நோய்த் தொற்றுக்கள் எழுச்சியடைகையில் ஐரோப்பாவில் 1 மில்லியன் கொரோனா வைரஸ் இறப்புக்களை அடைந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்புக்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையானது கடந்த வாரம் 1 மில்லியனை விஞ்சிவிட்டது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று அறிவித்தது. திகைப்பூட்டும் இறப்பு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டாலும், இந்த வைரஸ் கண்டம் முழுவதும் வேகமாக எழுச்சியடைந்து வருகிறது, இது மிகவும் தொற்றக்கூடிய B.1.1.7 வகையினால் எரியூட்டப்பட்டு, ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை அமைப்புமுறைகளை மூழ்கடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி பி. க்ளூஜ் நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மொத்தம் 1 மில்லியன் என அறிவித்தார். "எங்கள் பிராந்தியத்தில் நிலைமை மோசமாக உள்ளது," என்று அவர் கூறினார். "ஒவ்வொரு வாரமும் 1.6 மில்லியன் புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 9,500 பேர்கள், ஒவ்வொரு நிமிடமும் 160 பேர்கள்" ஆக இருக்கின்றன. உத்தியோகபூர்வ எண்ணிக்கையே வைரஸால் இறந்த மக்களின் உண்மையான எண்ணிக்கையை ஒரு குறிப்பிடத்தக்களவில் குறைத்து மதிப்பிடுவதாகும்.

இந்த மார்ச் மாதம் 23, 2020 கோப்பு புகைப்படத்தில், கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் கிழக்கு பிரான்சிலுள்ள முலூஸ் சிவில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். (AP Photo/Jean-Francois Badias, File)

"வயதானவர்களிடம்தான், குறைந்து வரும் நிகழ்வுகளை நாங்கள் காண்கிறோம்," என்று க்ளூக் கூறினார். "கடந்த இரண்டு மாதங்களில், 80 வயதிற்கு மேற்பட்டவர்களிடையேயுள்ள போக்கு, மற்றய எல்லா வயதினரிடமும் காணப்படும் போக்கிலிருந்து விலகிச் சென்றுள்ளது, ஒருவேளை இந்த அதிக ஆபத்துள்ள குழுவில் அதிக தடுப்பூசி போடப்படுவதன் காரணமாக இருக்கலாம் என்பதற்கு நன்றி கூறவேண்டும். பிப்ரவரி முதல், ஐரோப்பாவில் COVID-19 இறப்புகளின் விகிதம், 80 வயதிற்கு மேற்பட்டவர்களில், படிப்படியாக 30 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது, இது பெருந் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து மிகக் குறைந்த அளவாகும். ஆயினும்கூட, மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உயர் மட்டங்களில் உள்ளது, தீவிர சிகிச்சை திறன் பற்றிய தொடர்ச்சியான அறிக்கைகளால் அதிகரிக்கப்பட்டுள்ளன.”

பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், இறப்புக்கள் வேகமாக முடுக்கிவிடப்படுகின்றன. போலந்தில், அனைத்து புதிய நோயாளிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இப்போது B.1.1.7 வகையாக இருக்கின்றனர், இது பொதுவாக பிரிட்டன் வகை என்று குறிப்பிடப்படுகிறது, இது அசல் திரிபை விட தொற்றக்கூடியதும் மற்றும் மிகவும் கொடியதாகவும் இருக்கிறது. இது மருத்துவமனை அமைப்புமுறையை விளிம்பில் தள்ளிய தொற்றுக்களில் ஒரு அதிகரிப்புக்கு எரியூட்டியுள்ளது. ஏப்ரல் 1 ம் தேதி பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த மட்டத்தை அடைந்தது.

போலந்தில் நேற்று 803 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் நாள், மேலும் 645 பேர் இறந்தனர். ஏழு நாள் தினசரி இறப்பு சராசரி இப்போது 600 க்கும் அதிகமாக உள்ளது, இது அமெரிக்க மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் சுமார் 5,300 தினசரி இறப்புகளுக்கு சமமாகும்.

