்த வாக்குமூலத்தில், பதவி விலகிச்செல்லும் இந்தோ-பசிபிக் கட்டளைத் தலைவர் அட்மிரல் பில் டேவிட்சன் அடுத்த ஆறு ஆண்டுகளில் தைவான் தொடர்பாக சீனாவுடன் அமெரிக்கப் போர் நடத்தலாம் என்று எச்சரித்தார். அவருக்குப் பதிலாக பதவிக்குவரும் அட்மிரல் ஜான் அக்விலினோ தனது பதவிஉறுதிப்படுத்தல் விசாரணையில் இதுபோன்ற போர் "பெரும்பாலானவர்கள் நினைப்பதை விட மிக நெருக்கமாக" உள்ளது என்று கூறினார்.

தைவான் மீதான சீன படையெடுப்பு குறித்து டேவிட்சன் மற்றும் அக்விலினோ எச்சரித்த அதே வேளையில், 1979 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தைவான் நீரிணையில் பலவீனமான சமநிலையை சீர்குலைத்து வருவது அமெரிக்கா தான். பெய்ஜிங்குடனான உறவுகளுக்கு ஆதரவாக தைவானுடனான இராஜதந்திர உறவுகளை வாஷிங்டன் முடிவுக்கு கொண்டுவந்தபோது, அது தைவான் உட்பட அனைத்து சீனாவின் முறையான அரசாங்கமாக “ஒரு சீனா” என்ற கொள்கையை அப்போது ஆதரித்தது. தைவானுடன் அமெரிக்கா உறவுகளை உருவாக்கி வருகையில் "ஒரு சீனா" என்ற கொள்கையை அதற்கு எதிராக திரும்புகின்றது. அமெரிக்க மற்றும் தைவானிய அதிகாரிகளுக்கிடையேயான தொடர்புகளுக்கான முந்தைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மேலும் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1979 தைவான் உறவுகள் சட்டத்தின் கீழ், தைவானுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா கடைமைப்பட்டுள்ளது. மேலும் விற்பனையின் பெரும் விரிவாக்கம் டிரம்பின் கீழ் நடந்தது. சீனாவுடனான மோதலில் தைவானை இராணுவரீதியாக ஆதரிப்பதற்கான அமெரிக்காவின் தெளிவற்ற உறுதிப்பாடும் இந்தச் சட்டத்தில் உள்ளது. "மூலோபாய தெளிவுக்கு" ஆதரவாக இந்த "மூலோபாய தெளிவின்மையை" முடிவுக்கு கொண்டுவர சீனா எதிர்ப்பு பிரிவுகள் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. இது, தைவான் தொடர்பாக சீனாவுடன் போருக்குச் செல்ல ஒரு இராணுவ கூட்டணிக்கு ஒத்த உத்தரவாதமாகும்.

இவை அனைத்தும் சீனாவுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கின்றன. தைவான் சீன பெருநிலப்பரப்பில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிறிய, பெரிதும் பலப்படுத்தப்பட்ட, தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகள் முக்கிய சீன நகரங்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. சீனாவில் இருந்து முறையான சுதந்திரத்தை தைப்பே அரசாங்கம் எப்போதாவது அறிவித்தால் தைவானை மீண்டும் ஒன்றிணைக்க இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதாக பெய்ஜிங் பலமுறை எச்சரித்துள்ளது. இது தாய்வானுக்கான இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவுக்கான அமெரிக்க உத்தரவாதங்களால் ஊக்குவிக்கப்படக்கூடிய ஒரு படியாகும்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எந்தவொரு மோதலிலும் தைவானின் மூலோபாய மற்றும் இராணுவ முக்கியத்துவம் தெளிவாகத் தெரிந்தாலும், இது குறைகடத்தி சில்லுகள் தயாரிப்பதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் வெறும் 24 மில்லியன் மக்களைக் கொண்ட சிறிய நாடு வகிக்கும் முக்கிய பங்கின் அளவிற்கு மிகவும் தெளிவானதாகும். இவ்வாறான கணினி சில்லுகளின் பெருமளவிலான உற்பத்தி ஸ்மார்ட் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் வாகனங்கள் முதல் செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தப்பட்ட கணனிகள் மற்றும் குவாண்டம் கணனிகள் போன்ற அதிநவீன பயன்பாடுகள் வரை அனைத்திற்கும் அவசியமாகும். இது ஒரு “நான்காவது தொழிற்துறை புரட்சி” என்று முன்னறிவிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