மருத்துவமனை அமைப்புமுறையானது ஏற்கனவே நிரம்பி வழிகிறது. வார்சோவிலுள்ள மருத்துவ உதவியாரான மீகல் ட்ரோட்ஸ் பைனான்சியல் டைம்ஸிடம், தான் வழக்கமாக மருத்துவமனைகளுக்கு வெளியே மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் கட்டாயத்திற்கு உள்ளாவதாகக் கூறினார், ஏனெனில் நோயாளிகளை அழைத்துச் செல்ல இனி இடம் இல்லை. "இது மூன்று வாரங்களாக எல்லா நேரத்திலும் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஷிப்டுக்கும் ஒரு உண்மையான அச்சுறுத்தல் உள்ளது, நீங்கள் ஒரு மருத்துவமனைக்கு முன்னால் காத்திருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். "சில நேரங்களில் அது இரண்டு மணி நேரங்கள், சில நேரங்களில் ஆறு. ... அந்த நேரத்தில் நீங்கள் யாருக்கும் உதவ முடியாது, இதுதான் வேலையாக இருக்க வேண்டும் என்று உள்ளது."

கடந்த ஆண்டு நவம்பரில், போலந்தில் கொரோனா வைரஸால் 5,000 பேர் இறந்துள்ளனர். இது பின்னர் கிட்டத்தட்ட 60,000 ஆக 12 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பெப்ருவரியில், மிகவும் தொற்றும் வகை பரவிக் கொண்டிருக்கையில், மேட்யூஸ் மொராவிக்கியின் (Mateusz Morawiecki) வலதுசாரி அரசாங்கமானது அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்களுடன், இளைய ஆரம்ப வயது மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது உட்பட, பொதுமுடக்க நடவடிக்கைகளை மேலும் தளர்த்துவதாக அறிவித்தது.

ஐரோப்பா கண்டத்தில் இரண்டாவது மிக உயர்ந்த இறப்பு விகிதம் இத்தாலியில் உள்ளது. வேர்ல்டோமீட்டர்படி, ஏழு நாள் தினசரி இறப்பு சராசரி இப்போது 455 ஆகும். நாட்டின் தடுப்பூசி நடவடிக்கையானது ஒரு தோல்வியாகும். பல தசாப்தங்களாக காட்டுமிராண்டித்தனமான சிக்கன வெட்டுக்களால் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை கீழறுக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி விநியோக அமைப்புமுறை பிராந்திய அரசாங்கங்களுக்கு விடப்பட்டது. பெப்ருவரி 20 வாக்கில், பைனான்சியல் டைம்ஸ்படி, இதுவரை விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளில் வெறும் 20 சதவிகிதம் மட்டுமே 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 6 சதவிகிதத்தினர் மட்டுமே ஒரு டோஸைத்தான் பெற்றுள்ளனர், ஜேர்மனி மற்றும் பிரான்சில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் போட்டுள்ளனர், அங்கு தடுப்பூசி நடவடிக்கையானது ஆரம்பத்தில் இருந்தே ஒழுங்கற்றதாகவும் மெதுவாகவும் உள்ளது.

ஐரோப்பா கண்டம் முழுவதிலும் இன்னும் பரந்த அளவில், தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து, இறப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அரசாங்கங்கள் கோடைகாலத்தில் பொருளாதாரங்களை மீண்டும் திறக்கும் தங்கள் திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், இத்தாலி அதன் விடுமுறை தீவுகளில் வசிப்பவர்களுக்கு சுற்றுலாத் துறையை அதிகரிக்க தடுப்பூசி போட உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. பெருநிறுவன ஊடகங்கள் ஏற்கனவே வரவிருக்கும் விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி மக்கள் நனவை மேலும் தளர்த்துவதற்கு நிபந்தனை விதிக்கின்றன, அவை இறப்பு விகிதத்தில் மேலும் விரைவான அதிகரிப்பை உருவாக்க வேண்டும்.

ஜேர்மனியில், பெரும் கூட்டணி அரசாங்கமானது தொற்றுக்களின் அதிகரிப்பை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. நேற்று நாடு முழுவதும் 32,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. ஆயினும் கூட பள்ளிகள் தேசிய அளவில் திறந்தே உள்ளன, அரசாங்கமானது பள்ளி மூடல்களுக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பது மட்டுமல்லாமல், உண்மையில் பள்ளிகள் மூடப்படுவதற்கு தேவையான 100,000 மக்களுக்கு தொற்றுக்களின் நிகழ்வு விகிதத்தை 100 ல் இருந்து 200 ஆக உயர்த்துகிறது.