ஒரு மாபெரும் நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் ((TSMC) சர்வதேச சில்லுகளின் உற்பத்தியில் சுமார் 55 சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆனால் மிகமுன்னேறிய சில்லுகளின் உற்பத்தி என்று வரும்போது அதன் ஆதிக்கம் 90 சதவீதமாக உயர்கிறது. அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் குவால்காம் மற்றும் ஜப்பான், ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் உள்ள அவற்றின் சக நிறுவனங்கள் தொடர்ந்து சில்லுகளை வடிவமைக்கின்றன. ஆனால் அவற்றின் உற்பத்தியை TSMC இன் உற்பத்தி ஆலைகளுக்கு அல்லது "வார்ப்பு ஆலைகளுக்கு" வெளியே அனுப்பியுள்ளன.

சில்லு உற்பத்தியின் பெரும் செலவுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக நிறுவனங்கள் தங்கள் சில்லுகளை தயாரிக்க TSMC இனை கேட்டுள்ளன. அடுத்த தலைமுறை 3 நானோமீட்டர் (nm) சில்லுகளை உற்பத்தி செய்வதற்காக TSMC இப்போது தெற்கு தைவானில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஒரு புதிய புதிய "வார்ப்பு ஆலை" ஒன்றை உருவாக்கி வருகிறது. அவை கணிப்பீட்டில் தற்போதைய மிகவும் மேம்பட்ட 5 நானோமீட்டர் சில்லுகளை விட 70 சதவிகிதம் வேகமாகவும், அதிக திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லிமீட்டரில் ஒரு மில்லியனான நானோமீட்டர் அளவிலான சிறிய கூறுகள் இன்னும் சிறியதாகும்போது அதிகமானளவில் ஒரு சில்லினுள் உள்ளடக்கலாம்.

TSMCயின் கழுத்தை நெரிப்பது கிட்டத்தட்ட அனுமதிக்க முடியாததாக கருதப்படுகிறது. பிப்ரவரியில் வெளியிடப்பட்ட “புவிசார் அரசியல் மேலாதிக்கம் கணினி சில்லுகளில் தங்கியுள்ளது” என்ற தலைப்பில் ஒரு பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை பின்வருமாறு கூறியது: பலஅடுக்கு செலவுகள் காரணமாக 3நானோமீட்டர் சில்லுகளை உற்பத்தி செய்வதற்கான பந்தயத்திலிருந்து பிற பெரும்பாலான குறைக்கடத்தி நிறுவனங்கள் விலகிவிட்டன. TSMC இன் பாரிய மூலதனச் செலவு, அதன் தொழில்நுட்ப நிபுணத்துவம், வினியோகத்தர்களின் வலைப்பின்னல் மற்றும் தைவானில் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக எந்தவொரு போட்டியாளருக்கும் அதனுடன் போட்டியில் நின்று பிடிக்க இப்போது கடினமாக இருக்கின்றது. தென்கொரியாவின் சம்சுங் நிறுவனத்தால் மட்டுமே ஓரளவிற்கு போட்டியிடக்கூடியதாக இருக்கின்றது”.

மேம்பட்ட சில்லுகளின் உற்பத்தியின் TSMCயின் உண்மையான ஏகபோகம் வெளிப்படையான இராணுவ தாக்கங்களைக் கொண்டுள்ளது. பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை பின்வருமாறு குறிப்பிட்டது: "முந்தைய நூற்றாண்டுகளில் இராணுவத் திறன் பின்புறம் நிரப்பும் துப்பாக்கிகள், போர்க்கப்பல்கள் அல்லது அணு குண்டுகள் மீது கட்டப்பட்டிருந்தால் என்றால், அது 21 ஆம் நூற்றாண்டில் மேம்பட்ட சில்லுகளின் புத்திசாலித்தனமான பயன்பாட்டை சார்ந்துள்ளது." சமீபத்திய தலைமுறை போர் விமானங்களில் கட்டமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு முதல் ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் பாதைகளை கணினி மூலம் பாதையை கண்டறிவது வரை அனைத்திற்கும் இத்தகைய சில்லுகள் அவசியம்.

யுத்தம் ஏற்பட்டால் இந்த முக்கிய கூறுகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக பென்டகன் அமெரிக்காவில் இதற்கு ஒப்பிடக்கூடிய சில்லு “வார்ப்பு ஆலைகளை” நிறுவுவதற்கு நீண்டகாலமாக அழுத்தம் கொடுத்துள்ளது. சீனாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போர் உந்துதல் மோதலின் ஆபத்தை தீவிரப்படுத்துவதால் இதேபோன்ற இராணுவ கணக்கீடுகள் மற்ற நாடுகளின் தலைநகரங்களிலும் செய்யப்படுகின்றன.

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனத்திற்கு சில்லுகள் வழங்குவதை துண்டிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவில் TSMC இற்கான அழுத்தமும் உள்ளடங்கி இருந்ததுடன், சந்தேகத்திற்கு இடமின்றி பெய்ஜிங்கில் அதிர்ச்சி அலைகளைத் தூண்டியது. சீனா தனது சில்லுகளில் 15 சதவீதத்தைத் தவிர மற்ற அனைத்தையும் இறக்குமதி செய்கிறது, குறிப்பாக மிகவும் மேம்பட்ட சில்லுகளை. இது எண்ணெயை விட இறக்குமதி செய்யப்பட்ட குறைக்கடத்திகளுக்கு அதிகம் செலவிடுகிறது. ஹவாய் நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்க பொருளாதார யுத்தம் பெய்ஜிங்கை தனது உள்நாட்டு திறனை வளர்ப்பதற்கு இன்னும் அதிக செலவு செய்ய தூண்டுகிறது.

சீனாவின் மிகப்பெரிய சில்லு தயாரிப்பாளர்களில் ஒன்றான Semiconductor Manufacturing International Corp மற்றும் மிக சமீபத்தில் பைடென் நிர்வாகத்தால் மேம்பட்ட கணனிகளின் உற்பத்தியுடன் தொடர்புடைய மூன்று சீன நிறுவனங்கள் மற்றும் சீனாவின் தேசிய மேம்பட்ட கணனி மையத்தின் நான்கு கிளைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முரண்பாடாக, தற்போதைய உலகளாவிய சில்லுகளின் பற்றாக்குறையில் ஹவாய் மீதான தடை ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. ஏனெனில் இப்பற்றாக்குறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பே ஹவாய் பில்லியன் கணக்கில் அவற்றை கையிருப்பில் வைத்திருக்க செலவழித்ததுள்ளது.

சில்லு பற்றாக்குறை மற்றும் உள்நாட்டு அமெரிக்க சில்லு உற்பத்தியின் தேவை குறித்து பைடென் நிர்வாகம் முக்கிய நிறுவனங்களின் இணையவழி கூட்டத்தை நேற்று கூட்டியபோது சில்லு உற்பத்தியின் மூலோபாய முக்கியத்துவம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. பைடென் தனது 2 டிரில்லியன் டாலர் உள்கட்டமைப்புத் திட்டத்தையும், அமெரிக்காவில் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான ஊக்கத்தொகையாக, சில்லு உற்பத்திக்கு 50 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதற்கான காங்கிரஸின் நகர்வுகளையும் கூறினார்.

TSMC இற்கும் இணையவழி கூட்டத்தில் ஒரு இருக்கை இருந்தது. இது ஏற்கனவே அரிசோனாவில் 12 பில்லியன் டாலர் சில்லு வார்ப்பு ஆலை மற்றும் உள்நாட்டு சில்லு உற்பத்தியின் சொந்த பற்றாக்குறை குறித்து கவலை கொண்டுள்ள ஜப்பானில் உற்பத்தி ஆலைகளை நிறுவுகிறது. இருப்பினும், அரிசோனா ஆலை 5நானோ மீட்டர் சில்லுகளை தயாரிக்க தயாராக உள்ளது. இது தெற்கு தைவானில் புதிய TSMC ஆலை 2023 ஆம் ஆண்டில் 3நானோ மீட்டர் சில்லுகளை தயாரிக்கத் தொடங்கும் போது ஏற்கனவே காலம் கடந்ததாகிவிடும்.