பிரான்சில், வோல்ட்டோமீட்டர் கணக்கிட்டபடி, உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையானது இன்று 100,000 ஐ கடக்கும். தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையானது நேற்று 42,000 ஐ யும், முந்தைய நாள் கிட்டத்தட்ட 40,000 ஐயும் விஞ்சிவிட்டது. தீவிர சிகிச்சைக்கான நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 5,900 க்கும் அதிகமாக உள்ளது, இது கடந்த ஆண்டு முதல் அலையின் உச்சத்திற்குப் பின்னர் மிக உயர்ந்த மட்டமாகும்.

மார்ச் மாத இறுதியில், ஜனாதிபதி மக்ரோன் சிறிய சமூக-இடைவெளி நடவடிக்கைகளை அறிவித்தார், இதில் இரண்டு வார பள்ளி விடுமுறைக்கு முன்னர் ஒரு வாரத்திற்கு ஆரம்பப் பள்ளிகள் மூடுதல், விடுமுறை இடைவேளைக்குப் பின்னர் ஒரு கூடுதல் வாரத்திற்கு உயர்நிலைப் பள்ளிகள் மூடுதல் உட்பட, ஒரு நீண்ட பள்ளி மூடல் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளை அவர் நிராகரித்தார், ஏனெனில் அத்தகைய பொதுமுடக்கம் "பொருளாதாரத்தின்" மீது ஏற்படுத்தும் விளைவாகும். ஆரம்பப் பள்ளிகள் பத்து நாட்களில் மீண்டும் திறக்கப்பட உள்ளன, அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் வர்க்கம் அடிப்படையில் ஒரே கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு, இத்தாலியில் தொழிலாளர்கள் வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்க அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தக் கோரி திடீர் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன, மற்றும் மருத்துவமனைகள் சரிவின் விளிம்பில் இருந்தன, அரசாங்கங்களானது பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவது உட்பட கடுமையான பொதுமுடக்கங்களை விதித்தன. கடந்த ஆண்டில் ஐரோப்பாவின் பில்லியனர்களின் செல்வத்தில் மகத்தான பெரும் அதிகரிப்பை உறுதிப்படுத்த பங்குச் சந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பெருநிறுவன பிணையெடுப்புக்களை மொத்தமாக டிரில்லியன் கணக்கான யூரோக்களை அளிப்பதற்கு அவர்கள் இதை ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தினர்.

அதற்குப் பின்னர் அவர்கள் பொதுமுடக்க நடவடிக்கைகளை நிராகரித்து, பள்ளிகள் மற்றும் பணியிடங்களை திறந்து வைக்கும் கொள்கையை பின்பற்றி, மனித உயிர்களின் இழப்பைப் பொருட்படுத்தாமல் பெருநிறுவனமானது இலாபங்களை ஈட்டுவது தொடரலாம்.

ஐரோப்பாவில் 1 மில்லியன் மக்கள் மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களைத் தவிர்க்க முடியாதது எதுவும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தாலும் அதன் அரசாங்கங்களாலும் செயல்படுத்தப்பட்டு, தொழிற்சங்கங்களால் ஆதரிக்கப்பட்டு வரும் உயிர்களுக்கு முன்னால் இலாபங்களை வைக்கும் வேண்டுமென்றேவுள்ள கொள்கையின் விளைவுதான் இதுவாகும்.

வைரஸின் ஒரு புதிய எழுச்சிக்கு முன்னால், தொழிலாள வர்க்கம் அரசியல் படிப்பினைகளை வரைவது முக்கியமானதாகும். அரசியல் அதிகாரத்திற்காக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவது மூலமாக மட்டுமே வைரஸ் பரவுவதை எதிர்கொள்வதற்கான விஞ்ஞானக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகும். தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடுடன், அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவது உட்பட, ஒரு உண்மையான பொதுமுடக்கத்திற்கு நிதியளிக்க பாரிய வளங்கள் முதலீடு செய்யப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர இணையவழி கற்பித்தலை வழங்குவதற்கான வளங்களுடன் பள்ளிகள் மூடப்பட வேண்டும்.

அத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு சோசலிச கொள்கைக்கான போராட்டம் தேவைப்படுகிறது, இதில் பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கினால் குவித்து வைக்கப்பட்டுள்ள டிரில்லியன் கணக்கான யூரோக்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு, கண்டம் முழுவதும் தொழிலாளர் அரசாங்கங்களுக்கான ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக போராட வேண்டும்.

Loading