இன்டெல் தனது சில்லு உற்பத்தியை அமெரிக்காவில் விரிவாக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது அமெரிக்காவின் முக்கிய சில்லு உற்பத்தியாளரான இன்டெல் தனது சில்லு உற்பத்தியில் சிலவற்றை முதல் முறையாக TSMC இற்கு வழங்க திட்டமிட்டுள்ளது என்பதன் மூலம் TSMC உடன் போட்டியிட முயற்சிப்பதில் உள்ள சிரமங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

பைடெனின் உள்கட்டமைப்பு திட்டங்கள் அமெரிக்க காங்கிரசில் எதிர்ப்பை எதிர்கொள்வதுடன். இது சில்லு உற்பத்தி நிதியை இல்லாதுபோகச் செய்வதற்கு அச்சுறுத்துகின்றன. மேலும், 50 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்பட்டாலும், இது தேவைப்படுவதை விட மிகக் குறைவானதாகும். TSMC சமீபத்தில் தனது மேலாதிக்க நிலையைத் தக்கவைக்க 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழிக்கும் திட்டங்களை அறிவித்தது.

வெள்ளை மாளிகைக் கூட்டம் குறித்த Politico இன் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, வாஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மூலோபாய தொழில்நுட்ப திட்டத்தின் இயக்குனர் ஜேம்ஸ் லூயிஸ் கருத்துத் தெரிவிக்கையில்: “செலவு செய்யாமல் சீனாவை விட முன்னேற முடியும் என்று மக்கள் இன்னும் நம்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இது இவ்வாறு நடக்கப் போவதில்லை. ”உள்கட்டமைப்பு மற்றும் குறைக்கடத்தி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி தொடர்பாக சீனா மற்றும் பிற நாடுகளுடன் அமெரிக்கா போட்டியிட விரும்பினால், "நீங்கள் பணத்தை செலவழிக்க வேண்டும், காங்கிரஸ் அமைதிக்கால சிந்தனை முறையிலிருந்து வெளியேறவில்லை" என லூயிஸ் தொடர்ந்தார்,

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு பிரதான அச்சுறுத்தலாகக் கருதப்படும் சீனாவுடனான போருக்குத் தயாராகும் போது, இப்போது வாஷிங்டனில் இராணுவ மற்றும் மூலோபாய வட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் போர்க்கால சிந்தனையை லூயிஸ் பிரதிபலிக்கிறார். அட்மிரல் டேவிட்சன் கடந்த மாதம் தனது காங்கிரசின் சாட்சியத்தில், இந்தோ-பசிபிக் பகுதியில் இராணுவ செலவினங்களை பெருமளவில் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், குறிப்பாக தரை அடிப்படையிலான இடைநிலை தூர ஏவுகணைகளை நிறுவுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். கடந்த மாதம் நடந்த நாற்கர கூட்டத்தில் சில்லுகள் போன்ற மூலோபாய பொருட்களின் விநியோகச் சங்கிலிகள் விவாதத்திற்கு உட்பட்டன.

சில்லு தயாரிப்பில் TSMCயின் பங்கு எந்த வகையிலும் அமெரிக்க மூலோபாயத் திட்டத்தில் தைவானை விரைவாக முன்னணிக்கு கொண்டுவந்த ஒரே காரணி அல்ல, ஆனால் அது நிச்சயமாக ஒரு முக்கியமான ஒன்றாகும். அமெரிக்கா தனது இராணுவ மற்றும் பொருளாதாரத்திற்கான குறைகடத்திகள் வழங்குவதில் ஒரு முக்கியமான இறுக்கநிலை மீது ஆதிக்கம் செலுத்த உறுதியாக உள்ளது. தைவானுடனான உறவை வலுப்படுத்துவதற்கான அதன் நடவடிக்கைகள் சீனாவுடனான பதட்டங்களை மேலும் தூண்டிவிடுவதுடன், இது இரு அணு ஆயுத சக்திகளுக்கிடையிலான போரின் அபாயத்தை அதிகரிக்கும்.

Loading